**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இனிமேல் கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க‌ !

>> Sunday, February 21, 2021

கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க ! Video.
பொதுவாக வீட்டில் உணவுப் பொருள்களில் சமையலில் கறிவேப்பிலை அதிகம் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலானோர் சாப்பிடும்போது அந்த கறிவேப்பிலையை எடுத்து ஓரமாக வைத்து விடுகின்றனர். இதற்கு பின்னால் உள்ள பலன்கள் குறித்து அவர்கள் அறிவதில்லை.

அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்க்கப்பட காரணம் அது செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எந்த உணவாக இருந்தாலும் எளிதாக செரித்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படாது.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும். எனவே, உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்தது சாப்பிடுங்கள்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

உடல் எடையைக் குறைக்கும் கறிவேப்பிலை.:


உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வரும் நிலையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைக் கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

மேலும், வயிற்றில் கொழுப்புகள் படிந்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதுதவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைகிறது.

மேலும், கறிவேப்பிலையை ஜூஸ் செய்தும் அருந்தலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்திவர உடல் எடை வெகுவாக குறைந்து வருவதை காண முடியும்.

15 கறிவேப்பிலையுடன் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

மேலும் படிக்க... Read more...

இயல்பா இருங்க எல்லாம் வசப்படும். !

>> Friday, February 19, 2021

இயல்பா இருங்க எல்லாம் வசப்படும்.!
இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே...

காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன். நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .. கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்.

காபி, டீ வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம், பால் வேண்டாம், ஐஸ் வாட்டர் வேண்டாம், பாட்டில் ஜூஸ் வேண்டாம் என்றார்...

சரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது.. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து, அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து..

"Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு.. Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம். இயல்பா இருங்க. எல்லாம் வசப்படும்.

மேலும் படிக்க... Read more...

Magicians of India, 1950s .

Magicians of India, 1950s. Video.

மேலும் படிக்க... Read more...

MADHURAI MARUTHU CART !

MADHURAI MARUTHU CART ! Video.

மேலும் படிக்க... Read more...

Meaningful story about problems in life !

Meaningful story about problems in life ! Video.

மேலும் படிக்க... Read more...

The Animals With Most Unique Abilities !

The Animals With Most Unique Abilities ! Video.

மேலும் படிக்க... Read more...

How Muslim inventions are shaping the modern world !

Latinizing name of Muslim scientists , philosophers and scholars

Today, only a small number of Muslims are aware of the real names of many top Muslim scientists, philosophers, scholars whose inventions served as base for further development in science and arts, theology and philosophy.

Take for example, Ibne Sina (the father of modern medicine) is known as Avencena, Ibne Rushed is Averroes, Ibn Musa al-Khwarizmi (father of Aljebra ) became Algorithmi , Abū al-Qāsim al-Zahrāwī (the father of modern surgery in the world) had been made Abulcasis, Jābir ibn Ḥayyān (the father of Chemistry ) is known as Geber and Abu Nasr Al-Farabi became Alpharabius.

Presumably, these names had been Latinised to conceal their Islamic identity.

As a result, few Muslims know about them because they don’t read 800 years of history which is aptly called ‘Muslim Period’ when they ruled the world.

Changing Muslim scholars’ names made the West easy to declare 800 years of Muslim rule as ‘Dark Age’. They also changed the names of prophets mentioned in the Quran. So ordinary Muslims did not even associate with their terminologies.

Curious minds of all communities across the world in general and West in particular have started digging out our past, including Islam and nearly 1000 years of Muslim rule.

Some are really amazed, while some have now started doubting and questioning the rumours. Many of them now writing truth about Islam and Muslims.

How Muslim inventions are shaping the modern world ! Video.

மேலும் படிக்க... Read more...

இறைவனுக்கு என்றும் நன்றி சொல்வோம்!

>> Thursday, February 18, 2021

இறைவனுக்கு என்றும் நன்றி சொல்வோம்! Video.

மேலும் படிக்க... Read more...

சங்கடங்களை போக்க அமருங்கள் சம்மணமிட்டு !

ஏன் சம்மணம் இட்டு அமர வேண்டும்.. ? Video
காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*. *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது*.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

நாற்காலி, சோஃபாவில் அமர்வதின் தீமைகள்.

நாற்காலி, சோஃபாவில் அமர்வதினால் நம் முதுகு தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும் தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுதண்டுக்கு உடலை தாங்கி நிற்க்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுதண்டு பலவீனமாகி முதுகு வலி வருகின்றது. மக்களும் முதுகுவலி ஸ்பெசல் நாற்காலி ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே தவிர கீழே உட்காருவது கிடையாது. இப்படி ஸ்பெசல் நாற்காலி எல்லாம் வாங்கி முதுகுவலி குணமாகுமா என பார்ப்பது தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். அதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர வலி வருவது நிற்கப்போவதில்லை.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்... சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

*சாப்பிடும் முறை*...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
*அமருங்கள் சம்மணமிட்டு*.

மேலும் படிக்க... Read more...

காலத்திற்கு ஏற்ப தொழிலை மாற்றிய தமிழக மீனவ பெண் !

Online ல் கடல் சிப்பி விற்பனை; காலத்திற்கு ஏற்ப தொழிலை மாற்றிய தமிழக மீனவ பெண் ! Video.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP