**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நீதி மறு(றை)க்கும் இந்திய ஊடகத்துறை.

>> Tuesday, March 11, 2014

சாமியார்கள் நடிகைகளின் அந்தரங்கங்கள், ஆரூடம், பாலியல் வக்கிரங்கள், பெண்களின் ஆபாச அசைவுகள், மக்களை பிளவுபடுத்துதள், தரகு வேலை பார்ப்பது மூலம் பணம் சம்பாதிப்பதே ஊடகங்களின் முக்கியக் குறிக்கோளாக உள்ளன.

இரத்தம் சிந்தாத மீடியாக்கள்.

1. அரசியலமைப்பு, சட்ட ஒழுங்கு, நீதிமன்றம், ஊடகம் ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் நான்கு மாபெரும் தூண்கள்.

2. சட்ட - ஒழுங்கு மனோ இச்சையுடன் செயல்பட்டாலோ, நீதி மறுக்கப்பட்டாலோ, அரசியலமைப்பு கார்ப்பரேட்டுகளின் காசுக்கு விற்கப்பட்டாலோ எதற்கும் வளைந்து கொடுக்காமல், மக்களுக்காக துணிச்சலுடன் அதிகாரவர்க்கத்தைக் கேள்வி கேட்கும் இடத்தில் ஊடகங்கள் உள்ளன.

3. இந்தியாவில் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.. அவர்களுக்காக நீதி கேட்கும் துணிச்சல் தனி நபர்களிடமோ குழுக்களிடமோ காணப்படுவதில்லை. அவ்வாறு அபூர்வமாக சிலர் இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்தால் அடக்கப்படுகின்றார்கள்.

4. ஊடகத்துறை மட்டுமே எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் செயல்படத்தக்க அளவுக்கான அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் அதன் இன்றைய நிலை நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு எதிர் மறையாக மாறி இருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் மீடியாத்துறை. ....

1. மக்களின் கவனத்தைத் திருப்பி ரேட்டிங்கை உயர்த்துவதும் பணம் சம்பாதிப்பதும், அதிகாரவர்க்கத்திற்குத் தரகு வேலை பார்ப்பதுமே இன்றைய இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை தங்கள் முழுநேரப் பணிகளாக செய்து வருகின்றன.

2. இந்தியாவின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் வலம்வருகின்றனர். அவர்களின் பிடியிலேயே தொலைகாட்சி செய்தி நிறுவனங்கள் உள்ளன.

அத்தகைய ஊடகங்களில் வரும் செய்திகள் ஒருதலைபட்சமாகவும் ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் நிலையிலோ இல்லாமல் இருக்கின்றன.

நீதிக்கு எதிராக நவீன ஊடகத்துறை

1. நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் கடன் தொல்லை காரணமாக 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர் தம் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி ஊடகங்கள் வாய் திறக்காமல் மௌனம் காக்கின்றன.

2. இந்தியாவில் இருக்கும் விபச்சார விடுதிகள், அதிகாரப்பூர்வமற்ற பெண்கள் சிறைச்சாலைகளாகவே செயல்படுகின்றன. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் தாதாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களின் கண்காணிப்பிலேயே பெரும்பாலான பெண்கள் விபச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்கு அரசாங்கமே வக்காலத்து வாங்குவதும் அந்தப் பெண்களுக்கு நடக்கும் அவலங்களைத் துணிச்சலோடு சொல்ல மறு(றை)ப்பதும் ஊடக துறைகளின் மற்றொரு அவல நிலையே!

3. இந்தியாவில் குடிகாரர்களின் விழுக்காடு அதிகமாக கொண்ட மாநிலம் என்ற அந்தஸ்தைத் தமிழ்நாடு எட்டிப்பிடித்து வெகுகாலமாகிவிட்டது. அதிக சாலை விபத்துகள் மதுவாலேயே நிகழ்கின்றன என்று புள்ளி விவரம் சொல்கின்றது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும்கூட காமடியாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களும் மாணவர்களும் குடிப்பதை ஃபேஷனாக காட்டாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. இந்த அவலநிலை குறித்து எந்த முக்கிய ஊடகமும் கேள்வி கேட்கும் நிலை இன்று இல்லை; கேள்வி கேட்கும் நந்தினி போன்ற தனிநபர்களையும் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.

4. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றது. சட்ட ஒழுங்கைக் காக்கவேண்டிய காவல் நிலையங்களிலேயே அதிகமான வன்புணர்வுகள் நடப்பதும் தவறுசெய்தவர்கள் தண்டனையை விட்டு சர்வசாதாரணமாக தப்பிப்பதும், அதிகாரவர்க்கம் அதற்கு துணைபுரிவதும் ஊடகங்களில் கடைசிபக்க விமர்சனங்களாகக் கூட வருவதில்லை.

5. தலித்களின் உரிமை மறுப்பு, சாதியக்கொலைகள், தலித்பெண்கள் வன்புணர்வு, தலித்கள் மீதான சித்ரவதைகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் மிகப் பெரும்பாலானவையும் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன.

6. அதிகாரவர்க்கத்தாலும் ஃபாசிஸ சக்திகளாலும் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம். இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்; முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு கலவரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன; அக்கலவரங்களிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக இளைஞர்களே பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையிடப்படுகின்றனர்.

7. போலி என்கவுண்டர், வெடி(க்காத) குண்டுவழக்கு, தீவிரவாதம்... இந்த வார்த்தைகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டுமென சொந்தமாக்கபட்டுவிட்டது. இந்திய முஜாஹிதீன் என்று அடிக்கடி சொல்லும் மீடியாக்கள், உண்மையைக் கண்டறிய முனையாமல் காவல்துறையின் மவுத் பீஸ்களாக மாறிவிட்டன.

8. இந்திய உள்துறை அமைச்சரே 10 ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுகிறார்; மாலேகான் முதல் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு வரை அனைத்திலும் ஈடுபட்ட பயங்கரவாதி சுவாமி அசிமானந்தா, குண்டுவைக்க தமக்கு டைரக்சன் தந்ததே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தான் என வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனாலும், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட, இல்லாத இந்தியன் முஜாஹிதீன் பெயரையே திரும்பத் திரும்ப உச்சரிக்கும் இந்திய ஊடகங்கள் இந்திய தேசத் தந்தையையே படுகொலை செய்த கோட்சேயை வளர்த்துவிட்ட பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் குறித்து வாயைத் திறக்கவே அஞ்சுகிறது!

9. மோடியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை, இடிக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜித் வழக்கு, முசாபர் நகர் கலவரம் பற்றிய தெளிவான செய்திகள் முதலானவற்றைப் பெரும்பான்மை ஊடகங்கள் மறைத்து விட்டதோடு, நடிகை வீட்டு நாய்க்குட்டியின் பேதி மஞ்சள் கலரில்... போன்ற செய்திகளே அவைகளுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டன!

10. அப்சல் குரு போன்ற தனி நபராக ஆனாலும், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமாக ஆனாலும் முஸ்லிம்கள் சார்ந்த விசயம் எனில் எந்தக் குற்றமும் நிரூபிக்க முடியாத நிலையில்கூட அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதிலேயே ஊடகங்கள் முனைப்பு காட்டுகின்றன.

11. இந்தியாவில் வங்கிகளின் அட்டகாசங்கள் பற்றியும் கடன்களைத் திரும்பப்பெற நடத்தும் ரௌடிசங்கள் பற்றியும் எந்த மீடியாக்களும் அக்கறை கொள்வதில்லை; பாதிக்கப்படுவது மாணவனாக இருந்தாலும் சரி; விவசாயியாக இருந்தாலும் சரி, அவற்றைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை!

12. வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு முதலான மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்கள் பற்றி மக்களின் உணர்வுகளை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.

பசியால் மட்டும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 23 லட்சம் பேர் பலி ஆகின்றனர்.அவர்களின் பசிகளின் வலிகளை எந்த ஊடகத்துறையும் ஓங்கி உரைக்கவில்லை.

13. தங்களுக்குக் கிடைக்கும் லஞ்சம், ஊழல்கள், கருப்பு பண விவகாரம் முதலானவை தொடர்பான செய்திகளை வைத்து மிரட்டி பேரம் பேசும் தரம்கெட்ட மூன்றாம்தர தாதாக்கள் ரேஞ்சுக்குச் சொல மீடியாக்கள் போய்விட்டன! அவை தொடர்பில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையோ அரசியல்வாதிகளையோ மக்கள் மன்றத்தில் நிறுத்துவது இல்லை..

14. காஷ்மீர், அஸ்ஸாம் முதலான மாநில மக்களின் துயர்களை அருந்ததி ராய் போன்ற சில தனிமனிதர்களே தொடர்ந்து போராடி செய்திகளாக முன்வைக்கின்றனர். இந்திய ஊடகங்கள் இவர்களைப் பற்றி எந்த உண்மை செய்திகளையும் முன் வைக்காமல் தொடர்ந்து ஊடக அராஜகம் செய்து வருகின்றன.

அபின்களாக மாறும் மீடியா நிகழ்ச்சிகள்

1. கிரிக்கெட், தரங்கெட்ட சினிமாக்கள், கவர்ச்சி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள், கேவலமான இரட்டை அர்த்த நையாண்டிகள் மற்றும் மதி மயக்கும் இசை நிகழ்ச்சிகளே அனைத்து மீடியாக்களையும் ஆக்கிரமித்துள்ளன.

2. பாலியல் வக்கிரங்கள் மற்றும் பெண்களின் ஆபாச அசைவுகள் மூலம் டிவி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் முக்கியக் குறிகோளாக உள்ளன.

3. சாமியார்களின் அந்தரங்கங்கள், ஆரூடம், மருத்துவம் என்ற பெயரில் பாலின வக்கிரம், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கான மனை நிலங்கள் விற்பனை போன்ற மக்களின் சிந்தனையை எவ்வகையிலும் உயர்த்தாத நிகழ்ச்சிகளே தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.

உரத்த சிந்தனை

1. உலக மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமேயுள்ள யூதர்கள் உலகில் 95% க்கும் அதிகமான ஊடகங்களைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.

2. அந்த ஊடகங்களில் சொல்லும் செய்திகளும் அதன் ஊடகவியலாளர்களின் பெரும்பாலோரின் நிலையும் இவர்கள் மனப்பதிவையும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டவை.

3. ஆதிக்க, ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட இவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களிலிருந்து வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.

4. இந்தியாவிலுள்ள ஊடகங்களில் பெரும்பான்மையும் யூதர்களின் வழிமுறைகளை அடியொற்றும் பார்ப்பன உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

5. அதிகாரவர்க்கத்திற்குத் துணை நிற்கும் இது போன்ற மீடியாக்கள் பாதிக்கபட்ட மக்களின் உணர்வுகளைத் தொட்டுக்கொள்வதற்காகக்கூட வெளிச்சமிட்டுக் காட்டுவதில்லை.

6. உலகில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் மக்கள் அதை குறித்து சிந்தித்து கேள்விகேட்டுவிட முடியாதபடி உலகம் முழுக்க, மக்களின் சிந்தனைகளை நன்மையான விசயங்களிலிருந்து மாற்றி அடிமைப்படுத்தும் ஒரேமாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

7. இஸ்ரேல், அரபு நாடுகளின் மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. சிரியா, பாலஸ்தீன், எகிப்து போன்ற நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிகளை எல்லாம் திட்டமிட்டு மறைக்கின்றன.

8. இந்தியாவில் அடக்கு முறைக்கு உட்பட்ட மக்களின் அழுகுரல்களை இந்திய மீடியாகளின் இசை நிகழ்ச்சிகள் கேட்க விடுவதாக இல்லை

9. அரசின் தவறான திட்டங்களால் குடிமகன் உணவின்றி செத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஊடகங்கள், நடிகைகளின் உள்ளாடைகள் பின்னால் தமது செய்தியாளர்களை அனுப்பி தமது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன.

நமக்கான மாற்றம்

1. துணிச்சலான தத்துவ அறிஞர்கள் மக்களின் உணர்வுகளைச் செய்திகளாக எடுத்துரைத்ததால் பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி எல்லாம் தோன்றி மக்களை அடிமை தனத்திலிருந்து விடுவித்தது. ஒடுக்கப்படும் சமூகம் அதிகார வர்க்கத்திடமிருந்து விடுதலை பெற இன்றைய காலத்தில் நீதிக்கு துணை புரியும் ஒருவன் ஊடகவியலாளனாக மாறுவதைத் தவிர வேற வழி இல்லை...

2. ஆனால், உண்மையிலேயே மக்களுக்காக... நீதிக்காக நிலைகொள்ளும் அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள்..... அல்ல அல்ல... உண்மையான போராளிகள்... ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் மக்களுக்கு எதிராக நடந்த அக்கிரமக்காரர்களின் யுத்தங்களிடையே ஊடுருவிச் சென்று நீதிக்காக, உண்மையான செய்திகளை உலகின் முன்கொண்டுவருவதற்காக வேண்டி தம் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்..

3. எவ்வகையான ஊடகம் இந்தியாவுக்குத் தேவை என்பது இனி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.

4. நீதிக்கான போரில் நீதியை நிலை நிறுத்த பாடுபடும் ஊடகவியலாளனே உண்மையான போர்வீரன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

5. ஊடகம் ஒரு மாபெரும் இயக்கம். அது, நீதிக்கான சத்தியக் கொள்கை இயக்கமாக பரிணமிக்கும் பொழுதே மாபெரும் வெற்றிபெறுகின்றது.

6. பணமும் அதிகாரமும் முதலீடாக வைத்து உருவாக்கிய மீடியாக்களுக்கு மத்தியில் உயர்ந்த சிந்தனையையும் அறிவையும் முதலீடாக வைத்து ஊடகங்கள் உருவாகும் பொழுதே அநீதிக்கான கதவுகள் உடைத்து எறியப்படும் .... அதுதான் உண்மையான ஊடக தர்மமும் கூட!

அபூஷேக் முஹம்மத்

Ref: http://www.inneram.com
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

1 comments:

VANJOOR March 23, 2014 at 7:22 AM  

எழுத்தாளர் புதின் அவர்களே,

எனது பதிவுகளிலிருந்து நகல் எடுத்து தாங்கள் பயன்படுத்தியது பற்றி மகிழ்ச்சி.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP