**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.

>> Thursday, March 8, 2012



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..

அ...ஆ...ஓஹோ....

பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoult டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம்.

இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult.

இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.

Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012.

சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர்.

பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...

பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் காண >>> இங்கே <<< சுட்டவும்.


References:

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.



தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

6 comments:

சிராஜ் March 8, 2012 at 5:07 PM  

சலாம் வாஞ்சூர் அப்பா,

நல்ல பகிர்விற்கு நன்றி. உண்மை என்னன்னா, டார்வின் இன்னும் கொஞ்ச காலம் கூட வாழ்ந்து இருந்தா அவரே பரிணாம கொள்கைய மறுத்து முஸ்லிம் ஆகி இருப்பார்.

சிராஜ் March 8, 2012 at 5:07 PM  

தொகுத்தளித்த சகோ எதிர்க்குரல் ஆசிக்கிற்கும் நன்றி.....

அருள் March 8, 2012 at 6:18 PM  

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

G u l a m March 8, 2012 at 9:46 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பின் அப்பா


//பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
//

அல்ஹம்துலில்லாஹ்!

கொஞ்சம் கொஞ்சமாய் ..வெளிச்சத்தை நோக்கி டார்வினிசம்..!

suvanappiriyan March 8, 2012 at 10:29 PM  

//கொஞ்சம் கொஞ்சமாய் ..வெளிச்சத்தை நோக்கி டார்வினிசம்..!//

ஆமோதிக்கிறேன்.

Seeni March 9, 2012 at 2:34 AM  

maasha allah!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP