**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குழந்தைகள் நமக்கு போதிக்கும் பாடம் !

>> Monday, February 8, 2021

குழந்தை நமக்கு போதிப்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா…?

நீங்கள் நினைத்த நேரத்தில், முயற்சித்த தருணத்தில் கிடைக்காத வெற்றியை, தோல்வியாகவோ அல்லது வெற்றிக்கான படிக்கல்லாகவோ உருமாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால், பொதுவாக கீழே விழுந்து விடாதீர்கள், விழுந்து விடாதீர்கள் என்று சொல்லி சொல்லி வளர்க்கப் படுவதால், விழுவதே பெரும் தவறு என்று பதறுகிறோம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து விட்டால் அப்படியே அவமானத்தில் நாம் வெட்கித்துப் போகிறோம்.

ஏதோ மாற்ற முடியாத பெரும் தவறு செய்து விட்டது போல் மிகப் பெரும் குற்ற உணர்விற்கு உள்ளாகி, எங்காவது நம் முகத்தை ஒளித்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

பல சமயங்களில் முதல் முறை தோல்வியில் படும் அவமானமும் பதற்றமும் பயமுமே அடுத்தடுத்த தோல்விகளை விதைத்து விட்டுச் சென்று விடுகிறது என்கிறது வாழ்வியல்.

விழுந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் இருப்பது சரிதான், அப்படி ஆசைப் படுவதிலும் தவறு இல்லை, ஆனால் விழவே கூடாது என்று நினைப்பது பேராசை மட்டுமல்ல அது யாருக்குமே சாத்தியமில்லாத நிராசை. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.

முதலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், விழுவது தவறல்ல, அதில் எந்த அவமானமும் இல்லை என்று. அதே சமயம் எத்தனை சீக்கிரம் எழுந்திருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.

சிறு குழந்தை நடை பழகுவதை பார்த்திருக்கிறீர்களா… தானே சீராக நடக்கும் முன் அது எத்தனை முறை கீழே விழுகிறது. ஆனால் அவ்வாறு விழும்போது குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா… ஒரு குழந்தை கீழே விழுந்தால், நீங்கள் பதறாத வரை அது அழுவது இல்லை.

அழகாய் நிமிர்ந்து அருகில் உள்ளவர்களைப் பார்த்து சிரிக்கும். அதாவது நான் புதிதாக ஒன்றை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் அதில் முன்னேற்றம் தெரிகிறது என்று சொல்லாமல் சொல்வது போல. அதோடு நிற்காமல் உடனே எழுந்து மறுபடி நடக்க முயற்சிக்கும். இது அந்த குழந்தையின் தாயோ அல்லது வேறு யாரோ இன்றைக்கு இவ்வளவு போதும் என்று அந்த குழந்தையை தூக்கிக் கொள்ளும் வரை நடக்கும்.

குழந்தை தானாக நடை பழகும் தன் முயற்சியை நிறுத்தாது. இதில் ஒரு பெரிய வாழ்வியல் தத்துவத்தையே இயற்கை குழந்தைக்கு போதித்திருப்பதையும் அந்த குழந்தை நமக்கு போதிப்பதையும் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா…??
Dr.Fajila Azad.
(International Life Coach – Mentor – Facilitator)

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP