பில்லி சூனியம் வைப்பவர்களுக்கு Rs.50 லட்சம் பரிசு.!!! ???.
>> Tuesday, August 5, 2014
சூனியத்தினால் பி.ஜைனல் ஆபிதீன் தற்கொலை செய்து கொள்ளுவாரா? இஸ்லாம் X சூனியம் போட்டி ஆரம்பம். சூனியத்தினால் 48 நாட்களுக்குள் பி.ஜைனல் ஆபிதீனை தற்கொலை செய்ய வைக்கிறேன் - அகோரி மணிகண்டன் சவால் .
சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்தில் பேசியிருந்தார். .
அவரது பேச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக காட்டுத்தீப்போல் பரவியது. .
இந்நிலையில்.... .
திருச்சி அரியமங்களம் சர்பநதிக்கரையை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து சூனியம் செய்ய முடியும் என்பதை தாம் நிரூபிக்க தயார் என்று பகிரங்க ஒப்பந்தம் செய்துள்ளார். .
அந்த ஒப்பந்தத்தில் சரியாக 48 நாட்களுக்குள் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களே சூனியத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கிறேன் அல்லது அவரை சூனியத்தின் மூலமாக தற்கொலை செய்ய வைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. .
அகோரி மணிகண்டன் கூறியது போல் 48 நாட்களுக்குள் சூனியம் செய்து வெற்றியடைந்து விட்டால் பி. ஜைனுல் ஆபிதீன் தரப்பினர் 50 லட்சம் ரூபாயை அகோரி மணிகண்டனிடம் ஒப்படைக்க வேண்டும். .
சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. .
ஒப்பந்தம் அமுலில் ஆகும் நாள் 01.08.2014 ஆரம்பம் ஆகிறது. .
சரியாக 48 நாட்கள் கழித்து 18.09.2014 அன்று உண்மையை உலகம் அறிந்து கொள்ள இருக்கிறது. .
இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கே வெற்றி....!! .
1.சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்கு என்று கூறுகின்றார்களே ? .
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-vilambaram/.
2.சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லை என்று சிலர் கூறுகிறார்களே?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-ippoluthu-illai/.
3.சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டியுள்ளது சரியா ?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-panthayam/.
4.#இறைவன் நாடினால் சூனியம் செய்வான் என்று கூறுவது குற்றமா ?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/iraivan-nadinal-suniyam/.
5.50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் #தவ்ஹீத் ஜமாஅத் தர வேண்டும் ?.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/50-latcham-ungal-panam/
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<
3 comments:
சூனியத்தின் மூலம் மூசா நபிக்கு ஏற்பட்டதுபோல் அச்ச உணர்வு நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை போன்ற பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தலாம் அதுவும் அலாஹ் நாடினால் தவிர இந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை குரான் ஹதிஸிலிருந்து விளங்கலாம் அதனால் PJ செய்வது வெறும் விளம்பரமே
//Mohamed Nalim said
சூனியத்தின் மூலம் மூசா நபிக்கு ஏற்பட்டதுபோல் அச்ச உணர்வு நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை போன்ற பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தலாம் அதுவும் அலாஹ் நாடினால் தவிர இந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை குரான் ஹதிஸிலிருந்து விளங்கலாம் அதனால் PJ செய்வது வெறும் விளம்பரமே//
Mohamed Nalim க்கு பி.ஜெயினுலாபுதீன் அவர்களின் பதில்.
சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்கு என்று கூறுகின்றார்களே ? - கேள்வி
சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்காக என்று சிலர் பேசுகிறார்களே?
சர்தார், மதுரை
பதில்:
அது உண்மைதான். சூனியத்துக்கு எந்த ஆற்றலும் இல்லை என்ற கொள்கையை விளம்பரப்படுத்துவதற்குத் தான் இந்த சவால்.
சூனியத்துக்குச் சாவு மணி அடிக்கப்படும் என்பதற்காகவே இந்த விளம்பரம்.
எனக்கு விளம்பரம் தேடுவதற்காக என்ற கருத்தில் சொன்னால் அவர்கள் அவர்கள் வேற்று கிரகத்தில் இருந்து இப்போதுதான் வந்து இறங்கிய ஜீவன்களாக இருக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் மக்கள் என்னை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ அறிந்து வைத்துள்ளனர்.
முஸ்லிமல்லாத மக்களும், முக்கியப் பிரமுகர்களும் என்னை அறிந்து வைத்துள்ளனர்.
இந்த சவால் மூலம் என்னை இப்போது தான் அறிந்து கொள்வார்கள் என்ற அளவுக்கு இவர்களின் பொது அறிவு இருக்கிறது.
மேலும் விளம்பரம் தேடுவதற்காக தனியாக தலையில் முக்காடு போட்டு தனித் தோற்றத்துடன் தன்னைக் காட்டிக் கொண்டு மக்கள் தன்னை மதிக்க வேண்டும் என்று நடப்பவர்களை முதல்தர அயோக்கியர்க்ள் என்று நான் பிரச்சாரம் செய்கிறேன்.
மற்றவர்களைப் போல் இல்லாமல் தனி உடை தனி நடை என்று நடிக்கும் அனைவரும் அயோக்கியர்கள் தான் என்று கூறி வருகிறேன்.
நான் சாதாரண மக்களைப் போன்றவன் அல்ல. உங்களை விட மேலானவன் என்று காட்டிக் கொள்ளுபவன் விளம்பரம் தேடுபவனா? எல்லா மக்களையும் போல் தான் மதகுருமார்களும் நடக்க வேண்டும் என்று சொல்பவன் விளம்பரம் தேடுபவனா?
சுட்டி:http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-vilambaram/#.U-Dg02dadgE
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
குர்ஆன் ஹதீஸில் உள்ள சூனியத்தை வைத்த பந்தயம் கட்டி முடிச்சாச்சு..
குர்ஆன் ஹதீஸ் இல்லை என்று சொல்லுகின்ற ஜோசியம் இப்போ பந்தயத்துல நிக்குது...
அடுத்து...
தனது அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று ஏற்கனவே பலவற்றை மறுத்து, தற்போது எதை எதை மறுத்து, தன் சூனிய பேச்சால் மதி மயங்கிக் கிடக்கும் ஆட்டு மந்தைகளை தன்னைப் போல் இறை மறுப்பாளர்களாக மாற்றப் போகின்றாரோ (மரியாதை கொடுத்தாச்சு)!
யா அல்லாஹ்...
உன்னை ஈமான் கொண்ட இந்த சமுதாயத்தை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!
வழி கெட்ட, வழி தவறிய தலைவர்களுக்கு நேர் வழியை கொடுப்பாயாக!
அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களை மட்டும் தண்டிப்பாயாக!
ஆட்டு மந்தைகளாக அறிவில்லாமல் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் மக்களை நேர்வழி பெறுவதற்கு அருள் புரிவாயாக!
ஆமீன்.
Post a Comment