**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி !

>> Monday, May 31, 2010

" நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் ! ஆனால், நீங்கள் அழுதால், நீங்கள் மட்டும் தனியாகத்தான் அழுதாக வேண்டும்!'' உலகத்தில் நாம் கேள்விப்பட்ட பொன்மொழி இது.

இதை ""முறுவலித்து முகம் மலர்ந்து நோக்குங்கள் ! உடனே உலகமும் அப்படியே உங்களை முறுவலித்து முகம் மலர்ந்து நோக்கும் !

ஆனால், நீங்கள் வெறுத்து முகத்தை முறுக்கிக் கொண்டால் நீங்கள் மட்டும் தனியாய் அப்படி வெறுத்து முகத்தை முறுக்கிக் கொண்டிருக்க வேண்டும்'' என்று சொல்லலாம்.

முகம் மலர்ந்து முறுவலிக்கும்போது ஒரு புன்னகையானது, இன்பம், மகிழ்ச்சி, அன்பு, தயை ஆகிய பேறுகளை வெளிப்படுத்துகிறது. அது பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதாகும். நன்றி பரிமாறிக்கொள்வதாகும். வாழ்த்திக் கொள்வதாகும்.

ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் நட்பின் சைகை ஆகும். முறுவலித்துக் காட்டும் அந்த முக மலர்ச்சியானது ""ஒட்டுவார் ஒட்டி'' யாகும்.

அது ஒளிமயமான ஆளுமையுடனும், உவகைமயமான உணர்வுடனும் ஒருவரையொருவர் ""தொடுவதன்'' மூலம் பரவுகிறது. இந்த விருப்பத்துக்குரிய பழக்கம் உண்மையிலேயே ""கவர்ச்சி''கொண்டதாகும்.

உங்கள் இல்லத்திலாயினும் சரி, உங்கள் அலுவலகத்திலாயினும் சரி, பொருள் வாங்கும் கடையிலாயினும் சரி, அல்லது வழி நடக்கும் நடையிலானும் சரி உங்கள் நாளை முறுவல் ததும்பும் முக மலர்ச்சியுடன் தொடங்குங்கள் !

சற்றே கவனியுங்கள் ! நீங்கள் பார்க்கிற ஒவ்வொருவரும் உங்களுக்கு அறிமுகமற்ற அந்நியர் ஒருவரும்கூட ஒரு மகிழ்ச்சியான புன்னகையை உங்களுக்குப் பதிலாக அளிக்கிறாரா, இல்லையா ? பாருங்கள் !

இந்தப் பரந்த மனப்பான்மை கொண்ட, மகிழ்ச்சி தோய்ந்த தோற்றத்தைப் போகுமிடமெல்லாம் உங்களுடன் நீங்கள் கொண்டு சென்றால், இது எவ்வளவு தூரம் உங்களுக்கு உதவுகிறது என்று தெரிந்து நீங்களே வியப்படைவீர்கள் !

உங்கள் தொழில் இதனால் சுலபமாகும். உங்களைச் சார்ந்த முழுச் சூழலும் மாறி விடும். உங்களுடன், ஒத்துவராதவர்களும்கூட, மகிழ்வையும், மனத்துணிவையும் பரப்பும் இந்த உங்கள்முயற்சியில் இணங்கி ஒத்துவருவார்கள்.

இது உங்கள் வாழ்வில் அற்புதமான வழியில் மனநிறைவான வழியில் பிரதிபலிக்கும்

நன்றி: மஞ்சரி
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP