**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கொலைகளுக்குக் காரணம் சினிமா! தொலைக்காட்சி ஒரு வன்முறை ஆயுதம்.

>> Sunday, September 21, 2008

தொலைக்காட்சி பார்க்காதே என்றதால் சிறுவன் தற்கொலை.தொடர் கொலைகளுக்கு சினிமா காரணம் என பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் கொடூரமான முறையில் கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்தக் கொலைகள் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாகவும் ஆதாரம் இல்லாமலும் செய்யப்படுகின்றன.

தற்போது சென்னையில் நடைபெறும் `சைக்கோ கொலைகள், நொய்டாவில் நடைபெற்ற குழந்தை கொலைகள் மற்றும் பல்வேறு கொலைச் சம்பவங்கள் காவல்துறை மூளைக்கே போக்குகாட்டுவதாக உள்ளது. இந்த நிலையில் தொடர் மற்றும் நுட்பமான கொலைச் சம்பவங்களுக்கு சினிமாவும் காரணம் என்ற கருத்து எழுந்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 100-வது நாள் படம் இது சத்தியராஜ் நடித்தது. இதில் தொடர் கொலைச் சம்பவங்கள் காட்டப்பட்டன. இந்த படம் ஆட்டோ சங்கரால் நடத்தப்பட்ட கொலைக்கு வழி வகுத்தது.
இதுபோல் பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படமும் தொடர் கொலைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டது. இதில் கமல ஹாசன் ஸ்ரீதேவி நடித்தனர்.

இதுபோல் பாக்யராஜின் விடியும்வரை காத்திரு திரில்லர் படம் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் ஆகியவையும் பல கொலைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டவை.

மேலும் சமீபத்தில் வெளியான அன்னியன், கமலஹாசனின் இந்தியன், வேட்டையாடு விளையாடு உள்பட பல 4 படங்களும் கொலை உள்பட வன்முறைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை அமைப்பை கொண்டவை.

இதுபற்றி சென்னையை சேர்ந்த வேதநாயகம் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறும் போது, திரைப்படங்களில் வசூலை மய்யமாகக் கொண்டு கிரைம் கதைகளை படமாக்குகிறார்கள். ஆனால் இந்த சினிமா படங்கள் பிஞ்சு உள்ளங்கள் முதல் பெரியவர்கள் வரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல கொலைச் சம்பவங்களுக்கு இதுவே வழிகாட்டியாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.(நன்றி: `மாலைமலர் 20.7.2008)

தொலைக்காட்சி ஒரு வன்முறை ஆயுதம்.

குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் அய்ந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்குத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் அதிகமாக வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

சனி, ஞாயிறுகளில் - 20 முதல் 25 வரை வன்முறைக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

8000 கொலைகளை - பள்ளிப் படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றனர்.

10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகளை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கின்றனர். அவற்றைப் பார்த்த பின்னர் அது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றனர்.

பள்ளியில் சேருமுன்னரே பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
நினைப்பதை அடைய வன்முறைதான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச் சிகளுக்குத் தண்டனையே இல்லை என்பது போல் காண்பிக்கப்படுகின்றன. அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்படுகின்றன.

நல்லவர்கள் கெட்டவர்களை அடிப் பது நல்லது போலவும், அது சாதாரணமானது போலவும் சித்திரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

தொலைக்காட்சியில் வரும் உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே உடல் நலமும் சத்தும் இருப்பதுபோல் குழந்தைகள் நினைக்கின்றன.ஆனால், உண்மையில் அவ்வாறில்லை; வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே ஒளி பரப்பப்படுகின்றன

தொலைக்காட்சி பார்க்காதே என்றதால் சிறுவன் தற்கொலை.
தொலைக்காட்சியைப் பார்க்காதே என்று கூறியதால் 10 வயதுச் சிறுவன் வீட்டின் உத்திரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

நாக்பூர் அருகே உள்ள திம்கி தாலுகா பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் கமலேஷ் மகருர் கடந்த புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்.

படிப்பில் கவனம் செலுத்தாமல் தொலைக்காட்சி பார்க்கிறாயே என்று அவனது மாமா திட்டியதைத் தொடர்ந்து அந்தச் சிறுவன், திடீரென்று வீட்டின் உத்திரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டான்.

சிறுவனின் இந்த விபரீத முடிவுக்கு அவன் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணம் என அவனது குடும்பத்தினர் கண்ணீருடன் கூறினார். சிறுவன் தூக்குப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு நான் தவறுதலாகத் திட்டவில்லை.

சம்பவத்தன்று நான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, கமலேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தாயார் பலமுறை கூறியும் அவர் நிறுத்தவில்லை. இதனால், நான் கோபமாகத் திட்ட தொலைக் காட்சிப் பெட்டியை அணைத்தேன் என்று அவனது மாமா ருபேஷ் கூறினார்.

தான் விரும்பும் நிகழ்ச்சிகளைப் பார்க்க விடாமல் செய்கிறார்களே என்று சிறுவன் கமலேஷ் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்தத் தவறான முடிவை அவன் எடுப்பான் என யாரும் நினைக்கவில்லை. படிக்கும் வயதில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அவனது வாழ்வைப் பாழ் படுத்திவிட்டது என ரூபேஷ் காவல் துறையில் தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் உண்மையான வாழ்விற்கு முரணான சம்பவங்கள் தொடர்ந்து காட்டப் படுவதால் அதைப் பார்க்கும் சிறுவர்கள் - கமலேஷ் போன்று விபரீத முடிவை எடுக்கிறார்கள்.
-------------------------------------------------
வாஞ்ஜுர் தலைவாசல்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP