**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காற்று தென்றல் வீசினால்...அதே காற்று புயலாக வீசினால்..

>> Sunday, June 3, 2007

காற்று தென்றல் வீசினால்... ''ஆஹா! என்ன இதமாக இருக்கிறது என எழுந்துவர மனதில்லாமல் அதே இடத்தில் அமர்ந்திருப்போம்.

அதே காற்று புயலாக வீசினால்... ''ஐயையோ! என்ன பாதிப்பு வருமோ?... என்ற எண்ணம்தான் முதலில் வரும்.

காற்றை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் காற்று ஒன்று தான். அது வீசும் விதத்தில் தான் வெளிப்படும் தன்மை மாறுபடுகிறது. வேகமான வீசினால் அது புயல். சாதாரணமாக வீசினால் அது ஆடிகாற்று. இதமாக வீசினால் அது தென்றால். ஆனால் மூன்றுமே காற்றுதான்.
அதன் தன்மையும் ஒன்றுதான்.

இதைத்தான் ஞானிகள் 'நீயும், நானும் ஒன்று' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். 'நானும் அதே ஆனந்த சக்திதான். நீயும் அதே ஆனந்த சக்திதான்' என்று சொல்கிறார்கள்.

காலம் காலமாக எல்லா ஞானிகளும் இந்த ஒரு உண்மையைத்தான் பல வழிகளில் உலகிற்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் மனிதர்கள் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து துக்கமயமாக இருக்கிறார்கள்.

சுபாவத்தாலே தான் துக்கமயமானவன் என்று நம்புகிறார்கள். அதான் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள்ளும் ஞானிக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால் வெளிப்படும் விதத்தில் அது புயல் போல் இருந்தால் முரட்டுத்தனம் முன்னிற்கிறது.

அதே காற்று இதமாக, மிதமாக வீச ஆரம்பித்துவிட்டால் முரடனும் இனிமையான மனிதனாக மாறிவிடுவான்.

இன்னும் கொஞ்சம் குறைந்து, இன்னும் கொஞ்சம் வருடி, தென்றலின் தன்மை கொண்டு பதமாக வந்தால்... அடடா! இந்தக் காற்று நம் கூடவே இருக்காதா?! என்று சொல்லக் கூடிய 'ஞானி'யாக மாறிவிடமுடியும்.

உங்களுக்குள்ளிருந்து பொங்கும் சக்தியும். உள்ளிருந்து வரக்கூடிய சக்தியை அநியாயத்திற்கு கட்டுப்பாடில்லாமல் வெளியே வீசி எறிந்தால், எல்லா விதமான கெட்ட குணங்களும் வெளியே தெரியவரும். அதன் விளைவாக மனரீதியான, உடல்ரீதியான பிரச்னகளும் சேர்ந்து வெளிப்பட்டு விடும்.

அதனால் நம் மனக்கடலில் காற்றின் தன்மையை கட்டுப்பாடுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சாத்தியமே.

இதை வைத்து காற்று கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சொல்ல முடியாது ; கட்டுப்படுத்தப்படவில்ல என்றும் சொல்ல முடியாது. இருக்கின்ற இயல்புப்படி வர விட்டோமென்றால் அது உள்ளுக்குள் இனிமயான உணர்வுகைளையும், இனிமயான அதிர்வுகளையும் உருவாக்கும்.

அந்த இனிமையான உணர்வும் இனிமையான அதிர்வும் ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கும்.

ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள். தனக்குள் இனிமையாக இருக்கும் நல்ல மனிதரைச் சுற்றி இருப்பதற்கே நமக்கு இனிமையாக, ஆனந்தமாக இருக்கும்.

அதனால்தான் நன்மை செய்யும் மனிதர்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அந்த இனிமையான மனிதரைச் சுற்றி நன்றாகச் சேர்கிறார்கள்.

பொதுவாக எந்த இடத்தில் தென்றல் வீசுகின்றதோ அந்த இடத்தில் மக்கள் சேர்வார்கள்.

ஆனால், எந்த இடத்தில் புயல் காற்று வீசுகின்றதோ, அந்த இடத்தைவிட்டே மக்கள் ஓடிவிடுவார்கள். புயலாய்த் தென்படும் முரட்டுத்தனமும் முரண்பாடும் கொண்ட மனிதர்களின் அருகாமையைக் கூட யாரும் விரும்பமாட்டார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேறு வழியேயில்லை.

Business deal செய்தே ஆக வேண்டும் என அதிகபட்சமாக நான்கு ஐந்து பேர்தான் அவரோடு உறவு வைத்துக் கொள்வார்கள்.

அப்படிப் பட்டவர்களால் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கவோ, எதையும் அனுபவிக்கவோ முடியாது.

வாழ்க்கையில் சஞ்சலம், சபலம், தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் யாருக்கு வரும் என்று பார்த்தீர்களென்றால் தங்களுக்குள் இருக்கும் மனக்கடலில், புயலின் சூழலை உருவாக்குபவர்களுக்குத்தான் வரும்.

புரிந்து கொள்ளுங்கள். சுழல் உருவாகுவதிலிருந்து நாம் விடுதலை பெற்றாலோ அல்லது அந்த இடத்தில் சக்தியை கட்டுப்பாடில்லாமல் பிரயோகப்படுத்துவதை நிறுத்தினாலோ கடல் அமைதியாகும். மனக்கடல் அமைதியானால் போதும். நீங்கள் ஒன்றும் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. எப்போதும் தென்றல் வீசிக்கொண்டேயிருக்கும். மக்கள் தேடி வந்து கொண்டேயிருப்பார்கள்.. SOURCE: INTERNET.
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது.

>> Saturday, June 2, 2007

நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது.

என் மகனால் எந்தக் காரியத்தையுமே செய்ய முடியவில்லை என்று வந்தான் ஒருவன்.

அப்படியா? எந்தக் காரியங்களை அவனால் செய்ய இயலவில்லை? என்று கேட்டார் .

எதையுமே முடியவில்ல. நான் விரும்புவதை அவனால் செய்ய இயலவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நான் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டே இருக்கிறேன். இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்லுகிறேன். அப்படியும் அவனால் எதுவும் செய்ய முடியவில்ல.

பிரச்னை புரிந்தது.

சூரியனைப் பார்த்திருக்கிறாயா? காலைச் சூரியன், நடுப்பகல் சூரியன், மாலைச் சூரியன் என்று நிறைய நேரங்களில் சூரியன் தெரிந்தாலும் நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது. தெரியுமா?

ஆமாம் நடுப்பகல்ல தலைக்கு மேல வந்து சுட்டெரிக்கும்.

சரியாகச் சொன்னாய். சூரியன் நம்ம வாழ்க்கைக்கு ரொம்பத் தேவைதான். ஆனால் அதுவே நம் அருகில், தலைக்கு மேலே நின்றிருக்கும் போது நம்மால் வெப்பத்தைத் தாங்க இயலவில்லை. கொஞ்சம் தள்ளி நிற்கும் போது தான் நம்மால் செயல்பட முடிகிறது. அது போலதான் பெற்றோரும் பிள்ளகளுக்கு இருக்க வேண்டும்.

வந்தவனுக்கு செய்தி புரிந்தது. SOURCE:>> INERNET.
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்

>> Friday, June 1, 2007

வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்

ஞானியிடம் சீடன் கேட்டார், ''குருவே, நான் பொய்யை மிகவும் விரும்புகிறேன். எதையும் நேரடியாய்ப் பேசுவதவிட கொஞ்சம் சேர்த்துச் சொன்னால்தான் அது சுவைக்கிறது. ஏன் இப்படி?''

ஞானி, ''மற்றவரை விட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என இலைமறைகாயாய்க் காண்பித்துக் கொள்ளத் துடிக்கும் மனத்துடிப்பே காரணம்'' எனச் சொன்னார்.

ஆழ்ந்து பார்த்தோமானால் புரியும். ஒவ்வொரு முறை நாம் பொய் சொல்லும்போதும், நம் அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு!

மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனி கலையாகத் திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.

இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம். இதனால் பல சேதாரங்கள ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை:

முதல் பாட வேளைக்கான மணி அடித்து பத்து நிமிடம் ஆகியும் கணக்கு வாத்தியார் வரவில்லை.

மாணவர்கள் குறும்பர்கள்.

அதில் ஒரு மாணவன், ''டேய் கணக்கு வாத்தியாரை இன்னும் காணோமே! ஜுரமா இருக்குமோ!'' என்றான்.

அடுத்த மாணவன், ''கணக்கு வாத்தியாருக்கு உடம்பு சரியில்லைன்னா சீரியஸ் ஆகி இருப்பாரே!'' என்று சொன்னான்.

இதைக் கேட்ட மற்றொரு மாணவன், 'சீரியஸா இருக்கிறார் என்றால், இன்னேரம் அவர் செத்துப் போயிருக்கலாம்'' என்று சொல்ல,

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே பள்ளி முழுவதும் செய்தி காட்டுத்தீப் போன்று பரவியது.

எனவே பள்ளிக்கு விடுமுறைவிட்டு விட்டு, எல்லோரும் கணக்கு வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினர்.

மாலையும் கையுமாக பள்ளியின் வெளியில் மாணவர்கள் அனைவரும் புறப்பட்டுத் தயாராக நின்று கொண்டிருக்க விஷயம் புரியாமல் பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக்கொண்டே ஆரோக்கியமாய் வந்து சேர்ந்தார் கணக்கு வாத்தியார்.

நீங்கள் பொய் சொல்கிறீர்களா? அல்லது உண்மையைச் சொல்கிறீர்களா? என்பது கேள்வியல்ல.

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பை விட, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.

அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து உங்களை உங்களிடமிருந்தே பிரிக்கும் அரக்கனாகும்.

பொய்ப் பேசுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள எதையுமே திரித்துச் சொல்லும் இயல்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இனி எதையும் திரித்து, மிகைப்படுத்தி அல்லது குறைப்படுத்தி என்னைப் பேசச் சொல்லித் தூண்டும் செயலை முழுமையாய் கவனிப்பேன். அதற்கெல்லாம் அனுமதியளிக்க மாட்டேன்'' எனும் சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.

சங்கல்பத்தை வாழ்வில் நிஜமாக்குங்கள். செயல்படுத்துங்கள். வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும். நீங்களும் மற்றவரும் சேர்ந்து நலமாய் வாழ இன்னொரு நல்வழி பிறக்கும். SOURCE:> INTERNET.
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP