**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந்துக்களிடமிருந்து...!

>> Monday, January 28, 2013

அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. 
 
இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர். 
 
உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் 
‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு 
எதிராக புகார் மனு அளித்தனர். 
 
அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். 
 
அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். 
 
தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார். 
 
‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும். 
 
‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். 
 
எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். 
 
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற 
இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் 
திரையிட்டு காட்ட வேண்டும். 
 
‘ஆதிபகவன்‘ தலைப்பையும் நீக்க வேண்டும்," என்று கோரியுள்ளார். 
 
SOURCE:http://tamil.oneindia.in/movies/news/2013/01/ameer-s-aadhi-bhagavan-trouble-now-168751.html

*************
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் 
 
விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன், விஷகருத்துகள் முறைதனா? 
 
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார். 
 
இங்கே சொடுக்கவும் //////// விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?//////////////////
 
 

3 comments:

Unknown January 29, 2013 at 12:09 PM  

பெரியவர் வாஞ்சூர் அவர்களின் சார்பில் எனது கண்டனங்கள் :

சலாம்.,

இந்து முஸ்லிம் இடையே பிரிவை உண்டாக்கும் பதிவராம்..என்னமோ இவர்தான் அந்த பதிவை உண்டாக்கியது போல..அதன் தலைப்பு உட்பட வேறு ஒரு தளத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டதை மறைத்து,இஸ்லாமியர்கள் மேல் உள்ள காட்டத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் ஒரு பதிவர்...ஒரு இஸ்லாமியர் மேல் சொல்லும் அவதூறை நாம் கண்டித்தோமா ?

//ஏன்யா கொஞ்சமாவது புத்தி இருக்காதா,//

//உனக்கு என்ன புத்தி தெரியுமா, //

அவரது வயது என்ன..? எதற்கு இந்த ஏக வசனம் ! வேறு ஒரு தளத்தில் இருந்து காப்பி பண்ணியதற்கா ? சகோ.ஆசிக் அஹ்மத் அதற்க்கான விளக்கத்தை கொடுக்கிறார்..அதற்க்கு அவர் கொடுக்கும் பதிலை பாருங்கள்..

//பரவாயில்லை ஆஷிக். விளக்கத்திற்கு நன்றி. ஆனால் பிரச்சனை ஒருவருடையது இல்லை, அதுவும் நான் எந்த இசுலாமிய பதிவர்களையும் குறிப்பிடவில்லை. அமீரை எதிர்க்கும் இந்துக்களைத்தான் எதிர்க்கிறேன்.//

இதற்க்கு முந்தைய பின்னூட்டத்தில் நாயை யாராவது கல்லை விட்டு எரிய வேண்டாமா என்று கேக்கிறார்..அதே வாயால் இப்படியும் கூறுகிறார்..மனிதாபிமானி தளத்தில் போட்ட ஒரு பதிவுதான் நியாபகம் வருகிறது :-)) நீங்கள் செய்த செயலை தளத்தில் போடும்போது எதிர்ப்புகள் என்னமா இருந்தது..! அதையே அடுத்த ஒரு பதிவர் பற்றி அவதூறு போட்டால் கேட்க ஆளில்லை..ஆசிக் கூறியவுடன் பதிவுக்கே அர்த்தம் இல்லை..தவறாக பதிவை இட்டுவிட்டேன் என்று கூறும் மனப்பாங்கும் இல்லை..!

இவர்களுக்காக இன்னும் எத்தனை முஸ்லிம்களைத்தான் நாம் விட்டுக்கொடுக்க போகிறோமோ..!!!

VANJOOR January 29, 2013 at 12:47 PM  

நன்றி நாகூர் மீரான்.

நாம் தொடர்வோம் சீரான நம் வழியில்.

நம் சீரான வழி நமக்கு.

அவர்களின் கேடான வழி அவர்க்கு.

விட்டுத்தள்ளுங்கள் குப்பைகளை.

Unknown January 29, 2013 at 1:01 PM  

சலாம்.வாஞ்சூர் ஐயா !

அது உங்களின் பெருந்தன்மை...ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்பட்டதை அந்த முஸ்லிம்தான் மன்னிக்கலாம் ...ஆனால் இங்கு மற்ற முஸ்லிம்கள் மன்னித்து சகோதரத்துவத்துடன்(!!) இருக்கின்றனர் . இது களையப்பட வேண்டும் என்பதே நம் அவா..! மற்றபடி அந்த குப்பைகளை நாம் பொருட்படுத்த தேவை இல்லை தான் ..

நன்றி !!!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP