**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி !

>> Monday, May 31, 2010

" நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் ! ஆனால், நீங்கள் அழுதால், நீங்கள் மட்டும் தனியாகத்தான் அழுதாக வேண்டும்!'' உலகத்தில் நாம் கேள்விப்பட்ட பொன்மொழி இது.

இதை ""முறுவலித்து முகம் மலர்ந்து நோக்குங்கள் ! உடனே உலகமும் அப்படியே உங்களை முறுவலித்து முகம் மலர்ந்து நோக்கும் !

ஆனால், நீங்கள் வெறுத்து முகத்தை முறுக்கிக் கொண்டால் நீங்கள் மட்டும் தனியாய் அப்படி வெறுத்து முகத்தை முறுக்கிக் கொண்டிருக்க வேண்டும்'' என்று சொல்லலாம்.

முகம் மலர்ந்து முறுவலிக்கும்போது ஒரு புன்னகையானது, இன்பம், மகிழ்ச்சி, அன்பு, தயை ஆகிய பேறுகளை வெளிப்படுத்துகிறது. அது பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதாகும். நன்றி பரிமாறிக்கொள்வதாகும். வாழ்த்திக் கொள்வதாகும்.

ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் நட்பின் சைகை ஆகும். முறுவலித்துக் காட்டும் அந்த முக மலர்ச்சியானது ""ஒட்டுவார் ஒட்டி'' யாகும்.

அது ஒளிமயமான ஆளுமையுடனும், உவகைமயமான உணர்வுடனும் ஒருவரையொருவர் ""தொடுவதன்'' மூலம் பரவுகிறது. இந்த விருப்பத்துக்குரிய பழக்கம் உண்மையிலேயே ""கவர்ச்சி''கொண்டதாகும்.

உங்கள் இல்லத்திலாயினும் சரி, உங்கள் அலுவலகத்திலாயினும் சரி, பொருள் வாங்கும் கடையிலாயினும் சரி, அல்லது வழி நடக்கும் நடையிலானும் சரி உங்கள் நாளை முறுவல் ததும்பும் முக மலர்ச்சியுடன் தொடங்குங்கள் !

சற்றே கவனியுங்கள் ! நீங்கள் பார்க்கிற ஒவ்வொருவரும் உங்களுக்கு அறிமுகமற்ற அந்நியர் ஒருவரும்கூட ஒரு மகிழ்ச்சியான புன்னகையை உங்களுக்குப் பதிலாக அளிக்கிறாரா, இல்லையா ? பாருங்கள் !

இந்தப் பரந்த மனப்பான்மை கொண்ட, மகிழ்ச்சி தோய்ந்த தோற்றத்தைப் போகுமிடமெல்லாம் உங்களுடன் நீங்கள் கொண்டு சென்றால், இது எவ்வளவு தூரம் உங்களுக்கு உதவுகிறது என்று தெரிந்து நீங்களே வியப்படைவீர்கள் !

உங்கள் தொழில் இதனால் சுலபமாகும். உங்களைச் சார்ந்த முழுச் சூழலும் மாறி விடும். உங்களுடன், ஒத்துவராதவர்களும்கூட, மகிழ்வையும், மனத்துணிவையும் பரப்பும் இந்த உங்கள்முயற்சியில் இணங்கி ஒத்துவருவார்கள்.

இது உங்கள் வாழ்வில் அற்புதமான வழியில் மனநிறைவான வழியில் பிரதிபலிக்கும்

நன்றி: மஞ்சரி
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

>> Thursday, May 27, 2010

வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்
நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.
நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள்.

“சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.
சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம்.

நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும்.

ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.
இன்னொரு வகையும் உண்டு.

பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம்.

அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்?

நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.

குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது.
நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.

முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.

பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம்.

எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.

அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிற போதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம்.
அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.

மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம்.
வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.-- - சுந்தர மூர்த்தி
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

கட்டிப்பிடி வைத்தியம்’. அட கட்டிபிடி கட்டிபிடிடா. ‘

>> Wednesday, May 26, 2010

திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்..... திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?
மேலும் படிக்க...Read more...
************************************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

உங்கள் வாழ்க்கையில் வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா? வளர்க்கிறீர்களா..?

>> Monday, May 24, 2010

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வட்டத்தில் சுழல்பவராக மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் காண்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ள, இதோ சில வழிகள்.

நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்று.

ஒரே தொழிலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும்போது வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்படுவது என்பதற்கும், ஒரே விதமாக செயல்படுவது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

உதாரணமாக ஒரு ஜவுளிக்கடையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஜவுளிக்கடை ஒரு கிளையுடன் இயங்குகிறபோது அந்தக் கிளையிலேயே புதிய புதிய பிரிவுகள் கொண்டு வருவது, நவீன ரகங்களை அறிமுகப்படுத்துவது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.

அதே நிறுவனம், புதிய புதிய கிளைகளைத் தொடங்கி இன்னும் பல பகுதிகளில் செயல்படுகிறபோது வளர்வதாக அர்த்தம்.

இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனிமனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர் தன்னுடைய சக்தி முழுவதையும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உரியதாக்கி நிறுவனத்தை வளர்ப்பது ஒரு வகை.

பொதுப்பணி, உபதொழில், கொஞ்சம் நிலம் வாங்கி தோட்டக்கலை வளர்ப்பில் ஈடுபடுவது, பங்குச்சந்தை என்று அவரவர் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப விரிவாக்கம் செய்து கொண்டே போனால் வளர்வதாக அர்த்தம்.

பொதுவாக, புதிதாய் எதையும் முயன்று பார்ப்பதில் தயக்கம் உள்ளவர்களும், தங்களுக்கு வசதியான வாழ்க்கையை சிரமங்களோடு வாழ்ந்தால்கூடப் போதுமென்று நினைப்பவர்களும் வட்டங்களுக்குள்ளேயே வாழ்வார்கள்.

வட்டத்தில் சுழல்வதற்கும் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு வாகனத்தின் சக்கரத்திற்கும் வாகனத்தில் செல்பவருக்கும் உள்ள வேறுபாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வழவழப்பான சாலையாக இருந்தாலும் சரி, குண்டுங்குழியுமான பாதையாக இருந்தாலும் சரி, வாகனத்தில் செல்பவரோ புதிய புதிய இடங்களைப் பார்க்கிறார்.

போகும் இடங்களில் எத்தனையோ வேலைகளைச் செய்கிறார்!
சக்கரம் சுழல்வதால்தான் அவர் செல்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் வாகனத்தில் பயணம் செய்பவர் பெறும் பயன்களையெல்லாம் வண்டியின் சக்கரம் பெறுவதில்லை.

ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பவர்கள் வளர்ச்சிகள் எதையும் காண்பதில்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வட்டத்தில் சுழல்பவராக மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் காண்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ள, இதோ சில வழிகள்.

நீங்கள் அன்றாடம் செய்கிற வேலைகளில், முதலிடம் தருகிற வேலைகள் என்னென்ன என்பதைப் பாருங்கள். அவை கீழ்க்கண்ட அம்சங்களுக்குள் அடங்குகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்:

1. நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு வருமானம் தருகிறதா?

2. செய்தே தீரவேண்டிய அளவுக்கு முக்கியமானதாய் அமைகிறதா?

3. நீங்கள் கொண்டிருக்கும் இலட்சியங்களுக்கும் வகுத்திருக்கும் இலக்குகளுக்கும் தொடர்புள்ளதாய் இருக்கிறதா?

4. மற்றவர்களுக்கு பிரித்துத்தர முடியாமல் நீங்கள்தான் செய்யவேண்டும் என்ற அளவுக்கு உங்கள் கவனத்துக்குரியதாய் இருக்கிறதா?

இந்தக்கேள்விகளுக்கு பதில் கண்ட பிறகே ஒவ்வொரு வேலையையும் தேர்வு செய்யவேண்டும்.

அதாவது, ஒரு வாரம் முழுவதும் நீங்கள் செய்து முடிக்கவேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டு அவற்றை இந்தக் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த நான்கு கேள்விகளில் ஒன்றில்கூட உள்ளடங்காத வேலைகள், உங்கள் வளர்ச்சிக்குத் துணை செய்யாதவை என்று தனியாகப் பிரித்துவிட வேண்டும்.

அவற்றை, நிறைய ஓய்வு நேரம் இருக்கையில் செய்வதா, அல்லது மற்றவர்களை செய்யச் சொல்வதா, தேவையில்லாத பட்சத்தில் செய்யாமலேயே விடுவதா என்றெல்லாம் யோசித்துத் தெளிவாக முடிவெடுங்கள்.

உங்கள் ஒவ்வொரு செயலிலும் உச்சகட்டமான பலன் பெறுங்கள்.
ராதாகிருஷ்ணன்
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா?

>> Friday, May 21, 2010

அவசியம் படியுங்கள். பலரைப் படிய வைத்து, படுக்கைக்கு அழைப்பதும் பலரோடு உடலுறவு கொள்வதும் ஒன்றும் பெரிய சாதனை அல்ல. மிருகங்கள் எப்போதும் அதைத்தான் செய்கின்றன.ஒரே ஒரு வித்தியாசம். அவைகளுக்காக யாரும் லாட்ஜ்களைக் கட்டி வைக்கவில்லை. மற்றபடி இதில் மார்தட்டிக் கொள்ள ஏதுமில்லை என்பது இளைய தலைமுறைக்கு நன்கு உறைக்க வேண்டாவோ!
ஒளிமயமான எதிர்காலம்
- சொல்வேந்தர் சுகிசிவம்.

ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும்.

அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே கூடாது. தான் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே இதுதான், என்கிற சராசரியிஸத்தின் சம்ரட்சகர்கள் பலர் நிரம்பி வழியும் பூமி இது.

இவர்களால் மக்கள் தொகை புள்ளி விவரத்தில் இடம்பெற முடியும். தேசத்தின் தனிநபர் வருமான விகிதத்தைத் தாழ்த்த முடியும். வாக்காளர் பட்டியல், ஜனன மரணப் பட்டியல், போன்ற பட்டியலில் இடம் பிடிக்க முடியும். மற்றபடி இவர்கள் ஜடங்கள். சுற்றிக் கொண்டிருக்கும் சோம்பேறிகள். கண்விழித்து உறங்கும் கபோதிகள். கட்டி வைக்கப்படாத விலங்குகள்.

ஏன்? ஏன் இவர்களால் மக்கள் தொகை புள்ளிவிவரம் மாறுகிறதே ஒழிய வேறு எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. குடும்பமோ தேசமோ உலகமோ அரை அங்குல வளர்ச்சி கூட இவர்களால் அடைவதில்லை. இவர்கள் எதையுமே கண்டுபிடிக்க மாட்டார்கள்.

ஆனால், எல்லாக் கண்டுபிடிப்புகளையும் அனுபவிக்க ஆசைப் படுவார்கள். உழைக்க மாட்டார்கள். எல்லார் உழைப்பையும் உறிஞ்சிக் கொள்வார்கள். அதிகம் சம்பாதிக்க மாட்டார்கள். ஆனால், அடுத்தவர் சம்பாத்தியத்தில் அதிகம் உறிஞ்சுவார்கள். மரப் பொந்தில் வளர்ந்து மரத்தை உறிஞ்சும் காளான்கள் போல.

இவர்களுக்குத் தன்மானம், சுயகௌரவம், தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, தியாக உணர்வு, தொலை நோக்குச் சிந்தனை, தலைமைப் பண்பு இப்படி எதுவுமே இருக்காது.

ஆண், பெண் என்கிற பால் வேறுபாட்டு அடையாளங்கள்தான் இவர்களது பிரதான பயன்பாடுகள். இவர்கள் அதிகம் வேலை செய்யாவிட்டாலும் இவர்கள் ஜீரண மண்டலம் மட்டுமே அதிகம் வேலை செய்திருக்கும். இந்த மானு… சாபங்களாய் மானாவரி மனிதர்களாய் சாகப்பிறந்த சராசரிகளாக நீங்கள் செத்தொழிவதோ!

கல்லை வைர மணியாக்கல், செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் பன்றிப் போத்தைச் சிங்க ஏறு ஆக்கல், மண்ணை வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் என்று முடியாதவற்றை முடியவைக்கும் பாரதித்தனம் உங்களுக்கு வேண்டாவோ.

டக்கர் பிகர்டா மச்சி என்று ஜொள்ளு வடிய பின்புலப் பாதுகாப்புச் செய்து ஊர்வலம் வந்து பல்வேறு டெக்னிக்குகளால் மெல்ல மெல்ல சரிய வைத்து படிய வைத்து, சமயம் பார்த்து தள்ளிக் கொண்டு போய் குப்பை கொட்டுகிற அசிங்கமான வேலையை, அயோக்கிய லீலையை மிகப் பெரிய வீரதீரப்பிரதாபமாக நீட்டி முடிக்கும் வெட்டிப் பெருமைக்கு நீங்கள் அடிமையாவதோ!

பலரைப் படிய வைத்து, படுக்கைக்கு அழைப்பதும் பலரோடு உடலுறவு கொள்வதும் ஒன்றும் பெரிய சாதனை அல்ல. மிருகங்கள் எப்போதும் அதைத்தான் செய்கின்றன.

ஒரே ஒரு வித்தியாசம். அவைகளுக்காக யாரும் லாட்ஜ்களைக் கட்டி வைக்கவில்லை. மற்றபடி இதில் மார்தட்டிக் கொள்ள ஏதுமில்லை என்பது இளையதலை முறைக்கு நன்கு உறைக்க வேண்டாவோ!

வாழவேண்டும் என்கிற வெறியில் திருச்சியில் இருந்து சென்னைக்குச் சைக்கிளில் வர உங்களுக்குத் துணிச்சல் உண்டா?

வந்தவர் ந.ந.வாசன். ஜெமினி ஸ்டுடியோ, ஆனந்த விகடன் என்று பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ந.ந. வாசன் அவர்கள் ஒரு சாதாரண சமையல்கார விதவைத் தாயின் எளிய மகன்.

ஆனால், முடியாதவற்றை முடிக்கும் அவரது சாம்ராஜ்ய சரித்திரத்தின் முன்னுரை திருச்சி முதல் சென்னை வரையான சைக்கிள் பயணம். டிக்கட்டில்லாமல் ரயிலில் போகும் திருட்டுத் தனத்தை விட சைக்கிளை மிதிக்கும் சங்கடம் மேல் என்று கஷ்டத்தை நேசித்த மனோபாவம்தான் அவரைச் சக்கரவர்த்தியாக்கியது.

முடியாததை முடிப்பவர்களே முடிசூடிக் கொள்கிறார்கள். முடியக் கூடியதை முடிப்பவர்கள் பாவம் முடிவெட்டிக் கொள்கிறார்கள். உங்கள் சிரம் முடிவெட்டத் தோன்றியதா? முடிசூடத் தோன்றியதா? முடிவெடுக்க வேண்டாவோ?

ஐம்பத்தாறு சமஸ்தானங்கள் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொள்ள ஆசைப்பட்டபோது அத்தனை பேரையும் அடக்குவது நடக்கிறகாரியமா? முடியாது முடியாது என்று பலரும் நினைத்தபோது ஏன் முடியாது அடக்கிக் காட்டுகிறேன்” என்று அடக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். முடியாததை முடித்த முடி மன்னர். நீங்கள் அவரை விட மட்டமா?

எமர்ஜன்ஸி என்கிற இரும்புக் கைகளால் இந்திராகாந்தி இந்தியாவைப் பிசைந்தபோது திராவிட இயக்கமும் சரி, இந்து இயக்கமும் சரி காப்பாற்ற முடியாதபடி கரைந்துபோகும் என்றே எல்லோரும் கணக்குப் போட்டார்கள்.

ஆனால், இரண்டுமே கட்டுக் கோப்பாகக் காப்பாற்றப்பட்டு மாநிலத்திலும் மத்தியிலும் பதவியேற்று வரலாறு படைத்தார்களே எப்படி? எப்படி? சமைந்தது எப்படி என்று பாட்டுப் பாடினால் போதாது. சாவிலிருந்து எழுந்தது எப்படி என்ற சரித்திரம் படிக்க வேண்டும்.

இந்து இயக்கம் திராவிட இயக்கம் ஆகிய இரண்டு இயக்கங்களுமே எதிர் எதிரானவை என்றாலும் சாக மறுக்கும் உயிர் ஆவேசம், முடியாததை முடிக்கும் மனோபாவம் இருவருக்கம் பொதுவானவை. அதனால்தான் சாம்பலிலிருந்து புறப்படும் ஃபினிக்ஸ் பறவைபோல (கற்பனைதான்) சாவிலிருந்து புறப்பட்டவை அந்த இரண்டு இயக்கங்களும்!

ஒரு கோவிலின் மேல் கூரையில் ஓவியம் வரையவேண்டும். உட்கார்ந்தபடியோ நின்றபடியோ அல்ல. படுத்தபடி மேல் கூரையில் வரைவதால் சாரம் கட்டி அதில் படுத்தபடி பலமணி நேரம் வரைய வேண்டும். ஒருநாள் இரு நாள் அல்ல நான்கரை ஆண்டுகள் வரைந்தார் ஒருவர். உங்களால் அப்படி உழைக்கமுடியுமா?

உணவு நேரத்திற்கு உணவு கிடையாது. கொடுமையான பெயிண்ட் வாசனையால் நுரையீரல் கோளாறு ஏற்பட உடல்நலம் கெட எதையுமே பொருட்படுத்தாமல் ஐயாயிரத்து எண்ணூறு சதுர அடி பரப்பளவில் முந்நூற்று நாற்பத்திமூன்று அமர ஓவியங்களை வரைந்து பைபிளை உயிர்ப்பித்த மைக்கல் ஏஞ்சலோதான் அந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர்.

அவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல சிற்பி, கட்டடக் கலை வல்லுநர். இடைஇடையே இந்தப் பணிகள் வேறு. முடியாததை முடித்ததால் ஓவியத்தில் முடிசூடிய மன்னர் அவர்.

கல்லே இல்லாத ஊரில் கற்கோவில். கிரேனே இல்லாத போது பல டன் எடையுள்ள கல்லை சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டுபோன சாதனையாளன். முடியாததை முடித்தவன் ராஜ ராஜ சோழன். அதனால் தான் சோழ அரசர்களின் மணி மகுடம் அவன்.

அடிமையாக இருப்பவர்கள். அடிபடவே பிறந்தவர்கள் என்று நசுக்கப்பட்ட தொழிலாளர்கள் தோளை நிமிர்த்தி பொதுவுடமை என்கிற வாளை நிமிர்த்தி அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து ஆட்சிச் செங்கோலைத் தொழிலாளர் கையில் தந்து உலகம் அதுவரை கண்டிராத ஆட்சிமுறைக்கு வித்திட்டாரே கார்ல மார்க்ஸ். அவரென்ன முடியக் கூடியதை முடித்தவரா? முடியாததை முடித்தவரா? யோசியுங்கள். யோசியுங்கள்.

கடல் வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாகப் பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும் குற்றாவளிகளும் அனுப்பப்பட்டனர்.

பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது. மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம். புறப்பட்ட இடமே போய்ச் சேருவோம் என்றான்.

உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.

ஒரு புதுக் கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் தமக்கென்று உள்ள மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்க தான் தயார். அந்த உணவு துணைகொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பயணம் தொடர்வோம். திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார்.

அது நியாயமாகப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. உணவைக் கருதி திரும்பி இருந்தால், கொலம்பஸ் உலகப் புகழ் வெறும் புஸ். முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.
முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம். முடிவதை முடிப்பதற்கு அல்ல!

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

>> Thursday, May 20, 2010

உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது என்று வேர்க்கடலையைப் பற்றி கவிஞர் ஒருவர் பாடி வைத்தார். காந்தி தாத்தா தினம் கொறித்தது, கடலை என்பது மிகவும் பிரபல்யம்.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.

வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.

அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.

அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், ''சாப்பிட்டது போதும்'' என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.

இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.

இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.

குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.

இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.

பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது.

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா?ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.

ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.

கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.

எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

நன்றி: NIDUR.INFO


வியக்க வைக்கும் வேர்கடலை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை:

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்என்கிறார். சென்னை அரும்பாக்கம் ரத்னா மருத்துவ மனையின்இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.
நீரழிவு நோயை தடுக்கும்: 


நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.


இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு - 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் - 0.85 கி
ஐசோலூசின் - 0.85 மி.கி.
லூசின் - 1.625 மி.கி.
லைசின் - 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
காப்பர் - 11.44 மி.கி.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.கி.
மேங்கனீஸ் - 1.934 மி.கி.
பாஸ்பரஸ் - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு



இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

***இங்கே***


மேலும் படிக்க... Read more...

உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் ?

>> Tuesday, May 18, 2010

மாபெரும் சபையினில் நீ நடந்தால்… நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்!
இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.

நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டு எல்லாம் வேண்டுமென்றால் நாமே எளிதாக அவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் தோற்றம் : உங்களைப் பற்றிய முதல் அபிப்பிராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது. தோற்றம் என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல.

உங்கள் நலனில் உங்களுக்கிருக்கும் அக்கறை, உங்கள் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணிப் பாதுகாக்கிற விதம், எல்லாம் இணைந்துதான் உங்களைப் பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறது.

உங்கள் இடம்: அலுவலகச் சூழல், உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உங்கள் அலுவலகத்தின் ஒழுங்கு, ஆடம்பரமில்லாத அழகு, உங்கள் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே, எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாகச் செய்பவர் என்கிற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் வெளிப்பாடு : உடலசைவுகளும், உச்சரிக்கும் வார்த்தைகளும் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை அழுத்தமாக ஏற்படுத்தக் கூடியவை.

பலரும், மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசுவதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்குவதாக அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள்.

ஆனால், ஒரு துறையில் நிபுணராக இருப்பவர் சிக்கலான விஷயங்களையும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிதாகச் சொல்பவர்தான். எனவே, மற்றவர்களின் சிக்கல்களை எளிதாக்குபவரே மதிக்கப்படுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நேரந்தவறாமை : கடுகடு என்றிருக்கும் முகம்தான் கண்டிப்பை வெளிப்படுத்தும் என்றில்லை. நேரந் தவறாமை, சொன்ன சொல் தவறாமை போன்ற அம்சங்கள், “நீங்கள் கண்டிப்பானவர் என்ற உணர்வை ஏற்படுத்தும். உங்கள் மீதான மரியாதையை மேம்படுத்தும்.

நடப்புகளை நன்கறிதல் : உங்கள் துறையில் மட்டுமின்றி உலகில் பொதுவாக நடைபெறும் விஷயங்களை ஓரளவு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நாலும் தெரிஞ்சவர் இவர் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டு ஒன்றும் தெரியாமல் இருக்கலாமா என்ன?

தெளிவாக வழிகாட்டுதல் : ஏதேனும் ஓர் இடத்திற்குப் போக வழி கேட்டால் கூட, தனக்குத் தெரியாது என்பதை வெளிப்படுத்த விருப்பமின்றி சுற்றிவிடுகிற இயல்பு நிறைய மனிதர்களுக்கு உண்டு.

நம்மிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு சரியாக வழி காட்டுவது நம்முடைய கடமை. ஒருவேளை நமக்குத் தெரியவே தெரியாத விஷயமென்றால், யாரை அணுகலாம் என்பதைத் தெளிவாகவும், துல்லியமாகவும் சொல்லி விடுவது நல்லது.

இதன் மூலம் நமக்குத் தெரியாத விஷயங்களில் கூட “வழிகாட்டியாக” விளங்க முடியும்.

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. எனவே, உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால், மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்களேன்!

SOURCE:NAMBIKKAI.
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆக யோசனைகள்?

>> Friday, May 14, 2010

உலகம் கருவறையா?. கல்லறையா? உலகம் மண்தான். உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை! முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.

முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார்.

முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார்.

பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் யாருக்கெல்லாம் அவை வேண்டுமோ அவர்களை எல்லாம் உடனே இங்கே வரச் சொல்லிவிடுங்கள்” என்று உரக்கக் கூவினார்.

அவ்வளவுதான்… செய்தி விஷம் போல பரவியது. திபுதிபு என்று கூட்டம் சேர்ந்தது.

முல்லா சொல்லப் போகும் யோசனைக்காகக் கூட்டம் அமைதியாகக் காத்திருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து “இன்னும் யாராவது வரவேண்டி இருக்கிறதா?” என்றார் முல்லா… “இல்லை. மற்றவர்கள் வரமாட்டார்கள்… வர மறுத்து விட்டார்கள். நாங்கள்தான் உங்கள் அரிய யோசனைகளைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றது கூட்டம்.

வெளியூரில் இருந்து வந்து முல்லாவிடம் ஏதோ சவால்விட்ட நபரைப் பார்த்து “இவர்களை நன்றாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு முல்லா எழுந்து புறப்பட ஆரம்பித்தார்.

“முல்லா உழைக்காமலேயே பெரும் பணக்கார னாக ஆசைப்படும் எங்களுக்கு ஏதும் சொல்லவில்லையே…” என்று கூட்டம் அலறியது.

முல்லாவோ வெகு அலட்சியமாக “இதோ வெளியூரில் இருந்து வந்திருக்கும் இவர் என்னிடம் சவால் விட்டார். எல்லாக் கேள்விக்கும் விடை சொல்கிறீர்களே… இந்த ஊரில் முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர் என்று துல்லியமாகச் சொல்ல முடியுமா? என்றார்.

உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பும் உங்களை விட முட்டாள்கள் இருக்க முடியுமா என்ன?

அதுதான் உங்களை வரவழைத்து இவரை எண்ணிக் கொள்ளச் சொன்னேன்” என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார்.

உண்மை,, உழைக்காமல் பணக்காரனாக விரும்பும் எவனுமே அறிவாளி அல்லன். முட்டாளே.

லாட்டரி டிக்கட்டுகளை நம்புகிறவர்கள்,

சினிமாவில் வருவது போல் முதல் காட்சியில் ஆட்டோ ஓட்டிவிட்டு அடுத்த காட்சியில் பென்ஸ் கார் ஓட்டும் கதாநாயகனைப் போல ஆக விரும்புகிறவர்கள்,
அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள்,

கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் சாமிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஏதாவது கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிற முட்டாள்கள்.

இவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா… தயவு செய்து வெளியே வாருங்கள்.

உழைக்காமல் முன்னேற முடியாது. உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது. புரிந்து கொள்ளுங்கள்.

உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது, கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்.

பாடுபடுவது, சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது, சினிமா, சீட்டு, சிட்டு, சிகரெட்டு என்கிற இளவயது இன்பங்களில் தன்னைத் தொலைக்காமல் பல மணி நேரம் படிப்பது கூட உழைப்பதுதான்.

பல மைல் பயணித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத்தான்.

சோம்பி இராத சுகம் தேடாத எல்லா முயற்சிகளும் உழைப்புத் தான்.

இப்படி உழைத்தவர்கள் தான். உயரமான இடங்களில் பின்னர் உட்கார்ந்தவர்கள்.

சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?

பேரறிஞர் அண்ணா சிவாஜி என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.

இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.

“அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா.

சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தைப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார்.

மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு…

அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார்.

எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!

காந்தி அடிகள் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் உழைப்பார். சில மணியே ஓய்வெடுப்பார். காமராஜரும் அப்படியே. உலகம் மண்தான்.

ஆனால், அது உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை!

சொல்வேந்தர். சுகி சிவம்
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

>> Thursday, May 13, 2010

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14  தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
****************

The Islamic Development Bank Scholarship.

Patna: Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for scholarship cum interest-free education loan from meritorious but financially needy Indian Muslim students to help them to pursue professional courses such as Medical and Engineering.

This loan is for those students who have taken admission or intend to in academic year 2010-2011 in the first year of any degree courses of Medicine and Engineering including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law.

To get this loan it is necessary that aspirants should have obtained 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics in 10th class examination.

The applicants will be interviewed by a selection committee and selected ones will be provided with the cost of living, clothing, books, tuition fees and medical expenses during the courses.

It is to be noted here that as it is an interest-free loan, recipients, therefore, will have to refund the amounts in easy installments after they settle down in profession. So that others can get benefit to enjoy the same educational opportunity.

Islamic Development Bank started this program in 1983 to promote professional education among Muslim community in various countries including India. In India this program is operated and monitored through Delhi based NGO Students Islamic Trust (SIT). So far 1163 students completed their courses and settled down in their professions with the help IDB loan. At present there are 645 students who are getting benefits from it and pursuing professional studies.

Talking to TwoCircles.net from Delhi, Mohammad Saifullah Rizwan, Executive Secretary of SIT, said: “It is a golden opportunity for the talented Muslim students who are unable to do professional courses due to financial problem. The students who passed matriculation with minimum 60% marks and have desire to go in professional fields should get benefit from this program.”

On number of students who will be selected this year he said: “We will select 250 students through interview. The Selection committee formed for this purpose will interview the applicants in almost all the states, then we will issue the list of selected students.”

Asked about amount that will be given to the selected students he told: “Each student of Medical is given Rs.45000/ and student of Engineering is given Rs. 40000/ per month till they complete the courses.

“They will have to return the amounts they receive from IDB after the completion of courses or after they get settlement in their profession so that it can pave the way for other students belonging to the same category and who want to do similar courses” he added.

The last date for submission of application is 25th August 2010. Application forms can be downloaded from SIT website -link- or it can be obtained from SIT office.

Address: ,Mohammad Saifullah Rizwan , Executive Secretary, The Student Islamic Trust,
Abul Fazal Enclave, Jamia Nagar, New Delhi-110025.

Contact: 91-9990630127, 91-11-26941028

MORE INFORMATION:  http://www.sit-india.org/scholarship.html


The Islamic Development Bank Scholarship:-

IDB SCHOLARSHIP PRORGRAMME

The Islamic Development Bank Jeddah, in order to improve the socio-economic conditions of the Muslim Communities in Non-Member Countries around the world and to make meaningful contributions to the development of their countries, launched its scholarship programme in 1983.

The Bank is trying to assist and develop the potentialities of Muslim students by awarding scholarship to the scholars who are unable to pursue studies due to financial difficulties. The programme is now in operation in 48 countries.Objective of the

Programme:

The objective of the programme is to provide opportunities for the academically meritorious and financially needy students to pursue study in professional degree courses in the fields of Medicine, Engineering, Agriculture and other related fields in order to become competent professionals with dedication and commitment to the development of the community and the country.

Nature of the Programme:

The scholarship is an interest-free loan (qard-e-hasan) to the students. It covers the cost of living, clothing, books, tuition fees and medical expenses (wholly or partly) recipients are therefore required to refund the scholarship in easy instalments after expiry of one year of the completion of graduation or after being settled down in profession whichever is earlier.

This is necessary because the scholarship is a grant from the Bank to the local community to enable it to sustain into the future to benefit deserving students to enjoy the same educational opportunity.

Eligibility:

The scholarship is open to the students who are meritorious but financially needy and have passed or appearing in SSC (10+2) examination and are desirous to pursue undergraduate profession studies in session 2009-2010 in one of the fields of study approved under the programme.

The Master Degree Courses and the students going abroad for study do not fall within the purview of the programme. Students joining Degree Courses after Diploma will not be eligible considered for scholarship

MORE INFORMATION:   http://www.sit-india.org/scholarship.html

அன்புடன்,

முஹம்மது ஜுல்ஃபிகர். MUSCAT. OMAN
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள்.

>> Wednesday, May 12, 2010


ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள். மற்ற‌வ‌ர்க‌ளுக்கும் அறிய‌ தாருங்க‌ள்.
சக்கரை நோய்க்கு கை வைத்தியம்.

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.

எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம்.

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

புளித்த ஏப்பமா?

தக்காளி சூப்பில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா போட்டுக் குடித்தால் போதும்.

வேர்க்குரு நீங்க ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவைக் கொஞ்சம் தண்ணீரில் கலக்கிப் பூசவும்.

ஆப்ப சோடாவைத் தண்ணீர் விட்டுக் கொப்புளத்தில் பூசினால் குணம் தெரியும்.

பல் வலி பாடாய்ப்படுத்தினால் கொஞ்சம் ஆப்ப சோடாவை ஈறின் மீது அழுத்தித் தடவவும். காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்ப சோடா கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

ம‌துவை ம‌றந்து விட‌லாமே.

மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் கரணை நோய் (Cirrhosis) வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. குழந்தைகள், வாழ்வில் ஒருமுறைகூட மதுவைத் தொடாதவர்களுக்கும் இந்நோய் வரும்.

நடுத்தர வயதுடைய பெண்களுக்கு பித்தநீர்ப்பையில் கரணை நோய் வர வாய்ப்பு உண்டு. உடலில் தாமிரச் சத்து மிகுதியால், குழந்தைகளிடத்திலும் இது காணப்படும். ‘வில்சன்ஸ் நோய்’ என்றழைக்கப்படும் இது, ஒரு பரம்பரை நோய் என்பது ஆச்சரியமான உண்மை!

நோய் வந்தால் குணமாக்குவது சற்று சிரமமான காரியமே.

முறையான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம். மது குடிக்காமல் இருந்தாலும் நோய் வரும் என்பதற்காக மதுவை நாடக் கூடாது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே இதற்குக் கடைசியான வழி.

பூண்டின் ம‌கிமை.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெள்ளைப் பூண்டு நல்லது என்பது தெரிந்த விஷயம். தெரியாதது, அது மலேரியா மற்றும் கேன்சருக்கும் கண்கண்ட மருந்து என்பது.

வெள்ளைப் பூண்டில் இயற்கையிலேயே அடங்கியுள்ள டைசல்பைடு (Disulphide) என்ற ரசாயனப் பொருள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கின்றது. மேலும், கேன்சர் செல்கள் பரவாமலும் தடுக்கின்றது. இது தவிர, மலேரியாவை உண்டாக்கும் ‘பிளாஸ்மோடியம் பால்சிபாரம்’ என்ற ஒட்டுண்ணியையும் தாக்கி அழிக்கின்றன. அட்லாண்டாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வின் முடிவு இது.

பூண்டை வெறுப்பவர்கள் கூட இனி பூண்டுக்கு ‘வெல்கம்’ சொல்வது நல்லது!

வெள்ள‌ரிக்காய்.
வீடுகளில் வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமைப்பது வழக்கம். ஆனால் அந்தத் தோலில்தான் உடலுக்கு வேண்டிய உப்பும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

மலச்சிக்கல், அதிக அமிலத்தன்மை, வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு வெள்ளரி அற்புதமான மருந்து. இதனைக் காரட்டோடு சேர்த்து ஜூஸாகச் சாப்பிட மூட்டு அழற்சி, சிறுநீரக அடைப்பு, வயிற்றுப்போக்கு, சருமநோய்கள் தீரும். துண்டாக நறுக்கி முகம், கண், நெற்றியில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

ஆஸ்பிரின்.

ஆஸ்பிரின் எளிய வலி நிவாரணியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும் ஒரு சில தீங்கான விளைவுடையது என்ற காரணத்திற்காக பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும்கூட பரால்ஜின், நோவால்ஜின், அனால்ஜின் என்ற பெயர்களில் அவை இந்தியாவில் விற்கப்படுகின்றன.

உங்க‌ளுக்கு தெரியுமா?

கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தைக்குமாகச் சேர்த்து இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற தவறான கருத்து பலரிடமும் நிலவுகிறது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. போதிய உணவை உட்கொள்ளாது விடுவது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ அதேயளவு பாதிப்பை மிதமிஞ்சிய உணவும் ஏற்படுத்தும்.

நேர‌ம் க‌ழித்து சாப்பிட்டால்?
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் நோய் காரணமாக சிலருக்கு நெஞ்சு எரிச்சல் (Heart Burn) ஏற்படும். சிலர், இரவு நெடுநேரம் கழித்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இதனால் ஆபத்து உண்டா?

நிச்சயமாக. இவர்களுக்குத் தூக்கம் கெடும். அரிதாக, புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உற்பத்தியாகும் அமிலங்கள் உணவுக் குழாயில் பாதிப்பை உண்டாக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்காக சில டிப்ஸ்கள்:

உங்களது இரவு உணவை ஆறு முதல் ஏழு மணிக்குள் முடித்துவிடுங்கள். இல்லையெனில் உணவுக் குழாயில் கொழுப்பு சேர்ந்து எதிர் ஓட்டத்துக்கு (Reflux) வழி வகுக்கும்.

இரவு எட்டு மணிக்கு மேல், காரம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். நீங்கள் தூங்கச் செல்லும் முன் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது வயிற்றைக் காயப்போடுங்கள்.

தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால், இரவு பத்து மணிக்குள் அன்டாசிட் மாத்திரைகளைச் சாப்பிட்டு விடுங்கள். இது வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும்.

எப்பொழுதும் இடது பக்கமாகவே ஒருக்களித்துப் படுங்கள். இதனால் வயிற்றில் மீதமிருக்கும் உணவுப் பொருட்கள் உணவுக் குழாயில் மென்மேலும் அழுத்தம் கொடுக்காது. இடதுபுறம் படுப்பதால் காலையில் மலம் எளிதில் வெளியேறும். மலம் வெளியேறும்போது எரிச்சல் இருக்காது.
மீன் சாப்பிடுவ‌து

மீன் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்குப் பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லையாம். எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள்தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகிறதாம்.

மீன் எண்ணெயில் உள்ள ‘ஒமேகா_3’ என்ற பொருள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்துக் கொள்கிறது. ரத்தம் சீராகப் பாயவும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கடல்வாழ் மீன்களிலிருக்கும் இ.பி.ஏ. (Elcosa Pantothenic Acid) இதயத்தமனிகள் உடைந்து போகாமல் இருக்கச் செய்கிறது.

ஆரஞ்சுச் சாறு.

‘உணவே மருந்து’ என்று சொல்லும் சித்த மருத்துவம், ‘நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் மூலம் வரப்போகிற நோய்களையும் தடுத்து நிறுத்தலாம்’ என்றும் கூறுகிறது.

தலைவலி _ காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.

டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது... ஆரஞ்சு ஜூஸ்.

தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.

டிஸ்பெப்ஸியா (Dyspepsia) எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.

பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.

இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.

உணவே மருந்து

உணவுப் பொருட்களை சமைத்து உண்பதைவிட அப்படியே சாப்பிடுவது சாலச் சிறந்தது. காரணம், அதில் உள்ள சத்துகள் சிறிதும் அழிவின்றி அப்படியே உடலில் சேர்கிறது. இப்படி அமைந்த சிறந்த உணவுப் பொருட்களே பழங்கள்.

• பழங்களைத் தனியாகவும் சாப்பிடலாம், பிற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். பழங்களை சாறு பிழிந்தும் சாப்பிடலாம்.

• சிற்றுண்டி விருந்தில் வாழைப்பழங்களும், பேருண்டி விருந்தில், மா, பலா, வாழை என முக்கனிகளும் இடம் பெறுவது சிறப்பு.

• பரிமாறப்படும் அறுசுவை உணவுப் பண்டங்களால் அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு, அஜீரணக் கோளாறைச் சரி செய்யவும், வயிற்றுக் கோளாறு உண்டாகாமலிருக்கவும், பழம் சாப்பிடும் பழக்கம் உண்டாக வேண்டும்.

• வெறும் வயிற்றில் பழம் உண்பது பழத்தின் முழுப் பலனை கிடைக்கச் செய்கிறது. காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் பழம் சாப்பிடலாம்.

• பழச்சாறு குடிப்பவர்கள் பழம் பிழிந்து ஐந்து நிமிடத்திற்குள் பழச்சாற்றை அருந்திவிட வேண்டும். நேரம் கழித்து பருகக் கூடாது, பக்க விளைவுகளைச் சந்திக்க நேரும்.

• பழம் இயற்கையிலேயே நன்கு பழுத்ததாக இருக்க வேண்டும். அதிகமாக பழுத்து அழுகிய பழங்களை உண்ணக் கூடாது.

• ஆப்பிள் பழத்தோலை நீக்குதல் கூடாது. தோலில் நிறைய சத்துக்கள் இருப்பதால், தோலுடன்தான் சாப்பிட வேண்டும்.

• கொய்யாப்பழத்தில் தோலையும், கொட்டைகளையும் நீக்கிவிட்டுச் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. அப்படியே சாப்பிட வேண்டும்.

• மாதுளம் பழக்கொட்டைகளை நன்றாக மென்று சாப்பிடாவிட்டால் அஜீரணம் ஏற்படும்.

• வாயில் துர்நாற்றமா? தினம் மூன்று வேளையும் சாப்பிட்டபின் எலுமிச்சை பழச்சாற்றில் வாய் கொப்பளித்துப் பாருங்கள்.

• உணவுகளை ஒரே நாளைக்கு மூன்று வேளை தட்டு நிறையச் சாப்பிடுவதை தவிர்த்து ஆறு வேளையாக, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.

• கொழுப்பு, காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை மிக அளவோடு சாப்பிட வேண்டும். கவலையாக இருக்கும்போது, பசியில்லாத போது சாப்பிடக் கூடாது. சாந்தமான மனநிலையில் ஆற அமரச் சாப்பிட வேண்டும். ருசிக்காக இல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிட வேண்டும். அதிகம் உண்பவன் தன் சவக்குழியைத்தானே தோண்டிக் கொள்கிறான்.

• உணவு சூடாக இருக்கும்போதே, அதை நுகர்ந்து, சுவைத்து, கண்ணால் ரசித்து, சிறிது சிறிதாக ருசியுங்கள். கசப்பு, துவர்ப்பு ருசிகளை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு போன்றவற்றை மிதமாகவும் சாப்பிடவும். இதை மனதில் கொண்டு சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்ணுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆரோக்கியம் தானாகவே பளிச்சிடும்.

நன்றி: 'இன்றைய மருத்துவம்'

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.

>> Tuesday, May 11, 2010

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது. பொழுது போக்குவதற்கா? ஆக்குவதற்கா? தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.நகைச்சுவை வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது.
மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும் போது பார்க்க லட்சணமாக இருக்கும்; ஆனால் சிரிக்கத்தான் மாட்டார்கள்!

சிலருக்கு நகைச்சுவையே பிடிக்காது. நகைச்சுவையாக பேசவும் வராது. அடுத்தவர் நகைச்சுவை சொன்னால், அதை ரசித்து சிரிக்கவும் தெரியாது. சிரிப்பவரைப் பார்த்து, “என்ன….? சும்மா பல்லை பல்லைக் காட்டிக் கொண்டு….?” என்று எரிச்சல்படவும் செய்வார்கள். பேசும்போதே நகைச்சுவையாக பேசுபவர்களுடனும் வாய்விட்டு சிரிப்பவர்களுடன் எவரும் மகிழ்ச்சியாக பழகுவார்கள்.

நகைச்சுவையில் ஓர் உளவியல் கருத்து உண்டு. எந்த நகைச்சுவைக்கு ஒருவர் சிரிக்கிறார் என்பதே. அவர் யார் என்பதைக் காட்டிவிடும்!
ஒவ்வொருவர் சிரிக்கும்போதும், சிரிப்புக்கான காரணத்தை அல்லது கருத்தை கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். எளிமையாக புரிவதற்கு ஒன்று சொல்லலாம்!

குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று கூடி, ஓடியாடி விளையாடும். அப்போது ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால், மற்றவை விழுந்து விழுந்து சிரிக்கும். குழந்தைப் பருவத்தின் இந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வயதான பருவத்தில் இருக்கும் ஒருவர் தவறிவிழுந்தால். உடன் இருக்கும் நண்பர்கள் பதறிவிடுவார்கள்.

குழந்தையாக இருந்தபோது நகைச்சுவையாக இருந்த நிகழ்வு பக்குவப்பட்ட நிலையில் வருத்தத்திற்குரியதாகி விடுகிறதல்லவா? அந்த நிலையிலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?
வாழ்வில் நகைச்சுவை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது. தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிக் கிடந்த நமக்கு முழுக்க சினிமாவுக்காகவே ஒரு தொலைக்காட்சி வந்து ‘non stop கொண்டாட்டம்’ என்கிறது.

ஒரு F.M.ரேடியோ, “கேளுங்க; கேளுங்க; கேட்டுக்கிட்டே இருங்க.” என்றது. இவர்களையெல்லாம் தூக்கியடிக்க ‘24 மணி நேரமும் சிரிச்சுக்கிட்டே இருங்க’ என்று தொலைக்காட்சிகள் வந்துவிட்டன,

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.

உழைப்பதற்கும் கடமையைச் செய்வதற்கும் வாழ்நாள் போதவில்லை என்றே எல்லா சாதனையாளர்களும் எண்ணுகிறார்கள்.

பொழுது போதாமல் தவிக்கிறார்களேயன்றி பொழுது போகாமல் தவிக்கவில்லை. ஆனால் வளரும் தலைமுறைக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்?

பொழுது என்பது போக்குவதற்கா?

உழைத்துக் களைத்தவனுக்கு தேவைப்படுவது கூட ஓய்வுதான். அவன் தொலைக்காட்சி பார்ப்பதோ; பாட்டு கேட்பதோ; இதழ்கள் படிப்பதோ அல்லது தூங்குவது கூட, வேலை அழுத்தத்திற்கிடையில் ஒரு மாற்றத்திற்குத் தானே தவிர, பொழுதைப் போக்க முடியாமல் செய்யும் காரியமல்ல.
‘காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது’ என்று பள்ளிகளில் சொல்லித் தருகிறோம்.

கடிகாரத்தில் ஒவ்வொரு நொடிக்கும் நகரும் முள் நம் வாழ்நாட்கள் கரைந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. நாள்காட்டியில் தினமும் கிழிக்கப்படுவது காகிதமல்ல; நமது வாழ்நாட்கள் தான்.

நேரத்தை மதிக்காதவனை நேரம் மதிப்பதில்லை. அவனைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, அது போய்க்கொண்டே இருக்கிறது.

இத்தனை மணிக்கு வகுப்புகள் தொடங்கும்; இத்தனை மணிக்கு இடைவேளை பிறகு உணவு நேரம்; இத்தனை மணிக்கு வகுப்புகள் முடியும்’ என்றெல்லாம் பள்ளிகளில் வகுத்து வைத்ததின் நோக்கமே நேரத்தின் அருமையை இளமையிலேயே புரிய வைக்க வேண்டும். என்பதற்குத்தான், ‘5 நிமிடங்கள் தாமதமாகப் பள்ளிக்கு வந்தாலும் தண்டனை’ என்ற விதி வைத்திருப்பதும் அதனால்தான்.

ஒரு பக்கம் நேரத்தின் அருமையை சொல்லிக்கொண்டே அதை வீணடிப்பதற்கான சூழல்களை இளைஞர்களுக்கு உருவாக்கி விட்டோம்.

‘சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்றவிளம்பரம் அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டிக்குள், அடைக்கப்பட்டே சிகரெட் விற்கப்படுறது. அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டேதான் சிகரெட் பிடிக்கிறார்கள்.

‘மதுப்பழக்கம் உடல் நலத்துக்கும் நாட்டுக்கும் கேடு’ என்று சாராயக் கடைக்கு வெளியே எழுதிவைத்து விட்டே தடபுடலாக சாராய வியாபாரம் நடைபெறுகிறது.

அதேபோன்று ‘நேரத்தை வீணடிக்கக் கூடாது’ என்று சொல்லிக் கொண்டே பொழுதை வீணடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு நடந்துவிட்டன..

நாடு முழுக்க இருக்கும் F.M. ரேடியோக்களின் எண்ணிக்கை அதிகம். சென்னையில் மட்டுமே இதன் எண்ணிக்கை பத்தினைத் தொட்டுவிட்டன.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியார் வானொலிகள் நிறையவே இருக்கின்றன. இவை எந்த நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன? 24 மணி நேரமும் திரைப்பட பாடல்கள் ஒலிக்கின்றன. “எங்களுக்கு இந்த பாட்டு போடுங்கள்” என்று 24 மணி நேரமும் மக்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

பாட்டுக்களுக்கிடையில் பேட்டிகளும் நடக்கும். யாரைப் பேட்டி காண்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அப்போது புதிதாக வந்த ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரில் தொடங்கி ‘லைட்மேன்’ வேலை செய்தவர் வரை அந்தத் திரைப்படம் தயாரிக்கும் போது நிகழ்ந்த அனுபவத்தை சொல்வார்கள். நமது தமிழ்நாட்டுச் செல்வங்களும், அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசி மகிழ்ந்து, பிறந்த புண்ணியத்தை அடைகிறார்கள்.

‘ரேடியோவில் வேறு எதுவும் வருவதில்லையா?’ என்று கேட்காதீர்கள்.

இடையிடையே உலகில் எங்கேயாவது எவராவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், அவர்கள் எடுத்த விக்கெட் மற்றும் ஓட்டங்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக கூறுவார்கள்.

குறுந்தகடுகளில் வரும் திரைப்பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடும் பேருந்துகளில் அலறுகின்றன.

வெயிலின் உக்கிரத்தால் வியர்வையில் குளித்து, கசகசத்து உடல் சலித்து பசியால் களைத்து சோர்ந்து நின்றவாறு கூட்ட நெரிசலில் பயணிக்கும் மக்களின் காதுகளில் ‘நிலவு குளிர் நான் நீ போர்வை’ என்றெல்லாம் அலறல் சத்தம் விழுந்து கொண்டேயிருக்கிறது.

பாடலின் பொருள் உணர்ந்து ரசிப்பது என்பதெல்லாம் கண்ணதாசனோடு போயிற்று. வைரமுத்துவின் வைர வரிகள் மீது இசைக்கருவிகளின் கூச்சல் வந்து உட்கார்ந்து விட்டது. அதனால்தானோ என்னவோ பாடலாசிரியர்கள் தங்களை அதிகம் சிரமப்படுத்திக் கொள்வதேயில்லை. சில பாடல் வரிகளின் பொருளை அறிந்தபோது “இசை கருவிகளின் ஆதிக்கமே நல்லதுதானோ…..” என்றேஎண்ணத் தோன்றியது.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு கொலை, மக்களை உலுக்கியது. காலையில் தனது மாமியார் மற்றும் குழந்தையுடன் கடைக்குச் சென்ற இளம்பெண் அவர்கள் இருவரையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் முற்பகலில் வீடு திரும்பினார். நண்பகல் நேரத்தில் வீடு திரும்பிய மாமியாருக்கும் குழந்தைக்கும் பேரதிர்ச்சி. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். கிடந்த கோலம் பாலியல் வன்முறைக்கு அவள் ஆளானதைக் காட்டியது.

ஓரிரு நாட்களில் கொலையாளியைக் கண்டுபிடித்துக் கைது செய்ததாகக் காவல் துறை சொன்ன விபரம் செய்தித்தாள்களில் வந்தது. கொலைச் செய்தியில் மனத்துயர் கொண்டிருந்த மக்கள் கொலைக்கான காரணத்தையும் சூழலையும் காவல்துறைசொன்னபோது வேறுவிதத்தில் கவலையும் அதிர்ச்சியும் கொண்டார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்னரே வேறு ஒருவனுடன் தொடர்பு இருந்தது; திருமணத்திக்கு பின்னர் அவனை எங்கோ ஒரு பொது இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உறவு புதுப்பிக்கப்பட்டது. வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருக்கும்போது, தன் வீட்டுக்கே அவனை வரவழைத்தாள். உறவு மேலும் வலுப்பட தான் மட்டுமே வீட்டில் தனியாக இருக்கும் சூழல்களை அவளே வலிந்து உருவாக்கிக் கொண்டாள்.

அப்படிப்பட்ட ஒரு நாளின் நிகழ்வுதான் கொலையில் முடிந்துள்ளது.
செய்தித்தாளில் இந்த செய்தியைப் படித்தபோது மனம் சங்கடப்பட்டது.

அன்று மாலையே, தற்செயலாக கேட்க நேர்ந்த ஒரு திரைப்படப்பாடல், திகைத்து ஒரு கணம் செயலிழக்க வைத்தது. “டாடி மம்மி வீட்டில் இல்ல! தடைபோட யாரும் இல்ல!? விளையாடலாமா? உள்ள வில்லாளா…..?” என்று அந்தப்பாட்டு தொடங்கியது.

முறையற்ற உறவுக்கு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக பெண் அழைப்பதே பாடலின் பொருள்.

சமூகத்தில் நடக்கும்போது தண்டனைக்குரிய குற்றம் ஒன்று திரைப்படத்தில் பாடலாக்கப்பட்டு நடிக்கப்படும் போது நியாயமாகி விடுமா?

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்; நடித்தவர்; தயாரித்தவரையெல்லாம் விடுங்கள்! இந்தப் பாடலை எழுதியவருக்குக் கூடவா இதன் பொருள் தெரியாது? இல்லை, பொருள் தெரிந்தும் பொறுப்பு தெரியாமல் இப்படி எழுதுகிறார்களா?
மேலே கூறிய கொலை நட.ந்த சூழலுக்கும், இப்பாடலின் அழைப்புக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

இந்த குறிப்பிட்ட பாடலின் அடுத்தடுத்த வரிகளும் மிகக் கொச்சைதான். இந்த அழகில் பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் செல்பேசிகளில் ‘ரிங்டோ’னாகவே இந்தப் பாடல் ஒலிக்கிறது.

இந்த ஒரு பாட்டு ஓர் உதாரணத்துக்குத்தான். இத்தனைக்கும் இந்தப் பாடலின் ராகம் மிக நன்றாகவே இருக்கிறது. பொருளும் காட்சி அமைப்பும் கண்ணியத்துடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்படி எத்தனை பாடல்கள்….?

‘நீங்க ஏன் சார் பாட்டுக்கு அர்த்தத்தையெல்லாம் பார்க்கிறீங்க….?’ என்று நம்மைக் குற்றவாளியாக்கி நமக்கே வருகின்றன. இந்த பாடல்கள்தான் தெருவெங்கும் ஒலிக்கின்றன;

குடும்பங்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் ஒலிக்கின்றன; ஆண்களும் பெண்களும் நண்பர்களாக பயணிக்கும் கார்களில் ஒலிக்கின்றன; செல்பேசிகளில் ஒலிக்கின்றன;

ஆஸ்கார் தமிழனைத் தந்து பெருமைகண்ட இனம்தான் நாம்; ஐயமில்லை. அப்பாவித் தமிழர்கள் பலியாவதும் கவலை தருகிறது. வீட்டுக்கு வீடு 24 மணி நேரமும் இந்தப் பாடல்கள் ஒலிப்பதோடு, கவர்ச்சியான உடைகளோடு (ஆபாசம் என்று இதை சொல்லக் கூடாதாம். சொன்னால், நமக்கு பார்வை சரியில்லையாம்!)

அருவறுக்கத்தக்க அங்க அசைவுகளோடு நாயக நாயகிகள் வரைமுறையின்றி குதிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாவதை எண்ணி வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும்?

எந்த நேரமும் இப்படிப்பட்ட காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் தோன்றுகின்றன. தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், வயதில் மூத்துத் தளர்ந்தோர்களும் இருக்கும் வீடுகள் என்ன கதியாகும்?

தமிழில் இப்போது எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளன என்று எண்ணுவதே சிரமமாக இருக்கிறது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு தொலைக்காட்சி வந்து விட்டிருக்கும். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு தொலைக்காட்சி தொடங்க ஆசை வந்துவிட்டது. தொலைக்காட்சியில் தோன்றுபவர்களுக்கு அரசியல்வாதியாக ஆசை வந்துவிட்டது!

‘கனவு காணுங்கள்’ என்று இளைஞர்களை அழைத்தார் அப்துல்கலாம். நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே, இப்படியும் சொன்னார்; “நீ தூங்கும் போது காண்பதல்ல கனவு. உன்னை எது தூங்க விடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு”.

தனது எதிர்காலத்தைப் பற்றி; தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றி; தனது நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி ஒவ்வொரு இளைஞரும் தூக்கமின்றி எண்ண வேண்டும் என்பது அவரது அறிவுரை.

“தூங்காமல் இரு, ஆனால் எதையும் சிந்தித்து விடாதே; 24 மணி நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்து, நாயக நாயகியாக உன்னை எண்ணி கனவுலகிலேயே இரு!” என்பதுதான் இளைஞர்களுக்கு இன்று நாம் தரும் செய்தி..
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

SOURCE: NANNAMBIKKAI

மேலும் படிக்க... Read more...

நிறைய தண்ணீர் குடி.. நிறைய ஆரோக்கியம்.. உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை ?

>> Friday, May 7, 2010

உடல் எடை குறைய, உடலில் கலோரியை கட்டுப்படுத்த, சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராமலிருக்க, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும்.

ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையில்லை, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால்தான் சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதுதான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தோ குடிக்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர்தான் மூன்று மடங்கு அடங்கியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.

எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும்.

ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.

வெளியே சென்று திரும்பியதும் உடனே அலுவலகம் செல்ல வேண்டும் எனில், பிரிட்ஜில் உள்ள அய்ஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு, குளிர்ந்த நீராக மாற்றி குளிக்கலாம்.
++++++++++++++
இதையும் படிக்கலாமே!!!

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள்.

*****************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ? ஏன்? தீர்வு?

>> Thursday, May 6, 2010


அதற்கு என்ன ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.




இப்போதெல்லாம் இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி வந்து, தொல்லை கொடுக்கிறதே ஏன்? அதற்கு என்ன தீர்வு?

டாக்டர் விஜயா (பிஸியோதெரபி நிபுணர்)

``ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.

அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும்.

வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.

மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும்.

இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது
என்கிறீர்களா?

முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

. சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் அன்பு நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

. அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது.

ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது.. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங் + உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.''
+++++++++++++++++++++

என்னுடைய வயது 25. கல்யாணம் ஆகி 5 மாதங்கள் ஆகின்றன. என்னுடைய வேலை (வேலையில் சுமார் 6 மாதம் இருந்தேன்) செல் ஃபோன் மூலம் பல நபர்களைத் தொடர்பு கொண்டு மணிக்கணக்காகப் பேசும் வேலை.

என்னுடைய ப்ராப்ளம் மே 2007 தொடங்கிற்று. எனக்கு என்னையும் அறியாமல் தானாக கண்கள் மூடிக்கொள்ளும். சில சமயம் இரண்டு விழிகளும் வண்டிச் சக்கரம் சுற்றுவது போன்ற உணர்வு. இது பத்து நாட்கள் இருந்து போய்விட்டது.

இந்தப் பிரச்னை மீண்டும் நவம்பர் மாதம் 2007 எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புருவத்திற்கும் கண்களுக்கும் இடையில் heaviness ஆக இருக்கும்.

சில சமயம் இடது கால், இடது பக்க முகம், தலைகளில் ஒருவிதமான மரத்துப் போகும் தன்மையும் எறும்பு ஓடுவது போலவும் இருக்கும். திடீர் திடீரென்று நடுமண்டையில் ஒரு மோட்டார் ஓடுவது போல `கிர்' என்று சுற்றும். இதனால் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.

இதைத் தொடர்ந்து ப்ரெய்ன் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹார்ட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை எல்லாம் normal report ஆக வந்தது.

இதற்குப் பிறகு என்னை யாரோ தள்ளிவிடுவது போலவும், ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வுகள். காதுகளில் பயங்கர அழுத்தம், காதுகளில் Popping so and. இந்த சமயத்தில் எனக்கு accute cold and cough இருந்தது.
ENT மருத்துவர்கள் Vertin, Alprax depression மாத்திரைகள் அளித்தார்கள்.

பிறகு மார்ச் மாதம் ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த டாக்டர் எனக்கு Vestibalar nueronitis என்று சொல்லி மருந்து தர ஆரம்பித்தார். அவரது மருந்து 3 மாதம் எடுத்துக் கொண்டு 50% grip கிடைத்தது.

ஆனால் ஒரு hill station போய் வந்த பிறகு காதில் அழுத்தமும், காலில் கிடைத்த grip-ம் போய்விட்டது. ஒரு நாளும் வீட்டில் தங்காது சுற்றிக் கொண்டிருந்த நான், இப்பொழுது நிற்கவே பயப்படுகிறேன். நான் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது normalஆக இருக்கேன்.

பின்குறிப்பு : யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் ரொம்பவும் மெலிதாக என் இடது காதில் சத்தம் கேட்கும். இன்று வரை தலைசுற்றியும் வாந்தி எடுத்ததேயில்லை.

இந்த மாதிரி அனுபவத்தை யாராவது உணர்ந்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ எந்த விதமான வைத்தியமாக இருந்தாலும் என் கஷ்டத்திற்கு கைகொடுக்க உங்களை மனமார உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத மும்பை சகோதரி

டாக்டர் ரவி ராமலிங்கம், (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)

``நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளைப் பார்க்கும்போது உள்காதில் தான் பிரச்னையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அதில்தான் பிரச்னை உள்ளதா என்பதை முழுமையாகக் கண்டறிய ENG எனப்படும் எலக்ட்ரோ நைஸ்டேக்மோ க்ராஃபி என்னும் சிறப்புப் பரிசோதனையில் கண்டறிந்து விடலாம்.

எல்லா பரிசோதனையும் செய்த நீங்கள் இந்த ENG பரிசோதனை செய்யவில்லை. அந்தப் பரிசோதனையை செய்தால்தான் உங்களுக்கு ஏற்படும் மயக்கம் ஏன் என்பதையும் அறிய முடியும்.

சிலருக்கு கண், மூளை, கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் கூட மயக்கம் வரலாம். பீ.பி., ஷுகர் கூட மயக்கம் வரச் காரணமாக அமையலாம். காது கேட்கும் திறன் நார்மல் என்கிறீர்கள்... இருந்தாலும் திரும்பவும் ஆடியோ மெட்ரி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அதுவரை Vertien மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள், கன்ட்ரோலாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வதோடு உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

மிக முக்கியமான விஷயம் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. மனதில் ஏற்படும் டென்ஷன்களை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி அந்த ENG பரிசோதனையையும் செய்து பார்த்துவிடுங்கள்.''

THANKS TO KUMAUDAM HEALTH
+++++++++++++++++++++++++++
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகரிக்க.

>> Tuesday, May 4, 2010


தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

கொலோனில் நடைபெற்ற உத்தமம் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற யான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஓருவரான திரு நா. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் வலைவாசல், திரட்டிகள், மற்றும் விக்கிபீடியா அரங்கிற்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவரது பெயரை அரங்கிற்கு சூட்டியதை கண்டு அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன்.-- மாஹிர், சென்னை.

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html


நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.pudhucherry.com/text/THENEE.eot

http://www.pudhucherry.com/text/VAIGAIU0.eot

உமர் ஒருங்குறி எழுதி

(AWC Phonetic Tamil Unicode Writer)

http://www.pudhucherry.com/pages/UmarUni.html

உமர் ஓடை எழுதி

http://www.pudhucherry.com/pages/umarrss.html

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி சகோதரர். அதிரைக்காரன்http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html
------------------------

தமிழ்மணம் தளத்தில் உமர்தம்பி புகைப்படத்துடன் இந்த வலைப்பதிவை முதல் பக்கத்தில் வருமாறு செய்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி.

கொலோனில் நடைபெற்ற உத்தமம் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற யான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஓருவரான திரு நா. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் வலைவாசல், திரட்டிகள், மற்றும் விக்கிபீடியா அரங்கிற்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவரது பெயரை அரங்கிற்கு சூட்டியதை கண்டு அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ் இணைய வளர்ச்சியில் தமிழ்மணத்தின் அர்ப்பணிப்பு (தமிழூற்று என்ற திரட்டி உருவாக்கி, நிர்வகித்த அடிப்படையில் அனுபவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் உணர்ந்தது) போன்று அன்றைய தமிழ் இணைய வலைப்பக்கங்களில் இருந்த யுனிகோடு பிரச்சினைக்கு தேனீ என்னும் ஓருங்குறி எழுத்துரு உருவாக்கி தந்தார்.

தமிழ் வலைப்பதிவுகள் ஒருங்குறி பிரச்சினையின்றி சரிவர தெரிய தமிழ் சமூகத்திற்கு உதவியவர்.

அன்றைய கட்டத்தில் தேனீ இயங்கு எழுத்துரு (thenee.eot) 90 சதவீத வலைப்பதிவுகளில், தமிழ் இணையதளங்களில் பங்காற்றியதாக பிரபல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். (உமர் தம்பி, thenee.eot என்று தேடுபொறிகளில் தேடுக)

தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

உமர்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகிய தமிழ் கணிமையாளர்கள், உத்தமம் குழுவினர் இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாஹிர், சென்னை

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP