ஒரு பென்சில் எப்படி உருவாகிறது.!! குறட்டை விடுபவரா?
>> Saturday, November 8, 2008
ஒரு பென்சில் உருவாகிறது
படத்தில் அழகாகக் காட்சியளிக்கும் வகையில் அடுக்கி வைத்திருப்பவை, பென்சில் தயாரிக்கப் பயன்படும் மரத் துண்டுகள். இவை கேரளாவில் கிடைக்கும் மரங்கள். எலவு எனும் மரம் விலை உயர்ந்த மரமாகும். இது தவிர, வெங்கோலா, அலன்டா, முறுக்கு போன்ற மரங்களும் பென்சில் செய்யப் பயன்படுகின்றன.
எழுதும் கரிமக்கூர் தனியே தயாரிக்கப்படுகிறது; மரம் பென்சிலுக்கேற்பத் தயாரிக்கப்படுகிறது பின்னர் இவை இணைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு, பெயர் அச்சிடப்பட்டு பென்சிலா கிறது. 25 வகைப் பணிகள் தனித்தனியே செய்யப்பட்டுப் பென்சில் உருவாகிறது.
கிராஃபைட் (கரி)டும் களிமண்ணும் கலக்கப்பட்டு நீருடன் சேர்த்துக் குழைக்கப்பட்டு எட்டு மணி நேரத்திற்கு இடைவிடாமல் அறைக்கப்பட்டு அதன்பிறகு 4 மணி நேரத்திற்கு சலிக்கப்பட்டு கரிமக்கூர் (Lead) உருவாகிறது. பிறகு தானியங்கிச் சுத்தியல் மூலம் அடித்து அழுத்தமான, உருளை வடிவத்தில் உண்டாக்கப்பட்டு தேவைக்கேற்ற பருமனில் கரிமக்கூர் தயாரிக்கப்படுகிறது.
அதேபோல, வேறுபகுதியில் மரத் துண்டுகள் சூளையில் சுடப்படுகின்றன. பென்சில்களுக்குத் தக்கவாறு மரங்களுக்குச் சாயம் ஏற்றப்படுகின்றன. கூர் வைக்கப்படு வதற்கு ஏற்றாற்போன்ற வடிவத்தை கூரின் பருமனுக்குத் தக்கவாறு அமைத்து மரத்துண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
அடுத்த நடவடிக்கையாக மரத்துண்டுகளில் பென்சில் கூர் பொருத்தும் பணி. பெரும்பாலும் பெண்கள் செய்கிறார்கள். கூர் பொருந்தியதும் மரக்கட்டைகளை இணைத்துத் தருகிறார்கள். அதன்பிறகு இடுக்கிகளுக்கு இடையே அவை வைக்கப்பட்டு இளஞ்சூட்டில் இறுக்கமாக அழுத்தி வடிவமைக்கப்படுகின்றன.
பிறகு அவை மேற்புறத்தில் செதுக்கிச் சீராக்கப்பட்டு துண்டாக்கப்படுகின்றன. அதன்பின் வண்ணம் பூசப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டு முழு பென்சில்களாக வெளிவருகின்றன. நிமிடத்துக்கு 180 பென்சில்கள் தயாரிக்கும் வகையில் எந்திரங்கள் இப் பணியைச் செய்கின்றன.
சாதாரணமாகப் பென்சில் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று மாதத்திற்கு 4 லட்சம் பென்சில்களை உற்பத்தி செய்கின்றன.
குறட்டை விடுபவரா?
குறட்டைவிட்டுத் தூங்கு பவரா நீங்கள்? வயதானவராக இருந்தால் குறட்டை விடுவதால் உங்கள் ஆயுள் நீளுமாம். 65 வயதுக்கு மேல் உள்ளவர் களுக்கு இது பொருந்துமாம். குறட்டை விடாதவர்களைவிட நீண்டநாள் இவர்கள் வாழ லாமாம்.
உயிர் வளிக் குறைவினால் தான் குறட்டை ஏற்படுகிறது என்கிறது ஆய்வு. உயிர் வளிக் குறைவினால் மூச்சை இழுத்து விடுவது விட்டுவிட்டு ஏற்படு வதைச் சரி செய்ய வயதானவர்களுக்கு இப்பழக்கம் உதவி செய்கிறது. இதனால் இரத்தக் குழாய்களில் உயிர்வளிக் குறைவு ஏற்படுவதைச் சரி செய்ய உதவுகிறது.
அதே நேரத்தில் இளைய வயதினர்க்கு இப்பழக்கம் அம்மாதிரி விளைவுகளை ஏற்படுத்துவதில்லையாம். அவர்களுக்கு குறட்டைப் பழக்கம் ஆபத்தைக் கொண்டு வருமோ?
*********************************
படிக்க:....படம்.கருப்பு M.G.Rவிஜயகாந்தின் புதிய அவதாரங்கள்.பாரதி,நேதாஜி,பகத்சிங்,லால்பகதூர் சாஸ்திரி,வ.உ.சி.
தமிழ் தாகத்திலே பாரதியாம் , நாட்டுப்பற்றிலே நேதாஜியாம் , வீரத்திலே பகத்சிங்காம் ,சாந்தத்திலே லால் பகதூர் சாஸ்திரியாம்,தியாகத்திலே வ.உ.சி யாம். ஐயோ கொல்றாங்களே. வாசகர்களே வடிவேலு பாசையில் உங்களுடைய COMMENT காம்மன்ட் கொடுங்களேன்.
*****************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
குறட்டைவிடுதலுக்கும் இதய கோளாறுக்கும் தொடர்புண்டாம்
http://news.bbc.co.uk/2/hi/health/7272651.stm
Post a Comment