**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அப்பாவி முஸ்லீம்களை பழிவாங்கும் இந்துத்வா-காவி- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம்.

>> Monday, May 13, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு! ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு சொந்தமான சிம்கார்டு ஆதாரத்தை மறைக்க முயற்சி?

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்துக்கு தொடர்ச்சியாக பழிவாங்கப்படும் அப்பாவி முஸ்லீம்கள்.

பெங்களுருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டதைக் கண்டித்து

மூத்த தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், எம்.எல்.ஏ., பேட்டி

கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு குண்டுவெடித்தாலும் அதைச்செய்தது முஸ்லிம்கள் என்ற நச்சுக்கருத்து மக்களின் பொதுபுத்தியில் விதைக்கப்பட்டுள்ளதால் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியமே இன்றி கையில் கிட்டும் சில முஸ்லிம்களை ஊடகங்கள் முன்பாகக் காட்டிவிட்டால் போதும் என்ற அவலநிலை நாட்டில் நிலவுகிறது.

முஸ்லிம்களெல்லாம் உலக மகா உத்தமர்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்களிலும் சிலர் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கக் கூடும் அல்லது நக்சலைட்,விடுதலைப்புலிகள் போன்று வெவ்வேறு கொள்கைக்காக குழுவாக செயல்பட்டிருக்கக்கூடும். குண்டுவெடிப்பு மட்டுமல்ல பிக்பாக்கெட் அடித்தாலும் அவன் முஸ்லிம் என்றால் நமது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பெங்களூரு குண்டுவெடிப்பு நடந்த பிறகு உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தன.மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு என்ற தகவலையொட்டி அந்த வாகனத்தின் சேசிஸ் எண்ணை வைத்து தமிழகத்தைச் சார்ந்தது என்று துப்பறிந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முதல் விற்கப்பட்ட ஷோரூம் வரை அனைத்து தகவல்களையும் பெற்றனர். அவர்களின் முதல்கட்ட விசாரணையில் தொடர்புடையவர்களில் எவருமே முஸ்லிம்கள் அல்லர்.

எனினும், குண்டு வெடித்திருப்பது பாஜக அலுவலகம் என்பதால் அதை முஸ்லிம்கள்தான் செய்திருக்க முடியும் என்ற பொதுபுத்தியில் பதிக்கப்பட்டுள்ள குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் விசாரணை முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைச் சுற்றியே சுழல்கிறது.

இந்நிலையில்,நேற்றைய செய்தியில் வந்துள்ள தகவலில் முஸ்லிமல்லாத ஒருவருக்கும் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இதர ஊடகங்கள் முஸ்லிம் விரோத போக்கில் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட சிம்கார்ட் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு (கவனிக்கவும் "பிரமுகர்") சொந்தமானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் கேரளா-கர்நாடகா எல்லைப்பகுதியைச் சார்ந்தவராம். (மங்களூர் என்று சொன்னால் குடியா மூழ்கிவிடும்?). அந்த பிரமுகரின் பெயர், முகவரி குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லையாம். எனினும்,அந்த பிரமுகரின் சிம்கார்ட் குண்டுவெடிப்புக்கு இருநாட்கள் முன்னதாகவே காணாமல் போய்விட்டதாம். வழக்கை திசைதிருப்புவதற்காக (அப்பாவி?) ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் சிம்கார்டை பயன்படுத்தி இருக்கலாமோ என்றும் தனது கருத்தையும் கலந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் செல்போன் சிம்கார்டு ரிமோட் கன்ட்ரோலாக பயன்படுத்ததப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பே பிரமுகரின் சிம்கார்டு காணாமல் போனதை ஏன் புகார் செய்யவில்லை? சிம் கார்டுதானே இதையெல்லாமா புகார் செய்வது என்று மெத்தனமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன்பே காணாமல் போனது என்று சொல்வதுதான் நெருடலாக உள்ளது. ஏனெனில், அந்த சிம்கார்டுதான் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்த பிறகு இவ்வாறு சொல்வதை எவனும் ஏற்கமாட்டான் என்ற குறைந்தபட்ச அறிவுகூட செய்தி வெளியிட்டவருக்கு இல்லை என்று சொல்வதில் தவறில்லை. -BY:அருணகிரி

முன்னதாக மாலேகான் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் குண்டுவெடிப்பு, அஜ்மீர் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு என பல்வேறு வழக்குகளிலும் முதலில் அப்பாவி இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்து, பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்தனர். இதுபோன்ற தாக்குதல்தான் தற்போது பெங்களுர் பா.ஜ.க அலுவல குண்டுவெடிப்பு தாக்குதலிலும் இணைந்துள்ளது.

இந்த சிம்கார்டு ஆதாரம் மூலம், தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் வெளிப்பட்ட சதிதிட்டத்தினைப் போன்று தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பின் சதியும் வெளிப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் சிறுபான்மை விரோதப்போக்கு ஆகியவற்றால் மக்கள் செல்வாக்கை இழந்திருந்த பா.ஜ.க இழந்த செல்வாக்கை காப்பற்றும் விதமாக அக்கட்சியின் அலுவலகத்தில் திடீரென குண்டுவெடித்தது.

இதனை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய வெடிக்குண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவரும் கூறியிருந்தார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்! ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது!

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் 11 May 2013 இன்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் பேசும்போது; தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. கடந்த ஏப்ரல் 17 அன்று பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகத்திற்கு முன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது கண்டிக்கத்தக்கது, இதில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவ்வழக்கில் நடந்த சமீபத்திய கைது நடவடிக்கைகள் முஸ்லிம் சமுதாயத்தைக் குறிவைத்தே திட்டமிட்டு நடத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட சில முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும். பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன் நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர். பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.

இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்று தமிழகத்திலும் இந்த நிலை உருவாக்குவது வேதனைக்குரியது.

வகுப்புவாத உணர்வின்றி செய்ய வேண்டிய இந்த உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் ஒரு சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருப்பதும் தமிழக முதல்வரின் கவனத்தை எட்டுகிறதா என்பது தெரியவில்லை. அதேபோல் முஸ்லீம்கள் குறித்து சரியான, நேர்மையான தகவல்கள் அறிக்கைகள் தமிழக முதல்வருக்கு உளவுத்துறையினர் சமர்பிக்கப்படுவாதகவும் தெரியவில்லை.

காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் உளவுத்துறையும், காவல்துறையையும் சீரமைக்க வேண்டுமெனில் சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். என்றனர்.

இதையடுத்து காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை கைது செய்ய முற்பட்டபோது, கலந்து கொண்ட அனைவரும் எங்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று கூறி தர்ணா செய்தனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்

Ref: inneram.com, thoothuonline.com. t.m.m.k.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., காவி பயங்கரவாதம்.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு பின்னணியில் யார்?

பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்..!

இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன,

இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது,

மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக, கைது செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவர் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்,

2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி. 2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

குஜராத்தில் நரமாமிச‌முண்ணும் மோடியால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

கொலைகார அத்வானியின் ர(த்)த யாத்திரையின் போதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP