முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?
>> Friday, March 23, 2012
இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவலிங்கத்தையா? என்று அறியாமையினாலோ, விஷமத்தனமாகவோ, காழ்புணர்வாகவோ பதிவுகளை காணுகிறோம்.
இஸ்லாத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர் என இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.
இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!
மாறாக அகில உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் அனுப்பபட்ட இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஏக இறைவனால் புனிதப்படுத்தப்பட்ட அந்த கஃபாவில் இருக்கும் அக்கல்லை முத்தமிட்டார்கள் என்பதற்காக,
முஹம்மது நபி (ஸல்) அவர்களை தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்பற்றக்கூடிய முஸ்லிம்களும் அக்கல்லை முத்தமிடுகின்றனர்.
மாற்று மத சகோதரர்கள் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் அக்கல்லிற்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது என்பதற்காக அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
SOURCE: http://tamilmuslim.com/ta/?p=605
கற்களையும், சிலைகளையும் வணங்கக் கூடாது மாறாக அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என வலியுறுத்துகின்ற இஸ்லாத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர் என இஸ்லாத்தின் எதிரிகளால்திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளிக்கிறார். ஷெய்கு இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்.
ஐயமும்-தெளிவும் - பிற மதத்தினருக்காக
கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?
பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்
முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள்.
அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும்.
இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார்.
அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.
அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
"(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 2:144)
காபா என்பது மனித சமுதாயம் ஏக இறைவனை வணங்குவதற்கு கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும்.
அதை நோக்கி முஸ்லிம்கள் அனைவரும் தமது தொழுகையின் போது நோக்க கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்பதால் தான் முஸ்லிம்கள் அதை நோக்கி தொழுகிறார்கள்.
ஆனால் காபா என்ற அக்கட்டடத்தைத் தொழவில்லை.
இதற்கு முக்கியமான ஒரு வரலாற்று சம்பவம் விளக்கமாக இருக்கிறது.
மக்கா வெற்றியின் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இதே காபாவின் மேல் நின்று தொழுகைக்கான அழைப்பை விடுக்க பிலால் எனும் நபித்தோழரைப் பணிக்கிறார்கள்.
அவர் அதன் மேல் நின்று தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்.
தாம் வணங்கக் கூடிய ஒன்றின் மீது யாரும் ஏறி நிற்க மாட்டார்கள்.
முஸ்லிம்கள் காபாவை வணங்குவதாகத் தவறாக எண்ணுபவர்கள், எவராவது தான் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பாரா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டால் இதற்குரிய விடை கிடைத்துவிடும்.
இன்றைக்கும் கூட நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் இடம் நிறைந்து விடும் சூழலில் முஸ்லிம்கள் பள்ளியைச் சுற்றியுள்ள வெளி இடங்களில் நின்று தொழுவதைக் காணலாம்.
அதற்காக அவர்கள் பள்ளிவாசலை வணங்குகிறார்கள் என்று அர்த்தமில்லை. அதே போன்றே காபா எனப்படும் உலகின் முதல் பள்ளிவாசலுக்குள் போதுமான இடமில்லாத சூழலில் காபாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழுகிறார்கள்.
இது தவிர முஹம்மது (ஸல்) அவர்களும் அவருடைய தோழர்களும் அதனுள் சென்று தொழுதும் உள்ளார்கள்.
ஆக தொழுகையின் போது உலக மக்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு திசையை உலகின் எப்பகுதியிலிருந்தும் நோக்க ஏவப்பட்டுள்தால் முஸ்லிம்கள் காபாவை நோக்கித் தொழுகிறார்களே தவிர அதையே தொழவில்லை.
இரண்டாவதாக ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல் சுவனத்திலிருந்து வந்துள்ள ஒரு பொருள் என்பது முஸ்லிம்களின் மற்றொரு நம்பிக்கை.
இதை முஹம்மது (ஸல்) அவர்கள் தம் கைகளால் தொட்டுத் தடவி முத்தம் இட்டுள்ளார்கள்.
ஆனாலும் இதை வணங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதைத் தொடவில்லையென்றாலும் முத்தமிடவில்லையென்றாலும் ஹஜ் வணக்கம் நிறைவேறிவிடும்.
மேற்கண்ட பத்திகளில் சொல்லப்பட்டவற்றை ஆய்ந்து நோக்கினால் முஸ்லிம்கள் காபா என்ற கட்டிடத்தையோ அதில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லையோ வணங்கவில்லை என்பது விளங்கும்.
(எப்படி ஒரு பிற நாட்டுப் பொருளை, அல்லது சந்திரனில் இருந்து பெற்ற கல்லையும் மண்ணையும் மனிதர்கள் ஆர்வத்துடன் அணுகுகிறார்களோ அதே போல் தான்)
சுவனத்தின் ஒரு பொருளை இறைத்தூதர் அவர்கள் தொட்டுள்ளார்கள், முத்தமிட்டுள்ளார்கள் என்பதால் முஸ்லிம்கள் முத்தமிடுகின்றனரே தவிர அதை வணங்கவில்லை என்பதே உண்மை.
மேலும்,
உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு,
''நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்'' என்றார்கள். (புகாரி 56வது அத்தியாயத்தில் 675வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இரண்டாவது கலீஃபாவாகிய உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதில் முஸ்லிம்களின் கருப்புக்கல் குறித்த முஸ்லிம்களின் நோக்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கணம் பொதிந்துள்ளது.
மேலும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் ஒன்றாகிய தவாஃப் (வலம் வருதல்) என்பதை முஸ்லிம்கள் ஏழு முறை சுற்றிவரவும் அதை இந்தக் கல்லினை அடையாளமாகக் கொண்டே துவக்கவும், ஒவ்வொரு சுற்றை முடிக்கவும் ஏவப்பட்டுள்ளனர்.
கூட்டம் காரணமாகக் கருப்புக் கல்லினை நெருங்கி முத்தமிட இயலாதவர்கள், தொலைவில் இருந்தவாறே கருப்புக் கல்லினை நோக்கி சைகை செய்துவிட்டு தங்களின் வலம் வருதலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி உள்ளது.
இயலாத சூழலில் கருப்புக் கல்லைத் தொடாமலேயே கூட ஹஜ்ஜைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆகவே காபாவையோ, ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லையோ அல்லது, இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையோ அவர்கள் அடக்கப்பட்டுள்ள மதீனா எனும் பள்ளியையோ கூட வணங்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை என்பதே இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையின் நிலைபாடாகும்.
இறைவனே மிக்க அறிந்தவன்.
உங்களுக்குத் தெரியுமா?
மதீனாவில் அடக்கமாகியுள்ள முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் அடக்கஸ்தல்த்துக்கு முன் உள்ள 'க்ரில்' (GRILL) கதவைத் தொட்டால் அங்கு நிற்கும் காவலர் தடியால் அடித்து விரட்டுவர்.
காரணம்: அவ்வாறு தொடும்போழ்து, மனதில் நாம் முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கி விடும் எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே.
மேலும், அவ்வாறு தொடுமாறு அவர்கள் நமக்குக் கட்டளையிடவுமில்லை.
ஆனால், மக்காவில் உள்ள கருப்புக் கல்லையும்; க-அபா என்னும் சதுர வடிவான கட்டிடத்தின் கற்களையும் முஹம்மத்(ஸல்) அவர்களும் தொட்டார்கள்; நாம் அவர்களைப் பின்பற்றி அவற்றை தொட அனுமதியும் வழங்கியுள்ளார்கள்.
அதனாற்றான், அங்குள்ள காவலர்கள் அவ்வாறு தொடும்போழ்து தடுப்பதில்லை.
இதன் மூலம் அறிவதென்னவென்றால், 'எண்ணம்' தான் வேறுபடுகின்றன ஒரே மாதிரியான 'தொடுதல்' என்னும் செயற்களில்.
எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகளைத்தான் இரு இடங்களிலும் இரு வேறான முறைகளில் பின்பற்ற படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.
SOURCE: http://www.satyamargam.com/605
"காபா" வின் உள்ளே விடியோக்கள்.
Inside Kaaba
Inside the Kabah
The House of ALLAH in Makkah, "The Kaaba" is coverd by a black cloth known as 'Kiswa',wich is produced & changed every year.
Special factory is designed for the making of Kiswa in Makkah.
It costs approx SR 17million.The cloth is made of 670kgs of silver dyed black.
About 120kgs of pure gold & 50kgs of silver is used in writing the Quranic verses over the cloth.
The total area of the cloth is 658sq
காபா வின் "கிஸ்வா" என அழைக்கப்படும் கருப்பு நிற துணியிலான உறையினால் சுற்றிலும் மூடப்பட்டிருக்கிறது. வருடாவருடம் இது பதிதாக மாற்றப்படுகிறது.
காபாவினுள் என்ன இருக்கிறது? ஒன்றுமேயில்லை !!!
Here Pictures of changing Ghilaf e ka'abah
படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.
தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.
7 comments:
இஸ்லாத்தில் கல்லும் செம்பும் கடவுளில்லை.
கல்லும் செம்பும் கடவுளா? PART 1
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்
ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர் பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்
அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்
நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்
உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே
மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்
எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி
சற்குருவை அறியாமல் உலகிலேதான்
சண்டாளர் கல்லுகளைத் தெய்வ மென்று
பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்
மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்
சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன் - சிவவாக்கியர்
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் – சிவவாக்கியர்
வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
கோபுரம் தேர் திருவாசல்
கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
கொத்துவேலைகளுக்குப் பார்த்தால்,
சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக் காட்டு
சாயலு மோகலீலைகளின்
சாத்திர மன்மதன் நூல்கொக்குவத்தினிற்
சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
விம்பவா சனஞ்சிங்காரித்து ரதத்தின்மீது
சாமிகள் வைத்து யதனில்
தாசிவேசிகளையேற்றி ராசதெரு வீதியில்
தட்சணம் புரியும் செயலால்
கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
கியானமோ அல்லதக் கியானமோ உங்கள்
கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்
உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்
ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்
பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
எண்ணி எண்ணி யென்னநின்றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்
CONTINUES …..
இஸ்லாத்தில் கல்லும் செம்பும் கடவுளில்லை.
கல்லும் செம்பும் கடவுளா? PART 2.
அண்டர்கோன் இருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே - சிவவாக்கியர்
கல்லிலேயுஞ் செம்பிலேயும் என் கருத்தை வைத்துப் போற்றாமல்
சொல்லிறந்த பாழ் வெளியில் தூங்குவது மெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை
கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்
கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
- திருமூலர் திருவிருத்தம்
வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி,
வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி
பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்
SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950
arumaiyAana !
padangalum-
thakavalum!
வாங்க வாஞ்சூர் ஐயா,
தங்களின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
இருப்பினும் முதலில் மற்றவர்களை எதிரியாக கருதும் என்னத்தை கைவிடுங்கள்.
நம் கருத்துக்கள் தான் வேறு வேறே தவிர நாம் எதிரிகள் அல்ல.
பரிணாமத்தின் படி பார்த்தாலும் சரி, ஆதாம் ஏவாளின் கதைப்படி பார்த்தாலும் சரி நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். அப்படி இருக்க சக மனிதனை எதிரியாக பார்ப்பது சரியானது அல்ல.
நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை மனதில் வையுங்கள்.
நீங்கள் கொடுத்த சுட்டியில் பல விடயங்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வில்லை.
அ. அக்கல்லை நபி "அல்லாவின் வலது கரம்" என்று கூறினாரா இல்லையா? ஏன்?
௨.ஹஜ் யாத்திரையில் அக்கல்லை முத்தமிட முடியாத இசுலாமியர்கள் "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே )என்று கூறுகிறார்கள் என்பது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம் என்ன?
௩.இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும் தோன்றி தன்னை பக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர். இது ஹதீஸில் இருக்கின்றது என்கிறார்களே இது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம்.?
வாஞ்சூர் ஐயா, இசுலாமிற்கு களங்கம் கர்ப்பிப்பத்து எனது நோக்கம் அல்ல...நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை என்பதை அனைவருக்கும் புரிய வைப்பதே எண் நோக்கம். சும்மா கதை சொன்னா மட்டும் போதாது சகோதரத்துடன் அன்புடன் அனைவரும் வாழ வேண்டும் எனபதே எண் நோக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சலாம் வாஞ்சூர் பாய்!
பல கேள்விகளுக்கு அழகிய முறையில் விளக்கமளித்துள்ளது இந்த பதிவு.
சலாம்....
விசமகாரர்களுக்கு நல்ல சாட்டையடி அய்யா...
// R.Puratchimani March 24, 2012 2:12 AM said...
வாங்க வாஞ்சூர் ஐயா,
தங்களின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.//
சரியான புரிதலாக இருக்கும் பட்சத்தில் புரிதலுக்கு மகிழ்வு.
//இருப்பினும் முதலில் மற்றவர்களை எதிரியாக கருதும் என்னத்தை கைவிடுங்கள்.//
அவரவர் மன நிலைக்கு தக்கவாறு அவரவர் கொள்ளும் மனநிலையை நான் தடுக்கமுடியாது.
//நம் கருத்துக்கள் தான் வேறு வேறே தவிர நாம் எதிரிகள் அல்ல. பரிணாமத்தின் படி பார்த்தாலும் சரி, ஆதாம் ஏவாளின் கதைப்படி பார்த்தாலும் சரி நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். அப்படி இருக்க சக மனிதனை எதிரியாக பார்ப்பது சரியானது அல்ல.
நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை மனதில் வையுங்கள். //
மகிழ்ச்சி.
//நீங்கள் கொடுத்த சுட்டியில் பல விடயங்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வில்லை.
அ. அக்கல்லை நபி "அல்லாவின் வலது கரம்" என்று கூறினாரா இல்லையா? ஏன் ? //
அப்படியொன்றும் கூறவில்லை.
அப்படி கூறியவர்களிடம் "அல்லாவின் இடது கரம்" எது என்று கேட்டுச்சொல்லுங்கள்.
// ௨.ஹஜ் யாத்திரையில் அக்கல்லை முத்தமிட முடியாத இசுலாமியர்கள் "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே ) என்று கூறுகிறார்கள் என்பது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம் என்ன? //
"In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே )
என்று முஸ்லீம்கள் எந்த சூழ்நிலைகளிலும் எங்கும் கூறுவது வழக்கம்.
// ௩.இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும் தோன்றி தன்னை பக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர். இது ஹதீஸில் இருக்கின்றது என்கிறார்களே இது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம்.? //
இது தவறு. இவ்வாறு கூறப்பட்டிருப்பதாக கூறுபவர்களிடமே விளக்கம் கேட்டு தெரிவியுங்கள்.
// வாஞ்சூர் ஐயா, இசுலாமிற்கு களங்கம் கர்ப்பிப்பத்து எனது நோக்கம் அல்ல.. //
உண்மையாகவா ? அப்படியே இருக்கட்டும்.
இஸ்லாத்திற்கு களங்கம் கற்பிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கி இன்றுவரை தொடர்கிறது.
இது ஒரு தூண்டுகோலாக இஸ்லாம் வளர்வதற்கும் இஸ்லாமியர்கள் புத்துணர்வுடன் இருப்பதற்கும் உதவுகிறது.
புரட்சிமணியின் “இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா? “ பதிவே
என் “முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? “
பதிவுக்கு உரமாகிவிட்டது.
புரட்சிமணிக்கு வாழ்த்துகள்.
//.நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை என்பதை அனைவருக்கும் புரிய வைப்பதே எண் நோக்கம்.//
மகிழ்ச்சி.
// சும்மா கதை சொன்னா மட்டும் போதாது //
சும்மா கதை சொல்ல முயற்ச்சிக்க வேண்டாம்.
சகோதரத்துடன் அன்புடன் அனைவரும் வாழ வேண்டும் எனபதே எண் நோக்கம்.
மகிழ்ச்சி.
//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி //
“இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா? “ பதிவின் மூலம் தவறானதை R.Puratchimani பதிப்பித்து எனது “முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? “
பதிவின் வாயிலாக உண்மைகள் மூலம் திரிப்புகளை உடைத்தெறிய வாய்ப்புக்கு வழிவகுத்துத்தற்கு மகிழ்ச்சியே.
.
Post a Comment