**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?) 2 அதிர்ச்சி விடியோக்கள்.

>> Wednesday, March 18, 2009


"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

முன் குறிப்பு:
"காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி' ஆனாரு. சரின்னு அதையும் ஒத்துக்கிட்டோம்.

ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பேரு ராஜீவ் 'காந்தி'; சஞ்சய் 'காந்தி'. அதையும் ஒத்துக்கிட்டோம். இத்தாலிக்கார சோனியா ... எப்படிய்யா 'காந்தி' ஆனா(ரு)? சொல்லு..."

நீண்டகாலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், ஒருகாலத்தில் திமுக-பாஜக கூட்டணியின்போது காங்கிரசைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய மேற்காணும் கேள்விகள்தாம் நினைவுக்கு வருகின்றன -

"சீக்கிய மேனகா ... எப்படி காந்தி ஆனாரு? சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு? சொல்லு ..." என்ற நீட்சியுடன்.
எனவே, சஞ்சய்-மேனகாவுக்குப் பிறந்த வருணோடு, 'காந்தி' என்ற பெயரைச் சேர்த்து காந்திஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால் வருணை இங்கு வெறும் 'வருண்' என்றே குறிப்பிடுவோம்.
-0-
ஜனநாயகக் கேலிக்கூத்தின் உச்சபட்ச கோமாளித்தனமான மற்றொரு தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் வாதிகள் அனைவரும் இன்னொருமுறை மக்கள் முன்னிலையில் கோமாளி வித்தைக் காட்ட தயாராகி விட்டனர்.

மக்களின் அடிப்படை வாழ்வு, பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களையும் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தாங்கள் என்னென்ன செய்யப்போகிறோம் என்றும் என்னென்ன செய்துள்ளோம் என்பதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர்வதே உண்மையான ஜனநாயத்தின் அடையாளங்களாகும்.

ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஏட்டளவில் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் இதற்கு நேர் முரணான காட்சிகளே எப்போதும் அரங்கேறுகின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதிலும் பிரிவினைவாதத்தையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.

மக்களிடையே வெறுப்பையும் காவிச் சிந்தனையையும் விதைத்து, நாட்டில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் "இந்துக்கள்" என்ற மாய்மாலத்தில் ஒருங்கிணைக்க தொடர் முயற்சி செய்து வருகிறது பாஜக. அதற்கான ஆரம்ப ஆயுதமாக அது கையில் எடுத்துக் கொண்டதுதான் பாபர் மசூதி!

அரசியலில் அன்றிலிருந்து ஆரம்பித்த காவி வக்கிரச் சிந்தனைகள், இன்று வேர் விட்டு விருட்சமாகப் பரவி நிற்கிறது.

நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரைக் கொன்றொழிப்பதையும் அதற்காக அறைகூவல் விடுவதையும் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்தட்டிலிருந்து மேலெழும்ப விடாமல் அழித்தொழிப்பதையும் மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு கட்சி வெளிப்படையாக இயங்க முடியுமா?



இந்தியாவில் மட்டும் அது முடியும்! ஒன்றல்ல, ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ விருட்சத்தின் விழுதுகளாகவும் எச்சங்களாகவும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து விரிந்த உபவிஷங்களாக!

ஆர்.எஸ்.எஸ்ஸின் கூடாரத்தில் ஐக்கியமாகி விட்டால் அடுத்த விநாடியே 'அகோரி'ப் பித்துத் தலைக்கு ஏறிவிடும் என்பது அதன் அரசியல் பிரிவான பிஜேபி மூலம் இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் போட்டியிடும் வருண், கடந்த 6.3.2009இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,


"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்".

"ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்"
என்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார்.

யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்!

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" என்றால்,

முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால், "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என 2.5% பார்ப்பனர்களைத் தவிர அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும்.

பாகிஸ்தான் தாங்குமா? பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா?" என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

"தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்" என்றும் "இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" எனவும் இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே?. இது சட்ட விரோதம் இல்லையா?. இவர் மீது சட்டம் பாயாதா? என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான். அப்படியே தேர்தல் கமிஷனோ, உணர்வில்லாத ஏதோ ஒரு கமிஷனோ, பத்து நாட்கள் கழித்து, கேட்க வேண்டுமே என்பதற்கு ஈனஸ்வரத்தில் முனகினால், "நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்" என்ற காவி சாணக்கியத்தனம்.

அத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தல்லவா ஆர்.எஸ்.எஸ் அகோரிகளைத் தயாராக்குகின்றது!

அதுதான் நடந்திருக்கிறது. வருணின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்குப் பாதுகாப்பு அளித்து அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல்துறை, பத்து நாட்களுக்குப் பிறகு வருணுக்கு எதிராகக் குற்றவியல் பிரிவு 153ஏயின்படி (by words, either spoken or written or by signs or by visible representations or otherwise promotes or attempts to promote on ground of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever disharmony or feelings of enmity, hatred or illwill between different religious, racial, language or regional groups or castes or communities shall be punished with imprisonment) முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.

"இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவும் மதவிரோதத்தை விதைத்து வன்முறையைத் தூண்டி விடுவதாகவும்" வருணுக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத குற்றவியல் சட்டப்படியும் மக்கள் பிரதிநிதுத்துவப் பிரிவுச் சட்டப்படியும் ஒரு வழக்கை நேற்றுத் தேர்தல் கமிஷன் தொடுத்திருப்பதாக PTI செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

ஆனால், "நாளைக்கு நான் தெளிவாக்கி விடுவேன். ஒன்றும் ஆகாது, கவலையில்லை" என்று வருண் பேட்டி கொடுக்கிறார்.

மேலும், "வருண் பேசியதில் தவறொன்றுமில்லை" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் தருண் விஜய் விளக்கம் சொல்லி விட்டார்.

"வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்" என்று தாய் மேனகா பெருமை பேசுகிறார்.

நியாயந்தான்! அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்திய பழம்புயல் சஞ்சயின் மகனல்லவா வருண்?

நம் நாட்டில் பேசுவதற்கு ஒரு மேடையும் கேட்பதற்கு சிலநூறு தலையாட்டிக் கூட்டமும் ஒரு மைக்கும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறைச் சித்தாந்தத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.

"நம்நாடு ஒரு ஜனநாயக நாடு; நமது அரசு ஜனநாயக அரசு" எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தம் இல்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கும் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியதும் ஜனநாயக அரசின் தலையாய கடமைகளாகும்.

வெறும் கண்துடைப்பு விளக்க நோட்டீஸ்களும் கமிஷன்களும் அமைப்பதை விடுத்து, வன்முறை வித்துகளை விதைக்கும் பேச்சுகளைப் பேசுவோர் எவராக இருப்பினும் உடனே கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். "வருணுக்குத் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை" என்ற குறைந்தபட்ச அறிவிப்பையாவது தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் இதேமாதிரிப் பேச்சுகள் நீளுவதைத் தடுக்க முடியாது - எதிர்ப் பேச்சையும்தான்!

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1187&Itemid=5

5 comments:

மாசிலா March 18, 2009 at 2:10 PM  

தங்கள் சுய இலாபத்திற்கு, பதவி ஆட்சி அதிகார மோகத்தால் அமைதியாக வாழும் மக்கள் இடையே மதவெறியை கொலைவெறியை தூண்டிவிட்டு ஓட்டுப்பொறுக்கி அரசியல் நடத்தும் இதுபோன்ற கேணைகளை கட்டாயம் சிறையில் அடைக்கவேண்டும்.

Anonymous March 19, 2009 at 2:12 AM  

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பையன் !

Anonymous March 24, 2009 at 1:16 AM  

idhu ponra porukiyal dhan india vin maname pokirathu,,

உதயம் March 26, 2009 at 12:06 AM  

நாய் பேய்களின் உரிமைக்காக சட்டம் பேசும் மேனகா காந்தி , மனித உயிர்களை பறிக்கும் எண்ணம் கொண்ட தனது புத்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்ககாதது கொடுமையிலும் கொடுமை .

Anonymous April 23, 2012 at 4:30 PM  

MUSLIMGALIN THALAIYAI VETTUVEN YENDRA FEROS MAGAN VARUN MUDINDHAAL ORU MUSLIMIN THALAIYAI VETTATTUM. AVAN MENAGAAVUKKU PULLAYAA IRUKKA MAATTAAN. INDIA IVANODA APPAN VEETTU SOTTHA. NAYE.

A.SULAIMAN SAIT.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP