**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

>> Wednesday, January 30, 2013

முஸ்லிம் விரோத  உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

 'விஸ்வரூபம்' பார்த்த இலங்கை முஸ்லிம் அமைப்பினர் விளக்கம்..!

விஸ்வரூபம் குறித்து, படம் பார்ப்பதற்கு முன் என்ன மனநிலை காணப்பட்டதோ, அந்த மனநிலை படம் பார்வையிட்டதன் பின்பு, முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர,

கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்வதாக "இலங்கை முஸ்லிம் அமைப்பினர்" தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மனதில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது.


அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

1. இத்திரைப்படத்தின் பெயர் பார்வைக்கு வரும் போது தமிழ் மரபுக்கு மாற்றமாக அரபு எழுத்தணி மரபை பிரதிபலிக்கும் விதமாய் இடமிருந்து வலமாக எழுதப்படுவதை அவதானிக்க முடிகிறது.

2. இவ்வாரம்பமே இத்திரைப்படம் இஸ்லாத்தைக் கருப்பொருளாகக் கொண்டே ஓடப்போகிறது என்பதனை சொல்லாமல் சொல்கிறது.

ஜிஹாத் என்ற அரபுச் சொல் வெறுமனே போராட்டத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிரயோகம் கிடையாது.

உலகத்தில் தாண்டவமாடும் அநீதிகள், அக்கிரமங்கள், தீமைகள் என்பவற்றை வேரடி மண்ணோடு களை பிடுங்கி, நன்மைகளை வாழவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அத்துனை முயற்சிகளும் ‘ஜிஹாத்’ என்ற சொல்லுக்குள் அடக்கும்.

திருக்குர்ஆனும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளும் இதனையே எமக்கு உணர்த்துகின்றன.

இதற்குள் அநீதிக்கெதிராய் ஆட்சியில் இருக்கும் ஓர் அரசு தொடுக்கும் ஆயுதச் சண்டையும் உள்ளடங்கும்.

ஆனால், அர்த்தப் புஷ்டிமிகுந்த ஜிஹாத் என்ற சொல்லை கொச்சைப்படுத்தும் விதமாயும்,

ஆட்சி அதிகாரமற்ற சிறு குழுக்கல் செய்யும் கிளர்ச்சி நடவடிக்கைகளை ஜிஹாத் என்ற சொல்கொண்டு அடையாளப்படுத்துவதன் மூலம் இஸ்லாம் தான் இத்தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டுகிறது என்ற போலித் தோற்றத்தை விதைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, ‘நாம் அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்கள்’, ‘

நம்மைப் போன்ற முஜாஹிதீன்கள் கண்ணீர் சிந்தக் கூடாது.

இரத்தம் தான் சிந்த வேண்டும்.’ என்ற வாசக அமைப்புகளும்,

தாக்குதல் நடாத்தும் செய்தி கிடைத்தவுடன்

‘இன்னஹ_ வக்துன் லித்தஹாபி இலல் ஜன்னஹ் - இதோ சுவர்க்கம் செல்வதற்கான நேரம் கணிந்து விட்டது’ என்பன போன்ற அரபுப் பிரயோகங்களும்

ஜிஹாத் குறித்த தப்பான புரிதலை விதைக்கும் விதமாய் அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்க அம்சமாகும்.

3. முஸ்லிம்கள் தங்கள் சிறார்களை வளர்க்கும் போது கூட பிஞ்சு உள்ளங்களில் தீவிரவாத உணர்வை ஊட்டியே வளர்க்கின்றனர் என்ற கருத்து அழுத்தமாய் சொல்லப்படுகிறது.

ஆங்கிலத்தையும் மருத்துவத்தையும் கற்பதை தடை செய்து விட்டு, ஆயுதக்கலையை கற்பதற்கு குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற காட்சி முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்ராயத்தை அதிகரிக்கவே உதவும்.

அதுமட்டு மன்றி கண்களை கட்டி ஆயுதங்கள் குறித்து விசாரித்தாலும் தொடுகை மூலமே இது இன்ன ஆயுதம் தான் என்று சொல்லும் அளவுக்கு சிறார்கள் முஸ்லிம்களால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற காட்சியும்,

விளையாட்டின் போது கூட விரல்களால் சுட்டு விளையாடுவதே வழமை எனும் காட்சிகள் மூலமும் கமல்ஹாஸன் சொல்ல வரும் செய்தி தான் என்ன?

4. முஸ்லிம்கள் தங்கள் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு முன்னால் மாத்திரம் தலை சாய்த்து ‘நாங்கள் உனக்கு மட்டுமே அடிமை. எம்மைப் போன்ற எந்தப்படைப்புக்கு முன்பும் தலை சாய்த்து சுயமரியாதை இழக்க மாட்டோம்’ என்ற உணர்வை உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தும் இடமே பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடும் சந்தர்ப்பம்.

மன அமைதியையும், சாந்தத்தையும் பயிற்சியாய் தரும் தொழுகை இத்திரைப்படத்தில் இழிவு செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தீவிர வாத தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்பாகவும் தொழுதுவிட்டுத் தான் அத்தாக்குதல்கள் நடாத்தப்படுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழுகை என்ற முஸ்லிம்களின் கடமை தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது. அது மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் எனும் அபய பூமிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்துபவர்களை பயிற்றுவிக்கும் பங்கர்களாக தொழிற்படுவது போன்றும் காட்சியமைப்பு நகர்த்தப்படுகிறது.

இது போன்று சுமார் 6 இடங்களில் இது போன்ற தொழுகை காட்சிக்கும்; தீவிரவாத தாக்குதல்களுக்கும் முடிச்சுப் போடப்படுவதை காணலாம்.

5. முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரமாய் இன்று அறிமுகமாகியிருக்கும் வெள்ளை நிற நீண்ட அங்கி(ஜூப்பா), தொப்பி, தாடி மற்றும் மீஸான் பலகை, திருக்குர்ஆன் பிரதிகள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதோடு,

இவ்வாறான தோற்றத்தில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தும் விதைக்கப்படுகிறது.

இதனால் சாதாரண முஸ்லிமை காணும் போதும் இவனும் தீவிரவாதியாய் இருப்பானோ என்ற எண்ணம் பிறருக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

6. இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒழுக்கவாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஆடை முறையே ஹிஜாப் என அழைக்கப்படும். ஒழுக்கத்தை வளர்க்க உதவும் ஹிஜாபை மலினப்படுத்தும் விதமாய் தீவிரவாதிகள் பெண்களின் ஹிஜாப் ஆடையில் முகம் மறைத்துச் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹிஜாப் என்பது தீவிரவாதத்திற்கு துணை போகும் ஆடை என்ற கருத்து திணிக்கப்படுகிறது.

7. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் கர்ண கொடூரமானவை என்பது போல் சித்தரிக்கும் காட்சிகளும் உள்ளன.

குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஒற்றனாய் திகழ்ந்த ஒருவன் பிடிப்பட்டவுடன் அவனை தூக்கில் போடும் காட்சியை குறிப்பிட முடியும்.

இதில் அவன் தூக்கில் தொங்கும் போது பின்னணியில் அதான் (பாங்கு சத்தம்) ஒலிப்பது போன்றும், ‘இது இவர்களின் கரங்கள் செய்த வினையே’ என்ற அர்த்தத்தை தரும் குர்ஆன் வசனமும் ஒலிபரப்பப்படுகிறது.

அத்தோடு, இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாய் அல்லாஹ_ அக்பர் என்ற முழக்கத்தை அனைவரும் சொல்வது போன்றும் படம் ஓட்டப்படுகிறது. மேலும், கைதிகளை பிடித்து வந்து கதறக்கதற கழுத்தை வெட்டும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து கொண்டு, குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டு, லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்தை தாங்கிய பெனருக்கு முன்னிருந்த வண்ணம் இது நடைபெறுகிறது.

இது இஸ்லாத்தை இழிவு படுத்தும் பாதகச் செயலாகும்.

மேலும், தப்பு செய்தவர்களை மல்லாக்காக படுக்க வைத்து பின் புஷ்டியில் சவுக்கடி கொடுக்கும் காட்சியும் வருகிறது. இவை இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறித்த குறைமதியாளன் கமல்ஹாசன் பொது மக்களுக்கு இஸ்லாத்தை இழிவு படுத்துவதற்காக காண்பிக்கும் காட்சிகளாகும்.

8. முஸ்லிம் நாடுகளும், அரபு பேசும் தேசங்களும் பயங்கரவாதத்தை உலகெங்கும் விதைக்கும் நாடுகள் என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக பாகிஸ்தான் போலிஸ் உஸாமாவை சந்தித்து தீவிரவாதத்திற்கு துணை போவது போன்றும், அல்ஜீரியா, நைஜீரியா, யெமன், காஷ்மீர், ஆப்கான் போன்ற தேசங்கள் முற்று முழுதாக பயங்கரவாதத்தை வளர்ப்பதற்காக பல நாடுகளுக்கு பண உதவி செய்வது போன்றும் காட்சிகள் வருகின்றன.

இதன் மூலம் முஸ்லிம்கள் சிறுபான்மையாய் வாழும் நாடுகளுக்கு இது போன்ற ஜிஹாதிய பண உதவிகள் வழங்கப்படுகின்றன என்ற தப்பான பதிவு பரப்பப்படுகிறது.

9. முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார்.

அது குறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் 'தமிழ் ஜிகாதி என்றால் விலையாக 5 லட்சம் அல்ல, 10 லட்சமே கொடுக்கலாம்” என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

10. அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விட்டு வைக்கவில்லை.

அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.

11. பொதுவாக முஸ்லிம்கள் யாரை சந்தித்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையை அனைத்துத் தீவிரவாதிகளும் ஸலாமலைக்கும் என்று பயன்படுத்தும் காட்சி படத்தின் அனைத்துப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.

12. அதே போல் ஒருவர் தொலை பேசியில் பேசினால் ஹலோ என்று சொல்வார். முஸ்லிம்களாக இருந்தால் ஹலொ அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வார்கள்.

ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தில் தொலை பேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் பேசி முடித்த பின்னரும் அல்லாஹ{ அக்பர் என்று கூறி முடிக்கின்றார்கள்.

13. முஸ்லிம்கள் என்றால் பெண்களை ஏமாற்றுபவர்களாகவும் சொந்த மனைவியை தீவிரவாதத்தை நிகழ்த்துவதற்காக கூட்டிக் கொடுப்பவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.

14. எந்தவொரு காரியத்தை செய்யும் போதும் சத்தியம் செய்வதற்காக வல்லாஹி – அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று அரபியில் சத்தியம் செய்யும் காட்சி.

15. திரைப்படத்தின் வில்லனாக வருபவன் பெயர் முல்லா உமர் - இவன் இரண்டு வருடங்கள் தமிழகத்தின் கோவை மற்றும் மதுரைகளில் தங்கியதாகவும் தமிழ் ஜிஹாதி தான் தனக்குத் தேவையென்றும் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

16. ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள், சிறவர்கள் அனைவரையும் கொலை செய்த அமெரிக்க இரானுவத்தை பற்றி முல்லா உமர் என்ற தீவிரவாதிகளின் தலைவர் - அமெரிக்க இரானுவம் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்யமாட்டார்கள் அதனால் பயப்படத் தேவையில்லை. என்று குறிப்பிட்டு அமெரிக்க இரானுவம் மனித நேயமுள்ள இரானுவம் என்ற காட்சி இடம் பெறுகின்றது.

17. தான் கொல்லப்படப் போகின்றேன் என்று அறிந்த ஹீரோ கமல் அதற்கு முன் தொழுவதற்கு அனுமதி கேட்டு தொழும் போது ரப்பனா ஆதினா பீ துன்யா – என்று முஸ்லிம்கள் சொல்லும் துஆவை ஓதும் காட்சி இடம் பெறுகின்றது.

18. அனைத்துக் காட்சிகளிலும் பின்னனி சப்பமாக அல்லாஹ{ அக்பர் என்ற வார்த்தைதான் இடம் பெறுகின்றது.

19. கொலை தொடர்பான காட்சிகள் அனைத்திலும் திருமறைக் குர்ஆனின் வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது.

20. முஸ்லிம்களின் கடைகளில் ஆயுதம் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைந்திருக்கின்றது. காய் கரி கடையில் கூட ஆயுதத்தைத் தான் முஸ்லிம்கள் விற்கின்றார்கள் என்பதே காட்சியின் அமைப்பு.

21. முஸ்லிம்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்கான வருவாயை ஓபியம் என்ற போதைப் பொருளை விற்றுத் தான் பெற்றுக் கொள்கின்றார்கள்.

முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள். இதன் மூலம் தான் இவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்கின்றது என்று காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

22. இந்தப்படத்தின் மையக்கருவை சொல்லப்போனால்,முஸ்லிம்களும் முஸ்லிம் தேசங்களும் தீவிரவாதத்தின் ஏஜன்டுகள். இவர்கள் பயிற்சி எடுப்பது கூட புஷ் மற்றும் ஏரியல் ஷெரோனின் உருவத்திற்கு குறி வைத்துச் சுட்டுத்தான்.

இதன் மூலம் தீவிரவாதத்தை உலகிலிருந்து துடைப்பதற்காக முழு மூச்சாய் உழைக்கும் நாடுகளே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தச் சமாதானத் தூதுவர்களை அழிப்பதற்கு முயலும் தீவிரவாதக் கும்பல்களே முஸ்லிம் தேசத்து மைந்தர்கள்.

இதற்கு இஸ்லாமும் குர்ஆனும் துணை போகின்றன.

இந்தத் தீவிரவாதம் இன்றுபல நாடுகளில் ஊடுறுவி வருகின்றது. அதனை அழிப்பதற்காய் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இது தான் இந்தப்படம் சொல்ல விழையும் செய்தி.

23. இதில் வரலாற்றை திரிவு படுத்தியுள்ளதோடு, அமெரிக்க ஆக்ரமிப்பை எதிர்த்து போராடும் நாடுகளை பயங்கரவாதிகளாய் சித்தரித்திருப்பதோடு, அமெரிக்கா புரிந்த அத்தனை அட்டூழியங்களும் கவனமாய் மறைக்கப்பட்டு அகிம்சை வாதிகளாய் மெருகூட்டப்பட்டுள்ளதானது வரலாற்றுத் துரோகமாகும். இதனை இப்படம் கச்சிதமாய் செய்து முடித்துள்ளது.

எனவே, கூட்டுக்கழித்துப்பார்த்தால் அமெரிக்காவின் பணத்திற்கு அடிமைப்பட்டு கமல்ஹாஸன் நடித்துள்ள நாறிப்போன அமெரிக்காவின் வக்கிரக சிந்தனையின் வெளிப்பாடெ ‘விஸ்வரூபம்’.

வாழ்நாள் தடை செய்க!

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் புண்புடுத்தும் விதமாக மட்டுமன்றி, தப்பாகவும் சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள விஸ்பரூபம் திரைப்படம் இலங்கையில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

பல்லின சமுதாயத்தவர்கள் கூடி வாழும் இலங்கை போன்ற நாட்டில், அதுவும் இன முறண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் எறியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று இத்திரைப்படமும் அமைந்துவிடக்கூடாது.

இதையும் தாண்டி இத்திரைப்படம் வெளியிடப்படுமாயின் இந்நாட்டின் சமூக சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கம் சீர்குலைவதோடு, உணர்ச்சிவயப்பட்ட செயற்பாடுகள் மூலம் இந்நாட்டின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

இந்நிலையை கருத்திற் கொள்ளாது இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் எதிரொலிக்கும் விளைவுகளுக்கு இந்நாட்டு அரசே பதில் சொல்ல வேண்டி வரும் என்பதையும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். –JAFNAMUSLIM

ARTICLE SOURCE: http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_2919.html

5 comments:

UNMAIKAL January 30, 2013 at 1:56 PM  

அதென்ன திரைப்படங்களில் தீவிரவாதிகள் என்றாலே எப்பவும் முஸ்லிம்கள்?

அப்பாவி முஸ்லிம்களின் மீது இத்தனை நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த பழிக்கு பின்னால் இருந்த மதவெறியர்களின் சதி அம்பலமாகிக் கொண்டே வருவது இன்னும் புரியவில்லையா?

அல்லது அதைப் பற்றி பேசினால் "தேச பக்தி" வியாபாரம் செய்து கல்லா கட்ட முடியாதா?

மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம், நான்டட், கோவா, பெங்களூர் என நாட்டில் நடந்த அநேக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதம் செயல்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அது மட்டுமின்றி, குண்டு வெடிப்புகளை நடத்திய நேரத்தில்,

கோட்சே காலத்திலிருந்து தொடரும் அதே யுக்திப்படி,

முஸ்லிம்கள் அந்தப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகத் திசை திருப்ப,

சம்பவ இடத்தில் அரபி/உருது நோட்டீஸ்கள், தொப்பி, தாடி போன்றவற்றை விட்டுச் சென்றும்

குண்டுவெடிப்பு நடந்த உடனேயே ஏதாவது முஸ்லிம் அமைப்பின் பெயரில் இ-மெயில் அனுப்பியும் திட்டமிட்ட சதிச் செயலில் ஈடுபட்டதும்

இதே ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பதும் உறுதியாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் காவித் தீவிரவாதிகளைப் பற்றி ஒவ்வொரு உண்மையாக வெளிவந்து இந்திய மக்களைப் பீதிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளை அறிவிக்கும் ஊடகங்களைக் கமல்ஹாசன் பார்ப்பதில்லையா?

இந்த உண்மையை அப்படியே படமாக எடுக்க கமல்ஹாஸனுக்குத் தைரியம் இருக்கிறதா?

உண்மைகளைப் படமாக எடுப்பதுதான் நல்ல கலைஞனுக்கு அழகு!

அப்படிப்பட்டவனைத்தான் தைரியமான கலைஞன் என்றும் கூற முடியும்.

கமல் தைரியமான கலைஞன் எனில், ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து ஒரே ஒரு படமாவது எடுத்துக் காட்டட்டுமே!

இங்கே உண்மையைக் கூற, கமல் போன்ற உலக நாயகர்(!)களுக்குத் தைரியமில்லை.

இவரெல்லாம் தேசபக்தி குறித்துப் பேசி நகைக்க வைக்கிறார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம்களைத் தனிமைப்படுதுவதற்காகக் கையிலெடுக்கும் ஆயுதம்தான் "தேசபக்தி".

அதனை கமலும் கையிலெடுத்ததிலிருந்து அவரின் நடுநிலை பல்லிளிக்கிறது!

கமலுக்கு அறிவுசீவி முற்போக்கு வேடம் போட நாத்திக முகமூடியும்,

சிறுபான்மையினர் ஆதரவுப்பேச்சு ஒப்பனையும்!

பிழைப்புக்குப் பெரும்பான்மையைத் திருப்திப்படுத்த உன்னைப்போல் ஒருவன்; விஸ்வரூபமும்! வெட்கக் கேடு!

இனி சினிமாக்காரர்கள் எவரும் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி முஸ்லிம்களை அவதூறாகச் சித்திரிக்கும் திரைப்படத்தை எடுக்க நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. -ஜாஃபர்

SOURCE: http://www.satyamargam.com/2057

UNMAIKAL January 30, 2013 at 4:10 PM  

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

Posted by: Siva Published: Wednesday, January 30, 2013, 10:45 [IST]

துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார்.

அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார்.

அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார்.

சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

சொடுக்கி >>>>> படம் காண்க.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/30/world-abu-dhabi-crown-prince-sits-roadside-with-lost-girl-168847.html

UNMAIKAL January 30, 2013 at 7:26 PM  

விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை விதித்தது ஹைகோர்ட் பெஞ்ச்: தனி நீதிபதி தந்த அனுமதி ரத்து!

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.

நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 4ம் தேதி) தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Posted by: Shankar Updated: Wednesday, January 30, 2013, 15:51 [IST]


SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2013/01/viswaroopam-hc-postpones-hearing-govt-appeal-petition-168850.html

UNMAIKAL January 30, 2013 at 10:14 PM  

விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம்!

சென்னை: விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர்.

படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை அளித்தனர்.

நடிகர் கமல்ஹாசன்:

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருந்து சில வாசகங்களை படத்தில் நான் பயன்படுத்தியுள்ளது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.

அதனால் இறைமறை வசனங்களை நீக்குவது என்று தீர்மானித்துள்ளேன்.

சில காட்சிகளையும் எடிட் செய்ய உள்ளேன்.

. Posted by: Siva Updated: Wednesday, January 30, 2013, 15:48 [IST]

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/kamal-edit-certain-parts-viswaroopam-168882.html

UNMAIKAL January 31, 2013 at 12:28 PM  

சோ: படம் தடை செய்யப்பட வேண்டியதுதான்

விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சோ.

மூத்த அரசியல் விமர்சகரும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர்களில் ஒருவர் என்று கூறப்படுபவருமான சோ (ராமசாமி), விஸ்வரூபம் தொடர்பாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து, “தமிழக அரசு செய்தது சரியே… படம் தடை செய்யப்பட வேண்டியதுதான்” என்பதே!

CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் சோ.

“தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும்.

ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார் அவர்.

ராஜ்தீப் சர்தேசாய், “அரசு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களின் சார்பாக செயல்படுகிறது,

கமல்ஹாசன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதை பார்க்கவில்லை?”

என்று கேள்வி எழுப்பியபோது

சோ, “பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார்.

ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்” என்றார்.

THANKS TO: VIRUVIRUPPU.COM

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP