**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

>> Thursday, November 27, 2008

30.11.08 ஹாட் டாபிக்

திரிசூலத்தின் முதல் கூறு இஸ்லாமியர்களையும் இரண்டாவது கூறு கிறிஸ்துவர்களையும் மூன்றாவது கூறு மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்தும்'' என்ற பிரவீண் தொகாடியாவின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) பேச்சை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. அது வெறும் பேச்சல்ல, எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபணமாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன என்பதற்கு சாட்சியங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமானவர், பிரக்யாசிங் தாகூர் என்ற பெண்துறவி. குண்டுவெடிப்புக்கும் சாத்வீகமான இந்தத் துறவிக்கும் இருக்கும் நெருக்கம் பற்றிய ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவானதை அடுத்து, அக்டோபர் 23, 2008 அன்று இந்தூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பிரக்யாசிங் தாகூர். கைது செய்தது, மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புக் காவல்படை.

இந்தக் கைதின் ஆரம்பப்புள்ளி, கடந்த செப்டெம்பர் 29 அன்று மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலும் குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இருந்துதான் தொடங்கியது. விசாரணைப் படலம் ஆரம்பித்தது. சமீபகாலமாக நடக்கும் குண்டுவெடிப்புகளில் இருசக்கர வாகனங்களே அதிகம் பயன்படுத்தப்படுவது மகாராஷ்டிர காவல்துறையினரை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தக் கோணத்திலேயே விசாரணையைத் தொடர்ந்தனர்.

மாலேகான் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தோண்டிப் பார்த்தபோது, பிரக்யாசிங் தாகூருக்குச் சொந்தமான வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தக் குண்டுவெடிப்புக்கும் சங்கப் பரிவார அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவ்வளவுதான். வியர்த்து விறுவிறுத்துவிட்டது காவல்துறையினருக்கு. உடனடியாக பிரக்யாசிங் தாகூர் மற்றும் சிவநாராயண சிங், ஷாம்லால் பவார் சாஹு ஆகியோரைக் கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை. விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

யார் இந்த பிரக்யாசிங் தாகூர்?

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.பி. சிங் தாகூர். தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர். ஆயுர்வேத மருத்துவரும்கூட. இவருடைய மகள் பிரக்யாசிங் தாகூர். ம.பி.யைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறகு குஜராத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டது தாகூரின் குடும்பம். ரத்தம், நாடி, நரம்பு எல்லாவற்றிலுமே இந்துயிசம் என்பது புரையோடிப் போயிருந்தது பிரக்யாசிங்குக்கு. விளைவு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போன்ற இந்து அமைப்புகளின் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இயற்கையாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது பிரக்யாசிங்குக்கு.

1997-ல் ஏ.பி.வி.பி.யின் மகளிர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு வி.ஹெச்.பி.யின் துர்காவாஹினி அழைப்பு விடுக்கவே, அங்கு சிலகாலம் தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார். சேவை என்றால் பேச்சு. பேச்சு. வார்த்தைக்கு வார்த்தை இந்து வாடை அடிக்கும் அளவுக்கு. வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்ட அவருடைய பேச்சு இந்துத் தலைவர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைப் பிரத்யேகமாகத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக பல பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. எல்லாவற்றிலும் அம்மணியின் பிரசங்கங்கள்தான் பிரதானமாக இடம்பெறும்.

இதற்கிடையே 2002-ல் `ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யாண் சமிதி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதற்கு நேசக்கரம் நீட்டியது குஜராத் அரசு. இந்த பிரக்யாசிங் தாகூருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. சாத்வி பூர்ணா சேத்தானந்த் கிரி. நிற்க.

சாத்வி பிரக்யாசிங் தாகூருக்கும் அவருடைய ஆதரவாளருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மகாராஷ்டிர காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

சாத்வி: என்னை (போலீசார்) இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்.

ராம்நாராயணன்: ஏன்?

சாத்வி: மாலேகான் நகரில் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட என்னுடைய மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

ராம்நாராயணன்: பைக்கை நீங்கள்தான் விற்றுவிட்டீர்களே..

சாத்வி: எங்கே விற்றதாகச் சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?

ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.

சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?

ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.

சாத்வி: அந்தக் குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்? அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?

ராம்நாராயணன்: நிறையப் பேர் இருந்த இடத்தில்தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறையப் பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் அதை நாம் சந்திப்போம்...

- இந்த ஆதாரத்தையடுத்து சாத்வியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்துத் துறவி ஒருவர் குண்டுவெடிப்பு வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டது சங்கப் பரிவாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனாலும் `இது பொய்வழக்கு. இந்துக்களை அவமானப்படுத்த நடத்தப்படும் நாடகம்' என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன சொல்லி இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பலாம் என்று காத்துக்கொண்டிருந்தது பா.ஜ.க. விசாரணையின்போது தன்னைக் கொடுமைப்படுத்துவதாக பிரக்யாசிங் பேட்டியளித்து வைக்க, தற்போது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கியிருக்கிறது பாரதிய ஜனதா.

``பெண் துறவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோகடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. விசாரணை நேர்மையுடன் நடத்தப்படவில்லை'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி.

இதனையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பி அத்வானியிடம் விளக்கம் கொடுக்க வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பெண் துறவியின் வாக்குமூலங்களை பிரதமர் தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது இந்தக் குண்டுவெடிப்பு விவகாரம் இன்னொரு திசையிலும் நகரத் தொடங்கியிருக்கிறது. இந்துத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் என்பவரின் உதவியை நாடியிருக்கின்றன இந்து அமைப்புகள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுதாகர் திவிவேதி என்பவர் மாலேகான் குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளி. குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் அதில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையே ஃபரீதாபாத், டெல்லி, போபால், பூனே உள்ளிட்ட இடங்களில் பல சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்தவர் இவர் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு. முக்கியமாக, தாக்குதல்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டியது, ராணுவ உயரதிகாரிகளைக் கொண்டு ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருள்களை வாங்கியது ஆகியன இவருடைய பணிகள் என்பது மகாராஷ்டிர காவல்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

இவருடைய சொந்த ஊர் கான்பூர். சுவாமி அமிர்தானந்தா என்பது சுயமாக சூட்டிக்கொண்ட பெயர். ஜம்முவைச் சேர்ந்த `ஷார்தா சர்வாக்ய பீடம்' என்ற இந்து மத நிறுவனத்தின் நிர்வாகியான இவருக்கு, போலியான அடையாள அட்டைகளை வாங்கிக் கொடுத்ததோடு, ரிவால்வர் வைத்துக்கொள்வதற்கான உரிமையையும் முறைகேடான முறையில் வாங்கிக் கொடுத்துள்ளார் புரோகித் என்று கூறுகிறது மகாராஷ்டிர காவல்துறை. மேலும், இந்த இந்து அமைப்புகள் நடத்தும் ஆயுதப் பயிற்சிகளுக்குத் தேவையான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை தன்னுடைய கோட்டாவின் மூலம் வாங்கியதோடு, தனக்கு நெருக்கமான உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.

புரோகித் பயன்படுத்திய லேப்டாப் இன்னமும் போலீஸாரின் கையில் சிக்கவில்லை. ஒருவேளை, அது கிடைத்தால் சுவாமி அமிர்தானந்தா, பிரக்யாசிங் உள்ளிட்ட இந்து சாதுக்கள் மற்றும் சாத்விக்களின் நிஜமுகங்கள் அம்பலமாவதோடு, பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. விஷயம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது! ஸீ

---------

மும்பை பற்றி எறிகிறது....மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம.

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor

மேலும் படிக்க... Read more...

VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

>> Wednesday, November 26, 2008

ஊடகங்களில் இதன் துணைத் தலைப்பு, வழக்கமான
பாகிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் அம்பலம்" என்றோ நம் நாட்டின் காவல்துறை குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரங்களைத் தேடிப் பல்லாண்டு காலம் அல்லாடும் அமைப்பான "சிமியின் சதி தவிடுபொடி" என்றோ
அண்மையில் 'உருவாக்கப் பட்டு' அடிக்கடி ஊடகங்களில் உலா வரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் கோரமுகம்" என்றோ இருக்கப் போவதில்லை.
************************************************************************************* நம்ம நட்டுல எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே காவல்துறையினர் இது இந்த தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம். ( அவங்களுக்குத்தான் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் மட்டும் தெரியுமே)
ஆனாலும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அது இப்ப உண்மையாகி வருது.
CARTOON - COMMENTS --நன்றி: குமுதம்.காம்

*******************************************************************************
"ஆர். எஸ். எஸின் பொதுச் செயலாளர் மோகன் பகவத்தையும் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டமிருந்தது.

அவ்விருவரையும் கொன்று விட்டு, முஸ்லிம் அமைப்புகள் ஆர். எஸ். எஸ். தலைவர்களைக் கொலை செய்து விட்டனர் என்று திசை திருப்புவதற்கும் திட்டம் வகுத்திருந்தோம்" என்று மலேகோன் குண்டு வெடிப்பை நடத்தி, தற்போது மகாராஷ்டிர அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை(ATS)யினரது விசாரணையின் கீழுள்ள பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.

கொலைச் சதித் திட்ட ஆதாரங்களை, கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2008) எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சத்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K. நாராயணனும் நுட்புலத்துறை(ஐ.பி)த் தலைவர் P.C. ஹல்தாரும் அத்வானியிடம் காட்டியுள்ளனர்.

அதையடுத்து, கடந்த சனிக்கிழமை (22.11.2008) அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸின் இணைப் பொதுச் செயலாளர் மதன் தாஸ் தேவி, "இரு தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப் பட்ட செய்தி உறுதியானதுதான்" என்று கூறியுள்ளார்.

"இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர்களை, இந்துத் தீவிரவாதிகளே கொல்ல முயன்ற காரணம் என்ன?" என்ற கேள்வி ஒன்று எழுவதைத் தவிர்க்கவியலாது.

இந்தக் கேள்விக்கு விடை ATS வசம் தற்போது தோண்டப் பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மடிக்கணினிகளில் இருக்கிறது.

ஆர். எஸ். எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தும் அதன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் 'போதிய அளவு' தீவிரமாகச் செயல்படவில்லை என்ற ஒரு குற்றமும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவ்விருவரும் மென்மையாக நடந்து கொண்டதாக இன்னொரு குற்றமும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது ATSயின் பிடியிலுள்ள சுதாகர் திவேதி (எ) தயானந்த் பாண்டே (எ) அம்ரிதானந்த் தேவ் தீர்த் மகாராஜுக்குச் சொந்தமான மடிக்கணினியில் காவல்துறைக்குத் தேவையான பாண்டேயின் 'இரகசிய சந்திப்புகள்' குறித்து நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கடந்த ஜனவரி 26இல் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற ஆசிரமச் சந்திப்பும் போபாலில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சத்திப்பும் மாலேகான் குண்டு வெடிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 'மிக முக்கிய'ச் சந்திப்பும் பாண்டேயின் மடிக்கணினியில் பதிவு செய்யப் பட்டுள்ளன.





மாலேகோன் குண்டுவெடிப்பில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், CLICK..ஒப்புக் கொண்ட போதேகுண்டு வெடிப்பின் பின்னணியில் வேறு சில முக்கியப் புள்ளிகள் இருக்கக் கூடும் என்ற ஐயம் எழுந்தது. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குக்காகத் தேடப் பட்டு வரும் இன்னொரு முக்கியக் குற்றவாளியான ராம்ஜி என்பவனைப் பற்றிய விபரங்களோடு இன்னும் சில முக்கியப் புள்ளிகளைப் பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கலாம்http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1105&Itemid=51
---------------------------------
குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு!
சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதைகளை பரப்பி வந்தனர்.

அப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங்கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தினர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரையினர் போல் நடத்தப்பட்டனர்.

ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.

சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர்பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.

காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின.

சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.

இவர்கள் தங்களது பிற்போக்குத் தனமான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.

சாமியார்கள் பயங்கரவாத சாமியார்களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுருவின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.

பெண் சாமியார் பிரக்யாசிங் போன்றவர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.

இந்நிலையில் இதுவரை பெரிய முதலைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.

மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்http://www.tmmk.info/news/999564.htm
---------------------------------------
'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்?

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்?

>> Tuesday, November 25, 2008

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? முஸ்லீம்களை நோக்கி பிறர் 'வணக்கம்' என்று கூறுவதை கேட்கும் பொழுதும் மிகுந்த சிரமமான நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.

கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.

அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.

'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.

ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை.

'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.

இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும்.

ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியுண்டாகட்டும்) என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.

அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,

'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது.

அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.

அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.

ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள்... அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.

ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது.

ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)

இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.

மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.

அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.

அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள்.

பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். '

வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.

தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைய தளத்தில் இதை படித்தேன். அவசரத்தில் பதிந்தவருடைய URL குறிக்கத் தவறி விட்டேன். இப்பதிவின் உரிமையாள்ர் இதை கண்ணுற்றால் தெரிவியுங்கள். பதிந்தவருக்கு எனது நன்றியும், பாராட்டுதலும்.-- வாஞ்ஜையுடன் வாஞ்ஜூர்
-----------------------------------
இதையும் படியுங்கள் . http://vinthawords.blogspot.com/2008/11/blog-post_23.html
சகோதரி வினிதா அவர்களுக்கு எனது நன்றிகள்.
----------------------------
இதையும் படியுங்கள்.
உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்

குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

மேலும் படிக்க... Read more...

குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.

>> Friday, November 21, 2008

gnani has left a new comment on your post "வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும...":

முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும்.

என் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது.

தொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்கரவாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும்.

ஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.

மேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை.

நான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன்.

வாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ ? அன்புடன் ஞாநி.


தாங்களுடைய‌ விள‌க்க‌த்தால் தெளிவ‌டைந்தோம். ஞானி அவர்களுக்கு என்னுடைய நன்றி.- வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்
-----------------------
READ வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

மேலும் படிக்க... Read more...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

>> Thursday, November 20, 2008

பாபர் மசூதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, அந்த வார துக்ளக் இதழின் அட்டைபடத்தை கருப்பாக போட்டு 'இந்த நாள் இந்தியாவின் கறுப்புநாள் என்று குறிப்பிட்டிருந்தார் திரு.சோ .

அதற்காக ,தீவிர இந்துத்துவா சிந்தனையாளரான இவரை நடுநிலை எழுத்தாளர் என்று கூறிடமுடியுமா..?

இதுபோலத்தான் சில எழுத்தாளர்கள் நடுநிலையாகவும்,முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் எழுவது போல் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும் .

கவனமாகப் பார்க்கும்போதுதான் ,ரோஜாவில் மறைந்திருக்கும் முள்போல முஸ்லிம் விரோத கருத்து பளிச்சிடும் .

இப்போது குமுதத்தில் வெளியான அரசு பதில்களை படியுங்கள்.
ஆர். சுதர்ஸனன், நங்கநல்லூர்.

இஸ்லாமிய வாசகருக்கு வக்காலத்து வாங்கும் அரசுவே, ஒரு எஸ். எம்.எஸ். வாசகத்தைச் சொல்லட்டுமா?"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே!".

அரசு : தீவிரவாதம் என்பது எல்லாத் தரப்பிலும் இருக்கிறது நண்பரே. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும்,

இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும்,

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் ,

குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இதில் எந்த மத நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் பரப்பப்படும் வதந்திகள் ( உங்கள் எஸ்.எம்.எஸ் உள்பட ) உள்நோக்கம் கொண்டவை.

அன்பர்களே, எல்லா மதத்து தீவிரவாதிகளையும் சாடுவதுபோல் பாவ்லா காட்டிய அரசு, இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்கச்செய்து மக்களை கொள்ளும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்புகளும். என்று எழுதி இந்தியாவில் தினமும் குண்டு வைப்பதற்காக இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இயங்குவது போல் காட்டியுள்ளார். சரி .

ஆனால் 'கொல்லன் பட்டறைத் தெருவில் ஊசி விற்ற அறிவாளிபோல்' நம்ம 'உணர்வு' பத்திரிக்கையிலேயே இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்' என்று ஞானி பேட்டிகொடுத்து அதை அந்த பத்திரிக்கை அப்படியே வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்

உணர்வு; நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் விசாரணை மேற்க்கொள்வதற்கு முன்பே,முஸ்லீம் இயக்கங்கள் மீது பலி போடப்படுவது என்..?

ஞானி; இது தவறான போக்கு. அணுகுமுறை. அரசுநிர்வாகங்களில் இருக்கும் இஸ்லாம் எதிப்பு உணர்வாளர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதால் இது நடக்கிறது.

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் ,மும்பைக்குண்டு வெடிப்புகளும்,ஜிகாத் என்றபெயரால் இஸ்லாமிய மத வெறியுடைய சில பயங்கரவாதிகள் செய்யப்படுவதால் சாதரண மக்கள் மனதில் எல்லா பயங்கரவாதமும் முஸ்லிம்கள் செய்வதாகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்தை ஏற்க செய்யும் சாதகமான அம்சங்களாகி விட்டன.

இங்கே ஞானி நடுநிலையாக கருத்து சொல்வது போல் சொல்லி , உலகளாவிய பயங்கரவாதம் எதோ முஸ்லிம்கள் மட்டும் செய்வது போன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.

அரசும்,ஞானியும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்று நாம் சொல்லவரவில்லை. தீவிரவாதம் விசயத்தில் மற்றவர்கள் எப்படி முஸ்லிம்களை தவறாக புரிந்து உள்ளார்களோ அப்படித்தான் அரசும், ஞானியும் புரிந்துள்ளார்கள்.

விளக்கிச் சொல்லவேன்டியது நமது கடமை. அதோடு,முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாக படிக்காமல் கவனமாக படித்து கருத்தை புரியுங்கள். THANKS :mugavai-abbas.blogspot.com
----------------------------------
READ

குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.

மேலும் படிக்க... Read more...

குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.

>> Friday, November 14, 2008

ஹிந்துத்துவ இராணுவ உயர் அதிகாரி புரோகித்

இந்திய இராணுவ உயர் அதிகாரி புரோகித் ஒப்புதல்

இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோகித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.



மாலேகோன் குண்டு வெடிப்பை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு, புரோகிதுதான் 'அபிநவ் பாரத்' என்ற இந்து பயங்கவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொடுத்திருக்கக் கூடும் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட புரோகித், ஹிந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவராவார் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

37 வயதான பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோகித், கடந்த செப்டம்பர் 29இல் CLICK....மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து உபகரணங்களை ஏற்பாடு செய்து அதற்கான முழுமையான திட்டத்தையும் தானே வகுத்து நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

புரோகித்தை விசாரித்துள்ள மும்பையின் பயங்கரவாத தடுப்புத் துறைப் படையினரின் (Anti-Terrorism Squad) பார்வை, மேற்கொண்டு அடுத்தடுத்த இராணுவ உயர் அதிகாரிகளின் மீது விழுந்துள்ளது. புரோகித் மீது போலிசாருக்கு சந்தேகம் விழ ஆரம்பித்த கணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட அவரது தொலைபேசி உரையாடல்கள் அவருக்கும் அவருக்கு முன்னர் விசாரணை வட்டத்திற்குள் வந்து விட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நிருவியுள்ளன.

மேஜர் ரமேஷ் சந்த் உபாத்யாயாவைப் பற்றிக் கடந்த 28.10.2008 அன்று சத்தியமார்க்கம் தளம் செய்தி CLICK.... வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹிந்துத்துவ புரோகித் - யார் இவர்?

ATS யின் மூத்த அதிகாரி அளித்த தகவலின்படி புனேயில் ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில் பிறந்த புரோகித், மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும் நாட்டுப்பற்று மிக்கவராகவும் உள்ளவர் என்று பரவலாக அறியப்படுகிறார்.

கல்வியில் சிறந்து விளங்கிய இவர் கடந்த அக்டோபர் 1993யில் இராணுவத்தில் இரண்டாவது லெப்டினெண்ட் ஆகச் சேர்ந்து பணியாற்றினார். இராணுவ அதிகாரியாகக் கடந்த அக்டோபர் 94இல் அஸ்ஸாமில் இவர் தனது முதல் பணியினைத் துவக்கினார். பின்பு மணிப்பூருக்கு மாற்றலாகி 95வரை பணியாற்றினார். அதன் பின் நாகாலாந்தில் பணியாற்றிய இவருக்கு 1996இல் கேப்டன் ஆகப் பதவி உயர்வு கிடைத்தது.

புனே, ராஜஸ்தான் மீண்டும் புனே என்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய புரோகித், மேஜர் ஆகப் பதவி உயர்வு பெற்று இந்திய இராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவில் (intelligence wing) பொறுப்பு மிக்கப் பதவியில் அமர்ந்தார். கடந்த 2000க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் அமர்நாத் பகுதிகளில் பணியாற்றினார்.

பொறுப்பான பதவியில் இருக்கும் போதுகூட தனது பயங்கரவாத இயக்கமான அபிநவ் பாரத் பற்றிய பல உரைகளை இவர் ஆற்றியது, அதற்கான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தல், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் ஆகிவற்றை புரோகித் செய்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன. அபிநவ் பாரத் பயங்கரவாத இயக்கத்திற்கு 5000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் நாடு முழுதும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர்.

"மாலேகோனில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்குத் தேவையான வெடிமருந்துகளையும் திட்ட வடிவத்தையும் முழுமையாக வடிவமைத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், அது அபிநவ் பாரத் உறுப்பினர்களுக்குக் கைமாறிய விதம் குறித்து எனக்குத் தெரியாது" என்று துவக்கத்தில் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் புரோகித்.

ஆனால், தொடர்ந்த போலிசாரின் புலன் விசாரணையில் இராணுவ உயர் அதிகாரியான புரோகித், அபிநவ் பாரத் இந்து பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூர் நிறுவன உறுப்பினர் (Founder Member) என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ATS அளித்துள்ள தகவலின்படி இராணுவ உயர் அதிகாரி புரோகித், தனது இயக்கத்தில் பணிக்கு அமர்த்தி உள்ள இளைஞர்களுக்கு வெடிமருந்துகளைத் தயாரிப்பது, வெடிகுண்டுப் பாகங்களை இணைப்பது ஆகிய பயிற்சிகளை முன் நின்று அளித்ததாகத் தெரிவித்துள்ளது.

இதற்கான தகவல்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

அபிநவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத இயக்கம், பிற ஹிந்துத்துவா இயக்கங்களுடன் பரஸ்பர தொடர்பில் இருத்தல், இயன்றவரையிலான மத வெறியினை ஊட்டி அவர்களைத் தயார் செய்தல், தயார் ஆனவர்களை உறுப்பினர்களாக ஆக்குதல் போன்ற பணிகளில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 2007 இல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள Army Education Corps Training College & Centreக்குப் பொறுப்பு வகித்த புரோகித், அங்கு அரபி பயின்று தேர்ச்சி பெற்றிருப்பது வியப்புக்குரிய விஷயமாகும். பின் லெப்டினெண்ட் கலோனிலாகக் கடந்த ஏப்ரல் 2008 இல் பதவி உயர்வு பெற்றார்.

இந்திய இராணுவத்தின் ஒரு பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான புரோகித் இந்த பயங்கரவாதத்தினை நிகழ்த்த ஏராளமானவர்களுக்குப் பண உதவி செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானவை ஹவாலா மூலம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1096&Itemid=51

**************

ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம்‍....விடியோ--. பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-

**********************

விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி

மேலும் படிக்க... Read more...

விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-

>> Wednesday, November 12, 2008

ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம்‍ -.விடியோ.
வெளிச்சமாகும் பல திடுக்கிடும் உண்மைகள்.

மெக்காவையும் MECCA, மதீனா MADHINA வையும் தங்களுடையது என
பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.

மேலும் படிக்க... Read more...

விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி

வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்! அச்செடு மின்னஞ்சல்
செவ்வாய், 11 நவம்பர் 2008
வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள அத்தியரக்கா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தினசரி பயிற்சி செய்யும்் ஒரு கோவிலின் பின்பக்கம் நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் மணடல செயற்குழு உறுப்பினர்களான ப்ரதீபன்(38), திலி என்ற திலீப்(35) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் பலியாகினர்.

இதில் ப்ரதீபன், அஸ்னா என்ற பெண் குழந்தையைக் குண்டுவீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார்.

நேற்றுக் காலை 7 மணியளவில் கோயிலின் பின்புறம் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தம் கேட்ட பொதுமக்கள், சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் கிடந்த உடல்களைக் கண்டனர். பக்கத்திலுள்ள கிணற்றில் தெறித்து விழுந்த நிலையில் ப்ரதீபனின் உடல் கிடந்தது. அவரின் இடுப்பின் கீழ்பாகம் முழுவதும் சிதைந்த நிலையில் இரு கால்களும் துண்டு துண்டாகக் கிடந்தன. திலீபின் உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் காணப்பட்டது. வெடித்த குண்டின் வீரியத் தாக்கத்தால் பக்கத்திலுள்ள தென்னை, பனை போன்றவை கருகியிருந்தன. ப்ரதீபன் குண்டு தயாரிப்பிலும் அதனைக் கையாள்வதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவன் என ஊர்மக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது. ஆனால், திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகள் இவ்வளவு வீரியம் வாய்ந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். கடந்த இரவில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலில் உற்சவம் நடந்திருந்தது. நள்ளிரவோடு உற்சவம் முடிந்திருந்தது. அதற்குப் பின்னர், குண்டு தயாரிப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்ட வேளையிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

சம்பவத்தில் இறந்தவர்களின் உடல் சின்னாபின்னமாகச் சிதறியிருக்கும் நிலையைப் பார்க்கும் பொழுதும் அப்பகுதியின் சூழலைப் பார்க்கும் பொழுதும் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த உடனேயே காயமடைந்தவர்களை ஆர்.எஸ்.எஸ்ஸினர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது தெரிவதாக காவல்துறை கூறியுள்ளது.

வழக்கம் போல், அனுமதியின்றி கைவசம் வைத்திருந்த வெடிபொருட்களைக் கவனமின்றி கையாண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 2000 - த்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸினர் வீசிய குண்டில் அஸ்னா என்ற மாணவி உட்பட 3 பேருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது அஸ்னாவிற்கு 6 வயது. அன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அஸ்னா, தனது வலது காலை இழந்திருந்தார்்.

அக்குண்டு வெடிப்பு வழக்கில் சென்ற வாரம், பிரதீபன் உட்பட 14 ஆர்.எஸ்.எஸ் - பாஜக தொண்டர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. வரும் வெள்ளியன்று இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் பிரதீப், குண்டு தயாரிக்கும் வேளையில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வழக்கில் சாட்சி கூறியவர்களைக் கொலை செய்வோம் என வெளிப்படையாக ப்ரதீபன் உட்பட ஆர்.எஸ்.எஸ்ஸினர் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட்ஸ்:

சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில் ஒரு பெட்டி நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பரிசோதனை தொடர்ந்து வருகிறது.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1092&Itemid=51

மேலும் படிக்க... Read more...

விடியோ.“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.

>> Tuesday, November 11, 2008

பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்

தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான் வரம்பு மீறாமலும், வழியச் செல்லாமலும், நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் திருக்குர்ஆன்.2:173

நோய் கிருமிகளை உருவாக்கும் கால்நடைகளின் மாமிசத்தில் உள்ள தீமைகள் மனிதர்கள் உண்டு புசித்து உடலில் ஆரோக்கியம் பெறுவதற்காக கால்நடைகளைப் படைத்து அதனுடைய பாலை அருந்துவதற்கும், அதனுடைய இறைச்சியை உணவாக உட்கொள்வதற்கும் அனுமதி அளித்தான்.

கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21.

அதே கால்நடைகளில் மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கிழைக்கக் கூடிய சில கால்நடைகளை அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடைசெய்தான் அதில் முக்கியமாக பன்றியின் இறைச்சியைக் கூறி தடை செய்தான் பார்க்க திருமறை வசனங்கள். 4:3, 5:60, 6:145, 16:115 மனித சமுதாயத்திற்காக அல்லாஹ் தடைசெய்த ஒன்றில் நிச்சயமாக தீங்கு இருக்கவேச் செய்யும்.

இஸ்லாமிய எழுச்சியால் மற்ற எந்த மதத்தை விடவும் பெரும் வீழ்ச்சியை தழுவியது கிருஸ்தவ மதம் என்பதால் அதிகபட்சம் இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமாக நடப்பதை அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கொள்கை(?)யாகக் கொண்டுள்ளனர்.

அவர்களது கொள்கை(?)யின் அடிப்படையில் அல்லாஹ் தடுத்த விபச்சாரத்தை வெட்க உணர்வுகளை உதிர்த்து விட்டு பகிரங்கமாகச் செய்து அதைப்பார்த்து பிறரும் செய்வதற்காக உலகு முழுவதும் பல்கி பரவச்செய்வதற்கு ஊடகத் துறையை பயன்படுத்தினர்.

அல்லாஹ் தடுத்த பன்றியின் மாமிசத்தை உண்டு புசித்து அதன் மூலம் மூலைக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை உலகுக்குப் பரவச் செய்ததிலும் பெரும் பங்கா(?)ற்றி சாதனை படைத்தவர்கள்.

1. மேல்படி கால்நடையின் மாமிசத்தில் புழுக்கள் உற்பத்தியாவதை அவர்களே கண்டுப் பிடித்து முதலில் அறிவித்தனர்.

மேல்படி புழுக்களைக் கொண்ட மாமிசம் மனித உடலுக்குள் சென்றதும் மாமிசம் முழுவதும் இரப்பைக்குள் சென்று செரிமானம் அடைந்து விடுகிறது ஆனால் அதனுள் இருக்கும் புழுக்கள் மட்டும் சாகாமல் தங்கி விடுகின்றது. அவ்வாறு தங்கிக் கொண்ட அந்த புழுக்கள் எண்ணற்ற நோய் கிருமிகளை உருவாக்குகிறது அதில் முக்கியமாக மூளை காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தை தழுவச் செய்கிறது.

அதற்கடுத்து

1. மேல்படி மாமிசத்தை ஒரு பாத்திரத்திலிட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆய்வு செய்த வகையில் மொத்த மாமிசமும் கரைந்து பஸ்பமாகிய பின் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் மாமிசத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மட்டும் வீரியமாக நெளிந்து கொண்டிருந்ததை இரண்டாவது கட்டமாக அவர்களே உலகுக்கு அறிவித்தார்கள்.

இன்றும் நமது நாடுகளில் பன்றிகள் வளர்க்கும் இடங்களைச் சுற்றியுள்ள மக்களை மூளை காய்ச்சல் தாக்கி அதிகமான பேர் இறப்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

மூலைகாய்ச்சல் அதிகரிக்கும் பொழுது பன்றிகளை ஒழிக்க ஊராட்சி துறை உத்தரவு பிறப்பிக்கும், இன்றும் இந்தியாவில் ஊராட்சி துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊரின் ஒதுங்குப் புறங்களில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு முக்கிய காணரம் அவர்கள் பன்றிகளை வளர்ப்பதுவேயாகும்.

ஆசிய நாடுகளில் வளரும் பன்றிகள் மனித கழிவுகளை உண்பதாலும் சேறு, சகதிகளில் உருண்டுப் புரளுவதாலுமே மூளை காய்ச்சல் போன்ற நோய் கிருமிகளைப் பரப்புகிறது. ஆனால் மேலை நாடுகளில் பன்றிகளுக்கு தனி தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதால் அதனுடைய மாமிசத்தை உண்டு வருகின்றோம் என்றக் கருத்தை பன்றியின் மாமிசத்தை உண்ணும் சமுதாயத்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலை நாடுகளில் அவ்வாறு தனித்தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதை நாமும் ஊடகங்கள் வாயிலாக கண்டு வருகிறோம் மறுக்கவில்லை அவ்வாறு வளர்க்கப்படுவதால் மட்டும் அதனுடைய இறைச்சியில் வளரும் புழுக்களை ஒழித்து ப்யூர் மட்டனாக மாற்ற முடிந்ததா ? முடியவில்லை ! முடியாது !

என்ன தான் கழுவி குளிப்பாட்டினாலும் காகம் கொக்காகாது
உயிரினங்களின் மீது இறைவனுடைய இயற்கை அமைப்பை இதுவரை எவர் மாற்றி அமைத்து சாதனைப படைத்தார்கள் ? கூற முடியுமா ?

2. சமீபத்தில் மேல்படி மாமிசத்தில் இரண்டு பீஸ்களை ஒரு தட்டிலிட்டு அதன் மேல் 'கோக்' பாணத்தை ஊற்றியதும் மாமிசத்தின் உள்ளே இருந்த புழுக்கள் நெளிந்து மேல் நோக்கி வருவதை வீடியோ மூலம் பதிவு செய்து மூன்றாம் கட்டமாக அதை உண்பவர்களே உலகுக்கு அறிவித்தள்ளார்கள்.

அதன் கிளிப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.

மேற்கானும் வீடியோ கிளிப்பின் மூலம் மனித சமுதாயத்திற்கு இரண்டு படிப்பினைகள் இருப்பதை கவனிக்கலாம்.

· பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.
· நாம் தினந்தோறும் பருகும் 'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்.

மேல்படி மாமிசத்தின் மீது ஊற்றும் கோக் பாணத்தின் அமிலத் தன்மையில் எந்தளவுக்கு வீரியம் இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் புழுவால் நிலை கொள்ள முடியாமல் மேல் நோக்கி வந்திருக்கும் ?

அந்தளவுக்கு அதிகப்பவர் உள்ள அமிலம் கலந்த பெப்சி, கோக் போன்ற மனித வர்க்கத்தை அழித்து பணம் பண்ணும் யூத தயாரிப்புகள் உடல் நலத்திற்கு பெருங்கேடு விளைவிக்கக் கூடியது என்பதை அதனுடைய அமிலத் தன்மைகளின் அளவைக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யபபடவிருந்ததை மேல்படி யூத கம்பெனிகள் அப்போதைய அமைச்சர் சுஷ்மிதா சுவராஜை முறையாக கவனித்து தடை உத்தரவை வாபஸ் பெறச் செய்தார்கள்.

மேல்படி கோக் தொழிற்சாலையை கேரளாவில் அமைக்கவிருந்ததை கேரள மக்கள் முணைப்புடன் எதிர்த்து ஓட ஓட விரட்டி அத்தார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் கோக் பாணங்களில் அமிலத்தன் அளவைக் குறைத்து தயாரிக்ப்படுவதையும் ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

இதில் கொடுமை என்னவென்றால் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பாவை விட அரபுநாடுகளில் கோக் வகை பாணங்கள் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 5:79
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக
***********************

படிக்க:>>

கிறிஸ்தவர்கள் முயல், பன்றி இறைச்சி உண்ணக்கூடாது.: :பைபிள். பன்றியை தொடவும் கூடாது.

THANKS TO : http://idhuthanunmai.blogspot.com/

***************************

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….

>> Sunday, November 9, 2008

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.

எப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் "சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும்.

"உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது.

உலக வாழ்வைத் துறந்து இறையடியைத் தேடி பிரயாணம் செய்பவர்களாக நாட்டு மக்களால் கருதப் பட்ட சாமியார்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய அமைப்பான இராணுவமும் கூட்டுக் களவாணித்தனம் செய்து சங் பரிவாரத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தம்மை அடமானம் வைத்து விட்டன என்பதை மாலேகோன் குண்டுவெடிப்புத் தொடர் விசாரணைகளில் கைதாகும் இராணுவ அதிகாரிகளின் மூலம் தெளிவாகி வருகின்றன.

சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

ஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது!.

குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, "முஸ்லிம் தீவிரவாதி(!)களைக் கைது செய்" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள்.

இந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது 'இந்துத் தீவிரவாதி' என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின.

"நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

மாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல" என கழட்டி விட்டது போன்று, "எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு "குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. "
இஸ்லாமியத் தீவிரவாதி" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும்.

தமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் "இந்துத் தீவிரவாதம்" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:

"இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.

மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.

இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.

மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
"

முன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, "இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது" என்று
எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும்.

நாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது.

எனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில்,

குண்டு தயாரிப்பவன், வெடி மருந்துகளை சேகரிப்பவன், அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் நோக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்பவன், அதன் பழி வேறொரு சமூகத்தார் மீது விழ வேண்டும் என்பதற்காகப் போலி வேடம் போடுபவன், பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று பாராமல் ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொன்று குவிப்பவன்,  சிறு குழந்தைகளையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்பவன், ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் அதனைத் துஷ்பிரயோகம் செய்பவன், அப்பாவிகளை என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்பவன், அதுபோன்ற கொலைகளுக்குக் காரணமாக இருப்பவன், பொதுச் சொத்துக்களை நாசம் செய்பவன், இனவாதம் என்ற பெயரால் அராஜகம் செய்பவன், பிறமத வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி அழிப்பவன்,கலவரம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத ஊர்வலங்கள், ரத யாத்திரைகளை நடத்துபவன்...

ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.


ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1086&Itemid=51
*********************************
''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு!
நாசிக்: கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.


அதன் விவரம்:


சாத்வி: என்னை போலீசார் இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்



ராம்நாராயணன்: ஏன்?



சாத்வி: மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எனது மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.



ராம்நாராயணன்: பைக்கை நீங்கள் தான் விற்றுவிட்டீர்களே.. (விற்றதாக சொல்லிவிடலாம் என்பதை இப்படி சொல்கிறார்)



சாத்வி: எங்கே விற்றதாக சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?



ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.



சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?



ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.




சாத்வி: அந்த குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர். அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?



ராம்நாராயணன்: நிறைய பேர் இருந்த இடத்தில் தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறைய பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் (கைது நடவடிக்கை) அதை நாம் சந்திப்போம்...



இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.

இந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.

அவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.

சாத்விக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்.

**************************

மேலும் படிக்க... Read more...

ஒரு பென்சில் எப்படி உருவாகிறது.!! குறட்டை விடுபவரா?

>> Saturday, November 8, 2008

ஒரு பென்சில் உருவாகிறது

படத்தில் அழகாகக் காட்சியளிக்கும் வகையில் அடுக்கி வைத்திருப்பவை, பென்சில் தயாரிக்கப் பயன்படும் மரத் துண்டுகள். இவை கேரளாவில் கிடைக்கும் மரங்கள். எலவு எனும் மரம் விலை உயர்ந்த மரமாகும். இது தவிர, வெங்கோலா, அலன்டா, முறுக்கு போன்ற மரங்களும் பென்சில் செய்யப் பயன்படுகின்றன.

எழுதும் கரிமக்கூர் தனியே தயாரிக்கப்படுகிறது; மரம் பென்சிலுக்கேற்பத் தயாரிக்கப்படுகிறது பின்னர் இவை இணைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு, பெயர் அச்சிடப்பட்டு பென்சிலா கிறது. 25 வகைப் பணிகள் தனித்தனியே செய்யப்பட்டுப் பென்சில் உருவாகிறது.

கிராஃபைட் (கரி)டும் களிமண்ணும் கலக்கப்பட்டு நீருடன் சேர்த்துக் குழைக்கப்பட்டு எட்டு மணி நேரத்திற்கு இடைவிடாமல் அறைக்கப்பட்டு அதன்பிறகு 4 மணி நேரத்திற்கு சலிக்கப்பட்டு கரிமக்கூர் (Lead) உருவாகிறது. பிறகு தானியங்கிச் சுத்தியல் மூலம் அடித்து அழுத்தமான, உருளை வடிவத்தில் உண்டாக்கப்பட்டு தேவைக்கேற்ற பருமனில் கரிமக்கூர் தயாரிக்கப்படுகிறது.

அதேபோல, வேறுபகுதியில் மரத் துண்டுகள் சூளையில் சுடப்படுகின்றன. பென்சில்களுக்குத் தக்கவாறு மரங்களுக்குச் சாயம் ஏற்றப்படுகின்றன. கூர் வைக்கப்படு வதற்கு ஏற்றாற்போன்ற வடிவத்தை கூரின் பருமனுக்குத் தக்கவாறு அமைத்து மரத்துண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

அடுத்த நடவடிக்கையாக மரத்துண்டுகளில் பென்சில் கூர் பொருத்தும் பணி. பெரும்பாலும் பெண்கள் செய்கிறார்கள். கூர் பொருந்தியதும் மரக்கட்டைகளை இணைத்துத் தருகிறார்கள். அதன்பிறகு இடுக்கிகளுக்கு இடையே அவை வைக்கப்பட்டு இளஞ்சூட்டில் இறுக்கமாக அழுத்தி வடிவமைக்கப்படுகின்றன.

பிறகு அவை மேற்புறத்தில் செதுக்கிச் சீராக்கப்பட்டு துண்டாக்கப்படுகின்றன. அதன்பின் வண்ணம் பூசப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டு முழு பென்சில்களாக வெளிவருகின்றன. நிமிடத்துக்கு 180 பென்சில்கள் தயாரிக்கும் வகையில் எந்திரங்கள் இப் பணியைச் செய்கின்றன.

சாதாரணமாகப் பென்சில் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று மாதத்திற்கு 4 லட்சம் பென்சில்களை உற்பத்தி செய்கின்றன.



குறட்டை விடுபவரா?

குறட்டைவிட்டுத் தூங்கு பவரா நீங்கள்? வயதானவராக இருந்தால் குறட்டை விடுவதால் உங்கள் ஆயுள் நீளுமாம். 65 வயதுக்கு மேல் உள்ளவர் களுக்கு இது பொருந்துமாம். குறட்டை விடாதவர்களைவிட நீண்டநாள் இவர்கள் வாழ லாமாம்.


உயிர் வளிக் குறைவினால் தான் குறட்டை ஏற்படுகிறது என்கிறது ஆய்வு. உயிர் வளிக் குறைவினால் மூச்சை இழுத்து விடுவது விட்டுவிட்டு ஏற்படு வதைச் சரி செய்ய வயதானவர்களுக்கு இப்பழக்கம் உதவி செய்கிறது. இதனால் இரத்தக் குழாய்களில் உயிர்வளிக் குறைவு ஏற்படுவதைச் சரி செய்ய உதவுகிறது.


அதே நேரத்தில் இளைய வயதினர்க்கு இப்பழக்கம் அம்மாதிரி விளைவுகளை ஏற்படுத்துவதில்லையாம். அவர்களுக்கு குறட்டைப் பழக்கம் ஆபத்தைக் கொண்டு வருமோ?

*********************************

படிக்க:....படம்.கருப்பு M.G.Rவிஜயகாந்தின் புதிய‌ அவதாரங்கள்.பாரதி,நேதாஜி,பகத்சிங்,லால்பகதூர் சாஸ்திரி,வ‌.உ.சி.

தமிழ் தாகத்திலே பாரதியாம் , நாட்டுப்பற்றிலே நேதாஜியாம் , வீரத்திலே பகத்சிங்காம் ,சாந்தத்திலே லால் பகதூர் சாஸ்திரியாம்‌,தியாகத்திலே வ‌.உ.சி யாம். ஐயோ கொல்றாங்களே. வாசகர்களே வடிவேலு பாசையில் உங்களுடைய‌ COMMENT காம்மன்ட் கொடுங்களேன்.

*****************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அதிரவைக்கும்...'வெடிகுண்டு' சாமியாரிணி! Junior Vikatan.

>> Friday, November 7, 2008

புதன், 05 நவம்பர் 2008 குண்டுவெடிப்பு என்றாலே, 'ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்' என பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள், நம்முடைய அரசியல்வாதிகளும் புலனாய்வுத் துறை அதிகாரிகளும்.

ஆனால், கடந்த செப்டம்பரில் மாலேகாவ்ன் மற்றும் மொடாசா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்து, இந்தியாவே இடிந்துவிழும் அளவுக்கு அதிர்ச்சி பரவிக் கொண்டிருக்கிறது!

பி.ஜே.பி-யை சேர்ந்த பெண் சாமியார் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட ஐந்து பேர் வெடிகுண்டு வழக்குகளில் கைதாகி, 'இந்து தீவிரவாதிகள்' என்ற வார்த்தையை நாடு முழுவதும் உச்சரிக்க வைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 29-ல் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசாவில் இரவு ஒரு குண்டு வெடித்தது. இதில் ஒரு சிறுவன் பலியாகி, பத்துப் பேர் காயமடைந்தனர். அடுத்த பத்தாவது நிமிடத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகாவ்ன் நகரின் நூராணி மசூதியின் முன்பு ஒரு பைக்கில் குண்டு வெடித்தது. இதில் நான்கு பேர் பலியானதோடு, சுமார் 70 பேர் காயம் அடைந்தனர்.

வழக்கம்போல சிமி அல்லது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்

செய்திருக்கலாம் என்றே செய்திகள் வெளியாக, இந்த வழக்கை மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகுதான் 'இந்து தீவிரவாதிகள்' பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் அணிவகுத்தன.

குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 24-ம் தேதி, சூரத்தில் ஆசிரமம் நடத்தும் பெண்சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், இந்தூரைச் சேர்ந்த ஷியாம் லால் சாவ் மற்றும் ஷிவ்நாராயண் சிங் ஆகிய மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரையும் முக்கியமாகக் கொண்டு நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக கடந்த மூன்றாம் தேதி அஜய் ராஹில்கர், ராக்கேஷ் தாவ்ரே, ஜக்தீஷ் மாத்ரே ஆகிய மூவரையும் அடுத்தடுத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரக்யா, பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத், வி.ஹெச்.பி-யின் மகளிர் அமைப்பான துர்கா வாஹினி போன்ற அமைப்புகளில் பணியாற் றியவர். தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். பிரக்யாவுக்கு மோட்டார் பைக் சவாரி பிடிக்குமாம். சில ஆண்டுகளுக்கு முன் சந்நியாசம் பூண்டு, தன் பெயரை 'சாத்வி பூர்ண சித்தானந்த் கிரி' என்று மாற்றிக்கொண்டார். முப்பத்தெட்டு வயதாகும் இவருக்கு, நம்ம ஊர் பேச்சாளர்கள் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ஆகியோரின் வேகத்தில் இந்துத்துவா எதிரி களைத் தாக்குவது வாய்வந்த கலை!

அவருடன் கைதான ஷியாம் மற்றும் ஷிவ்நாராயண் ஆகிய இருவரும் வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகளில் இருந்து தற்போது தனி அமைப்புகள் நடத்திவருகிறார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தகட்ட அதிர்ச்சி காத்திருந்தது. கைதான இவர்களுக்கு புனேயில் வெடிகுண்டு செய்யும் பயிற்சி அளித்ததாக போபாலை சேர்ந்த சமீர் குல்கர்னி மற்றும் ரமேஷ்சந்த் உபாத்யாயா ஆகிய இருவர் பற்றி தகவல் கிடைத்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ரமேஷ், இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிரவாதிகளை எதிர்க்கப் பயிற்சி அளிக்கும் 'அபினவ் பாரத்' எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். குல்கர்னியும் இளம் வயதில் ஏ.பி.வி.பி-யில் இருந்தவர். ரமேஷ் நாக்பூரில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றியவர். இந்தப் பள்ளி, காந்தியைக் கொலை செய்தவர்களோடு தொடர்புடைய டாக்டர் பி.எஸ்.மூஞ்சே என்பவரால் உருவாக்கப்பட்டதாம்.

மேலும், இந்த வழக்கில் விசாரணைக்காக நாசிக்கில் உள்ள போன்ஸ்லா ராணுவப் பள்ளியின் கமாண்டன்ட் பதவியில் உள்ள கர்னல் பிரசாத் புரோஹித், அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற கர்னல் ரெய்கர் ஆகியோரையும் வளைத்துள்ளனர்.

இதுகுறித்துத் தீவிரவாதத் தடுப்புப் படை வட்டாரத்தில் பேசியபோது, ''குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட

எல்.எம்.எல். ஃப்ரீடம் பைக்கில், பிறை மற்றும் 786 எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, விசா ரணையைத் திசைதிருப்புவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்தது. இதனிடையில், பைக் இன்ஜினின் சேசிஸ் எண் சுரண்டி அழிக்கப்பட்டு, போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தது. இன்ஜினை பெங்களூருவில் உள்ள லேப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் மற்ற ஸ்பேர் பார்ட்ஸ§களை வைத்து சேசிஸ் எண்ணைக் கண்டுபிடித்தோம். அதில்தான் பைக்கின் சொந்தக்காரர் பிரக்யா எனத் தெரியவந்தது.

இதற்கு ஆதாரமாக, பதிவு செய்யப்பட்ட சில டெலி போன் பேச்சின் டேப் ஆதாரங்களும் கிடைத்தன. மேலும், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் (Royal Demolition Explosive) வெடிமருந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவங்களில் மட்டுமே கிடைக்கிறது.

முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து கிடைக்கிறது. ஆனால், கைதாகி உள்ளவர்களுக்கு அவர்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்பதால் அது, இந்திய ராணுவத்தில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியாக எழுகிறது!'' என்கின்றனர்.

பிரக்யாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான சந்திரபால் தாக்கூர், ''என் மகள் 99 சதவிகிதம் அப்பாவி. ஒரு சதவிகிதம் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. தன்னுடைய மதத்தைக் காப்பதற்காக அவர் தன்னை இதில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்''என்கிறார்.

பி.ஜே.பி-யின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோருடன் ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் பிரக்யா இருந்த பழைய படங்கள் பத்திரிகைகளில் வெளியானதும் 'டர்'ராகி விட்ட பி.ஜே.பி-யினர், அதையும் சமாளித்தபடி...

''இந்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் விபத்தில் இறந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ-வின் இரங்கல் கூட்டத்தில் சௌகானும் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார்கள். அதில் சாத்வியும் கலந்துகொண்டது எதிர்பாராமல் நடந்த சம்பவம்!'' என்கிறார்கள்.

பி.ஜே.பி. தொண்டர்களோ, ''பிரக்யா தன் மோட்டார் பைக்கை நான்கு வருடங்களுக்கு முன்பே விற்றுவிட்டார். பெயர் மாற்றப்படாது இருந்ததால், அவருடைய பெயர் இதில் இழுக்கப்படுகிறது. டெல்லி ஜாமியா நகர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்துகிறது காங்கிரஸ்...'' என்கிறார்கள்.

இதற்கிடையே, 'மொடாசா குண்டுவெடிப்பில் பிரக்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை!' என போலீஸார் அறிவித்துள்ளனர். இதேபோல்... பிரக்யா, ரமேஷ் மற்றும் சமீர் ஆகிய மூவருக்கும் மும்பையில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இதே சோதனையை மீண்டும் நடத்தவும் தயாராகி வருகிறார்கள் போலீஸார். இதனால் உற்சாகமான சிவசேனா, பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் பிரக்யாவுக்கு வேண்டிய சட்ட உதவிகள் செய்வதில் தீவிரமாகி உள்ளன.

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்சாமியாரின் கைதுப் படலத்தை பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அரசியலுக்கு வசமான தீனியாகப் பேச ஆரம்பித்துவிட்டன!

நன்றி- சரோஜ் கண்பத், ஆர்.ஷஃபி முன்னா(Junior Vikatan - 9-11-08)

****************************************

படிக்க:>>

குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!

*************************************

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்

>> Thursday, November 6, 2008


இவர்கள் இருக்க வேண்டிய இடம் தீவிரவாத தடுப்புப் படையின் கட்டுப் பாட்டில்தான். என்ன செய்கிறது மத்திய அரசு?


நாட்டில் இதுவரை நிகழ்ந்த தீய செயல்கள் அனைத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூலகாரண மாக விளங்குவது சங்கும்பல் என்ற சதிகாரக்கூட்டம் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.


காந்தியாரின் படுகொலை முதல் மாலேகான் குண்டுவெடிப்பு வரை இந்த சக்திகளின் சதிகள் அம்பலமாகின.


இருப்பினும், சங்பரிவார் சக்திகளின் அரசியல் மற்றும் ஊடக பலத்தின் காரணமாக அதை சிறியதாக்கிக் காட்டு வதும், மறைப்பதும், மழுப்புவதும் அவர் களது வழக்கமான தந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. காந்தியடி களைப் படுகொலை செய்துவிட்டு கொலையாளிக்கும் எங்கள் அமைப்புக் கும் தொடர்பில்லை என்று கூறிக் கொண்டே கொலையாளி கோட்சேயின் அஸ்தியை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் இவர்கள் அதனை பெருமையாகவும் கூறிக் கொள்வார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து இந்தியா வின் மாண்பை குலைத்ததோடு மட்டு மல்லாமல் பாபரி மஸ்ஜிதை இடித்ததற் காக பெருமைப்படுவதாக சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கொக்கரித்தார். இவ்வாறு தேசத் துரோக மனிதகுல விரோத தகவல் களைத் தொடர்ந்து அவர்கள் தங்களது வக்கிரப் புத்தி கலந்த பயங்கரவாதத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.


மாலேகானில் நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆண்டின் கடைசி நோன்பினைத் துறக்கும் வேளையில் குண்டுவைத்து கொலை செய்த பாதகங்களில் முக்கியமானவர்களாக, பெண் சாமியார் பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர், மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு ராணுவ அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


நாசிக்கில் உள்ள போன்சலா ராணுவ பயிற்சிக் கூடத்தில் குண்டுகள் வைப் பதற்கும் அப்பாவி முஸ்லிம்களை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்தும் சதி பயிற்சிகள் நடைபெற்று வந்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை கூறிவரும் நிலையில் அந்த பயங்கர வாதிகளை ஆதரிக்க வேண்டும் என்றும், அரவணைக்க வேண்டும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கத்தில் பயங்கரவாதத் திற்கு பால் வார்க்கும் விதமாக விஷமக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

பயங்கரவாதி பிரக்யாசிங் உள்ளிட்ட வகையறாக்களை யாரும் கைவிட்டு விடக் கூடாது என்றும், அவர்களின் செயல் குறித்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் பால்தாக்கரே. அதோடு பொதுநிதி கொடுத்து அந்த பயங்கர வாதிகளை வாழவைக்க வேண்டும் என்றும் பால்தாக்கரே கூறியுள்ளார். அவர்களை நிதி கொடுத்து காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்.ஸும் வாக்குறுதி கொடுத் தது. இதையெல்லாம் குறிப்பிட்டு, இதில் தவறு ஒன்றும் இல்லை என பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் தெரிவித்திருக்கிறார்.


இவர்கள் இருக்க வேண்டிய இடம் தீவிரவாத தடுப்புப் படையின் கட்டுப் பாட்டில்தான். என்ன செய்கிறது மத்திய அரசு? மருதநாயகம். http://www.tmmk.info/news/999589.htm

**********************************************
இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!

************************************************

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

குமுதம் ‍"அரசு"வின் பதில் ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு‍. படிக்கவும்

இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.
---------------------------------------------
நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது? - முகம்மது அன்சாரி, தஞ்சை.

இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''.

அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார்.

"ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''.

இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே?

இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும். arasu.
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/pg19.php
****************************************
இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!
**************************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

தமிழ்நாட்டு அரசியல் தலைவைகளின் கருப்பு பணம் கொட்டிக்கிடக்குது சுவிஸ் பேங்குகளில்.

>> Tuesday, November 4, 2008

64 லட்சம் கோடி சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்ட இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார். இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

05.11.08 கவர் ஸ்டோரி

ந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது.

எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.

``உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது.

அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.

அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.

இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, ``இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார்.

``பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச் சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு..

-புஷ்கின்ராஜ்குமார்

சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?

சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும்.

இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார்.

பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.

இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.


தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?

சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.

அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.

THANKS TO: KUMUDAM


----------------------------------------------
read>இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!
**************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP