காந்தியின் பேத்தி
>> Monday, December 30, 2013
குஜராத் கலவரங்களை பற்றி பேசும் போது, மோடியின் முகத்தில் எந்த வருத்தமும் தெரியவில்லை என மகாத்மா காந்தியின் பேத்தி குற்றம் சாட்டியுள்ளார்.காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத்தின் முதல்வராக, மாநிலத்தின் பிரஜையாக இருந்து கொண்டு அரசியல் பேசும் மோடியின் பேச்சை கேட்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அங்கு நடைபெற்ற கலவரம் குறித்தும், வன்முறை சம்பவங்கள் குறித்தும் எப்படி ஒருவரால் இதுபோல் முகத்தில் எந்த வலியோ, வேதனையோ இல்லாமல் பேச முடியும் என்று தெரியவில்லை..
அவர் என்ன மாதிரியான மனிதர். அவரால் எப்படி தனது மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வன்முறையை இப்படி இயந்திரத்தனமாக அவரால் பேச முடிகிறது.
கலவரத்துக்கு பிறகு நான் அங்கு நிவாரண முகாம்களை சென்று பார்த்தேன். அப்பப்பா என்ன ஒரு பயங்கரமான காட்சிகள். என்னால் சுமார் 6 மாதத்துக்கு தூங்க முடியவில்லை. மோடி நாட்டின் பிரதமராக வருவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. நான் யார் பெயரையும் முன்மொழிய விரும்பவில்லை. அதிகாரத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும், மக்கள் மீது தங்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சியும் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தாரா காந்தி கூறினார்.
0 comments:
Post a Comment