**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்?

>> Sunday, February 12, 2012


முஸ்லீகளின் வாழ்வு உரிமை போராட்டம். அடித்தாலும் அழக்கூடாத சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்கள்.

இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்




முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. VIDEO

அப்பட்டமான உண்மைகள்.



video

'PIRAPPURIMAI'
ஆளூர் ஷாநவாஸ் இயக்கிய 'பிறப்புரிமை'

கண்ணீரில் முஸ்லீம் சமூகம்:
“விடியுமா? தெரியல வேதனை தீரல‌”

இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கி காத்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த‌

இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் .

நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.




தயவு செய்து இந்த‌"கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

8 comments:

suvanappiriyan February 12, 2012 at 10:18 PM  

Exellent article vanjore Bro.

Seeni February 12, 2012 at 11:27 PM  

kavithai !
sinthikka vaikkum
vithamaaka ullathu!

NKS.ஹாஜா மைதீன் February 13, 2012 at 1:29 PM  

அஸ்ஸலாமுஅலைக்கும் அய்யா...

அருமை....

UNMAIKAL February 13, 2012 at 2:41 PM  

பிரதமருக்கு தந்தி அல்லது ஃபேகஸ் அனுப்புங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நாம் ஒவ்வொருவரும் பிரதமருக்கு மெயில் அனுப்ப வேண்டுமென்று அன்புடன் வேண்டுகின்றோம்.

பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப கீழ்க்கண்ட லிங்கை உபயோகப்படுத்தவும்.

http://pmindia.nic.in/feedback.php

இதில் கீழ்க்கண்ட 500 எழுத்துக்களுக்கு குறைவான செய்தியை காப்பி & பேஸ்ட் செய்து, Subject இல் Social Justice ஐ தேர்வு செய்து, தங்களது மேலதிக தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்பினால், பிரதமர் அலுவலகத்திற்கு நமது கடிதம் சென்று சேரும். (மாதிரி கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.)

• Tamil Nadu Thowheedh Jamaath (TNTJ) planned out to stage huge protests at all the district head quarters and important towns in Tamil Nadu on 14th of February, 2012, urging the central government to provide 10 per cent quota for Muslims in employment and educational opportunities as recommended by Justice Sachar and Justice Misra. We appeal to you to use your good office to provide the exclusive reservations to the Muslims.

மெயில் அனுப்ப இயலாதவர்களிடம் Fax அனுப்ப சொல்லவும்.

சமுதாய சிந்தனையுடன்

Rafik February 13, 2012 at 9:20 PM  

Assalamu alaicum.

Thanks for your post Mr. Vanjoor! Wonderful.

கச்சி சிக்கந்தர், கடையநல்லூர் February 14, 2012 at 3:35 AM  

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹுவின் நல்லருள் உலக முஸ்லிம்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ...சமுதாய சிந்தனையுடன் இருக்கும் பெரியவர் வாஞ்சூர் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள்புரிவான் [ பிரிந்து பிரிந்து கொண்டு போகும் என் அருமை இஸ்லாமிய சொந்தங்களே நம் அவலத்தை நம் சந்ததியினர்களும் அனுபவிக்கனுமா ஒன்றுபட மாட்டிர்களா ] வல்லவன் அல்லாஹுவிடம் கையேந்துவோம் வருங்கால நம் சமுதாயத்தை வாழ வைப்போம் ....வல்லவன் அல்லாஹுவிடம் து ஆ செய்தவனாக ...கச்சி சிக்கந்தர், கடையநல்லூர்

சிராஜ் February 14, 2012 at 8:16 PM  

சலாம் அன்பின் வாஞ்சூர் அப்பா,

நமது முயற்ச்சிகளை செய்து கொண்டே இருப்போம். இறைவன் நாடும் பொழுது நிச்சயம் அதை அடைந்தே தீருவோம். உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நல்ல உடல் சுகத்தையும் தரவேண்டும் என்று துவா செய்கிறேன்.

அஸ்மா February 15, 2012 at 4:08 AM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நல்லவிதமாக நடந்துமுடிந்த இன்றைய போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் மனதில் நியாயமான மாற்ற‌த்தை இறைவன் ஏற்படுத்தி வெற்றியையும் நற்பலன்களையும் விரைவில் தருவானாக!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP