இனிமேல் கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க !
>> Sunday, February 21, 2021
அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்க்கப்பட காரணம் அது செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எந்த உணவாக இருந்தாலும் எளிதாக செரித்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படாது.
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும். எனவே, உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்தது சாப்பிடுங்கள்.
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வரும் நிலையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைக் கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
மேலும், வயிற்றில் கொழுப்புகள் படிந்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதுதவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைகிறது.
மேலும், கறிவேப்பிலையை ஜூஸ் செய்தும் அருந்தலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்திவர உடல் எடை வெகுவாக குறைந்து வருவதை காண முடியும்.
15 கறிவேப்பிலையுடன் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
0 comments:
Post a Comment