**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

களங்கப் படலாமா நீதியின் கரங்கள்?

>> Tuesday, October 6, 2009

ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களை காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவை பாதுகாக்கின்றன. நாட்டு மக்களிடையே நீதி, நியாயத்தை நீதித்துறை நிர்வகிக்கிறது.
மேலும் படிக்க...Read more...

மேலும் படிக்க... Read more...

ஜனநாயகத் தூண்களே ...!

>> Monday, October 5, 2009

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஒவ்வொரு துறையும் நமது நாட்டில் தத்தமது கடமைகளைச் சரிவர செய்திருக்குமேயானால் அமெரிக்காவின் எடுபிடியைப் போல் நமது நாடு மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால், நமது நாட்டின் ஜனநாயகத் தூண்களான நான்கு துறைகளும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம்; அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லலாம்……………….

மேலும் படிக்க‌ க்ளிக் செய்யவும்

------> ஜனநாயகத் தூண்களே ...! <--------

மேலும் படிக்க... Read more...

மினரல் வாட்டர் குடித்தால் எலும்பு நோய் வரும்? அதிர்ச்சி ரிப்போர்ட்.

>> Saturday, April 4, 2009

மினரல் வாட்டர் குடித்தால் எலும்பு நோய் வரும்? பாக்கெட் தண்ணியும்,பாட்டல் தண்ணியும் பாதுகாப்பானதா? அவ்ளோ ரூபாய் கொடுக்கிறப்போ அதெப்படி பாதுகாப்பில்லாததாக இருக்கமுடியும் என நீங்கள் கேட்கலாம்.







படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும
























THANKS TO KUNGKUMAM MAGAZINE .
தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் அதிக ஓட்டு போட்டு இப்பதிவை பல வாசகர்களுக்குக் கொண்டு செல்லுங்கள்.
***************************************
READ.
சீதனம், வரதட்சணை, டவுரி என்ற கைகூலி..
--------------------------------------------------------------------------
முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே? உங்கள் சட்டம் பெண்ணுரிமைக்கு எதிராக இருக்கிறதே? இஸ்லாத்தில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?
--------------------------------------------------------------------------
தனி சிவில் சட்டம் வேண்டும் எனும் முஸ்லிம்கள், இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏன் ஏற்பதில்லை? முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)? அகில இந்தியாவுக்கும் ஒரு பொது சட்டம் தானே..?
-----------------------------------------------------------------
------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------
வள‌ரும்.. மீண்டும் வாருங்க‌ள்.

மேலும் படிக்க... Read more...

உடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..

>> Thursday, March 26, 2009

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் அவ்வப்போது ரெப்ரெஷ் செய்து டேட்டாவை அப்டேட் செய்கிறோம்.

அதே போல உங்கள் உடலையும் மனதையும் ரெப்ரெஷ் செய்தீர்களா?

இதென்ன புதுசா இருக்கு? இங்கு ரெப்ரெஷ் செய்திட எந்த மெனுவிற்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

கம்ப்யூட்டருடன் முறையாகச் செயல்படுகிறீர்களா? என்ன கேள்வி இது என்று எண்ணுகிறீர்களா?

ஆம் நாள் ஒன்றின் பல மணி நேரத்தை கம்ப்யூட்டருடன் தானே கழிக்கின்றீர்கள். வீட்டில் அலுவலகத்தில், கல்வி நிலையங்களில் என எங்கு சென்றாலும் கம்ப்யூட்டரை நம்பித்தான் பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

காரில், ஸ்கூட்டரில் தினந்தோறும் செல்கையில் அதில் எப்படி அமர வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து பலரின் அறிவுரை கேட்டு நடக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கையில் நம் உடல்நிலையைக் கவனிப்பதே இல்லை.

இது தொடரும் நாட்களில் நிச்சயம் நமக்கு தீராத உடல் பிரச்னையைக் கொண்டு வந்து சேர்க்கும். எனவே அடிப்படையில் என்னவெல்லாம் நாம் கவனமாகக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

நிச்சயம் இதனை உணர்ந்திருப்பீர்கள். கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் உடலின் பின் பகுதியில் வலி இருக்கும். இது பஸ்ஸில் வந்ததனால், ஸ்கூட்டரில் சரியாக அமர்ந்து வராததால் என்று ஏதேனும் ஒரு காரணத்தை நமக்கு நாமே சொல்லி சமாதானப்படுத்திக் கொள்வோம். கண்கள் கொள்ளும் பார்வை சற்று வெளிறத் தொடங்கும்.

வயதாயிற்று அதனால் என்று எண்ணுவோமோ ஒழிய கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்ப்பதால் என்று எண்ண மாட்டோம்.

சரி, கம்ப்யூட்டரில் பணியாற்றுவதால் தான் இந்த வலிகள், பார்வைக் கோளாறு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

இதோ மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காணலாம்.

1.முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் கம்ப்யூட்டர் அதன் டேபிளில் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.

முதலில் உங்கள் நாற்காலி. உங்கள் பாதம் இரண்டும் தரையில் தட்டையாகப் பட்டு அமர வேண்டும். உங்கள் முழங்கால்கள் இரண்டும் 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு நாற்காலியை அட்ஜஸ்ட் செய்து அமர வேன்டும்.

இந்த நிலையில் உங்கள் தொடைகள் இரண்டும் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இல்லையேல் மாற்றி இணையாக இருக்கும்படி நாற்காலையைச் சரி செய்து அமர வேண்டும். உங்களுடைய இடுப்பும் 90 டிகிரி கோணத்தில் மடங்கி நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

2. அடுத்ததாக உங்கள் மவுஸும் கீ போர்டும் எப்படி செட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பார்ப்போம். இவை இரண்டும் உங்கள் முழங்கைகள் இருக்கும் நிலைக்கு நேராக அமைந்திருக்க வேண்டும். சிறிது கீழாகக் கூட இருக்கலாம்.

இதனால் உங்கள் தோள்கள் சற்று தளர்வாக இருக்க முடியும். அடுத்ததாக மானிட்டர். மானிட்டரில் உள்ள வரிகள் உங்கள் கண்களின் நேர் பார்வைக்குச் சற்றுக் கீழாக அமையும்படி வைக்க வேண்டும். எப்போதும் மானிட்டரை நேர் கோணத்தில் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.

மானிட்டரில் இருந்து குறைந்தது 16 அங்குல தூரத்தில் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் தலை நேராக இருக்க வேண்டும். சற்று குனிந்தவாறாகவோ அல்லது நிமிர்ந்த வாறாகவோ இருந்தால் கண் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி தொடங்கும்.

3. மேலே சொன்னபடி அனைத்தையும் செட் செய்துவிட்டீர்கள். இனி எப்படி பணியாற்றலாம் என்று பார்ப்போம். முதலில் மேலே குறிப்பிட்டுள்ளபடி அமர்ந்திடுங்கள். அந்த நிலையிலேயே உங்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாறாக ஒரு நிலையை எடுத்தால் நிச்சயம் அது எதிர்காலத்தில் பிரச்சினையைத் தரும். கம்ப்யூட்டரில் டைப் செய்கையில் மிக மிகக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதை உறுதி செய்திடுங்கள்.

கீ போர்டினை பெரிய அளவில் முயற்சி எடுத்து இயக்குவதாக இருக்கக் கூடாது. மிகவும் எளிதாகவும் மெலியதாகவும் கீ களை இயக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கரங்களில் ஏற்படும் வலிகள் முழுமையும் போக்கலாம்.

4. கம்ப்யூட்டரில் தொடந்து செயல்படுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்களா? கீ போர்டிலிருந்து எழாமல் வேலை பார்த்தேன் என்று மார் தட்டிக் கொள்கிறீர்களா?

இங்கு தான் தவறு செய்கிறீர்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்திவைத்து சற்று பிரேக் கொடுக்க வேண்டும்.

எழுந்து வெளியே வந்து நடக்கலாம்; கரங்களை எளிதாகச் சுழற்றிப் பார்க்கலாம். முக்கியமாக உங்கள் விரல்கள் அமைந்திருக்கும் பகுதியில் சிறிய அளவில் மசாஜ் கொடுத்துப் பார்க்கலாம். 30 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக் கூடாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே எழுந்து வந்து கைகள் மற்றும் கால்களை மடக்கி நீட்டிப் பார்க்கவும். கரங்களை நீட்டுகையில் மூச்சுக் காற்றினை ஆழமாக உள்ளிழுத்து விடவும். அலுவலகத்தில் கிடைக்கும் இடத்தில் ஒரு சுற்று நடந்து வந்து பின் பணியைத் தொடரலாம்.

இது நம் உடம்பிற்கும் சற்று உற்சாகத்தைத் தரும்.

அடுத்ததாகக் கவனம் செலுத்த வேண்டியது கம்ப்யூட்டரைச் சுற்றி அமைந்திருக்கும் வெளிச்சம். மிகவும் பிரகாசமான வெளிச்சம் உங்களைச் சுற்றி இருப்பதனைத் தவிர்க்கவும்.

ஏனென்றால் அது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

ஆனால் நீங்கள் படிப்பதற்குத் தேவையான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

படிப்பதற்குச் சிரமப்படும் வகையில் வெளிச்சம் இருந்தால் அது கண்களுக்குப் பிரச்சினை அளிப்பதுடன் கம்ப்யூட்டர் பணியையும் பாதிக்கும்.

கம்ப்யூட்டரில் மட்டும் தானே வேலை பார்க்கிறோம். எந்த குறிப்பையும் படித்து அதனைப் பயன்படுத்தவில்லையே என்று எண்ணும் சிலர் மானிட்டர் வெளிச்சம் போதும் என்று முடிவு செய்து இருட்டில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வார்கள்.

இது முழுக்க முழுக்க தவறு. இருட்டில் நிச்சயம் மானிட்டரின் ஒளி பிரகாசமாக இருக்கும். அதை மட்டுமே கண்கள் பார்த்து பணி செய்வது கூடாது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் கீ போர்டில் மட்டுமே பணியாற்றும் வகையில் உங்கள் வேலை இருக்கிறதா?

அப்படியானால் உங்கள் விரல்களுக்கு நீங்கள் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பணி புரிபவர்களுக்கு விரல்கள் அவ்வப்போது உணர்வற்று போவதை உணர்ந்திருப்பார்கள்.

இதற்கு அடிக்கடி சிறிய உடல் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

விரல்களை எவ்வளவு நீளம் நீட்ட முடியுமோ அந்த அளவிற்கு நீட்டி அப்படியே பத்து விநாடிகள் வைத்திருக்க வேண்டும்.

பின் விரல்களை மூடி மீண்டும் முன்பு போல நீட்ட வேண்டும். இதே போல உங்கள் தலையை இரண்டு பக்கமும் எவ்வளவு கோணத்தில் திருப்ப முடியுமோ அந்த அளவிற்கு திருப்பி 10 விநாடிகள் வைத்திருந்து பின் மீண்டும் நேராகக் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

தோள்களில் வலி தொடங்குவதாகத் தெரிந்தால் அதனை ஒரு சுழற்சிக்குக் கொண்டுவரும் வகையில் எதிர் எதிர் திசைகளில் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது செய்திட வேண்டும்.

இறுதியாக பின் இடுப்பு. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது எழுந்து கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்து இடுப்பை முன்புறமாகவும் தோள்களை பின்புறமாகவும் கொண்டு செல்வது போல பயிற்சி செய்திட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு முறை நீட்டுகையில் அதே நிலையில் பத்து விநாடிகள் வைத்திருந்து பின் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதனால் இடுப்பு மட்டுமின்றி முழு உடம்பிற்கும் உற்சாகம் கிடைக்கும்.

வழக்கமான கம்ப்யூட்டர் டிப்ஸ்களுக்கு இடையில் இது என்ன உடற்பயிற்சி டிப்ஸ் என்று யோசிக்கிறீர்களா? உடல் வலி வருகையில் அது கம்ப்யூட்டர் பணியினால் அல்ல என்று எண்ணுபவர்களே ஏராளம்.

ஆனால் அது தான் அடிப்படைக் காரணம் என்று வலி அதிகமான பின்னர் தான் நாம் உணர்கிறோம். எனவே தான் பன்னாட்டு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களில் பணி புரிபவர்களுக்கு இது போல உடலையும் மனதையும் அவ்வப்போது உற்சாகப்படுத்த இடமும் வசதிகளும் நேரமும் தருகின்றனர்.

ஏனென்றால் சுவரை வைத்துத்தானே சித்திரம் வரைய முடியும்.

computermalar 03-10-09

மேலும் படிக்க... Read more...

அ சீ ர ண மா? INDIGESTION ? தவிர்ப்பது எப்படி?

>> Wednesday, March 25, 2009

நெஞ்சு எரிச்சல் என்பதும் முக்கியமான காரணம்.

சீரண மண்டலத்தில் முதல் முக்கியப் பகுதி வாய்தான். நம் முடைய மூக்கும் கண்களும் மூளைக்கு உணவைப்பற்றி செய் தியை அனுப்புகின்றன. அதே நேரத்தில் வாயில் - உமிழ்நீரும் வயிற்றில் அமில நீரும் செரிப்பதற்குத் தேவையான மற்ற என்ஸைம்களும் சுரக்கத் தொடங்குகின்றன.

இவற்றில் வாயில் உமிழ்நீர் சுரப்பதுதான் முதல் வேலை. உணவு செரிப்பதன் முதன் கட்டம் அங்கேயே தொடங்கிவிடுகிறது.

வாய்க்குள் போகும் உணவுப் பொருட்கள், தாடையாலும், பற் களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன. வாயில் அரைக்கப்படும். உணவுடன் உமிழ்நீரில் இருக்கும் அமைலேஸ் என்ற என்ஸைம் கலக்கிறது. தேவையான அளவுக்கு உணவு அரைக்கப் பட்டவுடன், அது தொண்டைப் பகுதிக்குள் தள்ளப்படுகிறது.

அப்போது மூச்சுக்குழாயை ஏபிகிளாடிஸ் என்ற வால்வு மூடிக் கொள்ள, தொண்டையில் இருந்து உணவுக் குழாய் வழியாக பாதி அரைக்கப்பட்ட உணவு இரைப்பைக்குள் செல்கிறது.

இரப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்து வாயிலிருந்து வரும் உணவை மேலும் செரிக்க உதவுகிறது.

வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் உணவுப் பொருட்கள் செல்லும் பணி இயற்கையாக நடைபெறுவதால் நமக்கு அது தெரிவதில்லை.

வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்) அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவாவது அமிலம் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்). இந்த அமிலமும் காரமும் உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில் சேருகின்றன.

உணவுக் குழாயின் தசைகள் இறுகித் தளர்ந்து வேலை செய்பவை. இந்தத் தசைகளில் ஏற்படும் தசை அசைவு பிரச்சினைகளால் நிறைய கோளாறுகள் ஏற்படுகின்றன
.
நெஞ்சு எரிச்சல் என்பதும் முக்கியமான காரணம்.

ஒரு வழிப்பாதையாகக் கடமை ஆற்றவேண்டிய உணவுக் குழாயின் வால்வு கடமையைத் தவறி அமிலத்தை மேலே செல்ல அனுமதிப்பதுதான்.

மேலே வரும் அமிலம் நெஞ்சு எரிச்சலை ஏற் படுத்துகிறது. இது தொடரத் தொடர, உணவுக் குழாயின் உள் பக்கச் சுவரில் புண்கள் ஏற்படுகின்றன.

சாப்பிட்டவுடன் சிறிது நேரத்திற்குக் குனிந்து நிமிர்ந்து எந்த வேலையையும் செய்யக்கூடாது.

குனிந்து வேலை செய்யும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகமாகி உணவைச் செரிப்பதற்காக உருவான அமிலம், மேலே வந்து நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

உணவு செரிமானத்தில் அடுத்ததாகப் பங்கேற்பது உணவுக் குழாய், வயிற்றுக்கு உணவு மற்றும் உமிழ்நீரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இதன் அடிப்படைப் பணி. உணவுக்குழாய் என்பது ஒரு மண்புழுவைப் போல் நெகிழும் தன்மை கொண்டது. இது உணவை கொஞ்சம் கொஞ்சமாக இரைப்பைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கிறது.

இரைப்பையின் உள்புறச் செல்கள், அமிலத்தின் அரிப்புத் தன்மையைத் தாங்கும் ஒருவித விசேஷ செல்களால் ஆனவை. ஆனால், உணவுக் குழாய் செல்களுக்கு அத்தகைய சிறப்புத் தன்மை கிடையாது.

அமிலத்தால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும் உணவுக் குழாய், இரப்பைச் சுவர் செல்களைப் போல் தன்னுடைய செல்களையும் மாற்றிக் கொள்ள முயற்சிக்கும். உணவுக் குழாயின் இந்த சுயமுயற்சி தான் சிலருக்கு புற்று நோயாக மாறுகிறது.

அமிலம் மேலே வரும் பிரச்சினையைத் தவிர்ப்பது எப்படி?

1. சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.

2. இறுக்கமான உடை அணிந்திருந்தால், சாப்பிட்டவுடன் சிறிது தளர்த்திக் கொள்ளவும். இதனால் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் குறையும்.

3. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலையோ செய்யாதீர்கள்.

4. சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. அதிகமான தண்ணீர் அமிலத்தை மேலே கொண்டுவந்து விடும்.

5. நெஞ்சு எரிச்சலைப் போக்க, ஆன்டாஸிட் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

6. சிலர் சோடா குடிப்பார்கள். சோடாவில் இருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு வாயு ஏப்பமாக வெளியே வரும். அதனால், சோடா குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

7. படுத்துக்கொண்டு கழுத்துப் பகுதிக்குக் கீழே தலையணையைக் கொஞ்சம் உயரமாக வைத்துக் கொண்டால், இப் பிரச்சினையில் இருந்து தற்காலிகமாகக் தப்பிக்கலாம்.

மேலும் படிக்க... Read more...

காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?) 2 அதிர்ச்சி விடியோக்கள்.

>> Wednesday, March 18, 2009


"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

முன் குறிப்பு:
"காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி' ஆனாரு. சரின்னு அதையும் ஒத்துக்கிட்டோம்.

ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பேரு ராஜீவ் 'காந்தி'; சஞ்சய் 'காந்தி'. அதையும் ஒத்துக்கிட்டோம். இத்தாலிக்கார சோனியா ... எப்படிய்யா 'காந்தி' ஆனா(ரு)? சொல்லு..."

நீண்டகாலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், ஒருகாலத்தில் திமுக-பாஜக கூட்டணியின்போது காங்கிரசைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய மேற்காணும் கேள்விகள்தாம் நினைவுக்கு வருகின்றன -

"சீக்கிய மேனகா ... எப்படி காந்தி ஆனாரு? சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு? சொல்லு ..." என்ற நீட்சியுடன்.
எனவே, சஞ்சய்-மேனகாவுக்குப் பிறந்த வருணோடு, 'காந்தி' என்ற பெயரைச் சேர்த்து காந்திஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால் வருணை இங்கு வெறும் 'வருண்' என்றே குறிப்பிடுவோம்.
-0-
ஜனநாயகக் கேலிக்கூத்தின் உச்சபட்ச கோமாளித்தனமான மற்றொரு தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் வாதிகள் அனைவரும் இன்னொருமுறை மக்கள் முன்னிலையில் கோமாளி வித்தைக் காட்ட தயாராகி விட்டனர்.

மக்களின் அடிப்படை வாழ்வு, பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களையும் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தாங்கள் என்னென்ன செய்யப்போகிறோம் என்றும் என்னென்ன செய்துள்ளோம் என்பதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர்வதே உண்மையான ஜனநாயத்தின் அடையாளங்களாகும்.

ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஏட்டளவில் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் இதற்கு நேர் முரணான காட்சிகளே எப்போதும் அரங்கேறுகின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதிலும் பிரிவினைவாதத்தையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.

மக்களிடையே வெறுப்பையும் காவிச் சிந்தனையையும் விதைத்து, நாட்டில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் "இந்துக்கள்" என்ற மாய்மாலத்தில் ஒருங்கிணைக்க தொடர் முயற்சி செய்து வருகிறது பாஜக. அதற்கான ஆரம்ப ஆயுதமாக அது கையில் எடுத்துக் கொண்டதுதான் பாபர் மசூதி!

அரசியலில் அன்றிலிருந்து ஆரம்பித்த காவி வக்கிரச் சிந்தனைகள், இன்று வேர் விட்டு விருட்சமாகப் பரவி நிற்கிறது.

நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரைக் கொன்றொழிப்பதையும் அதற்காக அறைகூவல் விடுவதையும் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்தட்டிலிருந்து மேலெழும்ப விடாமல் அழித்தொழிப்பதையும் மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு கட்சி வெளிப்படையாக இயங்க முடியுமா?



இந்தியாவில் மட்டும் அது முடியும்! ஒன்றல்ல, ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ விருட்சத்தின் விழுதுகளாகவும் எச்சங்களாகவும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து விரிந்த உபவிஷங்களாக!

ஆர்.எஸ்.எஸ்ஸின் கூடாரத்தில் ஐக்கியமாகி விட்டால் அடுத்த விநாடியே 'அகோரி'ப் பித்துத் தலைக்கு ஏறிவிடும் என்பது அதன் அரசியல் பிரிவான பிஜேபி மூலம் இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் போட்டியிடும் வருண், கடந்த 6.3.2009இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,


"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்".

"ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்"
என்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார்.

யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்!

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" என்றால்,

முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால், "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என 2.5% பார்ப்பனர்களைத் தவிர அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும்.

பாகிஸ்தான் தாங்குமா? பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா?" என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

"தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்" என்றும் "இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" எனவும் இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே?. இது சட்ட விரோதம் இல்லையா?. இவர் மீது சட்டம் பாயாதா? என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான். அப்படியே தேர்தல் கமிஷனோ, உணர்வில்லாத ஏதோ ஒரு கமிஷனோ, பத்து நாட்கள் கழித்து, கேட்க வேண்டுமே என்பதற்கு ஈனஸ்வரத்தில் முனகினால், "நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்" என்ற காவி சாணக்கியத்தனம்.

அத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தல்லவா ஆர்.எஸ்.எஸ் அகோரிகளைத் தயாராக்குகின்றது!

அதுதான் நடந்திருக்கிறது. வருணின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்குப் பாதுகாப்பு அளித்து அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல்துறை, பத்து நாட்களுக்குப் பிறகு வருணுக்கு எதிராகக் குற்றவியல் பிரிவு 153ஏயின்படி (by words, either spoken or written or by signs or by visible representations or otherwise promotes or attempts to promote on ground of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever disharmony or feelings of enmity, hatred or illwill between different religious, racial, language or regional groups or castes or communities shall be punished with imprisonment) முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.

"இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவும் மதவிரோதத்தை விதைத்து வன்முறையைத் தூண்டி விடுவதாகவும்" வருணுக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத குற்றவியல் சட்டப்படியும் மக்கள் பிரதிநிதுத்துவப் பிரிவுச் சட்டப்படியும் ஒரு வழக்கை நேற்றுத் தேர்தல் கமிஷன் தொடுத்திருப்பதாக PTI செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

ஆனால், "நாளைக்கு நான் தெளிவாக்கி விடுவேன். ஒன்றும் ஆகாது, கவலையில்லை" என்று வருண் பேட்டி கொடுக்கிறார்.

மேலும், "வருண் பேசியதில் தவறொன்றுமில்லை" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் தருண் விஜய் விளக்கம் சொல்லி விட்டார்.

"வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்" என்று தாய் மேனகா பெருமை பேசுகிறார்.

நியாயந்தான்! அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்திய பழம்புயல் சஞ்சயின் மகனல்லவா வருண்?

நம் நாட்டில் பேசுவதற்கு ஒரு மேடையும் கேட்பதற்கு சிலநூறு தலையாட்டிக் கூட்டமும் ஒரு மைக்கும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறைச் சித்தாந்தத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.

"நம்நாடு ஒரு ஜனநாயக நாடு; நமது அரசு ஜனநாயக அரசு" எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தம் இல்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கும் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியதும் ஜனநாயக அரசின் தலையாய கடமைகளாகும்.

வெறும் கண்துடைப்பு விளக்க நோட்டீஸ்களும் கமிஷன்களும் அமைப்பதை விடுத்து, வன்முறை வித்துகளை விதைக்கும் பேச்சுகளைப் பேசுவோர் எவராக இருப்பினும் உடனே கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். "வருணுக்குத் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை" என்ற குறைந்தபட்ச அறிவிப்பையாவது தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் இதேமாதிரிப் பேச்சுகள் நீளுவதைத் தடுக்க முடியாது - எதிர்ப் பேச்சையும்தான்!

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1187&Itemid=5

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி பேச்சு- தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

>> Tuesday, March 17, 2009

பிலிபித் (உ.பி.): மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில், இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான்.

வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரித்து விட்டனர்-
வருண் காந்தி:இதற்கிடையே தான் பேசியது வேறு, அதைத் திரித்து செய்திகள் வெளியாகி விட்டன என்று வருண் காந்தி கூறியுள்ளார்.

வருண் காந்தி விவகாரம் குறித்து பாஜக கருத்து ஏதும் கூறவில்லை.

காங்கிஸ் பாய்ச்சல்:
வருண் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான்.

அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2009/03/17/india-varun-gandhi-vows-to-cut-heads-of-muslims.html

மேலும் படிக்க... Read more...

முஹம்மது நபி (ஸல்) பற்றி "தினமணி"யின் பழ. கருப்பையா. "குமுதம்" ‍பா.ராகவனும்.

>> Friday, March 13, 2009



உலக மனிதனே இசுலாத்தின் சாரம்!

மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான்.

ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.

உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கஅபாவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்!

வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும். உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒருதன்மையானதுதான்!

அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது.

நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் 'ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது

நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின. இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை!

தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார்.

இசுலாம் என்பதற்கு 'ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.

பொழுது புலர்வதற்கு முன்னர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும் கூத்தாநல்லூரிலும் வாலாஜாபேட்டையிலும் வங்கதேசத்திலும் இரானிலும் ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.


இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குர்ஆன் விதிக்கிறது.
முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.

திருக்குர்ஆனில் 'அல்ஃபாத்திஹா' என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதிக்கான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்!

இறைவன், "அல்லாஹ்" என்றழைக்கப்படுகிறான். "அல்லாஹு அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!


ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை.

தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே.அவற்றை இறைவனா போட்டான்?


இசுலாத்தில் 'இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும்.

இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.


ஆனால் திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குர்ஆனில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை.

இசுலாம் கட்டிறுக்கமானது. இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது.

ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரம், இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.


நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமியச் சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்! அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கஅபாவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கஅபாவை விலக்கிவிடவில்லை. கஅபா என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.


ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல். தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.


தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது.


தொழுதல் 'உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை!

இஸ்தான்புல்லில் உள்ள இப்ராஹீமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாஹ்வும் இணைய முடிவதற்கு நபிகள் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்!

இசுலாத்தில் 'உம்மா' முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.


(கடைசிக்) கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!


மக்கா கஅபாவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும் நிமிர்ந்தும் கைகளைச் சேர்த்தும் விரித்தும் ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!


அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து, உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும் உம்மா உருவாக்கமும்! இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத்தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!


ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும் பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகையச் சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!


ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.


இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்!

எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.


"ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை" என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!


நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லாஹ் உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.


மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!


தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக்க வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குர்ஆன் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!


ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை? என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!


நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும் எதையும் அருந்தாமலும் இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!
பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.


பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள். ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.

ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது! இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம்.

ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்.
இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும்.

ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்?


1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும் முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும் பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது.

நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது. "யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது.

நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே. உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான். உலக மனிதனே இசுலாத்தின் சாரம்.
நன்றி : பழ. கருப்பையா Dinamani.com.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DN020090309110640&Title=Editorial+Articles&lTitle=%A3/l%D7d+Lh%D3%FBWLs&Topic=0&ndate=3/10/2009&dName=No+Title&Dist=

****************************************************
குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் முஹம்மது நபி (ஸல்)பற்றி "நிலமெல்லாம் ரத்தம்" எனும் தொடரில் .......
அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள்.


அப்படிப்பட்ட இனத்தில் முதல் முதலாக ஓர் எழுச்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது.எழுச்சி என்றால், வெறும் சொல்லில் அடங்கிவிடக்கூடிய எழுச்சியல்லஅது. உலக சரித்திரத்தில் வேறு எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும் இன்றுவரையிலும் கூட அதற்கு நிகரான எழுச்சி நடந்ததில்லை.


ஒட்டுமொத்த அரேபியர்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட எழுச்சி அது.
அது கி.பி. 622-ம் வருடம், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, திங்கட்கிழமை. ஒரு மனிதர், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தார்.

அவ்வளவுதான். ஒட்டுமொத்த அரேபியர்களும் மதம் பெயர்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.அவர் பெயர் முகம்மது.


இயேசுவுக்குப் பிறகு இறைவன் அனுப்பியதாக நம்பப்படும் இறைத்தூதர் (நபி) இறுதித் தூதரும் அவரேதான்


முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் - இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.


ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.


மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.


காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்னறன.


முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.


ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. மேலும் படிக்க‌ ..................

11-12 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள். 11-12 :CLICK"


19-20. நிலமெல்லாம் ரத்தம்- ...
17-18.நிலமெல்லாம் ரத்தம்-...
15-16 நிலமெல்லாம் ரத்தம்- ..
13-14 நிலமெல்லாம் ரத்தம்- ...
11-12 நிலமெல்லாம் ரத்தம்- ...
9-10 நிலமெல்லாம் ரத்தம்- ..
7-8 நிலமெல்லாம் ரத்தம்- ...
5-6 நிலமெல்லாம் ரத்தம்- ...
3-4 நிலமெல்லாம் ரத்தம்- ..

1-2. நிலமெல்லாம் ரத்தம்- .

மேலும் படிக்க... Read more...

நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள்

>> Thursday, March 12, 2009

வாசகர்கள் பலர் அறிந்திராத விஷய களஞ்சியம்.

முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு இபுறாஹிம் (அலை ) முதல் இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.

மொத்தம் 100 பகுதிகள். இது தொடர்ந்து வரும் ஆதலால் வாசகர்கள் தாங்களுக்கு தெரிந்தவர்கள் , நன்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும், தாங்களின் பிள்ளைகளையும் படிக்க செய்யுங்கள்.

சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.

முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

*********************************************
பகுதி12 இறைதூதர் முகம்மது..
பகுதி13 நபியாக நியமிக்கப்படல்
பகுதி14.ஒட்டகத்தின் தாடை எலும்பு. இஸ்லாத்தின் சரித்திரத்தில் சிந்தப்பட்ட முதல் ரத்தம்
*************************************************
சேமித்தவனின் (அபு உமர்) முன்னுரை

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக.

எழுத்துக்கள் பலவகை உண்டு.ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது.இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள்.

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். அவரிடமிருந்து நானும் சேமித்து வைக்கிறேன்.இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய இன்றைய பதிவுகள்தான் நாளைய வரலாறு. இது இஸ்லாம் அல்லாத ஒருவரின் ஆய்வு என்பதை மீண்டும் நினைவுப் படுத்திக்கொள்கிறேன்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் பா.ராகவன் ஜான் கிரிஸ்டோஃபர் .---- (அபு உமர்)
******************************************
நிலமெல்லாம் ரத்தம்- ஆசிரியர்‍ பா. ராகவன்.

களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு:

உதவிய நூல்களின் பட்டியல்:1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.5. The Politics of Dispossession - Edward Said6. Peace and its Discontents - Edward Said7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)20. State of Palestine, Esam Shashaa21. Palestine Refugees, Esam Shashaa22. In the arms of a Father, Haneen al - Far23. UN Report, Intifada, United Nations Publication24. Ancient History of Palestine, Abu Sharar

சில சொற்கள்:
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகள், ஏராளமான இணையத்தளங்களின் தகவல் உதவிகள் இல்லாமல் இத்தொடர் சாத்தியமாகியிருக்க முடியாது.

நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்துதந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி. (மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.

சென்னை இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பும் சமரசம் மாத இதழின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன் அவர்களும் சில முக்கியமான புத்தகங்களை வழங்கி உதவினார்கள்.

எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான வாசக அன்பர்கள் பாலஸ்தீன் தொடர்பாகத் தம்மிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் சிறு வெளியீடுகளையும் இந்த ஒரு வருடகாலமும் எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்த அன்புக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வாசகர்கள் ஏ. ஜாகீர் மற்றும் தூளான்; சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வாசகர் வெங்கடேசன், ஊட்டி ரன்னிமேடு பகுதியைச் சேர்ந்த வாசகர் தேவசகாயம், கோவையைச் சேர்ந்த முகம்மது கனி ஆகியோரின் ஆர்வத்தைத் தனியே குறிப்பிட விரும்புகிறேன்.

பாலஸ்தீன் பிரச்னை தொடர்பாக இதுகாறும் இந்தியாவில் வெளியாகியுள்ளஅத்தனை பத்திரிகைக் குறிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகளையும் எங்கெங்கிருந்தோ தேடி நகலெடுத்து எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தவர்கள் இவர்கள்.

இந்தத் தொடர், சர்வதேசத் தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கில், ரிப்போர்ட்டரில் வெளியானவுடனேயே ஒவ்வொரு வாரமும் பிரதியெடுத்து, தட்டச்சு செய்து, ரிப்போர்ட்டருக்கு நன்றி சொல்லித் தனது பிரத்தியேக வலைப்பதிவில் வெளியிட்டுவந்த தைவானைச் சேர்ந்த ரிப்போர்ட்டர் வாசகர் கிறிஸ்டோபர் ஜான் (http://christopher_john.blogspot.com/) அவர்களுக்கு என் அன்பு.

இந்தப் பணி இந்த அளவில் சாத்தியமானதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் புரிந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்வமுடன் வாசித்து, அவ்வப்போது கடிதங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும்..
ஆசிரியர்‍ பா. ராகவன்.

படிக்க க்ளிக் செய்யுங்கள்.1-2. நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள் 1 "CLICK"

13-14 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர... "CLICK"
11-12 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர... "CLICK"
9-10 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்... "CLICK"
7-8 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்க... :CLICK"
5-6 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்க... "CLICK"
3-4 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்க... "CLICK "
1-2. நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்... "CLICK "
தொடரும்... மீண்டும் வாருங்கள்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வாஞ்ஜூர் போஸ்ட்
இஸ்லாமிய வரலாறுகள், தகவல்கள், நிகழ்வுகள்.

முதலில் இந்த இணைப்பை http://islamhistory-vanjoor.blogspot.com/
தங்களின் Favorites / Book mark ல் குறித்துக்கொள்ளுங்கள்.நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்


http://islamhistory-vanjoor.blogspot.com/

மேலும் படிக்க... Read more...

முஸ்லிம் அன்பர்களுக்கு.முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள்.1-2.

>> Wednesday, March 11, 2009

முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள் 1-2.
முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு இபுறாஹிம் (அலை ) முதல் இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.

மொத்தம் 100 பகுதிகள். இது தொடர்ந்து வரும்

ஆதலால் வாசகர்கள் தாங்களுக்கு தெரிந்தவர்கள் , நன்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் தாங்களின் பிள்ளைகளையும் படிக்க செய்யுங்கள்.

வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.

முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
*************************************************
சேமித்தவனின் (அபு உமர்) முன்னுரை
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக.எழுத்துக்கள் பலவகை உண்டு.

ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது.இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள்.

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். அவரிடமிருந்து நானும் சேமித்து வைக்கிறேன்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய இன்றைய பதிவுகள்தான் நாளைய வரலாறு. இது இஸ்லாம் அல்லாத ஒருவரின் ஆய்வு என்பதை மீண்டும் நினைவுப் படுத்திக்கொள்கிறேன்.நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் பா.ராகவன் ஜான் கிரிஸ்டோஃபர் .---- (அபு உமர்)
******************************************
நிலமெல்லாம் ரத்தம்- ஆசிரியர்‍ பா. ராகவன்.
களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு:

உதவிய நூல்களின் பட்டியல்:

1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)
2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.
3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)
4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.
5. The Politics of Dispossession - Edward Said
6. Peace and its Discontents - Edward Said
7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings
8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)
9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre
10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)
11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)
12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem
14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)
15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)
16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)
17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)
18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)
19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)
20. State of Palestine, Esam Shashaa
21. Palestine Refugees, Esam Shashaa
22. In the arms of a Father, Haneen al - Far
23. UN Report, Intifada, United Nations Publication
24. Ancient History of Palestine, Abu Sharar

சில சொற்கள்:

மேற்சொன்ன புத்தகங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகள், ஏராளமான இணையத்தளங்களின் தகவல் உதவிகள் இல்லாமல் இத்தொடர் சாத்தியமாகியிருக்க முடியாது.

நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்துதந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி. (மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.

சென்னை இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பும் சமரசம் மாத இதழின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன் அவர்களும் சில முக்கியமான புத்தகங்களை வழங்கி உதவினார்கள். எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான வாசக அன்பர்கள் பாலஸ்தீன் தொடர்பாகத் தம்மிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் சிறு வெளியீடுகளையும் இந்த ஒரு வருடகாலமும் எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்த அன்புக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வாசகர்கள் ஏ. ஜாகீர் மற்றும் தூளான்; சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வாசகர் வெங்கடேசன், ஊட்டி ரன்னிமேடு பகுதியைச் சேர்ந்த வாசகர் தேவசகாயம், கோவையைச் சேர்ந்த முகம்மது கனி ஆகியோரின் ஆர்வத்தைத் தனியே குறிப்பிட விரும்புகிறேன். பாலஸ்தீன் பிரச்னை தொடர்பாக இதுகாறும் இந்தியாவில் வெளியாகியுள்ள
அத்தனை பத்திரிகைக் குறிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகளையும் எங்கெங்கிருந்தோ தேடி நகலெடுத்து எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தவர்கள் இவர்கள்.

இந்தத் தொடர், சர்வதேசத் தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கில், ரிப்போர்ட்டரில் வெளியானவுடனேயே ஒவ்வொரு வாரமும் பிரதியெடுத்து, தட்டச்சு செய்து, ரிப்போர்ட்டருக்கு நன்றி சொல்லித் தனது பிரத்தியேக வலைப்பதிவில் வெளியிட்டுவந்த தைவானைச் சேர்ந்த ரிப்போர்ட்டர் வாசகர் கிறிஸ்டோ பர் ஜான் (http://christopher_john.blogspot.com/) அவர்களுக்கு என் அன்பு.

இந்தப் பணி இந்த அளவில் சாத்தியமானதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் புரிந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்வமுடன் வாசித்து, அவ்வப்போது கடிதங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும்..ஆசிரியர்‍ பா. ராகவன்.

படிக்க க்ளிக் செய்யுங்கள்.

1-2. நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள் 1-2. "CLICK

மேலும் படிக்க... Read more...

சிப்ஸ் சாப்பிட்டாலும் புற்று நோய்? என்ன கொடுமை சார் இது?

>> Thursday, March 5, 2009
























படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்
-------------------------------------------------------
நன்றி: குங்குமம்.

மேலும் படிக்க... Read more...

சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.

>> Wednesday, March 4, 2009

நீரில் கரையக்கூடிய கூழ்நிலைத் தன்மையற்ற திண்மப் பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகங்களின் முதன்மையான வேலையாகும். இவை வெளியேற்றும் திண்மப் பொருள்கள் மனித உடலுக்குத் தேவையற்றதாகவோ வேண்டிய அளவிற்கு அதிகமானதாகவோ இரத்தத்தில் கலந்திருக்கும். இத்தகைய பொருள்களை அவ்வப்போது இரத்தத்திலிருந்து நீருடன் வெளியேற்றி, சிறுநீரகங்கள் உடலில் கீழ்க்கண்டவற்றை நிலைப்படுத்துகின்றன.

உடலின் நீரின் அளவு.

உடலில் உள்ளிருக்கும் மின்பகு பொருள்களின் அளவு.

உடலிலுள்ள திரவங்களின் சவ்வூடுபரவல் அழுத்தம்.

உடலில் அமில-கார சமநிலை.

உணவுப் பொருள்கள் வேதிச் சிதைவு அடையும்போது தோன்றும் இடைக்கழிவுப் பொருள்களை வெளியேற்றல்.

உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்களை வெளியேற்றல்.
இத்தகைய நீர்க் கழிவுப் பொருள்களின் செறிவு) இரத்தத்தைவிடச் சிறுநீரில் மிகுந்து காணப்படும். எனவே நல்ல உடல் நலம் உள்ள ஒரு மனிதனின் சிறுநீரகம் நீரின் அளவு எவ்வகையில் மாறுபட்டாலும் செறிவடைந்த கழிவுப் பொருள்களைத் தங்குதடையின்றி வெளியேற்றும் தன்மை கொண்டது.

சிறுநீர்:

சராசரியாக 24 மணி நேர அளவில் ஒரு மனிதனின் சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இந்தச் சிறுநீரின் அளவு கிழ்க்கண்ட சூழ்நிலையில் மாறக்கூடும்.

உணவின் தன்மை (திரவநிலை அல்லது திண்மநிலை) சூழ்நிலை வெப்பம்
உடற்பயிற்சி

மருந்துகள், (காலமல், அசிடேட், சலிசிலேட் போன்றவை சிறுநீரின் அளவை அதிகரிக்கும்.)

நோய் நிலை (வாந்தி, பேதி, காய்ச்சல், இருதய நோய் போன்றவை சிறுநீரின் அளவைக் குறைக்கும்.

பொதுவான நிலையில் 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.

இவை தவிர மிகச் சிறிய அளவில் இப்பூரிக் அமிலம், இண்டிகேன், ஆக்சாலிக் அமிலம், அமினோ அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், சல்பேட்டு, அம்மோனியம் போன்றவற்றையும் வெளியேற்றுகின்றன. நீரிழிவு போன்ற காலங்களில் குளுகோஸ், அசிடோன் போன்ற வேறுசில பொருள்களையும் வெளியேற்றுகின்றன.

சிறுநீர்க்கல் நோய்:

மேற்கண்ட பொருள்களைக் கொண்ட கரைசலான சிறுநீரில் அது வெளியேறும் வழிகளில் (சிறுநீரகம், நாளம், சிறுநீர்ப்பை) கற்கள் தோன்றி, ஒருசில மனிதர்களைப் பழங்காலம் முதற்கொண்டு இந்நாள் வரை பெருந்தொல்லைப்படுத்தி வருகின்றன. சிறுநீர்வழிப் பகுதிக் கற்கள் தோன்றும் நோயினை யூரோலிதியாசிஸ் (Urolithiasis) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். சிறுநீரகம், சிறுநீர்க் கழிவு நாளம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற பகுதிகளில் தோன்றும் இக்கற்களை சிறுநீர்க் கற்கள் (Urinary Calculi) என்பர்.

இந்நோய் பொதுவாக நடுவயதினரிடையே காணப்பட்டாலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் தோன்றுவதாக சில அமெரிக்க மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

நோயின் அறிகுறிகள்:

ஆரம்ப நிலையில் நோயாளி, தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பொதுவாக உணருவதில்லை. ஆனால் நோய் முதிர முதிர கீழ்க்கண்ட சில அறிகுறிகள் வரிசைப்படி தோன்றலாம்.

பொதுவாக இடுப்பில் சோர்ந்த கடுமையான வலி,


சிறுநீர் வெளியேறுமுன் அடிவயிற்றில் வலி ஆரம்பித்து இடுப்பில் விலா எலும்பிற்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட சதைப்பற்றில் வலி எடுத்தல்.


சிறுநீர் வெளியேற்றத் துன்பப்படுதல்.


சொட்டு சொட்டாக நீர் வெளியேறுதல்.


சிறுநீரில் இரத்தம் வெளிப்படுதல்.

நோய்க்காரணம்:

சிறுநீர்க்கல் நோய் பொதுவாக இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் நிறைந்து காணப்படுவதால் இதற்கு சில இயல்பு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும், உணவுத் தட்ப வெப்பநிலை ஆகியவையும் இந்நோய்க்குச் சில காரணங்களாகக் கருதப்படுகின்றன. சயரோகம், கீல்வாதம், எலும்பு முறிவு போன்ற நோய்க் காலங்களில் படுக்கை நிலையிலேயே இருக்கும் நோயாளிகள் இந் நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சல்பா பெரிடின், சல்பாதையசோல, சல்பாடைžன், சல்பாகுவானிடீன், வைட்டமின் D போன்ற மருந்துகள் மிகுவதும் சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணமாகும்.

சிறுநீர்க் கற்களின் வேதியல் தன்மை:

சிறுநீர்க் கற்கள் பெரும்பாலும் பாஸ்பேட், ஆக்சலேட், யூரேட் போன்றவற்றின் கால்சியம், மெக்னீசியம் உப்புக்களாகவே இருக்கின்றன. சில கற்கள் யூரிக் அமிலம், சிஸ்டின் போன்ற பொருள்களையும் கொண்டிருக்கின்றன.

இயற்பியல் (Physical) பண்பின்படி பார்க்கும்பொழுது மேற்கூறிய சிறுநீர்க் கழிவுப் பொருள்கள் அனைத்தும் குறைந்த கரைதன்மை (Solubility) கொண்டவையாகும்.

கற்கள் தோன்றும் முறை:

கீழ்க்கண்ட சில சூழ்நிலைகளில் சிறுநீரின் அளவு குறைகிறது.

குறைந்த அளவு நீரைப் பருகுதல்.

வெப்பமான தட்ப வெப்ப நிலை.

அதிக வேர்வை வெளியேறிய சூழ்நிலையில் சரியான அளவு நீர் பருகாமல் இருத்தல்.

கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் குறைந்த கரைதன்மை கொண்ட மேற்கூறிய கற்பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்.

யூரிக் அமிலம், கால்சியம், ஆச்சலேட் போன்றவற்றைத் தரும் உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல். ஸ்டிராபெர்ரி (Strawberry), சீமைப்பசலைக்கீரை (Spinacea Oleracea)., சீன மஞ்சள் (Rhubarb).


பாராதைராய்டு சுரப்பியின் மிதமிஞ்சிய செயல்பாட்டினால் தோன்றக்கூடிய ஹைபர் கால்சியமியா போன்ற நோய்நிலை.

சிறுநீரின் அளவு குறையும்போதும், குறைந்த கரைதன்மையுடைய பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்போதும் அப்பொருள்களின் செறிவு அதிகரித்து அவை சிறுநீரில் மீச்செறிவை (Super saturation) விரைவில் அடைகின்றன. இந்நிலையில் அப்பொருள்கள் சிறுநீரில் இருந்து வீழ்படிவாக வெளியேறுகின்றன.

வீழ்படிவான துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் படிகங்களாக வளருவதற்கான சூழ்நிலை சிறுநீரகங்களிலோ, நீரக நாளங்களிலோ, சிறுநீர்ப் பைகளிலோ தோன்றும்போது அங்கே படிகங்கள் வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.

வீழ்படிவுகள் ஒட்டிப் படிகங்கள் வளருவதற்கு இரு பொருள்கள் தேவைப்படுகின்றன.

வீழ்படிவுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவதற்குப் பசைத்தன்மை கொண்ட பொருள்.


ஒட்டிய வீழ்படிவுகள் படிகங்களாக வளருவதற்கு மைய நுனிப் பொருள்.
நோய் படர்ந்த சிறுநீரகப் பாதையில் எரிவு ஏற்படுவதால் உருவாகும் பொருள்கள் பசை போன்று செயல்படுகின்றன.

சில சூழ்நிலையில் சிறுநீர்ப் பாதையை அடைந்த இறந்த பாக்டீரியாக்களின் நுண்ணிய உடல்கள், களிச்சவ்வு, žழ்செல்கள் போன்றவை படிகங்கள் படிந்து வளருவதற்கான மையநுனிப் பொருள்களாக அமைந்துவிடுகின்றன.

எனவே குறைந்த கரைதன்மை கொண்ட பொருள்கள் சிறுநீரில் மீச்செறிவு அடைந்து வீழ்படிவாக மாறிப், பசைப்பொருள்கள் அருகில் இருப்பின் ஒன்றொடு ஒன்று ஒட்டி ஏதேனும் மையநுனிப் பொருள் கிடைப்பின் படிகங்களாக படிந்து வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.

கற்களின் அளவு: அமைப்பு:

இவ்வாறு தோன்றும் சிறுநீர்க் கற்கள், சிறுநீர் நாளங்கள் வழியாகச் செல்லும்படியாகச் சிறியவையாக இருப்பின் சிறுநீருடன் வெளியேறுகின்றன. அவ்வாறு செல்லும்பொழுது நாளங்கள் விரிக்கப்படுவதால் வலி ஏற்படுகிறது. மேலும் நாளங்கள் வழியே அவை செல்லும்போது சிராய்வு ஏற்படுவதால் சிறுநீருடன் இரத்தம், தசைநார் நுனிகள் போன்றன வெளியேறும்.

பலகற்கள் தோன்றும்பொழுது நோய் கடுமையாகும். மேலும், சில கற்கள் வளர்ந்து பருத்துச் சிறுநீரகத்தையே சிதைத்து விடுகின்றன.

சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் பெண்ணின் குறுநாளத்தின் வழியே எளிதில் வெளியேறிவிடுகின்றன. ஆணின் சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் அங்கேயே வளர்ந்து பருக்கின்றன.

சிறுநீரின் pH ம் சிறுநீர்க் கற்களும்:
சிறுநீர்க் கற்களில் காணப்படும் வேதிப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் குணகமாக சிறுநீரின் pH செயல்படுகிறது.

(pH - என்பது அமில காரத் தன்மையைக் காட்டும் குணகம் ஆகும். pH = 7 க்குக் கீழே அமிலத்தன்மை; pH = 7 க்கு மேலே 14 வரை காரத்தன்மை. pH = 7 நடுநிலைத்தன்மை.)

சாதாரண நிலையில் சிறுநீரின் pH, 4,5 லிருந்து 7.5 வரை வேறுபட்டுக் காணப்படும்.

சிறுநீர் சற்று அமிலத்தன்மையில் இருக்கும்பொழுது (PH = 5) யூரிக் அமிலம் வீழ்படிவாக வெளியேறுகிறது.

மற்றப் படிகங்களைவிட யூரிக் அமில வீழ்படிவு பல்வேறு வகை அமைப்பைக் கொண்டிருக்கும்.

ரோம்பிக் வடிவ அமைப்புப் படிகங்கள்.
வீட்ஸ்டோன் வடிவ அமைப்புப் படிகங்கள்,
நான்முக வடிவ அமைப்புப் படிகங்கள்.
நீண்ட புள்ளி முடிவு கொண்ட படிகங்கள்.
கிளைப் படிகங்கள்.
புள்ளிக்கற்றைப் படிகங்கள்.

சிறுநீரின் pH மதிப்பு 6 - ஆக இருக்கும்பொழுது யூரிக் அமிலம், சோடியம் யூரேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் ஆக்சலேட் ஆகியவற்றைக் கொண்ட சிறுநீர்க் கற்கள் உருவாகின்றன.

கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் இருவகையில் காணப்படுகின்றன.

எண்முகப் படிக அமைப்பு.கவிழ்க்கப்பட்ட இருமணிகளின் அமைப்புப் படிகங்கள். கால்சியம் பாஸ்பேட் மூன்றுவகைகளில் காணப்படுகிறது. தூள், துகள்வகை, படிகவகை. படிகங்கள் புள்ளி முடிவு கற்றை அமைப்பு.

சிறுநீரின் pH மதிப்பு, 7 ஆக இருக்கும்பொழுது கால்சியம் பாஸ்பேட் கற்கள் உருவாகின்றன. pH-7 க்கும் 8 க்கும் இடைப்பட்ட நிலையில் கால்சியம் பாஸ்பேட், மெக்னீசியம், அம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவைகளை உடைய கற்கள் உருவாகலாம்.

அம்மோனியம் மக்னீசியம் பாஸ்பேட் படிகங்கள் பலமுக அமைப்பு உடையனவாகவும் சில சமயங்களில் இறகு அமைப்புடையனவாகவும் காணப்படுகின்றன

பலமுக அமைப்புப் படிகங்கள். இறகு அமைப்புப் படிகங்கள்.

சிறுநீரின் pH மதிப்பு 8 க்கும் அதற்கு மேலும் அமையும்பொழுது கால்சியம் கார்பனேட், அம்மோனியம், மெக்னீசியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவற்றைக் கொண்ட மென்மையான கற்கள் உருவாகலாம்.

கால்சியம் கார்பனேட் படிகங்கள் உருதுகள் படிகங்களாகவோ கவிழ்ந்த இருமணி வடிவப் படிகங்களாகவோ காணப்படுகின்றன.

எனவே, சிறுநீரின் pH-ஐ அறிந்தும், சிறுநீரில் தோன்றும் படிகங்களை
நுண்ணோக்கி வழியாகக் கண்டும், எவ்வினக் கற்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

குணப்படுத்துதல்:

சில கற்கள் மிகச் சிறியவைகளாக இருப்பின் தாமாகவே வெளியேறி விடுகின்றன. நாளங்களில் தங்கிவிடுகின்ற சற்றுப் பெரிதளவான கற்களைச் சிறுநீரகப் பாதை வழியாகத் துணைக் கருவிகளை நுழைத்து நீக்கிவிட முடியும்.

சிறுநீர்ப் பைகளில் தங்கிவிடும் கற்களைத் தனிப்பட்ட சில கருவிகளைக் கொண்டு உடைத்துப் பின் நீக்கிவிடலாம்.

மிகப்பெரிய சிறுநீர்க் கற்களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க முடியும். இன்றைய மருத்துவ அறிவியல், சிறுநீர்க் கற்களைத் தொல்லையின்றி கரைத்துவிடும் அளவிற்கு மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. "Solution-G" எனப்படும் கீழ்க்கண்ட வேதிப் பொருள்களைக் கொண்ட கரைசல் பாஸ்பேட், கார்பனேட் கற்களைக் கரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

சிட்ரிக் அமிலம் 32.25 கிராம்
மக்னீசியம் ஆக்சைடு 3.84 கிராம்
சோடியம் கார்பனேட் 4.37 கிராம்
(இவை ஒரு லிட்டர் நீரில் கரைக்கப்பட வேண்டும்.)

நோய்த் தடுப்பு:

சிறுநீர்க் கற்கள் மேற்கொண்டு தோன்றாமல் தடுப்பது, மேலே நாம் கண்ட தோற்றக் காரணத்தைப் புரிந்துகொள்வதைப் பொறுத்தமையும். அதிக அளவு சல்பா மருந்துகள், திக வைட்டமின் D, பாராதைராய்டுச் சுரப்பியின் மீள் செயல், போன்றவற்றைக் கட்டுப்படுத்திச் சிறுநீர்க் கற்கள் தோன்றாமலும் காத்துக் கொள்ளலாம்.

சிறுநீர்க் கல் அடைப்புத் தொல்லையுற்றோர், எல்லாவற்றிற்கும் மேலாக அதிக அளவில் நீரைப் பருகி, அளவோடு சத்துணவை உண்டு, கற்கள் உருவாவதற்கு அடிப்படையான உணவைத் தவிர்த்து நல்வழியில் வாழும் முறையை அமைத்துக் கொள்வதே இந்நோயினின்று விடுபட்டிருக்கச் சாலச் சிறந்த வழி.

பெரும்பான்மையான மக்களுக்குச் சிறுநீர்க் கல்லடைப்பு ஏற்படுவதில்லை - பிறப்பின் இயல்பாலோ நோய்க் காரணமாகவோதான் இத்துன்பம் நேரும். எனவே பொதுப்படையான தற்காப்புகள் தேவையில்லை.

சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.


நீர் 1200.00 கி.
யூரியா 30.00 "
யூரிக் அமிலம் 1.00 கி.
(யூரேட் உட்பட)
கிரியேட்டினின் 1.20 கி.
சோடியம் குளோரைடு 12.00 கி.
சோடியம் 4.0 கி.
பொட்டாசியம் 2.0 கி.
பாஸ்பேட்டு
(பாஸ்பரசாக) 1.1 கி.

************************************
பயனுள்ள மருத்துவ குறிப்புகளை படிக்க மருத்துவம் க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க... Read more...

விடியோ‍-பூனை பார்த்த பந்து விளையாட்டு.சிரிப்பு

>> Tuesday, March 3, 2009



சிரிப்பு விடியோ--திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது?
சிரித்து உங்கள் வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல‌ காணாமற்போன திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது?
*************************************
விடியோ-சின்னாபின்னமான காதலிகள்.பூங்காவில் உலாவ சென்ற காதல் ஜோடிகள்.சின்னாபின்னமான காதலிகள்.அழுவதா ? சிரிப்பதா ?சிரித்து உங்கள் வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல‌.

மேலும் படிக்க... Read more...

கிழங்குகளின் மருத்துவ பய‌ன்கள்.நலம் தரும் இலைகள்.

>> Monday, March 2, 2009

நாம் பொதுவாகச் சமைக்கும் போது சில கிழங்கு வகைகளைப் பயன்படுத்துகிறோம்.

அவைகளின் முழு மருத்துவப் பயன்களைப் பற்றிப் பார்ப்போம்:
கருணைக் கிழங்கு

இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.

கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.
(1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.
காரும் கருணையைப் பிடிகருணை என்றும்,

காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.

முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.

சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது.

இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

உருளைக் கிழங்கு

மக்கள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக் கிழங்கு.
இதில் புரதம், இரும்புச் சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள்ஏற்படும் என்பார்கள். இது உண்மை தான்.

எனவே உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

உருளைக் கிழங்கில் அரிசியில் இருப்பது போன்றே மாவுப் பொருள் இருப்பதால், எஸ்கிமோ என்ற இன மக்கள் முழு உணவாகவே சாப்பிடுகின்றனர்.

இது உடலுக்கு வலிமை தருகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் சக்தி உடையது. ஆனால் தோலை நீக்காமல் உருளைக் கிழங்கைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்குச் சில நேரங்களில் தாய்ப்பால் சுரப்பது குறையும். அப்போது உருளைக் கிழங்கைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

தோலை நீக்கி விட்டுக் கிழங்கைச் சமைப்பதாக இருந்தால், அதனுடன் பூண்டு, இஞ்சி போன்ற பொருள்களைச் சேர்த்துக் கொண்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

இருந்தாலும் வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிடவே கூடாது.வயதானவர்கள் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.

இக்கிழங்கைத் தண்ணீர் விட்டு அலம்பி இடித்து, அரைத்துக் கட்டிகளின் மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் கட்டி பழுத்து உடையும்.கண்களின் கீழ் கருவளையம் இருந்தால், உருளைக்கிழங்கைச் சாறு எடுத்துத் தடவலாம்.

மேல் தோலைச் சீவி விட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து ஆறாத புண்கள் மீதும், படை, சொறிகளின் மீதும் பற்றாகப் போட்டால், புண் ஆறி விடும்.

சேப்பங்கிழங்கு

இது செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பாக இருக்கும். இதில் நான்கு வகைகள் இருந்தாலும் கிழங்கின் நிறத்திலோ, ருசியிலோ, குணத்திலோ வேறுபாடு இருப்பதில்லை.

இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ, பி ஆகிய உயிர்ச்சத்து சிறிதளவும் இருக்கின்றன.

இருந்தாலும் இக்கிழங்கு கோழையை அதிகரிக்க வல்லது. இதை அதிகமாகவோ, அடிக்கடியோ சாப்பிடுபவர்களுக்குத் தொண்டையில் கோழை கட்டும்; இருமல் வரும்.

ஆகவே இக்கிழங்குடன் புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், இஞ்சி, வெள்ளைப் பூண்டைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், கெடுதல்கள் குறையும்.மலச்சிக்கலை நீக்க வல்லது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. சில ஆண்டுகளுக்கு பலவீனம் காரணமாகவோ, வயோதிகத்தினாலோ ஆண் தன்மைக் குறைவு ஏற்படும். அத்தகையவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் ஆண் தன்மைக் குறைவைப் போக்குவதோடு, இந்திரியத்தையும் கெட்டிப்படுத்தும்.
இதை அப்படியே அரைத்து, கட்டிகளுக்கும், புண்களின் மேலும் பற்றாகப் போட்டால் குணமாகும்.

இது வாதத் தன்மையை அதிகரிக்கவல்லது. எனவே வாத தேகம் உள்ளவர்கள் அல்லது வாத நோயால் அவதிப்படுபவர்கள் இக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
அத்துடன், இந்தக் கிழங்கு மருந்துகளின் வீரியத்தை மட்டுப்படுத்தும் தன்மை உடையது. அதனால் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களும் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

எப்போதாவது ருசிக்காகக் கொஞ்சம் சாப்பிடலாம்.

முள்ளங்கி

இது குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் 3 வகைகள் உள்ளன. அவை
1. வெள்ளை முள்ளங்கி
2. சிவப்பு முள்ளங்கி
3. மஞ்சள் முள்ளங்கி
ஆகியவைகள் ஆகும்.
முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன.
இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது.

இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.

வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும், மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

தலைவலி, வயிற்றுவலி, வயிற்றில் எரிச்சல், சுவாசக் கஷ்டம் போன்ற தொல்லை நீங்கும். பற்கள் உறுதிப்படும் பற்கள் சம்பந்தமான நோய்கைளயும் குணப்படுத்த வல்லது. சிறுநீரக உறுப்புகளுக்கு வலுவைத் தரும். சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளை முள்ளங்கியைப் போலச் சிவப்பு முள்ளங்கியும் மருத்துவக் குணம் உள்ளது. இது நரம்புத் தளர்ச்சியைப் போக்க வல்லது. குடலுக்கு வலிமை தருகிறது. உடலுக்கும் உறுதியை அளிக்க வல்லது.

வெள்ளை முள்ளங்கியில் உள்ளது போன்ற காரத் தன்மை இதில் இருக்காது.

மஞ்சள் முள்ளங்கியைக் கேரட் என்று சொல்லுவார்கள். இதைப் பச்சையாக அப்படியே சாப்பிட்டால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும். இதைப் பற்களால் கடித்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் எல்லா விதத் தொல்லைகளையும் நீக்க வல்லது.

சீரண சக்தியை அதிகமாக்கும். கருவுள்ள தாய்மார்கள் அடிக்கடிச் சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் எலும்புகள் வலிமை பெரும்.

நலம் தரும் இலைகள்.

வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.

கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.

முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.

புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.

புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.

கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது.- ஆர். பிருந்தா ரமணி,

மேலும் படிக்க... Read more...

விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.

பயங்கரம். பெண்களும் பலவீனமான இதயமுள்ளவர்களும் காண வேண்டாம்.

பிணம் தின்னும் அகோரி சாமியார்கள்.




இறந்த மனிதர்கள்கள், நாய்களின் சடலங்கள், மலம் உண்பதுடன் மற்றும் மனிதர்களை சிறுநீர் கழிக்க செய்து வாங்கி அங்கேயே குடிக்கும் அகோரி சாமியார்கள் .....


Aghoris Eating Human Flesh Shocking Video.


மேலும் பல அதிர்ச்சி தரும் புனித கங்கை நதியின் புகைப்படங்களை

>>> இங்கே<<<
சொடுக்கி காணுங்கள்

மேலும் படிக்க... Read more...

விடியோ-சின்னாபின்னமான காதலிகள்.

>> Friday, February 27, 2009

பூங்காவில் உலாவ சென்ற காதல் ஜோடிகள்.சின்னாபின்னமான காதலிகள்.சிரித்து உங்கள் வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல‌.

மேலும் படிக்க... Read more...

பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ், கொண்டை கடலை.

>> Thursday, February 26, 2009

சோயாபீன்ஸ் மற்றும் வெள்ளைக் கடலையில் (கொண்டை கடலை அல்லது மூக்கு கடலை) உள்ள சத்துகள் ஸ்டிரோக் எனப்படும் பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்புடைய நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று தெரிய வந்துள்ளது.

உணவில் அதிகளவில் சோயாபீன்ஸ், கொண்டைக் கடலை உள்ளிட்ட புரதச் சத்துகள் நிறைந்த பயறு வகைகளை எடுத்துக் கொள்வதால், அவற்றில் காணப்படும் இஸோஃப்ளே வோன் பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வகை பயறுகளை கொடுப்பதால், அவர்களுக்கு நல்ல குணம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மூளையின் நரம்பு மண்டலத்தில் இரத்தம் பயணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தம் சென்று வருவதில் ஏற்படும் பாதிப்பினாலேயே இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோர், பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
********************************************
CLICK
விடியோ‍-5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில் "கவாலி" பாடுகிறார்

வியப்பாக உள்ளது.5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில்(BREATHLESS)கவாலி பாடுகிறார்.

மேலும் படிக்க... Read more...

விடியோ‍-5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில் "கவாலி" பாடுகிறார்

>> Wednesday, February 25, 2009

வியப்பாக உள்ளது.5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில்(BREATHLESS)கவாலி பாடுகிறார்.

மேலும் படிக்க... Read more...

மஞ்சள் நோய்த் தடுப்பு மூலிகை.

மனிதன் நீடு வாழ்ந்து காயசித்தி பெற்று உய்ய வழி தேடியவர்கள் சித்தர்கள். மனிதன் உடலிலுள்ள உயிரணுக்கள் அழுகி விடுவதால் பலவித நோய்கள் சம்பவித்து உயிர் போய்விடுகிறது என்று எல்லா மருத்துவ முறைகளும் சொல்கின்றன.

அணுக்கள் அழுகா வண்ணமும், உடலின் புறத்திலுள்ள தீய அணுக்கள் உள்ளே புகுந்து நாசத்தை விளைவிக்காமலிருக்கக்கூடிய பொருள்களில் தலைசிறந்த மூலிகை மஞ்சளே.

இதற்கு ஆதாரம், நாம் வெகு தூரம் போய் தேடவேண்டியதில்லை. நம் வீட்டு ஊறுகாய் பானையுள் உற்று நோக்கினால் போதும். உப்பும், மஞ்சளும் சேர்த்தாலொழிய எந்த ஊறுகாயும் பூர்ணம் பூக்காமல் இராது.

பூசணம் பிடிக்கிறதென்பது வெளியிலுள்ள žவ அணுக்கள் அதனுள் புகுந்து மனிதன் உணவுப் பொருள்களை உணவாகக் கொள்கிறது. ஆகவே, எந்த பொருளாயினும் சரி, அது அழுகலில்லாமலிருக்க மஞ்சளையும் உப்பையும் சேர்க்க வேண்டும்.

மஞ்சள் ஓர் கற்ப மூலிகையென்பது தெரியாமலே நாம் பரம்பரையாய் நம் வீட்டு சமையலில் உபயோகித்து வருகிறோம். ஆயினும் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டால் நாம் இன்னும் வேண்டிய அளவில் உட்கொள்ள வாய்ப்பு இருக்குமல்லவா?

மஞ்சள் வகையில் கப்பு மஞ்சள், கரி மஞ்சள், மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என நான்கு வகைகள். அவைகளுள் முதல் இரண்டும் ஒரு இனத்தைச் சேர்ந்ததே. இவைகளில் நாம் எடுத்துக் கொண்ட பொருள் முதல் இரண்டும். கப்பு மஞ்சள் என்பதை பூசுமஞ்சள் என்று சொல்வர்.

இதை பெண்கள் குளிக்கும்போது கல்லில் உரைத்து உடம்பில் பூசிக்கொள்வர். சோப்பு பூசிக்கொள்ளும் பழக்கம் வந்த பின் இந்த மஞ்சளின் உபயோகம் குறைந்துவிட்டது. ஆயினும் இப்பொழுதும் கூட சோப் உபயோகம் முடிந்த பிறகு, மஞ்சளை உபயோகப்படுத்தலாம்.

இதை உள்ளும் புறமும் உபயோகப்படுத்துவதினால் உடல் பொன்மேனியாகுமென்று சித்தர் நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு மஞ்சள் ஓர் முக்கியமான பொருளாகும். புருஷர்களை வசியப்படுத்தும் மூலிகையாம்.

உடலில் அதன் வாசனையிருக்கும்படி செய்து கொள்வது நன்று. அந்த வாசனையை நுகரும் ஆணுக்கு அப்பெண்ணின் ஞாபகமே இருக்குமாம்.

மற்றொரு உபயோகம்: இந்த பூசுமஞ்சளை சில துளிகள் தேங்காயெண்ணெயில் உரைத்து மேனியில் பூசிக்கொண்டால் தீய கிருமிகள் அவ்விடத்தில் அண்டாமலிருப்பதுமன்றி அவ்வுறுப்பு வலிவு பெறும். புணர்ச்சி செய்யுங் காலத்தில் ஆண்களுக்கு இன்பம் பல மடங்குகள் உயருகிறது. இதை உபயோகித்து வர அனுபவ வாயிலாக அளவை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வித உபயோகம் செய்பவர்களுக்கு மேனிக்குள் புற்று வியாதிகள் உண்டாகாது. இதன் பெருமையை கீழே காணும் செய்யுட்களால் நன்கு அறிந்து கொள்ளலாம்.

பொன்னிறமாம் மேனி புலானாற்றமும் போகும்
மன்னு புருஷன் வசியமாம் - பின்னியெழும்
வாந்தி பித்ததோஷம் ஐயம் வாதம்போம் தீப்னமாம்
கூர்ந்த நறுமஞ்சள் தனக்கு
தலைவலி நீரேற்றம் சளையாத மேகம்
உளைவு தருபீனசத்தின் ஊடே - வலிசுரப்பு
விஞ்சு கடிவிஷமும் வீறுவிரணங்களும் போம்
மஞ்சள் கிழங்குக்கு மால்

கற்ப பிரயோகம்

கப்பு மஞ்சள் என்பது பெரிதாகவும் உருண்டை வடிவத்திலுமிருக்கும். கரி மஞ்சள் குச்சியாயிருக்கும். இவை இருவகையின் பேரிலும் மஞ்சள் நிறத்தை கொடுப்பதற்காக ஈய செந்தூரத்தை ஒருவித மருந்தில் கலந்து அதில் மஞ்சளை பிறட்டி, உலர்த்துவர். இந்த ஈய செந்தூரம் உடலுக்கு உபாதையைத் தரும். ஆகவே, நம் வீட்டில் உபயோகிக்கும் மஞ்சளை முதலில் தண்­ரில் ஊறவைத்து எடுத்து 7,8 முறைகள் தண்ணீரில் அலம்பி சுத்தம் செய்து உலர்த்தி பிறகு இடித்து சமையலுக்கோ மருந்துக்கோ உபயோகப்படுத்த வேண்டும்.

இந்த முறையில் சுத்தம் செய்த கப்பு மஞ்சள் தூளை சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலையில் ஒரு சிட்டிகை வாயிலிட்டு ஒரு முழுங்கு தண்ணீர் சாப்பிடவேண்டும். இவ்விதம் சாப்பிட்டு வருவதால் உடலில் புண்கள், படை, குஷ்டம் முதலிய பிணிகள் தாக்காது. கருப்பு தேகம் பெற்ற பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே உண்டு வர பருவமடையும் காலத்தில் கருப்பு நிறம் மாறி மாநிறச் சாயல் பெறுவர்.

மேற்பூச்சுகள்

குழந்தைகள், பெரியோர்களுக்கு உடலில் அரிப்பு, சொரி, சிரங்குகளுக்குக் கீழ்க்கண்ட எண்ணெயை தயாரித்துக் கொண்டு தேய்த்து காலையில் குளிப்பதோ, அல்லது தலையில் பூசி ஒரு மணி நேரம் இருக்கச் செய்து குளித்து விட்டு தொழிலுக்குச் செல்வதோ செய்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயினால் பலவித சருமநோய்கள் குணமானது அனுபவ முறை.

1. தேங்காயெண்ணெய் 1 லிட்டர்.
2. குப்பைமேனி இலைச்சாறு 1 லிட்டர்
3. கரி மஞ்சள் தூள் 100 கிராம்

முதல் இரண்டு திரவங்களையும் சிறு நெருப்பில் காய்ச்சி சிடு சிடுப்பு அடங்கும் சமயம் மஞ்சள் பொடியை அதில் போட்டு கிளறி இறக்கி ஆறவைத்து எண்ணெயை வடித்து புட்டியிலடைத்துக் கொள்ளவும். இதை மேற்கூறிய முறைகளில் உபயோகிக்கவும் வெட்டுக் காயங்களுக்கு எண்ணெயில் சீலையை முக்கிப் போடவும்.

இருமல், தடுமம், பீனசத்திற்கு

உஷ்ணம் அதிகரிப்பினால் சிலர் (கக்... கக்...) என்று ஓயாது இருமி கஷ்டப்படுவார்கள், இரவில் தூக்கமே வராது. இதற்கு கரி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டியளவு, அப்பொழுது கரந்த பசும்பாலில் (காய்ச்சாமல்) கலக்கி உள்ளுக்கு காலை மாலை மூன்று நாட்களுக்கு சாப்பிட எந்த வைத்தியரிடமும் போகவேண்டிய அவசியமில்லாமல் குணமாகும்.

மேலும் படிக்க... Read more...

சிரிப்பு விடியோ--திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது?

>> Tuesday, February 24, 2009

சிரித்து உங்கள் வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல‌ காணாமற்போன
திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது?


மேலும் படிக்க... Read more...

ஆனந்தவிகடன்-- மௌலானா ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்! - நவீன கல்வியின் சிற்பி

இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும்.

தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன்.

அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம் " என்று அழைத்தனர்.

அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்தபதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.

அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற பூனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது.

ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது.

பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார்.

அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது.

1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்.

"அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார்

நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1170&Itemid=360

********************************************************************

நவீன கல்வியின் சிற்பி--அபுல் கலாம் ஆஸாத்!

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. மவ்லானா என்றழைக்கப் பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேசக்கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசக்கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்தக் கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியைக் குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

அனைத்துக் கல்வித் திட்டங்களும் மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.

இலவசக் கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

"நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை; ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது" என்று சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும் அலியா அம்மையாருக்கும் மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானைக் கற்றுத் தேர்ந்தார்.

17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப் பட்டார்.

கெய்ரோவில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.

காந்தி மற்றும் நேரு ஆகியோருடன் மௌலானா ஆசாத்

1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பிறகு, "இந்தியா விடுதலையை வெல்கிறது' (இண்டியா வின்ஸ் ஃப்ரீடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.

முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தைப் புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.

35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.

1942இல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கியப் பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தபோது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்தார்.

14 வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கல்கத்தாவில் உள்ள ஆசாத் அருங்காட்சியகம்

பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தார். "பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது" என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

எகிப்தில் உள்ள கலாச்சார மையம்

1951இல் காரக்பூரில் இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. "மதவாதத்தை ஒரேடியாகக் குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசும்போது, எந்தக் காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும் இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குர் ஆனை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார்.

1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP