**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே !! தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். வைர‌ஸ்

>> Tuesday, April 3, 2012

ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ் ம‌ண‌த்தில்
ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ்.


த‌மிழ்ம‌ணம் திரட்டியில் பதிவ‌ர்க‌ளை ஊக்குவிக்கும் நோக்க‌த்திலும், முறைய‌ற்ற பதிவுக‌ளுக்கு ஆட்சேப‌ம் காட்டும் நோக்க‌த்திலும் தமிழ்மணம் பதிவு பட்டை (TAMILMANAM TOOLBAR) மூலமாக பதிவர்களும் வாசகர்களும் இடுகைகளுக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் வசதியை தந்துள்ளது.

தமிழ்மண பயனர் பெயர் / மின்னஞ்சல் கடவுச் சொல் உருவாக்குவ‌த‌ன் மூல‌ம் யாரும் இத‌னை செயல்ப‌டுத்த‌லாம். யாவ‌ரும் தமக்கென ஒரு தமிழ்மண பயனர் பெயர் உருவாக்கி ப‌ல‌ காலமாக அதை உரிய வகையில் கையாண்டு வ‌ருகிறோம்.

வாச‌கர்களும் ப‌திவ‌ர்க‌ளும் ப‌ய‌ன‌ர்க‌ள் பெய‌ர்க‌ள் மூல‌மாக‌ அவ‌ர‌வ‌ர்க‌ளை அடையாளம் கண்டறிகிறார்கள்.

சமீப‌மாக‌ தீய‌ நோக்க‌ம் கொண்டு ஒருவரோ / ப‌லரோ தமிழ்மணத்தில் பரவலாக அறியப்பட்ட பயனர் பெயர்களை போன்று தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி

அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்து

பதிவர்கள் வாசகர்கள் இடையே செயற்கையான இரு பிரிவுகளை உருவகப்படுத்தி தேவையற்ற மனக்கசப்பையும் பூசல்களையும் வாசகர்கள் பதிவர்கள் இடையே உருவாக்கிவிட அயராது முயன்று வருகிறார்கள்.


உதார‌ணமாக இணைய தளங்களில் நன்கு பரிச்சயமாகி பலரால் செல்லமாக வாஞ்ஜூர் அப்பா , வாஞ்ஜூர் அய்யா என்று வழங்கப்படும் என்னுடைய பயனர் பெயர் vanjoor  என்ப‌தை vaanjoorappa@gmail.com என்றும் VANJOOR என்ப‌தை NONJOOR என‌வும்

abdulhakim என்ப‌தை abdulhakkimm என‌வும்
AMINA29 என்ப‌தை AMINAA29 என‌வும்
askabt.islam@gmail.com என்ப‌தை askabt.islamm@gmail.com என‌வும்
hajamydheen என்ப‌தை hajamydheeen என‌வும்
hussainamma என்ப‌தை hussainaamma என‌வும்
hyderali என்ப‌தை hyderalii என‌வும்
mohaashik என்ப‌தை mohaaashik என‌வும்
nasar என்ப‌தை naasar என‌வும்
PeerMhd என்ப‌தை PeerMhdd என‌வும்
peermohamed.m@gmail.com என்ப‌தை peermohamed.mm@gmail.com என‌வும்
rabbani என்ப‌தை rabbanii என‌வும்
suvanappiriyan என்ப‌தை suvanapppiriyan என‌வும்
vanjoor என்ப‌தை vaanjoorappa@gmail.com என‌வும்
VANJOOR என்ப‌தை NONJOOR என‌வும்

இதுபோன்ற தில்லுமுல்லு பயனர் பெயர்களும்
உருவாக்கி துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

abdulkader111, abdulkader111@gmail.com, alexmbathusha, blara farooq11, fatimabebehh@gmail.com, fazul, gulamnabi000@gmail.com,
haitharjunus, hajamydheen, hareraama, hussainaamma, ibrahimriyas@gmail.com, kavippuyal007@yahoo.com, kokkaamakkaa@gmail.com, kpeterson, mohemadrias, muftaa08, mustaquee1515@gmail.com, muztafa,
PANNAGAM3@GMAIL.COM, punter rahman100@gmail.com, superman


கூர்ந்து கவனியுங்கள். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தன்னுடைய சுய பயனர் பெயரில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிப்பதும் அவரவர் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது.

ஆனால் தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்வது கயமைத்தனமன்றி வேறென்ன?


தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்து வருவதை வாசகர்கள் பதிவர்கள் கவனத்திற்கு இங்கு வைத்து சிந்திக்க வேண்டுகிறேன்.

உங்களின் தமிழ்மணம் பயனர் பெயராலும் தில்லுமுல்லு ஆள்மாறாட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் / உருவாக்கப்படலாம்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

56 comments:

NKS.ஹாஜா மைதீன் April 3, 2012 at 1:12 PM  

இவ்வளவு தில்லுமுல்லுகள் நடக்குதா?

பி.ஏ.ஷேக் தாவூத் April 3, 2012 at 1:30 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் வாஞ்சூர் அப்பா,
ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டீர்கள். இனி கவனிக்க வேண்டிய இடத்தில் தமிழ்மணம் திரட்டி தான் இருக்கிறது. கள்ள ஒட்டு ஐடி காரர்களை அவர்களுடைய பயனர் பெயர்களுடன் கண்டுபிடித்து கொடுத்தும் அவர்களின் பயனர் பெயர்களை தமிழ்மணம் திரட்டி நீக்கவில்லை என்றால் இந்த திருட்டு ஆட்டத்தில் தமிழ்மணத்திற்கும் தொடர்பு இருப்பதாகவே சந்தேகம் எழும். எனவே தமிழ்மணம் திரட்டி தம்முடைய நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

இந்த பதிவுக்கும் கள்ள ஒட்டு கும்பல் மைனஸ் வாக்குகளை குத்தியிருக்கிறது.

சிராஜ் April 3, 2012 at 2:53 PM  

சலாம் சகோ வாஞ்சூர்,

நமது பெயரில் ஒரு எழுத்துக்களை சேர்த்து வோட்டு போடுகிறார்கள் என்ற உண்மையை பதிவுலகத்திற்கு அறியத் தந்து இருக்கிறீர்கள். அதற்க்கு நன்றி.
இது பொதுவான பதிவர்கள் இடையே ஒரு புரிதலைத் தரும்.


நாம் நமது வோட்டுக்களை, அது ப்ளசோ அல்லது மைனசோ நமது பெயரில் தான் போடுவோம். சொந்த முகத்தை காட்ட எப்பொழுது பயந்தார்களோ அப்பொழுதே
அவர்கள் நம்மிடம் தோற்று விட்டார்கள் வாஞ்சூர் அப்பா. பெரிதாக அலட்டிக் கொள்ள இதில் ஒன்று இல்லை.

சிராஜ் April 3, 2012 at 2:57 PM  

களை எதுன்னு தெரிஞ்சிருச்சு, அடுத்து அத எப்படி வெட்டுவது அல்லது அழிப்பது என்று யோசிப்போம். இல்ல அப்டியே விற்றலாமான்னு கூட யோசிக்கலாம்.

இது நமக்கு ப்ரீ விளம்பரம் தானே???? ஹி..ஹி..ஹி..
பதிவுகளுக்கு இன்னும் ரீச் அதிகம் கிடைக்கும். என்ன சொல்றீங்க????

