**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..!

>> Wednesday, August 21, 2013

இஸ்லாம் மட்டும் இந்து மதத்தின் சாதிய தாக்கம் இல்லாமல் தாக்குப்பிடித்து நிற்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய தலித் மக்கள் இன்று இஸ்லாமியர்களாகவே வாழ்கிறார்கள்.

அன்று அவர்கள் மதம் மாறியபோது, அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்று கூறி தலித் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று தலித்தாகவேத்தான் இருந்திருப்பார்கள். (தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய முக்கியம்..)

"தலித் கிறிஸ்த்துவர்கள்" என்ற அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..! (-கார்ட்டூனிஸ்ட் பாலா)

"தலித் கிறிஸ்தவர்கள்" என்ற சொல்லாடலே ஆபத்தான ஒன்றாகப் பார்க்கிறேன். இதில் தலித் கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரியாக படவில்லை.

இப்படி சொல்வது தலித் அறிவுஜீவிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் என் மீது எரிச்சலை உண்டு பண்ணக்கூடும்.. பரவாயில்லை.. என் பார்வையை பதிவு செய்கிறேன்.. அவ்வளவுதான்.

இந்து மதத்தின் கொடூரமான சாதிய அடுக்குகளிலிருந்து வெளியேறத்தான் மாற்று மதங்களுக்கு செல்கிறார்கள் தலித் மக்கள். கிறிஸ்த்தவ பிள்ளை, கிறிஸ்த்துவ நாடார், கிறிஸ்த்துவ வன்னியர்.. இப்போது தலித் கிறிஸ்த்துவர்கள்.. என்று கிறிஸ்த்துவ மதம்.. இன்று இந்தியாவில் இந்துமதத்தின் அத்தனை அசிங்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு இந்துமதத்தின் மற்றொரு வடிவமாக மாறிவிட்டது.

கிறிஸ்த்துவத்திற்கு மாறினாலும் நாங்கள் தலித்துகளாகவே இருக்கிறோம், அதனால் தான் இடஒதுக்கீடு கோரிக்கை என்கிறார்கள். உங்களை சமமாக மதிக்காத கிறிஸ்த்துவ மதத்திற்கு என்ன எளவுக்கு மாறி நீங்கள் அல்லேலுயா போடணும்.. தூக்கி வீசிட்டு வெளியே போங்க.

இந்த வகையில் இஸ்லாம் மட்டும் இந்து மதத்தின் சாதிய தாக்கம் இல்லாமல் தாக்குப்பிடித்து நிற்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய தலித் மக்கள் இன்று இஸ்லாமியர்களாகவே வாழ்கிறார்கள்.

அன்று அவர்கள் மதம் மாறியபோது, அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்று கூறி தலித் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று தலித்தாகவேத்தான் இருந்திருப்பார்கள்.
(தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய முக்கியம்..)


இடஒதுக்கீட்டுக்காக இன்று தலித் கிறிஸ்த்துவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவதுபோல் நாளை `தலித் இஸ்லாமியர்கள்’ என்ற அடையாளமும் உருவாக்கப்படலாம். இவர்களின் இந்த கோரிக்கை எல்லாம் மறைமுகமாக இந்துமதத்திற்கு பலமளிக்கவே செய்யும்.

இடஒதுக்கீட்டுக்காக இப்படி ஒவ்வொரு மதத்திலும் தலித் என்ற அடையாளத்தை உருவாக்கிக்கொண்டே செல்வார்களானால் அந்த மக்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சாதிய விடுதலைக்கான வாய்ப்பும் தட்டி பறிக்கப்படும். வேண்டுமானால் இப்படி மதம் மாறும் தலித் மக்களுக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம்.

மாறாக இப்படியே இந்து மதத்தின் படி நிலை சாதிய கட்டமைப்பை ஒவ்வொரு மதத்திற்கும் கடத்திக்கொண்டே இருந்தால் காலம் முழுக்க தலித் மக்கள் அசிங்கப் படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.. அந்த மக்களை வைத்து ஓட்டுப் பொறுக்குபவர்களுக்கு வேண்டுமானால் தலித் அடையாள அரசியல் லாபத்தை தரலாம்..

மற்றபடி அந்த மக்களின் சாதிய விடுதலை எந்த காலத்திலும் சாத்தியமாகாது.. - கார்ட்டூனிஸ்ட்.பாலா

THANKS TO SOURCE:http://www.satyamargam.com/articles/common/2187-dalit-muslims.html

3 comments:

Anonymous August 21, 2013 at 12:11 PM  

இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே? --த.நி.சங்கர்,சென்னை.


ஜாதி உணர்வுமட்டுமல்ல, ஜாதி வெறியே இருக்கிறது. அவர்களின் கடவுள் தான் வேறு. மற்றப்படி அவர்கள் இந்து உணர்வோடுதான் இருக்கிறார்கள்.

கிறிஸ்த்தவர் கிறிஸ்த்தவரையே கல்யாணம் செய்து கொண்டாலும், ஜாதியை குறிப்பிட்டு கலப்பு திருமணம் என்கிறார்கள். ஒரு கிறிஸ்த்தவர் தன் ஜாதியை சேர்ந்த இந்துவை திருமணம் செய்து கொண்டால் அதை, கலப்புத் திருமணம் என்று அவர்கள் சொல்வதில்லை. அந்த அளவுக்கு ஜாதி அவர்களிடம் ஆழமாக பரவியிருக்கிறது.

தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தனது வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

அதே தொகுதியில் வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலே தோற்கடிக்கப்படுகிறார்.

தொடர்ந்து படிக்க‌ கிறிஸ்துவர்களால் வாயில் மலம் திணித்த‌ சாதி கொடுமை . அராஜகம்.

Aashiq Ahamed August 21, 2013 at 1:36 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,

நன்றி பாலா சார்,

//(தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய முக்கியம்..)//

நிச்சயம் கவனமுடன் இருப்போம் சகோ..

சிராஜ் August 21, 2013 at 5:55 PM  

அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உருவாவதாக....

எனது இந்த கமெண்ட் தலித் மக்களுக்கும், திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கும் பிடிக்காமல் போகலாம்... .அதற்காக உண்மையை உரைக்காமல் இருக்க முடியாது...

தலித்துகள் சாதி வெறியில் சிக்குண்டு சின்னா பின்னம் ஆவதற்கு தலித்துகளே காரணம்... இந்த கருத்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ... அதிற்சியாகவும் இருக்கலாம்.. ஆனால் இதான் உண்மை...

என்ன கீழ நடத்துறான்?? மேல நடத்துறான்??? இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிகிட்டு இருக்க போறிங்க????

இதற்கு தீர்வு இருந்தும், அதை தேர்ந்தெடுக்காமல் தலித்தாகாவே இருப்பது உங்கள் தவறு... இனி நான் ஆதிக்க சாதிகளை குறை சொல்லப் போவது இல்லை... குறை உங்களிடம் தான் உள்ளது...

நான் இன்று ஒரு முஸ்லிம்... 5 அல்லது 6 தலைமுறைகளுக்கு முன் நிச்சயம் என் தலைமுறை முஸ்லிமாக இருந்து இருக்காது... எனது கொள்ளு தாத்தாக்களில் யாரோ ஒருவர் தான் வேறு சிந்தாந்தங்களில் இருந்து இஸ்லாத்திற்க்கு மாறி இருப்பார்.. இதான் உண்மை.. ஆனால் 5 தலைமுறை கழிந்து விட்டது.. இன்று எனக்கு நான் எங்கிருந்து வந்தேன் என்றே தெரியாது....

இந்துவில் இருந்து வந்தனா... கிருத்துவத்தில் இருந்து வந்தனா.... நாத்திகத்தில் இருந்து வந்தனா என்று எனக்கு தெரியாது... சாதிய அடிச்சுவட்டை அடியோடு வெட்டி வேரடி மண்ணோடு எறிந்து விட்டது இஸ்லாம்....

இதுக்கு மேல ஒரு மருந்து உங்களுக்கு என்னப்பா வேணும்???
கைல வெண்ணய வச்சிகிட்டு நெய்க்கு அலையும் உங்களைப் பார்த்து எரிச்சல் தான் வருகிறது....

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறீங்க???
இனி நீங்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் தவறே....

முடிஞ்சா புரிஞ்சிகங்க.. இல்லாட்டி காலத்துக்கும் அடி வாங்கி பொலம்பிகிட்டு இருங்க....

கடுப்பா இருக்கு...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP