பிணந்திண்ணி மோடி க்கு மூக்கு அறுப்பு
>> Friday, April 20, 2012
உலகில் எந்த தலைவரும் பிணந்திண்ணி மோடியைப் போன்று செய்ததில்லை.
மோடி குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பி அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டும்
ஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டும்
என்னாமா பண்ணுனாங்க எல்லாமே போச்சு.
அது சரி, மோடியை சேர்க்கலாமா என்று டைம் கேட்டதுக்கே குதியாய் குதித்த ஊடகங்கள் மோடியை "போயிட்டு வாங்க" என்று டைம் சொன்னதை இன்னும் (பலரும்) சொல்லவே ஆரம்பிக்கவில்லையே ஏன்?
மோடியைப் போல ஒரு மோசடிக்காரர் யாருமே இருக்க முடியாது. குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்க் கிடக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட்டிலிருந்து 16,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.
நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார் குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி.
மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.
இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும் எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!
கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பசுத்தோல் போர்த்திய புலியாக பலவாறான தன்னுடைய தோற்றங்களை குஜராத் எங்கும் பெரும் பெரும் விளம்பரம் செய்த பிணம் திண்ணி மோடி
இப்பொழுது உலகத்திலேயே யாருமே பெற்றிராத அதிக எதிர்ப்பு வாக்குகள் தான் பெற்றிருப்பதை குஜராத் முழுதும் விளம்பரம் மூலமாக ஏன் அறிவிக்கவில்லை படிக்கவும்.
ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.
குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.
ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை .
(இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).
ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது.
ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர்.
ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமாக முஸ்லீம்கள் குண்டு வெடிப்புகளை நிகழவில்லை என்பதே இவர்களின் வருத்தம்.
வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.
கோத்ரா புதைக்கப்பட்ட உண்மைகள்
கலவரத்தை மறக்க முடியுமா? இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல.
******
////மோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்சி!!
காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தின் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.
அகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது.
மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.
ஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.
குஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா?
முஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா?
நாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது?
இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் "மதசார்பற்ற இந்தியா" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது? போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்?
மோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.////
நன்றி: மெய்யெழுத்து
*****
இந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்திலேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர். வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.
மோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.
இந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.
அம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.
இந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடிய பொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துத்வாக்களின் முஸ்லீம் இன அழிப்பை”
தடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.
குஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
விசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.
சங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.
CLICK >>> கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு <<< TO READ
8 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் அப்பா வாஞ்சூர் அவர்களுக்கு,
குஜராத் வைப்ரன்ட் என்று அரசு செலவில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து தன்னை பிரதமர் பதவிக்கு வேட்பாளராக முன்னிறுத்தி கொள்வதில் முனைப்பு காட்டி வரும் இனப்படுகொலை மன்னன் மோடி டைம் இதழில் இடம் பெறாமல் போனது சங்பரிவார் குழுக்களுக்கு பின்னடைவே. மோடியை பட்டியலில் இடம் பெறாமல் செய்த இறைவனுக்கே எல்லா புகழும்.
ஆனால் டைம் இதழ் பட்டியலில் மோடி இடம் பெறாமல் அசிங்கப்பட்டதை எத்தனை ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தன என்பதை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ஒருவேளை மோடி பட்டியலில் இடம் பெற்றிருந்தால் இந்தியாவின் அனைத்து மாநில ஊடகங்களும் இதை பெரிய செய்தியாக வெளியிட்டிருக்கும். ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் சின் ஆக்டோபஸ் கரங்கள் ஊடக உலகத்தையும் மிகப்பெரிய அளவில் வளைத்து போட்டிருக்கிறது. ஊடக உலகத்தை சங்பரிவார் மாயையிலிருந்து மீட்க நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
nalla muyarchi!
அல்ஹம்துலில்லாஹ்.... அருமையான பதிவ், அழகான முறையில் வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம்....
//குஜராத் வைப்ரன்ட் என்று அரசு செலவில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து தன்னை பிரதமர் பதவிக்கு வேட்பாளராக முன்னிறுத்தி கொள்வதில் முனைப்பு காட்டி வரும் இனப்படுகொலை மன்னன் மோடி டைம் இதழில் இடம் பெறாமல் போனது சங்பரிவார் குழுக்களுக்கு பின்னடைவே. மோடியை பட்டியலில் இடம் பெறாமல் செய்த இறைவனுக்கே எல்லா புகழும். //
அப்படியே வழி மொழிகிறேன் :)
லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
//மோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்சி!!
காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தின் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.
அகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது.
மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.
ஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.
குஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா?
முஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா?
நாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது?
இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் "மதசார்பற்ற இந்தியா" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது? போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்?
மோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.//
http://meiyeluthu.blogspot.fr/2011/11/blog-post.html
மேலே கண்ட வரிகள் மெய்யெழுத்துக்கு சொந்தமானது. லிங்க் கொடுத்திருந்தால் வாஞ்சூர் பாய்க்கு நன்றி சொல்லியிருப்பேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
அன்பிற்குரிய "மெய்யெழுத்து" பதிவாளருக்கு,
தகவலுக்கு நன்றி.தாங்களுடைய தகவலுக்கு பின் உங்களுடைய லின்க் இணைகப்பட்டிருக்கிறது.
நான் "மெய்யெழுத்து" வலைத்தளத்தின் வாசகன்.
என்னை ஈர்க்கும் வலைத்தளங்களில் "மெய்யெழுத்து" ம் ஒன்று.
நான் அவ்வப்பொழுது இணையதளத்தில் கண்ணுறும் உண்மையான கருத்தாழமிக்க வரிகளை குறிப்பெடுத்து வைத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொருத்து அவற்றை என்னுடைய பதிவுகளுக்கு ஊட்டமுற இணைப்பது வழக்கம்.
இப்பதிவில் "மெய்யெழுத்தின்" கருத்தாழமிக்க வரிகளை இணைத்திருப்பதில் நான் மகிழ்வடைகிறேன்.
பிறர் பதிவுகளை முழுமையாக பிரதியெடுத்திருந்தால் மட்டும் பதிவின் “லின்க்” கை குறிப்பெடுத்துக்கொண்டு மீள்பதிவு செய்யும்பொழுது முதல் பதிவரின் பெயரை “லின்க்” கை இணைப்பதை வழக்கமாக கையாண்டு வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
பதிவில் தங்களின் ஆதங்கம் வெடித்திருக்கிறது...!!
சலாம் பாய்!
அருமையான ஆக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
Post a Comment