இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ? ஏன்? தீர்வு?
>> Thursday, May 6, 2010
அதற்கு என்ன ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
இப்போதெல்லாம் இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி வந்து, தொல்லை கொடுக்கிறதே ஏன்? அதற்கு என்ன தீர்வு?
டாக்டர் விஜயா (பிஸியோதெரபி நிபுணர்)
``ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.
அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும்.
வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.
அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும்.
இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.
ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.
மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.
கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது
என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.
மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு
. சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் அன்பு நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்
. அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.
மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது.
ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது.. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங் + உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.''
+++++++++++++++++++++
என்னுடைய வயது 25. கல்யாணம் ஆகி 5 மாதங்கள் ஆகின்றன. என்னுடைய வேலை (வேலையில் சுமார் 6 மாதம் இருந்தேன்) செல் ஃபோன் மூலம் பல நபர்களைத் தொடர்பு கொண்டு மணிக்கணக்காகப் பேசும் வேலை.
என்னுடைய ப்ராப்ளம் மே 2007 தொடங்கிற்று. எனக்கு என்னையும் அறியாமல் தானாக கண்கள் மூடிக்கொள்ளும். சில சமயம் இரண்டு விழிகளும் வண்டிச் சக்கரம் சுற்றுவது போன்ற உணர்வு. இது பத்து நாட்கள் இருந்து போய்விட்டது.
இந்தப் பிரச்னை மீண்டும் நவம்பர் மாதம் 2007 எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புருவத்திற்கும் கண்களுக்கும் இடையில் heaviness ஆக இருக்கும்.
சில சமயம் இடது கால், இடது பக்க முகம், தலைகளில் ஒருவிதமான மரத்துப் போகும் தன்மையும் எறும்பு ஓடுவது போலவும் இருக்கும். திடீர் திடீரென்று நடுமண்டையில் ஒரு மோட்டார் ஓடுவது போல `கிர்' என்று சுற்றும். இதனால் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.
இதைத் தொடர்ந்து ப்ரெய்ன் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹார்ட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை எல்லாம் normal report ஆக வந்தது.
இதற்குப் பிறகு என்னை யாரோ தள்ளிவிடுவது போலவும், ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வுகள். காதுகளில் பயங்கர அழுத்தம், காதுகளில் Popping so and. இந்த சமயத்தில் எனக்கு accute cold and cough இருந்தது.
ENT மருத்துவர்கள் Vertin, Alprax depression மாத்திரைகள் அளித்தார்கள்.
பிறகு மார்ச் மாதம் ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த டாக்டர் எனக்கு Vestibalar nueronitis என்று சொல்லி மருந்து தர ஆரம்பித்தார். அவரது மருந்து 3 மாதம் எடுத்துக் கொண்டு 50% grip கிடைத்தது.
ஆனால் ஒரு hill station போய் வந்த பிறகு காதில் அழுத்தமும், காலில் கிடைத்த grip-ம் போய்விட்டது. ஒரு நாளும் வீட்டில் தங்காது சுற்றிக் கொண்டிருந்த நான், இப்பொழுது நிற்கவே பயப்படுகிறேன். நான் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது normalஆக இருக்கேன்.
பின்குறிப்பு : யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் ரொம்பவும் மெலிதாக என் இடது காதில் சத்தம் கேட்கும். இன்று வரை தலைசுற்றியும் வாந்தி எடுத்ததேயில்லை.
இந்த மாதிரி அனுபவத்தை யாராவது உணர்ந்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ எந்த விதமான வைத்தியமாக இருந்தாலும் என் கஷ்டத்திற்கு கைகொடுக்க உங்களை மனமார உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத மும்பை சகோதரி
டாக்டர் ரவி ராமலிங்கம், (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)
``நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளைப் பார்க்கும்போது உள்காதில் தான் பிரச்னையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அதில்தான் பிரச்னை உள்ளதா என்பதை முழுமையாகக் கண்டறிய ENG எனப்படும் எலக்ட்ரோ நைஸ்டேக்மோ க்ராஃபி என்னும் சிறப்புப் பரிசோதனையில் கண்டறிந்து விடலாம்.
எல்லா பரிசோதனையும் செய்த நீங்கள் இந்த ENG பரிசோதனை செய்யவில்லை. அந்தப் பரிசோதனையை செய்தால்தான் உங்களுக்கு ஏற்படும் மயக்கம் ஏன் என்பதையும் அறிய முடியும்.
சிலருக்கு கண், மூளை, கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் கூட மயக்கம் வரலாம். பீ.பி., ஷுகர் கூட மயக்கம் வரச் காரணமாக அமையலாம். காது கேட்கும் திறன் நார்மல் என்கிறீர்கள்... இருந்தாலும் திரும்பவும் ஆடியோ மெட்ரி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அதுவரை Vertien மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள், கன்ட்ரோலாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வதோடு உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமான விஷயம் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. மனதில் ஏற்படும் டென்ஷன்களை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி அந்த ENG பரிசோதனையையும் செய்து பார்த்துவிடுங்கள்.''
THANKS TO KUMAUDAM HEALTH
+++++++++++++++++++++++++++
0 comments:
Post a Comment