மனித இதயம் இடது, வலது என இரண்டு பகுதிகளைக் கொண்டது. சுத்த இரத்தத்தை இடது பக்க இதயம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தக் குழாய்கள் மூலம் அனுப்புகிறது. இக்குழாய்கள் ஆர்ட்டரிகள் எனப்படும் (
தமனிகள்).வலது பக்க இதயத்துக்கு அசுத்த ரத்தம் சிரைகள் மூலம் கொண்டு வரப்பட்டு நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. இந்தச் சுத்த ரத்தம் நுரையீரல்களிலிருந்து இதயத்தின் இடது பக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டு உடலில் பாகங்களுக்குத் தமனிகள் மூலம் அனுப்பப்படும்.இந்தச் சுழற்சி எல்லாருக்கும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
மனித உடம்பின் கால்களில் தமனிகளும் சிரைகளும் இருக்கின்றன. தூய ரத்தமும் தூய்மையற்ற ரத்தமும் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. கால்களில் தோலுக்கு நெருக்கமாக சிறப்பு சிரைகள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. ஒரு வழிப் பாதையாக ரத்தம் ஓடும் வகையில் தடுப்பான்கள் (வால்வுகள்) உள்ளன. அசுத்த ரத்தம் இதயத்தின் வலது பக்கத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் அப்படிச் செல்லும் வகை யில் தடுப்பான்கள் அமைந்துள்ளன.
எதிர்ப் பக்கத்தில் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் நின்று கொண்டே இருக்கும் போக் குவரத்துக் காவலர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்க்கு இந்தச் சிரைகள் பழுதுபட்டு விடுகின்றன
பாதிக்கப்பட்டவுடன் ரத்த செல்லும் பாதை மாறி எதிர்த் திசையில் ரத்த ஓட்டம் நிகழ் கிறது.இதயத்தின் வலது பகுதிக்குச் செல்ல வேண்டிய அசுத்த ரத்தம் இந்தச் சிறப்பு சிரைகளுக்குள் சென்று விடுகிறது.
தொடர்ந்து சென்று அங்கேயே தங்கி, சிரைகள் புடைத்தும், விரிந்தும் கால்களில்தெரிகின் றன. இந்த வகைப் பாதிப்புக்கு சுருள் சிரை என்று பெயர்.50 முதல் 55 விழுக்காடு வரை பெண்களுக்கும் 40 முதல் 45 விழுக்காடு வரை ஆண்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
தொடர்ந்து நின்று கொண்டேயிருந்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வலி ஏற்படும். பகலிலும் மாலையிலும் இரவிலும் அதிகத் துன்பம் தரும்.
காலையில் சுமாராக இருக்கும்.இதனால் கால்களில் தோல் கறுப்பாகவும், புள்ளிகள் நிறைந்ததாகவும் மாறி விடும். அரிப்பு ஏற்பட்டுப் புண்களும் ஏற்படும். ஆனாலும் ஆபத்தற்ற நிலைதான்.இதைக் குணப்படுத்திட மருந்து எதுவும் கிடையாது. அறுவைச் சிகிச்சை மூலமோ, லேசர் சிகிச்சை மூலமே பாதிக்கப்பட்டப் பகுதிகளை அப்புறப்படுத்தலாம்.
SOURCE: INTERNET. .மற்ற பதிவுகளை படிக்க:>>
வாஞ்ஜுர்
மேலும் படிக்க... Read more...