இதைச் செய்யாதே!’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும் !!!!
>> Friday, January 4, 2008
அழகான உரையாடல் ஒன்றைப் படித்தேன்...
ஒருவர் தன் நண்பரிடம். ‘‘ஒரு வேலை செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?’’ எனக் கேட்டார். அதற்கு அந்த நண்பர். ‘‘மொத்தம் மூன்று முறைகள் இருக்கின்றன’’ என்றார்.
உடனே அவர், ‘‘அந்த மூன்று முறைகளைச் சொல்லுங்களேன்?’’ என வினவினார்.
அதற்கு நண்பர் சொன்னார்,‘ நீங்களே அந்த வேலையச் செய்துவிடுவது. அப்படிச் செய்தால் அந்த வேலை நடந்துவிடும்.
அப்படியில்லையென்றாலும் யாராவது ஒரு ஆள் வைத்துச் செய்வது. அப்படி யென்றாலும் அந்த வேலை நடந்துவிடும்.
மூன்றாவது, ‘இதைச் செய்யாதே!’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும்!’’ என்று பதில் சொன்னார்.
நாம் சொல்வதற்கு நேர்மாறாக செய்வதில் பிள்ளகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது
எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை சிறுவயதிலிருந்தே மனிதன் அனுபவிக்கத் துவங்குகிறான் என்பதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் பல வாழ்க்கைத் தடைகள் நீங்குவதற்கான வழி திறந்து கொள்ளும்.
குழந்தை எதிர்க்காது.
சிறுவன் எதிர்ப்பான்.
வாலிபன் அத்து மீறி நடப்பான்.
காரணம், குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் LOGIC (தர்க்கம்) வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது, எதையும் அலசிப்பார்ப்பது தான் LOGIC (தர்க்கம்). தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே,
‘‘பிள்ளை வளர்ந்துட்டான்யா...’’ ‘‘என்ன கேள்வி கேட்கிறான். தெரியுமா?’’
‘‘அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!’’ என நாம் பெருமைப்படுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி, இது இயற்கை. வரவேற்கத்தக்கது.
ஆனால், இது குதர்க்கமாகும் போதுதான் ‘பிள்ளயா இது... குட்டிச் சாத்தான். இதைப் பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!’’ என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.
‘‘முடியாது!’’ ‘‘அப்படித்தான் செய்வேன்’’ ‘‘நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்?’’ என்பன போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க்கத்தின் விதைகள்.
குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான் கேள்வியில் கூட குதர்க்கம் கொப்புளிக்க ஆரம்பிக்கிறது.
இப்படிப்பட்டவர்களின் உரையாடல் கூட குதர்க்கமாகிவிடுகின்றது. குதர்க்கங்கள் தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறிவைத்து விடுகின்றன.
குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது.
மனைவி அவருடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது, கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து
ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ, ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய் கிண்டலடித்துப் பேசுவதுவரை,
குதர்க்கமாய்க் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவை யெல்லாமே குதர்க்கம் முற்றியதால் வந்த புற்று நோய்கள்தான்.
‘‘இப்படிப் பேசுபவர்களெல்லாம் குதர்க்க வாதிகள்’’ என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால், இது அவர்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் அவர்களின் குதர்க்கம் அவர்களுக்குப் புரியுமா?’’
அவர்களின் குதர்க்கம் உங்களுக்குப் புரிந்தது அளவிற்கு அவர்களுக்குப் புரியாதில்லையா? அதேபோலத்தான் நமக்கும்???
உங்களைவிட உங்களை சுற்றி யிருப்பவர்களுக்குத் தெளிவாய் தெரியும் உங்களின் குதர்க்கங்களை கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுப்பட்ட காரியமல்ல.
குதர்க்கங்களைத் தாண்டிவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும்..
nandri: internet.
மற்ற பதிவுகளை படிக்க: : - வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment