திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள்.
>> Monday, November 28, 2011
இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,
இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.
"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"
இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக ஒரு சர்வதேசிய அரசியலைத் தொடங்கி கட்டமைக்க வேண்டிய கட்டாயம், குறிப்பாக 1908 இல் இரானில் முதன் முதலாக பெட்ரோலிய எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவால் தொடங்கிவைக்கப்பட்டது என்ற புள்ளியிலிருந்து பயணித்தால் உலகளாவிய பயங்கரவாதத்தின் வேரை கண்டடைய முடியும்.
இந்த சர்வதேச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதை நோக்கி நகர்த்திச் செல்லும் இயக்கக்கூறுகளாக உள்ளூர் அரசியல் இருக்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அளவிலான தீவிரவாதத்தை தனித்துப் பார்க்க முடியாது. உள்ளூர் தீவிரவாதம் மேற்படி சர்வதேச தீவிர வாதத்தின் உள்நோக்க அரசியலுடன் பின்னிப் பிணைந்தது.
உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தின் 80% அரபுப் பிராந்தியத்தில் புதைந்துள்ளது. இந்த உண்மையை உணர்ந்திடாத அரபு ஷேக்குகளும் சுல்தான்களும் அமீர்களும் அந்த அளப்பரிய செல்வத்தை சுரண்டிப்போக அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டிஷ் மேற்கத்திய நாடுகளின் எண்ணெய்க் கம்பெனிகளை கட்டுப்பாடின்றி அனுமதித்தனர் என்பது தான் துயரமான வேடிக்கை.
இந்தக் கம்பெனிகள் பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டு (ஒரு பேரலுக்கு முக்கால் டாலர்!), உலகெங்கும் கொள்ளை லாபத்துக்கு எண்ணெயை விற்று கோடிக் கணக்கில் டாலர்களைக் குவித்தன.
ஆனால் இந்த செல்வத்தின் பிறப்பிடமான அரபுநாடுகளோ சமூக-பொருளாதார வாழ்வில் பின் தங்கி ஏழைகளாக இருந்தன என்பதை இப்போது நம்புவது கடினமே.
2ம் உலகப்போருக்குப் பிந்தைய உலகளாவிய தேசிய உணர்வும் சோசலிசத்தின் எழுச்சியும் அரபுநாடுகளிலும் தேசிய விடுதலை உணர்வுகளைத் தூண்டியது.
இரானில் இந்த எழுச்சி மேலோங்கிய போது பெட்ரோலிய வயல்கள் தேசிய மயமாக்கப்பட்டன. இரான் தேசியத்தலைவர் மொசாதிக் இதற்கு தலைமை தாங்கினார்.
தமது கல்லாப் பெட்டியின் கொழுத்த பகுதியில் அடிவிழவே அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் இந்த தேசியமயமாக்கலுக்கு தடைகளை ஏற்படுத்தின.
இரானின் சுதந்திரமான எண்ணெய் வர்த்தகத்தை கவிழ்த்துவிட பலவகையிலும் ஈனச் செயல்களில் இறங்கினர்.
பிரிட்டிஷ் கப்பல்கள் இரானின் எண்ணெய்க் கப்பல்களை கடலில் தடுத்தன. உச்சகட்டமாக மொசாதிக்கின் ஆட்சியைக் கவிழ்த்து அவரையும் கொலை செய்தனர்.
தனது கைக்கூலியான மன்னன் ஷாவின் பொம்மை அரசை அமெரிக்கா நிறுவியது. ஒருகட்டத்தில் இவனும் தேசிய இயக்கத்தின் பேரெழுச்சி அலையில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு ஓடினான். ஏகாதிபத்திய கெடுபிடிகள் அனைத்தையும் மீறி அரபு தேசியம் வளர்ந்தது. இரானைத் தொடர்ந்து அரபுநாடுகள் அனைத்தும் தமது எண்ணெய் வளத்தை தேசியச் சொத்தாக பிரகடனம் செய்தன.
வழக்கம் போலவே அமெரிக்காவும் அதன் சக கொள்ளையர்களும் இந்த நாடுகளை தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தனர். அன்றிருந்த சோவியத் ரஷ்யா மட்டுமே அரபுநாடுகளுக்கு துணையாக நின்றது.
ஒரு பேரலுக்கு கேவலம் முக்கால் டாலர் என்ற நிலை மாறி 30 டாலருக்கு அரபுநாடுகள் விற்கத் தொடங்கின.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) உருவாகி எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்தது.
வரலாற்றில் முதல்முறையாக அரபு மண்ணின் மக்கள் தமது சொந்த செல்வத்தின் மதிப்பை உணர்ந்து அனுபவித்தனர். செல்வம் குவிந்தது,
ஏகாதிபத்தியத்தின் கல்லாப்பெட்டி அரசியலில் பெரும் அடி விழுந்தது.
தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்று கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களும் ஐரோப்பிய நாடுகளும் அரபுநாடுகள் சொன்ன விலைக்கு எண்ணெயை வாங்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாயின. அரபுநாடுகள் இதன் பின்னரே இன்று நாம் காணும் செழிப்புநிலையை அடைந்தன.
ஏகாதிபத்தியங்களின் பிறவிக்குணமான பிரித்தாளும் சூழ்ச்சியில் அமெரிக்கா இறங்கியது.
இரான்-இராக் மோதல், எகிப்து-சிரியா மோதல், சிரியா-லெபனான் போர், லெபனா னில் கிறித்துவர்-முஸ்லிமிடையே கலவரங்கள், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், குவைத், இராக், இதர அரபுநாடுகளுக்கு இடையே தொடர்ந்து போரும் பதட்டமும் என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் சூழ்ச்சி அரசியலே நிலையாக இருக்கின்றது.
இத்தகைய சூழ்ச்சி அரசியலின் பின்னணியில் அரபுப் பிராந்தியத்தில் தனக்கு ஒரு வேட்டைநாயாகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா நிறுவியது. தியோடர் ஹெர்ஸ் என்பவரின் யூத இனவெறிக் கோட்பாடான ஜியோனிச சித்தாந்தத்தின் அடிப்படையில், இஸ்லாமியரது நாடான பாலஸ்தீனம் 1948ல் அமெரிக்க ஆதரவுடன் பிளக்கப்பட்டு இஸ்ரேல் என்ற புதிய தேசம் 'உருவானதாக' அறிவிக்கப்பட்டது!
நிலமெல்லாம் ரத்தம்- அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்
பாலஸ்தீன மக்களோ ஜோர்டான், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1948 முதல் 1956, 1967, 1973, 1982 என தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், சினாய், கோலன் குன்றுகள், பாலஸ்தீனத்தின் காசா, மேற்குக்கரை என அரபுப்பிராந்தியத்தில் குண்டுவீச்சுக்களை இன்றளவும் நடத்திக்கொண்டு இஸ்ரேல் திரிவதை வரலாறு நிரூபிக்கிறது.
எகிப்தில் நெப்போலியன் தொடங்கி, அல்ஜீரியா, லிபியா, இரான், இராக், லிபியா, பாலஸ்தீனம் லெபனான் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஒரு நூற்றாண்டு ஆக்கிரமிப்பு தனியே எழுதப்பட வேண்டியது.
கடைசியாக பேரழிவு ஆயுதங்களிருப்பதாக பொய் சொல்லி இராக்கில் நுழைந்த அமெரிக்கப்படைகளின் துணையோடு பாக்தாத்தின் வரலாற்று ஆவணக்காப்பகம், தேசிய அருங் காட்சியகம், தேசிய நூலகம் ஆகியவை திட்டமிட்டு சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.
தொன்மையான மெசபடோமியா, சுமேரியா, அக்காடியா, பாபிலோனியா, அசிரியா, சால்டியா, பெர்ஷியா (இரான்), கிரிஸ், ரோம், அரபு வம்சங்கள் ஆகிய நாகரீக, கலாச்சார சின்னங்களின் மிகப்பெரும் அரிய சேமிப்புக்களுடன், உலகின் முதல் சட்ட விதிகளின் தொகுப்பு என்று கருதப்படும் ஹமுராபி சட்ட வரைவுகளின் அசல் சுவடிகள், உலகின் ஆதிப்பழமையான எழுத்து வடிவங்களான குனிபார்ம் எழுத்துச்சுவடிகள், பாடல்கள், வாய்பாடுகள், சுடுகளி மண் சுவடிகள்.. என இந்த அருங்காட்சியகத்தில் இருந்த செல்வங்களின் மதிப்பு அளவிடற்கரியது.
இராக்கிலும் ஆப்கனிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்ததுதான்.
"அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்வது, எடுக்கின்ற எண்ணெயை எந்த வழியாக தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டு வந்து ஸ்டாக் செய்வது, விற்பது" என்ற இரு அஜெண்டாக்களின் மீதுதான் இராக்+ ஆப்கன் (உள்ளே நுழைவதற்கான) போர் தொடங்கப் பட்டது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய், எரிவாயுவை ரஷ்யா வழியாகவோ இரான் வழியாக பாரசீக வளைகுடாவுக்கு தரை மார்க்கமாகவோ எடுத்துவர அமெரிக்கா விரும்பவில்லை.
ஆனால் மூன்று மாற்றுத் திட்டங்களை அது வைத்திருந்தது. அஜர்பைஜான், ஜார்ஜியா, துருக்கி வழியாக மேற்கே மத்திய தரைக்கடல் பகுதிக்குக் கொண்டுவருவது; அல்லது கஜக்ஸ்தான், சீனா வழியாக கிழக்கே பசிபிக் பகுதிக்கு கொண்டு வருவது;
ஆனால் துர்க்மேனிஸ்தான் தொடங்கி மேற்கு ஆப்கன், பாகிஸ்தான் வழியே இந்தியப் பெருங்கடல் வந்தடையும் மூன்றாவது வழியே உகந்தது என்று அமெரிக்கா முடிவு செய்தது.
எனில் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசமாக ஆப்கனை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த போதுதான் அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்-லேடனும் அல்-காய்தாவும் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஒரு வழியைத் திறந்துவிட்டார்கள்.
இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணத்தைப் பரப்பி அமெரிக்கா இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கில் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது.
அல்-காய்தாவை ஒழிப்பதாகச் சொல்லி ஆப்கனில் நுழைந்தது. 9/11 தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தும், தனது மக்கள் ஆயிரக்கணக்கில் சாவார்கள் என்று தெரிந்திருந்தும் தாக்குதலை அனுமதித்தது.
காரணம் எண்ணெய் அஜெண்டாதான். இதற்கான ஆதாரங்கள் இணையதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன.
அரபுப் பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை அமெரிக்க, ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள், சுரண்டி எடுப்பது மட்டுமல்ல.
தங்களின் நீண்ட பாரம்பரிய மத, கலாச்சார வாழ்வையும் பாரம்பரிய அடையாளச் சின்னங்களையும் அழித்ததை, தங்கள் மதத்தின், கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பாக, இன அழிப்பாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.
அமெரிக்காவிலும் அதன் சகாக்களின் மண்ணிலும் இருக்கின்ற பெட்ரோலிய வளம் வெகுவிரைவில் வற்றிவிடும் என்று கண்டறியப்பட்டுள்ள முக்கியமான பின்னணியில் மட்டுமே அரபுப்பிராந்தியத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களின் ஆர்வம், ஆதிக்கம், கெடுபிடி அரசியல், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஆகியவற்றை ஆய்வு செய்யவேண்டும்.
உலகின் மிகப்பெரும்பான்மை பெட்ரோலியவள நாடுகளை தனது காலடியின்கீழ் கொண்டு வருவதன் மூலம், உலக அரசியல்-பொருளாதாரத்தின் அச்சையே தன்னால் கட்டுப்படுத்த முடியும், தான் விரும்பிய திசைக்கு நகர்த்த முடியும் என்ற ஏகாதிபத்திய அரசியல் தான் அமெரிக்காவின் நவீனகால கெடுபிடி அரசியலின் மையப்புள்ளி.
இந்த மையப்புள்ளியில் இருந்து பிறழ்ந்து "அரபுப்பிராந்திய அரசியல்+அமெரிக்கா+உலகளாவிய பயங்கரவாதம்" என்ற அரசியலை ஆய்வு செய்வது, தன்னை ஏமாற்றிக்கொள்வது அல்லது பிறரை ஏமாற்றுவது ஆகிய இரண்டில் ஒன்றாகவே இருக்கும்.
இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.
அதன் உச்சகட்டம் தான் பிவினையின் போது வடக்கு, வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இந்தப் படுகொலைகளில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத் தரப்பாரும் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்.இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.
முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படுகொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.
அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவது தான் சரியாக இருக்கும்.
ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார்.
ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் (கோட்சே காந்திஜியை சுடும்பொழுது கையில் "இஸ்மாயில்" என ஒரு முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு ஒரு மூஸ்லீம் போல் "சுன்னத" தும் செய்திருந்தான்.) எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன.
அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம்,
இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.
மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம் ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும், அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும், தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.
பயங்கரவாதத்தை, அதுவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஊளையிடும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும்கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள்.
இனிமேலும் பேசமாட்டார்கள். நமது பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றைவரியோடு காந்தியின் வரலாறு அல்லது கதை முடிந்து போவது தற்செயலான ஒன்றல்ல.
விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப்பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம் பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலை வெறித் தாண்டவமும், எதிர்வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும்.
இந்திய ஜனநாயகத்தின் தூண்கள், உத்திரங்கள், ஜன்னல்கம்பிகள் என்று வர்ணிக்கப்படும் இந்திய ஊடகங்கள், 1992இக்குப் பிறகு, (தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ போன்ற அரசு ஊடகங்கள் உட்பட) அயோத்தி பற்றிக் குறிப்பிடும்போது 'சர்ச்சைக்குரிய' என்ற சொல்லை சிறிதுகாலம் பயன்படுத்தி வந்தன.
ஆனால் இப்போதெல்லாம் ராமர்கோவில் என்றே ஊடகங்களில் சொல்லாடப்படுவது, கோட்சேவை 'மறந்தது' போன்ற மறதியா, திட்டமிட்ட ஒன்றா?
இது ஊடக பயங்கரவாதமா ஊடக ஜனநாயகமா?
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
அயோத்தியைப் போல், குஜராத்தில் அந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது பா.ஜ.க. முதல்வர் நரேந்திரமோடி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், கூடவே மாநில போலீஸ். ஆயிரக்கணக்கில் குப்பையாக அப்புறப்படுத்தப்பட்டனர் முஸ்லீம் மக்கள்.
இதை நேரில் பார்த்த ஜாஹிரா ஷேக் என்ற இளம் பெண்ணும் அவளுக்காக வாதாட வந்த டீஸ்டா செதல்வாத் என்ற சமூகப் போராளியும் நாயை விடவும் கேவலமாக அரசு நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்டனர்.
ஒருகட்டத்தில் டீஸ்டாவுக்கு எதிராகவே ஜாஹிரா வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு நரேந்திர மோடி அரசு கொடுமைப்படுத்தியது. இங்கேதான் வாய்கிழியும் அளவுக்கு ஜனநாயகம் பேசப்படுகின்றது.
வரலாற்றுச் சம்பவங்களை முன்பின்னாக அடுக்கி 'எடிட்' செய்வதன் மூலம் வரலாற்றைச் சிதைக்கும்-வரலாற்றைத் திரித்து எழுதும் இந்துத் துவா அஜெண்டா
அப்பாவி முஸ்லிம்களின் பிரதிநிதியாகப் பேசவைக்கும் போது,"ஒரு தீவிரவாதி நியாயம் பேசலாமா?" என்ற கேள்வி வைக்கும் உத்தி.
அன்றாடங் காய்ச்சிகளாக, அகதி முகாம்களில் இன்றும் விளிம்புநிலை வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் நியாயங்கள் பேசும்போது அடிபட்டுப் போகின்றன, முற்றாக ஒதுக்கித்தள்ளப்படுகின்றன.
"நீ ஒன்றும் பேசாதே, என்ன இருந்தாலும் நீ தீவிரவாதி" என்ற முத்திரை நெடுகிலும் குத்தப்படுகின்றது.
மாலேகான், ஹைதராபாத் மெக்கா மசூதி போன்ற இடங்களில் குண்டு வெடிக்கச்செய்தவர்கள் ராணுவ கர்னலான புரோஹித் என்பவனும், ஒரு பெண் சாமியாரும், இவர்கள் இணைந்து நடத்தும் ஒரு இந்துத்துவா தீவிரவாத ஆயுதப் பயிற்சிப்பள்ளியும். மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்காரே பாரபட்சமின்றி இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலால் "துரோகி" என்று தூற்றப்பட்டு படாதபாடு படுத்தினர்.
2008 நவம்பர் 26 மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது அங்கே நடவடிக்கைக்காக சென்ற கார்காரே, தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு பலியானார்
('துரோகி' என்று திட்டிய பா.ஜ.க. கும்பல் உடனடியாக 'கார்கரே ஒரு தியாகி' என்று பாடியது. அவரது மனைவிக்கு கோடி ரூபாய்களை சன்மானமாகத் தர மோடி முன்வந்தபோது கார்கரேயின் மனைவி துச்சமாக நிராகரித்தார்).
கார்காரேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெரும் சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன.
"லவுகீக வாழ்வில் வேலைக்குப்போவது, கடைக்குப்போவது, சாப்பிடுவது, மலஜலம் கழிப்பது, துணி துவைப்பது" போன்ற அன்றாடக் கடமைகளைப் போலவே அல்லது அக்கடமைகளில் ஒன்றாகவே சமூகத்தை 'தூய்மை'ப்படுத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று போதிக்கின்றன.
கொலம்பஸ், ஹிட்லர், கோட்சே, அத்வானி, மோடி, ஜார்ஜ் புஷ்...என வரலாறு நெடுகிலும் 'தூய்மை' ப்படுத்தப் புறப்பட்டவர்கள் இப்படித்தான் பதட்டமின்றி இருந்தார்கள், இருக்கின்றார்கள்.
ஆயிரக்கணக்கான அரவாக் இன பழங்குடிகளைத் தீயில் இட்டு எரித்த கொலம்பசும், யூதர்களை லட்சக்கணக்கில் சாக டித்த ஹிட்லரும், அரபுப்பிராந்தியத்திலும் இராக்கிலும் ஆப்கனிலும் ஒரு நூற்றாண்டாக அமெரிக்காவும் அதன் சகாக்களும் இப்படித்தான் பதட்டம் ஏதுமின்றி மனிதப்படு கொலையை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
காந்தி யாரை சுட்டு வீழ்த்தியபோதும் கோட்சேயும் அவனது சகாக்களான வீரசவர்க்கார் கும்பலும் பதட்டமின்றி அமைதியாகத் தான் இருந்தார்கள்.
அயோத்தி, ஒரிசா, குஜராத், பிஹார், மும்பை, மாலேகான், ஹைதராபாத், ராஜஸ்தான், தென் காசி, குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம், கிறித்துவ மக்களை உயிரோடு கொளுத்தியும் குரல்வளைகளை அறுத்த போதும்,
முஸ்லிம்-கிறித்துவப் பெண்களை வல்லுறவு செய்தபோதும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தபோதும் அவர்கள் பதட்டமின்றித்தான் இருந்தார்கள், நிதானமாக 'தூய்மை'ப்படுத்தினார்கள்.
ஸ்டெயின்ஸ் பாதிரி யாரையும் அவரது இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்துக் கொளுத்தி 'தூய்மை'ப்படுத்தியபோதும், சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜெஹான் போன்ற இசுலாமியக்குப்பைகளை போலி என்கவுன்டர்களில் சுட்டு வீழ்த்தியபோதும் பதட்டமின்றிதான் இருந்தார்கள்.
'வாட்டர்' படப்பிடிப்பின் போது மீராநாயரையும் அவரது குழுவினரையும் கங்கைக் கரையில் ஓடஓட விரட்டியபோதும் பதட்டம் இன்றிதான் இருந்தார்கள்.
மீராநாயரை விரட்டிவிட்டு, கங்கையிலும் காசியிலும் மொட்டை அடித்து தெருவில் அநாதைகளாகவும் விபச்சாரிகளாகவும் விரட்டப்பட்ட இந்து மதப்பெண்களின் 'புனித'த்தைக் காப்பாற்றினார்கள்.
குஜராத்தில் சாயாஜி பல்கலைக்கழக மாணவர் சந்திரசேகரையும், பேராசியர் பணிக்கரையும் விரட்டி அடித்து சிறையில் தள்ளியபோதும்,
கர்நாடகாவில் இளம்பெண்களை அடித்து நொறுக்கி அவமதித்து 'பாரதப் பண்பாட்டை'க் கட்டிக்காத்த போதும் பதட்டம் இன்றித்தான் இருந்தார்கள்.
ஆமிர்கானின் 'பானா' திரைப்படத்தை குஜராத்தில் திரையிட்ட அரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி குஜராத்தில் தடை செய்த போதும் பதட்டமின்றி அமைதியாகத்தான் இருந்தார்கள்.
காஷ்மீரில் முஸ்லீம் பெண்களை வல்லுறவுக்காளாக்கிய போதும், முஸ்லீம் சிறுவர்களை போலி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்து பதவி உயர்வு பெற்றபோதும் இந்திய ராணுவத்தினர் பதட்டமின்றி நிதானமாகத்தான் இருக்கின்றார்கள்.
பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய் சிறையில் அடைத்து மனநோயாளிகளாக்கிய போதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள் பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.
அரசு எந்திரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல் கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது.
கர்ப்பிணிப்பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து கருப்பைக்குள் இருந்த கருவைக் கலைத்து கருவறுத்தார்கள் 'கருவறுத்தார்கள்' உண்மைதான்!
முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடி, வயிற்றை சூலாயுதங்களால் கிழித்து, உள்ளே இருந்த சிசுக்களை தீயில் போட்டு வாட்டிய கொடுமையும் நடந்ததே!
எங்கே? குஜராத்தில்.
செய்தவர்கள் யார்? நரேந்திரமோடியும் போலிசும் சங்பரிவார் கும்பலும் தானே!
அல்-காய்தா, இராக், அமெரிக்கா, கத்திரிக்கா, புடலங்கா என்று பேசும் ஊடகங்களில் குஜராத்தில் இந்தக் கொடுமைக்காரர்களைப் பற்றி ஓர் இடத்திலும் குறிப்பாகவோ அடையாளத்தாலோ கூட உணர்த்தாதது ஏன்?
.ஆம், பதட்டம் ஏதும் இன்றி இந்துத்துவா தீவிரவாதிகள், முஸ்லிம், கிறித்துவர்களை நல்லபடியாகத்தான் 'தூய்மை'ப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
'இந்திய சமூகத்துக்கு தேவையில்லாத இஸ்லாமியர்களை, இடையூறு விளைவிப்பவை. இவர்களை அப்புறப்படுத்தி சமூகத்தைத் 'தூய்மை'ப்படுத்தும் கடமையை கோட்சேயைப் போல், மோடியைப் போல் நிதானமாக, பதட்டமின்றி செய்யவேண்டும்' என்ற இந்துத்துவா அரசியலை வெட்கம் ஏதுமின்றி 'பாஞ்ச ஜன்ய' சங்கு எடுத்து ஊதுகின்றனர்.
தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும்,
வர்த்தக லாபங்களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,
இந்த அஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும்,
இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.
பொதுவாக சமூகத்தில் சுத்தமானவர்கள், முற்போக்கானவர்கள் என்று 'அறியப்பட்ட' வர்களின் அசைவுகள், வார்த்தைகளை பொதுவெளியில் உள்ள சமூகம் எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கிறது.
அவர்கள் கூறும் வார்த்தைகளின் உள்ளே புகுந்து உண்மையைத் தேடுவதை விட்டுவிட்டு வார்த்தைகளையே உண்மை என நம்பிவிடுகின்றது.
"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்" என்ற ச.தமிழ்ச்செல்வனின் கவலையை இங்கே பதிவு செய்வது பொருத்தம்.
ஆக்கம்: இக்பால் சனி, 09 ஜனவரி 2010 05:36
THANKS TO SOURCE: keetru.com.
தொகுப்பு: வாஞ்ஜூர்.
5 comments:
//இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைக் காய்ச்சி எடுக்கிறார்கள்//
-தாங்கள் வருத்தப் படுவதில் 100% உண்மை இருக்கிறது.
நம் மக்கள் இவ்வுண்மையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அருமையான பதிவு! தொடர்ந்து எழுதுங்கள் வாஞ்சூர் அண்ணன்!
பதைபதிக்குது நெஞ்சு
அறிவியல் யுகம் இது, ஆனால் நீர் இல்லாத தேசத்தில் கூட நீண்ட யுத்தங்கள்….
http://changesdo.blogspot.com/2011/11/blog-post_28.html
இதற்கு தீர்வு.புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வதே!!!
Post a Comment