**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

வேசியாகி கீழிறங்கும் ஊடகக் கயமை!

>> Tuesday, August 12, 2014

பெரும்பான்மையான ஊடகங்கள் உலக அளவில் யூத சக்திகளின் கட்டுப்பாட்டிலும் இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் கட்டுப்பாட்டிலும் இருப்பதனால் ஒருதலைப்பட்சமான, திரிக்கப்பட்ட மற்றும் இனவெறியைத் தூண்டும் வகையிலான செய்திகள் அதிக அளவில் ஊடகங்களில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.அவர்களது நோக்கம் ஆட்சி, அதிகாரம், அரசியல் மேலாண்மை. இதற்குத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராக அவர்கள் மீது கரி பூசும் எந்த இழிசெயலுக்கும் தயங்கமாட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட பிறவிகள்.பாலஸ்தீனியர் தாக்கினால் தீவிரவாதமாம்; இஸ்ரேல் தாக்கினால் தற்காப்பாம்.

இவர்களது மதம் மற்றும் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு கீழே :

2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கட்ரினா புயல் வீசியபோது வெளியிடப்பட்ட சில செய்திகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.

யாஹூ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இரு நிழற்படங்களில் ஒன்றில் கருப்பினத்தவர் ஒருவர் சில உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு மார்பளவு நீரில் நீந்திச் செல்கிறார்.மற்றொரு நிழற்படத்தில் வெள்ளையர் ஒருவரும் ஒரு பெண்மணியும் முதுகிலும் கைகளிலும் பொருட்களைச் சுமந்து கொண்டு அதே போல நீந்திச் செல்கின்றனர்.ஒரே நாளில் ஒரே இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட இவ்விரு நிழற்படங்களில் முதலாவதில் அந்தக் கருப்பினத்தவர் உணவுப் பொருட்களைச் 'சூறையாடிச்' செல்வதாகவும் வெள்ளையர்கள் அப்பொருட்களைக் 'கண்டுபிடித்துச்' செல்வதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இவர்களது 'இஸ்லாமோஃபோபியா' அரிப்பைச் சொறிந்து கொள்ள எந்த நிலைக்கும் கீழிறங்குவார்கள்


எந்த இழிசெயலுக்கும் தயங்காம‌ல் ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேசியாகி கீழிறங்கி ஊடகங்கள்.

ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும்.

மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு வரும் உலோகக்கம்பி அல்லது நீர், அல்லது மின்சாரம் பாயும் எதுவானாலும் மின் கடத்தும் ஊடகமாகும். ஒலி அலைகளைச் சுமந்து வருவதற்குக் காற்று ஊடகம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரும் 'குருவி'யும் ஊடகம்தான்.

இன்று ஊடகம் -மீடியா என்பது விரிந்தவேறுபட்ட பொருளைத் தரும் ஒரு சொல் ஆகிவிட்டது. தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி, செய்திப் பரிமாற்றம், பொழுது போக்கு, கல்வி, புள்ளிவிபரங்கள் வணிகவிளம்பரங்கள் போன்றவற்றை, அவை உருவாகும் இடங்களிலிருந்து கடத்தி வந்து நம் கண்ணுக்கும் செவிக்கும் தருவதால் ஊடகம் எனப்படுகிறது.

அச்சேற்றப்பட்டு வரும் செய்தித் தாள்கள், வாராவாரம், மாதமிருமுறை, மும்முறை ஒருமுறை என வரும் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையத்தில் வரும் செய்தித் தளங்கள், தனியாரது வலைப்பூக்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவுகள், தகவல் பலகைகள் போன்றவை ஊடகம் என்ற வரையறைக்குள் வருவனவாகும்.

ஊடகம் என்பது வலிமையானது.ஊடகத்திற்கெனக் கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் தலையாய இடத்தைப் பெற்றிருப்பது ஊடகம். ஆட்சியைக் கவிழ்க்கவும் ஆட்சியில் அமர்த்தவும் வல்லமை பெற்றிருப்பது ஊடகம்.

ஊடகவியல் என்பது மக்களிடம் கருத்துவாக்கம் செய்யும் வலிமையான பணியாகும். ஊடகவியலாளர்கள் தாம் விரும்பும் வகையில் மக்களின் அறிவுத் தளத்தை நகர்த்திச் செல்ல முடியும்.

ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், யாரை அல்லது எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதை உண்ண வேண்டும்; உடுக்க வேண்டும்,எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அளவுக்கு மக்களின் அனைத்துச் செயற்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொண்டோ அறியாமலோ இயக்குகின்ற சக்தியாக ஊடகம் விளங்குகிறது.

ஊடகங்கள் தங்களைப் பற்றி "நாங்கள் நடுநிலையாளர்கள்" எனத் தன்னுயர்வாகக் கூறிக்கொண்டாலும் அவர்கள் விரும்பும் வண்ணம் மக்களின் மனங்களில் பாதிப்பை உருவாக்குவதுதான் அனைத்து ஊடகங்களின் அடிப்படைக் குறிக்கோளாகும். மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி, சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

அண்மையில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே நரேந்திர மோடியை ரோம்போவாக, ராபின்ஹுட்டாக, ஸூப்பர்மேனாகச் சித்திரித்து வந்த ஊடகக் கட்டமைப்பால் அவரும் அவரது கட்சியும் எதிர்க்கட்சியே இல்லா நிலைக்கு உயர்த்தப்பட்டு வெற்றி பெற்றதே ஊடக வலிமைக்குச் சான்றாகும்.

ஊடகம் உண்மையை உரக்கச் சொல்லி, ஊழலை வெளிப்படுத்தி, குற்றம் புரிந்தோரை அடையாளம் காட்டிச் செயல்பட்ட காலமும் இருந்தது.அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸனின் வாட்டர் கேட் ஊழலை வெளிக்கொணர்ந்தது வாஷிங்டன் போஸ்ட் எனும் இதழ்தான். போபார்ஸ் ஊழல், சவப்பெட்டி ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவற்றை வெளிக்கொண்டு வந்ததும் ஊடகங்கள்தாம். ஆனால் அவை இருள் கிழித்துமின்னி மறையும் மின்னல்கள் போல எப்போதாவது வருவன.

சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ள ஊடக முதலாளிகளும் ஆசிரியர்களும் செய்தியாளர்களும் அரிதாகி விட்டனர். பரபரப்பான செய்திகளே இன்று விற்பனைக்குரிய பண்டங்களாம். 99% ஊடகங்கள் வணிக நிறுவனங்களுக்கே உரிய லாபநோக்குடன் செயல்படத் தொடங்கிவிட்டன. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அறக்கோட்பாடுகள் மறைந்து மக்களை எப்படியாவது கவர்ந்து விற்பனையைப் பெருக்கி லாபம் ஈட்ட வேண்டும் என்றே அவை கருதுகின்றன. News can be hot; but should be factஎன்ற அடிப்படையை மறந்து விட்டுச் சில ஊடகங்கள் தங்கள் மதம் மற்றும் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்குத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதை இன்று நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

சான்றாக:-- இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் சதிச்செயல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட டெல்லிப் பேராசிரியர் எஸ் ஏ ஆர் கீலானியின் வீட்டில் சோதனைக்காகவும் அவரைக் கைது செய்வதற்காகவும் காவல் துறை குவிந்திருந்தது. இந்நிலையில் ஊடகவியலாளர்களும் பெரும் திரளாக அங்குக் குவிந்தனர். தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்புகளும் பரபரப்பாக அரங்கேறின. கீலானியின் வீட்டின் முன் நின்றபடி, "கீலானி தலைமறைவாகிவிட்டார்" என 'ஆஜ் தக்' செய்தியாளர் ஆவேசத்துடன் செய்தி அளந்ததைத் தம் வீட்டில் அமர்ந்தபடி டி வி யில் கண்டுகொண்டிருந்தார் கீலானி!

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன ஊடகங்கள். மேலை நாட்டு ஊடகங்கள் இதில் முன் நிற்கின்றன. யூதர்களே பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இவை போன்ற பொய்களும் புனைவுகளும் பரபரப்பாக வெளியாகின்றன.

திரைப்படத்தில் வந்த காட்சியினைப் போட்டு, "சிரியாவில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்த பெண்ணைக் கல்லால் அடித்து கொல்லும் கொடூரம்" எனப் பச்சைப்பொய்ப் பரப்பி, தம்மை எழுத்தாளர் என அழைத்துக்கொள்ளும் உலுத்தர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் 9.8.2014 அன்று தட்ஸ்தமிழ் தளத்தில் வெளியான ஒரு செய்தி: (SCREENSHOT - CLICK HERE)
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » உலகம்

7 வயது சிறுமியை திருமணம் செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி: சமூக வலைத்தளங்களில் உலவும் போட்டோ.

Posted by: Veera Kumar, Published: Saturday, August 9, 2014, 17:55 [IST]

பாக்தாத்: ஈராக்கில் 7 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலாவி வருகிறது.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமணம் மூலமாகவும் மதம் மாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இஸ்லாமிய டிவிட்டர் பயனாளி (Fadel Al Hadidi @Fadel_alHadidi) ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அழும் சிறுமியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏழு வயதான அந்த சிறுமியை உடன் நிற்கும் நபர் திருமணம் செய்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த போட்டோ எடுக்கப்பட்டது ஈராக் அல்லது சிரியா என எந்த நாடு என்பது குறிப்பிடப்படவில்லை. இவரது டிவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொடூரமாக கொன்ற புகைப்படங்களும் உள்ளன.

அரபு நாட்டு தொலைக்காட்சிச் சேனலான அல்-ஹயத் கூட இதை ஒளிபரப்பிவருகிறது. திருமணத்துக்கு பெண் தேட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அலுவலகமே திறந்துவிட்டனர் என்று கடந்த மாதமே, பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

வடக்கு சிரிய பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திருமண அலுவலகம் திறந்ததுடன், திருமணமாகாத மற்றும், விதவை பெண்கள் தங்களை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், ஜிகாத் நடத்த அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நம்பிக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.

மேலை நாட்டு இணைய தளங்கள் ஆறு நாட்களுக்கு முன்னரே இச்செய்தியை வெளியிட்டுவிட, தமிழ்த்தளம்இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. செய்தி உண்மையா, உறுதிப்படுத்தப்பட்டதா என்றெல்லாம் தள ஆசிரியர் சிந்தித்ததாகத் தெரியவில்லை; செய்தி பதித்தவரும் அக்கறை காட்டவில்லை.

இன்று போல் email வசதியோ s m s வசதியோ cell phoneவசதியோ பரவலாக இல்லாத காலத்தில், 'துபையில் பிள்ளையார் பால் குடித்ததாக' வந்த வதந்தியை உலகம் முழுக்கப் பரப்பிய இந்துத்துவ சக்தியைப்போல் இச்செய்தியும் உடனடியாகப் பரப்பப்பட்டது. நூற்றுக்கணக்கான தளங்கள் இச்செய்தியை உடனே மறுபதிப்புச் செய்து மகிழ்ந்தன.

இதைப்போல், "சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப்போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தன் ஐந்து வயது மகளைவல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்திக் கொலை செய்தார்" எனக்கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு ரீல் ஓடியது. பிறகு அந்த ரீல் அறுந்துவிட இப்போது அடுத்த ரீலை ஓட்டியுள்ளனர்.

உண்மை என்ன?

சிரியாவில் ஐ எஸ் ஐ எஸ் நடத்திய குர்ஆன் ஓதும் போட்டி பற்றி ஒரு காணொளி வெளியானது. அதில், குர்ஆன் ஓதல் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த 'ரகத்' எனும் பெயருடைய ஒரு குழந்தையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபூ வகாஸ் அல்-லைதி எனும் துனீசியர் ஆறுதல் படுத்துகிறார்.


அதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் கூட்டம், "இஸ்லாமிய ஜிஹாதி ஏழு வயதுச் சிறுமியைக் கல்யாணம் செய்து விட்டான்" எனப் பொய்ச்செய்தியைப் பரப்பின. எவனோ ஒருவன் வாந்தி எடுத்ததை வரிசையாகப் பல தளங்களும் வாரி உண்டன. தங்கள் மதம் மற்றும் இனம் சார்ந்த நுண்ணரசியலை முன்னிலைப்படுத்தி வெளியிட்ட செய்தியைத் தட்ஸ்தமிழ்த் தளமும் வெளியிட்டது. அந்தப் பதிவுக்கு வாசகர்கள் என்ற பெயரில் வெளிவந்த வக்கிரப் பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தால் தமிழ் வாசகர்களின் கருத்துகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இத்துணை வன்மம் கலந்துவிட்டிப்பதை நம்மால் நம்பமுடியவில்லை. அவற்றையும் தட்ஸ்தமிழ் தளம் வெளியிட்டுத் தன் 'கருத்துச் சுதந்திரத்தை'ப் பறை சாற்றியது.

பின்னர் உண்மையான தகவலைதட்ஸ் தமிழ் தளம் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.

உண்மையில் நடந்தது என்ன என்று அறிய விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் முழுமையான காணொளியைக் காணுங்கள்.


குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தினம்தினம் எத்தனையோ நடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த நிகழ்ச்சியும். போட்டியில் தோற்று விட்டோமோ என்ற குழந்தைத்தனமான விசும்பலையும், அந்தக்குழந்தையைத் தேற்றும் உணர்வுப்பூர்வமான நிகழ்வையும் இணைத்து, 'பால்ய திருமணம் செய்ததால் அச்சிறுமி அழுவதாக'த் திரித்து எழுதும் இவர்களின் மனவக்கிரத்தை எவ்வகையில் எடுத்துக் கொள்வது?

ஒரு புகைப்படம் கிடைத்துவிட்டால் மனம் விரும்பியபடி எவர் மீதும் குப்பை வீசுவார்களா? இத்தனைக்கும் அந்த வக்கிர செய்திக்குக் காட்டப்பட்டுள்ள புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று உறுதியாகத் தெரியவில்லையாம்! உறுதியற்ற ஒன்றைச் செய்தியாக வெளியிடவேண்டிய அவசரம் தான் என்ன?

இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் எதை எழுதினாலும் விலைபோகும் என்ற கீழ்த்தர வணிகநோக்கமும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும்தானே காரணமாக இருக்க முடியும்?

பச்சிளம் பாலகர்கள் என்று கூடப் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்யும் காமுகர்களுக்கும், இந்த செய்தியாளருக்கும் அதிக வித்தியாசமில்லை.மேற்காணும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அபூ வகாஸ், இரு நாட்களுக்கு முன்னர் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதை, "7 வயதில் விதவையான முஸ்லிம் சிறுமி" என வக்கிரம் பிடித்தவர்கள் படத்தோடு செய்தி வெளியிட்டு ஜல்லியடித்தாலும் வியப்பதற்கில்லை.

இந்தக் காணொளியின் உண்மையை முழுக்க அறிந்த பின்னும் அதை மறைத்து விட்டுக் கேவலமான ஒரு கற்பனையை மேலை நாட்டு ஊடகம் வெளியிட வேண்டிய தேவை என்ன?

விடை எளிதானதே!
இஸ்லாம் மேலைநாடுகளில் விரைந்து பரவும் மார்க்கமாக இருப்பதால் ஏற்பட்ட எரிச்சல்.

இஸ்லாம்தான் இனி உலகை ஆளப்போகும் ஆற்றல் என்பதால் ஏற்பட்ட கலக்கம்.

அப்படி இஸ்லாம் வென்று விட்டால்... என்ற ஃபோபியா அச்சம்.
இவற்றால் விளைந்த வெறியும் வெறுப்பும் வன்மமும் விஷம் தோய்ந்த செய்திகளைப் புனைந்து வெளியிடத் தூண்டுகின்றன.
அடிக்க அடிக்கத்தான் பந்து மேலெழும். இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்கள அதற்குள் கரைந்து போனது தான் வரலாறு.

தன்னை எதிர்ப்பவர்களை இஸ்லாம் எவ்வாறு ஈர்க்கிறது என்பதற்கு மிக அண்மைச் சான்று, உலக முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தித் திரைப்படம் எடுத்த டென்மார்க் நாட்டு இயக்குநர் அர்னோட் வான் டோன் இஸ்லாம் தன்னை எவ்வாறு ஈர்த்தது என்பதை விளக்குகின்றார்:


பாவேந்தர் பாரதிதாசன் அன்று

“காரிருள் அகத்தில் நல்லகதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்தஉலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே”


என்று பாடினார். இன்று அவர் இருந்திருந்தால், "சிற்றறிவாளர் சிந்தையில் பிறந்த பத்திரிகைப்பெண் வேசியாகிவிட்டாள்" என்று நொந்து போயிருப்பார்.

SOURCE:http://www.satyamargam.com/editorial/2415-false-news-fabricators.html

இப்பதிவு "சத்தியமார்க்கம்" தளத்திலிருந்து எடுக்கப்பட்டு நன்றியுடன் இங்கு பதிக்கப்பட்டுள்ளது.

***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
*** இங்கே***



மேலும் படிக்க... Read more...

பில்லி சூனியம் வைப்பவர்களுக்கு Rs.50 லட்சம் பரிசு.!!! ???.

>> Tuesday, August 5, 2014

சூனியத்தினால் பி.ஜைனல் ஆபிதீன் தற்கொலை செய்து கொள்ளுவாரா? இஸ்லாம் X சூனியம் போட்டி ஆரம்பம். சூனியத்தினால் 48 நாட்களுக்குள் பி.ஜைனல் ஆபிதீனை தற்கொலை செய்ய வைக்கிறேன் - அகோரி மணிகண்டன் சவால் .


படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
இஸ்லாமிய அறிஞரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனருமான பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூனியத்திற்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். .

சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்தில் பேசியிருந்தார். .

அவரது பேச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக காட்டுத்தீப்போல் பரவியது. .

இந்நிலையில்.... .

திருச்சி அரியமங்களம் சர்பநதிக்கரையை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து சூனியம் செய்ய முடியும் என்பதை தாம் நிரூபிக்க தயார் என்று பகிரங்க ஒப்பந்தம் செய்துள்ளார். .

அந்த ஒப்பந்தத்தில் சரியாக 48 நாட்களுக்குள் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களே சூனியத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கிறேன் அல்லது அவரை சூனியத்தின் மூலமாக தற்கொலை செய்ய வைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. .

அகோரி மணிகண்டன் கூறியது போல் 48 நாட்களுக்குள் சூனியம் செய்து வெற்றியடைந்து விட்டால் பி. ஜைனுல் ஆபிதீன் தரப்பினர் 50 லட்சம் ரூபாயை அகோரி மணிகண்டனிடம் ஒப்படைக்க வேண்டும். .

சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. .

ஒப்பந்தம் அமுலில் ஆகும் நாள் 01.08.2014 ஆரம்பம் ஆகிறது. .

சரியாக 48 நாட்கள் கழித்து 18.09.2014 அன்று உண்மையை உலகம் அறிந்து கொள்ள இருக்கிறது. .

இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கே வெற்றி....!! .

சூனியம்‬ ஒப்பந்தம் தொடர்பாக எழுப்படும் கேள்விகளுக்கு பி.ஜே அவர்கள் அளித்துள்ள பதில்கள்: .

1.சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்கு என்று கூறுகின்றார்களே ? .
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-vilambaram/.

2.சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லை என்று சிலர் கூறுகிறார்களே?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-ippoluthu-illai/.

3.சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டியுள்ளது சரியா ?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-panthayam/.

4.#‎இறைவன்‬ நாடினால் சூனியம் செய்வான் என்று கூறுவது குற்றமா ?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/iraivan-nadinal-suniyam/.

5.50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் ‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத் தர வேண்டும் ?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/50-latcham-ungal-panam/
.

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

இந்தியாவை புரட்டிப் போடும் கனல் தெரிக்கும் பேச்சு. கேளுங்கள்!

>> Monday, August 4, 2014

உதயகுமாரின் இந்தியாவை புரட்டிப் போடும் கனல் தெரிக்கும் இதயபூர்வமான பேச்சு! கேட்டுப் பாருங்கள்.




"பாடம் சொல்லிக் கொடுக்கப் போனதால் நான் அமர்ந்த இடத்தை தண்ணீர் விட்டு தீட்டு கழித்த மேல்சாதி தாயே!

ஒரு சக மனிதனை மதிக்காத நீ எப்படி மேல்சாதியாவாய்!

நீ என்ன என்னை ஒதுக்குவது இன்றிலிருந்து உன்னை ஒதுக்குகிறேன்.

மேல் சாதியான உனக்கு ஒரு வீடு கட்ட தெரியுமா?

வயலின் வேலைகளாவதுதான் தெரியுமா?

இறந்து போனால் குழிதான் வெட்ட தெரியுமா?

இப்படி எதுவுமே நாங்கள் தானே உனக்கு வாயில் வந்து ஊட்டி விட வேண்டும்.

"ராமர் கோவில் கேசுக்கு 400 கோடியாம்! பாவிகளே...

400 குடும்பங்களை வாழ்வித்திருக்கலாம்!

ராமர் கேட்டாரா உன்னிடம் கோவிலை!" என்று கேட்கும் உன்னதமான பேச்சு!

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

யார் குற்றம்.? அலுவலகம் செல்லும் பெண்களின் பிரச்சினைகள்.

>> Wednesday, June 4, 2014

உங்களது மனைவியை மகளை சகோதரியை தாயை வீட்டில் ரோட்டில் பஸ்ஸில் அலுவலகத்தில் மற்றவர்கள் காம உணர்வுடன் பார்க்க பேச தொட இடிபட அனுமதிப்பீர்களா?

தீர்வு என்ன?

மேலும் படிக்க... Read more...

தமிழகத்தில் இஸ்லாம் பரவியதெப்படி ?

>> Tuesday, June 3, 2014

தமிழகத்தில் இஸ்லாம் பரவியதெப்படி ? கடந்த காலத்தை கடவுளால் கூட மாற்ற முடியாது.

மேலும் படிக்க... Read more...

கலைஞர் வைக்கும் வெடிகுண்டு. நடத்துங்கடா உங்கள் நாடகத்தை.

>> Monday, May 5, 2014

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்!

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

யாரையோ திருப்திப்படுத்த கலைஞர் இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார்?

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

மு.க. அடங்குவது எப்போது?

இலங்கையின் கண்டியைச் சேர்ந்த துணி வியாபாரியான ஜாஹீர் ஹுஸைன் என்பவரை, சில நாட்களுக்கு முன்னர் காவல் துறையினர் திருவல்லிக்கேணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் மீது இன்னும் ச்சார்ஜ் ஷீட்டே வெளிவரவில்லை.

அந்த கண்டி ஜாஹிர் ஹுஸைனை "பாகிஸ்தான் தீவிரவாதி - ஐ எஸ் ஐ உளவாளி" என்று குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்தி, மு.க. செய்தி வாசிக்கிறார்.

ஜாஹிர் ஹுஸைன் தீவிரவாதியா இல்லையா என்பது விசாரணையில் / நீதிமன்றத்தில் வெளிவரும்; நடந்த குண்டுவெடிப்பு முஸ்லிம்கள் செய்ததுதான் என்ற முடிவுக்கு மு.க. எதன் அடிப்படையில் வந்தார்?

இது வழக்கைத் திசை திருப்பும் வேலையில்லையா?

யாரையோ திருப்திப்படுத்த இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

1967 கால முஸ்லிம்கள் அல்லர் இப்போது! ஒவ்வொரு அரசியல்வியாதியின் ஒவ்வொரு சலனத்தையுமே புரிந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு வந்துவிட்டது. இனியும் நீண்ட நாட்களுக்குக் குல்லா போட்டுக்கொண்டு நோன்புக் கஞ்சி குடிக்கும் ஸீன் எடுபடாது.

அதேவேளை, இதே கருணாநிதிதான் கோவை கலவரங்களின்போது, முதன்முதலாகச் சட்டமன்றத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தவர் என்பதையும் தமிழக முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. இவர் இப்போது தொடங்கி வைத்த 'பாகிஸ்தான் உளவாளி', 'ஐ எஸ் ஐ தீவிரவாதி' ஆகிய இரு சொற்களையும் வைத்துக் கொண்டு, விண்டோ ஜர்னலிஸக் கில்லாடி ஊடகங்கள் இரு நாட்களாக ஆடிய ஆட்டத்துக்கு இன்று ஆப்பு அடிக்கப்பட்டு விட்டது.

"குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் ஹுஸைனுக்கும் செண்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்று விளக்கி, சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் ஊடகங்களுக்கு பலமாக ஆப்பு அடித்துள்ளார்.

செண்ட்ரல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புப் பற்றிக் கிடைத்துள்ள ஒரேயோர் உருப்படியான தகவல் என்னவென்றால், இந்த குண்டுகளும், பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுகளும் மோடி பாட்னாவில் பேசும்போது வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியான வேதிப் பொருட்களால் தயார் செய்யப்பட்ட பாட்னா குண்டுகள் என்பதே அது.

பாட்னா குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்தவர்கள் யாவர் என்பது எல்லாருக்கும் தெரியும்; மோடிக்கும் தெரியும். அதனால்தான் குண்டு வெடிப்புக்குப் பின்னர் அதே மேடையில் பேசிய 'துணிச்சல்கார' மோடி, தான் பேசுவதற்குச் சற்று முன்னர் வெடித்த குண்டு வெடிப்பைப் பற்றி ஒரு வார்த்தையையும் தன் பேச்சில் குறிப்பிடவேயில்லை.

ஆனால், ஆந்திராவில் மோடி பேசுவதற்காக வரும்போது ஆந்திர எல்லையில் வெடித்திருக்க வேண்டிய இந்த குண்டு வெடிப்பை மையப் படுத்தி, பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் உரிய நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்து, உரிய நேரத்தில் புறப்பட்டு, ஆந்திர எல்லையில் குண்டு வெடித்திருந்தால் அதனால் இலாபமடைய இருந்தவர்கள் யாவர் என்பது வெள்ளிடை மலை.

நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் "எல்லை தாண்டிய பயங்கரவாதம்", "ஐ எஸ் ஐ சதி", "முஸ்லிம் தீவிரவாதம்" என்று திசை திருப்பும் செயலை அத்வானி செய்து கொண்டிருந்தார். அனைத்து குண்டு வெடிப்புகளும் எங்களின் (சங் பரிவாரின்) கைங்கரியங்கள்தாம் என்று சுவாமி அசீமானந்தா பெருமையோடு வெளிச்சம் போட்ட பின்னர் அத்வானி அடங்கிவிட்டார்.

SOURCE: http://www.satyamargam.com/editorial/2338-twin-blast-in-chennai-central-station.html

 ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! - ஆளூர் ஷாநவாஸ்

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?

ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மை நிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா? -ஆளூர் ஷாநவாஸ்

________________________________________

சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை குறித்து நான் எழுதிய மேற்கண்ட பதிவை பார்த்து தி.மு.க நண்பர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜாகீர் உசேனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது; அப்படியெனில் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினரை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என அரசும் காவல்துறையும் ஊடகங்களும் சொன்னபோது அதைக் கடுமையாக எதிர்த்துள்ளேன். தலித் மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பா.ம.க.வினர் பரப்புரை செய்தபோதும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளேன். அப்போதெல்லாம் சமூக ஆர்வலனாகத் தெரிந்த நான், இப்போது முஸ்லிம்களுக்காக பேசும்போது அடிப்படைவாதியாகத் தெரிவது ஏன்?

தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா?

அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா?

அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா?

இல்லையே.

ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே.

பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே.

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே.

மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே.

அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று பலரால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

ஜாகிர் உசேன் குற்றவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது என்பதே என் வாதம். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அன்றே அவர் குறித்த அனைத்து தகவலையும் நம்பி ஒரு முடிவுக்கு வரலாமா என்பதே நம் கேள்வி.

ஏற்கெனவே, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் காவல்துறை சொன்னது பொய் என்று ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ தலைவர்கள் படுகொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் குழுவினரே குற்றவாளிகள் என காவல்துறை சொன்னதை கலைஞரே கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் பக்ருதீனை காவல்துறையும் ஊடகங்களும் தீவிரவாதி என சொல்லிக் கொண்டிருந்த போதுதான் கலைஞர், போலீஸ் பக்ருதீன் தரப்பு நியாயத்தை கேள்வியாக முன்வைத்தார். அப்படி கேள்வி எழுப்பியதற்காக கலைஞர் தீவீரவாத ஆதரவாளர் ஆகிவிடுவாரா?

இப்போது, ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் இங்கும் வெடித்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. பாட்னா வெடிப்பில் இந்துத்துவ சக்திகளின் சதிவலையே அம்பலமானது. எனவே இதுவும் அதன் தொடர்ச்சிதான் எனும்போது சந்தேகம் யாரை நோக்கி வரவேண்டும்?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பற்றவைப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதே மோடியின் திட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் துணிந்துள்ளனர். எனவே, ஆந்திராவுக்கு மோடி வரும்போது, ஆந்திராவை கடந்துவரும் ரயிலில் குண்டு வெடிக்கிறது என்றால் சந்தேகம் முஸ்லிம் மீதா வரவேண்டும்?

இந்த நேரத்தில் குண்டு வெடித்தால் அந்த லாபம் மோடிக்கா, முஸ்லிமுக்கா என்பதைக் கூடவா சிந்திக்கமாட்டீர்கள்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

தி.மு.க நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

_ ஆளூர் ஷாநவாஸ்

************

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், முதலில் ஊடகங்கள் அங்கே ரத்தக் கறை இருக்கிறதா என்றுதான் தேடி அலைகின்றன. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின்போது, தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்ட ரத்தக்கறை இன்னமும் அப்படியே மனதில் நிற்கிறது.

இப்போது சென்னையில், குறிப்பாக தந்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ரத்தம் படிந்த தரையை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஊடக தர்மம் என்பது என்ன? மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக அச்சத்தையே உண்டு பண்ணுகிறது இவர்களின் காட்சியமைப்புகள். உடனடியாக தந்தி தொலைக்காட்சி இதனை நிறுத்த வேண்டும்.

தவிர, இன்னமும் குண்டு வெடிப்பிற்கான காரணமோ, யார் செய்திருப்பார்கள் என்கிற தகவலோ தெரியாமல், தொடர்ச்சியாக யார் செய்திருக்க கூடும் என்கிற கணிப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பா.ஜ.க தமிழ்நாடு தலைவர், பொன். ராதாக்ருஷ்ணன் நேராக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு மட்டும், அமைதியாக இருந்தால் எப்படி? தமிழ்நாட்டில்தான், இந்த அளவிற்கு மோடி எதிர்ப்பலை வீசுகிறது, உடனே அந்த எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி திருப்பிவிடும் போக்கைத்தான், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஊடகங்கள் ஆற்றும் பணி முக்கியமானது. அதனை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செய்தால், காலம் அவர்களை கனிவுடன் நோக்கும். - தமிழ் ஸ்டுடியோ அருண்

________________________________________

மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் கைதானது - மூன்று இந்துக்கள்! ஆனால், எந்த நாளிதழும் எந்த செய்தித் தொலைக்காட்சியும் "மூன்று இந்து தீவிரவாதிகள்" கைது என்று சொல்லவேயில்லை!

இதுவே கைதாயிருந்தது ஒரே ஒரு முஸ்லீம் நபராக இருந்திருந்தால் கூட "முஸ்லீம் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்" என்று செய்தி வரும் இந்நாட்டில்!

எங்கு குண்டு வெடித்தாலும் உடனே காவல்துறையினர், அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை விசாரணை என்ற பெயரில் மிகுந்த துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்குகின்றனர்!

ஒரு குண்டு வெடித்தால் உடனே "யாரோ முஸ்லீம் தீவிரவாதி குண்டு வச்சுட்டான்" என்று பொத்தம் பொதுவாய் எதுவுமே தெரியாமல் பொது மக்களை நம்ப வைத்திருப்பது தான் இந்துத்தவ மற்றும் காவித் தீவிரவாதிகளின் வெற்றி! அனைத்து ஊடகங்களும் இப்போது இதற்கு சிறிதும் கூச்சமே இன்றி உடன் போகின்றன!

"முஸ்லீம் என்றாலே அவர்கள் ஏதோ அரேபியா நாட்டில் இருந்து வந்தவர்கள்; இந்நாட்டை சேர்ந்தவர்களே இல்லை என்றும் அவர்கள் அனைவரையுமே தீவிரவாதிகள்" என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலானோருக்கு இருக்கிறது!

ஒரு குண்டு வெடித்தால் பள்ளி - கல்லூரிகளில் உடன் பயிலும் முஸ்லீம் மாணவர்களை ஏளனமாக கேலி பேசுவது; அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் முஸ்லீம் சகோதரர்களை மனம் நோகும் வகையில் பகடி செய்வது - இதில் எல்லாம் பல பார்ப்பன நாய்களுக்கும் மேல்தட்டு மேல்சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கும் இந்துத்வா வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுக்கும் அப்படி ஒரு பேரானந்தம்!

ஆனால், ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகள் அன்று மட்டும் சிறிதும் வெட்கமே இன்றி "பாய், பிரியாணி கொண்டு வாங்க" என்று பல் இளித்துக் கொண்டு கேட்பது, தெரியாதவராய் இருந்தாலும் "முஸ்லீம் கல்யாணத்துல பிரியாணி நல்லாயிருக்கும்" என்று அற்பமாய் அலைவது - இது தான் இந்த இந்து மத வெறி பிடித்த கொள்கைவாதிகளின் லட்சணம்!

இந்த நாட்டில் உங்களைப் போன்ற ஆரிய வந்தேறிகளும், இந்து மத வெறி பிடித்த ரத்தக் காட்டேரிகளும் இருக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதை விட பல மடங்கு இந்நாட்டின் மைந்தர்கள் தான் இஸ்லாமியர்களும்! நீங்கள் வைக்கும் குண்டுகளுக்கும் நீங்கள் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கும் எத்தனையோ அப்பாவி இஸ்லாமியர்கள் பலி ஆகியுள்ளனர்; இன்னமும் ஆகின்றனர்! உங்கள் குடுமியை இப்படியே வளர விட்டுக் கொண்டு எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!

தீவிரவாதம் என்ற ஒன்று உருவாவதே அந்த அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் தான்! அரசாங்கத்தின் மேல் அதிருப்தி வருவதால் தான்; நாட்டின் கொடுமைகள், அநீதிகளுக்கு நியாயம் கிடைக்காத போது தான் எந்த ஒரு தீவிரவாதமும் உருவாகிறது! தீவிரவாதம் என்பதற்கும் பயங்கரவாதம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!

இந்த நாட்டின் பன்முகத்தன்மையை குலைக்க முற்படாமல் இந்துத்வா வெறியை காட்டாமல் இருந்தால் எந்த தீவிரவாதமும் வெளியே வரவே வராது! பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னால் இந்நாட்டில் குண்டுகள் வெடித்தது இல்லையே, ஏன்?! சிந்திக்க வேண்டாமா?!

காவித் தீவிரவாதிகளின் ஊடக பயங்கரவாதமும், காவிக் கறை படிந்த காவல்துறையும், காவித் துணியால் கண்களை மூடிய நீதி தேவதையும் மேலும் மேலும் ஒரு சில ஆரிய வெறியர்களின் இந்துத்வா கொள்கைகளுக்காக அப்பாவி இஸ்லாமியர்களை வதைத்து வந்தால், காவித் தீவிரவாதத்தை மறைத்து இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மறைத்துக் கொண்டே வந்தால் என்னைப் போல் இந்நாட்டின் பன்முகத்தன்மை மேலும் மனித நேயம் மேலும் மனிதம் மேலும் பற்றும் நேசமும் கொண்டவர்கள் நிச்சயம் பெரும் திரளாக கிளம்பி பெரும் புரட்சி வெடிக்கும்; அது தான் இந்நாட்டை திருத்த தேவை என்றால்!

எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் எழுத்தே ஆயுதம்; எங்கள் சொல்லே போர்வாள்; எங்கள் செயல்களே பெரும் புரட்சியாய் வெடிக்கும்!

நீதி தேவதை மீண்டும் சாதி,மத,இன,மொழி பாராமல் கருப்புத் துணி கட்டிக் கொண்டு இந்நாட்டில் நீதி வழங்கும் வரை ஓயமாட்டோம்! - - குமரகுருபாலன் சந்திரன்

SOURCE:http://www.satyamargam.com/news/news-and-views/2339-media-s-responsibility-to-our-society.html

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதைச் செய்தது ஒரு இஸ்லாமியர் என்று வதந்தி பரவிக் கொண்டிருந்த நேரம். அங்கே பிர்லா இல்லத்திற்கு வந்த மவுண்ட்பேட்டன் துரை கூடியிருந்த கூட்டத்திடம், "நீங்கள் நினைப்பதுபோல, காந்தியை கொன்றது இஸ்லாமியரில்லை. கொன்றவர் ஒரு ஹிந்து" என்று அறிவித்து, பெரும் கலவரம் உருவாவதை தடுத்தார்.

நீங்கள் இப்பொழுது தானே இங்கு வந்தீர்கள், என்ன நடந்தது யார் சுட்டது என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே இப்படி ஹிந்து என்று சொன்னீர்களே என்று நேருவும் படேலும் மவுண்ட்பேட்டனிடம் கேட்க, அதற்கு மவுண்ட் பேட்டன் சொன்னது, "நான் அவ்வாறு சொல்லாதிருந்தால் இங்கு பெரும் கலவரம் உண்டாகியிருக்கும், கொன்றது யார் என்று எனக்குத் தெரியாது!"

இது தான் ஒரு தலைமைக்கு உண்டான பண்பு. சரி அப்படியே காலச் சக்கரத்தை சுழற்றுவோம்.

13 டிசம்பர் 2001. பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதல் சம்பவம் முடிந்த உடனே, அந்த இடத்தை பார்வையிட வந்தார் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எல் கே அத்வானி.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: "இந்தத் தாக்குதலை செய்தது யார்""

அத்வானி பதில்: "செய்தது பாகிஸ்தானியர்கள் தான்"


 "எப்படிச் சொல்கிறீர்கள்?"

அத்வானி பதில்: "அவர்கள் பார்ப்பதற்கு பாகிஸ்தானியர்கள் போல இருந்தனர், அதனால் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான்"

அது என்னங்க அடையாளம்? பாகிஸ்தானியர்கள் போல இருப்பதற்கு? குல்லாவும் தாடியுமா?

இதுதான் நாட்டின் உள்துறை அமைச்சர் அளவிலிருந்து கடைக் கோடி பாமரன் வரை இவர்கள் பரப்பி வரும் வன்மம்!

வெள்ளைக்காரன் பொய் சொல்வானா சொல்ல மாட்டானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நம்ம நாட்டுகாரனைப் போல அரசியல் செய்ய மாட்டான் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும்!

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்! - கிஷோர் K சுவாமி


________________________________________

பயங்கரவாதச் செயல்கள் செய்பவர்கள், அவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டிற்கும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமானவர்களே!

பொதுமக்களின் உயிர்களைப் பறிக்கவோ, ஊனப்படுத்தவோ எந்தக் கொம்பனுக்கும் உரிமையில்லை. சென்னை ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எத்தனை முனையிலிருந்து வேண்டுமானாலும் துப்பு துலக்குங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்.

ஆனால் அதற்குமுன், குண்டு வைப்பவன் மட்டும்தான் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதி என்றாலே ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்தான் என்றும் திணிக்கப்பட்டுள்ள பொதுப் புத்தியை முதலில் கழற்றி எறியவேண்டும். மனிதத் தன்மையற்ற மிருகங்களால் அப்பாவிகள் கொல்லப்படுவது போலவே, தேடுதல் வேட்டை என்ற பெயரிலோ, ஃபைலை மூடவேண்டும் என்ற அவசரத்திலோ எந்தவொரு அப்பாவியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது, உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! - வெண்புறா சரவணன்


"ISI" அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மதமுமுக' ஒருங்கிணைப்பாளர் பேட்டி !

சும்மா விடாது அப்பாவியின் சாபம் ; விரைவில் வெளுக்கும் போலீசின் சாயம் !!

'ISI' உளவாளி என பட்டம் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் ஜாகிர் ஹுசைன், ISI தரச்சான்று பெற்ற அப்பாவி என்கிறார், மறுமலர்ச்சி தமுமுக ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ஜைனுலாபிதீன்.

இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், மறுப்பு பக்கத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டி:-

இலங்கை கண்டியை சேர்ந்த முஹம்மத் நுவைர் என்பவரின் மகனான ஜாகிர் ஹுசைன், கடந்த 1994 முதல் தமிழகத்துக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி வந்து செல்பவர்.

இந்தியப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதும், அங்கிருந்து சில சாதனங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் சிறு வணிகர், அவர்.

40 வயதுடைய ஜாகிர் ஹுசைனுக்கு, மனைவியும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர், தற்போது அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தன் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஜாகிர் ஹுசைன்.

மீடியாக்களால் மிகப்பெரும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், இந்த சதியிலிருந்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்.

அடிக்கடி தமிழக தலைநகர் சென்னைக்கு வியாபார நிமித்தமாக அவர் வந்து சென்றாலும், எப்போதும் மண்ணடியில் உள்ள ஒயிட் பேலஸில் தங்குவது தான் வழக்கம்.

கடைசியாக ஏப்ரல் 10 ந்தேதியன்று சென்னை வந்து சென்ற அவர், மீண்டும் 18 ந்தேதி சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர் தன்னிடமிருந்த 'பிசினஸ் விசா' உள்ளிட்ட ஆவணங்களுடன், தற்போது செல்லத்தக்க வகையில் உள்ள பாஸ்போர்ட் மற்றும், காலாவதியான பாஸ்போர்ட் என அனைத்தையும் காண்பிக்கிறார்.

அவரிடமிருந்த ஆவணங்களை சரிப்பார்த்து பெற்றுக் கொண்ட போலீசார், குற்ற முகாந்திரம் ஏதும் இல்லாத காரணத்தினால், அவரை விசாரணை வளையத்தில் வைத்திருப்பதாக சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

8 நாட்கள், சென்னையில் வியாபார நிமித்தமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்த அவரை 26 ந்தேதி மாலை 'மெட்ராஸ் யுனிவெர்சிட்டி' அருகில் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர்.

அதைதொடர்ந்து 29 ந்தேதி வரை சட்டவிரோத காவலில் வைத்து விசாரணை என்ற பெயரால் அடித்து துன்புறுத்தியுள்ள போலீஸ், வெற்றுத்தாள்கள் சிலவற்றிலும் எழுதப்பட்ட சில காகிதங்களிலும் கட்டாய கையொப்பம் வாங்கிக் கொண்டு,13 வது மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி ரிமாண்ட் செய்கின்றனர்.

மாஜிஸ்டிரேட் கேட்டால், மோசடி வழக்கு என சொல்ல சொல்லி வற்புறுத்தியுள்ளது காவல்துறை.

இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன்:

இன்று சனிக்கிழமை என்பதால், இவர் மீது என்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தன்னால் உறுதிப் படுத்த முடியவில்லை என்றார்.

திங்கள் கிழமைக்குப் பிறகு தான் அதன் விவரங்கள் தெரிய வரும் என்று சொன்ன வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.

ஒருவர், ஒரே நேரத்தில் ISI க்காக உளவு வேலைப் பார்த்துக் கொண்டே, கள்ள நோட்டுக்களையும் புழக்கத்தில் விட்டு மாட்டிக் கொள்வாரா என்பது தான் நம்முடைய கேள்வி.

SOURCE: https://www.facebook.com/maruppu.in

நடத்துங்கடா உங்கள் நாடகத்தை!

சிதம்பரத்தில் ஒரு வீட்டில் நாட்டு வெடுகுண்டு வெடித்தது தயாரிப்பின் பொழுது ...

இதில் திண்டுக்கலை சேர்ந்த பிரபல ரவுடி கடும் காயம் ...

மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு தப்பி ஓட்டம் ..!

மேலும் வீட்டை சோதனை செய்ததில் கை துப்பாக்கிகள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுக்க பட்டுள்ளது ..!

》》》》

கவனிக்க வேண்டும்> ரவுடியாம் வெடிகுண்டாம் துப்பாக்கியாம் ..!

தாடி வைத்த காரணத்தால் இலங்கை தமிழன் ஜாகிர் பாக்கிஸ்தான் உளவாளி என்று கைது ...

இதில் அவருக்கு பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்பு உள்ளது என்றும் ...

இந்தியாவை சீர்குலைக்க வந்தவர் என்றும் பழைய முதல்வர் வரை வதந்தி ..

அனைவருக்கும் இஸ்லாமியன் என்றால் இனிக்குது போலும் ..!

குண்டு தயாரிப்பில் தோல்வியடைந்தவன் ரவுடி என்பதோடு செய்தி நிற்கிறது ..!

இதுவே இஸ்லாமியனாக இருந்திருந்தால் ?

முருங்கக்காய் கூட ஜெலட்டின் குச்சிகள் !

நடத்துங்கடா உங்கள் நாடகத்தை!

________________________________________

மேலும் படிக்க... Read more...

'தெகல்கா'வின் புலனாய்வு' - தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

>> Sunday, May 4, 2014

அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்திய பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடிய மாபெரும் இனப்படுகொலை. பயங்கரங்களின் நிழலில் - நம் காலத்தின் கொடூர நிகழ்வு!

மாபெரும் இனப்படுகொலை. நடந்தது என்ன?

'தெகல்கா'வின் புலனாய்வு' -  தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

இனப்படுகொலையைச்செய்தவர்களே பெருமிதத்துடன் அளித்த வாக்குமூலங்களின் பதிவே இந்தூல்

பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடிய குஜராத் இனப்படுகொலை – நடந்தது என்ன ?

புத்தகத்தினைப் படிக்க >>> இங்கு <<< அழுத்தவும்.

இணைக்கப்பட்டுள்ள PDF File 108 பக்கங்களைக் கொண்டது என்பதால் Load ஆக சிறிது நேரம் ஆகலாம்.



குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?
'தெகல்கா'வின் புலனாய்வு
தமிழாக்கம் : அ. முத்துக்கிருஷ்ணன்
முதல் பதிப்பு : ஜனவரி 2008
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2008
மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2014
விலை : ரூ. 130

புத்தகத்தினைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:

வாசல் பதிப்பகம் 402, முதல் தெரு வசந்த நகர் மதுரை 625 003

செல் : 98421 02133

தலித் முரசு எஸ் – 5, மகாலட்மி அடுக்ககம் 26/13 குளக்கரை சாலை சென்னை 600 034

பேசி : 044 2822 1314

- அ.முத்துக்கிருஷ்ணன் (muthusmail@gmail.com)

 Source: http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/26365-2014-04-23-00-38-35

நன்றி : http://www.keetru.com/

மேலும் படிக்க... Read more...

இது இந்தியாவில் சாத்தியமா? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் .

>> Monday, March 31, 2014

65 கோடி ரூபாய் செலவில் பாக் அரசு திருப்பணி செய்து பூஜைகள் நடக்கும் இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.

பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.

கோவில் கட்டும் பாகிஸ்தானும் மசூதியை இடிக்கும் இந்தியாவும்.

2005ம் ஆண்டு பாக்கில் சக்வால் மாவட்டத்தில் இடிந்து கிடந்த இந்துக் கோவில் ஒன்றின் புனித தீர்த்தம் ஒன்று சீரமைக்கப்பட்டு அருகிலுள்ள ஏழு இந்துக் கோவிகளில் விக்ரகஙள் புதிதாய் நாட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதன. அதற்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தவர் யார் தெரியுமா?

யார் தலைமையில் அவ் விழா நடத்தப்பட்டது தெரியுமா? பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அதே லால் கிருஷ்ண அத்வானிதான். ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் இது இந்தியாவில் சாத்தியமா?

சற்று விவரமாக இந்துக் கோவில் அங்கு புனருத்தாரணம் செய்யப்பட்டதை சொல்கிறேன்.

2005l அத்வானி பாகிஸ்தான் சென்றபோது, பஞ்சாப் மாநிலம் சட்வால் மாவட்டத்தில் உள்ள கடஸ்ராஜ் கோவிலைப் புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டி வந்தார், அப்போது அவருடன் கூடச் சென்றவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) தலைவர் ஷுஜாத் ஹுசேன். அது ஒரு சிவன் கோவில். அதை ஒட்டியுள்ள புனித கோவிற் குளம் தன் மனைவியின் இழப்பை ஒட்டிச் சிவன் உதிர்த்த கண்னீர்த் துளிகளால் உருவானது என்பது நம்பிக்கை. ஏழு சிறு கோவில்கள் அங்கு உண்டு.

தான் அடிக்கல் நாட்டிய அனுபவம் குறித்து அப்போது அத்வானி கூறியது: "உண்மையில் இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம். உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை கடஸ்ராஜிலுள்ள இந்துக் கோவில்கள். இவற்றைப் புதுப்பீக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்ததை இந்திய மக்களுக்கே அளிக்கப்பட்ட ஒரு கவரவத்தின் குறியீடாகவே கருதுகிறேன்."

இதை ஒட்டி பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாநிலத் தொல்லியல் துறை தொல்லியல் துறை, பொது நலப் பணித்துறைகள் முதலியன இப்பணி நோக்கி முடுக்கிவிடப்பட்டன.

சீரமைப்பு வேலையை விரைவுபடுத்தக் கோரி அத்வானி சென்ற 2008 டிசம்பரில் ஹுசேனைத் தொலை பேசியில் அழைத்துச் சொன்னார்.

"நீங்கள் சுட்டிக் காட்டிய விஷயத்தை நான் மிக்க கரிசனத்துடன் கவனத்தில் எடுத்துக் கொண்டேன், சக்வாலில் உள்ள தகுதியான அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தற்போது வேலைகள் எந்த நிலையில் உள்ளன என விசாரித்தேன். தீவிர அர்ப்பணிப்புடன் அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என பாக் முஸ்லிம் லீக் தலைவர் ஷுஜாத் ஹுசேன் உடன் பதில் எழுதினார் ("Pak Temple Renovation on, Advani Told", Express News Service, New Delhi, Dec 11, 2008).

கடஸ்ராஜ் கோவில்களும் ஶ்ரீ அமர்குண்ட் எனப்படும் புனித தீர்த்தமும் சுற்றுச் சூழல் கேடுகளால் சீரழிந்த வருவது குறித்து 'டான்' உள்ளிட்ட பாகிஸ்தான் நாளிதழ்கள் தொடர்ந்து எழுதி வந்தன. அருகிலுள்ள தொழிற்சாலைகள் நீரை உறிஞ்சி விடுவதால் அமர் குண்ட் வற்றி வருவதை அவை சுட்டிக்காட்டின. அப்படி ஒரு செய்தியைப் படித்த பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்கள் சென்ற 2012 மேயில் உரிய அதிகாரிகளை அழைத்து, புதுப்பிக்கும் பணியை "அறிவியல் நுட்பங்களுடன்" விரைந்து முடிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிட்டார் ("Preserve Katasraj Temple : Zardari", The Hindu, May 7, 2012).

சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறைச் செயலரும், கடஸ்ராஜ் கோவிற் புனரமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான சயீத் இக்பால் வஹ்லா, "போர்க்காலத் துரிதத்துடன் பஞ்சாப் அரசு இப்பணியை நிறைவேற்றி வருகிறது" என அறிவித்தார். "இந்த நாட்டின் சம குடி மக்களான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பஞ்சாப் அரசுக்கு உண்டு" எனவும் அவர் கூறினார்.

திருக்குளத்தைப் "புதுப்பிப்பதற்காக பஞ்சாப் அரசு 60.92 கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது" எனவும், கோவிற் திருப்பணிக்காக "மத்திய அரசு மேலும் 2 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது" எனவும், யாத்ரீகர்கள் "தங்கிச் செல்ல விடுதி ஒன்றும் கட்டப்படும்" எனவும் வஹ்லா கூறினார் ("Pak Hindus Throng at Renovated Holy Pond", One India, Nov 5, 2012).

115 இந்துக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஶ்ரீ அமர் குண்ட் வண்னப்பூக்கள் மிதக்கப் பேரழகுடன் காட்சி அளித்தது. ஹிந்து சுதர் சபாவின் பொதுச் செயலர் அசோக் சந்த் பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்தார். கடஸ்ராஜில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தைத் தொழுது அனைவரும் திரும்பினர்.

ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது.புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 66 ஆண்டுக்கு பின், தற்போது, இக்கோவிலில் பூஜைகள் நடக்கின்றன.

இதுகுறித்து, பாகிஸ்தான் தொல்லியல் துறை தலைவர், அஸ்மத் தாஹிரா கூறியதாவது:

பழமை மாறாமல், இக்கோவில், புனரமைக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தான் அரசின், இந்த புனரமைப்புக்கு, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி, இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல; இங்கு, ஒரு புத்த மடம், சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளன. இவ்வாறு, அஸ்மத் தாஹிரா கூறினார். –

பாக்கில் ஒற்றை அதிகார மையம் இல்லை என்பதும், தீவிரவாதமும், இஸ்லாமிய அடிப்படிவாதமும் அந்த நாட்டைச் சீரழித்துக் கொண்டுள்ளன என்பதும் உண்மை .

ஒரு காலத்தில் அரசும் இராணுவமுமே இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தபோதும், இப்போது பாக் அரசுக்கே அது பெரும் தலைவலியாக இருப்பதுதான் எதார்த்தம்.

சென்ற ஆண்டில் எல்லை ஓரத்தில் இந்திய இராணுவ வீரர்கள் சிலர் கொல்லப்பட்டு, அவர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, அது இராணுவம் அல்லாதவர்களின் செயலாகவும் இருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் எனச் சொன்னபோது இந்துத்துவ வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அந்தோனியின் கூற்று மிகவும் நிதானமான ஒன்று.

பாக்கில் இன்று குறைந்த பட்சம் மூன்று அதிகார மையங்கள் செயல்படுகின்றன. அரசதிகாரம், தன்னிச்சையாக இயங்கக்கூடிய இராணுவ அதிகாரம், அடிப்படைவாதிகளின் அதிகாரம். இந்த நிலை நீடித்தால் விரைவில் பாக் ஒரு failed state என்கிற நிலையை எட்டலாம் என்பது உண்மை.

ஆனால் ஒன்றை நாம் மனங்கொள்ள வேண்டும். இப்படியான சூழல் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களும் பாக். சிறுபான்மையினர் மீது அவ்வப்போது நடக்கும் சில வன்முறைகளுக்கும் காரணமாகின்றது,

இந்த வகையில் இது பாகிஸ்தான் அரசுக்கும் பெரிய தலைவலியாகத்தான் உள்ளது. ஆனால் இந்தக் காரணங்களுக்காகவே அங்கு எல்லாமே சீரழிந்துள்ளதாகவும்,ஒவ்வொரு பாகிஸ்தானியும் இந்திய வெறுப்புடன் வாழ்வதாகவும் நினைப்பதும், அந்த வகையில் ஒவ்வொரு பாகிஸ்தானியையும் நமக்கு எதிரியாகவும் நினைப்பதை விட அறிவு கெட்டத்தனம் அல்லது வன்ம வெறுப்பு மனோ நிலை வேறெதுவுமில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டார்லிம்பில், பாக் சென்று வந்து கட்டுரை ஒன்றை அவுட்லுக் இதழில் எழுதி இருந்தார். அதை வாசித்தால் பாக்கின் இன்னொரு பக்கத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அடிப்படை வசதிகள், நயத்தக்க நாகரீகங்கள் உள்ள நாடுதான் பாக்கிஸ்தான் என்பதும், பாக் மக்கள் அப்படி ஒன்றும் இந்து மதத்திற்கோ, இந்தியர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதும் நிறைய வாசிக்கையில்தான் விளங்கும்.

பாக் மீதும் அம்மக்கள் மீதும் வெறுப்பைக் கொட்டி எழுதியிருக்கும் பதிவுகளும் ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றன.

அறியாமையும், வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் அது ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். - அ.மார்க்ஸ்

THANKS TO: A. MARX @FACEBOOK.

இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?- THE HINDU


இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள்போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்.

ஆசியக் கோப்பைப் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற காரணத்துக்காக, உத்தரப் பிரதேசத்தில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது மீரட் காவல் துறை.

கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-யின் கீழ் பிரிவினைவாதக் குற்றச்சாட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிவு 153 ஏ-யின் கீழ் வெவ்வேறு இனங்களுக்கிடையே துவேஷத்தை ஏற்படுத்த முயன்றது, பிரிவு 427-ன் கீழ் விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் இன்னும் நீடிக்கின்றன.

இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் பேசியிருக்கிறார். பிரச்சினைக்கு மதப் பிரிவினைவாதச் சாயம் விழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காக, மாணவர்களை காஷ்மீருக்குத் திரும்ப அனுப்பியிருப்பதாக சுவாமி விவேகானந்தர் சுபார்தி பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

தாங்கள் எந்தப் புகாரையும் பதிவுசெய்யவில்லை என்று பல்கலைக்கழகத் தரப்பு கூறினாலும், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?

“அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பேச்சு களையும் கருத்து வெளிப்பாடுகளையும்கூடப் பிரிவினைவாதம் என்ற வரையறைக்குக் கீழே கொண்டுவந்துவிட முடியாது; வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிடும் வகையிலான நடவடிக்கைகள்மீது மட்டுமே தேசத் துரோகத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று கூறுகிறது உச்ச நீதிமன்றம்.

ஆனால், சாதாரண ஒரு கிரிக்கெட் போட்டி விஷயத்துக்கே தேசத் துரோகச் சட்டத்தைத் துணைக்கு அழைக்கின்றனர்.

இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா?

சமீபத்தில் ஜம்முவில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருந்த ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் நள்ளிரவுச் சோதனைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

இப்போது காஷ்மீர் மாணவர்கள்மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகளின் மனதிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தியப் பொதுச் சமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?

இந்தச் சமயத்தில், பாகிஸ்தான் - இந்தியா இடையேயான ஒரு கிரிக்கெட் போட்டியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடைபெற்ற பரபரப்பான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

அரங்கத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று, பாகிஸ்தானுக்குக் கரவொலி எழுப்பினர். வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ந்துபோயினர்.

விளையாட்டு என்பதன் உண்மையான நோக்கம் இதுதான். எல்லைகளைத் தாண்டி நல்லுறவை வளர்ப்பது. உண்மையான வெற்றியை அங்கீகரிப்பதுதான் விளையாட்டுக்கான அடிப்படை. உண்மையில், விளையாட்டில் தேசப் பற்றை நுழைப்பவர்கள்தான் பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.

Ref: THE HINDU சிந்தனைக் களம் » தலையங்கம் எதுவெல்லாம் தேச விரோதம்?

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

நீதி மறு(றை)க்கும் இந்திய ஊடகத்துறை.

>> Tuesday, March 11, 2014

சாமியார்கள் நடிகைகளின் அந்தரங்கங்கள், ஆரூடம், பாலியல் வக்கிரங்கள், பெண்களின் ஆபாச அசைவுகள், மக்களை பிளவுபடுத்துதள், தரகு வேலை பார்ப்பது மூலம் பணம் சம்பாதிப்பதே ஊடகங்களின் முக்கியக் குறிக்கோளாக உள்ளன.

இரத்தம் சிந்தாத மீடியாக்கள்.

1. அரசியலமைப்பு, சட்ட ஒழுங்கு, நீதிமன்றம், ஊடகம் ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் நான்கு மாபெரும் தூண்கள்.

2. சட்ட - ஒழுங்கு மனோ இச்சையுடன் செயல்பட்டாலோ, நீதி மறுக்கப்பட்டாலோ, அரசியலமைப்பு கார்ப்பரேட்டுகளின் காசுக்கு விற்கப்பட்டாலோ எதற்கும் வளைந்து கொடுக்காமல், மக்களுக்காக துணிச்சலுடன் அதிகாரவர்க்கத்தைக் கேள்வி கேட்கும் இடத்தில் ஊடகங்கள் உள்ளன.

3. இந்தியாவில் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.. அவர்களுக்காக நீதி கேட்கும் துணிச்சல் தனி நபர்களிடமோ குழுக்களிடமோ காணப்படுவதில்லை. அவ்வாறு அபூர்வமாக சிலர் இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்தால் அடக்கப்படுகின்றார்கள்.

4. ஊடகத்துறை மட்டுமே எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் செயல்படத்தக்க அளவுக்கான அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் அதன் இன்றைய நிலை நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு எதிர் மறையாக மாறி இருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் மீடியாத்துறை. ....

1. மக்களின் கவனத்தைத் திருப்பி ரேட்டிங்கை உயர்த்துவதும் பணம் சம்பாதிப்பதும், அதிகாரவர்க்கத்திற்குத் தரகு வேலை பார்ப்பதுமே இன்றைய இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை தங்கள் முழுநேரப் பணிகளாக செய்து வருகின்றன.

2. இந்தியாவின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் வலம்வருகின்றனர். அவர்களின் பிடியிலேயே தொலைகாட்சி செய்தி நிறுவனங்கள் உள்ளன.

அத்தகைய ஊடகங்களில் வரும் செய்திகள் ஒருதலைபட்சமாகவும் ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் நிலையிலோ இல்லாமல் இருக்கின்றன.

நீதிக்கு எதிராக நவீன ஊடகத்துறை

1. நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் கடன் தொல்லை காரணமாக 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர் தம் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி ஊடகங்கள் வாய் திறக்காமல் மௌனம் காக்கின்றன.

2. இந்தியாவில் இருக்கும் விபச்சார விடுதிகள், அதிகாரப்பூர்வமற்ற பெண்கள் சிறைச்சாலைகளாகவே செயல்படுகின்றன. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் தாதாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களின் கண்காணிப்பிலேயே பெரும்பாலான பெண்கள் விபச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்கு அரசாங்கமே வக்காலத்து வாங்குவதும் அந்தப் பெண்களுக்கு நடக்கும் அவலங்களைத் துணிச்சலோடு சொல்ல மறு(றை)ப்பதும் ஊடக துறைகளின் மற்றொரு அவல நிலையே!

3. இந்தியாவில் குடிகாரர்களின் விழுக்காடு அதிகமாக கொண்ட மாநிலம் என்ற அந்தஸ்தைத் தமிழ்நாடு எட்டிப்பிடித்து வெகுகாலமாகிவிட்டது. அதிக சாலை விபத்துகள் மதுவாலேயே நிகழ்கின்றன என்று புள்ளி விவரம் சொல்கின்றது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும்கூட காமடியாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களும் மாணவர்களும் குடிப்பதை ஃபேஷனாக காட்டாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. இந்த அவலநிலை குறித்து எந்த முக்கிய ஊடகமும் கேள்வி கேட்கும் நிலை இன்று இல்லை; கேள்வி கேட்கும் நந்தினி போன்ற தனிநபர்களையும் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.

4. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றது. சட்ட ஒழுங்கைக் காக்கவேண்டிய காவல் நிலையங்களிலேயே அதிகமான வன்புணர்வுகள் நடப்பதும் தவறுசெய்தவர்கள் தண்டனையை விட்டு சர்வசாதாரணமாக தப்பிப்பதும், அதிகாரவர்க்கம் அதற்கு துணைபுரிவதும் ஊடகங்களில் கடைசிபக்க விமர்சனங்களாகக் கூட வருவதில்லை.

5. தலித்களின் உரிமை மறுப்பு, சாதியக்கொலைகள், தலித்பெண்கள் வன்புணர்வு, தலித்கள் மீதான சித்ரவதைகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் மிகப் பெரும்பாலானவையும் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன.

6. அதிகாரவர்க்கத்தாலும் ஃபாசிஸ சக்திகளாலும் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம். இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்; முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு கலவரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன; அக்கலவரங்களிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக இளைஞர்களே பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையிடப்படுகின்றனர்.

7. போலி என்கவுண்டர், வெடி(க்காத) குண்டுவழக்கு, தீவிரவாதம்... இந்த வார்த்தைகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டுமென சொந்தமாக்கபட்டுவிட்டது. இந்திய முஜாஹிதீன் என்று அடிக்கடி சொல்லும் மீடியாக்கள், உண்மையைக் கண்டறிய முனையாமல் காவல்துறையின் மவுத் பீஸ்களாக மாறிவிட்டன.

8. இந்திய உள்துறை அமைச்சரே 10 ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுகிறார்; மாலேகான் முதல் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு வரை அனைத்திலும் ஈடுபட்ட பயங்கரவாதி சுவாமி அசிமானந்தா, குண்டுவைக்க தமக்கு டைரக்சன் தந்ததே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தான் என வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனாலும், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட, இல்லாத இந்தியன் முஜாஹிதீன் பெயரையே திரும்பத் திரும்ப உச்சரிக்கும் இந்திய ஊடகங்கள் இந்திய தேசத் தந்தையையே படுகொலை செய்த கோட்சேயை வளர்த்துவிட்ட பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் குறித்து வாயைத் திறக்கவே அஞ்சுகிறது!

9. மோடியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை, இடிக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜித் வழக்கு, முசாபர் நகர் கலவரம் பற்றிய தெளிவான செய்திகள் முதலானவற்றைப் பெரும்பான்மை ஊடகங்கள் மறைத்து விட்டதோடு, நடிகை வீட்டு நாய்க்குட்டியின் பேதி மஞ்சள் கலரில்... போன்ற செய்திகளே அவைகளுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டன!

10. அப்சல் குரு போன்ற தனி நபராக ஆனாலும், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமாக ஆனாலும் முஸ்லிம்கள் சார்ந்த விசயம் எனில் எந்தக் குற்றமும் நிரூபிக்க முடியாத நிலையில்கூட அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதிலேயே ஊடகங்கள் முனைப்பு காட்டுகின்றன.

11. இந்தியாவில் வங்கிகளின் அட்டகாசங்கள் பற்றியும் கடன்களைத் திரும்பப்பெற நடத்தும் ரௌடிசங்கள் பற்றியும் எந்த மீடியாக்களும் அக்கறை கொள்வதில்லை; பாதிக்கப்படுவது மாணவனாக இருந்தாலும் சரி; விவசாயியாக இருந்தாலும் சரி, அவற்றைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை!

12. வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு முதலான மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்கள் பற்றி மக்களின் உணர்வுகளை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.

பசியால் மட்டும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 23 லட்சம் பேர் பலி ஆகின்றனர்.அவர்களின் பசிகளின் வலிகளை எந்த ஊடகத்துறையும் ஓங்கி உரைக்கவில்லை.

13. தங்களுக்குக் கிடைக்கும் லஞ்சம், ஊழல்கள், கருப்பு பண விவகாரம் முதலானவை தொடர்பான செய்திகளை வைத்து மிரட்டி பேரம் பேசும் தரம்கெட்ட மூன்றாம்தர தாதாக்கள் ரேஞ்சுக்குச் சொல மீடியாக்கள் போய்விட்டன! அவை தொடர்பில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையோ அரசியல்வாதிகளையோ மக்கள் மன்றத்தில் நிறுத்துவது இல்லை..

14. காஷ்மீர், அஸ்ஸாம் முதலான மாநில மக்களின் துயர்களை அருந்ததி ராய் போன்ற சில தனிமனிதர்களே தொடர்ந்து போராடி செய்திகளாக முன்வைக்கின்றனர். இந்திய ஊடகங்கள் இவர்களைப் பற்றி எந்த உண்மை செய்திகளையும் முன் வைக்காமல் தொடர்ந்து ஊடக அராஜகம் செய்து வருகின்றன.

அபின்களாக மாறும் மீடியா நிகழ்ச்சிகள்

1. கிரிக்கெட், தரங்கெட்ட சினிமாக்கள், கவர்ச்சி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள், கேவலமான இரட்டை அர்த்த நையாண்டிகள் மற்றும் மதி மயக்கும் இசை நிகழ்ச்சிகளே அனைத்து மீடியாக்களையும் ஆக்கிரமித்துள்ளன.

2. பாலியல் வக்கிரங்கள் மற்றும் பெண்களின் ஆபாச அசைவுகள் மூலம் டிவி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் முக்கியக் குறிகோளாக உள்ளன.

3. சாமியார்களின் அந்தரங்கங்கள், ஆரூடம், மருத்துவம் என்ற பெயரில் பாலின வக்கிரம், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கான மனை நிலங்கள் விற்பனை போன்ற மக்களின் சிந்தனையை எவ்வகையிலும் உயர்த்தாத நிகழ்ச்சிகளே தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.

உரத்த சிந்தனை

1. உலக மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமேயுள்ள யூதர்கள் உலகில் 95% க்கும் அதிகமான ஊடகங்களைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.

2. அந்த ஊடகங்களில் சொல்லும் செய்திகளும் அதன் ஊடகவியலாளர்களின் பெரும்பாலோரின் நிலையும் இவர்கள் மனப்பதிவையும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டவை.

3. ஆதிக்க, ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட இவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களிலிருந்து வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.

4. இந்தியாவிலுள்ள ஊடகங்களில் பெரும்பான்மையும் யூதர்களின் வழிமுறைகளை அடியொற்றும் பார்ப்பன உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

5. அதிகாரவர்க்கத்திற்குத் துணை நிற்கும் இது போன்ற மீடியாக்கள் பாதிக்கபட்ட மக்களின் உணர்வுகளைத் தொட்டுக்கொள்வதற்காகக்கூட வெளிச்சமிட்டுக் காட்டுவதில்லை.

6. உலகில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் மக்கள் அதை குறித்து சிந்தித்து கேள்விகேட்டுவிட முடியாதபடி உலகம் முழுக்க, மக்களின் சிந்தனைகளை நன்மையான விசயங்களிலிருந்து மாற்றி அடிமைப்படுத்தும் ஒரேமாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

7. இஸ்ரேல், அரபு நாடுகளின் மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. சிரியா, பாலஸ்தீன், எகிப்து போன்ற நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிகளை எல்லாம் திட்டமிட்டு மறைக்கின்றன.

8. இந்தியாவில் அடக்கு முறைக்கு உட்பட்ட மக்களின் அழுகுரல்களை இந்திய மீடியாகளின் இசை நிகழ்ச்சிகள் கேட்க விடுவதாக இல்லை

9. அரசின் தவறான திட்டங்களால் குடிமகன் உணவின்றி செத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஊடகங்கள், நடிகைகளின் உள்ளாடைகள் பின்னால் தமது செய்தியாளர்களை அனுப்பி தமது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன.

நமக்கான மாற்றம்

1. துணிச்சலான தத்துவ அறிஞர்கள் மக்களின் உணர்வுகளைச் செய்திகளாக எடுத்துரைத்ததால் பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி எல்லாம் தோன்றி மக்களை அடிமை தனத்திலிருந்து விடுவித்தது. ஒடுக்கப்படும் சமூகம் அதிகார வர்க்கத்திடமிருந்து விடுதலை பெற இன்றைய காலத்தில் நீதிக்கு துணை புரியும் ஒருவன் ஊடகவியலாளனாக மாறுவதைத் தவிர வேற வழி இல்லை...

2. ஆனால், உண்மையிலேயே மக்களுக்காக... நீதிக்காக நிலைகொள்ளும் அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள்..... அல்ல அல்ல... உண்மையான போராளிகள்... ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் மக்களுக்கு எதிராக நடந்த அக்கிரமக்காரர்களின் யுத்தங்களிடையே ஊடுருவிச் சென்று நீதிக்காக, உண்மையான செய்திகளை உலகின் முன்கொண்டுவருவதற்காக வேண்டி தம் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்..

3. எவ்வகையான ஊடகம் இந்தியாவுக்குத் தேவை என்பது இனி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.

4. நீதிக்கான போரில் நீதியை நிலை நிறுத்த பாடுபடும் ஊடகவியலாளனே உண்மையான போர்வீரன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

5. ஊடகம் ஒரு மாபெரும் இயக்கம். அது, நீதிக்கான சத்தியக் கொள்கை இயக்கமாக பரிணமிக்கும் பொழுதே மாபெரும் வெற்றிபெறுகின்றது.

6. பணமும் அதிகாரமும் முதலீடாக வைத்து உருவாக்கிய மீடியாக்களுக்கு மத்தியில் உயர்ந்த சிந்தனையையும் அறிவையும் முதலீடாக வைத்து ஊடகங்கள் உருவாகும் பொழுதே அநீதிக்கான கதவுகள் உடைத்து எறியப்படும் .... அதுதான் உண்மையான ஊடக தர்மமும் கூட!

அபூஷேக் முஹம்மத்

Ref: http://www.inneram.com
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

விளம்பர யுத்திகள் !

>> Friday, February 7, 2014

விளம்பர யுத்திகள் !


மேலும் படிக்க... Read more...

இந்து மாயை -சு.அறிவுக்கரசு

>> Wednesday, February 5, 2014

இந்து மாயை (பகுதி-1) -சு.அறிவுக்கரசு


இந்து மாயை (பகுதி-2) -சு.அறிவுக்கரசு


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP