குமுதம் "அரசு"வின் பதில் ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு. படிக்கவும்
>> Thursday, November 6, 2008
இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.
---------------------------------------------
நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது? - முகம்மது அன்சாரி, தஞ்சை.
இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''.
அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார்.
"ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''.
இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே?
இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும். arasu.
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/pg19.php
****************************************
இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!
**************************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
இந்த பதிவுக்கும், இந்த Labelகளுக்கும்: இந்து பயங்கரவாதம், இந்துத்துவா - என்ன சம்பந்தம் இருக்க முடியும் ஆனால் நீங்க முயற்சிக்கவில்லையா இந்து பயங்கரவாத கோட்பாடு என்ற தினிப்பை அது போலவே மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் முயற்சிக்கின்றன :)
எனக்கும் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் நான் இந்த மீடியாவும், அரசியல்வாதிகளும் சொல்வதை கேட்டு என் நண்பர்கள் ஒரு போதும் சந்தேகித்ததில்லை.
Post a Comment