**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி.

>> Wednesday, November 16, 2011

தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்
“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “
என்ற‌
தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு
மறுப்பு அறிக்கை
தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.

இளையான்குடி பேருராட்சி தலைவர்
அயூப்அலிகான் மறுப்பு அறிக்கை

தினமலர் செய்திக்கு பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை.

15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர் என்ற தலைப்பில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்வித பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்தது போல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாற்று மதத்தினை சேர்ந்த எனது ஒரு சில நண்பர்கள் எனக்கு வாக்களித்த கிராமபுற மக்களுக்கு விருந்து வைத்தனர்.

பேருராட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மதநல்லிணக்கத்துடன் அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.

எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அவதூரான இச்செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அன்புடன்,
A.அயூப்அலிகான்
பேருராட்சி தலைவர்
இளையான்குடி
************

தினமலரில் வெளியான பொய்யான மற்றும் தவறான செய்தி .
கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்

இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அயூப் அலிக்கான், தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக, மூன்று "கிடா' வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, இளையான்குடி பேரூராட்சி 16வது வார்டு செயலராக இருந்த அயூப் அலிக்கான், நகர் செயலர் அன்வர், அவைத் தலைவர் அப்துல் குலாம் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதில், நகர் செயலர் அன்வருக்கு சீட் வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் அப்துல் குலாம், அயூப் அலிக்கானை தலைவர் பதவிக்கு, சுயேச்சையாக களத்தில் இறக்கினார். கட்சித் தலைமை அப்துல் குலாம், அயூப் அலிக்கானை கட்சியில் இருந்து நீக்கியது.

தங்களது பலத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், அப்துல் குலாம் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அ.தி.மு.க., வேட்பாளர் அன்வரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அயூப் அலிக்கானை வெற்றி பெறச் செய்தனர்.

ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி, சுயேச்சையாக வெற்றி பெற்ற அப்துல் வாஹித் துணைத் தலைவரானார்.

இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலிக்கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திக் கடனாக, மூன்று "கிடா' வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில்," தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி வாய்ந்தது. எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டியிருந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன்' என்றார்.


SOURCE: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=349170

INFORMATION FROM ILAYANGUDIAN.
******************************************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

19 comments:

Aashiq Ahamed November 16, 2011 at 12:51 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,

சரியான நேரத்தில் வந்திருக்கும் பதிவு. ஜசாக்கல்லாஹ்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Unknown November 16, 2011 at 12:51 PM  

இந்த மாதிரி கண்டனம் தெரிவிப்பதை விட...............அவர்கள் மேல கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தால் நல்ல இருக்கும். இல்லை இது போன்று நடந்து கொண்டுதான் இருக்கும்..................

ஆமினா November 16, 2011 at 12:56 PM  

அடக்கொடுமையே....


ஏன் இவனுங்க புத்தி இப்படி போகுது?? இல்லாத விஷயத்தை நடந்தாக சொன்னது மிக கேவலாம செயல்

தமிழ் மாறன் November 16, 2011 at 1:13 PM  

ஹிந்துத்துவா வெறிபிடித்து தமிழர்கள் மத்தியில் மத துவேசத்தை பரப்ப தொடர்ந்து தினமலம் பாடுபட்டு வருகிறது. இந்த வந்தேறி பிராமணர்களை தமிழகத்தை விட்டு துரத்த வேண்டும் அப்போதான் தமிழகம் உருப்படும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ November 16, 2011 at 1:29 PM  

ஸலாம் சகோ.வாஞ்சூர்.
உடனடி பதிலடி பதிவு.
நன்றி சகோ.

தினமல# எனும் இந்த தினசனி எப்போதுமே இப்படித்தான் போல. ஏதாவது சமூக விரோத செய்திகளை தந்து கொண்டே இருக்கும்போல.

சம்பந்தப்பட்ட வேட்பாளரை ஆதிமுக நீக்கிய பின்னும் அவர் சுயேட்சையாக வெற்றி பெற்ற காண்டு..! அந்த பொறாமை இப்படியான ஜனநாயக சமுதாய விரோத பொய்ச்செய்திகளில் வந்து முடிகிறது.

தினமல# எனும் இந்த தினசனிக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

suvanappiriyan November 16, 2011 at 1:30 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,

சரியான நேரத்தில் வந்திருக்கும் பதிவு.

ஆயிஷா அபுல். November 16, 2011 at 1:38 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதே இவனுடைய பொழப்பா போச்சு.

கேஸ் போட்டு, கோர்ட்டுக்கு இழுத்து இவனுடைய ஆட்டத்திற்கு
முற்றுப் புள்ளி வைக்கணும் .

வலையுகம் November 16, 2011 at 2:03 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அடப்பாவிகளா தினமலம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாமே......

Ibnu Jamaal November 16, 2011 at 2:08 PM  

right information at the right time... well done Mr. Vanjoor... God bless you

பி.ஏ.ஷேக் தாவூத் November 16, 2011 at 2:45 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,
தொடர்ந்து பொய்யான செய்திகளை உண்மை செய்திகள் போல காட்டி வரும் தினமலரின் திமிர்த்தனத்தை அப்பட்டமாக வெளிக்கொண்டு வரும் பதிவு. ஆனால் வெறும் வருத்தத்தை தெரிவித்து ஜகா வாங்கி விடும் தினமலர். இப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். ஏற்கெனவே நபிகளாரின் கார்ட்டூன் விவகாரத்தில் தினமலரின் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் ஆணையிட்டும் தன்னுடைய ஆட்சி காலத்தில் கைது செய்யாமல் காப்பாற்றினார் கருணாநிதி. இப்போது ஜெயாவின் ஆட்சி. எனவே ஒன்றும் உருப்படியாக நடக்காது. இஸ்லாத்திற்கு மாற்றமான அந்த விருந்தில் கலந்து கொண்ட இளையான்குடி பேரூராட்சி தலைவரும் வன்மையாக கண்டிக்கத்தக்கவர். இது போன்ற விருந்தில் கலந்து கொள்பவர்கள் இந்த தினமலரின் செய்தியை படித்தாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

kaja nazimudeen November 16, 2011 at 3:55 PM  

என்னவொரு 'அதிமேதாவி(?) தனமாக வாசகர்களுக்கு ... (தினமலர்) ... வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்' .... என்பதை கவனித்தீர்களா!

*****வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்*****


எவருடைய மனதையும் புண்படுத்தாத ... உண்மை செய்திகளை மட்டும் நாகரிகமான வகையில் வெளியிட்டால் என்னவாம்? வாசகர்களிடமிருந்து மட்டும் இவைகளை எதிர்ப்பார்க்கிறது - இந்த கேடு கெட்ட ஜன்மம், தின மல(ம்)ர் ... திருந்தவே மாட்டார்கள்!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

F.NIHAZA November 16, 2011 at 4:53 PM  

சலாம்....

பொது ஊடகத்தில் ஒரு தப்பான தகவலைப்போட உந்துசக்தி எப்படிக்கிடைத்தது....
இதன்“ பிண்ணணியில் யார்யாரோ???

இந்தப் பிரச்சனைக்கு ...தீர்வு கிடைக்கத பட்சத்தில்..
உண்மைக்கெதிரான வன்முறைகள் தொடரக்கூடும்....

போராடி...
தண்டணைவாங்கிக்கொடுக்கும் முயற்சியில் தீவிரத்தைக்காட்ட தயாராகுங்கள்.....

ஸாதிகா November 16, 2011 at 9:27 PM  

சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தினமலருக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.

HIDAYATH November 16, 2011 at 11:38 PM  

முஸ்லீம்களை சீண்டிப்பார்ப்பதே இந்த மானெங்கெட்ட தினமல(ம்)பத்திரிக்கைக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருவரது மத நம்பிக்கையோடு விளையாடுகிறது இந்த கேடுகெட்ட தினமலம். என்னுடை கடுமையான கண்டனங்கள்.

Nasar November 16, 2011 at 11:57 PM  

சங்கராச்சாரியார் சிறீரங்கம் மாமியிடம் பல மணி நேரம் அலைப்பேசியில் பேசிய , சல்லாப, ஜொள்ளுகளைப் பற்றி ஒரு வரி எழுதியதா இந்த கிராஸ் பெல்ட் கூட்டம்? காரணம் தெரிந்ததே! ஏன்னா அது "அவாள்கள் " இனம்...மேட்டர் சந்தி சிரிப்பதால் போடவில்லை ....

இளையான்குடி இல் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததைப் போல் செய்தி போட்ட

தினமலமே என்றைகாவது உள்ளது உள்ளபடி செய்தி போட்டு இருப்பாயா ??? சொல் ...

திமிர் பிடித்த தினமலரின் பூணூலை அறுக்கவேண்டும் ஏட்டு முலமாக அல்ல ...

'AQ ' பாணியில் அதாவது ' பின் லேடன் ' ஸ்டைலில் ,அப்போதான் அவாள்களின்

கொழுப்பு அடங்கும் ........

சத்தியமார்க்கம்.காம் November 17, 2011 at 10:25 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்.

தக்க நேரத்தில் வெளியிடப்பட்ட தங்களின் இப்பதிவு, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது:
http://www.satyamargam.com/1835

ஜஸாக்கல்லாஹு கைரா!

அதிரை முஜீப் November 20, 2011 at 6:08 PM  

தினமலரின் துவேசம் நாம் அறிந்ததுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை!. அதே சமயம் இந்த விசயத்தை எல்லா சகோதரர்களும் ஒரே பார்வையில் அணுகுவதும் தவறானது ஆகும்.

ஏனெனில் தனக்கு ஓட்டளித்த கிராம மக்களுக்கு விருந்து வைத்ததாக பேரூராட்சி தலைவர் தன் அறிக்கையின் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார். இதுவே மிகப் பெரிய குற்றம்!. இதுவும் ஒருவகை இலஞ்சமே!. தேர்தல் கமிஷன் இதற்காகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஓட்டளிப்பது மக்களின் கடமை. அதற்காக தேர்தலுக்கு முன்னும், பின்னும் இதுபோல் விருந்து வைப்பதும் குற்றமே!. மக்கள் இவரை தேர்ந்தெடுத்தது விருந்து வைக்க அல்ல!. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே!!.

மேலும் பஞ்சாயத்து தலைவர் அந்த விருந்தில் கலந்து கொண்டதற்கு கூறும் காரணம், மத நல்லினக்கமாம்!. இங்கே எங்கே வந்தது மத நல்லிணக்கம்?. தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அளிக்கும் விருந்திற்கும் மத நல்லினதிற்கும் என்ன தொடர்பு?. எனவே தினமலர் கருத்தையும் சற்று ஆராயவேண்டியுள்ளது. இவரிடம் பேட்டி எடுக்காமல் செய்தி வெளியிட்டது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்!.

Sulthan Allaudeen January 29, 2012 at 5:55 PM  

Kodumai.

Thina Mala(m)r i really the waste. It should not followed. The publisher, editor should be stand before Allah in the Judgement day. They'l surely realize their mistakes in the judgement day.

Sketch Sahul April 5, 2012 at 12:14 AM  

தினமல# எனும் இந்த தினசனிக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP