**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கலைஞர் வைக்கும் வெடிகுண்டு. நடத்துங்கடா உங்கள் நாடகத்தை.

>> Monday, May 5, 2014

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்!

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

யாரையோ திருப்திப்படுத்த கலைஞர் இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார்?

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

மு.க. அடங்குவது எப்போது?

இலங்கையின் கண்டியைச் சேர்ந்த துணி வியாபாரியான ஜாஹீர் ஹுஸைன் என்பவரை, சில நாட்களுக்கு முன்னர் காவல் துறையினர் திருவல்லிக்கேணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் மீது இன்னும் ச்சார்ஜ் ஷீட்டே வெளிவரவில்லை.

அந்த கண்டி ஜாஹிர் ஹுஸைனை "பாகிஸ்தான் தீவிரவாதி - ஐ எஸ் ஐ உளவாளி" என்று குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்தி, மு.க. செய்தி வாசிக்கிறார்.

ஜாஹிர் ஹுஸைன் தீவிரவாதியா இல்லையா என்பது விசாரணையில் / நீதிமன்றத்தில் வெளிவரும்; நடந்த குண்டுவெடிப்பு முஸ்லிம்கள் செய்ததுதான் என்ற முடிவுக்கு மு.க. எதன் அடிப்படையில் வந்தார்?

இது வழக்கைத் திசை திருப்பும் வேலையில்லையா?

யாரையோ திருப்திப்படுத்த இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

1967 கால முஸ்லிம்கள் அல்லர் இப்போது! ஒவ்வொரு அரசியல்வியாதியின் ஒவ்வொரு சலனத்தையுமே புரிந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு வந்துவிட்டது. இனியும் நீண்ட நாட்களுக்குக் குல்லா போட்டுக்கொண்டு நோன்புக் கஞ்சி குடிக்கும் ஸீன் எடுபடாது.

அதேவேளை, இதே கருணாநிதிதான் கோவை கலவரங்களின்போது, முதன்முதலாகச் சட்டமன்றத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தவர் என்பதையும் தமிழக முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. இவர் இப்போது தொடங்கி வைத்த 'பாகிஸ்தான் உளவாளி', 'ஐ எஸ் ஐ தீவிரவாதி' ஆகிய இரு சொற்களையும் வைத்துக் கொண்டு, விண்டோ ஜர்னலிஸக் கில்லாடி ஊடகங்கள் இரு நாட்களாக ஆடிய ஆட்டத்துக்கு இன்று ஆப்பு அடிக்கப்பட்டு விட்டது.

"குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் ஹுஸைனுக்கும் செண்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்று விளக்கி, சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் ஊடகங்களுக்கு பலமாக ஆப்பு அடித்துள்ளார்.

செண்ட்ரல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புப் பற்றிக் கிடைத்துள்ள ஒரேயோர் உருப்படியான தகவல் என்னவென்றால், இந்த குண்டுகளும், பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுகளும் மோடி பாட்னாவில் பேசும்போது வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியான வேதிப் பொருட்களால் தயார் செய்யப்பட்ட பாட்னா குண்டுகள் என்பதே அது.

பாட்னா குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்தவர்கள் யாவர் என்பது எல்லாருக்கும் தெரியும்; மோடிக்கும் தெரியும். அதனால்தான் குண்டு வெடிப்புக்குப் பின்னர் அதே மேடையில் பேசிய 'துணிச்சல்கார' மோடி, தான் பேசுவதற்குச் சற்று முன்னர் வெடித்த குண்டு வெடிப்பைப் பற்றி ஒரு வார்த்தையையும் தன் பேச்சில் குறிப்பிடவேயில்லை.

ஆனால், ஆந்திராவில் மோடி பேசுவதற்காக வரும்போது ஆந்திர எல்லையில் வெடித்திருக்க வேண்டிய இந்த குண்டு வெடிப்பை மையப் படுத்தி, பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் உரிய நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்து, உரிய நேரத்தில் புறப்பட்டு, ஆந்திர எல்லையில் குண்டு வெடித்திருந்தால் அதனால் இலாபமடைய இருந்தவர்கள் யாவர் என்பது வெள்ளிடை மலை.

நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் "எல்லை தாண்டிய பயங்கரவாதம்", "ஐ எஸ் ஐ சதி", "முஸ்லிம் தீவிரவாதம்" என்று திசை திருப்பும் செயலை அத்வானி செய்து கொண்டிருந்தார். அனைத்து குண்டு வெடிப்புகளும் எங்களின் (சங் பரிவாரின்) கைங்கரியங்கள்தாம் என்று சுவாமி அசீமானந்தா பெருமையோடு வெளிச்சம் போட்ட பின்னர் அத்வானி அடங்கிவிட்டார்.

SOURCE: http://www.satyamargam.com/editorial/2338-twin-blast-in-chennai-central-station.html

 ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! - ஆளூர் ஷாநவாஸ்

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?

ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மை நிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா? -ஆளூர் ஷாநவாஸ்

________________________________________

சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை குறித்து நான் எழுதிய மேற்கண்ட பதிவை பார்த்து தி.மு.க நண்பர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜாகீர் உசேனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது; அப்படியெனில் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினரை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என அரசும் காவல்துறையும் ஊடகங்களும் சொன்னபோது அதைக் கடுமையாக எதிர்த்துள்ளேன். தலித் மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பா.ம.க.வினர் பரப்புரை செய்தபோதும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளேன். அப்போதெல்லாம் சமூக ஆர்வலனாகத் தெரிந்த நான், இப்போது முஸ்லிம்களுக்காக பேசும்போது அடிப்படைவாதியாகத் தெரிவது ஏன்?

தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா?

அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா?

அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா?

இல்லையே.

ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே.

பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே.

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே.

மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே.

அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று பலரால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

ஜாகிர் உசேன் குற்றவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது என்பதே என் வாதம். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அன்றே அவர் குறித்த அனைத்து தகவலையும் நம்பி ஒரு முடிவுக்கு வரலாமா என்பதே நம் கேள்வி.

ஏற்கெனவே, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் காவல்துறை சொன்னது பொய் என்று ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ தலைவர்கள் படுகொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் குழுவினரே குற்றவாளிகள் என காவல்துறை சொன்னதை கலைஞரே கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் பக்ருதீனை காவல்துறையும் ஊடகங்களும் தீவிரவாதி என சொல்லிக் கொண்டிருந்த போதுதான் கலைஞர், போலீஸ் பக்ருதீன் தரப்பு நியாயத்தை கேள்வியாக முன்வைத்தார். அப்படி கேள்வி எழுப்பியதற்காக கலைஞர் தீவீரவாத ஆதரவாளர் ஆகிவிடுவாரா?

இப்போது, ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் இங்கும் வெடித்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. பாட்னா வெடிப்பில் இந்துத்துவ சக்திகளின் சதிவலையே அம்பலமானது. எனவே இதுவும் அதன் தொடர்ச்சிதான் எனும்போது சந்தேகம் யாரை நோக்கி வரவேண்டும்?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பற்றவைப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதே மோடியின் திட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் துணிந்துள்ளனர். எனவே, ஆந்திராவுக்கு மோடி வரும்போது, ஆந்திராவை கடந்துவரும் ரயிலில் குண்டு வெடிக்கிறது என்றால் சந்தேகம் முஸ்லிம் மீதா வரவேண்டும்?

இந்த நேரத்தில் குண்டு வெடித்தால் அந்த லாபம் மோடிக்கா, முஸ்லிமுக்கா என்பதைக் கூடவா சிந்திக்கமாட்டீர்கள்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

தி.மு.க நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

_ ஆளூர் ஷாநவாஸ்

************

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், முதலில் ஊடகங்கள் அங்கே ரத்தக் கறை இருக்கிறதா என்றுதான் தேடி அலைகின்றன. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின்போது, தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்ட ரத்தக்கறை இன்னமும் அப்படியே மனதில் நிற்கிறது.

இப்போது சென்னையில், குறிப்பாக தந்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ரத்தம் படிந்த தரையை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஊடக தர்மம் என்பது என்ன? மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக அச்சத்தையே உண்டு பண்ணுகிறது இவர்களின் காட்சியமைப்புகள். உடனடியாக தந்தி தொலைக்காட்சி இதனை நிறுத்த வேண்டும்.

தவிர, இன்னமும் குண்டு வெடிப்பிற்கான காரணமோ, யார் செய்திருப்பார்கள் என்கிற தகவலோ தெரியாமல், தொடர்ச்சியாக யார் செய்திருக்க கூடும் என்கிற கணிப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பா.ஜ.க தமிழ்நாடு தலைவர், பொன். ராதாக்ருஷ்ணன் நேராக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு மட்டும், அமைதியாக இருந்தால் எப்படி? தமிழ்நாட்டில்தான், இந்த அளவிற்கு மோடி எதிர்ப்பலை வீசுகிறது, உடனே அந்த எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி திருப்பிவிடும் போக்கைத்தான், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஊடகங்கள் ஆற்றும் பணி முக்கியமானது. அதனை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செய்தால், காலம் அவர்களை கனிவுடன் நோக்கும். - தமிழ் ஸ்டுடியோ அருண்

________________________________________

மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் கைதானது - மூன்று இந்துக்கள்! ஆனால், எந்த நாளிதழும் எந்த செய்தித் தொலைக்காட்சியும் "மூன்று இந்து தீவிரவாதிகள்" கைது என்று சொல்லவேயில்லை!

இதுவே கைதாயிருந்தது ஒரே ஒரு முஸ்லீம் நபராக இருந்திருந்தால் கூட "முஸ்லீம் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்" என்று செய்தி வரும் இந்நாட்டில்!

எங்கு குண்டு வெடித்தாலும் உடனே காவல்துறையினர், அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை விசாரணை என்ற பெயரில் மிகுந்த துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்குகின்றனர்!

ஒரு குண்டு வெடித்தால் உடனே "யாரோ முஸ்லீம் தீவிரவாதி குண்டு வச்சுட்டான்" என்று பொத்தம் பொதுவாய் எதுவுமே தெரியாமல் பொது மக்களை நம்ப வைத்திருப்பது தான் இந்துத்தவ மற்றும் காவித் தீவிரவாதிகளின் வெற்றி! அனைத்து ஊடகங்களும் இப்போது இதற்கு சிறிதும் கூச்சமே இன்றி உடன் போகின்றன!

"முஸ்லீம் என்றாலே அவர்கள் ஏதோ அரேபியா நாட்டில் இருந்து வந்தவர்கள்; இந்நாட்டை சேர்ந்தவர்களே இல்லை என்றும் அவர்கள் அனைவரையுமே தீவிரவாதிகள்" என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலானோருக்கு இருக்கிறது!

ஒரு குண்டு வெடித்தால் பள்ளி - கல்லூரிகளில் உடன் பயிலும் முஸ்லீம் மாணவர்களை ஏளனமாக கேலி பேசுவது; அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் முஸ்லீம் சகோதரர்களை மனம் நோகும் வகையில் பகடி செய்வது - இதில் எல்லாம் பல பார்ப்பன நாய்களுக்கும் மேல்தட்டு மேல்சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கும் இந்துத்வா வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுக்கும் அப்படி ஒரு பேரானந்தம்!

ஆனால், ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகள் அன்று மட்டும் சிறிதும் வெட்கமே இன்றி "பாய், பிரியாணி கொண்டு வாங்க" என்று பல் இளித்துக் கொண்டு கேட்பது, தெரியாதவராய் இருந்தாலும் "முஸ்லீம் கல்யாணத்துல பிரியாணி நல்லாயிருக்கும்" என்று அற்பமாய் அலைவது - இது தான் இந்த இந்து மத வெறி பிடித்த கொள்கைவாதிகளின் லட்சணம்!

இந்த நாட்டில் உங்களைப் போன்ற ஆரிய வந்தேறிகளும், இந்து மத வெறி பிடித்த ரத்தக் காட்டேரிகளும் இருக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதை விட பல மடங்கு இந்நாட்டின் மைந்தர்கள் தான் இஸ்லாமியர்களும்! நீங்கள் வைக்கும் குண்டுகளுக்கும் நீங்கள் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கும் எத்தனையோ அப்பாவி இஸ்லாமியர்கள் பலி ஆகியுள்ளனர்; இன்னமும் ஆகின்றனர்! உங்கள் குடுமியை இப்படியே வளர விட்டுக் கொண்டு எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!

தீவிரவாதம் என்ற ஒன்று உருவாவதே அந்த அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் தான்! அரசாங்கத்தின் மேல் அதிருப்தி வருவதால் தான்; நாட்டின் கொடுமைகள், அநீதிகளுக்கு நியாயம் கிடைக்காத போது தான் எந்த ஒரு தீவிரவாதமும் உருவாகிறது! தீவிரவாதம் என்பதற்கும் பயங்கரவாதம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!

இந்த நாட்டின் பன்முகத்தன்மையை குலைக்க முற்படாமல் இந்துத்வா வெறியை காட்டாமல் இருந்தால் எந்த தீவிரவாதமும் வெளியே வரவே வராது! பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னால் இந்நாட்டில் குண்டுகள் வெடித்தது இல்லையே, ஏன்?! சிந்திக்க வேண்டாமா?!

காவித் தீவிரவாதிகளின் ஊடக பயங்கரவாதமும், காவிக் கறை படிந்த காவல்துறையும், காவித் துணியால் கண்களை மூடிய நீதி தேவதையும் மேலும் மேலும் ஒரு சில ஆரிய வெறியர்களின் இந்துத்வா கொள்கைகளுக்காக அப்பாவி இஸ்லாமியர்களை வதைத்து வந்தால், காவித் தீவிரவாதத்தை மறைத்து இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மறைத்துக் கொண்டே வந்தால் என்னைப் போல் இந்நாட்டின் பன்முகத்தன்மை மேலும் மனித நேயம் மேலும் மனிதம் மேலும் பற்றும் நேசமும் கொண்டவர்கள் நிச்சயம் பெரும் திரளாக கிளம்பி பெரும் புரட்சி வெடிக்கும்; அது தான் இந்நாட்டை திருத்த தேவை என்றால்!

எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் எழுத்தே ஆயுதம்; எங்கள் சொல்லே போர்வாள்; எங்கள் செயல்களே பெரும் புரட்சியாய் வெடிக்கும்!

நீதி தேவதை மீண்டும் சாதி,மத,இன,மொழி பாராமல் கருப்புத் துணி கட்டிக் கொண்டு இந்நாட்டில் நீதி வழங்கும் வரை ஓயமாட்டோம்! - - குமரகுருபாலன் சந்திரன்

SOURCE:http://www.satyamargam.com/news/news-and-views/2339-media-s-responsibility-to-our-society.html

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதைச் செய்தது ஒரு இஸ்லாமியர் என்று வதந்தி பரவிக் கொண்டிருந்த நேரம். அங்கே பிர்லா இல்லத்திற்கு வந்த மவுண்ட்பேட்டன் துரை கூடியிருந்த கூட்டத்திடம், "நீங்கள் நினைப்பதுபோல, காந்தியை கொன்றது இஸ்லாமியரில்லை. கொன்றவர் ஒரு ஹிந்து" என்று அறிவித்து, பெரும் கலவரம் உருவாவதை தடுத்தார்.

நீங்கள் இப்பொழுது தானே இங்கு வந்தீர்கள், என்ன நடந்தது யார் சுட்டது என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே இப்படி ஹிந்து என்று சொன்னீர்களே என்று நேருவும் படேலும் மவுண்ட்பேட்டனிடம் கேட்க, அதற்கு மவுண்ட் பேட்டன் சொன்னது, "நான் அவ்வாறு சொல்லாதிருந்தால் இங்கு பெரும் கலவரம் உண்டாகியிருக்கும், கொன்றது யார் என்று எனக்குத் தெரியாது!"

இது தான் ஒரு தலைமைக்கு உண்டான பண்பு. சரி அப்படியே காலச் சக்கரத்தை சுழற்றுவோம்.

13 டிசம்பர் 2001. பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதல் சம்பவம் முடிந்த உடனே, அந்த இடத்தை பார்வையிட வந்தார் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எல் கே அத்வானி.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: "இந்தத் தாக்குதலை செய்தது யார்""

அத்வானி பதில்: "செய்தது பாகிஸ்தானியர்கள் தான்"


 "எப்படிச் சொல்கிறீர்கள்?"

அத்வானி பதில்: "அவர்கள் பார்ப்பதற்கு பாகிஸ்தானியர்கள் போல இருந்தனர், அதனால் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான்"

அது என்னங்க அடையாளம்? பாகிஸ்தானியர்கள் போல இருப்பதற்கு? குல்லாவும் தாடியுமா?

இதுதான் நாட்டின் உள்துறை அமைச்சர் அளவிலிருந்து கடைக் கோடி பாமரன் வரை இவர்கள் பரப்பி வரும் வன்மம்!

வெள்ளைக்காரன் பொய் சொல்வானா சொல்ல மாட்டானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நம்ம நாட்டுகாரனைப் போல அரசியல் செய்ய மாட்டான் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும்!

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்! - கிஷோர் K சுவாமி


________________________________________

பயங்கரவாதச் செயல்கள் செய்பவர்கள், அவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டிற்கும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமானவர்களே!

பொதுமக்களின் உயிர்களைப் பறிக்கவோ, ஊனப்படுத்தவோ எந்தக் கொம்பனுக்கும் உரிமையில்லை. சென்னை ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எத்தனை முனையிலிருந்து வேண்டுமானாலும் துப்பு துலக்குங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்.

ஆனால் அதற்குமுன், குண்டு வைப்பவன் மட்டும்தான் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதி என்றாலே ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்தான் என்றும் திணிக்கப்பட்டுள்ள பொதுப் புத்தியை முதலில் கழற்றி எறியவேண்டும். மனிதத் தன்மையற்ற மிருகங்களால் அப்பாவிகள் கொல்லப்படுவது போலவே, தேடுதல் வேட்டை என்ற பெயரிலோ, ஃபைலை மூடவேண்டும் என்ற அவசரத்திலோ எந்தவொரு அப்பாவியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது, உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! - வெண்புறா சரவணன்


"ISI" அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மதமுமுக' ஒருங்கிணைப்பாளர் பேட்டி !

சும்மா விடாது அப்பாவியின் சாபம் ; விரைவில் வெளுக்கும் போலீசின் சாயம் !!

'ISI' உளவாளி என பட்டம் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் ஜாகிர் ஹுசைன், ISI தரச்சான்று பெற்ற அப்பாவி என்கிறார், மறுமலர்ச்சி தமுமுக ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ஜைனுலாபிதீன்.

இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், மறுப்பு பக்கத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டி:-

இலங்கை கண்டியை சேர்ந்த முஹம்மத் நுவைர் என்பவரின் மகனான ஜாகிர் ஹுசைன், கடந்த 1994 முதல் தமிழகத்துக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி வந்து செல்பவர்.

இந்தியப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதும், அங்கிருந்து சில சாதனங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் சிறு வணிகர், அவர்.

40 வயதுடைய ஜாகிர் ஹுசைனுக்கு, மனைவியும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர், தற்போது அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தன் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஜாகிர் ஹுசைன்.

மீடியாக்களால் மிகப்பெரும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், இந்த சதியிலிருந்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்.

அடிக்கடி தமிழக தலைநகர் சென்னைக்கு வியாபார நிமித்தமாக அவர் வந்து சென்றாலும், எப்போதும் மண்ணடியில் உள்ள ஒயிட் பேலஸில் தங்குவது தான் வழக்கம்.

கடைசியாக ஏப்ரல் 10 ந்தேதியன்று சென்னை வந்து சென்ற அவர், மீண்டும் 18 ந்தேதி சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர் தன்னிடமிருந்த 'பிசினஸ் விசா' உள்ளிட்ட ஆவணங்களுடன், தற்போது செல்லத்தக்க வகையில் உள்ள பாஸ்போர்ட் மற்றும், காலாவதியான பாஸ்போர்ட் என அனைத்தையும் காண்பிக்கிறார்.

அவரிடமிருந்த ஆவணங்களை சரிப்பார்த்து பெற்றுக் கொண்ட போலீசார், குற்ற முகாந்திரம் ஏதும் இல்லாத காரணத்தினால், அவரை விசாரணை வளையத்தில் வைத்திருப்பதாக சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

8 நாட்கள், சென்னையில் வியாபார நிமித்தமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்த அவரை 26 ந்தேதி மாலை 'மெட்ராஸ் யுனிவெர்சிட்டி' அருகில் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர்.

அதைதொடர்ந்து 29 ந்தேதி வரை சட்டவிரோத காவலில் வைத்து விசாரணை என்ற பெயரால் அடித்து துன்புறுத்தியுள்ள போலீஸ், வெற்றுத்தாள்கள் சிலவற்றிலும் எழுதப்பட்ட சில காகிதங்களிலும் கட்டாய கையொப்பம் வாங்கிக் கொண்டு,13 வது மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி ரிமாண்ட் செய்கின்றனர்.

மாஜிஸ்டிரேட் கேட்டால், மோசடி வழக்கு என சொல்ல சொல்லி வற்புறுத்தியுள்ளது காவல்துறை.

இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன்:

இன்று சனிக்கிழமை என்பதால், இவர் மீது என்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தன்னால் உறுதிப் படுத்த முடியவில்லை என்றார்.

திங்கள் கிழமைக்குப் பிறகு தான் அதன் விவரங்கள் தெரிய வரும் என்று சொன்ன வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.

ஒருவர், ஒரே நேரத்தில் ISI க்காக உளவு வேலைப் பார்த்துக் கொண்டே, கள்ள நோட்டுக்களையும் புழக்கத்தில் விட்டு மாட்டிக் கொள்வாரா என்பது தான் நம்முடைய கேள்வி.

SOURCE: https://www.facebook.com/maruppu.in

நடத்துங்கடா உங்கள் நாடகத்தை!

சிதம்பரத்தில் ஒரு வீட்டில் நாட்டு வெடுகுண்டு வெடித்தது தயாரிப்பின் பொழுது ...

இதில் திண்டுக்கலை சேர்ந்த பிரபல ரவுடி கடும் காயம் ...

மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு தப்பி ஓட்டம் ..!

மேலும் வீட்டை சோதனை செய்ததில் கை துப்பாக்கிகள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுக்க பட்டுள்ளது ..!

》》》》

கவனிக்க வேண்டும்> ரவுடியாம் வெடிகுண்டாம் துப்பாக்கியாம் ..!

தாடி வைத்த காரணத்தால் இலங்கை தமிழன் ஜாகிர் பாக்கிஸ்தான் உளவாளி என்று கைது ...

இதில் அவருக்கு பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்பு உள்ளது என்றும் ...

இந்தியாவை சீர்குலைக்க வந்தவர் என்றும் பழைய முதல்வர் வரை வதந்தி ..

அனைவருக்கும் இஸ்லாமியன் என்றால் இனிக்குது போலும் ..!

குண்டு தயாரிப்பில் தோல்வியடைந்தவன் ரவுடி என்பதோடு செய்தி நிற்கிறது ..!

இதுவே இஸ்லாமியனாக இருந்திருந்தால் ?

முருங்கக்காய் கூட ஜெலட்டின் குச்சிகள் !

நடத்துங்கடா உங்கள் நாடகத்தை!

________________________________________

மேலும் படிக்க... Read more...

'தெகல்கா'வின் புலனாய்வு' - தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

>> Sunday, May 4, 2014

அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்திய பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடிய மாபெரும் இனப்படுகொலை. பயங்கரங்களின் நிழலில் - நம் காலத்தின் கொடூர நிகழ்வு!

மாபெரும் இனப்படுகொலை. நடந்தது என்ன?

'தெகல்கா'வின் புலனாய்வு' -  தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

இனப்படுகொலையைச்செய்தவர்களே பெருமிதத்துடன் அளித்த வாக்குமூலங்களின் பதிவே இந்தூல்

பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடிய குஜராத் இனப்படுகொலை – நடந்தது என்ன ?

புத்தகத்தினைப் படிக்க >>> இங்கு <<< அழுத்தவும்.

இணைக்கப்பட்டுள்ள PDF File 108 பக்கங்களைக் கொண்டது என்பதால் Load ஆக சிறிது நேரம் ஆகலாம்.



குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?
'தெகல்கா'வின் புலனாய்வு
தமிழாக்கம் : அ. முத்துக்கிருஷ்ணன்
முதல் பதிப்பு : ஜனவரி 2008
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2008
மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2014
விலை : ரூ. 130

புத்தகத்தினைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:

வாசல் பதிப்பகம் 402, முதல் தெரு வசந்த நகர் மதுரை 625 003

செல் : 98421 02133

தலித் முரசு எஸ் – 5, மகாலட்மி அடுக்ககம் 26/13 குளக்கரை சாலை சென்னை 600 034

பேசி : 044 2822 1314

- அ.முத்துக்கிருஷ்ணன் (muthusmail@gmail.com)

 Source: http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/26365-2014-04-23-00-38-35

நன்றி : http://www.keetru.com/

மேலும் படிக்க... Read more...

இது இந்தியாவில் சாத்தியமா? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் .

>> Monday, March 31, 2014

65 கோடி ரூபாய் செலவில் பாக் அரசு திருப்பணி செய்து பூஜைகள் நடக்கும் இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.

பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.

கோவில் கட்டும் பாகிஸ்தானும் மசூதியை இடிக்கும் இந்தியாவும்.

2005ம் ஆண்டு பாக்கில் சக்வால் மாவட்டத்தில் இடிந்து கிடந்த இந்துக் கோவில் ஒன்றின் புனித தீர்த்தம் ஒன்று சீரமைக்கப்பட்டு அருகிலுள்ள ஏழு இந்துக் கோவிகளில் விக்ரகஙள் புதிதாய் நாட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதன. அதற்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தவர் யார் தெரியுமா?

யார் தலைமையில் அவ் விழா நடத்தப்பட்டது தெரியுமா? பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அதே லால் கிருஷ்ண அத்வானிதான். ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் இது இந்தியாவில் சாத்தியமா?

சற்று விவரமாக இந்துக் கோவில் அங்கு புனருத்தாரணம் செய்யப்பட்டதை சொல்கிறேன்.

2005l அத்வானி பாகிஸ்தான் சென்றபோது, பஞ்சாப் மாநிலம் சட்வால் மாவட்டத்தில் உள்ள கடஸ்ராஜ் கோவிலைப் புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டி வந்தார், அப்போது அவருடன் கூடச் சென்றவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) தலைவர் ஷுஜாத் ஹுசேன். அது ஒரு சிவன் கோவில். அதை ஒட்டியுள்ள புனித கோவிற் குளம் தன் மனைவியின் இழப்பை ஒட்டிச் சிவன் உதிர்த்த கண்னீர்த் துளிகளால் உருவானது என்பது நம்பிக்கை. ஏழு சிறு கோவில்கள் அங்கு உண்டு.

தான் அடிக்கல் நாட்டிய அனுபவம் குறித்து அப்போது அத்வானி கூறியது: "உண்மையில் இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம். உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை கடஸ்ராஜிலுள்ள இந்துக் கோவில்கள். இவற்றைப் புதுப்பீக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்ததை இந்திய மக்களுக்கே அளிக்கப்பட்ட ஒரு கவரவத்தின் குறியீடாகவே கருதுகிறேன்."

இதை ஒட்டி பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாநிலத் தொல்லியல் துறை தொல்லியல் துறை, பொது நலப் பணித்துறைகள் முதலியன இப்பணி நோக்கி முடுக்கிவிடப்பட்டன.

சீரமைப்பு வேலையை விரைவுபடுத்தக் கோரி அத்வானி சென்ற 2008 டிசம்பரில் ஹுசேனைத் தொலை பேசியில் அழைத்துச் சொன்னார்.

"நீங்கள் சுட்டிக் காட்டிய விஷயத்தை நான் மிக்க கரிசனத்துடன் கவனத்தில் எடுத்துக் கொண்டேன், சக்வாலில் உள்ள தகுதியான அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தற்போது வேலைகள் எந்த நிலையில் உள்ளன என விசாரித்தேன். தீவிர அர்ப்பணிப்புடன் அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என பாக் முஸ்லிம் லீக் தலைவர் ஷுஜாத் ஹுசேன் உடன் பதில் எழுதினார் ("Pak Temple Renovation on, Advani Told", Express News Service, New Delhi, Dec 11, 2008).

கடஸ்ராஜ் கோவில்களும் ஶ்ரீ அமர்குண்ட் எனப்படும் புனித தீர்த்தமும் சுற்றுச் சூழல் கேடுகளால் சீரழிந்த வருவது குறித்து 'டான்' உள்ளிட்ட பாகிஸ்தான் நாளிதழ்கள் தொடர்ந்து எழுதி வந்தன. அருகிலுள்ள தொழிற்சாலைகள் நீரை உறிஞ்சி விடுவதால் அமர் குண்ட் வற்றி வருவதை அவை சுட்டிக்காட்டின. அப்படி ஒரு செய்தியைப் படித்த பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்கள் சென்ற 2012 மேயில் உரிய அதிகாரிகளை அழைத்து, புதுப்பிக்கும் பணியை "அறிவியல் நுட்பங்களுடன்" விரைந்து முடிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிட்டார் ("Preserve Katasraj Temple : Zardari", The Hindu, May 7, 2012).

சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறைச் செயலரும், கடஸ்ராஜ் கோவிற் புனரமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான சயீத் இக்பால் வஹ்லா, "போர்க்காலத் துரிதத்துடன் பஞ்சாப் அரசு இப்பணியை நிறைவேற்றி வருகிறது" என அறிவித்தார். "இந்த நாட்டின் சம குடி மக்களான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பஞ்சாப் அரசுக்கு உண்டு" எனவும் அவர் கூறினார்.

திருக்குளத்தைப் "புதுப்பிப்பதற்காக பஞ்சாப் அரசு 60.92 கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது" எனவும், கோவிற் திருப்பணிக்காக "மத்திய அரசு மேலும் 2 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது" எனவும், யாத்ரீகர்கள் "தங்கிச் செல்ல விடுதி ஒன்றும் கட்டப்படும்" எனவும் வஹ்லா கூறினார் ("Pak Hindus Throng at Renovated Holy Pond", One India, Nov 5, 2012).

115 இந்துக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஶ்ரீ அமர் குண்ட் வண்னப்பூக்கள் மிதக்கப் பேரழகுடன் காட்சி அளித்தது. ஹிந்து சுதர் சபாவின் பொதுச் செயலர் அசோக் சந்த் பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்தார். கடஸ்ராஜில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தைத் தொழுது அனைவரும் திரும்பினர்.

ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது.புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 66 ஆண்டுக்கு பின், தற்போது, இக்கோவிலில் பூஜைகள் நடக்கின்றன.

இதுகுறித்து, பாகிஸ்தான் தொல்லியல் துறை தலைவர், அஸ்மத் தாஹிரா கூறியதாவது:

பழமை மாறாமல், இக்கோவில், புனரமைக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தான் அரசின், இந்த புனரமைப்புக்கு, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி, இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல; இங்கு, ஒரு புத்த மடம், சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளன. இவ்வாறு, அஸ்மத் தாஹிரா கூறினார். –

பாக்கில் ஒற்றை அதிகார மையம் இல்லை என்பதும், தீவிரவாதமும், இஸ்லாமிய அடிப்படிவாதமும் அந்த நாட்டைச் சீரழித்துக் கொண்டுள்ளன என்பதும் உண்மை .

ஒரு காலத்தில் அரசும் இராணுவமுமே இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தபோதும், இப்போது பாக் அரசுக்கே அது பெரும் தலைவலியாக இருப்பதுதான் எதார்த்தம்.

சென்ற ஆண்டில் எல்லை ஓரத்தில் இந்திய இராணுவ வீரர்கள் சிலர் கொல்லப்பட்டு, அவர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, அது இராணுவம் அல்லாதவர்களின் செயலாகவும் இருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் எனச் சொன்னபோது இந்துத்துவ வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அந்தோனியின் கூற்று மிகவும் நிதானமான ஒன்று.

பாக்கில் இன்று குறைந்த பட்சம் மூன்று அதிகார மையங்கள் செயல்படுகின்றன. அரசதிகாரம், தன்னிச்சையாக இயங்கக்கூடிய இராணுவ அதிகாரம், அடிப்படைவாதிகளின் அதிகாரம். இந்த நிலை நீடித்தால் விரைவில் பாக் ஒரு failed state என்கிற நிலையை எட்டலாம் என்பது உண்மை.

ஆனால் ஒன்றை நாம் மனங்கொள்ள வேண்டும். இப்படியான சூழல் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களும் பாக். சிறுபான்மையினர் மீது அவ்வப்போது நடக்கும் சில வன்முறைகளுக்கும் காரணமாகின்றது,

இந்த வகையில் இது பாகிஸ்தான் அரசுக்கும் பெரிய தலைவலியாகத்தான் உள்ளது. ஆனால் இந்தக் காரணங்களுக்காகவே அங்கு எல்லாமே சீரழிந்துள்ளதாகவும்,ஒவ்வொரு பாகிஸ்தானியும் இந்திய வெறுப்புடன் வாழ்வதாகவும் நினைப்பதும், அந்த வகையில் ஒவ்வொரு பாகிஸ்தானியையும் நமக்கு எதிரியாகவும் நினைப்பதை விட அறிவு கெட்டத்தனம் அல்லது வன்ம வெறுப்பு மனோ நிலை வேறெதுவுமில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டார்லிம்பில், பாக் சென்று வந்து கட்டுரை ஒன்றை அவுட்லுக் இதழில் எழுதி இருந்தார். அதை வாசித்தால் பாக்கின் இன்னொரு பக்கத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அடிப்படை வசதிகள், நயத்தக்க நாகரீகங்கள் உள்ள நாடுதான் பாக்கிஸ்தான் என்பதும், பாக் மக்கள் அப்படி ஒன்றும் இந்து மதத்திற்கோ, இந்தியர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதும் நிறைய வாசிக்கையில்தான் விளங்கும்.

பாக் மீதும் அம்மக்கள் மீதும் வெறுப்பைக் கொட்டி எழுதியிருக்கும் பதிவுகளும் ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றன.

அறியாமையும், வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் அது ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். - அ.மார்க்ஸ்

THANKS TO: A. MARX @FACEBOOK.

இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?- THE HINDU


இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள்போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்.

ஆசியக் கோப்பைப் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற காரணத்துக்காக, உத்தரப் பிரதேசத்தில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது மீரட் காவல் துறை.

கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-யின் கீழ் பிரிவினைவாதக் குற்றச்சாட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிவு 153 ஏ-யின் கீழ் வெவ்வேறு இனங்களுக்கிடையே துவேஷத்தை ஏற்படுத்த முயன்றது, பிரிவு 427-ன் கீழ் விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் இன்னும் நீடிக்கின்றன.

இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் பேசியிருக்கிறார். பிரச்சினைக்கு மதப் பிரிவினைவாதச் சாயம் விழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காக, மாணவர்களை காஷ்மீருக்குத் திரும்ப அனுப்பியிருப்பதாக சுவாமி விவேகானந்தர் சுபார்தி பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

தாங்கள் எந்தப் புகாரையும் பதிவுசெய்யவில்லை என்று பல்கலைக்கழகத் தரப்பு கூறினாலும், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?

“அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பேச்சு களையும் கருத்து வெளிப்பாடுகளையும்கூடப் பிரிவினைவாதம் என்ற வரையறைக்குக் கீழே கொண்டுவந்துவிட முடியாது; வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிடும் வகையிலான நடவடிக்கைகள்மீது மட்டுமே தேசத் துரோகத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று கூறுகிறது உச்ச நீதிமன்றம்.

ஆனால், சாதாரண ஒரு கிரிக்கெட் போட்டி விஷயத்துக்கே தேசத் துரோகச் சட்டத்தைத் துணைக்கு அழைக்கின்றனர்.

இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா?

சமீபத்தில் ஜம்முவில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருந்த ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் நள்ளிரவுச் சோதனைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

இப்போது காஷ்மீர் மாணவர்கள்மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகளின் மனதிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தியப் பொதுச் சமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?

இந்தச் சமயத்தில், பாகிஸ்தான் - இந்தியா இடையேயான ஒரு கிரிக்கெட் போட்டியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடைபெற்ற பரபரப்பான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

அரங்கத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று, பாகிஸ்தானுக்குக் கரவொலி எழுப்பினர். வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ந்துபோயினர்.

விளையாட்டு என்பதன் உண்மையான நோக்கம் இதுதான். எல்லைகளைத் தாண்டி நல்லுறவை வளர்ப்பது. உண்மையான வெற்றியை அங்கீகரிப்பதுதான் விளையாட்டுக்கான அடிப்படை. உண்மையில், விளையாட்டில் தேசப் பற்றை நுழைப்பவர்கள்தான் பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.

Ref: THE HINDU சிந்தனைக் களம் » தலையங்கம் எதுவெல்லாம் தேச விரோதம்?

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

நீதி மறு(றை)க்கும் இந்திய ஊடகத்துறை.

>> Tuesday, March 11, 2014

சாமியார்கள் நடிகைகளின் அந்தரங்கங்கள், ஆரூடம், பாலியல் வக்கிரங்கள், பெண்களின் ஆபாச அசைவுகள், மக்களை பிளவுபடுத்துதள், தரகு வேலை பார்ப்பது மூலம் பணம் சம்பாதிப்பதே ஊடகங்களின் முக்கியக் குறிக்கோளாக உள்ளன.

இரத்தம் சிந்தாத மீடியாக்கள்.

1. அரசியலமைப்பு, சட்ட ஒழுங்கு, நீதிமன்றம், ஊடகம் ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் நான்கு மாபெரும் தூண்கள்.

2. சட்ட - ஒழுங்கு மனோ இச்சையுடன் செயல்பட்டாலோ, நீதி மறுக்கப்பட்டாலோ, அரசியலமைப்பு கார்ப்பரேட்டுகளின் காசுக்கு விற்கப்பட்டாலோ எதற்கும் வளைந்து கொடுக்காமல், மக்களுக்காக துணிச்சலுடன் அதிகாரவர்க்கத்தைக் கேள்வி கேட்கும் இடத்தில் ஊடகங்கள் உள்ளன.

3. இந்தியாவில் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.. அவர்களுக்காக நீதி கேட்கும் துணிச்சல் தனி நபர்களிடமோ குழுக்களிடமோ காணப்படுவதில்லை. அவ்வாறு அபூர்வமாக சிலர் இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்தால் அடக்கப்படுகின்றார்கள்.

4. ஊடகத்துறை மட்டுமே எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் செயல்படத்தக்க அளவுக்கான அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் அதன் இன்றைய நிலை நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு எதிர் மறையாக மாறி இருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் மீடியாத்துறை. ....

1. மக்களின் கவனத்தைத் திருப்பி ரேட்டிங்கை உயர்த்துவதும் பணம் சம்பாதிப்பதும், அதிகாரவர்க்கத்திற்குத் தரகு வேலை பார்ப்பதுமே இன்றைய இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை தங்கள் முழுநேரப் பணிகளாக செய்து வருகின்றன.

2. இந்தியாவின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் வலம்வருகின்றனர். அவர்களின் பிடியிலேயே தொலைகாட்சி செய்தி நிறுவனங்கள் உள்ளன.

அத்தகைய ஊடகங்களில் வரும் செய்திகள் ஒருதலைபட்சமாகவும் ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் நிலையிலோ இல்லாமல் இருக்கின்றன.

நீதிக்கு எதிராக நவீன ஊடகத்துறை

1. நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் கடன் தொல்லை காரணமாக 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர் தம் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி ஊடகங்கள் வாய் திறக்காமல் மௌனம் காக்கின்றன.

2. இந்தியாவில் இருக்கும் விபச்சார விடுதிகள், அதிகாரப்பூர்வமற்ற பெண்கள் சிறைச்சாலைகளாகவே செயல்படுகின்றன. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் தாதாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களின் கண்காணிப்பிலேயே பெரும்பாலான பெண்கள் விபச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்கு அரசாங்கமே வக்காலத்து வாங்குவதும் அந்தப் பெண்களுக்கு நடக்கும் அவலங்களைத் துணிச்சலோடு சொல்ல மறு(றை)ப்பதும் ஊடக துறைகளின் மற்றொரு அவல நிலையே!

3. இந்தியாவில் குடிகாரர்களின் விழுக்காடு அதிகமாக கொண்ட மாநிலம் என்ற அந்தஸ்தைத் தமிழ்நாடு எட்டிப்பிடித்து வெகுகாலமாகிவிட்டது. அதிக சாலை விபத்துகள் மதுவாலேயே நிகழ்கின்றன என்று புள்ளி விவரம் சொல்கின்றது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும்கூட காமடியாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களும் மாணவர்களும் குடிப்பதை ஃபேஷனாக காட்டாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. இந்த அவலநிலை குறித்து எந்த முக்கிய ஊடகமும் கேள்வி கேட்கும் நிலை இன்று இல்லை; கேள்வி கேட்கும் நந்தினி போன்ற தனிநபர்களையும் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.

4. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றது. சட்ட ஒழுங்கைக் காக்கவேண்டிய காவல் நிலையங்களிலேயே அதிகமான வன்புணர்வுகள் நடப்பதும் தவறுசெய்தவர்கள் தண்டனையை விட்டு சர்வசாதாரணமாக தப்பிப்பதும், அதிகாரவர்க்கம் அதற்கு துணைபுரிவதும் ஊடகங்களில் கடைசிபக்க விமர்சனங்களாகக் கூட வருவதில்லை.

5. தலித்களின் உரிமை மறுப்பு, சாதியக்கொலைகள், தலித்பெண்கள் வன்புணர்வு, தலித்கள் மீதான சித்ரவதைகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் மிகப் பெரும்பாலானவையும் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன.

6. அதிகாரவர்க்கத்தாலும் ஃபாசிஸ சக்திகளாலும் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம். இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்; முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு கலவரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன; அக்கலவரங்களிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக இளைஞர்களே பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையிடப்படுகின்றனர்.

7. போலி என்கவுண்டர், வெடி(க்காத) குண்டுவழக்கு, தீவிரவாதம்... இந்த வார்த்தைகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டுமென சொந்தமாக்கபட்டுவிட்டது. இந்திய முஜாஹிதீன் என்று அடிக்கடி சொல்லும் மீடியாக்கள், உண்மையைக் கண்டறிய முனையாமல் காவல்துறையின் மவுத் பீஸ்களாக மாறிவிட்டன.

8. இந்திய உள்துறை அமைச்சரே 10 ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுகிறார்; மாலேகான் முதல் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு வரை அனைத்திலும் ஈடுபட்ட பயங்கரவாதி சுவாமி அசிமானந்தா, குண்டுவைக்க தமக்கு டைரக்சன் தந்ததே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தான் என வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனாலும், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட, இல்லாத இந்தியன் முஜாஹிதீன் பெயரையே திரும்பத் திரும்ப உச்சரிக்கும் இந்திய ஊடகங்கள் இந்திய தேசத் தந்தையையே படுகொலை செய்த கோட்சேயை வளர்த்துவிட்ட பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் குறித்து வாயைத் திறக்கவே அஞ்சுகிறது!

9. மோடியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை, இடிக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜித் வழக்கு, முசாபர் நகர் கலவரம் பற்றிய தெளிவான செய்திகள் முதலானவற்றைப் பெரும்பான்மை ஊடகங்கள் மறைத்து விட்டதோடு, நடிகை வீட்டு நாய்க்குட்டியின் பேதி மஞ்சள் கலரில்... போன்ற செய்திகளே அவைகளுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டன!

10. அப்சல் குரு போன்ற தனி நபராக ஆனாலும், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமாக ஆனாலும் முஸ்லிம்கள் சார்ந்த விசயம் எனில் எந்தக் குற்றமும் நிரூபிக்க முடியாத நிலையில்கூட அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதிலேயே ஊடகங்கள் முனைப்பு காட்டுகின்றன.

11. இந்தியாவில் வங்கிகளின் அட்டகாசங்கள் பற்றியும் கடன்களைத் திரும்பப்பெற நடத்தும் ரௌடிசங்கள் பற்றியும் எந்த மீடியாக்களும் அக்கறை கொள்வதில்லை; பாதிக்கப்படுவது மாணவனாக இருந்தாலும் சரி; விவசாயியாக இருந்தாலும் சரி, அவற்றைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை!

12. வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு முதலான மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்கள் பற்றி மக்களின் உணர்வுகளை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.

பசியால் மட்டும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 23 லட்சம் பேர் பலி ஆகின்றனர்.அவர்களின் பசிகளின் வலிகளை எந்த ஊடகத்துறையும் ஓங்கி உரைக்கவில்லை.

13. தங்களுக்குக் கிடைக்கும் லஞ்சம், ஊழல்கள், கருப்பு பண விவகாரம் முதலானவை தொடர்பான செய்திகளை வைத்து மிரட்டி பேரம் பேசும் தரம்கெட்ட மூன்றாம்தர தாதாக்கள் ரேஞ்சுக்குச் சொல மீடியாக்கள் போய்விட்டன! அவை தொடர்பில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையோ அரசியல்வாதிகளையோ மக்கள் மன்றத்தில் நிறுத்துவது இல்லை..

14. காஷ்மீர், அஸ்ஸாம் முதலான மாநில மக்களின் துயர்களை அருந்ததி ராய் போன்ற சில தனிமனிதர்களே தொடர்ந்து போராடி செய்திகளாக முன்வைக்கின்றனர். இந்திய ஊடகங்கள் இவர்களைப் பற்றி எந்த உண்மை செய்திகளையும் முன் வைக்காமல் தொடர்ந்து ஊடக அராஜகம் செய்து வருகின்றன.

அபின்களாக மாறும் மீடியா நிகழ்ச்சிகள்

1. கிரிக்கெட், தரங்கெட்ட சினிமாக்கள், கவர்ச்சி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள், கேவலமான இரட்டை அர்த்த நையாண்டிகள் மற்றும் மதி மயக்கும் இசை நிகழ்ச்சிகளே அனைத்து மீடியாக்களையும் ஆக்கிரமித்துள்ளன.

2. பாலியல் வக்கிரங்கள் மற்றும் பெண்களின் ஆபாச அசைவுகள் மூலம் டிவி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் முக்கியக் குறிகோளாக உள்ளன.

3. சாமியார்களின் அந்தரங்கங்கள், ஆரூடம், மருத்துவம் என்ற பெயரில் பாலின வக்கிரம், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கான மனை நிலங்கள் விற்பனை போன்ற மக்களின் சிந்தனையை எவ்வகையிலும் உயர்த்தாத நிகழ்ச்சிகளே தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.

உரத்த சிந்தனை

1. உலக மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமேயுள்ள யூதர்கள் உலகில் 95% க்கும் அதிகமான ஊடகங்களைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.

2. அந்த ஊடகங்களில் சொல்லும் செய்திகளும் அதன் ஊடகவியலாளர்களின் பெரும்பாலோரின் நிலையும் இவர்கள் மனப்பதிவையும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டவை.

3. ஆதிக்க, ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட இவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களிலிருந்து வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.

4. இந்தியாவிலுள்ள ஊடகங்களில் பெரும்பான்மையும் யூதர்களின் வழிமுறைகளை அடியொற்றும் பார்ப்பன உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

5. அதிகாரவர்க்கத்திற்குத் துணை நிற்கும் இது போன்ற மீடியாக்கள் பாதிக்கபட்ட மக்களின் உணர்வுகளைத் தொட்டுக்கொள்வதற்காகக்கூட வெளிச்சமிட்டுக் காட்டுவதில்லை.

6. உலகில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் மக்கள் அதை குறித்து சிந்தித்து கேள்விகேட்டுவிட முடியாதபடி உலகம் முழுக்க, மக்களின் சிந்தனைகளை நன்மையான விசயங்களிலிருந்து மாற்றி அடிமைப்படுத்தும் ஒரேமாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

7. இஸ்ரேல், அரபு நாடுகளின் மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. சிரியா, பாலஸ்தீன், எகிப்து போன்ற நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிகளை எல்லாம் திட்டமிட்டு மறைக்கின்றன.

8. இந்தியாவில் அடக்கு முறைக்கு உட்பட்ட மக்களின் அழுகுரல்களை இந்திய மீடியாகளின் இசை நிகழ்ச்சிகள் கேட்க விடுவதாக இல்லை

9. அரசின் தவறான திட்டங்களால் குடிமகன் உணவின்றி செத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஊடகங்கள், நடிகைகளின் உள்ளாடைகள் பின்னால் தமது செய்தியாளர்களை அனுப்பி தமது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன.

நமக்கான மாற்றம்

1. துணிச்சலான தத்துவ அறிஞர்கள் மக்களின் உணர்வுகளைச் செய்திகளாக எடுத்துரைத்ததால் பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி எல்லாம் தோன்றி மக்களை அடிமை தனத்திலிருந்து விடுவித்தது. ஒடுக்கப்படும் சமூகம் அதிகார வர்க்கத்திடமிருந்து விடுதலை பெற இன்றைய காலத்தில் நீதிக்கு துணை புரியும் ஒருவன் ஊடகவியலாளனாக மாறுவதைத் தவிர வேற வழி இல்லை...

2. ஆனால், உண்மையிலேயே மக்களுக்காக... நீதிக்காக நிலைகொள்ளும் அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள்..... அல்ல அல்ல... உண்மையான போராளிகள்... ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் மக்களுக்கு எதிராக நடந்த அக்கிரமக்காரர்களின் யுத்தங்களிடையே ஊடுருவிச் சென்று நீதிக்காக, உண்மையான செய்திகளை உலகின் முன்கொண்டுவருவதற்காக வேண்டி தம் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்..

3. எவ்வகையான ஊடகம் இந்தியாவுக்குத் தேவை என்பது இனி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.

4. நீதிக்கான போரில் நீதியை நிலை நிறுத்த பாடுபடும் ஊடகவியலாளனே உண்மையான போர்வீரன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

5. ஊடகம் ஒரு மாபெரும் இயக்கம். அது, நீதிக்கான சத்தியக் கொள்கை இயக்கமாக பரிணமிக்கும் பொழுதே மாபெரும் வெற்றிபெறுகின்றது.

6. பணமும் அதிகாரமும் முதலீடாக வைத்து உருவாக்கிய மீடியாக்களுக்கு மத்தியில் உயர்ந்த சிந்தனையையும் அறிவையும் முதலீடாக வைத்து ஊடகங்கள் உருவாகும் பொழுதே அநீதிக்கான கதவுகள் உடைத்து எறியப்படும் .... அதுதான் உண்மையான ஊடக தர்மமும் கூட!

அபூஷேக் முஹம்மத்

Ref: http://www.inneram.com
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

விளம்பர யுத்திகள் !

>> Friday, February 7, 2014

விளம்பர யுத்திகள் !


மேலும் படிக்க... Read more...

இந்து மாயை -சு.அறிவுக்கரசு

>> Wednesday, February 5, 2014

இந்து மாயை (பகுதி-1) -சு.அறிவுக்கரசு


இந்து மாயை (பகுதி-2) -சு.அறிவுக்கரசு


மேலும் படிக்க... Read more...

காந்தியின் பேத்தி

>> Monday, December 30, 2013

குஜராத் கலவரங்களை பற்றி பேசும் போது, மோடியின் முகத்தில் எந்த வருத்தமும் தெரியவில்லை என மகாத்மா காந்தியின் பேத்தி குற்றம் சாட்டியுள்ளார்.காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா நிருபர்களிடம் கூறியதாவது:

குஜராத்தின் முதல்வராக, மாநிலத்தின் பிரஜையாக இருந்து கொண்டு அரசியல் பேசும் மோடியின் பேச்சை கேட்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அங்கு நடைபெற்ற கலவரம் குறித்தும், வன்முறை சம்பவங்கள் குறித்தும் எப்படி ஒருவரால் இதுபோல் முகத்தில் எந்த வலியோ, வேதனையோ இல்லாமல் பேச முடியும் என்று தெரியவில்லை..

அவர் என்ன மாதிரியான மனிதர். அவரால் எப்படி தனது மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வன்முறையை இப்படி இயந்திரத்தனமாக அவரால் பேச முடிகிறது.

கலவரத்துக்கு பிறகு நான் அங்கு நிவாரண முகாம்களை சென்று பார்த்தேன். அப்பப்பா என்ன ஒரு பயங்கரமான காட்சிகள். என்னால் சுமார் 6 மாதத்துக்கு தூங்க முடியவில்லை. மோடி நாட்டின் பிரதமராக வருவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. நான் யார் பெயரையும் முன்மொழிய விரும்பவில்லை. அதிகாரத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும், மக்கள் மீது தங்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சியும் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தாரா காந்தி கூறினார்.

மேலும் படிக்க... Read more...

மதம் மாற்றப்பட்ட மசூதி! அயோத்தி ராமன் அழுகிறான்.

>> Thursday, December 5, 2013

இந்தியாவில் நீதி அயோக்கியர்களின் அநீதிக்கு கட்டுப்பட்டது. அந்த அயோக்கியர்களின் கைகளினால் தான் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
டிசம்பர் 6 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை சகோதரத்துவத்தை முஸ்லீம் மக்களின் நம்பிகக்கையை தகர்த்தெறிந்த நாள்.

பௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

இந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி விடுகிறது.

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


மதம் மாற்றப்பட்ட மசூதி!

அயோத்திய மண்ணில் அசுரக் கொடி

திசம்பர் ஆறில் ஏற்றிய நெறி

இந்திய இறையாண்மையை முறித்து

பூணூல் பொசுக்கிய புனிதத்தல ஒழிப்பு!

இத்தேசத்தின் இறையாண்மை இதயத்திலிருந்து
காவிக் கரங்களால் சிகப்பு நீர் சிதறியதே
மனித இறையொன்று தோற்றுவிக்கப்பட்டதனால்!

வேற்றுமையில் ஒற்றுமையே
வேதமெனப் பாடும் நாட்டிலே
மதம் மாற்றப்பட்டதே மசூதியொன்று!

உடல் உறுப்பில் சிறு சதை சிதைந்து
ஊனமுற்றுத் துடிக்கின்றது எந்நாடு
அதை வெற்றியெனக் கொண்டாடுகிறது
நாடற்ற நாடோடிக் கூட்டமொன்று!

வருடம் பிறந்தாலன்றி விழி நோக்குவதில்லை
விசும்பி அழும் மசூதியின் உறவுகள்!

வீதியில் நின்று இழப்பு ஓலமிடுவதினால்
விடியல் கிடைத்திடுமோ குருடர்களே?

விதியென்று தலையிலடித்துக் கொண்டாய்
நீதி மரித்திடாதென அம்மன்றம் ஏறியும் நின்றாய்!

கைகளில் கடப்பாரை தாங்கிய கயவர்களின்
மாறுவேடமே சுத்தியல் தாங்கியவரென்று உணர்ந்தாய்!

ஆட்சித் தலைமை முதல், தாசன் வரை
தன் சீடர்கள் பரப்பி – உன் குரலை
குருதிகளற்றதாய் நசுக்குமவன் திறனை
இசுலாமியனே நீ இன்றும் அறிந்தபாடில்லை!

கயமத்தால் கருவறுக்கப்பட்ட மசூதியின் இறப்பு
கருப்பு நாளென்று ஒரு சாயலில் கொள்ளும் வேளையிலே
அது காவிகளின் நாள் என்பதனையும்
மறந்திடாதே! மனிதமுள்ள மனிதச் சமூகமே!

கருப்பு நாளை வெண்மையாய் படரச் செய்து
காவிகளுக்கு அந்நாளை கசப்பாக்கிட
கட்டி எழுப்புவோம் மசூதியினையும்
மிதிப்புகளைத் தடுத்து குடிசைகளையும்!

ஓ காவிவாதிகளே! நீங்கள் கொண்டிருக்கும்
திரிசூலம் உங்களையே ஓர் நாள் அழிக்கும்
அதன் மும்முனைகளும் முச்சமூக
இணைப்பாய் மாறி வெகுவிரைவினிலே!

மூச்சியிழந்து துடிக்கும் அயோத்தி நிலத்தில்
பாபர் மீண்டும் பிறப்பான்
< இராமரே அதனை ஏற்பான்!

இந்தியம் அன்று ஒலிக்கும் அங்கு
உன் ஹிந்தியம் மரித்து மசூதி பிறந்ததென்று!


- கீரனூர் ஷஹான் நூர்

நன்றி :www.inneram.com

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு ஓடுகிறது..

சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..)


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???

11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார்:

“அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லாஹ் உன்னிடம் ஓப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.

ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக் கொள்:

நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.

நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி நிலைபெறும்”

ராமர் கோவில் என்ற பொய்யும், பார்ப்பன இயக்கங்களின் அரசியல் லாபமும் ...

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர் .பாபரை எதிர்த்தவர். . பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார்.

பாபர் மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர்.

புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இராமாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமாயணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள்.

துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர்மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது.

இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார்.

இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசியிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக்பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754-ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்...

பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனிவர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர்களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர்கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக ஏன் அறிந்திருக்கவில்லை?

இவர்கள் யாரும் பாப்ரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் ராமர் கோவில் என்ற ஒன்றை இடித்துத்தான் கட்டபப்ட்டது என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை..

ஆனால் வெள்ளைகாரர்கள் ஆண்ட போது சுதந்திர போராட்ட காலத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு போராடுவதை சிதைக்க வட இந்திய மாநிலங்களில் 1853 ஆம் ஆண்டு அதாவது பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்ட 300 ஆண்டுகளுக்கு பின்னர் பிரிவினைக்காக அரசியல் ஆக்கப்பட்டது.

ஃபைசாபாத்தில் சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆதரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரிமையுடன் வழங்கப்பட்டது.

இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது..எல்லாம் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்சிகள் தான்..

ஆனால் வெள்ளையர்கள் நாட்டை விட்டுப் போனாலும் கூட நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பார்பன கூட்டம் மீண்டும் தங்களது பிரித்தாளும் சூழ்சியை அரங்கேற்ற ஆரம்பிக்கப்பட்டது தான் பாப்ரி மஸ்ஜித் நிலம் பார்பன இயக்கங்களின் பிராமண கடவுள் ராமர் பிறந்த இடம் என்ற பொய்யான வதந்திகள்.

காரணம் இதன் மூலம் மக்கள் இதை பற்றி மட்டும் சிந்திக்கும் போது இவர்கள் ஏகபோகமாக ஆட்சி மற்றும் அதிகாரங்களை அனுபவிக்கலாமல்லவா.அது தானே நம் நாட்டில் நடந்து வருகிறது

.பின்னர் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதை வைத்தே கலவரங்களை நாடு முழுவதும் பார்பான் இயக்கங்கள் அரங்கேற்றி ஆயிரக்கணகான அப்பாவி மக்களை கொன்று ஆட்சியையும் பிடித்தார்கள்..

மீடியாக்களும் தங்களின் பங்குக்கு ராமர் பற்றிய பாமர மக்களுக்கு பக்தியை ஏற்ற நாடகங்கள் உள்ளிட்டவை பரப்படுகிறது .இதன் மூலம் பார்பன இயக்கங்களின் சதி நிறைவேறுகிறது

. ..இந்த கூடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் உண்டு என்பதே மறுக்க முடியாத உண்மை..காங்கிரஸ் மட்டும் நினைத்திருந்தால் நாட்டின் திட்டமிட்ட பார்பன இயக்கங்களின் கலவரத்தையும் தடுத்து இருக்கலாம்..பாப்ரி மஸ்ஜித் தையும் காப்பாற்றி இருக்கலாம்..

இன்னும் ஒரு உண்மையை கூற வேண்டுமானால் வரலாற்றை பார்ப்போமேயானால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தான் பார்பன இயக்கங்கள் கூறியபடி வழிபாட்டு உரிமை என அனைத்தும் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டது எனபதே உண்மை.

எது எப்படியோ இவர்களின் சுய நல அரசியலுக்காக கொல்லப்பட்டது என்னவோ அப்பாவி மக்கள் தான்..இடிக்கப்பட்டதும் நூற்றாண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல்..

பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது.

அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார்.

தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.

சமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

பார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான்

 
‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘

புத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.

அந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர்.

அதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது.

ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை;

இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.

1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன.

மத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

காந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது.

கூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல் திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார்.

இந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.

காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து திட்டமிடத் தொடங்கினர்.

அயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.

பரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

அபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.

அபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர்.

நிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.

இன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.

அபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று, பாபர் மசூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை ஒன்றுமில்லாதவர்களாக்குவது;

இரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது.

இப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர்.

பாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர்.

மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது.

இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள்.

இதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர்.

அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது.

இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர்.

இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன.

அச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள் அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார்.

மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

இந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே, பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன், கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார்.

அதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர்.

நாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது.

ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர்.

மறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவினர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.

பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

காங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார்.

ஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

ஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.

ஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.

அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர்.

தங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.

அன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன.

மசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர்.

தூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும்.

ஆனால் அந்த நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை.

முதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது.

எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது.

அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும். -ஆதவன்

நன்றி:http://www.vinavu.com/2013/09/10/baber-masjid/

**********************************


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


சொடுக்கி படியுங்கள்
பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா? பாபர் மசூதிக்கு போராடுவதேன்?


***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னா!

>> Monday, December 2, 2013

குடிச்சிட்டு பூஜை பண்றான்... சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது.

"நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது" என்று காந்தியடிகள் சொன்னது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பினாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கே.


காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னா!
"நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது" என்று காந்தியடிகள் சொன்னது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பினாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கே.

சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, நூறு நிரபராதிகள் தண்டிக்கப்பட்டாலும் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்திய நீதிமன்றங்கள் மும்முரமாக செயல்படுகின்றனவோ என்று கருத வேண்டியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் என்பவர், காஞ்சிமட பீடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். முந்தைய பீடாதிபதி சந்திரசேகர சுவாமிகள், சங்கரமடத்தின் சொத்துகளை நிர்வகிக்கும் வாரிசுகளாக நியமித்தவர்களுள் சங்கரராமனும் ஒருவர். ஆகம விதிகளை ஜெயேந்திரர் மீறிய விசயத்தில் இவருக்கும் கருத்துமோதல்கள்முற்றி முன்பகை இருந்துள்ளது.

சங்கராச்சாரியார்களுக்கென வகுக்கப்பட்ட ஒழுக்கவிதிமுறைகளும், ஆகம வழிகாட்டல்களும் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரால் மீறப்பட்டபோதெல்லாம், சுட்டிக்காட்டியும் மடத்தில் நடக்கும் விதிமீறல்கள் குறிப்பாக இளம்பெண்கள் நடமாட்டம், நிதிமுறைகேடுகளை அவ்வப்போது புனைப்பெயர்களில் கடிதம் எழுதி அம்பலப்படுத்தி வந்துள்ளார் சங்கரராமன். சங்கராச்சாரியார் கடல்தாண்டக்கூடாது என்ற ஆகம விதிமுறைகளை மீறி ஜெயேந்திரர் சீனாவுக்குச் செல்ல முயன்றதையும் தடுத்துள்ளார். மட்டுமின்றி, மடத்தில் நடக்கும் பாலியல் முறைகேடுகளில் சங்கராச்சாரியார் நேரடியாகவே ஈடுபட்டிருப்பதையும் கண்டித்துள்ளார். இந்நிலையில்தான் சங்கரராமன், வரதராஜ பெருமாள்கோவில் வளாகத்தில் வைத்து வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு கொலை விசாரணையில் நேரடி தடயங்கள் எதுவும் கிடைக்காதபோது, கொல்லப்பட்டவருக்கிருந்த எதிரிகள், முன்பகை, கொடுக்கல்-வாங்கல் ஆகியவை கணக்கில் எடுக்கப்படுவது இயல்பான நடைமுறை. இதன் அடிப்படையிலேயே எவ்வித நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லாதபோதும்கூட, 14 வயது சிறுமி ஆருஷி கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய பெற்றோரையே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள்தண்டனையும் விதித்தது. அவ்வகையில் சங்கரராமனுக்கும் ஜெயேந்திரருக்கும் இருந்த முன்பகைகளின் அடிப்படையிலும், மடம் குறித்து சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எதிராக எழுதிய கடிதங்களின் அடிப்படையிலும் கொலைக்கான முகாந்திரம் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதும் இருப்பதாகக் கருதப்பட்டு, 2004 தீபாவளியன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கொலைக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படும்போது பேணப்படும் அத்தனை சட்டநடைமுறைகளும் மீறப்பட்டு, நீதிமன்றத்திற்குப் பதிலாக நீதிபதியே சங்கராச்சாரியாரின் வீட்டிற்கு வந்தும், விடுமுறை தினத்தன்று விசாரித்ததும் இந்த வழக்கில்தான் நடந்தேறியது. மட்டுமின்றி சிறையில் மலம் கழிக்க வாழை இலை, வாய்க்கு ருசியாக சமைக்க மடத்தின் ஆஸ்தான சமையல்காரர்கள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் ஓரிரு நாட்கள் சிறையிலிருந்து ராஜமரியாதையுடன் பிணையில் வெளிவந்தனர் சங்கராச்சாரியார்கள்.

அதன்பிறகு, வழக்கை இழுத்தடிப்பதிலாகட்டும், வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் தொலைபேசியில் நேரடியாகவே பேரம் பேசுவதிலாகட்டும் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அரசியல்வாதிகளுக்கேயுரிய சாதுரிய அணுகுமுறைகளைக் கையாண்டதோடு, வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக்கூறி பாண்டிச்சேரிக்கு மாற்றக்கோரி குற்றம் சாட்டப்பட்டவருக்காக எவ்வளவு வளைந்து கொடுக்கமுடியுமோ சட்டம் அவ்வளவு வளைந்து கொடுத்து, 128 சாட்சிகளில் 81 பேரின் சாட்சியங்கள் ஏற்கப்பட்டு, எட்டாண்டுகள் இடைவெளிக்குள் அத்தனைபேரும் பிறழ் சாட்சியங்களாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு பாண்டிச்சேரி நீதிமன்றம் மனுநீதி மன்றமாகவே திகழ்ந்துள்ளது.

இது ஒருப்பக்கமிருக்க,

இந்துக்களுக்காகவே பிறப்பெடுத்துள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் பாஜக பரிவாரங்கள் மட்டுமின்றி கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்று வசனமெழுதிய கருணாநிதியும், அவதூறு வழக்குகளுக்காகவே அவதாரமெடுத்துள்ள ஜெயலலிதா உள்ளிட்ட எவருமே சங்கராச்சாரியார்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துசொல்லவில்லை. காரணம் ஏற்காடு இடைத்தேர்தலில் கிடைக்கும் 2% உயர்சாதி வாக்குகள் குறைந்துவிடக்கூடாதே என்ற கவலை!

இவர்கள் தவிர ஏனைய அரசியல்வாதிகளுக்குச் சிவாஜி சிலையில் காக்கா எச்சமிடுவது குறித்த கவலை! இந்து என்றால் திருடன் என்றதற்கும், ராமர் எந்தக்கல்லூரியில் இஞ்சினியர் பட்டம் பெற்றார் என்றதற்கும் நாக்கை அறுக்கச்சொன்ன பரிவாரங்கள் மட்டும் சங்கராச்சாரியார்களின் விடுவிப்புக்கு ஆனந்தக்கூத்தாடியும், வழக்கு தொடுத்த ஜெயலலிதா மடத்திற்குச் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கொக்கரிக்கின்றனர்.
சங்கராச்சாரியார்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது இந்து மதத்திற்கும், துறவிகளுக்கும் கிடைத்த வெற்றி என்கிறார் ராம.கோபாலன்! சங்கரராமன் என்ன பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டிவந்தவரா? அல்லது இந்தியன் முஜாஹிதீன் காஞ்சிபுரம் பகுதி பொறுப்பளாரா? அவரும் இந்துதானே என்கின்றனர் சாமான்யர்கள்!

இந்திய சட்டங்களில் நீதி கிடைக்காது என்பதை உலகுக்கு உணர்த்திய சங்கராச்சாரியார்களுக்குப் பாரத ரத்னா வழங்குவதே இந்து தர்மப்படி சரியானதாகும்! -எழில் பிரகாசம்-

Source:http://www.inneram.com/opinions/readers/3697-barath-ratna-for-kanji-sankarasariyar.html

சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்!
சங்கரராமன்.... ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்து விடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்... ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!

ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான 'படி இட்லி' - புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்... கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன். பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். 'இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க... இதுமேலயும் தப்பு இருக்கு,' என்றனர்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான்.

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்... ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும். கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்! தகவல்: சங்கர்

Source:http://www.inneram.com/thoughts/others-best/3702-sankararaman-and-sankaramadam.html

எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டு இருக்கார்! என் பிள்ளைகளையும் கொல்லப்போவதாக மிரட்டினார்கள்! சங்கரராமன் மனைவி பரபரப்பு பேட்டி - ஜூனியர் விகடன்
3369 நாட்கள்... 24 குற்றவாளிகள்... 1873 பக்க குற்றப்பத்திரிகை... 189 அரசு தரப்பு சாட்சிகள்... என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கரராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.எஸ்.முருகன் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்தார்.

'சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ் சாட்சியாக ஆனார்கள்’ என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். ''சங்கரராமன் குடும்பத்தினரே சரியாக ஒத்துழைக்கவில்லை'' என்று அரசு வழக்கறிஞர் தேவதாஸ் சொல்லி இருக்கிறார். தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் சங்கரராமன் குடும்பத்தினரைச் சந்திந்தோம். கண்ணீரோடு முடங்கிக்கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். 'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத்துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம்.

ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக்கொண்டு தொடர்கிறார். ''போலீஸ்காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப்போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன்.

அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்கலாம். ஆனா, போலீஸ்காரங்க, சர்வசாதாரணமா பஸ்ல திரும்பிபோகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் பஸ் ஏறினேன்.

அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக்கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு?

அநாதையாதானே இருக்கோம்? இனி நமக்கு யாரும் பாதுகாப்பில்லைனு முடிவுபண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?'' என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.

''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார் அவரது மகன் ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா?

2001-ல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, 'மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் புகார்களாக எழுதினார். இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல் துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டுசென்றனர்.

அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும். உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின்போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச்சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலைபாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.

சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசினோம். 'இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.'' என்று சொன்னார்.- எஸ்.கிருபாகரன்- JUNIOR VIKATAN

Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89864

சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதியின் லீலைகள்


வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல் களியாட்டங்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

தண்டத்தை போட்டு விட்டு ஓட்டம்:

1986 இல் ஜெயெந்திரன் தண்டத்தை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்து கொண்டு ஓடினார். ஒரு மாததிற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடி போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை , சிபிஐ கொண்டு தேடி கண்டு பிடித்தனர். பின்னர் தலைகாவிரிக்கு போய் அந்த பெண்ணை பிரித்து வந்த தகவல்கள மிகவும் ஆச்சரியமானவை. அந்த கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இது தான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

பெண் எழுத்தாளரை விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஜெயந்திரன்:

பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அணுராதா ரமணன் கொடுத்த பேட்டி:

1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.

சொர்ணமால்யாவுடன் குஜால்:

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி.

"காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கர மடத்துடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரனின் உண்மையான முகம் தெரியும்.

நன்றி: தட்ஸ்தமிழ், தினபூமி

SOURCE: → http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html
***********************



***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP