அ சீ ர ண மா? INDIGESTION ? தவிர்ப்பது எப்படி?
>> Wednesday, March 25, 2009
நெஞ்சு எரிச்சல் என்பதும் முக்கியமான காரணம்.
சீரண மண்டலத்தில் முதல் முக்கியப் பகுதி வாய்தான். நம் முடைய மூக்கும் கண்களும் மூளைக்கு உணவைப்பற்றி செய் தியை அனுப்புகின்றன. அதே நேரத்தில் வாயில் - உமிழ்நீரும் வயிற்றில் அமில நீரும் செரிப்பதற்குத் தேவையான மற்ற என்ஸைம்களும் சுரக்கத் தொடங்குகின்றன.
இவற்றில் வாயில் உமிழ்நீர் சுரப்பதுதான் முதல் வேலை. உணவு செரிப்பதன் முதன் கட்டம் அங்கேயே தொடங்கிவிடுகிறது.
வாய்க்குள் போகும் உணவுப் பொருட்கள், தாடையாலும், பற் களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன. வாயில் அரைக்கப்படும். உணவுடன் உமிழ்நீரில் இருக்கும் அமைலேஸ் என்ற என்ஸைம் கலக்கிறது. தேவையான அளவுக்கு உணவு அரைக்கப் பட்டவுடன், அது தொண்டைப் பகுதிக்குள் தள்ளப்படுகிறது.
அப்போது மூச்சுக்குழாயை ஏபிகிளாடிஸ் என்ற வால்வு மூடிக் கொள்ள, தொண்டையில் இருந்து உணவுக் குழாய் வழியாக பாதி அரைக்கப்பட்ட உணவு இரைப்பைக்குள் செல்கிறது.
இரப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்து வாயிலிருந்து வரும் உணவை மேலும் செரிக்க உதவுகிறது.
வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் உணவுப் பொருட்கள் செல்லும் பணி இயற்கையாக நடைபெறுவதால் நமக்கு அது தெரிவதில்லை.
வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்) அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவாவது அமிலம் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்). இந்த அமிலமும் காரமும் உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில் சேருகின்றன.
உணவுக் குழாயின் தசைகள் இறுகித் தளர்ந்து வேலை செய்பவை. இந்தத் தசைகளில் ஏற்படும் தசை அசைவு பிரச்சினைகளால் நிறைய கோளாறுகள் ஏற்படுகின்றன
.
நெஞ்சு எரிச்சல் என்பதும் முக்கியமான காரணம்.
ஒரு வழிப்பாதையாகக் கடமை ஆற்றவேண்டிய உணவுக் குழாயின் வால்வு கடமையைத் தவறி அமிலத்தை மேலே செல்ல அனுமதிப்பதுதான்.
மேலே வரும் அமிலம் நெஞ்சு எரிச்சலை ஏற் படுத்துகிறது. இது தொடரத் தொடர, உணவுக் குழாயின் உள் பக்கச் சுவரில் புண்கள் ஏற்படுகின்றன.
சாப்பிட்டவுடன் சிறிது நேரத்திற்குக் குனிந்து நிமிர்ந்து எந்த வேலையையும் செய்யக்கூடாது.
குனிந்து வேலை செய்யும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகமாகி உணவைச் செரிப்பதற்காக உருவான அமிலம், மேலே வந்து நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
உணவு செரிமானத்தில் அடுத்ததாகப் பங்கேற்பது உணவுக் குழாய், வயிற்றுக்கு உணவு மற்றும் உமிழ்நீரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இதன் அடிப்படைப் பணி. உணவுக்குழாய் என்பது ஒரு மண்புழுவைப் போல் நெகிழும் தன்மை கொண்டது. இது உணவை கொஞ்சம் கொஞ்சமாக இரைப்பைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கிறது.
இரைப்பையின் உள்புறச் செல்கள், அமிலத்தின் அரிப்புத் தன்மையைத் தாங்கும் ஒருவித விசேஷ செல்களால் ஆனவை. ஆனால், உணவுக் குழாய் செல்களுக்கு அத்தகைய சிறப்புத் தன்மை கிடையாது.
அமிலத்தால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும் உணவுக் குழாய், இரப்பைச் சுவர் செல்களைப் போல் தன்னுடைய செல்களையும் மாற்றிக் கொள்ள முயற்சிக்கும். உணவுக் குழாயின் இந்த சுயமுயற்சி தான் சிலருக்கு புற்று நோயாக மாறுகிறது.
அமிலம் மேலே வரும் பிரச்சினையைத் தவிர்ப்பது எப்படி?
1. சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
2. இறுக்கமான உடை அணிந்திருந்தால், சாப்பிட்டவுடன் சிறிது தளர்த்திக் கொள்ளவும். இதனால் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் குறையும்.
3. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலையோ செய்யாதீர்கள்.
4. சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. அதிகமான தண்ணீர் அமிலத்தை மேலே கொண்டுவந்து விடும்.
5. நெஞ்சு எரிச்சலைப் போக்க, ஆன்டாஸிட் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
6. சிலர் சோடா குடிப்பார்கள். சோடாவில் இருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு வாயு ஏப்பமாக வெளியே வரும். அதனால், சோடா குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
7. படுத்துக்கொண்டு கழுத்துப் பகுதிக்குக் கீழே தலையணையைக் கொஞ்சம் உயரமாக வைத்துக் கொண்டால், இப் பிரச்சினையில் இருந்து தற்காலிகமாகக் தப்பிக்கலாம்.
1 comments:
but if u loosen ur pants immediately after eating, intestines will get twisted and cause problems...isn't it?
Post a Comment