ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1
>> Thursday, December 29, 2011
ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்).
திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல
சமுதாய துரோக வரலாறு.
காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும்
புலி பயங்கரவாதம்.
"ஹார்ஹே முல்க் மில்கே மாஸ்
கே முழ்கி ஹுதாயெ மாஸ்”
" ஒவ்வொரு நாடும் எனது நாடே அந்த நாடும் இறைவனின் நாடே" - அல்லாமா இக்பால்
இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் தமிழர்களோடு ஒட்டி வாழ ஆசை இல்லையா? எம் அன்பிற்குரிய சகோதர்கள் மாத்திரம் தம்மைத் தாமே இஸ்லாமியர்கள் எனப் பிரித்துக் காட்டுவது ஏன்?
“முஸ்லிம்கள் என்றால் டெயிலராகவும் சில்லறை வியாபாரியாகவுமெ இருக்கவேண்டும். அவர்கள் படிக்கக்கூடாது. அவர்கள் அரச வேலைக்கு போகக்கூடாது” என்று நினைப்பவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் மண் விழும் செய்திகள் வரும்போது அதைத் தாங்குவது கஸ்டமாகக்தான் இருக்கும்.
எனவே அதற்காக போலியாக தமிழ்தேசியவாதிகளாக முகமூடி அணிந்து மற்றவர்கள் மீது சேற்றை வீசுவார்கள். அதை நாம் காண்கிறோம்.
தமது சொந்த சுயநலன்களுக்காக தமிழ் இனத்தின் பெயரால் மற்ற இனங்கள் மீது அவதூறுகளைப் பரப்பி இனத்துவேசங்களை செய்து மிரட்டுவதற்கு இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது?
**************
ஷஹீத் பழனிபாபா அவர்கள். ---
“ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவக் கொடுமைகளை எதிர்த்து தனியாகவும், தி.க - தி.மு.க.வுடன் சேர்ந்து பல கூட்டங்கள் போட்டு மறியல்களில் ஈடுபட்டு - பலருடனும் தனியாகவும் பலமுறை M.G.R ஆல் கைது செய்யப்பட்டு 82 முதல் 89 முடிய எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்த முஸ்லிம் நான்!
நீ ஒரு கூட்டமாவது நடத்தினாயா ஐயரே? நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டபோது ஆகஸ்டு 25 குட்டிமணி, ஜெகனுக்கு இலங்கை சுப்ரீம்கோர்ட் தூக்குத்தண்டனை தந்ததை எதிர்த்து எனது வேட்டியை சிறைக்கதவு மசியில் கறுப்பாக்கி- காலையில் மரத்தின் உயரே கறுப்புக்கொடி பறக்கவிட்டு- சிறைவிதிகளை மீறியதற்காக சிறை சூப்ரண்ட் அட்கின்சனும் மாவட்ட நீதிபதியும் உள்விசாரனை நடத்தி எனக்கு தனிமைச் சிறை தந்தும், பலநாள் பட்டினி போட்டும், என்மீது தீயனைப்பு என்ஜினில் நீர்நிறைத்து அடித்தும்- நான் என் எதிர்ப்பில் உறுதியாயிருந்தேன்.
M.G.R. உயிருடனிருந்தபோது ரகசிய புலனாய்வு I.G. பார்ப்பன மோகன் தாஸ் உடன் சேர்ந்து அகதியாய் வந்த என் தமிழினம் மீது தாக்குதலை தமிழ் மண்ணிலேயே நடத்தி கால் இல்லாத தளபதி கிட்டுவை வீட்டுச் சிறையில் வைத்து நிராயுதபாணியாக்கியபோது நீ வாய் திறக்கவில்லை.
மாறாக ராமஜென்மபூமி என்று புதிய போர்வை போர்த்தி பூணுலை நீ விட்டுக்கொண்டு, கூட்டம் போட்டு, மைக்செட்க்காரனுடன் மட்டும் (கூட்டம் வராததால்) பேசிவிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் என்று துதிபாடி தினசரிகளில் போட்டு மார்தட்டிய மாவிரனல்லவா நீ!
அதுகூட வேண்டாம், அகதி முகாம்களில் அடைபட்டு அனுதினமும் 58பைசா ரேஷனில் அல்லலுற்ற தமிழினத்தை மண்டபம் உட்பட பல முகாம்களில் மரண ஓலமிட்டவர்களை குறைந்தது 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட சென்று பார்க்க நினைக்காத துரோகியல்லவா நீ!
இங்கே சொறியக்கூட சொரனையற்று சொறிநாய்போல் திரிந்துவிட்டு அணிசேரா நாடுகள் பற்றிப் பேசுவது அயோக்கியத்தனம். ஏதோ பலரும் சொல்கிறார்களே என்பதற்காக சில வெளிநாட்டு முகாம் கூறி முகஸ்துதி பாடி பகல் வேஷம் போடும் பட்டரய்யா நீ!
இலங்கை ஜனாதிபதியே என்னை அழைத்து, எனது செலவை ஏற்று இலங்கையில் இந்திய ராணுவ வெறித்தனத்தைக் காண நான் சென்ற விமானத்தைப் பறக்கவிட்டு திரும்ப அழைத்து உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானார் பூட்டாசிங்.
பின்னர் என்னைக் கோர்ட் அனுமதித்தபோது இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற ஒரே தேசியவாதி நான் மட்டுமே. ஜெயவர்த்தனாவிடம் நான் செய்த உதவிகளை, என் செய்திகளை உன் துதிபாடி தினசரிகள் வெளியிட்டதா?
ஊரோடு மாரடிக்கும் உலுத்தர் கூட்டமல்லவா நீ! உண்மை பேசினால் உனக்கு உயிரே போய்விடுமே!
நமது ராணுவத்தை இலங்கைக்கு ஏன் அணுப்பினாய் - புடுங்கவா? உனது வாதம் சரியென்றாலும் கூட நேருவால் பல லட்சம் - சாஸ்திரியால் பல லட்சம்- இந்திராவால் பல லட்சம் சதுர மைல்களை இழந்தோம்.
போதாக்குறைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா. அப்போது நீ என்ன கூறினாய்? இந்திராவும் ஜெயவர்த்தனேயும் ஒரே இனம் ; மூக்கைப் பார்! நீண்டிருக்கும் என்றாய். உன் பார்ப்பன ஏடுகளும் துதிபாடின. “ - ஷஹீத் பழனிபாபா அவர்கள்.
(என்பதுகளின் இறுதியில் ஹிந்து முன்னணி தலைவன் இராமகோபாலையர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக "ஹிந்துக்களுக்கு அநீதி... ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து" என்கிற தலைப்பில் வெளியிட்ட புத்தகத்திற்கு சமூகபுரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா அவர்கள் இராமகோபாலையருக்கு வெளியிட்ட மறுப்புரையின் தொகுப்பில் )
SOURCE: http://vengai2020.blogspot.com/2011/07/blog-post.html
ஈழத்தமிழர்=(இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்)- (முஸ்லிம்கள்)
பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில்,
1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர்.
இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.
இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள்.
(1915 ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள தலைவர்களையும் காடையர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசு முஸ்லீகளுக்கு சார்பாக நடந்து கொள்வதாக சிங்கள தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இதே நேரத்தில் தமிழர்களின் தலைவராக இருந்தவர்கள் முஸ்லீம்களும் தமிழர்கள் என்ற ரீதியில் முஸ்லீம்களை ஆதரித்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது நடுநிலையாவது வகித்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் தலைமை ஒரு பெரும் தவறை இழைத்தது.அன்றைக்கு தமிழர் தலைவராக இருந்த சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.
அப்பொழுது முதலாம் உலக யுத்தம் (1914-1918) நடந்து கொண்டிருந்த காலம். கப்பற் போக்குவரத்து என்பது மிகவும் ஆபத்ததான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபத்தையும் பொருட்படுத்தாது சேர்.பொன் ராமநாதன் இங்கிலாந்து பயணமானார். அங்கே சிங்களவர்களுக்காக வாதாடினார். வாதாடி கைது செய்யப்பட்ட சிங்கள தலைவர்களியும் காடையர்களையும் விவ்ட்விக்க செய்தார். இலங்கை திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் ரதத்தில் வைத்து அழைத்து சென்றனர்.ரதத்தை சிங்களவர்களே இழுத்தனர்.
அதன் பிறகு ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பமான பொழுது விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி நூற்றுக்கணகான முஸ்லீம்கள் மாவீரர் ஆகி உள்ளனர். லெப்.கேணல் ஜூனைதீன் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் ஆவார்.
SOURCE:http://www.tamilsfront.net/politics/index.php?hash=13d92cdd7ca2d0dc1a1ec922755f7139&mnid=21&page=3 )
எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.
அன்றைய "தமிழர்கள்" மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது.
.தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது.
இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.
தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர்.
அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, "வெள்ளாள கருத்தியல்" மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன. ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப் பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது.
இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.
யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு.
சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர்.
இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று: சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
இரண்டு: முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
மூன்று: நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
நான்கு: அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.
முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள்.
இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர்.
இருப்பினும், "முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப் படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், "யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.
பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர்.
தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள்.
அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது.
"முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல."
வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள்.
வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர்.
அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.
ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது.
இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது. இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை.
தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை "வெள்ளாளக் கட்சிகளாக" கருதப்பட்டன.)
யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.
"ஆண்ட பரம்பரை நாம்" என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது.
சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர்.
முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.
முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர்.
ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது.
"முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன.
நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது.
தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.
முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம்.
கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப் பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது.
அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர்.
மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது.
முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந் தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது.
இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது.
ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது - கலையரசன்
Source: http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_30.html
திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல
Saturday, 12 August 2006 20:31 பி.இரயாகரன்
Hits: 1903 Section: பி.இரயாகரன் - சமர் - 2006
யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே. இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது. உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை. திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,
புலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம்.
வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில், அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில், அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான், இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது.
மக்கள் தமது வாழ்வை இழந்து, எல்லை கடந்து நாடோடிகளாகவே ஒடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்கள் எமது மக்கள் என்று கூறிக் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கக் கூட முனையவில்லை.
அண்மைக் காலத்தில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களை அகதியாக இந்தியாவுக்கு புலிகள் விரட்டிக் கொண்டிருந்தனர்.
அது நிறுத்தப்பட்ட நிலையில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதூர் தாக்குதல் மூலம் மறுபடியும் அந்த மக்களை எல்லை கடந்து ஓட விரட்டுகின்றனர்.
தமிழ், முஸ்லீம் மக்கள் தமது வாழ்வை புலிகளின் கொடூரமான புலிப் பசிக்கு இரையாக்கி வாழ்விழந்து நாடோடியாகின்றனர்.
இந்த புலிப் பின்னணியில் பேரினவாதமே வெற்றிகரமாக இலாபம் அடைகின்றது என்றால், புலிகளைக் குப்புற வீழ்த்தி வழிநடத்துபவர்கள் யார்?
எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படும் புலிகளின் கடந்தகால நடடிவக்கைகளின் பின்னணியில், அன்னிய சக்திகளால் வழிகாட்டப்பட்ட வரலாறுகளை புலிகளே ஒத்துக்கொண்ட உண்மையின் அடிப்படையில், இதை இன்று நாம் ஏன் பார்க்கமுடியாது?
தண்ணீரை மூடுவதும், திறந்து விடுவதுமாக நடத்திய நாடகத்தின் பின்னணியில் தான் மூதூர் தாக்குதலை புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டனர்.
முஸ்லீம் மக்கள் மீதான புலிகள் திட்டமிட்டு நடத்திய வெறியாட்டத்தில் அண்ணளவாக 1000 பேரளவில் கொல்லப்பட்டனர்.
இதில் கணிசமான அளவுக்கு தமிழரும் அடங்குவர். மிக குறுகிய காலத்தில், மிக மோசமான ஒரு இனவெறியாட்டத்தை நாம் சமகாலத்தில் காணமுடியாது.
1983 இனக்கலவரத்துக்கு பிந்திய, அதேயொத்த ஒரு மக்கள் அழிவையும், பழிவாங்கலையும் ஏற்படுத்திய ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும் இது.
மிகக் குறுகிய காலத்தில், மிகவும் திட்டமிட்ட வகையில், பாரிய படுகொலைகள் முதல் அந்த சமூகத்தின் இருப்பையே அழிக்கும் வண்ணம், அவர்களின் வாழ்விடங்களையே சிதைத்து அனைத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர்.
அங்கு வாழ்ந்த மக்கள், மீண்டும் அங்கு சென்று வாழமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாகவே, கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
புலிவெறியாட்டத்துக்கு புலம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் சொந்த பிரதேசத்துக்கு சென்று வாழமுடியாத அளவுக்கு, இனவழிப்பு எச்சரிக்கையை தொடர்ச்சியாக புலிகள் ஆணையில் வைத்துள்ளனர்.
குறிப்பாக இராணுவம் மற்றும் புலிகளின் வக்கிரமான வெறியாட்டத்துக்கு உள்ளாகிய வண்ணம் இப்பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாறி நிற்கின்றது.
பேய்களும், நாய்களும் தமது சொந்த வக்கிரத்தையே பூர்த்தி செய்கின்றன. நீண்டகால நோக்கில் இதில் இலாபம் அடைவது நிச்சயமாக பேரினவாதம் தான். தமிழ்மொழி பேசும் மக்களின் இடப்பெயர்வுக்கு, தமிழ்; முஸ்லீம் என்ற பாகுபாட்டை பேரினவாதம் வேறுபடுத்துவது கிடையாது.
1995 இல் புலிகளின் நிர்பந்நத்தால் நடந்த யாழ் இடப்பெயர்வு கூட, மக்களை இந்தளவுக்கு சிதைத்து சின்னாபின்னமாகியது கிடையாது. அந்த இடப்பெயர்வு குறுகிய கால அவகாசத்துடன் திட்டமிடப்பட்டதாக மாறியது.
யாழ் மீதான இராணுவப் படையெடுப்பின் போது கூட, இந்தளவுக்கு உயிர் அழிவும் மனித அவலமும் ஏற்பட்டது கிடையாது.
நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது.
அந்தளவுக்கு முஸ்லீம் மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான மன்னிக்க முடியாத இந்த தாக்குதல், அவர்களின் கடந்தகால நிகழ்கால முஸ்லீம் விரோத நடவடிக்கையின் மற்றொரு அங்கமாகத் தான் இதனை நிறைவேற்றினர்.
இந்தத் தாக்குதல் திட்டம் முன்கூட்டியது.
மே மாதம் இறுதியில் புலிகளின் மக்கள் அமைப்புகளின் பெயரில், எது நடக்கவுள்ளதோ அதை முன் கூட்டியே கூறி விடுத்த அச்சுறுத்தும் துண்டுபிரசுரம் சரி, 04.06.2006 வீரகேசரி பத்திரிகையில் வெளியான துரைரட்ணசிங்கம் எம்.பி மூதூர் பற்றி வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் திடட்மிட்ட நடவடிக்கையின் ஒரு அம்சமாகும்.
இவை திடட்மிட்ட ஒரு இனவாத அழித்தொழிப்பு வெறியாட்ட நடவடிக்கைக்கு முன்னோடியான ஒரு சில சமிக்கையாகும்.
புலிகள் இதை முஸ்லீம் மக்கள் மீதான வெறியாட்டமாக நடத்தி முடிக்க, இராணுவம் அதை மேலும் சுத்தமாக்கி வருகின்றது. அத்துடன் இராணுவம் மேலும் ஒருபடி சென்று, போகிற போக்கில் இதற்குள் அனைத்தும் அமிழ்ந்து போகும் வண்ணம், இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்;
மூதூரைக் கடந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழ் மக்கள விரட்டியடிக்கின்ற வகையில் ஒரு துடைத்தொழிப்பை இராணுவம் நடத்துகின்றது.
முஸ்லீம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவராத ஒரு நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற அவலமும் தெரியாது புதைந்து போகின்றது.
அந்தளவுக்கு தமிழ் ஊடகவியல் படுசேற்றில் புதைந்து மூச்சிழுக்கின்றது.
திருகோணமலையில் தமிழ்மொழி பேசுகின்ற முஸ்லீங்கள் தமிழர்கள், பூசாரிகளின் பேயாட்டத்துக்கு ஏற்ப குடியெழுப்பப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர்.
காயடிக்கப்பட்ட தேசியம் தனது மலட்டுத்தனத்தால் எதையும் உயிர்பிக்கும் ஆற்றலற்று வக்கிரமாகி பேயாட்டமாடுகின்றது.
முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் ஒரு அங்கமாக காட்டியபடி நடத்தும் இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகள், முடிவின்றி நடக்கின்றது.
தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லீம்கள் இலாபம் பெற முனைவதாக வக்கரித்து உறுமும் குறுந் தேசிய வக்கிரங்களை, சதா காதுகொடுத்து கேட்கின்றோம்.
அந்த மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான வெறியாட்டம், யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை விடவும் மிகமோசமான வகையில் மீண்டும் அரங்கேறியுள்ளது.
இதன் பின்பும் கூட, தமிழ் மக்களின் ஒரு அங்கம் தான் முஸ்லீம்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.
இராணுவம் மீதான தாக்குதல் என்ற பெயரில் புலிகள் நயவஞ்சகமாக தொடர்ச்சியாக நாடகமாடுகின்றனர்.
நாடகமாக நடத்தியது முஸ்லீம் மீதான அழித்தொழிப்புத் தான்.
கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றியோ, அவர்களின் அவலநிலையையிட்டு எந்தவிதமான அக்கறையுமற்ற வக்கிரமே தமிழ் ஊடகவியலில் அரங்கேறுகின்றன.
உண்மையில் மூதூரில் புலிகள் நடத்தியது, முஸ்லீம் வாழ்விடங்களை தாம் மட்டும் நாசமாக்கி அழிக்கும் வண்ணம் புலிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை.
மாறாக இராணுவத்தின் தாக்குதலிலும் முஸ்லீம் வாழ்விடங்கள் அழியும் வண்ணம் தாக்குதலை நகர்த்தினர்.
அதாவது இராணுவத்தைக் கொண்டு அழிக்கும் வண்ணம், தாக்குதல் வியூகம்
முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தது. இராணுவத் தாக்குதலை முஸ்லிம் குடியிருப்புகள் ஊடாக நகர்த்தி முழுமையாக மூதூரை நாசமாக்கி மக்களை கொன்று போட்டனர்.
இப்படி ஒரு இனஅழிப்பு யுத்தம், எமது இனவாத அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நடத்துள்ளது.
யார் தாக்குகின்றனர் என தெரியாத வகையில், குண்டு பொழிவுகளுக்கு இடையில் மூதூர் அழிக்கப்பட்டது.
யார் கொல்லுகின்றனர் என்று தெரியாத வண்ணம் கொலைகார நடத்தைகள் தூண்டப்பட்டது. மக்களை பாதுகாப்பது, மக்களை விலத்தி தாக்குதலை நடத்துவது என்பதற்கு மாறாக, அதையே தேடிச் செய்வதே அரங்கேறியது.
குண்டுமாரிக்கு இடையில் அந்த மக்கள் வெளியேற விடாது தடுத்த புலிகள் அதற்கு அவர்களை இரையாக்கினர். அகதியாக தங்கிய இடங்களில் கூட, அந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத வண்ணம் தடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரஞ்சு தன்னார்வ நிறுவன தொண்டர்களின் இனம் கடந்த மனிதாபிமான செயற்பாடுகள், புலிகளுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.
புலிகளின் வழமையான பாணியில் பதிலடி எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்ற பின்னனி மர்மமாக இருந்த போதும், இந்த செய்தி முதலில் வெளிவந்த காலம், முதல் முதலில்; இதை அறிவித்த ஊடகங்களின் பின்னணியால் ஊகங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது.
இதை புலிகள் ஏன் செய்யமாட்டார்கள் என்று தர்க்க ரீதியாக கூற முடியாத அளவுக்கு, இது போன்ற கொலைகளை புலிகள் செய்வதில்லை என்று கூறுவதற்கு, எந்தத் தார்மிகப் பலத்தையும் கடந்த வரலாற்றில் நாம் காணமுடியாது.
அந்தளவுக்கு புலிகளிடம் அரசியல் நேர்மையும் கிடையாது.
புலிப் பாசிச குதர்க்கத்தையும், கொச்சைத்தனத்தையும் தாண்டி, இராணுவமும் இது போன்ற கொலை வெறியாட்டங்களை நாசுக்காகவே நடத்திவிடுவது சதா நிகழத்தான் செய்கின்றது.
எல்லாம் புலியாக முன்பு, கொலையே அரசியலாக முன்பு, ஒவ்வொரு கொலையும் யாரால் எதற்கு ஏன் செய்யப்பட்டது என்ற சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை.
ஆனால் இன்று அப்படி உறுதியாக கூறமுடியாத அளவுக்கு, கொலைக் கலாச்சாரமே தமிழ்தேசிய அரசியலாகிவிட்டது.
இன்று கொலைகளைச் செய்து உலகை தம்பக்கம் வென்றுவிட முடியும் என்ற நப்பாசையில் பல்லிளித்து ஆட்டம் போடுகின்றனர்.
ஈனத்தனமாக விகாரமான கொலைகளைச் செய்து, அதை படம்பிடித்து உலகுக்கு காட்டுவதன் மூலம், உலகத்தினை தம்பக்கம் வளைத்து தமக்கு சார்பாக மாற்றமுடியும் என்ற தமிழ் தேசிய அரசியல் இன்று அரங்கேறிவருகின்றது.
இந்த நிலையில் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதன் மூலம், இது போன்றவற்றை தாம் செய்வதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். இந்த நிலையில் உண்மை என்பதே கத்தி முனையின் கீழ் அந்தரத்தில் தொங்கிவிடுகின்றது.
இந்தநிலையில் முஸ்லீம் மக்கள் அகதியாகி மூதூரில் பொதுவிடங்களில் தஞ்சம் கோரிய நிலையில், அனைத்து உதவியும் மறுக்கப்பட்டது.
குறைந்தபட்சம் தாமாக செயற்பட்டு இயங்க முனைந்த அடிப்படைகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. முன்னின்றவர்கள் கொல்லபட்டனர் அல்லது துரோகியாக காட்டி கடத்தப்பட்டனர்.
மக்கள் தாமாக முனைந்து தண்ணீர் குடிக்க முனைந்த போது கூட, புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டது.
இப்படி திட்டமிட்ட முறையில் உருவேற்றப்பட்ட முஸ்லீம் விரோத வெறியுடன் புகுந்த புலி இராணுவம், அந்த மக்களைக் குதறியது.
முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற, அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது.
இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.
முஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள், எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர்வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது.
மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர்.
சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும்.
அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே.
அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை.
ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள்.
அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.
அதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில், முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது.
இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர்.
ஆனால் புலித் தலைவர்கள் நரிவேஷம் போட்டு ஊளையிட்டுக் கொண்டு, தம்மைத் புனிதராகவே சதா உலகுக்கு காட்டிக் கொள்ள முனைகின்றனர்.
குறைந்தபட்சம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அரசியல் நேர்மை என்பதே இந்த புலித் தேசியத்துக்கு கிடையாது என்பதை சதா நிறுவிக் கொள்கின்றனர்.
முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வெறியாட்டத்தை, இராணுவம் தாக்குதல் சாhந்ததாக காட்டுகின்ற வகையில் பல தளத்தில் பலரால் கருத்துரைக்கப்படுகின்றது.
இதில் புலியல்லாத தரப்பும், இதற்குள் தனது அரசியல் நேர்த்திக் கடனை நடத்துகின்றனர்.
இராணுவ வெற்றி தோல்வி பற்றி மயிர்புடுங்கும் வாதத் திறமை மூலம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனத்துக்கு எதிரான பாரிய குற்றத்தை மூடிமறைத்து ஒரு வம்பு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
புலிகள் நடத்திய வெறியாட்டம் முஸ்லீம் மக்கள் மீதானது என்ற உண்மையைக் கண்டு கொள்ளாத போக்கு, தமிழ் தரப்பு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது.
இதுவே ஆரம்பத்தில் முஸ்லீம் தரப்பிலும் காணப்பட்டது.
முஸ்லீம் தலைவர்கள் ஆரம்பத்தில் இதை வெறும் இராணுவ யுத்தமாக காட்டி புலம்பினர்.
மெதுவாக ஆனால் காலம் தாழ்த்தியே முஸ்லீம்கள் மீதான புலிகளின் வெறியாட்டமே உண்மையில் நடந்தது என்று ஓப்புக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள், அதன் முழுமையான பரிணாமத்தில் மனித அவலத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு திணறுகின்றனர்.
மறுபக்கத்தில் முஸ்லீம் மக்களின் எல்லையில்லாத அவலம் சார்ந்த அந்தக் கண்ணீர்க் கதைகளை மீறி, அவை சமூகத்துக்கு புலப்படாத வகையில் சூனியமாகின்றது.
புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் தொடங்குகின்ற யுத்தத்தை நோக்கி முன்முயற்சிகள், முஸ்லீம் மக்களின் அவலம் மழுங்கடிக்கும் வண்ணம் புதைசேற்றில் புதைக்கின்றது.
முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு மறுபக்கத்தில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டனர்.
பொதுவான தாக்குதலில் எதுவெல்லாம் முஸ்லீம் மக்களுக்கு நடந்ததோ, அது தமிழ் மக்களுக்கும் நடந்தது.
சொந்த வீட்டை இழந்து, தமது சொத்தை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, வீதிகள் தோறும் நாயாக அலைகின்றனர். உண்மையில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்மொழி பேசுவோரின் ஒரு குடிப்பெயர்வே நிகழ்ந்துள்ளது.
திட்டமிட்ட இனவாத சதியே இதன் பின் நிகழ்ந்துள்ளது. திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை இல்லாததாக்கும் வகையிலும், அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக மாற்றுகின்ற நடிவடிக்கையைத் தான், புலிகள் ஊடாக பேரினவாதம் நடத்தி முடித்துள்ளது.
பேரினவாதத்துக்கு இதை விட வேறு வடிவில் அந்த மக்களை வெற்றிகரமாக சிதைக்க முடியாது. புலிகளைக் கொண்டு அதை சிதைக்கின்றனர்.
இது தான் பேரினவாத்தின் மிகத்திட்டமிட்ட அரசியல்;. திருகோணமலை எப்படி சிங்கள இனவாதிகளின் ஆதிகத்துக்குள் சென்றது என்பதை, அதாவது அவர்கள் எப்படி பெரும்பான்மை ஆனார்கள் என்ற வரலாற்று ஆய்வில், புலிகளின் குறித்த இனவொழிப்பு நடவடிக்கையும் காரணம் என்பதை இனி வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாது.
நடப்பது, நடந்து கொண்டிருப்பது வெறுமனே முஸ்லீம் மக்கள் மேல் மட்டுமல்ல, தமிழ் மக்களும் திருகோணமலையை விட்டு ஒரு சில நாளில் தெரு நாயைப் போலே ஓட ஒட அடித்து விரடட்ப்படுகின்றனர்.
வாழவே வழியற்ற ஏழை எளிய மக்கள் தமது வாழ்வியலை இழக்க வைத்ததன் மூலம், திடட்மிட்டு அழித்தொழிக்கப்படுகின்றனர்.
முஸ்லீம் மக்களை புலிகள் முடிந்தவரை கொள்ளையிட்டனர். அவர்களின் வீட்டுச் சொத்துகளைக் கூட புலிகள் கடத்திச் சென்றனர்.
புலிகள் அங்கிருந்த வங்கிகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை, முடிந்தவரை மக்களையும் கொள்ளையடித்தனர்.
மொத்தத்தில் இதன் பின்னணியில் புலிகளை வழிநடத்துவதில், ஒரு அன்னிய சதி உள்ளது.
1985 இல் அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான புலியின் இனவெறித் தாக்குதலை, அன்று தாம் செய்யவில்லை என்று மறுத்த புலிகள், பின்னாளில் இந்தியா கூறித்தான் நாம் செய்தோம் என்றனர்.
இதற்காக புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்று கூறினர்.
இதே போன்று புலிகளின் மூதூர் தாக்குதலின் பின், அதாவது இதை வழிநடத்துவதில், இனவாத சக்திகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்கமுடியாது.
அந்தளவுக்கு திருகோணமலையில் தமிழ் மொழி பேசும் இரண்டு இன மக்களையும் அடித்து விரட்டிய, விரட்டிவரும் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் இதை உணர்த்திவிடுகின்றது.
முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய, இராணுவம் அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்கின்றது.
நடந்ததும், நடப்பதும் திருகோணமலையை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அழித்தொழிக்கின்ற ஒரு நிகழ்ச்சியை புலிகள் திட்டமிட்டு தொடங்கி வைக்க, அரசு அதை முடித்து வைக்க முனைகின்றது.
பி.இரயாகரன்
12.08.2006
நன்றி: தமிழரங்கம்.
SOURCE:http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=180:2006&id=354:2008-04-13-20-34-03
2006 ல் மூதூர் முஸ்லிம்கள் மீதான காட்டு மிராண்டி ஈழ புலிகளின் அட்டூழியமும் கொலை வெறியாட்டமும்.
மூதூர் என்பது கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்த்தாகவும் இதனால் இவ்வூரிற்கு முத்தூர் என்று பெயர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டதில் பெயர் மருகி மூதூர் என்று ஆகியுள்ளது. இங்கு முஸ்லிம் மக்களும் மூதூரின் கிழக்கு பகுதியான சம்பூரில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.
விடுதலைப் புலிகள் முஸ்லி்ம் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி வடகிழக்கு மாகாணத்தில் தமிழர் மட்டுமே இருக்கவேண்டும் முஸ்லி்ம் மக்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கபட வேண்டும் என்று காட்டுமிராண்டிதனமாக செயல்பட்டது.
இந்தக் காட்சிகள் குறித்து முஸ்லி்ம் மக்கள் சொல்லும் உண்மை 2006 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மூதூர் முஸ்லி்ம் மக்கள் வெளியேற்றம் தொடர்பானது.
சமுதாய துரோக வரலாறு.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் எப்படி முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தி முஸ்லிம்களின் உயிர் உடமைகளை சூரையாடுகிறதோ அதற்கு சற்றும் குறையாமல் இலங்கையில் விடுதலைப் புலிகள் என்னும் பாசிச வெறியர்கள் பிரபாகரன் தலைமையில் இலங்கை முஸ்லிம்களின் சொத்துக்களையும் உயிர்களையும் சூறையாடியவர்கள்.
முஸ்லிம்கள் தமது உயிரையும் விட மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை தொழுகையாளிகளுடன் உயிருடன் வைத்து தீயிட்டு கொளுத்தியவர்கள்
இலங்கை முஸ்லிம்களின் படுகொலைகளை தமிழக இஸ்லாமிய சமுதாயத்திடமிருந்து மறைக்க பார்க்கின்றனர்.
தமிழக முஸ்லிம் மக்களை ஏமாற்றவும் துடிக்கின்றனர். கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் இலங்கையுடன் வர்த்தக தொடர்பை வைத்திருந்த முஸ்லிம்பெரியவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் விடுதலைப் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தை.
கண்ணில் கண்ணீரும் வற்றிப் போகும் சோக வரலாற்றைசொல்வார்கள்.
1990 இல் இலங்கையின் கிழக்கு மாகாண மண்ணில் முஸ்லிம்களின் இரத்தம் வெள்ளமாக பாய்ந்தோடியது. பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் ஜனாசாக்கள் மலைபோல குவிந்து கிடந்தன. ஆடு மாடுகளை போல முஸ்லிம்களை கண்ட இடத்தில் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றும் தீயிட்டு கொளுத்தியும் மகிழ்ந்தனர் விடுதலைப் புலிகள்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி,காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல்,ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
தொழுகைக்கு குனிந்த தலைகள் குருதியில் சரிந்தன.
படுகொலை செய்யப்பட்டவர்களில் சுமார் 30 நபர்கள் பன்னிரண்டு வயதை தாண்டாத பாலகர்கள். ஈவிரக்கமற்ற இந்த பள்ளிவாசல் படுகொலை உலக முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் எல்லோருமாக 116 பேர் விடுதலைப் புலிகளினால் வெட்டியும் கொளுத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி இன்றுவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 அன்று மக்காவிற்கு ஹஜ் புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து விடுதலைப் புலிபயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்.
இறைக்கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பியவர்களை வீட்டுக்கு கூட செல்ல விடாமல் கண்டம் துண்டமாக வெட்டி தமது முஸ்லிம் எதிர்ப்பை காட்டியவர்கள் விடுதலைப் புலிகள். சங்கபரிவாரங்களும் செய்ய பயப்படும் பயங்கர செயலை படு எதார்த்தமாக செய்தவர்கள் விடுதலைப் புலிகள். அதனால தான் மராட்டிய பயங்கரவாதி பால் தாக்கரே விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றார்.
1992 ஏப்ரல் 29 ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
1992 ஜூலை 15 ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
1990 களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும்.
பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது,
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை,கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர்.
கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் பல வருடங்களாக புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன.
முஸ்லிம்களை கருவறுத்து படுகொலை செய்ததோடு மட்டுமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியடித்து முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடி, சொந்த நாட்டில் அகதிகளாக்கிய விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகளால் அநியாயமாக தமது உயிரை இழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களுக்கு என்ன பதிலை சொல்ல போகிறார்கள்?
அறிவுடைய ஒவ்வொரு முஸ்லிமும் இதை சிந்திக்க வேண்டும். நன்றி: உணர்வு வார இதழ்
SOURCE:http://www.pdmtntj.net/2011/04/2.html
1990 ஆகஸ்ட் 3ஆம் திகதி இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு வழமை போல காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஷா தொழுகையை பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்தனர்.
நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் மீரா ஜூம்ஆ பள்ளி மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்களிலும் நூற்றுக்கணக்கானோர் தொழுது கொண்டிருந்தனர். மறுபுறம் தமிழ்ப்புலிகளில் ஆயுததாரிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி அங்கு இரண்டாக பிரிந்து ஒரு குழு மீராப்பள்ளி நோக்கியும் மற்றது ஹூசைனியாப் பள்ளி நோக்கியும் சென்றது.
தொழுகையின் சில ரக்கத்துகள் தொழுது முடிக்கப்பட்ட போது பள்ளிவாசல்கள் சுற்றிவளைக்கப்பட்டன. தொழுகையாளிகள் கிப்லாவை முன்னோக்கி அமைதியுடன் தொழுதுகொண்டிருந்த போது வீரப்பெண்மணிகள் பெற்றெடுத்த தமிழீழ மறவர்களின் துப்பாக்கிகள் சீறின. கைக்குண்டுகள் வீசப்பட்டன.
தொழுகையாளிகள் பின்வரிசையிலிருந்து ஒவ்வொருவராக கீழே விழுந்தனர். இறுதியாக முன்னால் நின்ற இமாம்களும் குண்டடிபட்டு விழும்வரை மாவீரர்களின் துப்பாக்கிகள் சீறிக்கொண்டேயிருந்தன...
பின்னால் நின்று தாக்கியதால் என்ன நடக்கிறதென திரும்பிப்பார்க்காமல் தொழுதுகொண்டிருந்தனர் அவர்கள். இதனால் பள்ளிகளில் தொழுதுகொண்டிருந்த அத்தனை பேரும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கபட்டனர்.
ஒவ்வொருவரும் தமது உடலில் குண்டடி படும் போது தாக்குதல் தம் மீது மேற்கொள்ளப்படுவதையுணர்ந்தனர். இந்த படுபாதக தாக்குதல்களினால் 104 முஸ்லிம்கள் வயோதிபர் சிறுவர் வாலிபர் என்ற பாகுபாடில்லாமல் கொல்லப்பட்டனர்.
உலக வரலாற்றில் கோழைத்தனமான முதலாவது படுகொலை நிகழ்வின் வடுக்கல் இன்றும் அப்பள்ளிவாசல்களில் காணப்படகின்றன. இலங்கை முஸ்லிம்களின் மனதிலும் நீங்காத வடுவாக அது காணப்படுகின்றது.
முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு பிரேரிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் புலிகளின் திட்டத்தின் ஓரங்கமாகவே இப்படுகொலை இடம்பெற்றது.
ஆனால் காத்தான்குடி (கஹ்தான் குடி) ஈழப்போராட்டம் ஆயுத வடிவம் பெற்ற காலத்திலிருந்தே பல இழப்புகளை சந்தித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு ஆயுதக்குழுக்களாலும் வேட்டையாடப்பட்டுள்ளனர்.
தாம் கேற்கும் அதே உரிமையை தமது சிறுபாண்மைக்கு வழங்க மறுத்த மமதையின் வெளிப்பாடுகளே வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளாகும்.
1985-19 பேர் 1986- 7 பேர் 1987 – 84 பேர் 1990- 160 பேர் 1991- 32 பேருமாக மொத்தமாக 302 இக்கு மேற்பட்ட முஸ்லிம்களை காத்தான்குடியில் மட்டும் ஈழப்போராட்டம் வேட்டையாடியுள்ளது. இது அல்லாமல் ஏராவூரில் 122 முஸ்லிம்கள் 1990 ஆகஸ்ட் 11 அன்று கொல்லப்பட்டனர்.
முஸ்லிம்களை இவ்வாறு கொன்றொழித்ததன் பின்னால் பல திட்டங்கள் இருந்த போதிலும் யூதர்களை ஒத்த கொள்கையை புலிகளியக்கம் கொண்டிருந்தது பிரதான காரணம் வகிக்கின்றது.
அப்பாவிகளை சிறுவர் பாலகர் பெண்கள் வயோதிபர் என்ற பாகுபாடில்லாமல் வெட்டியும் சுட்டும் வெளியேற்றியும் சித்திரவதை செய்யும் தன்மை யூதர்களுக்கு மட்டுமே உரித்தானது.
யூதர்களின் வழியில் உலகின் பல பாகங்களில் அலைந்து திரிந்து இந்தியாவின் தமிழ் நாட்டைப்பிடித்து பிறகு அங்கிருந்து இலங்கையின் வடக்கு கிழக்கை பிடித்தவர்களிடம் என்ன தன்மையை மனிதர்கள் எதிர்பார்க்க முடியும்.
யூதர்களை நம்ப வேண்டாம் என்பதாக அல் குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.
மூஸா நபியின் முழு சரித்திரமுமே நமக்கு எச்சரிக்கைக்காக கூறப்பட்டுள்ளது. இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இணக்கப்பாடு பற்றி பேசுகின்றனர். யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் காபிர்களாயினும் அவர்கள் முஸ்லிம்களை தங்கள் பக்கம் சாய்க்காத வரையில் திருப்தி பெற மாட்டார்கள். இந்த விடயம் ஒரு எச்சரிக்கையாகவே நமக்கு கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் என்பன இந்த இணக்கப்பாடு விடயத்தில் கவனமாக நடக்கவேண்டியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக சிங்களவர் முஸ்லிம்களுடன் இணங்கிப்போகும் வேளையில் தமிழர்கள் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்டே வந்துள்ளார்கள்.
சிங்கள மன்னர்கள் முஸ்லிமகளுக்கு காணிகளை வழங்கினார்கள். தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களை வெளியேற்றி அவர்களின் சொத்துக்களை கைப்பற்றினார்கள். இவற்றையெல்லாம் நாம் கண்கூடாக கண்டுகொண்டு அரசியல் நலனுக்காக சமூகத்தை அடகு வைக்கமுடியாது.
எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் குறிப்பாக யூதர்கள் இந்துக்கள் கிறிஸ்தவாகள் விடயத்தில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவரையில் நாம் அவர்களை நம்பக்கூடாது என்பது தான் படைத்தவனின் கட்டளை.
கொழும்பு தமிழர்களை பலிகொடுத்தாவது வடக்கு கிழக்கில் தமிழீழத்தை கட்டியெழுப்ப புலிகள் எண்ணம் கொண்டனர். சில முஸ்லிம்களை கொன்று எதுவும் நடக்கவில்லையாததால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலை செய்தனர்.
1990 ஆகஸ்ட் 3ல் இரவு இஷா தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களின் மீரா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஹூஸைனியா மஸ்ஜித் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 104 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்திருந்தனர்.
தமது திட்டம் நிறைவேறாததால் ஏமாற்றமடைந்த புலிகள் 1990 ஆகஸ்ட் 11ம் நாளன்று ஏராவூரில் தாக்குதல் நடத்தி 122 முஸ்லிம் ஆண், பெண், வயோதிபர், சிறுவர்கள், கருவிலுள்ள சிசுக்களையும் கொன்றிருந்தனர்.
புலிகளாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களாலும் காலத்துக்கு காலம் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கைகளை இனிப்பார்ப்போம்.
1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம் மக்கள் சிலரை கொன்றனர்.
1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.
6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.
19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர்.
1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
1988 கார்த்திகை மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.
2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.
4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து, வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர்.
அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும், கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன.
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார்.
இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல், புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில், அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின், ஐவரை சுட்டுக் கொன்றதுடன், வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.
7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர்.
1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்;கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களால் கொல்லப்பட்டனர்.
1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர்.
31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர்
1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.
1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
3.8.1990 திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன், நியுட்டன், அலெக்ஸ், ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.
3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லீம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது.
11.8.90 ஏறவூரில் 120 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கோளைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன், நியூட்டன், ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர்.
13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.
13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர்.
13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.
1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன.
16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர்.
3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர்.
1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த 85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது, புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர்.
1992.4.29 இல் அழிஞ்சிப் பொத்தனையில் 57 முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
1992.10.15 பொலநறுவ பள்ளியகொடல்ல அஹமட்புரம் பொலநறுவ பிரதேசங்களில் மொத்தம் 171 முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
August 04, 2011.... AL-IHZAN Local News
-அப்துல்லாஹ்-
SOURCE:http://ihzannetwork.blogspot.com/2011/08/blog-post_1489.html
புலி பயங்கரவாதம்
மறக்கமுடியாத பதிவுகள்:
தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.
கிழக்கே காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்
ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. இது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
சரியாக ஒருகிழமைக்கு பின்னர் அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர்.
ஏறாவூர் மட்டக்கிழப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகிழப்பு –
பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிபயங்கரவாதிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள்.
இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்
இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள்
இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இச்சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் கிழக்கில் அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லீம் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த புலிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 13திகதி நடைபெற்றது.
அம்பாறை முள்ளியன் காடு என்ற கிராமத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வயலில் வேலைசெய்துகொண்டிருந்து 17 முஸ்லிம்களை புலிகள் சுட்டுக்கொன்றனர்.
மறுநாள் ஆறாந்திகதியும் அம்பாறை வயல்வெளியொன்றில் வைத்து 33 முஸ்லீம் விவசாயிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதேவருடம் ஜூலை மாதம் முப்பதாந்திகதி புலிகளால் அக்கரைப்பற்று நகரத்தில் 14 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு மட்டும் சும்மார் ஐந்நூற்றுக்கு மேட்பட்ட முஸ்லீம்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்
1990 க்கு முன்னரும் பின்னரும் பல ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லபட்டனர் . இது கிழக்கில் மட்டும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
அதேவருடம் வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலச்சதுகும் அதிகமான முஸ்லீம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.
இந்த நடவடிக்கைக்கு முன்னர் வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர்
யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள்
இதன் பின்னர் அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு வெறும்கையோடு விரட்டப்பட்டனர்.
யாழ்பாண முஸ்லீம் மக்ளுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு ஒரு நாள் தொடக்கம் 48 மணித்தியால் அவகாசம் வழங்கப்பட்டது.
யாழ்பாண முஸ்லீம் மக்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லீம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர்.
இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர்
சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் “கெளுறு” என்ற பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார்
ஏணையோர் பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாண அன்றைய மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.
விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும்.
புலிப்பயங்கரவாதிகள் என்னென்ன எந்தவகையான பயங்கரவாத செயல்களை செய்தாலும் அவைகள் எல்லாம் தமிழீழ போராட்டமாகும். அதனால்தான் தமிழீழ போராட்டத்தை உலகம் ஒரு பயங்கரவாத போராட்டமாக அங்கீகரித்துள்ளது.
ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் முகம்கொடுத்து பத்தொன்பது வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் பதினேழு பாரிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். கிழக்கு முஸ்லீம்கங்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள் மாட்டுப்பட்டிகள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றன.
வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.
SOURCE: http://lankamuslim.org/tamil-terrorism/
மேலும் படிக்க... Read more...