தங்கத்தை மட்டும் எடுக்கிறேன். தூசுகளைத் தட்டி விடுகிறேன்
>> Tuesday, May 6, 2008
சாதாரண மனிதராக அமெரிக்காவுக்கு வந்து இரும்புத் தொழிலில் ஈடுபட்டு, அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தவர் ஆண்ட்ரூ கார்னகி. பல சுய முன்னேற்ற நூல்களையும் தன்னம்பிக்கை கட்டுரைகளையும் எழுதிய டேல் கார்னகியின் தந்தை இவர்.
ஒருமுறை ஆண்ட்ரூ கார்னகியிடம், அதிகம் முன்னேறாத தொழிலதிபர் ஒருவர் வந்தார்.
‘‘நானும் இதே தொழிலில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களிடம் மட்டும் வெற்றி குவிகிறது. எப்படி?’’ என்று கேட்டார்.
‘‘என்னிடம் திறமையான தொழிலாளர்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களால் உற்பத்தித் திறன் பெருகுகிறது’’ என்று பதில் சொன்னார் ஆண்ட்ரூ.
‘‘அது எப்படி, உங்களுக்கு மட்டும் திறமையானவர்கள் கிடைக்கிறார்கள்? எனக்குத் திறமையானவர்கள் கிடைக்க மாட்டேன் என்கிறார்களே?’’
‘‘திறமையானவர்களைத் தேடுவதைவிட நம்மிடம் இருப்பவர்களிடம் உள்ள திறமைகளைச் கண்டுபிடிப்பதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.’’
‘‘எப்படி?’’ என்றார் வந்தவர்.
‘‘தங்கச் சுரங்கத்தில் வேலை செய்பவர்களைக் கவனித்தால் ஒரு விஷயம் தெரியும். அவர்கள் தங்கத்தைத்தான் தேடுவார்கள். அதைத் தேடும்போது வரும் மண், தூசு போன்றவற்றைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
அதுபோல் நானும் என்னிடம் வேலை பார்க்கிறவர்களிடம் தங்கத்தை மட்டும் எடுக்கிறேன். தூசுகளைத் தட்டி விடுகிறேன்’’ என்று பதிலளித்தார் ஆண்ட்ரூ.
0 comments:
Post a Comment