சூதாட்ட வங்கிகள்
இங்கே காசு சுண்டி விளையாடும் சூதாட்டத்தை பார்ப்போம். தலை விழுந்தால் உங்களுக்கு ரூ 100 கிடைக்கும்.
பூ விழுந்தால் நீங்கள் ரூ 100 ஐ இழப்பீர்கள். இழந்தால் கவலைவேண்டாம். இரண்டாம் முறை ரூ 200 பந்தயம் கட்டுங்கள். தலை விழுந்தால் ரூ 200 கிடைக்கும். உடனே முதலில் இழந்த ரூ 100 ஐ கட்டிவிட்டு மீதமுள்ள ரூ 100 ஐ நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
சரி பூ விழுந்தால்? கவலை வேண்டாம் மீண்டும் மூன்றாம் முறை ரூ. 400 பந்தயம் கட்டுங்கள். தலை விழுந்தால் உங்களுக்கு ரூ 400 கிடைக்கும். உடனே முதல் இரண்டு ஆட்டத்தில் இழந்த ரூ 300 (100 + 200) ஐ கட்டிவிட்டு மீதமுள்ள ரூ 100ஐ வீட்டுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
ஆக இங்கு கடன் கொடுக்க ஆள் இருக்கும் வரை தோற்பது என்பது கிடையாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தலை விழும், நீங்கள் ரூ 100 யுடன் வீடு செல்லலாம். கடன் கொடுக்க யாராவது ரெடியாக இருந்தால் லட்சக்கணக்கிலோ கோடிக்கணக்கிலோ கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடலாம். இந்த விளையாட்டிற்குப் பெயர் என்ன தெரியுமா? மார்டிங்கேல் என்று பெயர். இங்கு நான் என்ன சொல்ல விழைகிறேன்?
சமீபத்தில் வீழ்ச்சியடைந்த லெஹ்மென் பிரதரஸ் வங்கி மற்றும் வாசிங்டன் மியூட்ச்சுவல் ஆகிய நிறுவனங்களின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட இதுபோலத்தான் ஆனால் சிக்கலானவை. அதில் அடிப்படை பிழைகள் நிறைய உள்ளன. எந்த வித ரிஸ்க்கும் எடுக்காமலும் காற்றிலிருந்து பணம் சம்பாதிக்கும் வழிகள் அவை.
இவை சந்தேகத்திற்குரிவை மட்டுமல்ல கணிதவியல் படி நடக்காத காரியம் (வேறு சந்தர்ப்பத்தில் இதனை விவரிக்கலாம்). இருந்தாலும் அவை கண்கட்டி வித்தைகளாக செயல்படுத்தபட்டன.
“வீழ்ச்சியின் விளிம்பில்…” என்ற கட்டுரையை நிறைவு செய்தபோது 700 பில்லியன் டாலர் கொண்டு சந்தை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் திட்டம் (அதாவது சூதாடிகளுக்கு கடன்) பற்றி கண்டோம்.
கொழுத்த பணக்காரர்களை காப்பாற்ற சாதாரண மக்களை பணயம் வைக்கும் திட்டம் தான் இது. ஆம்… அவ்வளவும் மக்களின் வரிப்பணம்.
அதற்கு, 1980களில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் திருமதி மார்க்ரெட் தாட்சர் கூறிய அதே வாசகத்தை தற்போது அமெரிக்க அதிபர் கூறிக்மெகாண்டிருக்கிறார் - TINA – அதாவது There Is No Alternative. அர்த்தம் “வேறு வழியில்லை” என்பதாகும்.
முதலாளித்துவம் ஜனநாயகத்தை இவ்வாறு கருணையின்றி படுகொலை செய்துகொண்டிருக்கிறது. இது உலகெங்கும் நடக்கும் விசயம்தான். ஆனால் அமெரிக்காவில் படுபயங்கரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த சந்தை மீட்பு போராட்டம்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேல் பழி
பழி ஒரிடம் பாவம் ஓரிடம். பேராசையின் காரணமாக அமெரிக்க வங்கிகள் பணத்தை தாறுமாறாக வாரி இறைத்துவிட்டு, தற்போது அமெரிக்க அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறை கூறுகிறது. அவர்களின் திடீர் வெளியேறுதலால் இந்த சரிவுகள் நடக்கிறதாம்…!
அவர்கள் ஸார்ட் செல்லிங்கில் (Short Selling) ஈடுபட்டதால் வங்கிகள் மூழ்கியதாம்.
ஆகவே இந்த பரிவர்த்தனை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தை வெளியிலிருந்து எந்த வகையிலும் வீழ்த்தமுடியாது. அந்த வங்கிகளில் உட்கார்ந்திருப்பவர்கள் முட்டாள்கள் இல்லை.
ஸார்ட் செல்லிங் ஒரு தவறான முறையற்ற பங்கு பரிவர்த்தனை முறைதான் (என்னை பொறுத்தமட்டில்), ஆனால் அது வீழ்ச்சிக்குக் காரணமில்லை.
ஸார்ட் செல்லிங் என்றால் என்ன? உதாரணத்திற்கு (ஸரீயா) அஆ கம்பெனியிலிருந்து சிராஜ் ரூ1500 செலவிட்டு 100 பங்குகளை தலா ரூ 15 க்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அவர் வாங்கிய பிறகு பங்கு விலை ரூ 10க்கு சரிந்து விட்டது. அந்த நேரத்தில் செய்யது என்ற ஒருவர் சிராஜிடம் அந்த 100 பங்கு சான்றிதழ்களை வாங்கி (பணம் கொடுக்காமல் சான்றிதழ்களை மட்டும் வாங்கி) அதன் விலை ரூ8 ஆகும் போது மற்றவரிடம் விற்கின்றார். அப்போது ரூ 800 சம்பாதித்துவிடுகிறார்.
அஆ பங்குவிலை மேலும் ரூ 5 ஆகக் குறையும்போது 100 சான்றிதழ்களை சந்தையிலிருந்து வாங்கி நண்பர் சிராஜூக்கு கொடுத்துவிடுகிறார். அதற்காக ரூ 500 செலவிட்டுள்ளார். ஆக கடைசியில் அவருக்கு லாபம் ரூ 300 ஆகும். இந்த ஸார்ட் செல்லிங்கில் பங்குகளின் விலை இறங்கியே ஆகவேண்டும்.
அப்போதுதான் லாபம். ஆகவே ஸார்ட் செல்லிங் பரிவர்த்தனையில் பணமுதலைகள் ஈடுபடுட்டால் பங்கு விலைகளில் வீழ்ச்சியடையும்.
எனவே தற்போது பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் சற்று விலகியே இருத்தல் நலம். பணத்தை இழந்த முதலாளிகளின் செயலால் பங்கு சந்தை தற்காலிகமாக காலை அல்லது மதியம் ஏறி மாலைப் பொழுதில் பெரு வீழ்ச்சியடையும்.
அமெரிக்காவின் (ஆகவே உலகின்) தற்போதைய பிரச்சனை
சரி… கடன் பிரச்சினை, சப் பிரைம் பிரச்சனை (வீட்டுக்கடன்) மற்றும் வங்கிகளை மீட்டெடுக்கும் வழிகள் தான் தற்போதைய முக்கிய பிரச்சனை என்றாலும், அமெரிக்காவின் முழுமுதல் பிரச்சனை என்ன தெரியுமா?
1980 வரை ஏற்றுமதியில் லாபம் ஈட்டிய அந்த நாடு 1985 லிருந்து 1997 வரை ஏற்றுமதியை இறக்குமதிக்கு சமன் செய்து சமாளித்து வந்தது. ஆனால் 2000 க்குப் பிறகு இறக்குமதி அதிகமாகி பற்றாக்குறையும் அதிகமாகியுள்ளது. மேலும் 40,000 பில்லியன் டாலர் கடன் வேறு. இதனை அமெரிக்கா என்றும் திருப்பித்தராது.
புதிய உலக இயக்கத்தின் (The New World Order) கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கையே இப்போது அந்நாட்டிற்கு வினையாக வந்துவிட்டது. வளர்ந்து வரும் நாடுகளான சீனா, இந்தியா, ரஸ்யா ஆகியவற்றில் கலப்பு பொருளாதார முறையை பின்பற்றப்படுவதால் பணத்தின் மதிப்பு, விலைகள், உற்பத்தி, ஓய்வுதியம் ஆகியவை (ஓரளவு) அரசின் கட்டுக்குள் உள்ளது.
அமெரிக்காவில் இந்த பருப்பு வேகாது. தொழிற்சாலை மற்றும் வியாபார வர்த்தகங்களை அரவணைத்து செல்லவேண்டிய கட்டாயம் அந்த அரசிற்கு.
கொழுத்த பணக்காரர்களின் “புதிய உலக இயக்கம்”
பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க, Regulatory Institutions எனப்படும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டு மையத்தை சரிசெய்யவில்லை அல்லது வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாறாக தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடம் –-- the Treasury Secretary -- முழுவதுமாக 700 பில்லியன் டாவர்களை தந்து வங்கிகளிடம் பிரிக்கச் சொன்னதுதான் அதிருப்தியான சம்பவம்.
இந்த அதிர்ச்சியான விசயத்தை இவ்வாறு கூறலாம்: சர்வாதிகாரத்தினை நோக்கிய கொள்கைப் பயணத்திற்கு லஞ்சம் லாவன்யங்களின் உறுதுணை மட்டுமின்றி, சித்தாந்த ரீதியிலான மாற்றம் தான் காரணம் (That lurch toward dictatorship was motivated not just by crony corruption, but also by a deeper ideological shift).
இந்த “ஜனநாயக” நாட்டிற்கு சர்வாதிகார சீனாவும் மன்னராட்சி சவுதியும் தான் நிதி தந்து உதவுகின்றன என்பதை ஏற்கனவே கண்டதுதான். ஆக ஜனநாயகம் நோய்வாய்பட்டுவிட்டது. 700 பில்லியன் டாலர்கள் சூறையாடும் கும்பலுக்கு சூதாடக் கொடுக்கப்பட்டுள்ளது. யாரிந்த சூறையாடும் கும்பல்?
புதிய உலக இயக்கம் (The New World Order)
அது என்ன புதிய உலக இயக்கம்? இந்த இயக்கம் பற்றி எழுதுவதற்கே இன்னொரு இணையதளம் வேண்டும். இந்த இயக்கம்தான் அமெரிக்க அதிபர் தேர்வு முதல் ஈராக் போர் வரை தீர்மானிக்கும் ஆபத்தான இயக்கம்.
ஐநா சபை, ஐ எம் எஃப் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில். (கடந்த ஒரு வருடமாக இதனை பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்தேன். இன்னமும் முடிந்த பாடில்லை. டன் கணக்கில் அதிரவைக்கும் தகவல்கள்…!) இந்த இயக்கம் முற்றிலுமாக பணக்காரர்களால் தொடங்கி இயக்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் மக்கள் அல்லது நாட்டின் பிரச்சனையை பற்றி கவலைகொள்ளமாட்டார்கள். தங்களின் பணத்தையும் வியாபாரத்தையும் பற்றிதான் கவலை அவர்களுக்கு. விளைவு ஈராக் போர். அவர்களின் சொல்படிக் கேட்காமல் நீங்கள் ஒரு நிறுவனத்தை போட்டியாக நடத்தினால் நீங்கள் நசுக்கப்படுவீர்கள்.
இது பெரும்பாலான இளம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிகழ்ந்து வரும் கதி. அவர்களுக்கு நிதியுதவி அவ்வளவு சாமான்யத்தில் கிடைக்காது
காங்கிரஸ் 700 பில்லியன் டாலர் மீட்பு முயற்சியில் கையெழுத்திடவில்லையென்றால் அமெரிக்காவில் ராணுவ ஆட்சி ஏற்படும் என்று அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி 3000 முதல் 4000 இராணுவ வீரர்கள் அக்டோபர் 1 முதல் அமெரிக்க நாட்டினுள் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணங்களை ஏதேதோ சொல்லி சமாளிக்கின்றனர்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரட் ஸெர்மென் கூறுகையில் 700 பில்லியனுக்கான திட்டத்தில் கையெழுத்திடாவிடில் இராணுவ ஆட்சி ஏற்படும் என்று மிரட்டப்பட்டதாக கூறுகிறார். (வீடியோ பார்க்க ப்ளேயை கிளிக் செய்யவும்)
("The only way they can pass this bill is by creating and sustaining a panic atmosphere. That atmosphere is not justified. Many of us were told in private conversations that if we voted against this bill on Monday that the sky would fall, the market would drop two or three thousand points the first day and a couple of thousand on the second day, and a few members were even told that there would be martial law in America if we voted no. That is what I call fear-mongering. Unjustified. Proven wrong. We’ve got a week. We’ve got two weeks to write a good bill. The only way to write to pass this bad bill, keep the panic atmosphere on" )
“இந்த திட்டத்தை அமல்படுத்த ஒரே வழி பய உணர்வை ஏற்படுத்தி அதனை தக்கவைத்தலே… எங்களில் பெரும்பாலோரை தனித்தனியே சந்தித்து, இந்த திட்டத்தை தடுத்தால் வானம் விழுந்துவிடும் என்றும் திங்களன்று பங்கு சந்தை 1000 புள்ளிகள் சரியும் என்றும் கூறப்பட்டது.
சிலருக்கு, இந்த திட்டத்தை வேண்டாம் என்று வாக்களித்தால் இராணுவ ஆட்சியும் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது மிரட்டல். இது தவறு. இன்னும் 1 வாரம் உள்ளது (அல்லது) 2 வாரங்கள் உள்ளன. நம்மால் நல்ல திட்டத்தை செயல் படுத்த இயலும். தற்போதைய இந்த மோசமான திட்டத்தை செயல்படுத்த ஒரே வழி இந்த பயஉணர்வை தக்கவைத்தலே ஆகும்…” என்றார். இதே இராணுவ ஆட்சி மிரட்டல் மீண்டும் ஏன் வராது?
மாயையில் மக்கள்
அமெரிக்கர்கள் உட்பட நம் அனைவரும் சினிமா, விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிட்டோம். இவற்றில் தலைகீழாக எதைக் கேட்டாலும் பதில் சொல்வோம்.
சிம்ரனுக்கு பிடித்த உணவு வகையிலிருந்து சச்சின் டெண்டுல்கருக்கு பிடித்த கார் வரை நம் விரல் நுனியில். ஊடகத்தின் வழியே மந்திரங்கள் ஓதி நம்மை மயக்கி வைத்திருக்கும் முதலாளித்துவ உலகம் ஒரு பக்கம். கணணி, உயர் உயிரியல் தொழில்நுட்பம், நேனோடெக்னாலஜி என்று பளபளவென்று பெயரிட்டு படித்தவர்களின் மதியையும் மயக்கியிருக்கும் கல்வி முறைகள் மறு பக்கம்.
எதற்கெடுத்தாலும் வேகம், ஓட்டம். நின்று நிதானித்து யோசிக்கவும் நேரமில்லை. அப்படி சற்று நேரம் யோசித்தால் போட்டியாளர் நம்மை விட 1 டாலர் அதிகம் சம்பாதித்துவிடுவார் என்று பயம் நம் எல்லாருக்கும். ஆகவே சுற்றியிருக்கும் நிலைமையை பற்றி யோசிக்கக் கூட நேரமின்றி பயணித்துக்கொண்டிருக்கும் நாம்.
நம்மை சுற்றி நடக்கும் விசயங்களை பகுத்து ஆழ்ந்து அறிய முடியாமல் மாய உலகில் வாழும் நமக்கு இனி வரும் காலங்களில் நடக்கவிருக்கும் சற்றும் நம்பமுடியாத எதிர்பாராத நிகழ்ச்சிகள் அதிரவைக்கப் போகின்றன.
அமெரிக்காவில் ரகஸிய கூட்டம்
நம் நாட்டில் உள்ளதுபோல் அமெரிக்காவிலும் செனட் என்றும் தி ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் என்று இரண்டு சபைகள் உள்ளன. கடந்த மார்ச், 13, 2008 – ம் ஆண்டு ரகசிய கூட்டம் ஒன்று தி ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் சபையில் நடைபெற்றது. இங்கு ரகஸியமாக் கூடினாலே ஏதோ விவகாரம் என்று விளங்கிக்கொள்ளலாம்.
கி.பி. 1812 – ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதக் கூட்டம் வரை 6 முறை தான் இங்கு ரகஸியமான முறையில் கூடியுள்ளனர் (மற்றபடி வெளிப்படையான கூட்டம் தான் நடைபெறும்). அமெரிக்கா காங்கிரஸ் கடைசியாக 1983 – ம் ஆண்டு ரகஸியமாக கூடி நிகராகுவாவில் கான்ட்ராஸ் கொரில்லாவை நசுக்க ஆலோசித்து பின் நிகரகுவாவையே கவிழ்த்தனர்.
ஆனால் கடந்த மார்ச் 13 – ம் நாள் இந்த அமெரிக்க காங்கிரஸ் கூடியதற்கான காரணம் மக்கள் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு என்று வெளியில் கூறினர். ஆனால்…
வெளியில் கசிந்த அதிர வைக்கும் உண்மை
உள்ளே நடந்த ரகஸியக் கூட்டத்தின் உண்மை ஆறு மாதம் கழித்து ஓரளவு கசிந்து விட்டது. அக்கூட்டத்தில் 9 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் முதலாவது செயல் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கடந்த 10 நாட்களுக்குள் தான்…
1. செப்டம்பர் 2008 – ற்குள் அமெரிக்கவின் பொருளாதார சீரழிவு – (நடந்து கொண்டிருக்கிறது)
2. ஃபிப்ரவரி 2009 – ற்குள் அமெரிக்காவின் அரசாங்க கஜானா கவிழும் வாய்ப்புள்ளது. அப்போது என்ன செய்வது?
3. இதன் மூலம் உள்நாட்டு கலவரம் வர அதிகமாகவே வாய்ப்புள்ளது. அதனை எப்படி சமாளிப்பது?
4. “புதிய உலக இயக்கத்தை” (The New World Order)
எதிர்ப்பவர்களை சுற்றிவளைத்து பிடிப்பது.
5. அமெரிக்கா முழுவதும் கட்டப்பட்ட (The New World Order) என்ற கேம்பில் எதிர்பாளர்களை வைத்து மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடுதல்.
6. எதிர்த்த காங்கிரஸாரை பழிவாங்குதல்
7. உள்நாட்டு கலவரத்தின் போது ஆதரவு காங்கிரஸ் பிரதிநிகள் மற்றும் அவர்களின் குடுபம்பத்தினரின் பாதுகாப்பு
8. இயற்கை வளமிக்க கனடாவுடனும் மனித வளமிக்க மெக்சிகோவுடனும் அமெரிக்காவை இணைப்பது
9. அமேரோ என்ற புதிய நாணயத்தை இம்மூன்று நாடுகளிடமும் அறிமுகம் செய்து பொருளாதாரத்தை நிலைநிறுத்தல்
தயாராகும் திட்டங்களும் செயல்பாடுகளும்
இதன் பயங்கரத்தை நாம் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டுள்ளோம் என்று இன்னமும் விளங்கவில்லை. ஆனால் ரகஸிய கூட்டம் திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
1. அக்டோபர் 1 முதல் சிறப்பு இராணுவ பிரிவு முகாமிடுதல் - நடந்து கொண்டிருக்கிறது.
2. இராணுவ வீரர்களின் மனநிலையை பரிசோதித்தல்
3. 800 முகாம்கள் எதிர்ப்பாளர்களுக்கு ரெடி. சிவப்பு கோடு என்றழைக்கப்படும் எதிர்ப்பாளர்கள் அரசியல் மற்றும் தலைவர்களாக இருக்கலாம். நீலக்கோடு எனப்படும் எதிர்ப்பாளர்கள் மக்கள் மற்றும் அரசியல் சாராதவர்கள் ஆவர்.
இந்த இரு பிரிவினருக்கும் தனித்தனியே முகாம்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த முகாம்கள் அவர்களை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தப்படும்.
ஆகவே எப்போது எது நடக்கும் என்ற கவலை உலகெங்கும் உள்ளது. அதனால் அந்தந்த நாட்டு அரசும் அமெரிக்காவும் உலக மக்களின் கவனத்தை திசைதிருப்ப உள்நாட்டு பிரச்சனையை அதிகமாக்கலாம். BY MR. HILAAL ALAM
--------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>>
வாஞ்ஜுர்
மேலும் படிக்க... Read more...