ஆடு, மாடுகள் என்று அலட்சியப்படுத்திட முடியாத நிலையைக் கால்நடைகள் இன்று பெற்றுள்ளன. ஆடுகளும் மாடுகளும் மனித குலத் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருப்பவை. அவற்றின் இறைச்சியும் பாலும் மனிதனுக்குத் தேவையான கொழுப்புச் சத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.
இன்றைக்கு, அவற்றின் பயன்பாடு இன்னும் ஒருபடி மேலே போய் உள்ளது. அவற்றின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் இதய வால்வுகள், மருத்துவத்தில் பெரும்பங்கை வகிக்கப் போகின்றன.
அதுவும் குழந்தைகளுக்கான இதய நோய்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும் வால்வுகள் இவற்றின் திசுக்களிலிருந்து தயாரிக்கலாம் என்கிற தொழில் நுட்பம், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவற்றின் விலை பெரிதும் குறையும். இப்போதைய விலையான இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து இனிமேல் 10ஆயிரம் ரூபாய்க்கே அவை கிடைக்கும்.
இதற்கான கண்டுபிடிப்பை கேரளக் கால்நடை வளர்ச்சி வாரியம், சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் நுட்ப நிலையத்தின் உதவியுடன் செய்து முடித்துள்ளது.
இந்தியாவில் இந்த வகையில் இதய மாற்று வால்வு தயாரிக்கும் நிலையம் இது மட்டுமே.
சிறார் மரணத்தில் 10 விழுக்காடு இதய நோயால் நிகழும் நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு ஏழை - எளிய மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.
தற்போது பன்றிகளின் இதய வால்வுகளிலிருந்து தயாரிக்கப்பட்டுப் பொருத்தப்படும் வால்வுகள் சிறார்களின் விசயத்தில் நன்கு செயல்படுவதில்லை. மூன்று முதல் 5 வருடங்கள் வரைதான் செயல்படுகின்றன. அதன் பின்னர் சுண்ணாம்புக் கறை படிந்து செயலிழந்து விடுகின்றன.
ஆனால் ஆடு, மாடு திசுக்களிலிருந்து செய்யப்படும் வால்வுகளில் இத்தகையக் குறைபாடுகள் இல்லை என்பது சிறப்பு.
**************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment