**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - - சு.அறிவுக்கரசு.

>> Tuesday, June 9, 2015

இருட்டில் திருட்டு ராமன் - - சு.அறிவுக்கரசு
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமஜென்ம பூமி என்று சொல்லிக்கொண்டு பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை வைத்தவர்களின் சூழ்ச்சிகளை உரித்துக்காட்டும் இது.


1949 டிசம்பர் 23, காலை 9 மணி. உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியா நகரம் காவல் நிலைய அதிகாரி பண்டிட் ராம்தேவ் துபே என்பவர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார். எஃப் அய் ஆர் என்று எல்லோரும் சொல்லும் அறிக்கை அபிராம்தாஸ், ராம்சகல் தாஸ், சுதர்சன் தாஸ் மற்றும் 50 முதல் 60 பேர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்தியன் பினல் கோட் பிரிவுகள் 147, 448, 295 ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் புரிந்ததாக அவர்கள் மீது புகார். கலவரம் செய்து, அடுத்தவர் இடத்தில் அத்துமீறி நுழைந்து, வழிபாட்டு இடத்தின் புனிதத்தை மாசுபடுத்திய குற்றங்கள் புரிந்ததாகப் புகார்.

நான் காவல் நிலையத்திற்கு இன்று காலை 7 மணிக்கு வந்தபோது நிலையக் காவலர் எண் 7 உள்ள மாதா பிரசாத் மூலம் கீழ்க்கண்ட விவரங்கள் தெரிய வந்தன. சுமார் 50_60 நபர்கள் பாபர் மசூதியின் காம்பவுண்டு கதவைப் பூட்டியிருந்த பூட்டை உடைத்து, மதில் சுவரின் மேல் ஏறி உள்ளே குதித்துப் படிக்கட்டுகளின் வழியே உள்புறம் சென்று சிறீபகவானின் பொம்மையை வைத்து சீதை, ராமன் முதலிய சித்திரங்களை உள்புறச் சுவரிலும் வெளிச் சுவரிலும் வரைந்து விட்டதாகவும் காவலர் எண் 70 ஹன்ஸ்ராஜ் அந்த நபர்களைத் தடுத்ததாகவும் அவர்கள் அதனை லட்சியம் செய்யவில்லை என்பதாகவும், பின்னர் அங்கே காவலில் இருந்த சிறப்புக் காவல்படையினரை (பி.ஏ.சி) அழைத்ததாகவும், அவர்கள் வந்து சேர்வதற்குள் அந்த நபர்கள் மசூதியின் உள்ளே சென்றுவிட்டதாகவும் தெரிய வந்தது. காவல்துறை மூத்த அதிகாரிகள் வந்து நடவடிக்கைகளை எடுத்தனர். அதன்பின்னர் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்குமளவில் பெருங்கூட்டம் மசூதிக்கு முன்னர் திரண்டு பஜனைகளைப் பாடிக் கொண்டும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டும் கூடிவிட்டனர்.

அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. என்றாலும் குற்றவாளிகளான அபிராம்தாஸ், சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் 50 _ 60 நபர்கள் மசூதிக்குள் பலவந்தமாகப் புகுந்து ஒரு பொம்மையை வைத்து, அதன் புனிதத் தன்மையைக் கெடுத்துவிட்டனர். அங்கே இருந்த அதிகாரிகளும் மற்றவர்களும் அதைப் பார்த்தனர். வழக்கு சம்பந்தமாக சரிபார்த்து, விசாரித்து உண்மையெனக் கண்டறியப்பட்டது என்பன எஃப் அய் ஆரின் வாசகங்கள்.

அற்புதம் நடந்ததா?

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமஜென்ம பூமி என்று சொல்லிக்கொண்டு, குழந்தை ராமன் பொம்மையை வைத்துக் கொண்டு, இடத்திற்குப் பாத்யதை கோரும் வழக்கையும் தாக்கல் செய்து, மொத்தப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு சொந்தம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பையும் வாங்கி இருப்பவர்களின் யோக்யதையைத் தோல் உரித்துக்காட்டும் முதல் தகவல் அறிக்கை இது.

அற்புதம் நடக்கப் போகிறது என்று தண்டோரா போடாத குறையாக விளம்பரம் செய்து, துண்டு நோட்டீசு அச்சடித்துப் பரப்பி, உள்ளூர் இந்தி ஏடுகளில் கட்டுரைகள் எழுதி, குதிரை வண்டிகளில் ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்து, சுற்றுப்பகுதி இந்துக்களை ஏராளமாக வருவித்து ஏமாற்றம் அடைந்த இந்துமகா சபையினர் நான்கு நாள்கள் கழித்து திருட்டுத்தனமாக மசூதியின் உள்ளே புகுந்து அயோக்கியத்தனமாக ராமன் குழந்தை பொம்மையை (ராம் லல்லா) வைத்துக் கிரிமினல் குற்றம் செய்ததைத் தோலுரித்துக் காட்டும் எஃப்அய்ஆர் வாசகங்கள் அம்பலப்படுத்திவிட்டன.
நடந்ததுதான் என்ன?

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு 11 மணி. அயோத்யா நகரில் அனைவரும் உறக்கத்தில் இருந்த நேரம். அதிலும் சலசலத்து ஓடும் சரயு நதிக்கரையில் படுத்துத் தூங்கும் சன்னியாசிகள், பைராகிகள், பக்தர்கள் முதலிய அனைவரும் முன்னதாகத் தூங்கி முன்னதாக எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் ஆழ்ந்த நித்திரையில் இருந்திருந்த வேளை.

நதிக்கரையில் இருந்த ராம்காட் (ராமன் கூட்டம்) கோயிலின் முன்பாக அபிராம்தாஸ் மட்டும் நின்று கொண்டிருந்தான். அந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அனுமான் கார்கி எனும் கோட்டை போன்ற கோயிலின் உள்ளே சமக்கிருத பாடசாலை, சாதுக்கள் தங்கும் அறைகள், அடிமாடுகளின் கொட்டகை போன்றவை உள்ளன. அங்கேதான் அபிராம்தாஸ் இரவில் படுத்துக் கொள்வான். அவனுடன் அவனுடைய மூன்று தம்பிகள், இரண்டு ஒன்றுவிட்ட தம்பிகள் தங்கியிருந்தனர். உணவு சமைத்து அவர்கள் அபிராம்தாசின் அறைக்கு எடுத்துக் கொண்டு வந்து தருவார்கள். அபிராம்தாசுக்கு ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் என்று ஒரு கூட்டாளி உண்டு. இவர்கள் இருவருமே இந்துமகா சபைக்காரர்கள். அபிராம்தாஸ் தீவிர உறுப்பினர். ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் அயோத்தி நகர இந்துமகாசபா தலைவன். சமக்கிருதம் படித்தவன். அபிராம்தாஸ் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறி.


இவர்கள் இருவரும் சேர்ந்து, பாபர் மசூதியின் உள்ளே சென்று ராமன் பொம்மையை வைப்பதாகத் திட்டம். அபிராம்தாஸ் இருப்பிடத்திற்கு பரமஹம்ஸ் இரவு 9 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பது திட்டம். குழந்தைராமன் பொம்மையை பிருந்தாவன்தாஸ் என்பவன் எடுத்துக் கொண்டு வந்ததும் மூவருமாகச் சதித்திட்டத்தை நிறைவேற்றுவதாகவும் திட்டம்.

அற்புதம் நடத்தப்பட்டது

இரவு 12 மணிக்கு முன்னதாக மசூதிக்குள் புகுந்துவிட வேண்டும். ஏன் என்றால் காவல் துறையினரின் பாரா மாறும் நேரம் 12 மணி. புதிதாகப் பாரா செய்பவர்கள் இயல்பாகவே சுறுசுறுப்பாக இருப்பதால் நுழைபவர்களைப் பார்த்துப் பிடித்துவிட முடியுமே!

ஆனால் மூவரில் ஒருவனான ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் திட்டப்படி வரவில்லை! டிசம்பர் 22ஆம் நாள் மாலை வரை இருந்தவன், இரவு காணவில்லை. பின்னரும் மூன்று நாள்கள் வரை அயோத்தியில் இல்லை. எங்கோ பதுங்கிவிட்டான்.

ஆனால், ராமன் குழந்தை பொம்மையைத் தான் வைத்ததாக அவன் பேட்டி கொடுத்து, அது நியுயார்க் டைம்ஸ் ஏட்டில் 22-_12_1991இல் வெளிவந்தது. அதே நாளில் 42 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிக்குச் சொந்தம் கொண்டாடினான். 2003இல்தான் இறந்தான். திகம்பரி அகாரா எனும் பண்டாரங்களின் அமைப்புக்குத் தலைவனாக இருந்தான்.

பரமஹம்ஸ் வருவான் என்று அபிராம்தாஸ் இரவு 10 மணிவரை காத்திருந்தான். அவன் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தான். அங்கும் அவன் இல்லை. அபிராம்தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. தன் தம்பிகளுக்குக் கட்டளைகள் பிறப்பித்தான். எப்படியும் எடுத்த காரியத்தை முடித்துவிடுவது என்ற உறுதி அவன் மனதில் ஏற்பட்டுவிட்டது. அவன்?

யார் இவர்கள்?

அபிராம்தாஸ் ஒரு நாகா பைராகி. அயோத்தி, அனுமன் கார்கி போன்ற பகுதிகளில் நன்கு பரிச்சயமான முரட்டு ராமநந்தி பிரிவைச் சேர்ந்தவன். இப்பிரிவு நிர்வாணி அகாரா எனும் அமைப்பின் ஓர் அங்கம். 1934இல் அயோத்திக்கு வந்தவன் சரயுதாஸ் எனும் பைராகியின் கண்களில் பட்டுவிட்டான். இவனைத் தமது அமைப்பில் சேரும்படி அழைத்தான். உணவு, உடை, தங்குமிடம் எல்லாம் கிடைக்கும்படிச் செய்தான். எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பார்ப்பனனுக்குத் தேவை இந்த மூன்றும்தானே? உழைப்போ, வேலையோ செய்யத் தேவையில்லாமல் கிடைக்கிறதே! கசக்குமா? சேர்ந்துவிட்டான், ஜமுனாதாஸ் எனும் மற்றொரு பைராகிதான் இவனுக்குத் தீட்சை கொடுத்தான். பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தான்.

தலைவனாக இருக்கும் சரயு தாஸ் ஏன் அபிராம் தாசுக்குத் தீட்சை அளிக்கவில்லை? அபிராம்தாஸ் பார்ப்பனன். உயர்ஜாதி. சரயுதாஸ் யாதவ ஜாதி. தாழ்ந்த ஜாதி. ஆகவே பார்ப்பன ஜமுனாதாஸ் பார்ப்பன அபிராம்தாசுக்குத் தீட்சை செய்வித்தான். பைராகிகள் எல்லாம் துறந்தவர்கள். ஜாதியை மட்டும் துறக்காதவர்கள். இதுதான் இந்துமதம். இதை வளர்ப்பது இந்துமகா சபா. இவர்கள் அதன் உறுப்பினர்கள்.

இந்து வெறியர்கள் பலவிதம்

நாகாக்களில் சன்னியாசி என்ற பிரிவும் பைராகி என்ற பிரிவும் தனித்தனி! சிவனைக் கும்பிட்டு, ஆதி சங்கரனின் அத்வைத சித்தாந்தத்தை ஏற்று, தஷ்ணமி சம்பிரதாயம் எனப்படும் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு சன்னியாசி என்று பெயர்.

விஷ்ணுவைக் கும்பிட்டு, ராமானந்தா என்பவரின் சித்தாந்தத்தை ஏற்றுப் பின்பற்றி வருபவர்களுக்குப் பைராகி என்று பெயர்.

ராமானந்தப் பிரிவைச் சேர்ந்த அகாராக்கள் மூன்று உள்ளன. நிர்வாணி அகாரா என்பதும், நிர்மோகி அகாரா, திகம்பரி அகாரா என்பவையும் மூன்றுக்குமான பெயர்கள். மூன்று அகாராக்களும் அயோத்தியில் உண்டு.

அயோத்தியில் பலநூறு ஆண்டுகளாக நிலைபெற்று விளங்குவது தஷ்ணமி சன்னியாசிகளே! இவர்களை ஒழிப்பதுதான் ராமானந்த பைராகிகளின் முதல் வேலை!

மூவாசையையும் மும்மலத்தையும் துறந்தவர்களின் யோக்யதாம்சம் இது!

எல்லாமே காசுக்காக

தஷ்ணமிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுமன் குன்று ஜுனா அகாரா எனும் பிரிவினரால் நிருவகிக்கப்பட்டு வந்தது. நிர்வாணி அகாரா பிரிவினர் தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். இது 18ஆம் நூற்றாண்டில் நடந்தது. ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் இருந்த பைராகிகள் கிழக்கே நகர்ந்து வந்து உத்திரப் பிரதேசத்தில் நிலைபெற்றுவிட்டனர். பாபா அபய்ராம்தாஸ் எனும் நிர்வாணி அகாராவின் குரு அதே காலகட்டத்தில்தான் அயோத்தியாவுக்கு வந்தார். பின்னர் இந்த ஊர் ராமனின் பிறந்த பூமி எனும் நிலைபெற்றது. சிவனை வழிபட்ட தஷ்ணமிகள் துரத்தப்பட்டு வைணவ பைராகிகளின் ஆதிக்கத்தில் அயோத்தியா வந்தது. அனுமன் குன்றுப் பகுதியில் ஒரு மரத்தடியில் இருந்த அனுமன் சிலையை சைவ நாகாக்களும் இசுலாமிய பக்கிர்களும் வழிபட்டு வந்தனர். பைராகிகளின் கைப்பற்றில் வந்த பின்னர் இந்த இரண்டு பிரிவு மக்களும் அனுமனைக் கும்பிட அனுமதிக்கப்படவில்லை. அவர்களைத் துரத்துமாறு அபய்ராம்தாசின் கனவில் அனுமன் வந்து கூறியதாகக் கதைகட்டிப் பரப்பித் தங்கள் ஆக்ரமிப்பை நியாயப்படுத்திக் கொண்டனர்.

கதைகள் எப்படியோ! வரலாறு வேறுவிதமாக உள்ளது. முகலாயர்களுக்குப் பிறகு இப்பகுதியை (ஆவாத் பகுதி) ஆண்ட நவாப்கள் அனுமன் கோயில் கட்டப்பட்டு, பின்னர் கோட்டை (அனுமன் கார்கி) எழுப்பப்பட்டது என்கிறது வரலாறு. 1739 முதல் 1754 வரை ஆண்ட நவாப் சப்தர்ஜங் ஏழு பிகா நிலம் கோயில் கட்ட அளித்தார். ஒரு பிகா என்பது சுமாராக 62 சென்ட்க்குச் சமம். அதில் கட்டப்பட்டதுதான் அனுமன் கோயில். ஆனால் இசுலாமிய மன்னர்களைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது இந்துமத வெறிக்கும்பல்!

முசுலிமின் உதவியால்...

நவாப் சப்தர்ஜங்கின் பேரன் அசப் உத்தவுலா என்பவர் காலத்தில்தான் நிதி வசூலிக்கப்பட்டுக் கோட்டைப் பகுதி கட்டப்பட்டது. நிர்வானி அகாராவின் தலைமைப் பீடமாக அயோத்தி வளர்ச்சி அடைந்தது. இது நடந்தது 1793இல்! தலைமை குருவாக வந்த பலராம்தாஸ் என்பவர் நாகாக்களை நான்கு பட்டிகளாகப் (பகுதிகள்) பிரித்தார். ஹர்த்வாரி, பசந்தியா, உஜ்ஜயினியா, மற்றும் சகாரியா என்று பிரித்தார். ஒவ்வொரு பட்டிக்கும் குருவை நியமித்தார். நிலங்களையும் பட்டிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். பட்டிகளுக்குள் பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்பதற்காக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. இது நடந்த ஆண்டு 1925.

ராமன் பொம்மையைக் கொண்டு வந்து மசூதிக்குள் வைத்த முதல் குற்றவாளியான அபிராம்தாஸ் 1904இல் பிறந்தவன். மைதிலி பார்ப்பனப் பிரிவைச் சார்ந்தவன். அவன் தந்தை ஜெயதேவ் மிஸ்ரா என்பவர் புரோகிதத் தொழில் செய்தவர். ஏழு பிள்ளைகள். அனைவருக்கும் உணவு கொடுக்க மிகவும் சிரமப்பட்டவர். அபிராம்தாஸ் மூத்தவன். அவனுக்கு 20 வயது குறைந்த கடைக்குட்டித் தங்கை படாஹி. மிகவும் செல்லம். அபிராம்தாஸ் ஓராண்டு மட்டுமே பள்ளிக்குப் போனான். பிறகு தன் அப்பாவுக்கு உதவியாக பூப்பறித்தல், ஏனம் கழுவுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டான். அக்கிராமத்தில் வேறு வேலை வாய்ப்புகள் கிடையாது. விவசாய வேலை மட்டுமே உண்டு. இவன் பார்ப்பனன் ஆதலால் விவசாய வேலை செய்யக்கூடாது. மனு சாத்திரத்திற்கு விரோதம். ஆகவே ஒருநாள் இரவில் வீட்டைவிட்டு ஓடிப்போனான்.

- (தொடரும்)

SOURCE:unmaionline 2013 ஜூலை 01-15

***********************

***பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - சு.அறிவுக்கரசு. PART 2. ***

***
பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன். சு.அறிவுக்கரசு. PART 3.
***


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


1 comments:

UNMAIKAL June 10, 2015 at 11:16 AM  

ராமர் கோவில் என்ற பொய்யும், பார்ப்பன இயக்கங்களின் அரசியல் லாபமும் ...

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர் .பாபரை எதிர்த்தவர். . பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார்.

பாபர் மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர்.
அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர்மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது.

இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார்.

இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசியிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக்பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754-ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்...

பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனிவர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர்களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர்கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக ஏன் அறிந்திருக்கவில்லை?

இவர்கள் யாரும் பாப்ரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் ராமர் கோவில் என்ற ஒன்றை இடித்துத்தான் கட்டபப்ட்டது என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை..

வெள்ளையர்கள் நாட்டை விட்டுப் போனாலும் கூட நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பார்பன கூட்டம் மீண்டும் தங்களது பிரித்தாளும் சூழ்சியை அரங்கேற்ற ஆரம்பிக்கப்பட்டது தான் பாப்ரி மஸ்ஜித் நிலம் பார்பன இயக்கங்களின் பிராமண கடவுள் ராமர் பிறந்த இடம் என்ற பொய்யான வதந்திகள்.
காரணம் இதன் மூலம் மக்கள் இதை பற்றி மட்டும் சிந்திக்கும் போது இவர்கள் ஏகபோகமாக ஆட்சி மற்றும் அதிகாரங்களை அனுபவிக்கலாமல்லவா.அது தானே நம் நாட்டில் நடந்து வருகிறது

.பின்னர் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதை வைத்தே கலவரங்களை நாடு முழுவதும் பார்பான் இயக்கங்கள் அரங்கேற்றி ஆயிரக்கணகான அப்பாவி மக்களை கொன்று ஆட்சியையும் பிடித்தார்கள்.. மீடியாக்களும் தங்களின் பங்குக்கு ராமர் பற்றிய பாமர மக்களுக்கு பக்தியை ஏற்ற நாடகங்கள் உள்ளிட்டவை பரப்படுகிறது .இதன் மூலம் பார்பன இயக்கங்களின் சதி நிறைவேறுகிறது

இந்த கூடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் உண்டு என்பதே மறுக்க முடியாத உண்மை..காங்கிரஸ் மட்டும் நினைத்திருந்தால் நாட்டின் திட்டமிட்ட பார்பன இயக்கங்களின் கலவரத்தையும் தடுத்து இருக்கலாம்..பாப்ரி மஸ்ஜித் தையும் காப்பாற்றி இருக்கலாம்..

இன்னும் ஒரு உண்மையை கூற வேண்டுமானால் வரலாற்றை பார்ப்போமேயானால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தான் பார்பன இயக்கங்கள் கூறியபடி வழிபாட்டு உரிமை என அனைத்தும் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டது எனபதே உண்மை.

எது எப்படியோ இவர்களின் சுய நல அரசியலுக்காக கொல்லப்பட்டது என்னவோ அப்பாவி மக்கள் தான்..இடிக்கப்பட்டதும் நூற்றாண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல்..

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP