**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா? சர்வதேச இலக்கிய விழாவா ?

>> Wednesday, January 25, 2012

பெண் பித்தனும் சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவில் வந்து கலந்து கொள்ள முடியாததற்கு கொலை மிரட்டல் என்ற கரடியை அவிழ்த்து விட்டதை நம்பிய அவரைப் போன்ற ஹரி குன்ஸூரு அமிதவ் குமார் என்ற எழுத்து வியாபாரிகள் சாத்தான் ருஷ்டி ஏற்கனவே உளறிய சாத்தானின் கவிதைகளில் சில வரிகளை அவருக்கு பதிலாக விழா ஒருங்கிணைப்பாளர் தடுத்தும் தடையை மீறி விழாமேடையில் வாசித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகள் அல்லது மும்பை நிழல் உலக தாதாக்கள் தன்னை கொலை செய்;யக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தக் காரணத்தால் தான் தன்னால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்று விழாவைப் புறக்கனித்தற்கான காரணத்தை சாத்தான் ருஷ்டி கூறி உள்ளார்.

ஆனால் இவரை விட இஸ்லாத்தை கீழ்தரமான நடையில் எழுதியதுடன் பெண்ணினத்தை அழிவிற்கு இழுத்துச் செல்லும் நச்சுக் கருத்துக்களை இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் பரப்பிய இஸ்லாமியப் பெயர் தாங்கிய தஸ்லீமா நஸ்ரீன் 1994ல் வங்க தேசத்திலிருந்து விரட்டப்பட்டப் பின் உலகின் பல நாடுகளில் தங்கிவிட்டு இறுதியாக இந்தியாவுக்கு குடியேறுவதாக அறிவித்ததும் இப்பொழுது பத்திரிகைகள் இவருக்கு கிளப்பி விட்ட பீதியை விட அப்பொழுது அவருக்கும் பீதியைக் கிளப்பி விட்டன. ஆனால் அந்த அச்சுருத்தலை பொருட்படுத்தாமல் அவர் இந்தியாவுக்குள் வந்தார்.

ஒருப் பெண்ணுக்கு இருந்த துணிச்சல் கூட இந்த ஆண் தொடை நடுங்கிக்கு இருக்கவில்லை என்பது எழுத்து வியாபாரிகளுக்கு மத்தியில் மிகப் பெரிய ஒரு இழுக்காகும். இந்த பேடித் தனத்தைத் தான் மேல்படி விழாவில் அவர்கள் பேசி இருக்க வேண்டும்.

உயிரை துச்சமெனக் கருதி சர்வதேச இலக்கிய விழாவிற்கு வருகை தர மறுத்த இவரது பேடித் தனத்தை பேசுவதை விட்டு பொய்களைப் புணைந்து சாத்தானின் கவிதைகள் எனும் பெயரில் அவர் ஏற்கனவே எடுத்த வாந்தியை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் விழுங்கி விழா மேடையில் உமிழ்ந்துள்ளனர்;.

விளம்பரமே பிரதான நோக்கம்.
சாத்தான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகளுக்குப் பிறகு அவர் எழுதிய பிற நூல்கள் அவ்வளவாக உலகச் சந்தையில் விலை போக வில்லை அதனால் மீண்டும் தன்னுடையப் புத்தகங்கள் விலை போக வேண்டும் என்பதற்காக ஜெய்ப்பூர் இலக்கிய விழா மேடையை ஹரி குன்ஸூரு அமிதவ் குமாரைக் கொண்டு விளம்பர மேடையாக மாற்றி உள்ளார்.

விழா முடிந்தப் பின் எனக்கு எந்த கொலை மிரட்டலும் இல்லை உளவுத்துறை கூறியதாக வேண்டுமென்றே என்னை ராஜஸ்தான் அரசு பொய் சொல்லித் தடுத்து விட்டது என்று விளம்பரத்துக்காக அடுத்த அந்தர் பல்டி அடித்தார்.

விளம்பரத்துக்காக இவர் அடித்த அந்தர் பல்டி ஆகாச பல்டியைப் பார்த்த ராஜஸ்தான் அரசு இறதியாக இவருக்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசக் கொடுத்த சான்ஸையும் ரத்துப் பண்ணி விட்டது.

அவரது அடுத்தப் புத்தகம் யூத, கிறுத்தவ சந்தையில் விற்பனை சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரது ட்விட்டரில் மேல்படி அவரது இரு விளம்பர தாரரையும் ஆஹா! ஓஹோ! என்றுப் புகழ்ந்துத் தள்ளியதுடன் நில்லாமல் என்னை எதிர்த்து மதப் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம்களுக்குத் துணிவிருந்தால் இஸ்ரேலில் சென்று மதப் பிரச்சாரம் செய்து பார்க்கட்டும் என்றும் விதண்டாவாதம் எழுதி உள்;ளார்.

இதையே திருப்பி நாம் அவரை கேட்கின்றோம் துணிவிருந்தால் பிரிட்டனில் இருந்து கொண்டே கிருஸ்தவ மதத்தை எதிர்த்து எழுதி புத்தகத்தை விற்பனை செய்து பார்க்கட்டும். புத்தகம் விற்பனை ஆவது அடுத்ததாக இருக்கட்டும் இவர் அங்கு இருக்க முடியுமா ? என்பதை முதலாவதாக சிந்திக்கட்டும்.

கிறுத்தவ மதத்தை எதிர்த்து எழுத ஒன்றுமில்லை என்று இவரால் மனசாட்சிக்கு திரையிட்டுக் கூற முடியுமா ? அவ்வாறெனில் புரட்டட்டும் உன்னதப்பாட்டு அத்தியாயத்தை!  துணிவிருந்தால் எழுதட்டும் பைபிள் பவுலின் கவிதைகள் என்று.

முடியாது பணத்துக்காகவும், படா டோப வாழ்க்கைக்காகவும் தான் பெண் பித்தனாகிய சாத்தான் ருஷ்டி பிரிட்டனில் தஞ்சம் புகுந்து மேற்காணும் ஈனச் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை மொத்த உலகும் அறியும்.

நியாய அநியாயம் பாராத அர்த்தமற்றப் போராட்டங்கள்.

ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் நியாய அநியாயம் பாராமல் மொத்த மருத்துவர்களும் கூடிக் குரலெழுப்புவது ஒரு காவலர் தாக்கப்பட்டால் நியாய அநியாயம் பாராமல் மொத்த காவலர்களும் கூடிக் குரலெழுப்புவது ஒரு எழுத்தர் விமர்சிக்கப்;பட்டால் நியாய அநியாயம் பாராமல் மொத்த எழுத்தர்களும் கூடிக் குரலெழுப்பும் போக்கு படித்தவர்கள் மத்தியிலும் ஊடுருவி வருவது மிகப் பெரும் ஆபத்தானதாகும். - அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

ருஷ்டிக்கு ஆப்பு! வச்சது யாரு?
நல்ல இலக்கியங்களைப் படைத்து பேர் வாங்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வெவகாரமா எதையாவது எழுதி பேர் வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சல்மான் ருஷ்டி இதில் இரண்டாம் ரகம். இரண்டாம் தரம் (Second rated) என்றும் சொல்லலாம். நானா சொல்லலீங்க.. டெய்லி மெய்ல் இணையத் தளத்துல அப்படித்தான் போட்டிருக்காங்க.

நேரம் இருந்தா இந்தக் கட்டுரையை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. செம நக்கலா இருக்கும்.

25 வருசத்துக்கு முன்னாடி 'மிட்நைட் சில்ட்ரன்' அப்படின்னு ஒரு புத்தகம் எழுதினாராம் ருஷ்டி. அதுக்கு 'புக்கர் ப்ரைஸ்' எனப்படும் விருது கொடுத்தார்களாம். அதற்குப் பிறகு அவர் எழுதிய எல்லா புத்தகங்களுமே 'படிக்கவே முடியாத திராபைகள்' என்கிறது இந்த இணையத் தளம்.

இந்த அழகுல, அவரோட இன்னொரு புத்தகத்துக்கும் 'புக்கர் ப்ரைஸ்' கிடைக்கலேன்னு விழா நடந்த மண்டபத்து டாய்லெட்டுக்குள்ள போய் தேம்பித் தேம்பி அழுதாராம் பார்ட்டி! கோழைத்தனமான, திமிர் பிடித்த, அகம்பாவக்காரர் ருஷ்டி என்றும் இந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

சரி, அந்த பழங்கதையெல்லாம் கிடக்கட்டும். நாம லேட்டஸ்ட் மேட்டருக்கு வருவோம்..

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்த ருஷ்டிக்கு விழா அமைப்பாளர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்களாம்.

மஹராஷ்டிராவிலிருந்து வந்த உளவுத்துறை தகவலின்படி மும்பை தாதா ஒருவர் ருஷ்டியை ஒழித்துக் கட்டுவதற்காக பணம் மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து இரண்டு அடியாட்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பியிருப்பதாகவும், அதனால் அவரை விழாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டிருந்ததாம். அதே மின்னஞ்சலில் ராஜஸ்தான் உயர் மட்ட அரசு அதிகாரிகள் சிலருக்கும் காப்பி அனுப்பப்பட்டிருந்ததாம்.

ஈரான் கொமெய்னியின் பிரபல ஃபத்வாவிற்குப் பிறகு 'எங்கே இருக்கிறார்?' என்றே தெரியாமல் நாடு நாடாக ஒளிந்து திரிந்துக் கொண்டிருந்த ருஷ்டி இப்பத்தான் வெளியுலகத்திற்கு வந்து மாடல் அழகிகளுடன் சல்லாபம், திருமணம், விவாகரத்து என்று வாழ்க்கையை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். 'மறுபடியும் முதல்லேருந்தா?' என்று அதிர்ந்து போனார் அவர்.

'அவிங்க யாருன்னாச்சும் சொல்லுங்கய்யா..' என்று ருஷ்டி கேட்டுக்கொண்டதால் மூன்று நபர்களின் பெயர்களை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். மும்பையில் உள்ள தமது நண்பர்கள் மூலம் இந்த நபர்களை பற்றி விசாரித்திருக்கிறார் ருஷ்டி.

அதில் ஒரு பெயர் சகிப் நச்சன். இவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் தொடர்புடையவராம்.

எந்த சிமி? இந்தியாவுல எங்கேயாவது குண்டு வெடிச்சா வெடி சத்தம் அடங்குறதுக்குள்ள டிவியிலே எல்லாம் சொல்வாங்களே, 'குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம்'னு, அதே சிமிதான்.

மற்ற இரண்டு பெயர்களைப் பற்றி ருஷ்டியின் நண்பர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்று பெயர்களையும் படித்து விட்டு மும்பை போலிஸ்காரங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்களாம், அப்படி யாருமே இல்லேன்னு.! என்ன கொடுமை சார் இது?

அப்படின்னா, எந்த மும்பை தாதாவும் இவரை ஒழித்துக்கட்ட அடியாட்களை அனுப்பவில்லையா? அப்ப ஏன் மஹராஷ்டிரா உளவுத்துறை அப்படி ஒரு தகவலை அனுப்புனாங்க என்று கேட்டால், 'நாங்க அப்படி எதுவும் சொல்லவில்லையே!' என்று அவர்கள் மறுத்து விட்டார்களாம்.

அப்படின்னா மத்திய உளவுத்துறையா இருக்கும்னு டெல்லியில கேட்டா, 'எங்களுக்கும் ஒன்னும் தெரியாது'ன்னு கையை விரிச்சுட்டாங்களாம். அப்ப ராஜஸ்தான் போலீஸ்? அங்கேயும் அதே பதில்!

நேரில்தான் கலந்துக் கொள்ள முடியவில்லை.. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவாவது விழாவில் பேசலாம் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அதிலும் ஆப்பு வைத்து விட்டார்கள்.

கடுப்பாகிப்போன ருஷ்டி, 'இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கட்சிதான். உ.பி.யில் நடக்க இருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள்தான் இந்த சதித்திட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்' என்று ஒரு பேட்டியில் கூற, 'எங்களுக்கு இதுதான் வேலையா?' என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார் காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி.

இப்ப பிரச்னை என்னன்னா, ருஷ்டிக்கு இந்த ஆப்பை வச்சது யாரு?

எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்கையா! - மரைக்காயர் பக்கம்

Thanks to Source: மரைக்காயர் பக்கம். ருஷ்டிக்கு ஆப்பு! வச்சது யாரு?

--------------


இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

4 comments:

NKS.ஹாஜா மைதீன் January 25, 2012 at 5:47 PM  

மிக சரியாக சொன்னீர்கள்...

suvanappiriyan January 25, 2012 at 9:10 PM  

Assalam alaikkum!

Best article vanjoor bhai.

Seeni January 26, 2012 at 4:06 PM  

good msg!

PUTHIYATHENRAL February 9, 2012 at 4:14 AM  

சல்மான் ருஷ்டி இவன் மேற்கத்திய நாடுகளின் கண்டுபிடிப்பு. இவன் பணமும் புகழும் பெற ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி எழுதி அதைவைத்து பெரும் பணம் சம்பாதித்து இலண்டனில் சுகபோகமாக வாழ்கிறான்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP