**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

"குமுதம்" அரசுக்கும் சந்தேகம்.+ கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல! தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்!

>> Monday, December 29, 2008

கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல!

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் கொலை செய்யப்பட்ட
மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் கார்கரே கொல்லப்பட்டது ஏகே 47 ரக துப்பாக்கியின் மூலம் அல்ல என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கியிலுள்ள 9MM ரக தோட்டாக்களே மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலில் காணப்பட்டன எனப் பத்திரிக்கைகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 7.52MM ரகத் தோட்டாக்கள் அல்ல எனவும் கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9MM ரகத் துப்பாக்கித் தோட்டாக்களே அவர் உடலில் காணப்பட்டன எனவும் தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன.

தற்பொழுது காவல்துறை கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப் மற்றும் மும்பைத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இஸ்மாயிலின் கைவசமிருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் துளைத்தே கார்க்கரே கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதத்தைத் தற்பொழுது வெளியாகும் தகவல்கள் கேள்விக்குறியாக்கி உள்ளன.

கார்கரே கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்ட ஒரே சாட்சியான கான்ஸ்டபிள் ஜாதவின் வாக்குமூலப்படி, மறைவான இடத்திலிருந்து திடீரென வெளியான இஸ்மாயிலின் கைகளில் இருந்து வெளியான ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தே கார்கரே கொல்லப்பட்டார்.

இஸ்மாயில், கலாஷ்நிகோவ் 47 ரகத் துப்பாக்கி உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக ஜாதவ் கூறியுள்ளார். ஆனால், கலாஷ்நிகோவ் துப்பாக்கிகளில் 7.52MM தோட்டாக்களே உபயோகிக்க முடியும். கொல்லப்பட்ட கார்கரேயின் உடலிலிருந்து கலாஷ்நிகோவில் உபயோகிக்கும் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கஸபின் கைகளில் கைத்துப்பாக்கி இருந்ததாக இதுவரை வெளியான தகவல்களில் கூறப்படவும் இல்லை. அதுமட்டுமல்ல, கஸப் கைத்துப்பாக்கி உபயோகித்ததாக ஜாதவின் வாக்குமூலத்திலும் இல்லை. ATS அதிகாரி ஸலஸ்கர் சுட்ட குண்டு கஸபின் கைகளில் பாய்ந்து, அந்நேரத்தில் அவன் வலிதாங்காமல் அலறியதாக மட்டுமே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதலைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஏதேனும் குழுக்கள் கார்கரேயைக் கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியமான சந்தேகத்திற்கு இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் வலுக் கூட்டியுள்ளன. கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பி ஓடிய பின்னரும் சி.எஸ்.டிக்குச் சமீபமுள்ள மெட்ரோ மற்றும் அதன் சுற்றுபுறங்களில் மேலும் பல துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றத் தொடக்கத்தில் இதனைக் குறித்துப் பலமுறை செய்தி கூறிய ஊடகங்கள், பின்னர் தாஜிலும் மற்ற தாக்குதல்களிலும் கவனத்தை மாற்றியபின் அவற்றைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. அதே சமயம், "பொது மக்களின் முன்னிலையில் தெளிவுபடுத்தப் படவேண்டிய பிரேத பரிசோதனை அறிக்கை உட்பட மற்ற ஆதாரங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க வேண்டாம்" என காவல்துறை சம்பந்தப் பட்டவர்களிடம் கடுமையாகக் கட்டளை பிறப்பித்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது, கார்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து மேலும் சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.

கார்கரேயின் உடலில் துப்பாக்கித் தோட்டா துளைத்த இடத்தைக் குறித்துத் தற்போதுவரை முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்களே நிலவுகின்றன. "கார்கரே நெஞ்சில் குண்டுகள் துளைத்து இறந்தார்" என ஆரம்பத்தில் வெளியான செய்திகள், அவர் அணிந்த புல்லட் புரூப் காட்சிகள் வெளியாகி பிரச்சனைகளை ஏற்படுத்தியப் பின்னர், "நெஞ்சில் அல்ல; கழுத்திலேயே அவர் குண்டு துளைத்து இறந்தார்" என்று பின்னர் செய்திகள் வெளியாகின. அவர் எங்கு சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தியைக்கூட இதுவரை உறுதியாகக் கூறாமல் மறைத்து வைத்திருப்பது, கார்கரே கொலையைப் பற்றி மென்மேலும் சந்தேகங்களையே அதிகப் படுத்துகிறது.

***

நவம்பர் 26 அன்று நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் துவக்கத்திலேயே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்ட வேளையில் அதற்கு நாயிக் அருண் ஜாதவ் என்ற ஒருவர் மட்டுமே சாட்சியாக இருந்தார்.

காவல்துறையின் விளக்கப்படி, கார்கரே யாத்திரை செய்திருந்த குவாலிஸ் வண்டியில் கார்கரேயுடன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் ஸலாஸ்கர், கூடுதல் நியமன கமிஷனர் அஷோக் காந்தெ, கான்ஸ்டபிள் நாயிக் அருண் ஜாதவ், மேலும் இரு கான்ஸ்டபிள்கள் ஆகிய ஐவர் உடனிருந்தனர்.

இதில் ஜாதவ் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிக்கிறார். கார்கரேயும் மற்றவர்களும் கொல்லப்பட்டது எப்படி என்பதை ஜாதவின் விவரிப்பிலிருந்து மக்கள் அறிந்துக் கொள்கின்றனர். காவல்துறை கூறும், கொலையாளிகள் நடத்திய ரேண்டம் 'ஃபயரிங்கில் ஜாதவின் வலது தோளில் மட்டுமே குண்டு காயம் ஏற்படுகின்றது. அதாவது, துப்பாக்கிச் சூட்டில் உயர் அதிகாரிகள் அனைவரும் கொல்லப்பட்ட வேளையில் கீழ்மட்டநிலையிலுள்ள கான்ஸ்டபிள் மட்டும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்.

ஜாதவின் வாக்குமூலப்படி, காமா மருத்துவமனைக்கு அருகில் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்த தீவிரவாதிகள் கார்கரே பிரயாணித்த குவாலிஸ் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சி.எஸ்.டிக்குச் சற்று முன்பாக ஹஜ் ஹௌஸ் முன்பக்கத்தில் வந்து சேரும் கார்கரே, குண்டுதுளைக்காத ஆடையும் தலைக்கவசமும் அணிகிறார். இங்கு வைத்து ஸலாஸ்கரும் காந்தேயும் அவருடன் இணைகின்றனர். 'கார்கரேயின் கடைசி அதிரடி' என்ற தலைப்பில் ஐபிஎன் இணையதளம் வெளியிட்ட அவரது படத்தின்கீழ் "LAST OPERATION: Karkare gears up before entering the Taj Palace hotel" என்று தகவல் தந்தது.

ஆனால், தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற தாஜ் ஓட்டலுக்கோ ஓபராய் ஓட்டலுக்கோ கார்கரே செல்லவில்லை. மும்பைக் காவல்துறையின் மற்றொரு அதிகாரியான தினேஷ் அகர்வால் கூறுவதை கேளுங்கள்: "தீவிரவாதத் தாக்குதல் நடந்த உடனேயே ATS குழுவை அலர்ட் செய்வதற்காக நான் கார்கரேவை அழைத்தேன். 'அகர்வால், நான் இப்பொழுது சம்பவ இடத்தில்தான் இருக்கிறேன்' என்று கார்கரேயிடமிருந்து உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது" கார்கரே சி.எஸ்.டியில் நிற்கும் வேளையிலேயே அகர்வால் கார்கரேயை அழைத்திருக்க வேண்டும்.

சி.எஸ்.டியில் நடந்த துப்பாக்கிச் சூடுக் காட்சிகளிலிருந்து தீவிரவாதிகளின் ஆயுதபலத்தைக் குறித்து கார்கரே புரிந்திருக்கக் கூடும். என்றாலும் கார்கரே காந்தேவையும் ஸலாஸ்கரையும் அழைத்துக் கொண்டு காமா மருத்துவமனைக்குப் புறப்படுகின்றார். அவர் சென்று சேர்ந்ததோ, காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஆளரவமற்ற பகுதியில்!

அதன் மிக அருகிலேயே மும்பை காவல்துறை கமிஷனர் அலுவலக வளாகத்தினுள் சி.எஸ்.டி தலைமையகம் அமைந்துள்ளது . ஏற்கெனவே சி.எஸ்.டியில் தீவிரவாதிகளுடன் போராட்டம் நடத்திய மூன்று உயர் அதிகாரிகள், வேறு ஆயுதங்களோ காவல்படையின் உதவியோ இன்றி ஒரே ஒரு வண்டியில் தீவிரவாதிகளைத் தேடிச் செல்வது என்பது அசாதாரணச் சம்பவமாகும்.

கார்கரேக்குத் தவறான தகவல் வழங்கி, அவரைக் காமா மருத்துவமனைக்குத் திசைதிருப்பி விட்டது யார்? அல்லது கார்கரே வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டாரா?. 50க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பங்குபெற்றவர்; அதில் பெரும்பாலானவையும் போலி என்கவுண்டர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நாயிக் அருண் ஜாதவை நம்பலாமா?(விவாதம் கிளப்பிய சதபோலா என்கவுண்டர் (1997), நவீன்ஷெட்டியைச் சுட்டுக்கொன்ற 2003ல் பாந்த்ரா குர்லா பில்டிங் என்கவுண்டர் போன்றவற்றிலும் இதே ஜாதவ் பங்கு பெற்றிருந்தார். இத்தகைய பல என்கவுண்டர்களிலும் ஜாதவ் மும்பை நிகழ்வைப்போலவே சொல்லி வைத்தாற்போல் அபாயகரமில்லாத அற்ப காயங்களுடன் தப்பியிருந்தார்.)

சந்தேகங்கள் தொடர்கின்றன ...

இன்ஷா அல்லாஹ் தொடரும் ...

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1123&Itemid=53

*******************************************

அரசு பதில் 31.12.08 குமுதத்திலிருந்து

பொன்விழி, அன்னூர். :- போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா?

அரசு:-அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது.

****************************************

தேசப் பிதா என்று கருதப் பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா?

இதுதான் வெட்கப்பட வேண்டிய விசாரத்திற்குரிய கதை!
அந்துலே அய்யப்படுவதில் அர்த்தம் உண்டு - மின்சாரம்


2008 செப்டம்பர் 29 ஒரு முக்கிய நாள் - அன்று தான் மகாராட்டிர மாநிலம் மாலே காவ்ன் நகரில் குண்டு வெடிப்பு!


இந்தக் குண்டு வெடிப்புக் குக் காரணமாக இருந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்த வர்கள் என்று தெரிய வந்த போது நாடே அதிர்ச்சிக்கு ஆளாகியது.
சிறீகாந்த் புரோகித் என்ப வர் ஒரு இராணுவ அதிகாரி, அமிந்தானந்தா என்பவர் ஒரு சாமியார், பிரக்யாசிங் தாகூர் என்பவர் பெண் சந்நியாசினி - இவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் கூட்டுச் சதியில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பது வெளியில் வந்தபின் சங்பரிவார் வட்டாரத்தில் இடி விழுந்தது போல் ஆகி விட்டது.


அதுவரை பயங்கரவாதம், தீவிரவாதம் என்றாலே அதன் தலைப்புச் செய்தி முஸ்லிம் தீவிரவாதம் என்பதாகத் தானே இருக்கும்.


இந்தத் திட்டமிட்ட பிரச் சாரத்தின் முகமூடி இப்பொ ழுது கிழிந்து தொங்கும்படி ஆகிவிட்டதே என்ற போது அவர்களின் முகங்கள் வீங்கித் தொங்க ஆரம்பித்து விட்டன.


குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே வீராவேசத் துடன் சங்பரிவாரில் உள்ள ஒரு சிலர் நியாயவாதிகள் போலவும் சட்டத்தைக் காப்பாற்றும் சபாஷ் மனிதர்கள் போலவும் திருவாய் மலர்ந்தனர்.


சங்பரிவாரில் உள்ள ஆர். எஸ்.எஸ். போன்ற அமைப் புகள் இந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதன் பிறகு இது ஒரு திட்டமிட்ட சதி - பொய்ப் பிரச்சாரம்! என்று அவர்களின் உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்ட ரீதியான உதவிகளை செய்வோம் என்று சொல்லி முன் வந்தனர்.


குற்றம் நிரூபிக்கப்படும் என்கிற அளவுக்கு ஆதாரங்கள் வலிமை பெற்று விட்டன என்ற ஒரு நிலை வந்த போது வெலவெலத்துப் போய் இந்துக்கள் குற்றம் செய்திருந் தாலும் அவர்களின்மீது விசாரணையே கூடாது என்கிற அளவுக்குக் கூசாமல் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.


ஒருபடி மேலே சென்று சிவில் யுத்தம் தொடுப்போம்! என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார்.


ஒகேனக்கல்லில் செய்தியாளர்களிடம் (25.12.2008) பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுபற்றி ஒரு கருத்தை வெளியிட்டார் இப்படி சொல்வது எவ்வளவு பெரிய தேசியக் குற்றம்.

இதையே வேறு எவராவது சொல்லியிருந்தால் பூகம்பம் வெடித்திருக்காதா? ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உயிரை வாங்கியிருக்காதா? அவ்வாறு கூறியதற்குப் பிறகும் மத்திய அரசும்கூட மவுனமாகப் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.


மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரர்களை வெளியில் கொண்டு வருவதில் முன்னணி மாமனிதராகயிருந்த மகாராட்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே அசோக் காம்தே, விஜய் சாலஸ்க்கர் ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் அதிர்ச்சி ஒரு பக்கம், ஆவேசம் இன்னொரு பக்கம், அய்யப்பாடு மற்றொரு பக்கம் ஏற் படாதா? ஏற்படக்கூடாதா?


அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் (மகாராட்டிர) மாநில முன்னாள் முதல் அமைச்சரும்கூட) அப்துல்ரகுமான் அந்துலே (ஏ.ஆர். அந்துலே) நாடாளுமன் றத்திலே அர்த்தமுள்ள வினாக் கணை தொடுத்தார்.


காவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்?

மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்ட மதத் தீவிர வாதிகளை அப்படியே கொத்தாகக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த அந்த அதிகாரியை காமா மருத்துவமனைக்குச் செல்லுமாறு வழி நடத்தியவர்கள் யார்?


மும்பையில் நவம்பர் 26-இல் (2006) பயங்கரவாரத் தாக்குதலுக்கு ஆளான தாஜ் ஓட்டலுக்கோ, டிரைடன்ட் ஒபாராய் ஓட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கோ நரிமன் இல்லத்துக்கோ செல்ல விடாமல், காமா மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களைச் செல்லுமாறு பணித்தவர்கள் அல்லது வழி காட்டியவர்கள் யார்?

அந்த ஆணை எங்கிருந்து பிறப்பிக்கப்பட்டது? என்ற ஆழமான, அவசியமான, அய்யம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே அந்துலே வினா எழுப்பினார்; சந்து முனையில் அல்ல சாட்சாத் நாடாளுமன்றத்திலேயே அனல் கக்கினார்.


அவ்வளவுதான்! சங்பரிவார் கூட்டத்தின் அக்குளில் தேள் கொட்டியது போல குதியாட்டம் போட்டனர். தங்களுக்கே உரித்தான ஆத்திர விசையோடு நாடாளுமன்றத்தையே ரணகளமாக்கினர் - கடைசி ஆயுதமாக வெளிநடப்புச் செய்தனர்.


போதும் போதாதற்குக் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு லாலு பிரசாத் யாதவுக்குத்தான் முதுகெலும்பு இருந்தது என்று நிரூபித்துக் கொள்ளும் வகையில் ஆதரவுக் குரலும் கொடுத்திருக்கிறார்.


பா.ஜ.க.வினர் உத்தம புத்திரர்கள் என்றால் அந்துலே சொல்வது முக்கியமானது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றுதானே பேசியிருக்க வேண்டும்.


யாரையும் குறிப்பிட்டுக் குற்றப் பத்திரிகை படிக்கவில்லையே அந்துலே!

அப்படியிருக்கும்போது பா.ஜ.க.வினர் நெஞ்சம் மட்டும் ஏன் குறுகுறுக்கிறது?

பொதுவான பழமொழி குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் என்பதாகும். அப் படியானால் அவர்கள் குற்றவாளிகள்தான் என்ற அய்யப்பாடு அறிவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்.


கார்கரே படுகொலை செய்யப்பட்டது குறித்து பலப்பல தகவல்கள் முரண்பாடான தகவல்கள் குவிந்து கொண்டே யிருக்கின்றன.


1) தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே
2) என்கவுன்டர் ஸ்பெஷ லிஸ்ட் விஜய் சாலஸ்கர்.
3) உதவி ஆணையர் அசோக் காம்தே.
கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகள்மீது இந்துத்துவவாதிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி கருத்துக் ளைக் கூறி வந்திருக்கிறார்கள்.


மூன்று பேரும் ஒரே இடத்திலே கொல்லப்பட்டனர் என்று தகவல்; இல்லை இல்லை வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர் என்பது மற்றொரு தகவல்: இந்த மூன்று அதிகாரிகளும் ஒரே காரில் சென்றபோது எப்படி வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டு இருக்க முடியும் என்ற நியாயமான சந்தேகம்.


விக்டோரியா டெர் மினஸில் கொல்லப்பட்டனர்; மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து தீவிரவாதிகள் சுட்டனர்.மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு சந்தில் சுடப்பட் டார்கள் என்று மாறி மாறி தகவல்கள் வருகின்றன என்றால் நியாயமாக இதன்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பது தானே நியாயம்?

அந்த நியாயத்தின் அடிப்படையிலே தானே அந்துலே வினாக்கணை தொடுத்தார்.

அவர் சிறுபான்மை முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் நியாயத்துக்காகக் குரல் கொடுக்க அவர் உரிமையற்றவர் ஆகி விடுவாரா?

சரி அந்துலேக்கு மட்டும் தான் இந்த சந்தேகம் வந்துள்ளதா?

கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் எவருக்கு இந்தச் சந்தேகம் வரத்தானே செய்யும்.

நடத்திருக் கக்கூடிய சூழல் முரண்பாடான தகவல்கள், கொல்லப்பட்டவர்கள் அதற்குமுன் யாரால் எப்படி விமர்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை யெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?


ஏதோ அந்துலே மட்டும் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்றும் சொல்ல முடியுமா?

காங்கிரஸ் கட்சி யின் பொதுச்செயலாளர்களுள் ஒருவரான திக்விஜய்சிங் அந்துலேயின் நிலையை ஆதரித்துள்ளாரே. சமாஜ்வாத கட்சியின் தலைவர் முலாயம்சிங், உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் து.ராஜா எம்.பி., சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரி போன்றோர்களும் பா.ஜ.க.வை நோக்கி கேள்விக் குண்டுகளை வீசியெறிந்திருக்கிறார்களே!


சங்பரிவார்கள் கும்பலின் சூழ்ச்சிகளையும் கடந்த கால நடப்புகளையும் அறிந்தவர்கள், ஹேமந்த் கார்கரேயின் படுகொலையில் சந்தேகப்படுவது என்பது நூற்றுக்கு நூறு சரிதானே!


தேசப் பிதா என்று கருதப் பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா?


வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காக குறிப்பிட்ட சில பேர் கொலை செய்யப்படுவது, ஆவணங்களை அழிக்க அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் எரிப்பு என்பது போன்றவை எல்லாம் இதற்கு முன்நடந்ததில்லையா?


இந்தக் கண்ணோட்டத்தில் அந்துலே எழுப்பிய அய்யங்களுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமே.
http://files.periyar.org.in/viduthalai/20081227/snews01.html

ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே செய்த தவறு என்ன?
- ஓ. பிரகாசம், திருவள்ளூர்


பதில்: மாலேகாவ் குண்டு வெடிப்பை ஒட்டி, இராணுவ அதிகாரிகளாகி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுனுஓ வெடிகுண்டுகளை வெடிக்க சாமியாரினி,

சங்கராச்சாரி வேடமிட்டு வெடிகுண்டு தீவிரவாதிகளாக - பழியை முஸ்லிம்கள்மீது போட்டது போன்ற பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டு வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புத் நடவடிக்கை அதிகாரியின் கார்கள் மும்பை ஓட்டல்கள் தாக்குதலின்போது,

நேரே ஒட்டலுக்குப் போகாமல், ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அவர் சுடப்பட்டுக் கொலையானார் என்கிறபோது, அவரை அங்கே வரச் சொன்னவர்கள் யார்?

இவர் அம்மருத்துவமனைக்கு சென்றது பற்றியும் புலன் விசாரணை நடைபெற்று சந்தேகங்கள் களையப்படல் வேண்டும் என்ற கூறியது கேட்டு, பா.ஜ.க. பரிவாரங்கள் பதறின;

பாகிஸ்தானியரை இவர் காப்பாற்ற முனைவதாக திடீரென அபவாதப் பழி கூறினர்;

காங்கிரஸ் கட்சினரும் அவசரப்பட்டு அந்துலே கருத்து எம் கருத்தல்ல என்று கூறி பா.ஜ.க. விரித்த வலையில் விவரம் தெரியாமல் விழுந்தனர். பிறகு எழுந்தனர். இதுதான் வெட்கப்பட வேண்டிய விசாரத்திற்குரிய கதை!
http://files.periyar.org.in/viduthalai/20081227/snews09.html

******************************

(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- "பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம் என்றால் தீவிரவாதியா? (DIRECTOR) இயக்குனர் அமீர்.

>> Saturday, December 27, 2008

இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது.

முஸ்லிம்களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது.

இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொகலாயர்கள் எப்படிப் படையெடுத்தார்கள் என்று சொன்னோமோ அதே போல் தீவிரவாதிகளான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற்பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது.

இதை உடைக்க ஆசை.

இதேபோல் உண்மையான ஈழப் பிரச்னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னையையும் படமெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''

ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு.

அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள்,

நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன.
ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை?

இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை?

அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியானார்கள்?

இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்தியனுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லையென்றால் வாழ்வது எதற்கு?

மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.'' --இயக்குனர் அமீர்.
31.12.08 குமுதத்திலிருந்து.
***************************************************
அரசு பதில்

பொன்விழி, அன்னூர்.

**போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா?

அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. 31.12.08 குமுதத்திலிருந்து

READ:- பதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது? காங்கிரஸ்- திக்விஜய்சிங் கேள்வி

மேலும் படிக்க... Read more...

சில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலையாளி.

>> Monday, December 22, 2008

ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார்.

25.12.08 கவர் ஸ்டோரி

பெங்களூரு ரங்கநாத்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.



`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?'

என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப் பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார்.

ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.

அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.

டெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.



ஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்' எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன? சோனியா கேட்ட கேள்விகள் என்ன? அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்? என அறிய முடியவில்லை.

ஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், "நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம்.

இனி ரங்கநாத் பேசுகிறார்...

"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.

புலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால் சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது.

நான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான், அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.



பிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா?' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.



அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா?' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியைக் கட்டினார்.

வண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.



பிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்?' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.



சுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச் செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.



அப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா ஆகியோர் ரங்கநாத் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.



என் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர் ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில் முகாமிட்டிருந்தனர்.

நானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.



எனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார்.

சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப் பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து...



"சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன்.

ஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம்.

நாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி) முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன்.

எல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன்.



அப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்

ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக.

நான் இந்த விஷயங்களையெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்? இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).



இதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம்.

ஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.



இந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது!'' என்றவரிடம்,



`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ன பேசினீர்கள்? உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்?' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.



"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது.

அதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.



டெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன.

காலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, `இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.



முதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா?' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.



இரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.



மூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?' என்றார். `அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.


நான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா?' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.



ஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்?' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா?' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.



இறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்?' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

சந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.



பிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்.

இந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே.

படம் : ம.செந்தில்நாதன்

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

*********************

READ THE TWO ARTICLES BELOW

பதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது? காங்கிரஸ்- திக்விஜய்சிங் கேள்வி

உங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.

மேலும் படிக்க... Read more...

உங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.

>> Saturday, December 20, 2008

நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.

இந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.

தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.


மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?
விடியோ‍‍.காணுங்கள். நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.

span>





முஸ்லீம்களுடைய மெக்கா, மதீனாவையும் தங்களுடையதுதான் என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.‍ விடியோ‍‍.காணுங்கள்



இந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இவர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள்,

நாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

மேலும் படிக்க... Read more...

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

>> Friday, December 19, 2008

நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.

இந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.

தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.

மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

span>

மேலும் படிக்க... Read more...

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!"

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் கேள்வியை என்னிடம் கேட்டான்.

சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.

'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப் படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை.

சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.

நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது.

ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

'மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலை குனியச் செய்கின்றன.

மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!

ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.

ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களல்ல;

மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும்.

முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும்.

ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.

தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லும்படி போதிக்கவில்லை.

ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.

இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை.

1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல இன்னுமொன்று நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.

சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது.

மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர்.

ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.

ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.

'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?

இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது.

ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை.

"தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மைப் பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள்.

சமீபத்திய டெல்லித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது.

மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும்.

அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.

-ஃபிரோஸ் பக்த் அஹமது
(கட்டுரையாளர் விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார்).
http://www.satyamargam.com/index.phpoption=com_content&task=view&id=1118&Itemid=51
************************************************************************************
தினமலருக்கு எனது கண்டனம்

பயங்கரவாதிகள் இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்: இந்திய கோரிக்கையை நிராகரித்து அதிபர் சர்தாரி திமிர் பேச்சு.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2423&cls=row3.

மேற்கண்ட தலைப்பில் தினமலர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்திய முஸ்லிம்களை தவறாக சித்தரித்து தன் வழமையான பாணியை (முஸ்லிம் வெறுப்புணர்வு) கையாண்டிருக்கும் அவ்விதழை கண்டிக்கிறேன்.

அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.....
""பார்லிமென்ட் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாக்.கிற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்றும் மத்திய அரசு அஞ்சிகிறது.

அதனால் என்ன நடவடிக்கை என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.


""இந்த வரிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.

இந்த வரிகளின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்கிறீர்களா?

அல்லது கார்கில் போரை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையா,?

அல்லது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் அபிமானியாக இருக்கிறார்கள் என்கிறீர்களா,?

மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாக தெரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மத்திய அரசுக்கு நெருக்கடியே தவிர நீங்கள் சொல்வது போல அல்ல.

ஊடகங்கள் மூலமாக இதுபோல பொத்தாம் பொதுவாக இந்திய முஸ்லிம்களைச் சாடுவதை முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் செய்தியை படிக்கும் வாசகனின் மனதில் தோன்றும் முதல் எண்ணமே பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய முஸ்லிம்கள் தான் தடையாக உள்ளது போல சித்தரித்துள்ளீர்கள்.

மாலேகானில் குண்டு வெடித்த போதும் இதே பத்திரிக்கை மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தாக கற்பனையான ஒரு புலனாய்வை எழுதி யாரையோ திருப்தி படுத்தினார்கள்.

பின்னர் நடந்த விசாரணையில் அது சங்பரிவாரங்களின் செயல் என்பது நிரூபனமாகி வருகிறது.

தினமலர் திருந்த போவதில்லை; நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.
THANKS TO :
http://meiyeluthu.blogspot.com/2008/12/blog-post.html
**************************************************************************

இந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இவர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள்,

நாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

மேலும் படிக்க... Read more...

வீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி.. பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

>> Monday, December 15, 2008

செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.



பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.

முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை.

இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.

பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
THANKS TO : http://thatstamil.oneindia.in/news/2008/12/15/world-bush-on-farewell-visit-to-iraq-dodges-flying.html#cmntTop

*************************************
CLICK
காலணி அடி வாங்கிய அதிபர் புஷ் ஷுக்கு கொல்லமாங்குடி குப்பாயி வாழ்த்துப் பாடல்

மேலும் படிக்க... Read more...

தீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பயிற்சி.

>> Friday, December 5, 2008

டெல்லி: நரேந்திர மோடி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோரின் வீடியோ படங்களைக் காட்டி தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை போலீஸ் பிடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் இந்தத் தகவல்களை அளித்துள்ளான்.அஜ்மலிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள மேலும் சில விவரங்கள்..

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பிரவீன் தொகாடியா ஆகியோர் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதை எங்களுக்குக் காட்டி உத்வேகமூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், குஜராத் கலவரம் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்த வீடியோ படங்களும் எங்களுக்குக் காட்டப்பட்டன. இதன் மூலம் எங்களுக்கு வெறியூட்டப்பட்டது.

பிதாயீன் தாக்குதல்களுக்குத் தேவையான கடுமையான பயிற்சிகள் எனக்குத் தரப்பட்டன. நானும் மற்றவர்களும் கலந்து கொண்ட பயிற்சி முகாம்களில், எங்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள், எங்களை கடுமையாக அடிப்பார்கள்.
இதன் மூலம் எதிரிகளிடம் சிக்கி விசாரணைக்கு உட்படும்போது வலியைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை கிடைக்கும் என்பதற்காக இந்த பயிற்சி.

எங்களுக்கு பல்வேறு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாகியூர் ரஹ்மான் என்கிற சச்சு என்பவர்தான் எங்களுக்கு தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். பஹாதுல்லா, முப்தி சயீத், உஸ்தாத் அப்துல் ரஹ்மான், அபு ஆனுஸ் ஆகியோரும் எங்களுக்குப் பயிற்சி அளித்தனர் என்று கூறியுள்ளான் அஜ்மல்.இவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்றும், ஐஎஸ்ஐயுடன் இணைந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 16:43

http://thatstamil.oneindia.in/news/2008/12/04/india-terrorists-were-shown-footage-of-modi.html


பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.

மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) நன்றி : விடுதலை

மேலும் படிக்க... Read more...

(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- "பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.

>> Monday, December 1, 2008

அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.


மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.


இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'

துணிச்சலின் மறுபெயர் கார்கரே

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர்
கைதாகக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

நன்றி: தட்ஸ் தமிழ்

READ


நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஹேமந்த் கர்கரேவின் மனைவி.


"ஞாநி" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி!


குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.

விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-

விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி


யோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்


அலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன.

*********************************************

குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..

ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..இவை தவிர்க்கப்பட வேண்டும்..

எல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம். - வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

>> Thursday, November 27, 2008

30.11.08 ஹாட் டாபிக்

திரிசூலத்தின் முதல் கூறு இஸ்லாமியர்களையும் இரண்டாவது கூறு கிறிஸ்துவர்களையும் மூன்றாவது கூறு மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்தும்'' என்ற பிரவீண் தொகாடியாவின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) பேச்சை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. அது வெறும் பேச்சல்ல, எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபணமாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன என்பதற்கு சாட்சியங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமானவர், பிரக்யாசிங் தாகூர் என்ற பெண்துறவி. குண்டுவெடிப்புக்கும் சாத்வீகமான இந்தத் துறவிக்கும் இருக்கும் நெருக்கம் பற்றிய ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவானதை அடுத்து, அக்டோபர் 23, 2008 அன்று இந்தூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பிரக்யாசிங் தாகூர். கைது செய்தது, மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புக் காவல்படை.

இந்தக் கைதின் ஆரம்பப்புள்ளி, கடந்த செப்டெம்பர் 29 அன்று மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலும் குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இருந்துதான் தொடங்கியது. விசாரணைப் படலம் ஆரம்பித்தது. சமீபகாலமாக நடக்கும் குண்டுவெடிப்புகளில் இருசக்கர வாகனங்களே அதிகம் பயன்படுத்தப்படுவது மகாராஷ்டிர காவல்துறையினரை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தக் கோணத்திலேயே விசாரணையைத் தொடர்ந்தனர்.

மாலேகான் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தோண்டிப் பார்த்தபோது, பிரக்யாசிங் தாகூருக்குச் சொந்தமான வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தக் குண்டுவெடிப்புக்கும் சங்கப் பரிவார அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவ்வளவுதான். வியர்த்து விறுவிறுத்துவிட்டது காவல்துறையினருக்கு. உடனடியாக பிரக்யாசிங் தாகூர் மற்றும் சிவநாராயண சிங், ஷாம்லால் பவார் சாஹு ஆகியோரைக் கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை. விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

யார் இந்த பிரக்யாசிங் தாகூர்?

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.பி. சிங் தாகூர். தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர். ஆயுர்வேத மருத்துவரும்கூட. இவருடைய மகள் பிரக்யாசிங் தாகூர். ம.பி.யைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறகு குஜராத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டது தாகூரின் குடும்பம். ரத்தம், நாடி, நரம்பு எல்லாவற்றிலுமே இந்துயிசம் என்பது புரையோடிப் போயிருந்தது பிரக்யாசிங்குக்கு. விளைவு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போன்ற இந்து அமைப்புகளின் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இயற்கையாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது பிரக்யாசிங்குக்கு.

1997-ல் ஏ.பி.வி.பி.யின் மகளிர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு வி.ஹெச்.பி.யின் துர்காவாஹினி அழைப்பு விடுக்கவே, அங்கு சிலகாலம் தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார். சேவை என்றால் பேச்சு. பேச்சு. வார்த்தைக்கு வார்த்தை இந்து வாடை அடிக்கும் அளவுக்கு. வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்ட அவருடைய பேச்சு இந்துத் தலைவர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைப் பிரத்யேகமாகத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக பல பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. எல்லாவற்றிலும் அம்மணியின் பிரசங்கங்கள்தான் பிரதானமாக இடம்பெறும்.

இதற்கிடையே 2002-ல் `ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யாண் சமிதி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதற்கு நேசக்கரம் நீட்டியது குஜராத் அரசு. இந்த பிரக்யாசிங் தாகூருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. சாத்வி பூர்ணா சேத்தானந்த் கிரி. நிற்க.

சாத்வி பிரக்யாசிங் தாகூருக்கும் அவருடைய ஆதரவாளருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மகாராஷ்டிர காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

சாத்வி: என்னை (போலீசார்) இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்.

ராம்நாராயணன்: ஏன்?

சாத்வி: மாலேகான் நகரில் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட என்னுடைய மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

ராம்நாராயணன்: பைக்கை நீங்கள்தான் விற்றுவிட்டீர்களே..

சாத்வி: எங்கே விற்றதாகச் சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?

ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.

சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?

ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.

சாத்வி: அந்தக் குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்? அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?

ராம்நாராயணன்: நிறையப் பேர் இருந்த இடத்தில்தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறையப் பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் அதை நாம் சந்திப்போம்...

- இந்த ஆதாரத்தையடுத்து சாத்வியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்துத் துறவி ஒருவர் குண்டுவெடிப்பு வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டது சங்கப் பரிவாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனாலும் `இது பொய்வழக்கு. இந்துக்களை அவமானப்படுத்த நடத்தப்படும் நாடகம்' என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன சொல்லி இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பலாம் என்று காத்துக்கொண்டிருந்தது பா.ஜ.க. விசாரணையின்போது தன்னைக் கொடுமைப்படுத்துவதாக பிரக்யாசிங் பேட்டியளித்து வைக்க, தற்போது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கியிருக்கிறது பாரதிய ஜனதா.

``பெண் துறவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோகடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. விசாரணை நேர்மையுடன் நடத்தப்படவில்லை'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி.

இதனையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பி அத்வானியிடம் விளக்கம் கொடுக்க வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பெண் துறவியின் வாக்குமூலங்களை பிரதமர் தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது இந்தக் குண்டுவெடிப்பு விவகாரம் இன்னொரு திசையிலும் நகரத் தொடங்கியிருக்கிறது. இந்துத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் என்பவரின் உதவியை நாடியிருக்கின்றன இந்து அமைப்புகள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுதாகர் திவிவேதி என்பவர் மாலேகான் குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளி. குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் அதில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையே ஃபரீதாபாத், டெல்லி, போபால், பூனே உள்ளிட்ட இடங்களில் பல சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்தவர் இவர் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு. முக்கியமாக, தாக்குதல்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டியது, ராணுவ உயரதிகாரிகளைக் கொண்டு ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருள்களை வாங்கியது ஆகியன இவருடைய பணிகள் என்பது மகாராஷ்டிர காவல்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

இவருடைய சொந்த ஊர் கான்பூர். சுவாமி அமிர்தானந்தா என்பது சுயமாக சூட்டிக்கொண்ட பெயர். ஜம்முவைச் சேர்ந்த `ஷார்தா சர்வாக்ய பீடம்' என்ற இந்து மத நிறுவனத்தின் நிர்வாகியான இவருக்கு, போலியான அடையாள அட்டைகளை வாங்கிக் கொடுத்ததோடு, ரிவால்வர் வைத்துக்கொள்வதற்கான உரிமையையும் முறைகேடான முறையில் வாங்கிக் கொடுத்துள்ளார் புரோகித் என்று கூறுகிறது மகாராஷ்டிர காவல்துறை. மேலும், இந்த இந்து அமைப்புகள் நடத்தும் ஆயுதப் பயிற்சிகளுக்குத் தேவையான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை தன்னுடைய கோட்டாவின் மூலம் வாங்கியதோடு, தனக்கு நெருக்கமான உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.

புரோகித் பயன்படுத்திய லேப்டாப் இன்னமும் போலீஸாரின் கையில் சிக்கவில்லை. ஒருவேளை, அது கிடைத்தால் சுவாமி அமிர்தானந்தா, பிரக்யாசிங் உள்ளிட்ட இந்து சாதுக்கள் மற்றும் சாத்விக்களின் நிஜமுகங்கள் அம்பலமாவதோடு, பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. விஷயம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது! ஸீ

---------

மும்பை பற்றி எறிகிறது....மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம.

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor

மேலும் படிக்க... Read more...

VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

>> Wednesday, November 26, 2008

ஊடகங்களில் இதன் துணைத் தலைப்பு, வழக்கமான
பாகிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் அம்பலம்" என்றோ நம் நாட்டின் காவல்துறை குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரங்களைத் தேடிப் பல்லாண்டு காலம் அல்லாடும் அமைப்பான "சிமியின் சதி தவிடுபொடி" என்றோ
அண்மையில் 'உருவாக்கப் பட்டு' அடிக்கடி ஊடகங்களில் உலா வரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் கோரமுகம்" என்றோ இருக்கப் போவதில்லை.
************************************************************************************* நம்ம நட்டுல எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே காவல்துறையினர் இது இந்த தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம். ( அவங்களுக்குத்தான் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் மட்டும் தெரியுமே)
ஆனாலும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அது இப்ப உண்மையாகி வருது.
CARTOON - COMMENTS --நன்றி: குமுதம்.காம்

*******************************************************************************
"ஆர். எஸ். எஸின் பொதுச் செயலாளர் மோகன் பகவத்தையும் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டமிருந்தது.

அவ்விருவரையும் கொன்று விட்டு, முஸ்லிம் அமைப்புகள் ஆர். எஸ். எஸ். தலைவர்களைக் கொலை செய்து விட்டனர் என்று திசை திருப்புவதற்கும் திட்டம் வகுத்திருந்தோம்" என்று மலேகோன் குண்டு வெடிப்பை நடத்தி, தற்போது மகாராஷ்டிர அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை(ATS)யினரது விசாரணையின் கீழுள்ள பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.

கொலைச் சதித் திட்ட ஆதாரங்களை, கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2008) எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சத்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K. நாராயணனும் நுட்புலத்துறை(ஐ.பி)த் தலைவர் P.C. ஹல்தாரும் அத்வானியிடம் காட்டியுள்ளனர்.

அதையடுத்து, கடந்த சனிக்கிழமை (22.11.2008) அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸின் இணைப் பொதுச் செயலாளர் மதன் தாஸ் தேவி, "இரு தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப் பட்ட செய்தி உறுதியானதுதான்" என்று கூறியுள்ளார்.

"இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர்களை, இந்துத் தீவிரவாதிகளே கொல்ல முயன்ற காரணம் என்ன?" என்ற கேள்வி ஒன்று எழுவதைத் தவிர்க்கவியலாது.

இந்தக் கேள்விக்கு விடை ATS வசம் தற்போது தோண்டப் பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மடிக்கணினிகளில் இருக்கிறது.

ஆர். எஸ். எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தும் அதன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் 'போதிய அளவு' தீவிரமாகச் செயல்படவில்லை என்ற ஒரு குற்றமும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவ்விருவரும் மென்மையாக நடந்து கொண்டதாக இன்னொரு குற்றமும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது ATSயின் பிடியிலுள்ள சுதாகர் திவேதி (எ) தயானந்த் பாண்டே (எ) அம்ரிதானந்த் தேவ் தீர்த் மகாராஜுக்குச் சொந்தமான மடிக்கணினியில் காவல்துறைக்குத் தேவையான பாண்டேயின் 'இரகசிய சந்திப்புகள்' குறித்து நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கடந்த ஜனவரி 26இல் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற ஆசிரமச் சந்திப்பும் போபாலில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சத்திப்பும் மாலேகான் குண்டு வெடிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 'மிக முக்கிய'ச் சந்திப்பும் பாண்டேயின் மடிக்கணினியில் பதிவு செய்யப் பட்டுள்ளன.





மாலேகோன் குண்டுவெடிப்பில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், CLICK..ஒப்புக் கொண்ட போதேகுண்டு வெடிப்பின் பின்னணியில் வேறு சில முக்கியப் புள்ளிகள் இருக்கக் கூடும் என்ற ஐயம் எழுந்தது. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குக்காகத் தேடப் பட்டு வரும் இன்னொரு முக்கியக் குற்றவாளியான ராம்ஜி என்பவனைப் பற்றிய விபரங்களோடு இன்னும் சில முக்கியப் புள்ளிகளைப் பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கலாம்http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1105&Itemid=51
---------------------------------
குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு!
சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதைகளை பரப்பி வந்தனர்.

அப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங்கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தினர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரையினர் போல் நடத்தப்பட்டனர்.

ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.

சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர்பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.

காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின.

சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.

இவர்கள் தங்களது பிற்போக்குத் தனமான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.

சாமியார்கள் பயங்கரவாத சாமியார்களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுருவின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.

பெண் சாமியார் பிரக்யாசிங் போன்றவர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.

இந்நிலையில் இதுவரை பெரிய முதலைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.

மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்http://www.tmmk.info/news/999564.htm
---------------------------------------
'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்?

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்?

>> Tuesday, November 25, 2008

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? முஸ்லீம்களை நோக்கி பிறர் 'வணக்கம்' என்று கூறுவதை கேட்கும் பொழுதும் மிகுந்த சிரமமான நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.

கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.

அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.

'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.

ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை.

'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.

இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும்.

ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியுண்டாகட்டும்) என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.

அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,

'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது.

அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.

அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.

ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள்... அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.

ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது.

ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)

இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.

மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.

அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.

அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள்.

பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். '

வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.

தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைய தளத்தில் இதை படித்தேன். அவசரத்தில் பதிந்தவருடைய URL குறிக்கத் தவறி விட்டேன். இப்பதிவின் உரிமையாள்ர் இதை கண்ணுற்றால் தெரிவியுங்கள். பதிந்தவருக்கு எனது நன்றியும், பாராட்டுதலும்.-- வாஞ்ஜையுடன் வாஞ்ஜூர்
-----------------------------------
இதையும் படியுங்கள் . http://vinthawords.blogspot.com/2008/11/blog-post_23.html
சகோதரி வினிதா அவர்களுக்கு எனது நன்றிகள்.
----------------------------
இதையும் படியுங்கள்.
உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்

குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

மேலும் படிக்க... Read more...

குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.

>> Friday, November 21, 2008

gnani has left a new comment on your post "வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும...":

முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும்.

என் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது.

தொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்கரவாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும்.

ஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.

மேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை.

நான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன்.

வாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ ? அன்புடன் ஞாநி.


தாங்களுடைய‌ விள‌க்க‌த்தால் தெளிவ‌டைந்தோம். ஞானி அவர்களுக்கு என்னுடைய நன்றி.- வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்
-----------------------
READ வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

மேலும் படிக்க... Read more...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

>> Thursday, November 20, 2008

பாபர் மசூதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, அந்த வார துக்ளக் இதழின் அட்டைபடத்தை கருப்பாக போட்டு 'இந்த நாள் இந்தியாவின் கறுப்புநாள் என்று குறிப்பிட்டிருந்தார் திரு.சோ .

அதற்காக ,தீவிர இந்துத்துவா சிந்தனையாளரான இவரை நடுநிலை எழுத்தாளர் என்று கூறிடமுடியுமா..?

இதுபோலத்தான் சில எழுத்தாளர்கள் நடுநிலையாகவும்,முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் எழுவது போல் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும் .

கவனமாகப் பார்க்கும்போதுதான் ,ரோஜாவில் மறைந்திருக்கும் முள்போல முஸ்லிம் விரோத கருத்து பளிச்சிடும் .

இப்போது குமுதத்தில் வெளியான அரசு பதில்களை படியுங்கள்.
ஆர். சுதர்ஸனன், நங்கநல்லூர்.

இஸ்லாமிய வாசகருக்கு வக்காலத்து வாங்கும் அரசுவே, ஒரு எஸ். எம்.எஸ். வாசகத்தைச் சொல்லட்டுமா?"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே!".

அரசு : தீவிரவாதம் என்பது எல்லாத் தரப்பிலும் இருக்கிறது நண்பரே. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும்,

இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும்,

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் ,

குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இதில் எந்த மத நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் பரப்பப்படும் வதந்திகள் ( உங்கள் எஸ்.எம்.எஸ் உள்பட ) உள்நோக்கம் கொண்டவை.

அன்பர்களே, எல்லா மதத்து தீவிரவாதிகளையும் சாடுவதுபோல் பாவ்லா காட்டிய அரசு, இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்கச்செய்து மக்களை கொள்ளும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்புகளும். என்று எழுதி இந்தியாவில் தினமும் குண்டு வைப்பதற்காக இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இயங்குவது போல் காட்டியுள்ளார். சரி .

ஆனால் 'கொல்லன் பட்டறைத் தெருவில் ஊசி விற்ற அறிவாளிபோல்' நம்ம 'உணர்வு' பத்திரிக்கையிலேயே இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்' என்று ஞானி பேட்டிகொடுத்து அதை அந்த பத்திரிக்கை அப்படியே வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்

உணர்வு; நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் விசாரணை மேற்க்கொள்வதற்கு முன்பே,முஸ்லீம் இயக்கங்கள் மீது பலி போடப்படுவது என்..?

ஞானி; இது தவறான போக்கு. அணுகுமுறை. அரசுநிர்வாகங்களில் இருக்கும் இஸ்லாம் எதிப்பு உணர்வாளர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதால் இது நடக்கிறது.

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் ,மும்பைக்குண்டு வெடிப்புகளும்,ஜிகாத் என்றபெயரால் இஸ்லாமிய மத வெறியுடைய சில பயங்கரவாதிகள் செய்யப்படுவதால் சாதரண மக்கள் மனதில் எல்லா பயங்கரவாதமும் முஸ்லிம்கள் செய்வதாகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்தை ஏற்க செய்யும் சாதகமான அம்சங்களாகி விட்டன.

இங்கே ஞானி நடுநிலையாக கருத்து சொல்வது போல் சொல்லி , உலகளாவிய பயங்கரவாதம் எதோ முஸ்லிம்கள் மட்டும் செய்வது போன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.

அரசும்,ஞானியும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்று நாம் சொல்லவரவில்லை. தீவிரவாதம் விசயத்தில் மற்றவர்கள் எப்படி முஸ்லிம்களை தவறாக புரிந்து உள்ளார்களோ அப்படித்தான் அரசும், ஞானியும் புரிந்துள்ளார்கள்.

விளக்கிச் சொல்லவேன்டியது நமது கடமை. அதோடு,முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாக படிக்காமல் கவனமாக படித்து கருத்தை புரியுங்கள். THANKS :mugavai-abbas.blogspot.com
----------------------------------
READ

குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP