**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?

>> Wednesday, January 30, 2008

இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?

பதில்:நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.

நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!

உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

இருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்?

இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது?

இப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

நான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெலலாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.கடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களை தவிர்களாம் .

இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்ட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

THANKS TO :http://www.jaffer-sadiq.blogspot.com/

மேலும் படிக்க... Read more...

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+" கிறிஸ்தவ ஜாதி சனியன்"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்

>> Saturday, January 26, 2008

இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்
http://www.tmpolitics.net/iip/Articles/Inaveattrumai.htm
இஸ்லாத்தைப் பற்றி தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்,
‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’

இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார்,
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது

இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
---------------------------
" கிறிஸ்தவ ஜாதி சனியன்" . இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!
இந்து மதத்தில்தான் ஜாதிகள் உண்டு. இதிலிருந்து உருவாக்கப்பட்ட சீக்கியத்தில்கூட ஜாதிகள் உண்டு. இந்துமதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்குப் போனவர்கள் அங்கும் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள். ஒரே மேய்ப்பனாக ஏசு இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரே மந்தையாக இருப்பதில்லை.
http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_8914.html
-------------------------------------
ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது.

அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர்.வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவு படுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர்.

உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன.

அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை.

இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன.ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார்.

ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும்

.MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார்.

அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல;

இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.ஆதி காலத்தில் தமிழக மக்கள் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர்.

ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன.

இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா?

அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான்,

ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர்.அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே பொய்க்கடவுளர்களின்கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா?

ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்?

பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும்.

இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை.இதை நாம் சொல்லவில்லை,

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான
"இன இழிவு இஸ்லாமே நன் மருந்து" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார்.

பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது.

1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும். இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி

காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான்.இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள்.

எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே!

அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை.தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே!

ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை.

அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள். அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள்.

அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள்.

அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்;

அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள்.இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை

பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது.

மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை.

அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

அம்பேத்கார் தழுவிய பெளத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது.அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை.

பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்?

இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை.

அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை.

புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள்.

இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்"எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை.

""மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு." அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள்.

ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர்.இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர்.

தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால்

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும்.

இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல்

"என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர்." (25:30 அல்குர்ஆன்)

என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை.

எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்
"எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். " என்று இறைவன் கூறியிருப்பதை

இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம்.மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.

அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை.

எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும்,

நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்,

குறைந்த பட்சம் தெய்வமில்லையா?(நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால்

அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
NANDRI: http://www.readislam.net/untouchable.htm

மேலும் படிக்க... Read more...

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

>> Thursday, January 24, 2008

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்" திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. "இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?" என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. "30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது" என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

"ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்" என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், 'பிளாசி'ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, "இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்" என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். "திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்" என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது" என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, "குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு "உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்" என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்" என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

"ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்" என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, "மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?" என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

"எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி" என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். "எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது" என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

"ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்" என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: "சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது."

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: "இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்." இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

"நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்."

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. "விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்" என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். 'சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? 'உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் "ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்" என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. "மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

"நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்."

"மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா"
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

-மருதையன்

http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2006/nov_2006/03.html

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=726&Itemid=130
-----------------------------------------

3000 பார்ப்பனர்களை திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக மதம் மாற்றினாரா? அவர் நெருக்கடியால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?

http://idhuthanunmai.blogspot.com/2008/01/3000-3000.html

உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் இந்தியாவில் இருந்துதான் ஏவப்பட்டது

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html

மேலும் படிக்க... Read more...

முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் சத்தியதீனுல் இஸ்லாத்தை நெறியாக ஏற்று ஹஜ் கடமையை நிறைவேற்றினர்

>> Thursday, January 10, 2008

முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் என்னும் புனிதக் கடமையினை நிறைவேற்றி ஹஜ் பயணிகள் தாயகம் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

புனிதக்கடமையை நிறைவேற்றிய மகிழ்வுடன் திரும்பும் ஹாஜிகளிடையே புதிதாக இஸ்லாத்தை எற்றுக் கொண்டு முதன் முதலாக தங்களது இறைக்கடமையினை நிறைவேற்றியவர்கள் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

அத்தகைய சிறப்பிடம் பெற்ற ஹாஜிகளிடையே இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ்வின் விருந்தினர்களாக புனித ஹஜ் கடமையினை நிறை வேற்றினர்.

பலர் தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினர். சில ஹாஜிகளின் பயணச் செலவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் ஏற்றன.
அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார்.

இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து 17 ஆயிரம் பேர் ஹஜ்ஜுக்காக சென்றனர்.

செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஓதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை எற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

தான் இஸ்லாத்தை எற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார்.

சிறைச்சாலைகளின் உள்ளே தனது பாதிரியார் பணியைத் தொடர்ந்தார். தனது பணியில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பின்னர் அனைத்து சமயங்களின் வேத நூல்களையும் படித்தார்.

அவர் ஆழ்ந்து படித்தவற்றில் திருக்குர்ஆனும் அடக்கம். நான் குர்ஆனை வாசித்த தருணங்களே என்வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது என தெவித்தார்.

நான் திருக்குர்ஆன் முதல் அத்தியாயமான அல் பகறாவை வாசித்தபோது சந்தேகமே இல்லை. இது நிச்சயம் வழிகாட்டக் கூடிய நூல் தான் என்பதை உணர்ந்தேன். என் இதயம் அதை விட்டு வேறங்கும் நகர மறுத்தது.

குர்ஆன் மீதான தனது மரியாதை அதிகரித்துக் கொண்டதாகக் கூறும் அவர் தனக்கு நேர் வழி காட்டுமாறு வல்ல இறைவனிடம் வேண்டியதாகவும் தெரிவிக்கிறார்.

ஒரு நாள் நான் எனது மடத்தை விட்டு வெளியேறினேன். அப்போது ஒரு மனிதன் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் சலீம் பாகில் அவரிடம் நான் உங்களோடு பள்ளிவாசல் வர விரும்புகிறேன் என்று கூறினேன். என்னை அன்போடு அழைத்துச் சென்றார். அவர் தொழுகை குறித்து தெளிவாக விளக்கினார். நான் நாள்தோறும் பள்ளிவாசல் செல்லத் தொடங்கினேன்.

ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒரு சகோதரர் வந்து ஒளு செய்யும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். உள்ளமும் உடலும் ஒரு சேர பரிசுத்தமானது போன்று உணர்ந்தேன்.

அன்றிலிருந்து அலி கவுதமாலா முஸ்லிம் அனார். அவருக்கு வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன யூத மதத்தில் தீவிரப்பற்று வைத்திருந்த அலியின் சகோதரி முஸ்லிம்கள் உன்னை கொல்லத்தான் போகிறார்கள் என மிரட்டியும் இருக்கிறார்.

எதைப் பற்றியும் கவலைப்படாத அவர் தனது ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தேன். ஆகா அப்புனித பயண நாட்கள் என் வாழ்வின் அற்புதமானவை மறக்க முடியாதவை என்ற அலி எனக்கு ஹஜ் பயணம் சிறப்பான சந்தோஷத்தையும் படிப்பினைகளையும் தந்தது.

அண்ணல் பெருமானார் (ஸல்) காலடித்தடங்கள் பதிந்த அந்தப்பகுதிகளில் நடந்து சென்றபோதும் கஃபத்துல்லாஹ்வை கண்ணால் கண்ட போதும் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும் செவர்டூ ரோயிஸ்ஆக இருந்து அலியாக மாறிய முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் மூன்று பேரும் இந்த ஹஜ் புனிதக் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.

இவர்கள் மூவரும் மார்க்க அழைப்பாளர் கமர் ஹுûஸன் அழைத்திருந்த மதம் குறித்த விவாதத்தில் பங்கேற்று இஸ்லாத்தின் பரிபூரணத்துவம் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மூன்று முன்னாள் மத குருக்களுக்கும் முறையே அப்துல்காதர், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் எனப் பெயரிடப்பட்டது.

அழைப்பாளர் கமர் ஹுஸன் அழைப்பு விடுத்த "மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது.

இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன. --அபூசாலிஹ்
http://www.tmmkonline.org/tml/others/108718.htm

மேலும் படிக்க... Read more...

இதைச் செய்யாதே!’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும் !!!!

>> Friday, January 4, 2008

அழகான உரையாடல் ஒன்றைப் படித்தேன்...

ஒருவர் தன் நண்பரிடம். ‘‘ஒரு வேலை செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?’’ எனக் கேட்டார். அதற்கு அந்த நண்பர். ‘‘மொத்தம் மூன்று முறைகள் இருக்கின்றன’’ என்றார்.

உடனே அவர், ‘‘அந்த மூன்று முறைகளைச் சொல்லுங்களேன்?’’ என வினவினார்.

அதற்கு நண்பர் சொன்னார்,‘ நீங்களே அந்த வேலையச் செய்துவிடுவது. அப்படிச் செய்தால் அந்த வேலை நடந்துவிடும்.

அப்படியில்லையென்றாலும் யாராவது ஒரு ஆள் வைத்துச் செய்வது. அப்படி யென்றாலும் அந்த வேலை நடந்துவிடும்.

மூன்றாவது, ‘இதைச் செய்யாதே!’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும்!’’ என்று பதில் சொன்னார்.

நாம் சொல்வதற்கு நேர்மாறாக செய்வதில் பிள்ளகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது

எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை சிறுவயதிலிருந்தே மனிதன் அனுபவிக்கத் துவங்குகிறான் என்பதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் பல வாழ்க்கைத் தடைகள் நீங்குவதற்கான வழி திறந்து கொள்ளும்.
குழந்தை எதிர்க்காது.
சிறுவன் எதிர்ப்பான்.
வாலிபன் அத்து மீறி நடப்பான்.
காரணம், குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் LOGIC (தர்க்கம்) வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது, எதையும் அலசிப்பார்ப்பது தான் LOGIC (தர்க்கம்). தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே,

‘‘பிள்ளை வளர்ந்துட்டான்யா...’’ ‘‘என்ன கேள்வி கேட்கிறான். தெரியுமா?’’
‘‘அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!’’ என நாம் பெருமைப்படுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி, இது இயற்கை. வரவேற்கத்தக்கது.

ஆனால், இது குதர்க்கமாகும் போதுதான் ‘பிள்ளயா இது... குட்டிச் சாத்தான். இதைப் பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!’’ என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.

‘‘முடியாது!’’ ‘‘அப்படித்தான் செய்வேன்’’ ‘‘நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்?’’ என்பன போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க்கத்தின் விதைகள்.

குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான் கேள்வியில் கூட குதர்க்கம் கொப்புளிக்க ஆரம்பிக்கிறது.

இப்படிப்பட்டவர்களின் உரையாடல் கூட குதர்க்கமாகிவிடுகின்றது. குதர்க்கங்கள் தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறிவைத்து விடுகின்றன.

குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது.
மனைவி அவருடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது, கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து
ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ, ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய் கிண்டலடித்துப் பேசுவதுவரை,
குதர்க்கமாய்க் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவை யெல்லாமே குதர்க்கம் முற்றியதால் வந்த புற்று நோய்கள்தான்.

‘‘இப்படிப் பேசுபவர்களெல்லாம் குதர்க்க வாதிகள்’’ என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால், இது அவர்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் அவர்களின் குதர்க்கம் அவர்களுக்குப் புரியுமா?’’

அவர்களின் குதர்க்கம் உங்களுக்குப் புரிந்தது அளவிற்கு அவர்களுக்குப் புரியாதில்லையா? அதேபோலத்தான் நமக்கும்???
உங்களைவிட உங்களை சுற்றி யிருப்பவர்களுக்குத் தெளிவாய் தெரியும் உங்களின் குதர்க்கங்களை கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுப்பட்ட காரியமல்ல.
குதர்க்கங்களைத் தாண்டிவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும்..
nandri: internet.
மற்ற பதிவுகளை படிக்க: : - வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

கவியரசு வைரமுத்து>>அதிர்ச்சி வைத்தியம்’ என்றால் என்ன?சொன்னாச் சிரிப்பீக; சொல்லித்தான் ஆகணும்.--

>> Wednesday, January 2, 2008

பரண் மேல ஒசரத்துல ஒரு பொருள் இருந்திருக்கு. ஒரு பானையைத் தலகீழாக் கவுத்து அதுல ஏறி நின்னு எடுக்கப் பாத்திருக்கா வீட்டுக்காரி.

எட்டல; ஒரு எக்கு எக்கிருக்கா. உருண்டு ஓடிப்போச்சு பானை..

‘‘யாத்தே... யப்பே...ன்னு அலறி விழுந்தவள ஓடிவந்து தூக்குனாக ஊரெல்லாம்,

எந்திருச்சுட்டா. ஆனா, தூக்குன கையி தூக்குன மேனிக்கே இருக்கு; மடங்கமாட்டேங்குது.

ஊர்ப்பட்ட பண்டுதம் பாத்தாக; ஒண்ணும் வேலைக்காகல; நின்னாலும் ஒக்காந்தாலும் படுத்தாலும் ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போனாலும் கையத் தூக்குன மேனிக்கே இருக்கா பாவம்.

இதுக்கு ஒரு வைத்தியமுமில்லயான்னு குடும்பமே மருகி நிக்க, ‘ஒரு வழிதான் இருக்கு’ன்னு வந்தாரு உள்ளூரு வைத்தியரு.

‘தூக்குன கைஇடுக்குல தலைமேல ஒரு கூடைய வச்சு வீதி வழியா நடக்கவிடுங்க இவள’ன்னாரு.

அவ கூடை சொமந்து வீதி வழியாப் போறா. ஊரே வேடிக்கை பாத்து நிக்கிது.

குறுக்குச்சந்து வழியா குபீர்ன்னு ஓடிவந்த வைத்தியரு படீர்ன்னு உருவுறாரு அவ சேலையை.

அம்புட்டுத்தான். ‘ஏண்டா தூமச்சீலை! எவன்டா ஏஞ்சேலைய உருவுறவன்’னு போட்டா பாரு நாலு போடு... சப்பு சப்பு சப்புன்னு சாத்திப்புட்டா. அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு... அவளுக்கு மடங்காத கையி வசத்துக்கு வந்திருச்சுன்னு.

ஊரே சிரிக்குது அவளப்பாத்து. அவ பாவம் அழுகிறா. அவமானப்பட்ட துக்கத்துலயும் கையி வெளங்கிடுச்சுங்கற சந்தோஷத்துலயும்.

இதானம்மா அதிர்ச்சி வைத்தியம்.

(ஆதாரம்: கழனியூரன் எழுதிய கட்டுரை ஒன்று.)
NANDRI : VAIRAMUTHUVIN BATHILKAL
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

வளர்ந்துவிட்டால் பிடுங்க வராது............. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.

வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். ஜாலி என்ற பேரில் உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களையும் கற்று வைத்திருந்தான்.

அவனது கெட்ட பழக்கங்களை யாராவது சுட்டிக் காட்டினால், அவன் சொல்லும் பதில் இதுதான்.இந்த வயசுலதான் இப்படிலாம் இருக்க முடியும். அப்புறம் மாறிடலாம்!

இவனுடைய இந்தப் பழக்கங்களக் கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் அவனை அழைத்தார்.

தம்பி, என் கூட வா. உனக்குக் கொஞ்சம் வேலை வைத்திருக்கிறேன் என்றார். மாணவன் அவருடன் சென்றான்.

அங்கே தோட்டத்தில் ஒரு சிறு செடியைக் காட்டினார்.
தம்பி இந்தச் செடியைக் கொஞ்சம் பிடுங்கிப் போடு என்றார் பேராசிரியர்.
தயக்கமே இல்லாமல் மாணவன் சட்டென்று பிடுங்கிவிட்டான்.

அடுத்து அதைவிட சற்று பெரிய செடியைக் காட்டி பிடுங்கச் சொன்னார். அதையும் அவன் எளிதில் பிடுங்கிவிட்டான்.
அதற்கடுத்து அதைவிடப் பெரிய செடி. இந்த முறை சற்று சிரமப்பட்டு பிடுங்கினான் மாணவன்.

கடைசியாக ஒரு மரத்தைக் காட்டி தம்பி, இதையும் கொஞ்சம் பிடுங்கிப் போட்டுடுப்பா என்றார். மாணவன் திகைத்தான்.

என்ன சார், விளயாடறீங்களா? இவ்வளவு வளர்ந்த மரத்தை எப்படிப் பிடுங்குவது?

அதற்கு பேராசிரியர் சொன்னார். உன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும் அப்படித்தான். வளர்ந்துவிட்டால் பிடுங்க வராது. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.

பேராசிரியரின் விளக்கம் மாணவனுக்குப் புரிந்தது. ( nandri: internet. )

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP