**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.

>> Wednesday, April 30, 2008

சிரிக்கத் தெரிந்தால்தான் நகைச்சுவை உணர்வு வரும். ஆனால், நம்மில் பல பேருக்கு சிரிப்பின் நன்மை, ஆற்றல் பற்றி எதுவும் தெரியாது.

கடனே என்று சிரிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.

‘கழுதை அறியுமா கற்பூர வாசனை?’ அதுமாதிரிதான். நாம் சிரிப்பைப் பற்றி நன்றாக அறிந்தால்தான் வாழ்க்கையை நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்ல முடியும். நான் சொல்வதை காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேளுங்கள்...!

நன்றாகச் சிரிப்பவர்கள், நோயின்றி வாழ்வார்கள். பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுவார்கள். சிரிப்பில் பலவிதம் இருக்கிறது.... மனதொன்றி வாய் சிரிக்க. வயிறு குலுங்கச் சிரிக்கிறவர்கள் மனநோயை அண்ட விடமாட்டார்கள். வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகி எதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார்கள்.

நாம் அதிகம் சிரிக்கும்போது என்டோர்பின் ((Endorphin) என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சுவாசிக்கும் முறையும் சீரடைந்து நுரையீரல் பலப்படும்.

புன்சிரிப்பு சிரிக்கும்போது, முகத்திலுள்ள தசைகளின் விறைப்பு தளருகிறது. அதனால் பத்து வயது குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கடுகடுவென்று சினம் கொள்ளும்போது முகத்துத் தசைகளில் முப்பத்து நான்கு தசைகள் இயங்குகின்றன. ஆனால், புன்னகையின் போதோ, பதின்மூன்று தசைகள் மட்டுமே

இயங்குகின்றன. புன்சிரிப்பு நல்லதுதான். ஆனால், வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்தல் அதனினும் நல்லது. அடிக்கடி வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்குத் தலையில் வழுக்கை விழுவதில்லை.

உளவியலார் சிரிப்பை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். ‘‘சீருடன் வாழச் சிரியுங்கள்’’ என்னும் முதுமொழியை இன்றைய உளவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் சிரிப்புக்கு ஒரு முதலிடம் உண்டு. உடம்பில் குருதியைச் (இரத்தம்) செலுத்துவது போன்ற நன்மை சிரிப்பால் ஏற்படுகிறது என்று சொல்லலாம். உடல், உள்ளம் இரண்டிற்கும் ஒருங்கே நலம் அளிக்கும் தன்மை கொண்டது சிரிப்பு.

உண்மையான சிரிப்பு, உள்வடிவச் சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு, அவற்றின் சுரப்பிகளைப் பெருக்குகிறது. குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் முதலிய உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் சிரிப்பால் ஊக்குவிக்கப்படுகின்றன. மூளையின் அடிபாகத்தில் பட்டாணிக்கடலை அளவில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது. அதில் வளர்ச்சி உயிரணுக்கள் (ஹார்மோன்கள்) சரியான நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையைத் தெளிவு பெறச் செய்கிறது.

மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சி, உடல் நோய்கள் அணுகாதவாறு காத்துக்கொள்ள உதவுகிறது. இவ்வுண்மையை மருத்துவ உலகம் பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்துள்ளது. நோயாளிகள் சிரிப்பது, அவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது. சிரிப்பு, குருதியிலுள்ள (இரத்தம்) கொழுப்புச்சத்தின் (கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து நெஞ்சக நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பதை அண்மையில் சோவியத் அறிவியலார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் ‘குருதி (இரத்தம்) அழுத்த நோய்க்கும் இது நல்ல மருந்து.

நகைச்சுவை நாடகங்களுக்குச் சென்று மகிழுங்கள் அல்லது நகைச்சுவை நூல்களைப் படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்’ என்று கூறுகின்றனர். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நகைச்சுவை உடையவர்களாகவும், மிகுதியாகச் சிரிப்பவர்களாகவும் இருப்பார்களானால் பல மருத்துவமனைகள், நலத்துறை நிலையங்கள் மூடவும் நேரலாம்.

ஏன் வன்முறை, போர்களும் கூட ஒழிந்துவிடும் என்று புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்றால் சிரிப்பின் மாபெரும் ஆற்றலை என்னென்பது!...

நகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இயல்பான வாழ்வு கூட வாழ முடியாது. நகைச்சுவை உணர்ச்சியற்ற மனிதர்கள், எந்தத் தொழிலையும் வெற்றியுடன் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுண்மையை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரிய சிக்கல்களுக்குச் சிறந்த முடிவு காண சிரிப்பு உதவுகிறது என்று ரோமானியக் கவிஞர் ஹொரேஸ் கூறியுள்ளார். சிரிப்பில்லாத மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நண்பர்கள் வட்டம் இருக்காது. எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று இருப்பார்கள். இந்த மனப்பாங்கு இவர்கள் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக்கல்லாய் இருக்கும்.

நம் நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் சிரிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்நிலை மாறி, ‘நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதில் நம்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்.

உலகில் சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. அங்கே ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வந்தால் ரோட்டில் தன் நிலை மறந்து திரியும் மனநலம் சரியில்லாதவர்கள் உருவாகும் நிலை படிப்படியாகக் குறைந்து மனநலம் சரியாக இருக்கின்ற சமுதாயம் உருவாகும். புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் சிரிப்பதற்கென்றே ஒரு சங்கத்தைத் துவக்கினார்.

அதற்குப் பெயர் ‘பம்பூகு’. பம்பூகு என்றால் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வது. தவிர, வேறு குறிக்கோள் கிடையாது. மாந்தருக்கு நேரும் துன்பங்களைச் சிரிப்பதன் மூலம் மறந்து சீர் செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி ஒரு வியப்பான சங்கத்தினைத் தொடங்கினார் போலும் அந்த எழுத்தாளர்.

ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிரிக்கத் தெரியாதவர் வாழ்வே அறியாதவரே! கடைசியாக ஒரு விஷயம், சிரிப்பு என்பது மனிதனுக்கு நல்ல மருந்து. ஆனால், சில வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் சிரிக்கும்போது, என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு’ என்று மிரட்டி, சிரிப்பு என்பது அசிங்கமானது என்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.

இதனால் வளர்ந்து பெரியவனாகும் சூழ்நிலையிலும் சிரிப்பை மழுங்கடித்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே காணப்படுவார்கள். அதனால்தான் பெற்றோர்களே, குழந்தைகளை அருகில் அழைத்து ஏதாவது ‘ஜோக்’ சொல்லச் சொல்லி, நீங்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரியுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் சிரிப்பு அலை உருவாகும். இதனால் குழந்தைகள் பெற்றோர் இடைவெளி குறையும். குழந்தைகள் நட்புடன் பழகி ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசுவார்கள்.

கணவனும்_மனைவியும் ‘ஜோக் அடித்தால்’ அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதிக நெருக்கம் கொள்வார்கள். சண்டைகள் அற்ற புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அபூர்வா. SOURCE: INTERNET
------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்!! .. ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்!!

>> Tuesday, April 29, 2008

ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்.
பாரம்பர்ய உணவா? அப்படின்னா இன்னாதுப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவிற்கு அந்நிய உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆதிக்கப்பிடியில் சிக்கித் தவிப்பது ஸ்டார் ஹோட்டல்கள் + ஹைக்ளாஸ் ஃபேமிலிகள் மட்டுமல்ல. சாலையோர நடைபாதை உணவகங்களும் அதை நம்பிச் சாப்பிடும் கஸ்டமர்களும் தான். இப்போதெல்லாம் உணவுகள் வேகவைக்கப்படுவதைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கிறது. உணவுகளை வாணலியில் போட்டு வறுத்து பாதியை கீழே கொட்டி மீதியை ப்ளேட்டில் கொட்டி ஃபாஸ்ட்டாக கொடுக்கப்படும் உணவுகளுக்கு ஏக போக வரவேற்பு.

ஆகவே சாதாரண மக்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட வேண்டுமெனில் தங்கள் சொத்தையே எழுதி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும். எனவேதான் விலை குறைந்த சாலையோர உணவுகளை பலர் விரும்பியும், விரும்பாமலும் சாப்பிடுவதன் காரணம். வெளியூரிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பேச்சுலர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கேஸ் சிலிண்டர் கிடைக்கப் பெறாமல் நடைபாதைக் கடைகளை நோக்கி நடை போடுவதும் இன்னொரு காரணம்.

சரி, எது எப்படியோ சாலையோர உணவகங்கள் ஏழைகளின் அக்க்ஷய பாத்திரமாகவும், பேச்சுலர்களின் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலாகவும் மாறிப் போனாலும் இதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம். ஏனெனில் சுகாதாரமற்ற குடிநீர், தரம் குறைந்த உணவு வகைகள், சுத்தமில்லாத பாதுகாப்பு, சுவை கூட்ட உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் எசன்ஸ் கலப்பது என தரமற்ற உணவுகளால் பலவிதமான நோய்களும் பிரச்சினைகளும் நம்மை தாக்கி மரணப்படுகுழியில் தள்ள பல் இளித்து நிற்கின்றன சாலையோரங்களில்.

சாலையோர உணவக ஓனர்களின் வயிற்றில் அடிக்கும் விஷயமாக இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் ஓர் விழிப்புணர்வு விஷயமாகும். எனவேதான் தரமற்ற உணவுகளால் என்னமாதிரியான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படும்? இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என பல கேள்விகள் மூளையைச் சீண்ட ஆரம்பித்திருக்கின்றன.

‘‘சாலையோரக் கடைகளில் சுத்தமான தண்ணீர் கிடையாது. சமையல் அறை அவுங்களுக்குத் தனியா இல்லை. இதனால் ஏற்படுகிற ஆரோக்கியக் கேடுகள் அவங்களுக்குத் தெரியாமலேயே இருக்கு. இதை அறியாமைன்னு கூடச் சொல்லலாம். 99 சதவீதம் கையை சுத்தமா கழுவுறதுமில்ல, கையுறை (க்ளவுஸ்) அணியறதுமில்ல. இதனால அவங்க உடம்புல இருக்குற ‘கொக்கிப்புழு’ சாப்பிடுறவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கு. சமைக்கிறவங்க சுத்தமா இருந்தாலும் சமையல் முறைகளிலும் சத்தம் தேவை. சமைச்ச உணவுகள் சரியா மூடி வைக்காம வாகனங்களின் மாசு நிறைந்த காற்று பட்டு நச்சுக்கிருமிகள் உள்ளே புக வாய்ப்பு இருக்கு.

அதுவும் பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்னு எல்லாத்திலேயுமே கலர் பவுடர், எசன்ஸ் எல்லாம் கலக்குறாங்க. இதனால நிச்சயமா உடம்புல பாதிப்பு ஏற்படும். தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு போனப்போ, சாலையோர உணவுகளை அவ்வளவு சுத்தமாக கையுறை அணிந்து உணவு பரிமாறுவதைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஆனா நம்ம ஊர்ல அப்படியில்லைன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கு.

இதுக்கு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான் சரியான பயிற்சிகளைக் கொடுத்து சாலையோர உணவகங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன் வரணும். நுகர்வோர்களை(வாங்கிச் சாப்பிடும்)யும் பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்கணும்.

சமீபத்துல சாலையோர கடைகளில் மாமிசம் டேஸ்ட்டா இருக்கவும், நல்லா வேகணும்ங்கிறதுக்காகவும் பேராசிட்டமல் மாத்திரையை கலக்கிறாங்கங்கிறது தெரிய வந்திருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

இப்படி ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் கலப்படமோ, தரம் குன்றியதாக சுகாதாரம் அற்றதாக இருந்தால் உங்களின் நகராட்சி, அல்லது மாநகராட்சி, சுகாதார அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அதுவே கிராமப்புறமாக இருந்தால், சுகாதார நோய்த்தடுப்பு மற்றும் உணவு ஆய்வாளர் அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவரிடம் புகார் கொடுத்தால் ‘1954 உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் வந்துடுச்சு. தொடர்ந்து உணவுக் கலப்படம், தரமற்ற உணவுகளைத் தயாரித்து விற்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றுக் கோளாறோ அல்லது உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்பட்டால் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களில் புகார் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதோடு நஷ்டஈடும் வழங்கப்படும். அதேபோல சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் பதிவு பெற்ற உணவகங்களில் சாப்பிடுவது நுகர்வோருக்குப் பாதுகாப்பானது. பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக புகார் செய்யத் தயங்க வேண்டாம்’’ என்கிறார் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் க.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்.

இதனால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் குறித்து குடல் இரைப்பை மற்றும் லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்

பி. சதீஷிடம் கேட்டோம் ‘‘இதில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அதாவது உணவு சுகாதாரம், என்ன இருக்கிறது? எந்த மாதிரியான சமையல் முறை? என்பதை கவனிக்க வேண்டும். உணவை சூடாகச் சாப்பிட்டால் நுண்ணுயிர்க் கிருமிகள் உணவில் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் எதில் வைத்து சாப்பிடுகிறோமோ அதிலும் பாதிப்பு இருக்கக்கூடும். சுத்தமில்லாத பாத்திரமாக இருந்தால் பாக்டீரியா, வைரஸ், அமீபா போன்ற கிருமிகள் உணவு வழியாக நமக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். ஆக, உணவு, பாத்திரம், தண்ணீர், மூன்றும் முக்கியம்.

உணவு சுகாதாரம், இல்லை என்றால் பாக்டீரியா மூலம் டைஃபாய்டு போன்ற வியாதிகள் வந்து இம்சிக்கக்கூடும். வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைட்டிஸ் ஏ,இ) வர வாய்ப்பிருக்கிறது. அதுவே அமீபா என்றால் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதெல்லாம் சுகாதாரமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்.

இதுவே உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் தரமான அரிசியா? தேவையான அளவு காரமா? உப்பு, எண்ணெய், தரமானதுதானா? அளவு சரியா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் நெஞ்செரிச்சல், அல்சர், கேஸ் ப்ராப்ளம் எல்லாம் ஏற்படும்.

அடுத்து சமையல் முறை. உணவு நன்கு வேக வைக்கப்பட்டதாக இருந்தால் பிரச்சினை இல்லை. சரியாக வேகாமல் பாதி அளவு வெந்திருக்கும் ஃப்ரைடு ரைஸ், பிரியாணிகளால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், எல்லாம் ஏற்படக்கூடும். அதே போல் எண்ணெயை திரும்பத் திரும்ப (ரீ யூஸ்) பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, கேஸ் ப்ராப்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற குறிப்பிட்ட பல பிரச்சினைகள் சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் வருவதோடு இரைப்பை மற்றும் சிறுகுடலில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே, ஏற்கெனவே அசிடிட்டி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதுபோன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் குடல் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துதான் காப்பாற்றும் சூழல் ஏற்படும்’’ என்று எச்சரிக்கிறார்.

‘‘சாலையோர உணவகங்கள் என்பது சுய வேலைவாய்ப்பு. வேலைக்கு ஆள் சேர்க்கத் தேவையில்லை. ஏழை எளியவர்கள் அனைவரும் (பணக்காரர்கள் விரும்பினால்) சாப்பிட முடியும். ஏனென்றால் உடனுக்குடன் கேட்டதும் சூடாக அதே நேரத்தில் விலை கம்மியாகவும் கிடைக்கும். எனவே பலர் சாலையோர கடைகளை விரும்பிச் செல்கிறார்கள். இதுக்கு சட்டம் போட்டு இவர்களை ஒடுக்குவதை விட ட்ராஃபிக் பாதிக்காதவாறு, சுத்தமாக, சுகாதாரமாக உணவுகளைத் தயாரித்து விற்க அரசாங்கத்தின் மூலம் திட்டம்தான் போட வேண்டும்.

அதற்கான சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தந்த ஏரியாவுக்கு இத்தனை கடைகள் என்று பிரித்து சரியான இடத்தைக் கொடுத்து அருகில் சுத்தமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். விலைக்கு ஏற்ப அங்கு சாப்பிடும் உணவுகள் கலப்படம் நிறைந்தவையாகவும், எண்ணெய், காய்கறிகள், சிக்கன், மட்டன்களில் தரம் குறைந்ததாகவும் இருக்கும்.

இவற்றையெல்லாம் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். வெயில் காலம் வேறு ஆரம்பித்துவிட்டதால் உணவு கெட்டுப் போயிருந்தால் கூட தெரியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் சிட்டிஸன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் துணை இயக்குனர் ஷோபா ஐயர்.

கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் இயக்குனர் சந்தானராஜ் கூறும்போது, ‘‘சாலையோரக் கடைகளில் சரியான தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. வாகனப் புகைகள் உணவில் புகும். உணவின் குவாலிட்டியும் குறைவு.

போண்டா, பஜ்ஜிகளை பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். அந்த பேப்பரில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் இரத்த சோகை வியாதி ஏற்படும். சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் அஜினமோட்டோ கலக்குறாங்க. இதனால் எந்த நன்மையுமில்லை. கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வரும். ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வரும்.

எல்லாப் பொருட்களாலுமே கலப்படும் வந்துவிட்டது. பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. சம்பாதிக்கும் நோக்கத்தோடு ‘‘யாரோ சாப்பிட்டு என்ன ஆனால் நமக்கென்ன என்ன?’’ என்று அலட்சியத்தோடு வாங்கி சமைக்கும் போது எந்த மாதிரி பிரச்சினைகள் வருகிறது என்பதை சொல்லித் தானா தெரிய வேண்டும்’’.

டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) இதுபற்றி கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.

கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.

ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.

எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.

‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது.

இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!

ம.மனோ, --KUMUDAM HEALTH

ஹைவே ஹோட்டல்கள் .ஹை டெக் தில்லு முல்லுகள்.

இங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரிய பாவப்பட்டவர்கள். ஏனெனில், தன் வாழ்நாளில் யாரிடமும் வாங்காத பேச்சுக்களையும் திட்டுகளையும் இங்கே சிறுநீர் கழிக்கும் இருபது முப்பது நொடிகளுக்குள் வாங்கிவிடுவார்கள். இன்னும் ஒரு சிலரோ, ரத்தம் சொட்ட உருட்டுக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.

உலகிலேயே மிக அசுத்தமான இடத்தில் காஸ்ட்லியான வியாபாரச் சந்தை எதுவென்றால், அது தமிழகமெங்கும் விரவியிருக்கும் மோட்டல்கள்தான். ஆம்! மோட்டல் எனப்படும் பேருந்து பயணத்தில் சாலையோர உணவகங்களில்தான் மேலே சொன்ன மகா கொடுமைகள்.

‘‘கீரையில உப்பு அதிகம். உருளைக்கிழங்கு வேகவே இல்லை. ரசம்ங்கிற பேர்ல கோமியம். அரை வேக்காட்டில் புழுத்துப்போன சாப்பாட்டுக்கு அம்பது ரூபா புடுங்கறீங்களே’’ என்று பயணி ஒருவர் சென்னை செல்லும் வழியிலுள்ள மோட்டலுக்குள் எகிற,

அவரை அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்டு விட்டனர். கேள்வி கேட்டவர் இன்று மாதச் சம்பளத்தை இழந்து கைகால் ஊனமுற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

‘‘ஒரு காப்பியைக் கொடுத்துட்டு பத்து ரூபாய் என்கிறீங்க. காப்பியில பால் சுத்தமாவே இல்ல. என்னய்யா காப்பி விக்கிறீங்க?’’ என்று கொதித்துப்போன வழக்கறிஞர் காபியைக் காட்டிலும் சூடாகியிருக்கிறார். கடைசியில் இருதரப்பிலுமே கைகலப்பில் முடிந்திருக்கிறது.

தாறுமாறான விலை. தரங்கெட்ட மினிமம் கியாரண்டி. அவர்கள் வைத்ததே சட்டம் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சில சாம்பிள்களே!

‘‘மோட்டல்கள் இருக்கும் நட்ட நடு காட்டுப்பகுதியில் அவர்களை மீறி யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அந்தளவிற்கு மோட்டலில் வேலை பார்க்கும் ஆட்கள், அடியாட்கள் ரேஞ்சிற்கு அதட்டி மிரட்டி வியாபாரம் செய்வதுதான் அவர்களின் பெரிய பலம்’’ என்கிறார் சமூகநல ஆர்வலர் ஒருவர்.

காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான உயரதிகாரி ஒருவர், ‘‘அடிக்கடி சென்னை போய்ட்டு வரக்கூடிய ஆளுங்க நான். நானே பல இடங்களில் அவங்களோட செயல்பாட்டை கண்டு கோபப்பட்டிருக்கேன். ஒருமுறை விக்ரவாண்டி மோட்டல்ல சாப்பிட நேர்ந்தது. ரெண்டு தோசையை வச்சாங்க. என்ன கறின்னு தெரியலை? கிண்ணத்துல கறியைக் கொண்டு வந்து வச்சாங்க. நான் கேட்டது தோசை மட்டுந்தான்.

ஆனா, அவங்களா கறின்னு கொண்டு வந்து வச்சுட்டு சட்டை பண்ணாம போய்ட்டாங்க. நான் எதிர்த்துக் கேட்டப்போ, ‘இதுதான் இருக்கு. சாப்பிடறதா இருந்தா சாப்பிடுங்க. இல்லைன்னா அறுபது ரூபா பணத்தைக் கொடு’ங்கன்னு பில்லை வச்சுட்டான். நாம பேச சாய்ஸே தரமாட்டாங்க.

நான் பிரச்னை பண்ணிட்டேன். உடனே அங்கிருந்த கேஷியர் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி ‘அண்ணந்தான் இன்சார்ஜ். அங்க பேசுங்கன்’னு காலரைத் தூக்கி விடுறான்!?’’ என்கிறார்.

‘‘பிஸ்கெட், வாட்டர் பாட்டில் எல்லாமே ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும். சில இடங்களில் பொம்பளைங்க பாத்ரூம் போறதுக்கு மட்டும் அஞ்சு ரூபாய்க்கு அதிகமா வாங்கிறாங்க. ஏன்னா அவங்களால மோட்டலை சுத்தி வேற எங்கேயும் போகமுடியாது. ஆம்பளைக போனா உருட்டுக்கட்டையால அடிச்சு ஆளைகாலி பண்ற மாதிரி அடாவடி வேலைகளாம் பண்ணி பெட்டுல படுக்க வைச்சுருவானுக. இதெல்லாம் பாக்கிறப்ப வயித்தெரிச்சலாத்தான் இருக்கு’’ என்று குமுறுகிறார் இன்னொரு பயணி.

சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் தனியார் வங்கி ஊழியரோ,

‘‘அரை கப் பால் பதினைஞ்சு ரூபா. காஞ்சு போன எலணி இருபது ரூபா. ஒரு கப் புளிச்ச மாவுல ஊத்துற ஊத்தப்பம் பதினெட்டு ரூபா. ஒரு இட்லி ஆறு ரூபா. அஞ்சு ரூபாய்க்கு பொறாத கூல்டிரிங்ஸ் பதினைந்து ரூபா. இதெல்லாம் எந்த நாட்டுலங்க? அநியாயத்தை யாருமே தட்டிக் கேட்கிறதில்லை. மீறி கேட்டா, ‘ஒருமையில பேசி அந்தப் பகுதியில இருக்கிற ஆளுங்கட்சி மினிஸ்டரைப் போய் பாரு’ங்கன்னு சொல்றானுக.

மாமண்டூர், விக்ரவாண்டி, தொழுதூர், கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, வையம்பட்டின்னு திருச்சியை சுத்தியே எத்தனையோ மோட்டல் கொள்ளைகள் பகிரங்கமா நடந்துட்டு இருக்கு’ இன்னைக்கு இந்த ‘ஹைடெக் தொழில் கொள்ளை’ தமிழகமெங்கும் மக்களை மிதிச்சு கோரமாக தடம் பதிச்சிருக்கு’’ என்றார் முகம் சிவக்க.

இதுபற்றி திருச்சி டெக்கான் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில செயலாளர் பாரதராஜாவிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘மோட்டல் கொள்ளையை விட மோசமாக மக்களுக்கு தீங்கிழைக்கிற விஷயம் இன்னைக்கு வேறெதுவும் இல்லீங்க. எந்தவொரு மோட்டல்லயும் விலைப் பட்டியலே வச்சிருக்கமாட்டாங்க. கிராமத்துல திருவிழாவுல போட்டிருக்கும் கடை மாதிரி வாய்க்கு வந்த விலையைச் சொல்லுவாங்க.

லட்சக்கணக்கான மக்களின் (பேருந்து) வழிப்பறியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு மோட்டல்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தவே கூடாது என அரசாங்கமே அரசாணை இடுவதைத் தவிர வேறு வழியில்லை ’’ என்கிறார் பாரதராஜா நெத்தியில் அடிச்ச மாதிரி. கவனிக்குமா நம் அரசு?.
_ இரா.கார்த்திகேயன் KUMUDAM.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?''

>> Sunday, April 27, 2008

ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.

''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' என்று புலம்பினான்.

''அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?'' என்று கேட்டார்.

''ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.''

''அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?''

''கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்.''

''சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?''

பணக்காரன் யோசித்தான்.

''அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்.''

''ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?''

''என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் நான்தான்!''

''உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?''

இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் பதிலில்லை.

மேலும் படிக்க... Read more...

‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது? ஏன் இப்படி பெயர் ? நாவல் பழம் சாப்பிட்டால் ‘மெட்ராஸ் ஐ’ வருமா ?

>> Saturday, April 26, 2008

‘‘1930_ல் கிழக்கிந்திய கம்பெனிக்காக சென்னைக்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் பலருக்கு திடீரென்று இந்தக் கண்நோய் தாக்கியது.

குளிர் பிரதேசங்களில் இந்த நோயைப் பரப்பும் வைரஸ் குறைவு. உஷ்ணப் பிரதேசத்தில்தான் அதிகம். அதனால் மளமளவென இந்த கண்நோய் பரவியதை முதன்முதலாக பார்த்த பிரிட்டிஷ்காரர்கள் மலைத்து விட்டனர். இது என்ன புதுவிதமான நோயாக இருக்கிறதே என்று வியந்து அவர்கள் வைத்த பெயர்தான் ‘மெட்ராஸ் ஐ’.

‘அடினோ’ என்கிற வைரஸ்கள் இந்த நோய்க்குக் காரணம். ஏழு நாள் முறையா சிகிச்சை எடுத்தா தப்பிக்கலாம். இல்லைன்னா ஒருவாரம் அவஸ்தைதான்.

பொதுவாகவே கண்களை நாம் சீண்டினா அதோட ரியாக்ஷன் ரெட்! அதுக்காக சிவப்பாயிட்டாலே மெட்ராஸ் ஐ தானோன்னு நினைச்சிடக் கூடாது. வேற சில பாக்டீரியாக்கள் இன்ஃபெக்ட் ஆகும் போதும் கண்கள் சிவப்பாக மாறும்.

சிவப்புடன் உறுத்தல், வலி, பூளை தள்ளுதல், கண்ணீர் வற்றி கண்கள் உலர்தல் இதெல்லாம் ‘மெட்ராஸ் ஐ’யின் ஸிம்டம். என்னதான் நீங்களும் உங்கள் கண்களும் சுத்தமாக இருந்தாலும் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் இது பரவும்.

காற்று, தண்ணீர் என பல விதமா பரவும். சிலருக்கு மூக்கு, தொண்டைப் பகுதிவரை கூட இந்த இன்ஃபெக்-ஷன் பரவும். எதுவானாலும் எல்லாம் ஏழு நாட்களுக்குத்தான்.

டாக்டரைப் பார்த்து அவர் தந்த மருந்தை மட்டும்தான் போடவேண்டும். வைரஸ் இன்ஃபக்ஷனா, பாக்டீரியா இன்ஃபக்ஷனா என்று தெரியாமல் மெடிக்கல் ஷாப் மருந்துகளைப் போடக்கூடாது. சிலருக்கு நான்கு நாட்களில் குணமானாலும்கூட ஏழுநாள் மருந்து போடுவது நல்லது.

பின்விளைவுகள் இந்த நோயில் எதுவும் இருக்காது. வெகு சிலருக்கு விழி வெண் திரையில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

மற்றபடி, ‘நாவல்பழம் தின்பதால் கண்நோய் வரும்’’ என்பது எல்லாம் கட்டுக்கதை. மழைக் காலத்தில் ‘மெட்ராஸ்_ஐ’ பரவுவதற்கு வாய்ப்பான நேரம். அந்த நேரத்தில் நாவல் பழத்துக்கும் சீசனாக இருக்கலாம்.. அதனால் முடிச்சு விழுந்திருக்கும்!

கண்கள் கோவைப் பழம்போல் சிவக்கக் காரணம்... கான்ஜு னீட்வல் என்ற கண்களின் இரத்தக் குழாய்களில் அடினோ வைரஸ் இன்ஃபக்ஷனால் ஏற்படும் அதிகப் படியான இரத்த ஓட்டம்தான் உங்கள் நீலக் கண்களை நெற்றிக் கண்ணாக மாற்றிவிடுகிறது!

படிக்க:>> மெட்ராஸ்_ஐ வந்தால்
http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/blog-post_13.htm.
------------------------------------------
படிக்க:>> மருத்துவம்
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

கால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்!

>> Thursday, April 24, 2008

லண்டன், ஜன.3- கால் மேல் கால் போட்டுக் கொண்டு இருந்தால் சுகமே தனி என்றும், சதா சர்வநேரமும் கால்களை ஆட்டிக்கொண்டே இருந்தால் அதற்கான சுகமே தனி என்றும் நம்மில் பலர் சொல்வதுண்டு.

அதனை மையமாக வைத்து லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகர மான தகவல்கள் வெளியாகியுள்ளன.அவ்வாறு தொடர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டே இருந்தால், இதய அடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதற்காக சுமார் 3400 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரின் சராசரி வயது 68. இந்த ஆய்வில் இருபாலரும் கலந்து கொண்டனர்.

தூக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டே இருந்தால், ஆரோக்கியமான தூக்கம் கெடுவதுடன், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருமடங்கு அதிகம் என்கின்றனர்.

சாதாரணமாக கால்களை ஆட்டினால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களும், அதனையே தொடர்ச்சியாக மேற் கொண்டுள்ளவர்களுக்கு நாளாவட்டத்தில் இதய பாதிப்பு போன்ற நோய்களும் வரும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

இதில் புகை பிடிப்பது, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடன் இருப்பின், அதற்கான சாத்தியக்கூறுகள் இரட்டிப்பாக உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-----------------------------------------
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

இஸ்லாம்

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.

>> Wednesday, April 23, 2008

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காய்ச்சல் வருவது எல்லாம் எதனால்?

சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறார் பிரபல குழந்தை நல மருத்துவர் விஸ்வநாத்.

‘‘இதற்கு முக்கியமான நான்கு காரணங்கள் அலர்ஜி, சுற்றுச்சூழல் பாதிப்பு, இன்ஃபெக்ஷன், நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பது.

நம் வீட்டில் உள்ள டஸ்ட் குழந்தைகளுக்கு முதல் எதிரி. அதேபோல் கல்யாணவீடு, பொருட்காட்சி, தியேட்டர் என்று குழந்தைகளை நெரிசல்மிக்க இடங்களுக்குத் தூக்கிச் செல்வது அலர்ஜிக்கு ஒரு காரணம். இது எல்லாவற்றிற்கும் மேலாக டெடிபியர் போன்ற புசுபுசு பொம்மைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குழந்தைகள் தூங்கும் பழக்கம் ஆரோக்கியமானதல்ல.

அதேபோல் கொசுவத்தி, ஊதுபத்தி புகை முதல் நாம் உபயோகிக்கும் செண்ட், ஸ்ப்ரே எல்லாம் குழந்தைகளின் சுவாசத்தைப் பாதிக்கும் சமாச்சாரங்கள்.

இன்ஃபெக்ஷனைப் பொறுத்தவரை முதல் ஆபத்து ஃபீடிங் பாட்டில்கள்தான்.

நன்றாகச் சுத்தப்படுத்த முடியாத பால் பாட்டில்கள் குழந்தைகளின் நிரந்தரத் தொல்லைகளுக்குக் காரணமாகின்றன.

குழந்தைகள் வளர வளர ஆரோக்கியம் பெருகுவதற்கு பதில் நோய்கள் பெருக முக்கியக் காரணம், பிறந்த முதல் நான்கு நாட்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்காதது தான்.

குறைப் பிரசவத்தாலும் சிசேரியனாலும் அவதிப்படும் தாய்மார்கள் சீம்பால் எனப்படும் முதல் நான்கு நாட்கள் சுரக்கும் தாய்ப்பாலை குழந்தைகளுக்குத் தர முடியாத பொழுது, நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைகளுக்குக் குறைவாகிவிடுகிறது.

இன்ஃபெக்ஷனுக்கு இன்னொரு காரணம், அஃபெக்ஷன்... குழந்தைகளை சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.

இந்த அடிப்படைக் காரணங்களில் நாம் போதுமான கவனம் செலுத்தினால் குழந்தைகளின் சளி, காய்ச்சல் தொல்லைகளை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் இரத்தத்தில் உள்ள காமா குளோபுவின் என்ற அணுக்களின் குறைபாடு இதற்குக் காரணமாக இருக்கும்.!’’

மேலும் படிக்க... Read more...

உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில் போனாலும், சில சமயம் டி.வி. பார்த்தால் கூட இதற்கு என்ன காரணம்? இது நோயா?

>> Monday, April 21, 2008

எப்பொழுது சினிமா பார்க்கச் சென்றாலும் சரி; பஸ்சில் போனாலும், சிலசமயம் டி.வி. பார்த்தால்கூட உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? இது நோயா?

பதிலைத் தருகிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன்.

‘‘முதல் காரணம் ‘இன்ஆக்டிவிட்டி’. அதாவது உடலுக்கு வேலையில்லாமல் சும்மா இருப்பது. அப்படி இருந்தாலே சிலருக்கு உடனடியாகத் தூக்கம் வந்துவிடும்.

இரண்டாவது காரணம், இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருப்பது. நீங்கள் செய்கின்ற வேலையில் ஆர்வம் இல்லா விட்டால் கூட தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகளுக்கு படிக்கும்போது வருவதுபோல்.

இதையெல்லாம் நாம் நோய் என்று சொல்லமுடியாது. நோய் எதுன்னா வண்டியை நாம் ஓட்டும்போது கட்டுப்படுத்த முடியாமல் வரும் தூக்கம்; நம் தினசரி வேலைகளைச் செய்ய முடியாமல் வரும் கட்டுப்படுத்த முடியாத தூக்கம் இவைதான்.

பொதுவாகச் சிலரிடம் கேட்டால், ‘வாக்கிங் போறதுக்கு நேரமே இல்லை’ன்னு சொல்வாங்க. ஆனால் காலையில ஒரு மணி நேரம் ‘இந்து’ பேப்பர் படிப்பாங்க. இதுல என்ன தெரியும்னா உண்மையான காரணம் அவங்களுக்கு ஆர்வமில்லாததுதான். ஆனா அவங்க நினைக்கிறது நேரமில்லைன்னு.

இந்தத் தூக்கத்தையும் அது எப்படி வருது எப்பொழுது வரும்?னு கொஞ்சம் கூர்மையா கவனித்தால் இது நோயா அல்லது இயல்பான்னு தெரிஞ்சுடும். நோயின் சாயல் தெரிஞ்சா மருத்துவரை அணுகுவது நல்லது.’’
-----------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

நெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்? சரிசெய்ய ?

>> Sunday, April 20, 2008

அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டு ஏப்பமும் கூடவே வந்து இம்சை செய்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் சதீஷ் (குடல் இரைப்பை மற்றும் லேபராஸ்கோபி நிபுணர்)

‘‘நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முதல் காரணமே நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்தான்.

லைஃப் ஸ்டைல் என்ற பெயரில் இயற்கையான உணவு முறைகளை ஓரம்கட்டிவிட்டு, ஃபாஸ்ட்புட் எனப்படும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளையும், எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளை இஷ்டத்திற்கு சாப்பிட ஆரம்பித்ததுதான்.

தொடர் மது, குடிப்பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கும், அதிகமான மன உளைச்சலில் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் பிரச்னை வந்து எரிச்சலை மூட்டுகிறது. எப்படி என்கிறீர்களா?

பொதுவாக உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடம் வயிற்றின் மேல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு வால்வு இருக்கும். இந்த வால்வானது நாம் உணவை உட்கொள்ளும்போது திறக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் திரும்ப மூடிக் கொள்ளும்.

ஆனால், அப்படி சாப்பிட்டு முடித்தபிறகு வால்வு மூடா விட்டால்தான் பிரச்னை. மேல் சொன்ன பிரச்னைகள்தான் வால்வு மூடாததற்குக் காரணம். இதனால் இரைப்பையில் இருக்கும் உணவும், அமிலமும் உணவுக்குழாயை நோக்கி மேலே வந்துவிடும்.

இதுதான் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி ‘உவ்வ்வக்’ என்று புளித்த ஏப்பத்தை வரவழைத்து எதிரில் இருப்பவர்களை கொஞ்சம் முகம் சுளிக்கவும் செய்து விடுகிறது.

அதுமட்டும்தானா... வயிற்றின் மேல் பகுதியில் தாங்க முடியாத வலியை உண்டாக்கி, வாயிலிருந்து வாந்தியையும் வரவழைத்துவிடும்.

இப்படிப்பட்ட நெஞ்செரிச்சல் வராமல் இருக்க முதலில் மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்க்கவேண்டும். அதோடு, மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். அதையும் மீறி சிலருக்கு குணமாகாமல் போனால், எண்டோஸ்கோபி மற்றும்

(MANOMETRY) மேனோமேட்ரி பரிசோதனைகள் செய்து லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால், இச்சிகிச்சை தேவைப்படுவது குறைவுதான்.’’

மேலும் படிக்க... Read more...

காலில் கண்ணாடி குத்திவிட்டதா? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு ? பிளாட்டினம் ஏன் அத்தன விலை? ETC....

>> Saturday, April 19, 2008

தங்கம், வைரத்தைவிட பிளாட்டினம் எந்த வகையில் உசத்தி? பிளாட்டின நகையை கடைக்குப் போய் விலையை விசாரித்தபோது மயக்கமே வந்துவிட்டது ஏன் அத்தன விலை?

பிளாட்டினத்தைத் தயாரிக்க நிறைய செலவாகும் என்பதே காரணம். அது தங்கத்தைவிட 35 மடங்கு அரிதானது. உற்பத்தி செய்யும் செலவும் அதனால் அதிகம். மிக மிகத் துல்லியமான. 18 காரட் தங்கம் 95 விழுக்காடுதான் துல்லியம்.

பிளாட்டினம் நகைகள் 99.95 சதவீதம் துல்லியம். பிளாட்டினத்துக்கு மருத்துவ உபயோகங்கள் பல உண்டு. இதயத்தில் பதியவைக்கும் பேஸ்மேக்கர்களில் பிளாட்டினம் பயன்படுகிறது. சில கான்ஸர் செல்கள் இரட்டிப்பாவதை பிளாட்டினம் தடுக்கிறது. அதனால், கான்ஸர் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. அதன் ஸ்திரத் தன்மையும், கலக்காத தன்மையும் பல விதங்களில் பயன்படுகின்றன.


பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு

கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன்? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு உள்ளதா?

நம்முடைய ஸ்திர நிலையை மூளை உணர்வதற்கு நான்கு சிக்னல்கள் தேவை.

1. காதுகளின் உள்பகுதியில் உள்ள திரவம், முப்பரிமான சமநிலையை அறிவிக்கிறது.

2. கண்கள், சுற்றுப்புறத்துக்கும் நமக்கும் உள்ள அசைவு வேறுபாடுகளை உணர்த்துகின்றன.

3. காலிலும் உட்காரும் இடத்திலும் உள்ள அழுத்தம் மூலம் புவிஈர்ப்பு விசை நம் உடலை எப்படி பாதிக்கிறது, எது மேல், எது கீழ் என்பதை உணர்கிறோம்.

4. தசைகளுடன் இணைந்த நரம்புகள், செய்திகள் உடலின் எந்தப் பகுதிக்கு நகர்கிறது என்பதை அறிவிக்கிறது.

இந்த நான்கு செய்திகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், குமட்டல் வரும். குறிப்பாக, பிரயாணத்தின்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கண்கள் நகர்வதை கவனிப்பதில்லை. காதுகள் நகர்தலை உணரும்போது, விளைவு சுழட்டல் குமட்டல்! அதிகமாக இருந்தால் ஆவோமின் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம், டாக்டரை கேட்டுவிட்டு.

--------------------------------------------------------------------------
படிக்க:>> பேயடிக்கிறதா? சாக்லெட்டில் மனித ரோமம் ? கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா?++
கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா? பேயடிக்கிறதா? கண்களின் சக்தி வழிகாட்டும் செடி... பாக்டீரியாபுதிதாக வீடு கட்டும் பொழுது சுவற்றுக்கும் தளத்திற்கும் தண்ணீர் ஊற்றுகிறார்களே அது ஏன்? எவ்வளவு நாள் ஊற்ற வேண்டும்?கலோரின்னா என்ன? சராசரியா ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தன கலோரி தேவைப்படும்?
குழந்தைகளுக்கு சாக்லெட் தரலாமா? அதில் மனித ரோமம் கலக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே, உண்மையா?
ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிச்சா ஸேஃப்? சோப்புல கூட ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு தனித் தனி சோப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இருட்டில் (வெளிச்சம் இல்லாமல்) டி.வி. பார்ப்பது நல்லதா?

ரெப்ரிஜிரேட்டரில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகள் எத்தனை மணி நேரம் வைத்திருந்தால் ருசி கெடாமல் இருக்கும்?காலில் கண்ணாடி குத்திவிட்டதா?
நல்ல ஆரோக்கியத்திற்குப் பச்சரிசி நல்லதா? அல்லது புழுங்கலரிசி நல்லதா?
-------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அதிசயம்!!!. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா? உள்ளம் இரண்டு! உருவம் ஒன்று.காலம் காட்டும்!

18 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஓர் இணையருக்குக் குழந்தை பிறந்தது. இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு தலைகள் என்று பிறந்தது.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் உள்ளே முது கெம்புகள் இரண்டு, தண்டுவடம் இரண்டு, குடல் இரண்டு, இதயம் இரண்டு, நுரையீரல் இரண்டு, சிறுநீரகம் மூன்று (நான்குக்குப் பதில்) என்று உள்ளன.

குழந்தைக்குப் பெயர்களும் இரண்டு தான். அபிகெய்ல், பிரிட்னி என்று.

உடம்பின் இடப்பகுதி பிரிட்னிக்கும் வலப்பகுதி அபிகெய்லுக்கும் உரியது. அபிகெய்ல் வலக்கையையும் வலக் காலையும் மட்டுமே இயக்க முடியும்.
அதுபோலவே பிரிட்னி இடது காலையும் கையையும் மட்டும் இயக்க முடியும். அடுத்த பாகத்தின் மீது இவர்களுக்கு பாத்தியம் கிடையாது; இயக்கமும் முடியாது.

நடக்கும்போது இருவரும் சீராக இணைந்து செயல் பட்டால்தான் நடக்க முடியும். அப்படிப்பட்ட நிலை இருந்தாலும்கூட இவர்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். கூடைப் பந்து ஆடுகிறார்கள்.
வாலிபால் விளையாடுகிறார்கள். இருவருமே கார் ஒட்டும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஓட்டுநர் உரிமமும் கூட இரண்டுதான்.

பிரிட்னி இடது கையால் எழுதுகிறார். அபிகெய்ல் வலது கையால் எழுதுகிறார். தனித்தனித் தட்டில்தான் சாப்பிடுகிறார்கள். வெளியே அனுப்பும்போது முத்தம் கொடுத்து அனுப்புவதும் உள்ளே வரும்போது அணைத்து மகிழ்வதும் அந்நாட்டுப் பழக்கம். அதன்படி இவர்களின் அம்மா அளிப்பது இரண்டு முத்தங்கள். ஆனால் அணைப்பது ஒன்றுதான்.

பள்ளிப் படிப்பை முடித்து விட்டனர். கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஆமாம், பள்ளிப் படிப்புக்குச் சான்றிதழ் இரண்டு தந்திருப்பார்களே! விண்ணப்பம் இரண்டு கொடுத்துக் கல்லூரியில் சேர வேண்டுமே! வேடிக்கைதான்.

இப்படி எல்லாமே இரண்டிரண்டாக இருந்தாலும், பெண் உறுப்பும் கருப்பையும் ஒன்றுதான்! திருமணம் செய்து கொள்ளும் போது மணமகன் ஒன்றா, இரண்டா?காலம் காட்டும்!

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP