**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இளைஞர்களின் முதுகெலும்பு பிரச்சினைகள்

>> Wednesday, February 7, 2007

இளைஞர்களின் முதுகெலும்பு பிரச்சினைகள்

சீறிக்கொண்டு பாயும் டூவீலர், சாஃப்ட்வேர் நிறுவன வேலை, முறை தவறிய வேலை நேரம் இவற்றால் இன்றைய படித்த இளைஞர்களின் வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. பல இளைஞர்களின் கனவு வாழ்க்கையும் இதுவாகத்தான் இருக்கிறது. வாழ்க்கைத்தரம் ஹைடெக்காய் மாற மாற, அவர்களைப் பாதிக்கும் நோய்களும் அதிவேகத்தில் துரத்துகின்றன.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய இளைஞர்களின் 60 சதவிகிதம் பேருக்கு முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.

'வோல்ட் பெடரேஷன் ஆஃப் நியூரலாஜிக்கல் சொசைட்டி ' என்ற அமைப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த பயங்கர ஆபத்து தெரிய வந்திருக்கிறது

இருபது வயதிலேயே நிறைய பயன்கள் முதுகுவலி, கழுத்துவலி, மூட்டு வலி என்று சோகத்தோடு வருகிறார்கள். ஏ.சி. அறையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தபடி சொகுசாக வேலை பார்த்துவிட்டு உடற்பயிற்சியைச் சுத்தமாக மறந்து விட்டதால் வரும் பிரச்சினை இது. எப்போதும் வீடியோ கேம் ஆடும் சுட்டிப் பையன்களுக்கும், இந்தப் பிரச்சினை 15 வயதுக்குள் வருகிறது என்று அதிர்ச்சி தகவல் சொல்கிறார் அமைப்பின் தலைவரான டாக்டர் ரமானி.

''வேலை நேரத்திலும், பயணங்களிலும் உட்காரும், நிற்கும், நடக்கும் நிலைகளில் மாறுதல்கள், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாதது, வாகனம் ஓட்டுதல், புகைப்பழக்கம் உட்பட முதுகு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறைய காரணங்கள் உண்டு என்கிறார்கள் முட நீக்கு இயல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்.

இதுபற்றி ரப்பானி வைத்திய சாலையச் சேர்ந்த டாக்டர் ஹக்கிம் சையத் சத்தார் விளக்கும்போது:

கம்ப்யூட்டர் முன் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் உட்காரக்கூடாது. நடுவில் கொஞ்ச நேரம் எழுந்து, நின்று, நடந்துவிட்டு அப்புறம் மறுபடி உட்காரலாம். அளவுக்கதிகமான எடை தூக்குவது, டூ_வீலர் ஓட்டுவது, இதெல்லாமும் முதுகுப் பிரச்சினைக்குக் காரணங்கள். உட்காரும்போது, நிற்கும்போது, நடக்கும்போது முதுகுத் தண்டு நேராக இருக்கணும். அது மாறினால்பிரச்சினைதான். அடிமுதுகு எலும்பு அடுக்குகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு நகர்ந்து, அந்த ஏரியாவில் இருக்கிற நரம்புகள், அழுத்தப்பட்டு, முதுகுவலி வரும். கால்களின் இயக்கத்தையும் பாதிக்கும்.

இதை தவிர நோய்த் தொற்று, இணைப்புகள் தேய்மானம், எலும்பு நலிவு, அரிதாக சிலருக்கு எலும்புப் புற்றுநோய் காரணமாகவும் முதுகுவலி வரலாம். முதுகு வலியைத் தவிர்க்கவும், வலி வந்தபிறகு அதன் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழிகள் உண்டு.

எப்பவும் முதுகுப் பகுதிக்கு சப்போர்ட் இருக்கிற மாதிரி உட்காரணும், நிற்கணும், நடக்கணும், கீழே தரையில் இருக்கிற பொருளை அப்படியே முதுகை வளைச்சு, குனிந்து எடுக்கக்கூடாது. கால்களை மடக்கி முழங்கால்களைத் தரையில் ஊன்றி உட்கார்ந்தபடிதான் எடுக்கணும். டூ_வீலர் ஓட்டறவங்க சரியான ஷாக்அப்சார் உள்ள வண்டிகளைத் தேர்தெடுந்து ஓட்டலாம். ஷாக் அப்சார் சரியான கண்டிஷன்ல இருக்கான்னு அடிக்கடி சோதனை பண்ணிக்கணும். நேரத்தை மிச்சப்படுத்த கரடுமுரடான வழிகள்ல வண்டியை ஓட்டக் கூடாது. மேடு, பள்ளம் இல்லாத சாலைகள்லதான் ஓட்டணும். வேகத் தடைகளும் பிரச்சினைதான். உடற்பயிற்சி ரொம்பவே முக்கியம். வயிறு மற்றும் முதுகு தசைகளப் பலப்படுத்தற உடற்பயிற்சிகளைச் செய்யணும்.

சமமான தரையில, கை, கால்கள நீட்டிப் படுக்கணும். கைகள் பக்க வாட்டில் இருக்கட்டும். தலையயும், கால்களையும் ஒரே சமயத்துல 6 அங்குல உயரத்துக்குத் தூக்கணும். 3 வரைக்கும் எண்ணிட்டு முதல்ல தலை, பிறகு காலை கீழே வைக்கணும். அதே மாதிரி இன்னொரு காலுக்குச் செய்யணும்.

நேரா படுத்துக்கிட்டு, இரண்டு கால்களையும் மடக்கணும், தொடைப் பகுதி வயிற்றைத் தொடுற மாதிரி மடக்கி 3 வரை எண்ணிட்டு, சாதாரண நிலைக்கு வரலாம்.

இந்த எல்லாப் பயிற்சிகளயும் தினமும் 5 முதல் 10 முறைகள் செய்யலாம்.

பால், கேழ்வரகு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெந்தயம், வெண்டைக்காய், சோயா, பருப்பு வகைகள், உளுந்து இவையெல்லாம் கால்சியம் நிறைந்த உணவுகள். முதுகெலும்பை உறுதியாக்கக் கூடியவை. தினமும் கொஞ்சநேரம் இளம் வெயில் படற மாதிரி நிற்பது, தயிர், சீஸ், காட்லிவர் ஆயில் சாப்பிடற மூலமா, எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் - டி நிறைய கிடக்கும்.

முதுகுவலிக்கும், புகைப் பழக்கத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. முதுகுவலி வராம தவிர்க்கணும்னா புகைப் பழக்கத்துக்கு முதல்ல குட்பை சொல்லுங்க.
---------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

மேலும் படிக்க... Read more...

மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்

மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்

''குழந்தை பிறந்த பின்னர், பெண்கள் தங்கள் நலன் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. மாறாக குழந்தை வளர்ப்பு, அவர்களை ஆரோக்கியம், எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிடுகிறார்கள். இதனால் பெண்களின் உடல் எடை கூடுவதோடு, எலும்புகளும் பலமிழந்து விடுகின்றன. ஆண்களிடம் இந்தப் பாதிப்பு குறைவு. பெண்கள் போதிய உடற்பயிற்சி செய்யாமலிருப்பதே இதற்குக் காரணம்!'' எச்சரிக்கை உணர்வோடு சொல்கிறார், பிரபல எலும்பு மருத்துவ நிபுணர் சிவமுருகன்.

''எலும்புகள் கால்சியம் எனும் தனிமத்தால் ஆனவை. அதனால் கால்சியச் சத்து குறையும்போது, இயல்பாகவே எலும்புகள் பலமிழக்கும். இதனைச் சமன்படுத்த கால்சியம் சப்ளிமென்ட்டுகள் எடுக்கணும். மெனோபாஸ் ஏற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கால்சியம் சப்ளிமென்ட் மாத்திரகள் எடுப்பது நல்லது. தவறில்லை. பாலில் கால்சியச் சத்து அதிகம். ஒரு டம்ளர் பாலில் நூற்று ஐம்பது மி.கி. கால்சியம் இருப்பது அசத்தல்.

எல்லாவற்றையும் விட உடற்பயிற்சி செய்யலாம். எந்த வகையான உடற்பயிற்சியும் எலும்புகளை வலுவாக்கும்.
வயது ஏற ஏற முழங்காலுக்கும், தொடை எலும்புக்கும் இடையில் இருக்கும் 'சவ்வு' தேய்ந்து போகும். இதற்கு ஆர்த்ரைட்டிஸ் என்று பெயர். இதில் ரூமட்டாய்டு, ஆஸ்டியோ ஆர்டிதரைட்டிஸ் என்று இரண்டு வகை.

இவற்றில் ஆஸ்டியோ ஆர்த்தரட்டிஸ் சற்றுக் கொடுமயானது. அறிகுறிகள் எளிதில் தெரியும். கடுமையான வலி வரும். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. படிக்கட்டுகளில் ஏற முடியாது. திடீரென்று முழங்கால் மூட்டுகளில் வீக்கம் வரும். வாழ்க்கையே முடங்கிப் போய்விட்ட போன்ற எண்ணம் ஏற்படும். இதற்கு முழங்கால் மூட்டு ஆபரேஷன்தான் ஒரே தீர்வு. பெயர் 'ஹை ப்ளெக்ஷியன்' ஆபரேஷன். மிகவும் நவீன சிகிச்சை இது.

முழங்கால் மூட்டின் இறுதிப் பகுதியில் இருக்கும் சவ்வுக்கு பதில், 'கோபால்ட் குரோமியம் அலாய்' கொண்டு செய்யப்பட்ட செயற்கை உலோகத்தை வைத்துப் பொருத்திவிட்டால் போதும். அதன்பின்னர் தொடை எலும்பும், முழங்கால் மூட்டும் எப்படித்தான் உராய்ந்தாலும் வலி ஏற்படாது. ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடும். இந்த எளிமயான ஆபரேஷன ஆண், பெண் யார் வேண்டுமானாலும் என்று கொள்ளலாம்.

தரையில் வாகாக உட்கார முடியவில்லையே என்று எண்ணியவர்கள் கூட, காலை மடக்கி, நீட்ட முடியும், ஒரு விளயாட்டு வீரரைப் போல் படிக்கட்டுகளில், ஏறி, இறங்க முடியும். எதிர்காலம் இருண்டு போய் விடுமோ என்ற பயமின்றி வாழ்க்கையச் சிரமமின்றி, மகிழ்ச்சியாகத் தொடரலாம்!'' உறுதியாகச் சொல்கிறார் டாக்டர் சிவமுருகன்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்'.

நஜ்மாவுக்கு வயது நாற்பத்தைந்துக்கும் கொஞ்சம் அதிகம். கணவரோடு டூ வீலரில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று கீழே இறங்கியவருக்கு முழங்காலில் வலி. லேசாக அந்தப் பகுதியைத் தடவி விட்டார். அப்போதைக்கு வலி நின்று போனது. கொஞ்சம் ஆசுவாசப்பட்டார். ஆனால், வீட்டுக்கு வந்தபோது, மீண்டும் வலி தாங்கமுடியவில்ல. இரவு படுக்கப் போகும் முன்பு, வலி இருந்த இடத்தில் களிம்பைத் தடவிவிட்டுப் படுத்தார். மறுநாள் காலையிலும் வலி போவேனா என்று அடம்பிடித்தது.

''இது முழங்காலில் வந்திருக்கும் சாதாரண வலியோ, சுளுக்கோ அல்ல. இதன் பெயர் 'ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ்'. முழங்காலுக்கும் தொடை எலும்புக்கும் இடையில் இருக்கும் 'சவ்வு' தேய்ந்து போவதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். இதற்கு ஆபரேஷன்-தான் ஒரே தீர்வு. இதற்கென்றே புதியதாக ஆபரேஷன் வந்துவிட்டது. இதன் மூலம் 'ஆஸ்டியோ ஆர்த்ரடிஸக் குணப்படுத்தி-விட முடியும்!'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சென்னை நந்தனம் 'அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனயின் எலும்பு நோய் நிபுணர் டாக்டர் விஜய் சி.போஸ்.

'ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்' பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது அவசியம். இல்லையேல் பிரச்னை பெரிதாகிவிடும். இந்தியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடை அதிகரிப்பது இப்பிரச்னை ஏற்பட ஒரு காரணம். ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸில் பலவகை உண்டு. முதல் வகையில் எப்போதாவதான் வலி வரும். அன்றாடம் ஏதாவது வேலை செய்யும்போது வலி வருவது இரண்டாவது வகை. மூன்றாவது வகை சற்று வித்தியாசமானது. நோயாளியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. வலி வாட்டி எடுக்கும். உட்கார்ந்தாலே வலி எடுப்பது நான்காவது வகை.

இவற்றில் எந்த வகை என்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுப்பது நல்ல. வலி முற்றிவிட்டால் மருந்துகள், ஊசிகள், உடற்பயிற்சி, பிஸியோதெரபி உள்ளிட்ட உபாயங்கள் எந்தப் பலனையும் தராது.

முழங்கால் மூட்டுப் பிரச்னைக்கு 'ப்ரெய்ன் லேப் நேவிகேஷன்' அறுவைச் சிகிச்சை நல்லது இது கம்ப்யூட்டர் மூலம் செய்யப்படும்.

முழங்கால் எலும்புக்கும், தொடை எலும்புக்கும் இடையில் உள்ள சவ்வுப் பகுதியை, செயற்கையாகச் சரி செய்வதன் மூலம் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பாதிப்பு குணப்படுத்தப்படும். முழங்கால் மூட்டுப் பகுதியில் உள்ள எலும்பு, குதிரையின் காலடிக் குழம்பைப் போன்று இருக்கும். அதற்குப் பொருத்தமாக கோபால்ட் குரோமியம் உலோகம் கொண்டு, அதே சைஸில் செய்யப்பட்ட செயற்கைக் கருவியைப் பொருத்துவார்கள். இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல் தொடை எலும்பில், செயற்கை பிளாஸ்டிக் எலும்பு பொருத்தப்படும். இப்படி இரண்டு செயற்கைப் பொருட்கள் பயன்படுத்துவதால், உரசல் இருந்தாலும், முழங்காலில் வலி ஏற்படாது. உலோகப் பொருள் வைத்துத் தைத்துவிடுவதால் முழங்காலை அசைக்கும் போதும், மடக்கும்-போதும் அசௌகரியம் இருக்காது. ஓடலாம், நீச்சல் அடிக்கலாம். பயம் தேவையில்ல.

கம்ப்யூட்டர் உதவியுடன் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அதனால் இரண்டு எலும்புகளையும் மிகத் துல்லியமாகப் பொருத்திவிடலாம். தவறு நேர வாய்ப்பில்லை. மீண்டும் எலும்பு தேயுமோ என்ற பயம் அவசியமில்லை.

சாதாரண மருத்துவமனைகளில் இந்த அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள முடியாது. காரணம், அங்கே வசதிகள் இருக்காது என்பதான். ஆபரேஷனின் போது, முழங்கால் மூட்டுப் பகுதியில்
MIRA (MINIMALLY INVASIVE REFRACTIVE ARRAYS)
கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். கேமராவிலிருந்து வெளியேறும் புறஊதாக் கதிர்கள், MIRA கருவிகளால் பிரதிபலிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அதனால் துல்லியமான ஆபரேஷனுக்கு உத்தரவாதமுண்டு.

சுமார் ஒன்றரை மணி நேரம் பிடிக்கும் இந்த ஆபரேஷன் செய்து கொள்வதற்கு முன்பு வேறு ஏதேனும் உடல் பாதிப்புகள் இருக்கிறதா என்பத 'செக்' செய்வது அவசியம். ஜெனரல் அனஸ்தீஸியா கொண்டு செய்யப்படும் இந்த ஆபரேஷன், கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால், ஆஸ்டியோ ஆர்த்ரடிஸிலிருந்து கிட்டத்தட்ட முழுமயான நிவாரணம் கிடைத்துவிடும்! ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ் பிரச்ன ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் சிகிச்சையை த் தொடங்கிவிடுவது நல்லது.

தடுக்கும் வழிகள்:

1. உடல் எடை போடக் கூடாது.
2. ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் சமச்சீரான உணவுகள் எடுப்பது அவசியம்.
3. பரம்பரையாக வரும் வாய்ப்பு உண்டு என்பதால், ஆரம்பத்திலேயே டெஸ்ட் செய்த பாதிப்பில்லை என்பதை, உறுதி செய்வது முக்கியம்.
4. பொதுவாகக் கொஞ்சம் மூத்த வயதினரைத்தான் இந்த நோய் தாக்கும் என்பதால், அந்த வயதினரை கவனிப்பது நல்லது.
-------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

மேலும் படிக்க... Read more...

குறைப் பிரசவத்தினைத் தடுக்க...

குறைப் பிரசவத்தினைத் தடுக்க...

ஒரு பெண் கர்ப்பம் தரித்து 9 மாதம் கழித்து குழந்தை பிறக்கும் நிலையில் பிரசவம் எளிதானதாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

அதோடு மட்டுமன்றி கர்ப்பக் காலத்தில் கருக் குழந்தைக்கு அந்தந்த காலக்கட்டத்தில் உருவாகக்கூடிய உறுப்புகளும் முழுமையாகவே பெரும்பாலும் சரியாக அமைந்து பிறந்து பிரச்சினைகள் இருக்காது என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

மேலும் அவர்கள் கூறுவதாவது...
குறைப்பிரசவத்தினால் குழந்தைகளின் கண்ணிற்கு பாதிப்பு வரும். குறை மாதத்தில் பிறக்கும் நிலையில் விழித்திரை ரத்தக் குழாய்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதனால் ரத்தக்குழாய்கள் சீராக இல்லாமல் புதிய ரத்தக் குழாய்கள் தோன்றி அவற்றிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கும்
இதனால் விழித்திரை சுருங்கி இயல்பான அமைப்பிலிருந்து மாறுபடும்.

இதற்கு கண் மருத்துவத்தில் ரெடினல் டிடச்மென்ட் Retinal Detachment) குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஒரு மாதம் கழித்து விழித்திரைச் சோதனை (Retinal Examinatibn)
செய்ய வேண்டும்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடன் முதல் மூன்று மாதங்கள் மிக முக்கிய காலகட்டமாகும். இக்காலத்தில் தாய்க்கு ருபெல்லா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் கருவில் குழந்தைக்குத் தேவை இல்லாத பிரச்சினை உண்டாகும்.

மூளை வளர்ச்சி பாதிப்பிலிருந்து இதயத்தில் ஓட்டை, கண்புரை வருவது வரைக்கும் வாய்ப்புகள் அதிகம். கண்நீர் அழுத்த நோயும் (க்ளாக்கோமா) ஏற்படலாம். சக்கரை நோய் பிரச்சினை தாய்க்கு இருந்தால் பிறக்கும் குழந்தைக்குக் கண்புரை வர சாத்தியம் உண்டு.

அதனால் கர்ப்பகாலத்தில் தாய் தனது உடலில் சர்க்கரை அளவை பரிசோதித்து அளவான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எளிய ரத்தப்பரிசோதனை மூலம் குழந்தைப் பருவத்தில் தனக்கு பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை கல்யாணத்திற்கு முன்பாக மணமகள் அறிந்து கொண்டு, இல்லையென்றால் திருமணத்திற்கு முன்பாய் தடுப்பூசி போட்டு கொண்டு விட்டால் ருபெல்லா வைரஸ் காய்ச்சலிலிருந்து தப்பலாம்,குறைப் பிரசவக் கோளாறினையும் தடுக்கலாம்.
----------------------------------
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு

இரவுத் தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு

தூக்கம்

இரவுத் தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு வரும் ஓர் எச்சரிக்கை! இரவில் 5 மணி நேரத்துக்கு மேல் தூங்க முடியாதவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நோய் வரும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறைவாகத் தூங்கினால் பசி எடுக்கும். சுரக்கும் இன்சுலின் அளவு சீராக இருக்கும் என்பது முந்தைய ஆய்வின் முடிவு. தற்போதைய ஆய்வின் முடிவின் விளைவு வேறு விதமாக உள்ளது.

நடுத்தர வயதுள்ளவர்கள் இரவில் குறைந்த நேரம் தூங்கினால் ரத்தக் கொதிப்பு வரும் என்று கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு தங்கள் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட 4,810 பேர்களில் 647 பேர்களுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தது. இவர்கள் இரவில் 5 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கி இருக்கிறார்கள். அதோடு இவர்களின் உடல் உடையும் அதிகரித்து உள்ளது. தவிர இவர்களுக்கு நீரிழிவு நோய், மன அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகி இருக்கிறது. பகல் தூக்கத்துக்கும் அடிமையாகி விடுகிறார்கள். அதே நேரத்தில் இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்கியவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை.

இரவில் நன்றாகத் தூங்குகிறேனா?

இரவில் நான் நன்றாகத் தூங்குகிறேனா என்பதே குழப்பமாக உள்ளது. என் மனைவியைக் கேட்டால் நன்றாகத் தூங்குவதாகச் சொல்கிறாள். இதற்கு என்ன காரணம்?

விளக்கம் தருகிறார், அப்பல்லோ மருத்துவமனயின் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் என். ராமகிருஷ்ணன்.

''நமது தூக்கம் 1,2,3,4, REM என்கிற ஐந்து நிலைகளில் நடக்கிறது. முதல்நிலை தூக்கம் சிறு சப்தத்தில் கலந்துவிடும். இரண்டாம் நிலையும் மூன்றாம் நிலையும் சிற்சில சமயத்தில் நம்மை திடுக்கிட வைக்கும். ஆனாலும் தொடரும். நான்காவது மற்றும் அதை அடுத்த REM ஆழ்ந்த தூக்கம். கனவுகள் வருவதெல்லாம் அப்பொழுதுதான். ஒவ்வொருவருக்கும் இந்த ஐந்து நிலைகளில் தூக்கம் நிகழ்கிறது. குறிப்பாக, நம் தூக்கத்தில் 50 முதல் 60 சதவீதம் இரண்டாவது நிலையிலும், 20 சதவீதம் 3வது, 4வது நிலையிலும், 5 சதவிகிதம் மட்டும் REM மிலும் நிகழ்கிறது. இப்படி, தூக்கம் முறையாக நிகழ்ந்தால், மறுநாள் உற்சாகமாக இருக்கும்.

இப்படி இல்லாமல், நமது தூக்கம் சில நிலைகளில் மட்டுமே முடிவடையும் போதுதான் தூங்கினாலும், மறுநாள் தூக்கமின்மையை உணர்கிறோம். தூங்குவதற்குமுன் காப்பி, டீ குடிப்பது, சாக்லெட், பானங்கள் அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்திற்குத் தூங்கச் செல்ல வேண்டும். இப்படி தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தும் செய்ய வேண்டியதைச் செய்தும் தூக்கம் நிறைவாக இல்லையென்றால், ஸ்லீப் ஸ்டடி செய்து பார்க்கலாம். இதிலும் எந்தக் குறைபாடும் தெரியவில்லை என்றால் கவுன்சிலிங் செய்தால் சரியாகிவிடும்.''

கட்டில் மெத்தை மாதிரி தூக்கத்தையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம். வாங்க முடியாதிருப்பது தூங்குவதற்கான நேரத்ததைதான். கால்சென்டர் கல்ச்சரில் விழித்தால், காசு என்றாகிவிட்டது. அதுவும் வினாடிக்கு இவ்வளவு' என்று விலைபேசப்படும் பொழுது விற்கப்படுவது தூக்கம்தான். வரி விளம்பரங்களில் 'வாங்க விற்க' பகுதியில் இடம்பெறாமல் இருந்தால் சரி! 'நல்லிரவு!' நண்பர்களே...

பெட் காபியைப் போல் பெட் டீ உண்டா?

காபி சோம்பேறி பானம். டீயோ சுறுசுறுப்பின் அடையாளம். அதிகாலைப் படுக்கையில் தூக்கக் கலக்கத்தில் காபிதான் பொருத்தம். தூக்கம் கலைந்த பின் டீ ராஜா. காபி கேபிடலிஸ்ட். டீயோ தொழிலாளர் வர்க்கம்.

-------------------
மேலும் பதிவுகளுக்கு

VANJOOR

மேலும் படிக்க... Read more...

மாத்திரையர்கள் உஷார்.ஹார்ட் அட்டாக்!

மாத்திரையர்கள் உஷார்.ஹார்ட் அட்டாக்!

ஆபீஸ் வேலை. டென்ஷன். லேசாக தலைவலிக்கிற மாதிரி இருக்கிறது. பியூனைக் கூப்பிடுகிறீர்கள். ''இந்தாப்பா.. ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வா.. கூடவே சூடா ஒரு காபி..'' இப்படிச் சிலர் எந்தச் சிறு தொந்தரவும் உடலில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறவர்கள், சட்சட்டென்று எதற்கெடுத்தாலும் மாத்திரையை தேடுகிறார்கள். சிலர் தாங்கள் கொண்டு வருகிற பையில், சூட்கேஸில், ஆபீஸ் டேபிளில், வீட்டு அலமாரியில் என்று எல்லா இடங்களிலும் ஒரு இருபது, இருபத்தைந்து வகையான மாத்திரைகள் வைத்திருப்பார்கள். கூட இருக்கிறவர்களுக்கும் எடுத்து, எடுத்துத் தருவார்கள்.

''காலையில இருந்து வயத்தைக் கலக்கி இரண்டு தடவைப் போயிட்ட.து.!'' ''அப்படியா.. இந்தாங்க இதைப் போடுங்க.. கப்புனு கழுத்தை இறுக்கிப் பிடிச்சாப்ல நின்னுடும்..'' என்பார். யார் என்ன சொன்னாலும் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். இது சரியா? என்று ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டு முடிவு வெளிவந்திருக்கிறது

மாத்திரையர்கள் இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த முடிவைப் படித்துவிடுவதான் எதிர்கால ஆரோக்கியத்திற்கு நல்லது.

பொதுவாக, இந்த மாத்திரையர்களிடம் சிக்குவது சின்னதும், பெரியதுமான வலி மாத்திரைகள்தான். தப்பும், தவறுமாக எடுக்கப்படுகிற இந்த வலி மாத்திரைகள் என்ன செய்கின்றன தெரியுமா? ஹார்ட் அட்டாக்! ஆம்..

இஷ்டம்போல வலி மாத்திரைகளை எடுக்கிறவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் ஹார்ட் அட்டாக் வந்துவிடுகிறது. இந்த முடிவை உலகுக்கு அறிவித்திருப்பது 'கமிஷன் ஆன் ஹியுமன் மெடிசன்' என்கிற லண்டனில் இருக்கிற ஆய்வுக்கழகம்.

இந்த ஆய்வு முக்கியமாக மூன்று வலி மாத்திரைகளைத்தான், கவனத்தில் எடுத்க்கொண்ட.து ஒன்று ஆஸ்பிரின். இரண்டாவது ப்ரூஃபன். மூன்றாவது பாரசிட்டமால். இந்த மூன்றும்தான் சுலபத்தில் கடைகளில் சீட்டு எதுவும் இல்லாமல் கேட்டு வாங்கி, மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் முதல் இரண்டைவிட, மூன்றாவதாக வருகிற பாரசிட்டமால் கொஞ்சம் பாதுகாப்பானது என்றாலும், தவறுதலான பயன்படுத்துதல் என்கிற விஷயம், இந்த மூன்று மாத்திரைகளுக்கும் அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் சிக்குன் குனியா வந்த பொதுமக்களை மூட்டுக்கு மூட்டு கவனித்ததில் எல்லோரும் கிட்டத்தட்ட வலி மாத்திரைகளிடம் இரண்டு மாதத்திற்கு தஞ்சம் அடைந்துவிட்டார்கள். ஆனால், அவற்றின் பின் விளவு இவ்வளவு மோசமான விஷயங்களோடு இருக்கிறது என்பது பலருக்குத் தெரரிந்திருக்காது.

உலகம் முழுக்க இந்த வலி மாத்திரைகளில் பல தடை செய்யப்பட்டிருக்கிற.து தற்சமயம் 'நிமுலிட்' என்கிற வலி மாத்திரையை மருத்துவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். காரணம், இந்த வலி மாத்திரைகள் உதவி செய்வதைவிட, உபத்திரவங்கள அதிகம் உருவாக்கி விடுகின்றன.

அல்சர் என்கிற ஒரு சிறு சிக்கலில் ஆரம்பித்து, சிறுநீரகப் பழுது என்கிற பெரிய பிரச்னை வரை இந்தவலி மாத்திரைகளால் ஏற்படும் என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட முடிவுகள். இப்போது இந்தப் புது ஆய்வு ஹார்ட் அட்டாக் என்கிற மற்றொரு பெரிய பிரச்னையயும் உறுதி செய்திருக்கிறது.

ஆனால் காய்ச்சல், உடல் வலி, வலி, அடிபடுதல் போன்ற மிக மிக இயல்பான நேரங்களில், இந்த வலி மாத்திரைகளின் உதவியில்லாமல் எப்படிச் சமாளிப்பது என்று நீங்கள் கேட்கலாம்?

நல்லது. உங்களுக்கு அந்த நேரத்தில் வலி மாத்திரை தேவையா இல்லயா? அது எந்த அளவில் தேவை? எத்தன நாட்களுக்கு? என்பதை உங்கள் டாக்டர் முடிவு செய்யட்டும். அதுவே பாகாப்பானது. எந்தப் பின்விளைவும் ஏற்படுத்தாது என்று, நாம் நினக்கிற பாரசிட்டமால் அளவு, உடலில் 15 கிராம் என்பதைத் தாண்டும் போது லிவர் என்கிற கல்லீரலைத் தாக்கிவிடும்.

பிரிட்டனில் நடக்கிற பல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குக் காரணம், இந்த பாரசிட்டமால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதான் என்கிற தகவலும் உண்டு.

பல இருதய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களே இதைப் பரிந்துரைக்கிறார்கள். அவர்களுக்கும் சொல்வது இதுதான். அந்த மாத்திரையின் அளவை உங்கள் மருத்துவர் தீர்மானிக்கட்டும். 75கிராம் என்கிற அளவுதான் மிகப் பாகாப்பானது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதிகமாகும்போது இரைப்பையைப் பாழ்படுத்தி, புண்ணாக்கி, செரிமானத்தைக் கோளாறாக்கி, கண்ணுக்குத் தெரியாத இரத்த இழப்பை உருவாக்கி, முடிவில் அனிமியா என்கிற இரத்த சோகை உடம்பில் பேஸ்த்து அடிக்கும். காரணம், வலி மாத்திரகளின் தவறான உபயோகம்.

ஆய்வு முடிவில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் இதுதான்.

சிறு தலைவலி, லேசான காய்ச்சல் போன்றவற்றிற்கெல்லாம் மாத்திரைகளைத் தேடாதீர்கள். ஜண்டுபாம், நண்டுபாம் என்று பல குண்டுகள் அதே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் போட்டு வலியையும், காய்ச்சலையும் தாக்கிப் பார்க்கலாம். இல்லை சற்று ஓய்வு. முடியாதபட்சத்தில் அருகில் இருக்கும் நம்பகமான டாக்டரைச் சந்தியுங்கள்.

சரி, இந்த வலி மாத்திரைகள் எப்படிச் செயல்படுகின்றன? அதாவது நம் உடம்பில் ப்ரோஸ்டோகிளான்டின் என்ற ஒரு வஸ்து... வேண்டாம் விளக்கிச் சொன்னால் மறுபடியும் உங்கள் தலை வலிக்க ஆரம்பித்து விடும். விட்டுவிடலாம்.

மேலும் பதிவுகளுக்கு VANJOOR

மேலும் படிக்க... Read more...

மகன், மகளுக்கு தகப்பன் - காலகட்டங்களில்

>> Monday, February 5, 2007

காலகட்டங்களில் பெற்றோர்.

அப்பா என் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வேறு வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

1) என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!
2) என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!
3)
என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!
4) என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!
5)
என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!
6)
என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!
7)
என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி
8)
என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?
9) என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!
10) என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!
11)
என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்
12) என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது
13) என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியலை
14) என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது
15) என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்துவிடாதீர்கள்.

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

அமெரிக்காவின் இரத்த வெறி

>> Sunday, February 4, 2007

அமெரிக்காவின் இரத்த வெறி
இன்றைக்கு உலகம் முழுவதும் அதிர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் உள்ளாகியிருக்கிறது சதாம் உசேன் மரணம். நேற்று வரை அவர் வாழ்ந்த நிலை என்ன? அமெரிக்காவை எதிர்த்த காரணத்தால் நேர்ந்த கதி என்ன? என்பதை உலகம் ஒப்பிட்டு பார்க்க மறுக்கிறது. ஒப்பிட்டுப் பார்த்து, நியாயம் உணர்ந்து அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கி இருக்க வேண்டாமா உலக நாடுகள்? தன்னிச்சையாக் தான் தோன்றித் தனமாக செயல்படும்

அமெரிக்காவுக்கு முடிவுரை எழுதுவது எப்போது?
-லிபியாவின் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து, லிபியாவின் மக்கள் தலைவன் முகம்மது கடாஃபியை கொடும் சித்ரவதைக்கு ஆளாக்கியவர்கள் இந்த அமெரிக்கர்கள்.


- ஈரானுக்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறை வெறியாட்டம் ஆடி, அந்நாட்டுப் பிரதமர் மொசாடேவை பதவி நீக்கம் செய்த ஆணவப் பேர்வழிகள் இவர்கள்.


-சிலி மக்களுக்கு தாங்கொணா துயரைக் கொடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் விளைவித்து, அந்நாட்டு மக்கள் பெருமளவில் நேசித்த அலண்டேவை மரணக் குழிக்குள் தூக்கி வீசி ஆட்டம் போட்டது இந்த அமெரிக்காதான்.


-நிகரகுவா மக்களை மரண பயத்தில் நிற்க வைத்து, பொது இடத்தில் போராளிகளின் கை, கால்களை வெட்டி, விரைகளைப் பெயர்த்தெடுத்து, கண்களைத் தோண்டி, நாக்கைப் பிடுங்கி, குரல்வளையை நெறித்து, இதயத்தை அறுத்து வெளியே எடுத்து... அந்நாட்டின் நாயகன் டேனியல் ஓர்ட்டேகாவை ஓட ஓட விரட்டிய கொடுங்கோலன் இந்த அமெரிக்கன்.


- தென் அமெரிக்காவின் வெலாஸ்கே இபாரா! ஆட்டுவிக்கும்படி நாங்கள் ஆடமுடியாது என்றார். சுண்டைக்காய் நாடு சுயமரியாதை பேசுவதா என மூர்க்கத்தனமாய் மோதி அழித்தது அமெரிக்கா.


- 1989இல் நிகழ்ந்த பனாமா சோகத்தையும், ஆப்பிரிக்க மக்களின் உயிர் காக்கும் மருந்து தொழிற்சாலையை சூடான் நாட்டில் சுட்டு அழித்ததையும் நாம் மறக்கவியலாது.


இவைதவிர வியத்நாம், கியூபா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிதஸ்hன், பாலதீஸ்னம், ஜோர்டான், சிரியா, அங்கோலா, நமீபியா, ஜிம்பாவே, மொசாம்பிக், ஜாம்பியா, கானா, எத்தியோப்பியா, காங்கோ, பெனின், தான்சான்யா, கென்யா, லெபனான், கொரியா என அமெரிக்காவின் இரத்தக்கறை வரலாறு நீண்ட நெடியது.
இவையெல்லாம் இன்று மறக்கடிக்கப் பட்டன.

சதாம் உசேன் மூலமாக மீண்டும் நாம் நினைவு கூர்வோம். இந்த உலகிற்கு சதாமின் இரத்தம்தான் கடைசியாக இருக்கவேண்டும்.

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

அமெரிக்காவின் பேரழிவுப் போர்கள்

அமெரிக்காவின் பேரழிவுப் போர்கள்
அமெரிக்காவின் நேரெதிர் சொல் கம்யூனிசம். கம்யூனிசம் முழுதும் வேண்டாம், சாயல் இருந்தாலே போதும். அமெரிக்கா அழித்து விடும். சோவியத் ரஷ்யாவை 'சர்வதேச பயங்கரவாத நாடு' என்றே அமெரிக்கா அழைத்தது. இப்போது அந்தப் பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

1960 தொடங்கி 80 வரை இடைப்பட்ட 20 ஆண்டுகளில் மட்டும் 40 ஆட்சிக்கவிழ்ப்புகளை சி.அய்.ஏ. முடித்துள்ளது. ஒரு நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆட்சியை அமெரிக்காவால் எளிதில் சிதைக்க முடிகிறதென்றால் அதற்குப் பெயரென்ன? அந்தப் பெயருக்குப் பொருள்தான் என்ன? 1948-54 இடையிலான 6 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கம்யூனிச எதிர்ப்பு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஓடின.

வியத்நாம், கொரியப் போர்களில் பலப்பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தவர்கள், இன்றைக்கு ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களை அழித்து வருபவர்கள், நடப்பில் லெபனான், பாலஸ்தீனர்களை அழித்துக் கொண்டிருப்பவர்கள் என்றுதான் அடங்குவார்கள்? வியத்நாம், கொரியா, சூடான், கிரெனடா, ஈக்வடார், ஈரான், நிகரகுவா, ஹெய்ட்டி, மடகாஸ்கர், கினியா-பிஸாவ், ஜைரே, கென்யா, கானா, காங்கோ, பெனின், டான்சானியா, மாரிசியஸ், ஜிம்பாவே, மொசாம்பிக், ஜாம்பியா, எத்யோப்பியா, நமீபியா, அங்கோலா, லிபியா, ஜோர்டான், சிரியா, பிலிப்பைன்ஸ், கியூபா, ஈராக், ஆப்னானிஸ்தான், பாலஸ்தீனம், லெபனான்... என இவர்கள் குடித்த இரத்தங்கள் தான் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னுமா தாகம் தீரவில்ல?

1931இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ் சொன்னார், 'போர்தான் அமெரிக்காவின் பிரதான பிசினஸ். போரைக்கூட நாங்கள் நல்ல பிசினஸாக மாற்றிக் கொண்டோம்' என்றார்.

எல்சால்வடாரில் 'உண்மை மற்றும் நல்லிணக்க கமிசன்' மேற்கண்ட புலனாய்வில், உலகின் மனித உரிமை மீறல்கள் 93 விழுக்காடு அமெரிக்காவின் சி.அய்.ஏ.வில்தான் நிகழ்கிறது என்று கூறியது. 93 என்னா... நூறே நடந்தாலும் என்ன செய்யமுடியும்?
அமெரிக்காவின் கள்ளக் குழந்தை இஸ்ரேல்
இருபது நாடுகளை உள்ளடக்கியது அரபு நாடுகள். இவர்கள் அராபியர்கள். வௌ;வேறு நாடுகளில் பிரிந்து, கலந்து வசித்தாலும் இவர்களுக்கான மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் யாவும் ஒன்றே.

இந்த நாடுகளில்தான் எண்ணெய் வளம் குவிந்துள்ளது. உலகத் தேவைகள் மூச்சாக இருப்பது இந்தப் பெட்ரோலியப் பொருள்தாம். இந்த மூச்சுக்காற்றை அராபியர்களிடம் கொடுத்துவிட்டு (அது அவர்களுக்குச் சொந்தமாகவே இருந்தாலும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அமெரிக்கா என்ன....! (எதையாவது பூர்த்தி செய்து கொள்ளுங்கள்)

எண்ணெய் வளம் முழுக்க அபகரித்து, அரபு நாடுகளையும் கட்டுக்கள் கொண்டு வர வேண்டும். என்ன செய்யலாம்? சி.அய்.ஏ.வின் கீழ் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கச்சிதமாக அவர்கள் காரியம் முடித்தார்கள். எப்போது தெரியுமா?

1948இல். என்ன செய்தார்கள் தெரியுமா? பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையும், ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியையும் அவர்களிடமிருந்து பிடுங்கி, ஒன்றாக இணைத்து, யூதர்களை அங்கு அமர்த்தி, 'இஸ்ரேல்' எனப் பெயரிட்டு 'ஹேப்பி பர்த் டே டு யு' எனப் பாடிவிட்டார்கள். அன்றிலிருந்து நடந்து வரும் ஒவ்வொன்றையும்தான் உலகச் செய்திகளில் பார்த்து வருகிறோமே!
தீர்வுதான் என்ன?
அமெரிக்க மக்கள் தொகை 28 கோடி. இவர்கள்தான் உலகின் 600 கோடி மக்களுக்கும் ஆட்சியாளர்கள். உலக நாடுகளுக்கு சட்டதிட்டங்களை, கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள். உலகின் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனின் பொருளியலையும் நிர்ணயிப்பவர்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, அந்நிய முதலீடு, அமெரிக்க எதிர்ப்பு போன்றவை ஏதோ கம்யூனிசம் சார்ந்தது என யாரும் கருதக்கூடாது. அது பிழையாகிவிடும்.

நம் ஒவ்வொருவரின் தனி மனித உரிமைகளையும் அமெரிக்கா பறிக்கிறது; அமெரிக்கா பறிக்கிறது; நம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அமெரிக்கா பாதித்திருக்கிறது! அய்.நா. தலைமைக்கு மாற்றாக அமெரிக்கத் தலைமை வலுவாக முன்னெடுக்கிறது. இவ்வுலகை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள் தான் என ஆட்டம் போட்ட ரோம், கிரேக்க சாம்ராஜ்யங்களும், 17ஆம் நூற்-றாண்டுகளுக்குப் பிந்தைய பிரெஞ்சு, பிரிட்டிஷ், டச்சு, பெல்ஜியம், ஸ்பானிஷ் போன்றவைகளும் சுருங்கி, சுருங்கி ஒரு வட்டத்திற்குள் வந்துவிட்டன. அதேபோல, 'எங்கள் ராஜ்யங்கள் முடிவில்லாதது,' எனப் பறைசாற்றி வந்த பைசான்டைன், ஒட்டாமன், ருஷ்யன், மங்கோலியர், முகலாய ராஜ்யங்களும் காணாமல் போனதுடன், வரலாற்றில் கருப்புக் கோடிட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டன.

இன்றைக்கு டாலர் தேசமான அமெரிக்கா அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வரலாறும் கறுப்பு வண்ணம் தீட்டி, அமெரிக்க முடிவை தன் நெஞ்சில் ஏற்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. ஈராக் போரில் 700 கோடி டாலர் செலவழித்து, 19000 கோடி டாலர் ஈன்றது அமெரிக்கா. எத்தனை மனிதன் செத்தான் என்பதல்ல எவ்வளவு டாலர் குவிந்தது என்பது அமெரிக்காவின் ஒரே கணக்கு.

இன்றைக்கு அமெரிக்காவில் அச்சடிக்கப்படும் டாலரில் சரிபாதிக்கும் மேல் உலகச் சந்தையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது பெரிய பலமாக அமெரிக்காவுக்கு இருந்தது.

22 நாடுகளுக் கொண்ட அய்ரோப்பா 'யூரோ' எனும் நாணயம் வெளியிட்டது. இப்-போது டாலருக்குச் சமமாக, டாலரை விட மதிப்பாய் வளர்கிறது. உலகச் சந்தையில் டாலர் இருந்த இடம் யூரோவாக மாறிவருகிறது. இந்த யூரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுடனான வணிகம் இனி யூரோவில்தான் இருக்கவேண்டும் என முழங்கிய முதல் 'ஹீரோ' சதாம் உசேன். அதனால்தான் அமெரிக்கா அவரை 'ஜீரோ'வாக்க முயல்கிறது. ஆக டாலரை ஒழிப்பதும், அமெரிக்காவை எதிர்ப்பதுமே உலக அமைதிக்கான ஒரே வழியென பொருளியல், சமூகவியல், அரசியல், இன்னபிற நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஏறத்தாழ 600 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் மனிதாபிமானம், என்பது 'அணு' அளவைவிட மோசமாகிப் போனது. ஏதாவது ஒன்றிரண்டு நிகழ்வுகளை வைத்து மட்டும் 'மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை' என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டால்தான் உண்டு. அதற்குக் கூட நம்மை உயிரோடு வைத்திருக்குமா அமெரிக்கா?

மேலும் படிக்க... Read more...

கோபத்திற்கு மருந்து!

>> Friday, February 2, 2007

கோபத்திற்கு மருந்து!

சரிவர ஒரு வேலையை முடிக்க, அதை நீயே செய்.
மனிதர்களைவிட மரங்களே நேராய் நிமிர்ந்து வளர்கின்றது
வீழ்ந்து கிடப்பதே வெட்கம். வீழ்வது வெட்கமல்ல.

கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல்

மரணம் வருமுன்னே ஒரு கோழை பலமுறை இறந்து விடுகிறான்.

வாய் பொய் பேசலாம். முகம் பொய் பேசாது.

சகோதரர்களாக இருங்கள்; ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் குற்றத்திற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை மட்டும் காரணமல்ல.

உண்மையைச் சொல்வதுதான் உலகிலேயே மிகப் பெரிய நகைச்சுவை.

மிகவும் அபாயகரமான சமயங்கள் வெற்றியின் போதே வரும்.

உண்மையான விமர்சனம்
நீ இல்லாத இடத்தில் உன்னைப்பற்றி பேசப்படுவதே விமர்சனம்.
எல்லாம் வேடிக்கைதான்... உனக்கு நடக்காதவரை.

நெருங்கிப் பழகும்போது வெகு சிலரே மதிப்பிற்குரியவர்கள்.
நாவில் எலும்புகள் இல்லை. ஆனால் அது எலும்புகளை நொறுக்கும்
.
புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் பிடிவாதம் பிடிப்பான்

எல்லோரிடமும் கற்பவனே சிறந்த அறிவாளி.
இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூட பிடிக்க முடியாது
.
தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழக்கிறான்.
ஒப்பிட்டுப் பார்க்கும்போது எதிரியும் நண்பனாகிறான்.
பேராசை முடிகிறபோது மகிழ்ச்சி தொடங்குகிறது.


மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

தடுமாறுபவன்+வாழ்க்கையை ஆன்மிகத்தோடு

>> Thursday, February 1, 2007

தடுமாறுபவன்

ஒரு சமயம் போர் முனையில் நெப்போலியனின் படைகள் இரவு நேரத்தில் திடீர்த் தாக்குதலுக்கு உள்ளான.

அப்போது நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்ததால், எப்படி அவன் ஆலோசனையப் பெறுவது என, படைத்தளபதி சங்கடமடைந்து, கூடாரத்திற்குள் பிரவேசித்தான். அப்பொழுது அரசனின் மேஜை மீது காகிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தான்.

அதில் இதுபோன்ற இக்கட்டான சம்பவம் நடக்கலாம் என, ஏற்கெனவே யூகித்து, அதற்கான வழிவகைகளை அரசன் எழுதி வைத்திருந்தான்.

அதன்படி தளபதி எதிர்த் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றான்.

எந்த மனிதனால் தன் எதிர்காலம் பற்றி பத்து அடி தாண்டி யோசிக்க முடிகிறதோ... அவனே சாதனையாளன்.

தனக்கோர் தொல்லை ஏற்படும்போது தடுமாறுபவன், தன் எதிரேயுள்ள வாழ்வின் ஒரு அடி வரை மட்டுமே பார்ப்பவன்.

தடுமாறினாலும், அடுத்து செய்யவேண்டியது என்ன என யோசிப்பவன் எதிரே உள்ள வாழ்வின் இரண்டாம் அடி வரை பார்ப்பவன்.

தொல்லையின் துவக்கத்தையும், முடிவையும் தெளிவாய் யூகித்து தீர்வைத் தேட ஆரம்பிப்பவன், வாழ்வின் மூன்றாவது அடிவரை பார்ப்பவன்.

இதற்கு மேல் உள்ள அடிகள், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத படிக்கட்டுகள்.

இதுவரை வந்து பாருங்கள். நெப்போலியனையே தாண்டிச் செல்லும் சூட்சுமம் கண்முன்னே காத்திருக்கும்.
--------------------------
வாழ்க்கையை ஆன்மிகத்தோடு

உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு, ஓர் அழகான கருத்து

''குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ ஆன்மிகத்தை கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்கமாட்டாய்.

சாதாரண பலாப் பழம் அறுக்கும் போது, வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக் கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும்.
அதே பழத்தை, ஒரே ஒருமுறை எண்ணெயில் கை நனைத்துவிட்டு செய்தால் விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமே இருக்காது.

ஆன்மிகமும் இது போன்றது தான்.

ஆன்மிகத்தோடு வாழ்க்கையை எதிர் கொண்டால், வாழ்க்கையை அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சுழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்.''
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP