கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம்.
>> Wednesday, December 9, 2015
அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் இப்பொழுது கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவிக்கிறார்கள். எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் கரசேவை செய்வோம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அங்கே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இதுவரை சென்றிருக்க வாய்ப்பில்லை. இப்போது அந்தக் கோவிலில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அண்டாக்களில் சமைத்து பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்றினர்.இந்த நிவாரண பணிகளில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர் திரும்பாமல் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
வெள்ளிகிழமையன்று நடைபெற்ற தொழுகையின் பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிராத்தனை செய்தனர். மேலும் அவர்களுக்கு வழங்குவதற்காக நிதி திரட்டும் பணியையும் மேற்கொண்டனர். இதில் அனைத்து இஸ்லாமியர்களும் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்தனர்.
வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து விட்டபடியால் வீட்டில் சமையல் செய்ய முடியாமல் தவிக்கும் பிராம்மண குடும்பம், தெருவில் உணவு கொடுத்துக் கொண்டிருக்கும், இஸ்லாமியத் தோழர்களிடம் வாங்கி பசியாறினர். இந்த வெள்ளம் பலதரப்பட்ட மக்களின் மனங்களை இணைத்து விட்டது.
மசூதிளை திறந்துவிட்டு மக்களைத் தங்க வைத்துள்ளார்கள். இதைப்போல இந்துக் கோயில்களையும் திறந்துவிட்டிருக்கலாம் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்து சமய அறநிலையத் துறைதான் முடிவெடுக்க வேண்டும் என்பதே பதிலாக உள்ளது.
மத்திய அரசின் உளவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றியுள்ள மணி, தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு நேற்று 08.12.15 காலையில் நேரில் வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்து பாராட்டிச் சென்றார். இவரது மகன் கனேசன் அவர்களும் ஐபியில் அதிகாரியாக உள்ளார். டிஎன்டிஜேவினரால் மத நல்லிணக்கம் தழைப்பதாக தெரிவித்தார். பார்த்த சாரதி கோவிலில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு இஸ்லாமிய அமைப்பின் சார்பாக உணவளித்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று தெரிவித்தார்.
மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் காவடி தூக்கவும், பால் குடம் எடுக்கவும்தானா? மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் இப்போது எங்கே போனார்கள்?என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/muslims-are-staying-parthasarathi-temple-241816.html
படங்களை "க்ளிக்" செய்து பெரிதாக்கி படிக்கவும்.
படங்களை "க்ளிக்" செய்து பெரிதாக்கி படிக்கவும்.
1.
2.
3.
4.
5.
0 comments:
Post a Comment