Rabbani April 3, 2012 at 3:31 PM  

ஸலாம்
இந்த பிரச்சனையை பொதுவில் பகிர்ந்து பதிவுலக நண்பர்களுக்கு அறிவித்தது அருமை
இந்த கோழைத்தனமான செயலை செய்பவர்களை கண்டுகொள்ளவேண்டாம் எப்போதும் போல நமது பணியை தொடர வாழ்த்துக்கள்.

முட்டாப்பையன் April 3, 2012 at 3:32 PM  

இது நல்ல ஐடியா.
செயுறதும் செஞ்சிப்புட்டு இப்படி போஸ்ட் போட்டா சரியாகிடுமா?

ஒன்னு பண்ணுங்களேன்.நீங்க எல்லாரும் சேர்ந்து இனி வோட் போடுருரதில்லை-னு முடிவு பண்ணி இரண்டு மாசம் வோட் போடாம இருங்களேன்.

என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

இப்படியெல்லாம் எல்லாரையும் முட்டாள் ஆக்காதீங்க.

எல்லாருக்கும் காத்து குத்தியாச்சி .

Aashiq Ahamed April 3, 2012 at 3:35 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த சில நாட்களாக மகுடத்தில் உள்ள பதிவுகள் அனைத்திலும் இப்படியாக முஸ்லிம்கள் பெயரில் ஒரு ஆளே போட்டவையே. பதிவர்கள் தங்கள் பதிவுகள் அதிகமாக வோட் வாங்குவதாக நினைக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் இந்த சிலரின் நடவடிக்கைகளால் கேலி செய்யப்படுகின்றார்கள் என்பது தான் உண்மை.

உதாரணத்திற்கு தற்போது மகுடத்தில் உள்ள சகோதரி ராமலக்ஷ்மி பதிவை எடுத்து கொள்வோம். அந்த பதிவு இதுவரை வாங்கிய வோட்கள் 43. இதில், இந்த பதிவில் சொன்னது போன்று போடப்பட்ட போலி வோட்கள் 21.

இது உண்மையான அங்கிகாரமா? சிலரின் கீழ்த்தரமான நடவடிக்கைளால் பதிவர்கள் புண்படுத்தப்படுகின்றார்கள் எனப்தே உண்மை.

நன்றி..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed April 3, 2012 at 3:50 PM  

இதுவரை நாங்கள் கண்டெடுத்த போலி முகவரிகள் பின்வருகின்றன. இன்னும் அதிக அதிகமாக பல பெயரில் உருவாக்கப்படலாம். பதிவர்கள் அனைத்து முகவரிகளையும் கூர்ந்து கவனியுங்கள்.

muftaa08
vaanjoorappa@gmail.com
aalimbaava
abdulkader111@gmail.com
bathusha
farooq11
mustaque1515@gmail.com
mustaquee1515@gmail.com
rahman100@gmail.com
kokkaamakkaa@gmail.com
muztafa
haitharjunus
PANNAGAM3@GMAIL.COM
fazul
mohemadrias
ibrahimriyas@gmail.com
kavippuyal007@yahoo.com
hareraama
gulamnabi000@gmail.com
fatimabebehh@gmail.com
NONJOOR
kpeterson
alexm
punter
blara
superman

AMINAA29
hussainaamma
hajamydheeen
peermohamed.mm@gmail.com
abdulhakkimm
suvanapppiriyan
rabbanii
hyderalii
mohaaashik
PeerMhdd
hajamydheen
naasar
askabt.islamm@gmail.com

Aashiq Ahamed April 3, 2012 at 3:52 PM  
This comment has been removed by the author.
Aashiq Ahamed April 3, 2012 at 3:54 PM  

இந்த பதிவிற்கு இதுவரை பதிவாகி உள்ள மைனஸ் வோட்கள். இந்த வோட்களையும், பதிவையும், என்னுடைய முந்தைய கமெண்ட்டையும் பார்க்கவும்

rabbanii
mohemadrias
farooq11
muftaa08
PeerMhdd
rahman100@gmail.com
blara
superman
hajamydheeen
fazul
kpeterson
abdulkader111@gmail.com
abdulhakkimm
muztafa
NONJOOR

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் April 3, 2012 at 4:09 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வாஞ்சூர் அப்பா
தமிழ்மணத்தில் தங்களுடைய பதிவுகள் மகுடம் சூடவில்லை என்று ஆதங்கப்படும் பதிவர் "கோ_ன்"களின் வேலையாகத்தான் இருக்கமுடியும்.மைனஸ் ஓட்டு போடும் புலிகளே உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெரியப்படுத்துவது என்னவென்றால் பதிவெழுதும் ஏக இறைவனின் அடியார்கள் தங்களின் பதிவுகள் மகுடத்தில் நிற்க‌ வேண்டுமென்று ஆசைப்பட்டு எழுதுபவர்கள் கிடையாது.மேலும் தங்களுடைய பதிவுகள் மகுடத்தில் ஏறவில்லை என்று ஆதங்கப்படுபவர்களும் கிடையாது.நீங்கள் 100 மைனஸ் ஓட்டுகள் போடுங்கள் உங்களை யாரும் கேள்விகள் கேட்கபோவது கிடையாது.கள்ள ஐடியில் ஓட்டுபோடுவது நாகரீகமற்ற செயல் உங்கள் பிறப்பே கள்ளத்தனமாய் இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.குத்துங்கள் இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மைனஸ் ஓட்டுகள் குத்துங்கள் குணிந்து(பதிவெழுதுவதை நிறுத்திவிட்டு)போகமாட்டார்கள் எங்களுடைய கடமை நற்செய்திகளை எத்திவைப்பதுதான்.என்னுடைய ஐடியிலும்(எழுத்துக்களை கூட்டி குறைத்து) இன்னும் சில மணி நேரத்தில் மைனஸ் ஓட்டுகள் விழலாம்.

Seeni April 3, 2012 at 4:17 PM  

ithu verayaa!
ada kodumaiye...!

Anonymous April 3, 2012 at 4:27 PM  

நீ தானே தமிழ் மணத்தில பிளஸ் ஓட்டு மட்டு போடுவதற்கு வசதியா ஒற்றை கையை மட்டும் போட்டிருக்காய்..அப்புறம் எப்பிடி உனக்கு மைனஸ் ஓட்டு குத்துவது? அப்புறம் எதுக்குயா தில்லு முல்லு பற்றி கதைக்கிறா? தமிழ் மண ஓட்டுப்பட்டை கோட்டில் தில்லு முல்லு செய்ய தெரிந்த உனக்கு கள்ள ஐடி வச்சு தில்லு முல்லு செய்து பதிவுலகிலே கலவரத்தை உண்டாக்கனும் என்ற துஷ்ட குணம் வந்திரக்காது என்பதை எப்பிடி நம்புவது...


ஆமா நீ தமிழ் மண ஓட்டுப்பட்டையில் தில்லுமுல்லு செய்ய விடயம் தமிழ்மணத்துக்கு தெரியாதா இல்ல தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறதா?
தமிழ்மணத்துக்கும் உனக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கலா?

Aashiq Ahamed April 3, 2012 at 4:58 PM  

@ சகோதரர் முட்டாபையன்,

உங்கள் மனம் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்..

@ சகோதரர் அனானி,

உங்கள் மீதும் அமைதி நிலவுவதாக...

//நீ தானே தமிழ் மணத்தில பிளஸ் ஓட்டு மட்டு போடுவதற்கு வசதியா ஒற்றை கையை மட்டும் போட்டிருக்காய்..அப்புறம் எப்பிடி உனக்கு மைனஸ் ஓட்டு குத்துவது? //

http://vanjoor-vanjoor.blogspot.com/2012/04/blog-post_03.html

பதிவின் ஆரம்பத்திலும், கீழேயும் எனக்கு பிளஸ் மைனஸ் வோட்டிற்கான இரண்டு கைகளும் தெரிகின்றனவே...

G u l a m April 3, 2012 at 5:11 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பின் அப்பா..

முகவரியற்றவர்களின் முகம் எல்லோருக்கும் இப்போது நன்றாய் தெரிந்திருகும்..

விருப்பு-வெறுப்பின்றி ஆராய்ந்தால் இந்த போலி ஓட்டுக்களின் கயமைத்தனத்திற்கு முஸ்லிம்கள் காரணாம் இல்லையென்பதை தெளிவாய் அறியலாம்.

சகோ முட்டாப்பையன் கொஞ்சம் இங்கே கவனியுங்கள்.

//இப்படியெல்லாம் எல்லாரையும் முட்டாள் ஆக்காதீங்க.

எல்லாருக்கும் காத்து குத்தியாச்சி . //

யார் யாரை முட்டாளாக்குவது சகோ?

== இந்த பதிவிற்கு இதுவரை பதிவாகி உள்ள மைனஸ் வோட்கள்.

பாருங்கள்
rabbanii
mohemadrias
farooq11
muftaa08
PeerMhdd
rahman100@gmail.com
blara
superman
hajamydheeen
fazul
kpeterson
abdulkader111@gmail.com
abdulhakkimm
muztafa
NONJOOR

இப்படி முஸ்லிம்கள் பெயராலே மைனஸ் ஓட்டுக்கள்...?

போலி ஐ.டி உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் தான் என்றால்
முஸ்லிம்களுகு ஆதரவான இப்பதிவில் ஏன் அந்த ஐடியில் மைனஸ் ஓட்டு போட வேண்டும்?

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் அப்பா அவர்களின் பதிவிற்கு அவர்கள் பெயராலே மைனஸ் ஓட்டு????

இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.. சகோ.,
எல்லாம் ஒரு சுய விளம்பரத்திற்காகதான் என்பீர்களா..?

உங்களின் அறியாமை இந்த அளவிற்கு போக வேண்டாம் சகோ

- மாற்றுக் கருத்து இருப்பீன் மற்றவை பிற

Anonymous April 3, 2012 at 5:49 PM  

முதல ஒப்பாரிய நிறுத்துங்க
வெறும் பிளஸ் ஒட்டு மட்டுமே (அதுவும் மகுடம்) வாங்கிகிட்டு இருந்தது முஸ்லிம் பதிவர்களால் மைனஸ் ஒட்டு தாக்குதலை சமாளிக்க முடியலயோ
கோவி கண்ணன் பதிவுல மைனஸ் ஒட்டு குத்தும் போது சுகமா இருந்துச்சோ.
ஏதோ உங்க தமிழ்மணம் ஐடில ஓட்டை போட்ட மாதிரி அழுகாச்சி வேற. உங்க ஐடில ஒட்டு போட்டா தான் அது கள்ள ஒட்டு, மத்தது எல்லாமே நல்ல ஒட்டு தான்.
இனி உங்க மத வெறி பதிவுக்கு எல்லாம் மைனஸ் மழை தான்.

Aashiq Ahamed April 3, 2012 at 6:12 PM  

@ சகோதரர் அனானி,

உங்கள் மனம் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

//இனி உங்க மத வெறி பதிவுக்கு எல்லாம் மைனஸ் மழை தான்//

முஸ்லிம்கள் குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது. மறுமை நாளின் அங்கீகாரத்திற்கு மட்டுமே எழுதுபவர்கள் நாங்கள். எங்களுக்கான நன்மை எல்லாம் இறைவனிடம் மட்டுமே இருக்கின்றது. இந்த மைனஸ் பிளஸ் எல்லாம் ஒன்றும் சீண்டக்கூட போவதில்லை. பதிவுலகில் முஸ்லிம்கள் அதிகம். ஆகையால் மகுடம் ஏறிக்கொண்டிருந்தது. அவ்ளோதான்.

//கோவி கண்ணன் பதிவுல மைனஸ் ஒட்டு குத்தும் போது சுகமா இருந்துச்சோ.//

சிறுபிள்ளைத்தனமான கமெண்ட். இஸ்லாமை, முஸ்லிம்களை காழ்ப்புணர்வோடு அணுகிய பதிவுகளுக்கு மட்டுமே மைனஸ் குத்தியிருப்போம். இது சகோதரர் கோவி.கண்ணன் என்றில்லாமல் எல்லாருக்கும் பொருந்தும்.

உங்கள் மனம் சாந்தியடையட்டும்.

கபிலன் April 3, 2012 at 6:23 PM  

வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்து தான் ஆக வேண்டும் ! அனைவரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை வினை விதைப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் !

உங்கள் தமிழ்மண ஓட்டுப் பட்டையில் ப்ளஸ் ஓட்டு குத்த மட்டுமே ஆப்ஷன் இருக்கு. நெகடிவ் ஓட்டிற்கு ஆப்ஷனே இல்லை. முதலில் அதை சரி செய்யுங்கள் ! அப்புறம் ஒரு தாழ்வான வேண்டுகோள். எந்த தளத்திற்கு சென்றாலும், கமெண்ட்ஸ்ல நீங்கள் இடும் ஸ்பேம்களை தயவு செய்து நிறுத்துக் கொள்ளுங்கள் ஐயா. தளத்தின் உரிமையாளருக்கு அது தர்ம சங்கடத்தைக் கொடுக்கிறது.

எது எப்படியோ....இந்த போலி ஐடி விளையாட்டை எல்லாரும் நிறுத்திடுங்க...தரமான பதிவுகளை அனைவரும் படிக்க வழி வகை செய்யுங்கள் !

Anonymous April 3, 2012 at 6:42 PM  

Aashiq Ahamed April 3, 2012 4:58 PM



http://vanjoor-vanjoor.blogspot.com/2012/04/blog-post_03.html

பதிவின் ஆரம்பத்திலும், கீழேயும் எனக்கு பிளஸ் மைனஸ் வோட்டிற்கான இரண்டு கைகளும் தெரிகின்றனவே...
****

கண்ணை கொண்டுபோய் கழுவுடா கசுமாலம்



*****தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.****

உனக்கு அல்லா உண்மை பேசணும் என்று சொல்லி கொடுக்கலியா ?

Aashiq Ahamed April 3, 2012 at 8:02 PM  

சகோதரர் அனானி,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

//கண்ணை கொண்டுபோய் கழுவுடா கசுமாலம்//

அதை நீங்க தான் செய்யணும் சகோதரர். எனக்கு 22/41 இப்படியாக தெளிவாக காட்டுகின்றதே. இன்னும் நம்பிக்கை இல்லையென்றால் உங்களை வந்தடையும் ஈமெயில் முகவரி எதையாவது கொடுங்கள். ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்புகின்றேன்.

//உனக்கு அல்லா உண்மை பேசணும் என்று சொல்லி கொடுக்கலியா ?//

இறைவன் சொல்லியபடி தான் செய்கின்றேன்.

நன்றி..உணர்ச்சிவசத்தால் செய்வதறியாது தவிக்கும் உங்கள் மனம் அமைதியடைய என் பிரார்த்தனைகள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ April 3, 2012 at 8:47 PM  

Assalaamu alaikkum warah...

Dear Bada Brother Vanjoor,

You have clearly shown the 'hidden culprits' out to the tamil bloggers's world.

Jazakkalaahu khair..!

Now all people know very well...

that,

in which blogg these 420s started their work with minus votes...

and

where they started to put lot of plus votes..!

These things clearly show who are they...

and what is their motive..!

Let these minus voters of Godses & Modis understand it clearly....

Islam will grow more and more by such December 6, Bombay riots, Gujarath riots, Malegon, Hyderabad, Samjoda... etc....etc....Bombings... Pakistan Flag in Bijappore.....

...and at last...
...but not the least...

Tamilmanam forgery votings...!

Anonymous April 3, 2012 at 9:01 PM  

@Anonymous////கோவி கண்ணன் பதிவுல மைனஸ் ஒட்டு குத்தும் போது சுகமா இருந்துச்சோ//////
நாதாரி தனம் பண்ணினாலும் நாசூக்காக பண்ணனும்.நாம பண்ற தப்பு 4 பேருக்கு தெரியக்கூடாது புரியக்கூடாது.இப்படியா தடயத்தை விட்டுட்டு போறது.இதுல நம்ம தலைவர் பெயரை பப்ளிசிட்டி வேற பண்ணிட்டீங்க.
---Anonymous(1)----

முட்டாப்பையன் April 3, 2012 at 9:41 PM  

ஒன்னு பண்ணுங்களேன்.நீங்க எல்லாரும் சேர்ந்து இனி வோட் போடுருரதில்லை-னு முடிவு பண்ணி இரண்டு மாசம் வோட் போடாம இருங்களேன்./////

நான் சொல்லுவது தீர்வு.
இதுக்கு பதில் இல்லை,
சும்மா புலம்பி அர்த்தம இல்லை.
உங்கள் முகத்திரை எங்கள் தளத்தில் கிழிக்கப்பட்டவுடன் இப்ப
நடிப்பா?

இன்னும் நாங்கள் களத்தில் இறங்கவில்லை.ஆனால் நாங்கள் எங்கள் பேர் அடையாளத்துடன்
மைனஸ் வோட் போடுவோம்.

முட்டாப்பையன் April 3, 2012 at 9:45 PM  

நல்ல கதை வசனம்.இப்படி எல்லாம் நடித்தால் அனைவரும் ஏமாருவோமா ?

என்ன ஆட்டம் ஆடிநீங்க?
இப்ப மட்டும் குத்துது குடையுதா ?

ஏன் மொடரேஷன் ?
ஓபன்ஆக கமெண்ட்ஐ விட வேண்டியதுதானே?
சாதகமான கமெண்ட் மட்டும் விடவா?

முட்டாப்பையன் April 3, 2012 at 9:47 PM  

நால்லா பாருங்க அப்பு.தமிழ்மணம்
submit to tamilmanam இப்படி தான் காட்டுது.

ஏன் இந்த கேப்புமாரிதனம் ?

முட்டாப்பையன் April 3, 2012 at 9:53 PM  

தமிழ்மணம் வோட் வைத்து ஒரு ம--
கூட புடுங்க முடியாது.ஆனா இறை,முஸ்லிம்,என்கிற பேர்ல வர பதிவுகளை மகுடதிற்கு கொண்டுவந்து
அராஜகம் பண்ணியது உண்மைதானே.
எங்கே உங்கள் இரைமேல் ஆணை இட்டு சொல்லுங்கள்.

முட்டாப்பையன் April 3, 2012 at 9:55 PM  

அது இன்னாயா கமெண்ட் போடும்போது
எல்லாம் சாந்தி சமாதானம்,சகோ இப்படி சொல்லி போடுறீங்க.

மற்ற மத பதிவர்கள் அப்படியா போடுறாங்க.?

இந்த செயல் உங்களுக்கு வெட்கமா இல்லையா?

உங்களுக்கு கால பைரவன் ஆசி உண்டாகட்டும்.

முட்டாப்பையன் April 3, 2012 at 9:58 PM  

எங்கே முஸ்லிம் பதிவர்களே.தமிழ்மணத்தை விட்டு விலகுங்கள் பார்க்கலாம்.

கும்மி பிரச்னை அப்ப விலகி மானங்கேட்டு போய் திருப்பி போய் செர்ந்தீங்களே?அது ஏன்?

நீங்க மட்டும் கொலோச்சனும்ன்னு தானே ?

இந்த பதிவு உலகம் உங்களை நன்றாக
கவனிதுக்கொண்டிருக்கிறது .

முட்டாப்பையன் April 3, 2012 at 9:58 PM  

எங்கே முஸ்லிம் பதிவர்களே.தமிழ்மணத்தை விட்டு விலகுங்கள் பார்க்கலாம்.

கும்மி பிரச்னை அப்ப விலகி மானங்கேட்டு போய் திருப்பி போய் செர்ந்தீங்களே?அது ஏன்?

நீங்க மட்டும் கொலோச்சனும்ன்னு தானே ?

இந்த பதிவு உலகம் உங்களை நன்றாக
கவனிதுக்கொண்டிருக்கிறது .

முட்டாப்பையன் April 3, 2012 at 9:59 PM  

இதற்கு ஒரு முடிவு காலபைரவன்,ஏசு,புத்தம்,அனைத்தும்-
கொடுக்கட்டும்.

முட்டாப்பையன் April 3, 2012 at 10:03 PM  

தெகிரியம் இருந்தால் கமெண்ட் moderation எடுத்துவிட்டு அறிவிப்பு கொடுங்கள்.நாங்கள் வந்து வாதம் பண்ணுறோம்.உங்கள் முகத்திரையை மொத்தமாக கிழிக்கிறோம்.

உங்கள் மீது கலவரம்,போராட்டம் உண்டாகட்டும்.

தர்சமயதிர்க்கு செல்கிறோம்.
மீண்டும் வருகிறோம்.

முட்டாப்பையன் April 3, 2012 at 10:11 PM  

உங்களை மணி முதல்கொண்டு அனைவரும் கிழித்து தொங்க விட்டாசி.
இன்னும் தமிழ்மணத்தை விட்டு விலகவில்லை.உங்கள் இறை இப்படிதான் மானம் கெட்டு,வெக்கம் கெட்டு இருக்க சொல்லுதா?

நீங்கள் விலகினால் நல்ல பதிவுகள்,பதிவர்கள் அடையாளம் காணப்படும் .

செய்வீர்களா?

Unknown April 3, 2012 at 10:30 PM  

இதுல இத்தனை விஷயம் இருக்குதா? இது தெரியாம அப்பாவியா இருந்திருக்கிறேனே?

Yaathoramani.blogspot.com April 3, 2012 at 11:06 PM  

அறியாத அரிய தகவல்
பதிவாக்கி எச்சரித்தமைக்கு
மனமார்ந்த நன்றி

ராவணன் April 3, 2012 at 11:19 PM  

///சிராஜ் April 3, 2012 2:57 PM

களை எதுன்னு தெரிஞ்சிருச்சு, அடுத்து அத எப்படி வெட்டுவது அல்லது அழிப்பது என்று யோசிப்போம். இல்ல அப்டியே விற்றலாமான்னு கூட யோசிக்கலாம்.///

தமிழ் பதிவுலகில் இருக்கும் அத்தனை முஹமதியர்களும் தீவிரவாதிகள் என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

வெட்டுவது, அழிப்பது, குண்டுவைப்பது மட்டுமே அறிந்த தமிழ்பேசும் முஹமதியர்கள்.

முஹமதியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அறியா மூடர்கள், முஹமதியர்கள் என்ற போர்வையில் உள்ளார்கள்.

ஏக இறைவன் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.

G u l a m April 3, 2012 at 11:21 PM  

அன்பு சகோ முட்டாப்பையன் மற்றும் அனானிகளுக்கு.,

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் மீது சாந்தி நிலவ வேண்டும் என்பதே என் ஆவல்

உங்கள் பின்னூட்டங்களை நீங்களே மறுமுறை படித்து பாருங்கள். எவ்வளவு அநாகரிக வார்த்தைகள். இருந்தும் ஏன் உங்கள் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் பதிவர்கள் மீது பிழையென்றால் அல்லது தெரிந்தே தவறு செய்திருக்கிறோம் என்றால் இதைப்போன்ற அநாகரிக வார்த்தைக்கொண்ட பின்னூட்டங்களை வெளியிடவேண்டிய அவசியமே இல்லையே.. எடக்கு-மடக்கு தளத்தில் இதுக்குறித்த கட்டுரை வெளிவந்த போதே இந்த பிரச்சனையே அப்படியே விட்டுருக்கலாமே.. ஏன் இந்த பதிவு போட வேண்டிய அவசியம்.. - சிந்திப்பீர்களா...

அது சரி நாங்கள் ஏன் தமிழ்மணத்தை விட்டு விலகவேண்டும்.. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது போலி ஐடிக்களை கண்டறிந்து தமிழ்மணம் விரைவில் நீக்கும் என்று -இன்ஷா அல்லாஹ். உங்களுக்கு தமிழ்மணம் மீதான நம்பிக்கையில் குறைவு ஏற்பட்டால் நீங்கள் தான் முதலில் அத்திரட்டியிலிருந்து உங்களை சார்ந்தோரை நீங்க சொல்ல வேண்டும்.

முஸ்லிம்கள் பதிவர்களின் பதிவுகள் மகுடம்.. ஏறியதாக இப்படி கோபப்படுகிறீர்களே... - இதற்கு உண்மையான காரணம் என்ன ..?

பிற மதம் சார்ந்த / சாரா பதிவர்களுக்கும் முஸ்லிம் பதிவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வேற்றுமை.. ஒன்று இருக்கிறது சகோ
முஸ்லிம் பதிவுகளை தவிர்த்து ஏனைய எந்த பதிவர்களுக்கும் பொதுவான ஒரு வரையறை என்று வைத்துக்கொண்டு பதிவுகளை எழுதுவதில்லை. தம் மனதிற்கு எது நல்லதாக படுகிறோ அதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் பதிவர்கள் இறை மறைக்கும் அவன் தூதர் மொழிக்கும் மாற்றம் இல்லா வகையில் மட்டுமே எந்த ஒரு ஆக்கத்தையும் எழுத வேண்டும்.
அதன் அடிப்படையில் ஒரு ஆக்கம் எழுதி அதை தமிழ்மணத்தில் சேர்ப்பிக்கப்படும் போது இயல்பாக அவரது பதிவுகள் சக முஸ்லிம் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர்களால் + ஓட்டும் அளிக்கப்படுகிறது. பிறரையும் வாக்களிக்க, படிக்க தூண்டுகிறார்கள். இதில் என்ன பித்தாலட்டத்தை கண்டு விட்டீர்கள் சகோ.,

அது மட்டுமில்லை ஓரே நிலையின் கீழ் கருத்துக்களை சொல்லும் முஸ்லிம் தளங்கள் சுமார் 250 க்கும் மேற்கொண்டு என்னால் ஒரு சுட்டியில் தரமுடியும். அவற்றில் பெரும்பாலும் ப்ளாக்களே.. ஆனால் சுமார் 25 சதவீகித ப்ளாக்குகள் மட்டுமே தமிழ்மணத்தில் இணைக்கப்படுகின்றன. அப்படியிருக்க தான் நினைத்த, தான் எதிர்பார்த்த ஆக்கங்கள் அனைத்தும் இந்த குறைந்த பட்ச தளங்கள் வழியே பகிரப்படும் போது அவற்றிற்கு தொடர்ந்து + ஓட்டு போடப்படுவதும், அவை ஆதாரிக்கப்பட்டு சுடான இடுகையில் வருவதும் ஒரு சாதரண செயலே.. - இதில் குறை கண்டுப்பிடித்தால் அதற்கு பெயர் பொறாமை என்று தான் அர்த்தம் சகோ

இறைவனின் பெயரால்.. என்று தலைப்பிட்டால் உடனே + ஓட்டுக்கள் குத்தப்படுவதில்லை சகோ.. ஏனெனில் முஸ்லிமாக இருந்தாலும் சமூகத்திற்கு பயனில்லாத ஆக்கங்களோ ஆபாச அறுவருக்கத்தக்க ஆக்கங்களோ இட்டால் அவற்றை எந்த முஸ்லிம் வாசகனும் ஆதரிப்பதில்லை. அதற்கு எத்தனையோ முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்மணத்தில் இருந்தாலும் அவர்கள் அதிக அளவு பேசப்படுவதில்லை. ஆக முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகவெல்லாம் யாரும் இங்கு ஓட்டுப்பதிவதில்லை.

இறுதியாக சகோ.,
தமிழ்மணம் மட்டுமல்ல தமிழ்10 , இன்ட்லி, உடான்ஸ், உலவு போன்ற திரட்டிகளிலும் பெரும்பாலான முஸ்லிம் பதிவுகள் வரத்தான் செய்கின்றன. ஆக அவற்றில் எல்லாம் எழும்பாத பிரச்சனை தமிழ்மணத்தில் மட்டும் ஏன்...? சகோ சிந்திக்கவேண்டும். எங்களுக்கு தமிழ்மணம் மகுடம் இலக்கல்ல.. எங்கள் கருத்தை எடுத்து சொல்ல பயன்படும் ஒரு ஊடகம். அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால் பாருங்கள் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எளிதில் சொல்லும் ஊடகமாம் இத்திரட்டியை பயன்படுத்திக்கொள்ளாமல் வெறும் பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, இன்னும் சிலர் ஆபாசம் கலந்த அறுவருப்பு பதிவுகள் என இப்படி சமூகம் பயன்பெறாத பதிவுகளை இட்டால் அவை எப்படி தமிழ்மண மகுடம் காணும்...?

சகோ பொறுமையாக இவற்றை சிந்திக்கவேண்டும் என்பதே என் ஆவல்
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.. அதற்காக ஏன் இஸ்லாம் இஸ்லாம் என சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று..

http://www.naanmuslim.com/2012/01/blog-post.html
இந்த சுட்டி அதற்கான பதில் தருமென நினைக்கிறேன்.

- மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற

ANBUTHIL April 3, 2012 at 11:22 PM  

பயனுள்ள பதிவு நண்பா மேலும் இந்த பதிவின் லிங்க் ய் எனது தளத்திலும் வைத்துள்ளேன்.

முட்டாப்பையன் April 4, 2012 at 12:12 AM  

Blogger G u l a m said...

அன்பு சகோ முட்டாப்பையன் மற்றும் அனானிகளுக்கு.,///////

மிக அருமையான விளக்கம்.
நன்றாக தூக்கம் வருகிறது.

உங்கள் மீது தூக்கமும்,கொட்டாவியும்
நிலவட்டும்.

முட்டாப்பையன் April 4, 2012 at 12:32 AM  

போங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க .
வந்துட்டாணுக வாதம் பண்ண.
போறாமையாம்.உலக காமெடி.

எங்கு தவறு இருக்கோ அங்கு எடக்கு மடக்கு இருக்கும்.
எங்களை பொருத்தவரை நீங்கள் தவறு செய்தீர்கள் கேட்டோம்.
யாராக இருந்தாலும் கேட்போம் .எங்களின் அனைத்து பதிவுகள்,கமெண்ட்ஸ் பார்க்கவும்.மணியை கூட ஓட ஓட துரத்தினோம் .

ஆனால் இப்போ நீங்க பண்ணுவது பக்கா அரசியல்.அமைதிப்படை படம் மாதிரி.
சமீபத்தில அமைதிப்படை படம் உங்க குழுமத்தில பார்த்தீங்களா?

எந்த நடுநிலையாலர்கிளிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்.
உங்கள் மீது காரி துப்புவார்கள்.பெத்த பேச்சி கதைக்கு ஆகாது .

இதே மாதிரி மணி கும்மி மக்களை காலில் விழாத குறையாக தமிழ்மணத்தில் சேருமாறு கெஞ்சினார்.அவர்கள் சேர்ந்தார்களா?
உங்களுக்கு மட்டும் வெ,மா,சூ, இல்லையா?
விலகி பின் செர்ந்தீர்களே ?
what a pity-உங்கள் இறை?இவ்வளவு கீழ்தரமாகவா உங்கள் இறை சென்றுவிட்டார்?உங்கள் இறைமீது சாக்கடை,இன்னும் பிற அனைத்தையும் நீங்களே தெளித்து விட்டீர்கள் .

உங்கள் இறை மீது நாங்கள் வைக்கும் அன்பு கூட நீங்கள் வைக்க வில்லையே.
நன்றாக வஸ்தாதுகளை வைத்துக்கொண்டு யோசிக்கவும்.
யோசித்தால் எல்லாம் தெளிவு படும்.
ஒன்னு மட்டும் உண்மை .
உங்க கும்பல் அனைவரும் மிக கடுமையான மூளை சலவை பண்ணபட்டு
மெண்டல் ஆக அலைகின்றீர்கள்.இது சத்தியம்.சத்தியம் சத்தியம்.

முட்டாப்பையன் April 4, 2012 at 12:44 AM  

உங்கள் முஸ்லிம் குரூப் இல்லாமல் மற்றவர்கள் அனைவருக்கும் நீங்கள் மத பிரச்சாரம் செய்கின்றீர்கள் என்பது தெளிவு.

உங்கள் மீது குற்றச்சாட்டு வந்த பிறகு தமிழ்மணம் விட்டு விலகி நிற்பதுதான்
உங்கள் இறை மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அடையாளம்.
you have to prove like that way only.
அதை விட்டுவிட்டு சும்மா புலம்புவதில் அர்த்தம இல்லை.
எங்கள் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள்.
ஒரு வீட்டினுள் தவறு செய்கிறீர்கள் என்று குற்றச்சாட்டு கூறினால் அதை விட்டு வெளியில் வந்து தான் பதில் சொல்ல வேண்டும்.உள்ளேயே இருந்து பதில் சொன்னால்
நீங்கள் ஆதாரத்தை மறைக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.


சவாலாகவே கேட்கிறோம்.தமிழ்மணத்தை விட்டு வெளியே வந்து
உங்கள் திறமையை நிரூபியுங்கள் .

அல்லது வோட் பட்டை இல்லாமல் மூன்று மாதம் பதிவு போட தயாரா?
உடனே எங்களை கேக்காதீர்கள்.நாங்கள் எங்கள் பதிவுக்கே வோட் போடுவதில்லை.நாங்கள் பத்து பேர்.
அடுத்தவர்கள் மீது குற்றம் சொல்லும்முன் நாங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று முடிவுடன்தான் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டது.

முட்டாப்பையன் April 4, 2012 at 12:48 AM  

அட போங்கப்பா.கமெண்ட்ம் உடனே வரலை.கமெண்ட்க்கு பதில் போட ஆள் தேடுறீங்க போல .

கமெண்ட் போட கடுப்ப இருக்கு.குறைந்த பட்சம் இந்த மாதிரி பதிவுக்காவது இருந்து பதில் சொல்லணும்.கமெண்ட் உடனே வரணும்.என்ன பதிலனு வந்து வந்து பாப்பான்களா?
போங்கப்பா நீங்களும் உங்க தளமும்.
டோன்ட் யு ஆல் feel ashame?

முட்டாப்பையன் April 4, 2012 at 12:50 AM  

வெறுமன நான் மட்டும் கத்தி no use.bye,c u to'ow

அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 4, 2012 at 12:51 AM  

இந்தப் பதிவு கூறவரும் கருத்து என்ன என்பதை, இரு தரப்பு வாதங்களையும் படிக்கும் வாசகர்களே புரிந்து கொள்வார்கள்.

Anonymous April 4, 2012 at 12:57 AM  

இந்த காரியத்தை செய்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

வைச்சான்யா ஆப்பு

வான்ஜீர் உங்கள் மேலும் உங்கள் குழுவினர் மீதும் அனுமான் நேசமும் ஆதரவும் உண்டாகட்டும்

Anonymous April 4, 2012 at 1:15 AM  

G u l a m //

உங்கள் மீது முதலில் எங்கள் காளி ஆத்தாவின் கிருபை உண்டாகட்டும்..

இதற்க்கு முன்னர் டெரர் கும்மி பிரச்சனையில் தமிழ் மணத்தை 'தமிழ் மலம்' என்று கூறி கிண்டல் செய்து புறக்கணித்த முகமதியர்கள் தானே நீங்கள்! அப்போ எங்கே போனது உங்கள் நாகரீகம். அதன் பின்னர் தமிழ் மணத்தில் வந்து மானம் கெட்டு ஓட்டிக்கொண்டீர்களே உங்கள் மதத்தில் இவை தான் சொல்லிக்கொடுத்ததா?

போதா குறைக்கு சவூதி அரேபியா வரை சென்று தமிழ் மணத்தை புதடை செய்த உங்களுக்கு இப்போ என்ன அக்கறை தமிழ் மணத்தின் மீது..
உங்கள் கும்பலை தொப்பி பிரட்டிகள் என்று சொல்வார்களே இது தானா அது?

Nizam April 4, 2012 at 2:55 AM  

இன்று நேற்று நடக்குது இது ஒர் நூற்றாண்ட அல்லவ நடக்குது கள்ளத்தனமா செய்யறாது அதையே அடுத்தவா மேல போடறாது. கள்ள ஐடி, ஆனானிய வந்து கேவலமா வார்த்தை பயன்படுத்துவது. அதெல்லாம் நம்மெள்ள தடுக்க முடியாது அது ஜீன் சம்மந்தப்பட்டது. அவன பார்த்து திருந்தான உண்டு இல்லைனா வாழையடி வாழை தொடரும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ April 4, 2012 at 7:30 AM  

ஸலாம் சகோ.வாஞ்சூர்,

//mohaashik என்ப‌தை mohaaashik என‌வும்//

போலி,
ஒரு 'a' அதிகமாக போட்டு இருக்கார்.

நம்மிடம் இருந்து இந்த மைனஸ் மழை பொழியும் மதஎதிர்வெறியர்(கள்) விரும்புவதை/ஆசைப்படுவதை/எதிர்பார்ப்பதை பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக தெள்ளத்தெளிவாக அறிந்து கொண்டேன்..!

அவையாவன:

=>தமிழ்மணத்திலிருந்து முஸ்லிம் பதிவர்கள் விலக வேண்டும்.
=>இல்லையேல் அவர்கள் மீது பொய்யாகவேனும் அவதூறு-வீண்பழி சுமத்தி கெட்டபெயர் ஏற்பட வைத்து அனைவராலும் புறக்கணிக்க வைக்கப்பட வேண்டும்.
=>உடனே முஸ்லிம் பதிவர்கள் ஓட்டுப்பட்டையை தூக்க வேண்டும்.
=>அவர்கள் இனி வேறு யாருக்கும் ஓட்டளிக்கக்கூடாது.
=>முஸ்லிம்கள் இனி பதிவு ஏதும் எழுதக்கூடாது.
=>அப்படியே எழுதினாலும் அதை தமிழ்மணத்தில் மட்டும் இணைக்கவே கூடாது.
=>அப்படியே இணைத்தாலும் அதில் சினிமா-கிரிக்கெட்-கடி ஜோக்ஸ்-சுய சொறிதல்-மொக்கை அரசியல் நையாண்டி கார்ட்டூன்-புனைவுக்கதை... இப்படி மட்டும் எதுவாகிலும் இருக்கலாம்.
=>மேற்கண்ட உயர்ந்த நன்னோக்கம் கொண்ட சமூக நலப்பதிவுகளுக்கும் கூட அது பிடித்துப்போய் எவரேனும் ஏழு பேர் ஓட்டளித்து அது வாசகர் பரிந்துரையில் கூட வந்துவிடக்கூடாது.
=>அவ்ளோதான்... இனி மைனஸ் ஓட்டு மழைதான்...

ம்ம்ம்....

ஓகே..! ஓகே..!
தெளிவாக விளன்கிக்கொண்டேன் சகோ..!

இன்ஷாஅல்லாஹ்,
எனது அடுத்த பதிவில்...
விலக்கிய தமிழ்மண ஓட்டுப்பட்டையை இவர்களுக்காகவே சேர்க்கப்போகிறேன்..!

ஹா...ஹா...ஹா...

இப்படிக்கு....
சும்மா கிடந்த ஒரு சங்கு.

Anonymous April 4, 2012 at 10:10 AM  

இனியாவது இஸ்லாமிய மதவாத பதிவர்களும் கொட்டம் அடங்குமா?

வெளங்காதவன்™ April 4, 2012 at 12:23 PM  

திரு.முட்டாள்பையன் அவர்களே,
இவர் கூறுவது சரிதான்.. ஓட்டுக்கள், இவர்களின் பெயரில்(இவர் சொன்னது போல) போடவில்லை. பின்னர், எங்ஙனம் நீவீர் இவர்களின் மீது குற்றம் சுமத்தலாம்?

TAMILAN April 4, 2012 at 12:53 PM  

// ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ April 4, 2012 7:30 AM said,,,,,


நம்மிடம் இருந்து இந்த மைனஸ் மழை பொழியும் மதஎதிர்வெறியர்(கள்) விரும்புவதை/ஆசைப்படுவதை/எதிர்பார்ப்பதை பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக தெள்ளத்தெளிவாக அறிந்து கொண்டேன்..!

அவையாவன:

=>தமிழ்மணத்திலிருந்து முஸ்லிம் பதிவர்கள் விலக வேண்டும்.

=>இல்லையேல் அவர்கள் மீது பொய்யாகவேனும் அவதூறு-வீண்பழி சுமத்தி கெட்டபெயர் ஏற்பட வைத்து அனைவராலும் புறக்கணிக்க வைக்கப்பட வேண்டும்.

=>உடனே முஸ்லிம் பதிவர்கள் ஓட்டுப்பட்டையை தூக்க வேண்டும்.

=>அவர்கள் இனி வேறு யாருக்கும் ஓட்டளிக்கக்கூடாது.

=>முஸ்லிம்கள் இனி பதிவு ஏதும் எழுதக்கூடாது.

=>அப்படியே எழுதினாலும் அதை தமிழ்மணத்தில் மட்டும் இணைக்கவே கூடாது.

=>அப்படியே இணைத்தாலும் அதில் சினிமா-கிரிக்கெட்-கடி ஜோக்ஸ்-சுய சொறிதல்-மொக்கை அரசியல் நையாண்டி கார்ட்டூன்-புனைவுக்கதை... இப்படி மட்டும் எதுவாகிலும் இருக்கலாம்.

=>மேற்கண்ட உயர்ந்த நன்னோக்கம் கொண்ட சமூக நலப்பதிவுகளுக்கும் கூட அது பிடித்துப்போய் எவரேனும் ஏழு பேர் ஓட்டளித்து அது வாசகர் பரிந்துரையில் கூட வந்துவிடக்கூடாது.

=>அவ்ளோதான்... இனி மைனஸ் ஓட்டு மழைதான்...

ம்ம்ம்....

ஓகே..! ஓகே..!
தெளிவாக விளன்கிக்கொண்டேன் சகோ..! //


CORRECT.

Aashiq Ahamed April 4, 2012 at 1:41 PM  

சகோதரர் முட்டாப்பையன்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக,

தமிழ்மணத்தில் இருந்து நாங்கள் ஏன் விலகவேண்டும்? ஒரு தீர்க்கமான காரணம் இருக்க வேண்டும். தமிழ்மணத்தின் சார்பாக பேசிய ஒருவர் கிண்டல் செய்ததற்காக தான் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் தமிழ்மணம் சார்பாக அவர் செயல்படவில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்து விட்டது தமிழ்மணம். பிரச்சனை முடிந்தது. தனி ஒருவர் பேசி இருந்தால் பத்தோட பதினொன்னு என்று விட்டு விட்டு போய் இருப்போம். ஆனால் தமிழ்மணம் சார்பாக என்று வந்ததால் தான் பிரச்சனை வீரியமானது. எப்போது தமிழ்மணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்தார்களோ அப்போதே பிரச்சனை முடிந்துவிட்டது. இதெல்லாம் தமிழ்மணம் வெளியிட்ட அறிவிப்பிலேயே இருக்கும். விருப்பமிருந்தால் பார்த்துக்கொள்ளவும்.

சரி, தற்போது எனக்கு கூறுங்கள். தமிழ்மணத்தில் இருந்து நாங்கள் ஏன் விலகவேண்டும்? விலகுவதற்கு என்ன காரணம் இருக்கின்றது?

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

VANJOOR April 4, 2012 at 3:25 PM  

.
.
இதன் தொடர்பாக இதையும் >>>> தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்) <<<< படியுங்கள்.

..

Unknown April 4, 2012 at 4:50 PM  

எம் வலைப்பூவிற்கு வந்தமைக்கும், வாக்களித்தமைக்கும் நன்றிகள்.

முட்டாப்பையன் April 4, 2012 at 8:04 PM  

Blogger Aashiq Ahamed said...

சகோதரர் முட்டாப்பையன்///


சரி, தற்போது எனக்கு கூறுங்கள். தமிழ்மணத்தில் இருந்து நாங்கள் ஏன் விலகவேண்டும்? விலகுவதற்கு என்ன காரணம் இருக்கின்றது?

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ/////


நல்லது.நான் தீர்வாக சொன்னது.அது.
உங்கள் மேல் குற்றச்சாட்டு வந்து விட்டது .
போலி ஐ.டி என்று காரணம் சொல்லுறீங்க.இதை ஏன் தமிழ்மணம்
சரி செய்யணும்?நாங்கள் சொல்லுவது உடனடி தீர்வு.
மூன்று அல்லது இரண்டு மாதம் நீங்கள் எல்லாரும் விலகினால் யார்
போலி வோட் போட முடியும் ?
உங்கள் மீது தவறு இல்லை என்னும் பட்சத்தில் தீ குளிப்பது தான் சரி.இவ்வாறாகவே நீங்கள் உங்கள் நேர்மையை நிரூபிக்கவேண்டும்.
இல்லாவிட்டால் செய்வதையும் செய்து விட்டு இந்த மாதிரி போஸ்ட் போட்டு நாடகம் ஆடுகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

போலி ஐ.டி-ஐ நீக்கிவிட்டால் வேறு யாரும் வேறு பேரில் வர முடியாதா?இது எல்லாம் சும்மா கதை.வேலைக்கு ஆகாது.
நன்கு நாங்கள் சொல்லுவதை யோசிக்கவும்.
இதே போலி ஐ.டி நீங்கள் உருவாக்க முடியாதா?
கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் கேக்கபடலாம்.தீர்வு நாங்கள் சொல்லுவதே சரியான படி ஆகும்.

ஏன் இனி நீங்களே வேறு மதத்தின் பேரில் ஐ.டி உருவாக்கி வோட் போட முடியாதா?
இதே கேள்வியை திருப்பி கேக்கலாம்.



தமிழ்மணத்தின் சார்பாக பேசிய ஒருவர் கிண்டல் செய்ததற்காக தான் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் தமிழ்மணம் சார்பாக அவர் செயல்படவில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்து விட்டது தமிழ்மணம். பிரச்சனை முடிந்தது. /////


செம காமெடி. பெயரிலி ON BEHALF OF T.M என்று தான் கமெண்ட் போட்டார்.நீங்களும் நான்றாக படித்து பாருங்கள்.
உங்களை பற்றிய தரக்குறைவான சொல் ஆடலுக்கு அவர் என்ன பதில் சொன்னார்? வழ வழ என்றுதான்.
மனிதன் பிறப்பது ஒரு முறையே.கொஞ்சமேவாது மானத்தோடு வாழனும்.அந்த அளவுக்கு வெ,மா,சூ, உங்கள் மதம் சார்ந்தவர்களிடம் அதிகம் இருக்கும் என்று நாங்கள் எதிர் பார்ப்பது தவறா?
ஏனென்றால் சாதாரண குற்றச்சட்டுக்கே வெகுண்டெழுந்து தீய செயலில் ஈடுபடும் உங்கள் மதத்தினர் இந்த செயலுக்கு??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

தொடருவோம்.

Aashiq Ahamed April 4, 2012 at 11:25 PM  

சகோதரர் முட்டாப்பையன்,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவன் மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தருள்வானாக..ஆமீன்

//நாங்கள் சொல்லுவது உடனடி தீர்வு.
மூன்று அல்லது இரண்டு மாதம் நீங்கள் எல்லாரும் விலகினால் யார்
போலி வோட் போட முடியும் ?//

சாரி பிரதர். உங்கள் பெயர் மட்டும் தான் அப்படி என்று நினைத்து உங்களுடன் உரையாடி விட்டேன். உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும்.

இந்த விளையாட்டில் திரும்பி பார்த்தால் பல விஷயங்களை நீங்கள் எங்களுக்காக செய்து கொடுத்திருக்கிண்றீர்கள். அதற்காக மனமார்ந்த நன்றிகள்.

1. தற்போது எங்களுடைய ஒற்றுமை மேலும் அதிகமாகி இருக்கின்றது.
2. பதிவுலகில் மேலும் பல முஸ்லிம்கள் எங்களுடன் இணைந்திருக்கின்றனர்.
3. எடக்கு மடக்கு தளத்தில் முயற்சித்த உங்களுடைய சூழ்ச்சி படுத்துக்கொண்டது. அதன் மூலமாக குணா தமிழ் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் நட்பு கிடைத்தது.
4. இத்தனை நாட்களாக நாங்கள் வலியுறுத்தியும் வோட் பட்டை வைக்காத சகோதரர் முஹம்மது ஆஷிக் தற்போது உங்களால் அதனை நிறுவி இருப்பது. :)
5. முஸ்லிம்களின் பதிவுகள் முன்பை விட படு வேகமாக சூடான இடுகைகளில் வருவது.
6. வாஞ்சூர் மற்றும் மனிதாபிமானி தளங்களில் வந்த பதிவுகள் உண்மை நிலையை உணரவைத்து பல பதிவுலக சகோதரர்களின் நட்புகளை உருவாக்கி கொடுத்தது.

--- இப்படியாக சொல்லிக்கொண்டே ஆகலாம். ஆகையால் மிக்க நன்றி சகோதரர். உங்கள் தளத்தில் சொன்ன ஒரு குர்ஆன் வசனத்துடன் உங்களுடனான என்னுடைய கடைசி உரையாடலை முடித்துக்கொள்கின்ரேன்.

அவர்களும் திட்டமிட்டார்கள், அல்லாஹ்வும் திட்டமிட்டான். தவிரவும் திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவனாவான் - குர்ஆன்.

இதுதான் இதுவரை நடந்துதுள்ளது. இறைவன் நாடினால் இனியும் தொடரும்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் April 7, 2012 at 9:26 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே,
பதிவுலகத்திலிருந்து நம்மை நீக்க நமது பெயர்களில் கள்ள ஐடி create பண்ணியிருக்கும் வெவ்வேறு கொள்கையிலிருக்கும் மனிதர்களில் சிலர் ஒன்றுகூடிவிட்டார்கள்.அவர்களின் அனைவரின் நோக்கமும் நம் பதிவுகளும்,நமது இஸ்லாமிய பணிகளும் தொடரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதே பெரும் காரணம்.நாம் என்னதான் இதைப்பற்றி பதிவுகள் போட்டாலும் நம் மீது வீச‌ப்பட்ட களங்கம் விலக சில நாட்கள் ஆகும்.எனவே நமது தூய எண்ணத்தை மற்ற பதிவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவான நிலையை தமிழ்மண பதிவர்களின் மனதில் பதிய சில நடவடிக்கைகள் எடுத்தேயாகவேண்டுமென்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்றோம்.முஸ்லிம் பதிவர்களும், நன்கு அறியப்பட்ட பின்னூட்டவாதிக‌ளாகிய நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து கடைப்பிடிக்கவேண்டியவை
மற்ற பதிவுகளுக்கு முஸ்லிம் பதிவர்கள் ஓட்டு போடுவதாக இருந்தால் பின்னூட்டத்தில் பதிவுகள் பற்றிய விமர்சனமோ (அ) பாராட்டோ தெரிவிக்கவில்லையென்றாலும் மறக்காமல் பின்னூட்டத்தில்
எனது User Name:xxxxxx என்பதையும்
நான் போட்ட ஓட்டு:ப்ளஸ் (அ) மைனஸ் என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்.(மறுமொழியிடும் மற்றவர்களும் தெரிந்துகொள்ளவே)
பிளாக்கர்கள் தங்களின் தளத்தில் Anonymous Optionஐ வைக்கவேண்டாம்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP