**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லிம்கள் மீது பாஜக,ஆர்.எஸ்.எஸ். கை வைத்தால் அவைகள் மீது முதல்அடி இந்துவின் அடியாகதான் இருக்கும்.

>> Friday, December 11, 2015

தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது பாஜக, ஆர்.எஸ்.எஸ். கை வைத்தால் அவைகள் மீது முதல்அடி இந்துவின் அடியாகதான் இருக்கும்.


நாம் சொல்ல நினைத்ததை நான்கே வரியில் இரத்தின சுருக்கமாக கூறியுள்ள சகோதரர்.....!!

குஜராத்தில் 2001 ஆம் ஆண்டு பூகம்பம் வந்த போது குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் இதேப்போன்ற மீட்புப்பணியில் ஈடுபட்டு, உணவு, உடை, இரத்தம் கொடுத்து இந்து மக்களை காப்பாற்றினர்.


அப்போது TNTJ வும் தமுமுகவும் ஒன்றாக இருந்த காலக்கட்டம், குஜராத் பூகம்பத்திற்கு ஒன்றிணைந்த தமுமுக சார்பாக ரூ 10 லட்சம் தமிழகத்திலிருந்து குஜராத்திற்கு வழங்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 10 லட்சம் என்றால் இன்றைய மதிப்பில் ரூ 1.5 கோடியை விட அதிகம்,

மேலும் இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குஜராத் பூகம்பத்தின் போது மீட்பு பணி, நிவாரண பணி என்று பல்வேறு மனிதநேய உதவிகளை வழங்கினர்.


இப்போது எழுதுவது போல் அப்போதும் பத்திரிக்கைகள் மதத்தை வென்றது மனிதநேயம் என்று எழுதினார்கள்.

அவ்வாறு எழுதப்பட்டு ஒரே வருடத்தில் யாருடைய இரத்தம் தன்னுடைய உடலில் ஏறியதோ அவனுடைய இரத்தத்தையே குடித்த பாஜக இந்துத்துவா கூட்டம் தான் குஜராத்தில் மனித மிருகங்களாக வாழ்கின்றனர்.

இரண்டே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். நரவேட்டையாடப்பட்டனர். நாடு முழுவதும் மரண ஓலங்கள்,

ஆகையால் ஐயா சொல்லும் கூற்று 100 சதவீதம் உண்மை,


அதேசமயம் இது குஜராத்தோ அயோத்தியோ அல்ல, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர் போன்ற பல்வேறு தலைவர்களால் பண்படுத்தப்பட்ட தமிழக மண்,

இங்கு முஸ்லிம்கள் மீது பாஜக கை வைத்தால் முதல் அடி இந்துவின் அடியாக தான் இருக்கும்.

எச்சரிக்கையான கருத்தை சொன்ன ஐயா கிருஷ்ணசாமி கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
*************

 கிருஷ்ணசாமி பெ கண்ணன் அய்யா உங்களை போன்ற சொந்தங்கள் இருக்கும் வரை தமிழகத்தில் பிரிவினை சக்திகள் காலூன்ற முடியாது ,,,இந்தியாவில் தமிழகம் தனித்தன்மை வாய்ந்த மண் ,,, இந்து முஸ்லீம் ஒற்றுமையை தமிழகத்தில் ஒரு நாளும் பிரிக்க முடியாது,, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தமிழகத்தில் பிரிவினையை உண்டு பண்ண முடியாமல் விரக்தியில் சொன்ன வார்த்தை ""தமிழகம் கடிக்க முடியாத கொட்டையாக உள்ளது ""Abdul Raheem

 ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. குஜராத் போன்று இங்கும் நடைபெறலாம். இறைவனே பாதுகாவலன். எனக்கு ஒரு சின்ன வருத்தமும் சந்தேகமும் கூட. நம் மக்கள் ஒரு அரசியல்வாதி என்னாதான் அயோக்கியன் என்று தெரிந்தாலும் அந்த நேரத்தில் கொடுப்பதை வாங்கிக்கொண்டு மாறிமாறி வாக்களிக்கத்தானே செய்கிறார்கள். மேலும் தகவலை கொண்டுசேர்க்கும் ஊடகங்களும் அயோக்கியர்கள் கையில்தானே உள்ளது. எது நடந்தால் நமக்கென்ன என்று மக்கள் பலர் இருக்கும்வரை அயோக்கியர்களின் கை உயர்ந்தே இருக்கும். உதாரணத்திற்கு சில செய்திகள்
1: தமிழக முதல்வர் இராணுவ தளபதிபோல் செயல்பட்டார்.

2:நாற்பது இலட்சம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் களப்பணி.

 படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.3:வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு தீவிர மீட்புபணியில் ஈடுபட்டது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பணம் பாதாளமும் பாயும். பாய்மார்களுக்கு எதிராகவும் பாயும். எல்லாவற்றிற்கும் இறைவன் ஒருவனே போதுமானவன்.

,, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தமிழகத்தில் பிரிவினையை உண்டு பண்ண முடியாமல் விரக்தியில் சொன்ன வார்த்தை ""தமிழகம் கடிக்க முடியாத கொட்டையாக உள்ளது ""  Nasarudeen Bilalahmad.


படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.


படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.
படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.


1 comments:

கும்மாச்சி December 11, 2015 at 8:56 PM  

உண்மை ஐயா நாம் காலகாலமாக ஒன்றாக இருக்கிறோம் இனியும் ஒன்றாக இருப்போம், நம்மை எந்த தீயசக்தியும் பிரிக்க முடியாது.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP