எங்களை காத்தவர்கள் முஸ்லிம்கள்...! மகாராஷ்ட்ரா ஹிந்துக்கள் நெகிழ்ச்சி!
>> Thursday, October 23, 2008
முஸ்லிம்களை வெறியேற்றி எந்தக் கொம்பனாலும் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
வன்முறையாளர்களிடமிருந்து எங்களை அரணாக காத்தவர்கள் முஸ்லிம்கள்...! மகாராஷ்ட்ரா ஹிந்துக்கள் நெகிழ்ச்சி!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துலே என்ற பகுதியில் முஸ்லிம்களை அவமதிக்கும் விதமாக சமூகவிரோத அமைப்பு ஒன்று சுவரொட்டிகளை நகரமெங்கும் ஒட்டியது.
அதனை ஒட்டிய சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நகர சிறுபான்மை மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.விஷமிகளைக் கைது செய்வதற்கு பதிலாக விஷமிகளோடு சேர்ந்து கொண்டு மாநில காவல்துறை ஆடிய வெறியாட்டங்களை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம்.
வன்முறையிலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதையும், 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததையும், சிகிச்சை பெறச் சென்றவர்களையும் அவர்களைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தாக்கினார்கள் என்ற செய்தி கடந்த வாரம் வெளியானது.
கூடுதல் கலெக்டர் முஷ்தாக் பட்டேல் சங்பரிவார் சமூக விரோதி களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமியும் ஏழு வயது சிறுவனும் காயம் அடைந்தனர். இத்த னைக் கொடூர அனுபவங்களும் மற்றொரு சமூகத்தினருக்கு ஏற்பட்டிருந்தால் அந்த மாநிலமே அமளிக் காடாகி இருக்கும்.
ஆனால் சமாதான சகவாழ்வு பேணும் முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையில் மனம் வருந்தினாலும் பொறுமை காத்து கண்ணியத்தைக் கடைப்பிடித்தனர்.
ஆவேசத்திற்கு இலக்காகாமல் அமைதி காப்பதே அரிதான செயலாகப் பார்க்கப்படும் நிலையில் அடுத்து அப்பகுதி மக்கள் செய்த சிறப்புமிகு செயலைப் பார்த்தால் முஸ்லிம்களை வெறியேற்றி எந்தக் கொம்பனாலும் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
துலே பகுதியில் உள்ள ஆஸாத் நகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். இங்குள்ள ஹிந்து மக்களைத் தாக்குவதற்காக வெளியூர்களிலிருந்து ஒரு வன்முறைக் கும்பல் வந்த போது அவர்களிடமிருந்து தங்களையும் தங்களது வழிபாட்டுத்தலமான ஹிந்துக் கோயிலையும் துலே பகுதி முஸ்லிம்கள் கேடயமாக இருந்து காத்ததாக கோயிலின் பூசாரி தெரிவித்தார்.
அந்தப் பூசாரி இத்தகவலை உம்மிட் டாட் காம் என்ற இணையதளத்தில் பிரத்தியேக பேட்டியாக வழங்கியிருக்கிறார்.
முஸ்லிம் சகோதரர்கள் எங்களுக்கு காவல் அரணாக விளங்கினார்கள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பெரும் பதட்டம் நிலவிய வேளையில், முஸ்லிம்கள் பெரும் இழப்பினை சந்தித்த போதும் கூட, தங்கள் பகுதியில் வாழ்ந்த ஹிந்து சகோதரர்களின் மீது ஒரு தூசு கூட விழாத அளவு பாதுகாத்தனர்.
ஊரடங்கு உத்தரவு முடிந்து சகஜ நிலை திரும்பும்வரை அவர்களுக்கு உணவு வழங்குதல் முதலிய உதவிகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்ட்ராவின் ஹந்தேஷ் பிராந்தி யத்தில் அமைந்துள்ள துலே பகுதியில் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஆனால் முஸ்லிம்கள் நிறைந்த ஆஸாத் நகர் மற்றும் சிவாஜி நகர் பகுதியில் ஹிந்துக்களின் ஒரு சிறு பொருட் ளுக்கு கூட முஸ்லிம் சகோதரர்களால் பாதிப்பு ஏற்பட்டதில்லை என நெகிழ்கிறார் சுமன் என்ற ஹிந்து சகோதரர்.
எல்லாவிதமான ஒத்துழைப்பையும் முஸ்லிம்கள் வழங்கினார்கள். வன்முறை என்ற இருட்டு பக்கங்களில் முன்மாதிரி பகுதிகள் வெளிச்சக் கீற்றுகளாக ஜொலிக்கின்றன என்றும் சுமன் தெரிவித்தார்.
எங்களுக்கு எதிரான எத்துனை வன்முறைகள் நிகழ்ந்தாலும், எங்கள் மார்க்கம் கற்பித்த மாண்புகளை தவறாது கடைப்பிடிப்போம் என்கிறார் முபீன் என்ற அப்பகுதி வாகன ஓட்டுனர்.
ஹிந்துக்கள் நிறைந்த பல பகுதிகளில் மதவெறி சக்தியான பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது.
ஆனால் முஸ்லிம்களை வெறியூட்டி எந்த சக்தியும் அவர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்ற உண்மை உரைக்கத் தொடங்கியதால் சில தீவிர ஹிந்துக்கள் கூட சங்பரிவார பாஜகவை வெறுக்கத் தொடங்கியிருப்பதாக கடைசி கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸப்ரன் http://www.tmmk.info/news/999622.htm
*********************************
படிக்க:>>
ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இந்துப் பெண்மணியின் தீரம். நெகிழ வைக்கும் நிகழ்வு.
ஆர்.எஸ்.எஸ். வெறிச்செயல்.மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக் கொலை
இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட நடவடிக்கை வேண்டும்...!
**********************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment