அலசப்படும் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் சவால்கள் .
>> Thursday, August 22, 2013
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.
• சினிமா மற்றும் ஊடகங்களில் தவறான சித்தரிப்பு
• சென்னை உட்பட பெருநகரங்களில் வீடு கிடைப்பதில்லை.
• தீவிரவாத முத்திரை தொடர்ந்து குத்தப்படுகிறது
விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.
Thanks to Ref:http://www.satyamargam.com/articles/common/2186-challenges-faced-by-minorities.html.
கண்ணீரில் முஸ்லீம் சமூகம்: “விடியுமா? தெரியல வேதனை தீரல”
இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக ஏங்கி காத்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.
நாட்டிற்காக சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற இந்திய முஸ்லீம் சமுதாயம்
உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த இந்திய முஸ்லீம் சமுதாயம் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய முஸ்லீம் சமுதாயம் .
நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
அந்த கணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத இந்திய முஸ்லீம் சமுதாயம்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்.
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
காணொளி காணுங்கள்.>>> 'பிறப்புரிமை' <<<
2 comments:
தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி மீது புதுவை அரசே உடனே நடவடிக்கை எடு! : பாப்புலர் ஃப்ரண்ட்
சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை மேற்கண்ட சுதந்திர தின பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது.
தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் கடந்த 16.08.2013ல் நடைபெற்றது.
புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி தலைமையிலான காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதோடு, 28 முஸ்லிம்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தது.
மேற்கண்ட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காரைக்கால் S.P.வெங்கடசாமி மற்றும் உடனிருந்த காவல்துறையினரை கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று (21.08.2013) காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ஹாலித் முஹமம்து தலைமையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக உரிமையை நசுக்கும் விதமாக மேற்கண்ட S.P.வெங்கடசாமி தலைமையிலான காவல்துறை பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரையும் லத்தி சார்ஜ் மூலம் விரட்டியடித்ததோடு கைதும் செய்துள்ளது.
பின்னர் முஸ்லிம்கள் மீது பழிப்போடும் எண்ணத்தில் அரசு பேருந்துகளை காவல்துறையே அடித்து நொறுக்கியது.
காரைக்கால் காவல்துறையின் இத்தகு ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதோடு உடனடியாக தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் S.P.வெங்கடசாமி மீது சட்ட ரீதியான மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படியும், கைது செய்த பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் புதுவை அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயில்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
காவல்துறை வாகனங்களை உடைத்து நொறுக்கிய காவல்துறையினர் - தடியடி!
காரைக்கால்: காவல்துறை வாகனங்களை காவல்துறையினரே உடைத்து நொறுக்கிவிட்டு முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடைத்ததாகக் கூறி தடியடி நடத்தியுள்ள சம்பவம் காரைக்காலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை சுதந்திர தின பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் நடத்த தமிழக அரசும் காவல்துறையும் தடை விதித்திருந்தது.
இதனைக் கண்டித்து காரைக்காலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையினர் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி அந்த அமைப்பினர் இன்று ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.
அது சமயம், காவல்துறையினரே காவல்துறை வாகனங்களை உடைத்து நொறுக்கிவிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் உடைத்ததாகக் கூறி அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
இது குறித்து காரைக்காலில் இருந்து நமது சிறப்புச் செய்தியாளர், காவல்துறை வாகனங்களை காவல்துறையினரே உடைத்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், இதனைக் கொண்டு காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து நாளை காரைக்காலில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாகவும் அக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.inneram.com/news/tamilnadu/1407-police-attacked-department-vehicles-and-claimed-it-is-done-by-muslims.html
Post a Comment