சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….
>> Sunday, November 9, 2008
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.
கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.
இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.
நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.
எப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் "சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.
ஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும்.
"உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது.
உலக வாழ்வைத் துறந்து இறையடியைத் தேடி பிரயாணம் செய்பவர்களாக நாட்டு மக்களால் கருதப் பட்ட சாமியார்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய அமைப்பான இராணுவமும் கூட்டுக் களவாணித்தனம் செய்து சங் பரிவாரத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தம்மை அடமானம் வைத்து விட்டன என்பதை மாலேகோன் குண்டுவெடிப்புத் தொடர் விசாரணைகளில் கைதாகும் இராணுவ அதிகாரிகளின் மூலம் தெளிவாகி வருகின்றன.
சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.
ஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது!.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, "முஸ்லிம் தீவிரவாதி(!)களைக் கைது செய்" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள்.
இந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது 'இந்துத் தீவிரவாதி' என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின.
"நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
மாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல" என கழட்டி விட்டது போன்று, "எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு "குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன.
தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. "இஸ்லாமியத் தீவிரவாதி" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும்.
தமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் "இந்துத் தீவிரவாதம்" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:
"இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.
மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.
இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.
மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். "
முன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, "இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது" என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.
மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும்.
நாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது.
எனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில்,
ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1086&Itemid=51
*********************************
''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு!
நாசிக்: கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் விவரம்:
இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.
இந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.
அவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.
சாத்விக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்.
**************************

குண்டு தயாரிப்பவன், வெடி மருந்துகளை சேகரிப்பவன், அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் நோக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்பவன், அதன் பழி வேறொரு சமூகத்தார் மீது விழ வேண்டும் என்பதற்காகப் போலி வேடம் போடுபவன், பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று பாராமல் ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொன்று குவிப்பவன், சிறு குழந்தைகளையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்பவன், ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் அதனைத் துஷ்பிரயோகம் செய்பவன், அப்பாவிகளை என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்பவன், அதுபோன்ற கொலைகளுக்குக் காரணமாக இருப்பவன், பொதுச் சொத்துக்களை நாசம் செய்பவன், இனவாதம் என்ற பெயரால் அராஜகம் செய்பவன், பிறமத வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி அழிப்பவன்,கலவரம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத ஊர்வலங்கள், ரத யாத்திரைகளை நடத்துபவன்...
ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1086&Itemid=51
*********************************
''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு!
நாசிக்: கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் விவரம்:
சாத்வி: என்னை போலீசார் இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்
ராம்நாராயணன்: ஏன்?
சாத்வி: மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எனது மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
ராம்நாராயணன்: பைக்கை நீங்கள் தான் விற்றுவிட்டீர்களே.. (விற்றதாக சொல்லிவிடலாம் என்பதை இப்படி சொல்கிறார்)
சாத்வி: எங்கே விற்றதாக சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?
ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.
சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?
ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.
சாத்வி: அந்த குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர். அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?
ராம்நாராயணன்: நிறைய பேர் இருந்த இடத்தில் தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறைய பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் (கைது நடவடிக்கை) அதை நாம் சந்திப்போம்...
இந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.
அவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.
சாத்விக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்.
**************************
2 comments:
True...
Every Indian-Muslim and Common man should be aware about the Severe Hindu-Terrorism in India against Muslim.
Subject: New comment on your story "சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் …."
To: vanjoor@gmail.com
viswanarayan commented on your story 'சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….'
'தீவிரவாதிகள் ஒரு கொடிய வைரஸ். அதில் இந்து முஸ்லிம் என்று சொல்வது அந்தந்த மதங்களுக்கே அசிங்கம். அவர்கள் எந்த மதமானாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே. இல்லாவிட்டால் அவர்கள் நம் எல்லோரையும் அழித்து விடுவார்கள்.'
Here is the link to the story: http://www.tamilish.com/story/12288
Thank your for using Tamilish!
- The Tamilish Team
Post a Comment