தலைவலி.வகைகள்.ஏன்? வகைகள்? கட்டுப்படுத்திவிடலாமா? அடிப்படை தகவல்கள்.
>> Tuesday, May 4, 2010
ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?
எவ்வளவு பொதுவாக ஏற்படுகிறது? மாத்திரைகளால் கட்டுப்படுத்திவிடலாமா? எத்தனை வகைகள் இருக்கிறது? எந்தவிதமாக இருக்கும் போது ஒரு டாக்டரைச் சந்திக்க வேண்டும்? நாம் சாப்பிடுகிற உணவு தலைவலியை உருவாக்க கூடுமா?
உலகம் முழுக்க இப்பொழுது கவனிக்கப்படுகிற பிரச்னை, இல்லாதது போல பிரச்னை ஆகிற விஷயங்களில் மருத்துவ உலகின் கவனத்தைக் கவர்வது தலைவலி. தலைவலியா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
ஆனால் உண்மை அதுதான். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகில் முன்னணியில் இருக்கிற டிஸ்எபிலிடி ஏற்படுத்தும் முதல் இருபது காரணங்களில் மைக்ரேன் தலைவலியும் இருக்கிறது!
தலைவலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்துவிட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்துவிட்டார்கள்.
டாக்டர் ஜெயஸ்ரீ கைலாசம் இதில் சென்னையில் கவனத்திற்கு உரியவர். இன்டர்னல் மெடிசனில் அமெரிக்க பட்டம் பெற்றவர். சிக்காகோ, ஆஸ்டின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றவர். ஹாஸ்டன் தலைவலி மருத்துவமனையில் பல்வேறு ஆய்வுகளில் பங்கு பெற்றவர். தற்சமயம் அப்பல்லோ மருத்துவமனையில் பணி.
தலைவலி பற்றி சில அடிப்படையான கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் எளிமையான பதில்கள் இவை...
தலைவலி என்பது எவ்வளவு பொதுவாக ஏற்படுகிறது?
மிக மிக அதிகமாக, மிக மிகப் பொதுவாக ஏற்படுகிற பிரச்னைகளில் தலைவலி தலையானது! உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்திக்கும் மிக அதிகமான பத்து காரணங்களில் தலைவலியும் ஒன்று என்பதை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆனால் உண்மை அதுதான்.
தவிர பொதுமக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற பிரச்னைகளில் தலைவலியும் அதிகமாக இருக்கிறது என்பது மற்றொரு ஆச்சரியமானது!
தலைவலியில் எத்தனை வகைகள் இருக்கிறது?
இரண்டு வகை. முதல் வகையை ப்ரைமரி ஹெட் ஏக் என்கிறார்கள். உடல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. இந்த நேரத்தில் ஏற்படும் தலைவலியை ப்ரைமரி ஹெட்ஏக் என்கிறோம்.
மற்றபடி மூளையில் கட்டி, அடிபட்டிருத்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.
எந்தவிதமாக இருக்கும் போது ஒரு டாக்டரைச் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்துவீர்கள்?
ஒரு தலைவலி கூடவே துணையாக பார்வையில் மாற்றம், இரத்த ஓட்டம் குறைந்த நமநமப்பு, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக்கட்டி, இரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.
மைக்ரேன் தலைவலி எப்படி இருக்கும்?
தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலிதான் இந்த மைக்ரேன் தலைவலி. தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி, வெளிச்சம், தாங்க முடியாத நிலை என கலந்து வரும் இந்தத் தலைவலியில். இந்த வகை தலைவலி 18 சதவிகித பெண்களையும், 6 சதவிகித ஆண்களையும் தாக்குகிறது.
முதல்தர தலைவலியில் ஏதேனும் வகைகள் இருக்கின்றனவா?
இருக்கிறது. இதில் மைக்ரேன் தலைவலி வருகிறது. டென்ஷன் டைப் தலைவலி வருகிறது. கிளஸ்டர் ஹெட் ஏக் என்று சொல்லக் கூடிய கொத்துத் தலைவலி போன்றவை கூட வருகிறது.
முதல் வகை தலைவலிக்கு பிரதான காரணமாக இருப்பது எது? டென்ஷனால் வருகிற தலைவலிதான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது.
இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி மூன்றில் இரண்டு பங்கு ஆண்களையும், ஏறக்குறைய 80 சதவிகித பெண்களையும் பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது.
மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது. டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.
கொத்து தலைவலி எப்படி இருக்கும்?
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களைவிட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது.
மைக்ரேன் வகை தலைவலியைக் கண்டறிய ஏதேனும் பரிசோதனைகள் செய்ய வேண்டுமா?
இந்த வகைத் தலைவலியைக் கண்டறிய குறிப்பிட்ட பரிசோதனைகள் எதுவும் இல்லை. மற்ற கவலைப்படக் கூடிய காரணங்களால் தலைவலி ஏற்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் அறிந்து தவிர்க்க சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அடிப்படை இரத்தப் பரிசோதனைகள் சிலருக்குத் தேவைப்படலாம்.
அடிக்கடி மாத்திரை சாப்பிடுவதால் கூட சிலருக்கு தலைவலி ஏற்படும் என்கிறார்களே?
ஆம். உண்மைதான். சிலர் இஷ்டத்திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும். இந்த வகை தலைவலியிலிருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை.
ஏன் சிலருக்கு மட்டும் தலைவலி வருகிறது. சிலருக்கு வருவதில்லை? இதற்கு காரணம் மரபு வழி வருகிற சிக்கல்கள்தான். குடும்ப வழி சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் தப்பிக்கிறார்கள். சர்க்கரை நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.
மைக்ரேன் தலைவலி ஒருவித மனநோயின் விளைவா?
நிச்சயமாக இல்லை. இந்த வகை தலைவலி உடல் ரீதியான மாற்றங்களால் மட்டுமே ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு துண்டுகோலாக இருக்கலாம்.
தலைவலிகளுக்கு எந்தவிதமான சிகிச்சைகள் செய்யப்படுகின்றன?
அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், உணவு பற்றிய தகவல்கள் வழி தலைவலிகளைக் குறைத்தல்,. போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், பிஸியோதெரபி மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்கவழக்கப் பயிற்சிகள்.
ப்ரைமரி ஹெட்ஏக் என்கிற காரணங்களற்ற முதல் வகை தலைவலிகளை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும். முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைவலியின் அளவு, திரும்ப வரும் அளவு போன்றவற்றை நல்லவிதமாக கட்டுக்குள் கொண்டு வந்து அவருடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் திறனை அதிகரிக்க முடியும். வரவே வராமல் இந்த வகைத் தலைவலிகளைத் துரத்துவது எளிதல்ல.
நாம் சாப்பிடுகிற உணவு தலைவலியை உருவாக்க கூடுமா?
கூடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது. சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். எம்எஸ்ஜி இருக்கிற அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான்.
மாத்திரைகள் இன்றி தலைவலிகளைச் சமாளிக்க இயற்கையான வழிகள் ஏதாவது இருக்கிறதா?
இருக்கிறது. சரியான உணவு, நல்ல தேவையான தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.
தலைவலியை மாத்திரைகளால் கட்டுப்படுத்திவிடலாமா?
எப்போதாவது தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் சமாளிக்கலாம்.. ஆனால் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்னை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்.
248. ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?
********************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

1 comments:
அருமையான தகவல் .
Post a Comment