**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இது இந்தியாவில் சாத்தியமா? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் .

>> Monday, March 31, 2014

65 கோடி ரூபாய் செலவில் பாக் அரசு திருப்பணி செய்து பூஜைகள் நடக்கும் இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.

பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இடிந்து கிடந்த இந்துக் கோவில்கள்.

கோவில் கட்டும் பாகிஸ்தானும் மசூதியை இடிக்கும் இந்தியாவும்.

2005ம் ஆண்டு பாக்கில் சக்வால் மாவட்டத்தில் இடிந்து கிடந்த இந்துக் கோவில் ஒன்றின் புனித தீர்த்தம் ஒன்று சீரமைக்கப்பட்டு அருகிலுள்ள ஏழு இந்துக் கோவிகளில் விக்ரகஙள் புதிதாய் நாட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதன. அதற்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தவர் யார் தெரியுமா?

யார் தலைமையில் அவ் விழா நடத்தப்பட்டது தெரியுமா? பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அதே லால் கிருஷ்ண அத்வானிதான். ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் இது இந்தியாவில் சாத்தியமா?

சற்று விவரமாக இந்துக் கோவில் அங்கு புனருத்தாரணம் செய்யப்பட்டதை சொல்கிறேன்.

2005l அத்வானி பாகிஸ்தான் சென்றபோது, பஞ்சாப் மாநிலம் சட்வால் மாவட்டத்தில் உள்ள கடஸ்ராஜ் கோவிலைப் புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டி வந்தார், அப்போது அவருடன் கூடச் சென்றவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) தலைவர் ஷுஜாத் ஹுசேன். அது ஒரு சிவன் கோவில். அதை ஒட்டியுள்ள புனித கோவிற் குளம் தன் மனைவியின் இழப்பை ஒட்டிச் சிவன் உதிர்த்த கண்னீர்த் துளிகளால் உருவானது என்பது நம்பிக்கை. ஏழு சிறு கோவில்கள் அங்கு உண்டு.

தான் அடிக்கல் நாட்டிய அனுபவம் குறித்து அப்போது அத்வானி கூறியது: "உண்மையில் இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம். உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை கடஸ்ராஜிலுள்ள இந்துக் கோவில்கள். இவற்றைப் புதுப்பீக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்ததை இந்திய மக்களுக்கே அளிக்கப்பட்ட ஒரு கவரவத்தின் குறியீடாகவே கருதுகிறேன்."

இதை ஒட்டி பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாநிலத் தொல்லியல் துறை தொல்லியல் துறை, பொது நலப் பணித்துறைகள் முதலியன இப்பணி நோக்கி முடுக்கிவிடப்பட்டன.

சீரமைப்பு வேலையை விரைவுபடுத்தக் கோரி அத்வானி சென்ற 2008 டிசம்பரில் ஹுசேனைத் தொலை பேசியில் அழைத்துச் சொன்னார்.

"நீங்கள் சுட்டிக் காட்டிய விஷயத்தை நான் மிக்க கரிசனத்துடன் கவனத்தில் எடுத்துக் கொண்டேன், சக்வாலில் உள்ள தகுதியான அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தற்போது வேலைகள் எந்த நிலையில் உள்ளன என விசாரித்தேன். தீவிர அர்ப்பணிப்புடன் அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என பாக் முஸ்லிம் லீக் தலைவர் ஷுஜாத் ஹுசேன் உடன் பதில் எழுதினார் ("Pak Temple Renovation on, Advani Told", Express News Service, New Delhi, Dec 11, 2008).

கடஸ்ராஜ் கோவில்களும் ஶ்ரீ அமர்குண்ட் எனப்படும் புனித தீர்த்தமும் சுற்றுச் சூழல் கேடுகளால் சீரழிந்த வருவது குறித்து 'டான்' உள்ளிட்ட பாகிஸ்தான் நாளிதழ்கள் தொடர்ந்து எழுதி வந்தன. அருகிலுள்ள தொழிற்சாலைகள் நீரை உறிஞ்சி விடுவதால் அமர் குண்ட் வற்றி வருவதை அவை சுட்டிக்காட்டின. அப்படி ஒரு செய்தியைப் படித்த பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்கள் சென்ற 2012 மேயில் உரிய அதிகாரிகளை அழைத்து, புதுப்பிக்கும் பணியை "அறிவியல் நுட்பங்களுடன்" விரைந்து முடிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிட்டார் ("Preserve Katasraj Temple : Zardari", The Hindu, May 7, 2012).

சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறைச் செயலரும், கடஸ்ராஜ் கோவிற் புனரமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான சயீத் இக்பால் வஹ்லா, "போர்க்காலத் துரிதத்துடன் பஞ்சாப் அரசு இப்பணியை நிறைவேற்றி வருகிறது" என அறிவித்தார். "இந்த நாட்டின் சம குடி மக்களான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பஞ்சாப் அரசுக்கு உண்டு" எனவும் அவர் கூறினார்.

திருக்குளத்தைப் "புதுப்பிப்பதற்காக பஞ்சாப் அரசு 60.92 கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது" எனவும், கோவிற் திருப்பணிக்காக "மத்திய அரசு மேலும் 2 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது" எனவும், யாத்ரீகர்கள் "தங்கிச் செல்ல விடுதி ஒன்றும் கட்டப்படும்" எனவும் வஹ்லா கூறினார் ("Pak Hindus Throng at Renovated Holy Pond", One India, Nov 5, 2012).

115 இந்துக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஶ்ரீ அமர் குண்ட் வண்னப்பூக்கள் மிதக்கப் பேரழகுடன் காட்சி அளித்தது. ஹிந்து சுதர் சபாவின் பொதுச் செயலர் அசோக் சந்த் பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்தார். கடஸ்ராஜில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தைத் தொழுது அனைவரும் திரும்பினர்.

ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது.புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 66 ஆண்டுக்கு பின், தற்போது, இக்கோவிலில் பூஜைகள் நடக்கின்றன.

இதுகுறித்து, பாகிஸ்தான் தொல்லியல் துறை தலைவர், அஸ்மத் தாஹிரா கூறியதாவது:

பழமை மாறாமல், இக்கோவில், புனரமைக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தான் அரசின், இந்த புனரமைப்புக்கு, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி, இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல; இங்கு, ஒரு புத்த மடம், சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளன. இவ்வாறு, அஸ்மத் தாஹிரா கூறினார். –

பாக்கில் ஒற்றை அதிகார மையம் இல்லை என்பதும், தீவிரவாதமும், இஸ்லாமிய அடிப்படிவாதமும் அந்த நாட்டைச் சீரழித்துக் கொண்டுள்ளன என்பதும் உண்மை .

ஒரு காலத்தில் அரசும் இராணுவமுமே இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தபோதும், இப்போது பாக் அரசுக்கே அது பெரும் தலைவலியாக இருப்பதுதான் எதார்த்தம்.

சென்ற ஆண்டில் எல்லை ஓரத்தில் இந்திய இராணுவ வீரர்கள் சிலர் கொல்லப்பட்டு, அவர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, அது இராணுவம் அல்லாதவர்களின் செயலாகவும் இருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் எனச் சொன்னபோது இந்துத்துவ வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அந்தோனியின் கூற்று மிகவும் நிதானமான ஒன்று.

பாக்கில் இன்று குறைந்த பட்சம் மூன்று அதிகார மையங்கள் செயல்படுகின்றன. அரசதிகாரம், தன்னிச்சையாக இயங்கக்கூடிய இராணுவ அதிகாரம், அடிப்படைவாதிகளின் அதிகாரம். இந்த நிலை நீடித்தால் விரைவில் பாக் ஒரு failed state என்கிற நிலையை எட்டலாம் என்பது உண்மை.

ஆனால் ஒன்றை நாம் மனங்கொள்ள வேண்டும். இப்படியான சூழல் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களும் பாக். சிறுபான்மையினர் மீது அவ்வப்போது நடக்கும் சில வன்முறைகளுக்கும் காரணமாகின்றது,

இந்த வகையில் இது பாகிஸ்தான் அரசுக்கும் பெரிய தலைவலியாகத்தான் உள்ளது. ஆனால் இந்தக் காரணங்களுக்காகவே அங்கு எல்லாமே சீரழிந்துள்ளதாகவும்,ஒவ்வொரு பாகிஸ்தானியும் இந்திய வெறுப்புடன் வாழ்வதாகவும் நினைப்பதும், அந்த வகையில் ஒவ்வொரு பாகிஸ்தானியையும் நமக்கு எதிரியாகவும் நினைப்பதை விட அறிவு கெட்டத்தனம் அல்லது வன்ம வெறுப்பு மனோ நிலை வேறெதுவுமில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டார்லிம்பில், பாக் சென்று வந்து கட்டுரை ஒன்றை அவுட்லுக் இதழில் எழுதி இருந்தார். அதை வாசித்தால் பாக்கின் இன்னொரு பக்கத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அடிப்படை வசதிகள், நயத்தக்க நாகரீகங்கள் உள்ள நாடுதான் பாக்கிஸ்தான் என்பதும், பாக் மக்கள் அப்படி ஒன்றும் இந்து மதத்திற்கோ, இந்தியர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதும் நிறைய வாசிக்கையில்தான் விளங்கும்.

பாக் மீதும் அம்மக்கள் மீதும் வெறுப்பைக் கொட்டி எழுதியிருக்கும் பதிவுகளும் ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றன.

அறியாமையும், வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் அது ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். - அ.மார்க்ஸ்

THANKS TO: A. MARX @FACEBOOK.

இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?- THE HINDU


இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள்போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்.

ஆசியக் கோப்பைப் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற காரணத்துக்காக, உத்தரப் பிரதேசத்தில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது மீரட் காவல் துறை.

கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-யின் கீழ் பிரிவினைவாதக் குற்றச்சாட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிவு 153 ஏ-யின் கீழ் வெவ்வேறு இனங்களுக்கிடையே துவேஷத்தை ஏற்படுத்த முயன்றது, பிரிவு 427-ன் கீழ் விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் இன்னும் நீடிக்கின்றன.

இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் பேசியிருக்கிறார். பிரச்சினைக்கு மதப் பிரிவினைவாதச் சாயம் விழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காக, மாணவர்களை காஷ்மீருக்குத் திரும்ப அனுப்பியிருப்பதாக சுவாமி விவேகானந்தர் சுபார்தி பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

தாங்கள் எந்தப் புகாரையும் பதிவுசெய்யவில்லை என்று பல்கலைக்கழகத் தரப்பு கூறினாலும், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?

“அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பேச்சு களையும் கருத்து வெளிப்பாடுகளையும்கூடப் பிரிவினைவாதம் என்ற வரையறைக்குக் கீழே கொண்டுவந்துவிட முடியாது; வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிடும் வகையிலான நடவடிக்கைகள்மீது மட்டுமே தேசத் துரோகத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று கூறுகிறது உச்ச நீதிமன்றம்.

ஆனால், சாதாரண ஒரு கிரிக்கெட் போட்டி விஷயத்துக்கே தேசத் துரோகச் சட்டத்தைத் துணைக்கு அழைக்கின்றனர்.

இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா?

சமீபத்தில் ஜம்முவில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருந்த ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் நள்ளிரவுச் சோதனைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

இப்போது காஷ்மீர் மாணவர்கள்மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகளின் மனதிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தியப் பொதுச் சமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?

இந்தச் சமயத்தில், பாகிஸ்தான் - இந்தியா இடையேயான ஒரு கிரிக்கெட் போட்டியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடைபெற்ற பரபரப்பான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

அரங்கத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று, பாகிஸ்தானுக்குக் கரவொலி எழுப்பினர். வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ந்துபோயினர்.

விளையாட்டு என்பதன் உண்மையான நோக்கம் இதுதான். எல்லைகளைத் தாண்டி நல்லுறவை வளர்ப்பது. உண்மையான வெற்றியை அங்கீகரிப்பதுதான் விளையாட்டுக்கான அடிப்படை. உண்மையில், விளையாட்டில் தேசப் பற்றை நுழைப்பவர்கள்தான் பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.

Ref: THE HINDU சிந்தனைக் களம் » தலையங்கம் எதுவெல்லாம் தேச விரோதம்?

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

நீதி மறு(றை)க்கும் இந்திய ஊடகத்துறை.

>> Tuesday, March 11, 2014

சாமியார்கள் நடிகைகளின் அந்தரங்கங்கள், ஆரூடம், பாலியல் வக்கிரங்கள், பெண்களின் ஆபாச அசைவுகள், மக்களை பிளவுபடுத்துதள், தரகு வேலை பார்ப்பது மூலம் பணம் சம்பாதிப்பதே ஊடகங்களின் முக்கியக் குறிக்கோளாக உள்ளன.

இரத்தம் சிந்தாத மீடியாக்கள்.

1. அரசியலமைப்பு, சட்ட ஒழுங்கு, நீதிமன்றம், ஊடகம் ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் நான்கு மாபெரும் தூண்கள்.

2. சட்ட - ஒழுங்கு மனோ இச்சையுடன் செயல்பட்டாலோ, நீதி மறுக்கப்பட்டாலோ, அரசியலமைப்பு கார்ப்பரேட்டுகளின் காசுக்கு விற்கப்பட்டாலோ எதற்கும் வளைந்து கொடுக்காமல், மக்களுக்காக துணிச்சலுடன் அதிகாரவர்க்கத்தைக் கேள்வி கேட்கும் இடத்தில் ஊடகங்கள் உள்ளன.

3. இந்தியாவில் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.. அவர்களுக்காக நீதி கேட்கும் துணிச்சல் தனி நபர்களிடமோ குழுக்களிடமோ காணப்படுவதில்லை. அவ்வாறு அபூர்வமாக சிலர் இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்தால் அடக்கப்படுகின்றார்கள்.

4. ஊடகத்துறை மட்டுமே எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் செயல்படத்தக்க அளவுக்கான அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் அதன் இன்றைய நிலை நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு எதிர் மறையாக மாறி இருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் மீடியாத்துறை. ....

1. மக்களின் கவனத்தைத் திருப்பி ரேட்டிங்கை உயர்த்துவதும் பணம் சம்பாதிப்பதும், அதிகாரவர்க்கத்திற்குத் தரகு வேலை பார்ப்பதுமே இன்றைய இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை தங்கள் முழுநேரப் பணிகளாக செய்து வருகின்றன.

2. இந்தியாவின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் வலம்வருகின்றனர். அவர்களின் பிடியிலேயே தொலைகாட்சி செய்தி நிறுவனங்கள் உள்ளன.

அத்தகைய ஊடகங்களில் வரும் செய்திகள் ஒருதலைபட்சமாகவும் ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் நிலையிலோ இல்லாமல் இருக்கின்றன.

நீதிக்கு எதிராக நவீன ஊடகத்துறை

1. நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் கடன் தொல்லை காரணமாக 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர் தம் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி ஊடகங்கள் வாய் திறக்காமல் மௌனம் காக்கின்றன.

2. இந்தியாவில் இருக்கும் விபச்சார விடுதிகள், அதிகாரப்பூர்வமற்ற பெண்கள் சிறைச்சாலைகளாகவே செயல்படுகின்றன. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் தாதாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களின் கண்காணிப்பிலேயே பெரும்பாலான பெண்கள் விபச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்கு அரசாங்கமே வக்காலத்து வாங்குவதும் அந்தப் பெண்களுக்கு நடக்கும் அவலங்களைத் துணிச்சலோடு சொல்ல மறு(றை)ப்பதும் ஊடக துறைகளின் மற்றொரு அவல நிலையே!

3. இந்தியாவில் குடிகாரர்களின் விழுக்காடு அதிகமாக கொண்ட மாநிலம் என்ற அந்தஸ்தைத் தமிழ்நாடு எட்டிப்பிடித்து வெகுகாலமாகிவிட்டது. அதிக சாலை விபத்துகள் மதுவாலேயே நிகழ்கின்றன என்று புள்ளி விவரம் சொல்கின்றது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும்கூட காமடியாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களும் மாணவர்களும் குடிப்பதை ஃபேஷனாக காட்டாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. இந்த அவலநிலை குறித்து எந்த முக்கிய ஊடகமும் கேள்வி கேட்கும் நிலை இன்று இல்லை; கேள்வி கேட்கும் நந்தினி போன்ற தனிநபர்களையும் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.

4. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றது. சட்ட ஒழுங்கைக் காக்கவேண்டிய காவல் நிலையங்களிலேயே அதிகமான வன்புணர்வுகள் நடப்பதும் தவறுசெய்தவர்கள் தண்டனையை விட்டு சர்வசாதாரணமாக தப்பிப்பதும், அதிகாரவர்க்கம் அதற்கு துணைபுரிவதும் ஊடகங்களில் கடைசிபக்க விமர்சனங்களாகக் கூட வருவதில்லை.

5. தலித்களின் உரிமை மறுப்பு, சாதியக்கொலைகள், தலித்பெண்கள் வன்புணர்வு, தலித்கள் மீதான சித்ரவதைகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் மிகப் பெரும்பாலானவையும் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன.

6. அதிகாரவர்க்கத்தாலும் ஃபாசிஸ சக்திகளாலும் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம். இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்; முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு கலவரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன; அக்கலவரங்களிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக இளைஞர்களே பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையிடப்படுகின்றனர்.

7. போலி என்கவுண்டர், வெடி(க்காத) குண்டுவழக்கு, தீவிரவாதம்... இந்த வார்த்தைகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டுமென சொந்தமாக்கபட்டுவிட்டது. இந்திய முஜாஹிதீன் என்று அடிக்கடி சொல்லும் மீடியாக்கள், உண்மையைக் கண்டறிய முனையாமல் காவல்துறையின் மவுத் பீஸ்களாக மாறிவிட்டன.

8. இந்திய உள்துறை அமைச்சரே 10 ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுகிறார்; மாலேகான் முதல் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு வரை அனைத்திலும் ஈடுபட்ட பயங்கரவாதி சுவாமி அசிமானந்தா, குண்டுவைக்க தமக்கு டைரக்சன் தந்ததே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தான் என வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனாலும், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட, இல்லாத இந்தியன் முஜாஹிதீன் பெயரையே திரும்பத் திரும்ப உச்சரிக்கும் இந்திய ஊடகங்கள் இந்திய தேசத் தந்தையையே படுகொலை செய்த கோட்சேயை வளர்த்துவிட்ட பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் குறித்து வாயைத் திறக்கவே அஞ்சுகிறது!

9. மோடியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை, இடிக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜித் வழக்கு, முசாபர் நகர் கலவரம் பற்றிய தெளிவான செய்திகள் முதலானவற்றைப் பெரும்பான்மை ஊடகங்கள் மறைத்து விட்டதோடு, நடிகை வீட்டு நாய்க்குட்டியின் பேதி மஞ்சள் கலரில்... போன்ற செய்திகளே அவைகளுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டன!

10. அப்சல் குரு போன்ற தனி நபராக ஆனாலும், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமாக ஆனாலும் முஸ்லிம்கள் சார்ந்த விசயம் எனில் எந்தக் குற்றமும் நிரூபிக்க முடியாத நிலையில்கூட அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதிலேயே ஊடகங்கள் முனைப்பு காட்டுகின்றன.

11. இந்தியாவில் வங்கிகளின் அட்டகாசங்கள் பற்றியும் கடன்களைத் திரும்பப்பெற நடத்தும் ரௌடிசங்கள் பற்றியும் எந்த மீடியாக்களும் அக்கறை கொள்வதில்லை; பாதிக்கப்படுவது மாணவனாக இருந்தாலும் சரி; விவசாயியாக இருந்தாலும் சரி, அவற்றைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை!

12. வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு முதலான மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்கள் பற்றி மக்களின் உணர்வுகளை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.

பசியால் மட்டும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 23 லட்சம் பேர் பலி ஆகின்றனர்.அவர்களின் பசிகளின் வலிகளை எந்த ஊடகத்துறையும் ஓங்கி உரைக்கவில்லை.

13. தங்களுக்குக் கிடைக்கும் லஞ்சம், ஊழல்கள், கருப்பு பண விவகாரம் முதலானவை தொடர்பான செய்திகளை வைத்து மிரட்டி பேரம் பேசும் தரம்கெட்ட மூன்றாம்தர தாதாக்கள் ரேஞ்சுக்குச் சொல மீடியாக்கள் போய்விட்டன! அவை தொடர்பில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையோ அரசியல்வாதிகளையோ மக்கள் மன்றத்தில் நிறுத்துவது இல்லை..

14. காஷ்மீர், அஸ்ஸாம் முதலான மாநில மக்களின் துயர்களை அருந்ததி ராய் போன்ற சில தனிமனிதர்களே தொடர்ந்து போராடி செய்திகளாக முன்வைக்கின்றனர். இந்திய ஊடகங்கள் இவர்களைப் பற்றி எந்த உண்மை செய்திகளையும் முன் வைக்காமல் தொடர்ந்து ஊடக அராஜகம் செய்து வருகின்றன.

அபின்களாக மாறும் மீடியா நிகழ்ச்சிகள்

1. கிரிக்கெட், தரங்கெட்ட சினிமாக்கள், கவர்ச்சி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள், கேவலமான இரட்டை அர்த்த நையாண்டிகள் மற்றும் மதி மயக்கும் இசை நிகழ்ச்சிகளே அனைத்து மீடியாக்களையும் ஆக்கிரமித்துள்ளன.

2. பாலியல் வக்கிரங்கள் மற்றும் பெண்களின் ஆபாச அசைவுகள் மூலம் டிவி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் முக்கியக் குறிகோளாக உள்ளன.

3. சாமியார்களின் அந்தரங்கங்கள், ஆரூடம், மருத்துவம் என்ற பெயரில் பாலின வக்கிரம், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கான மனை நிலங்கள் விற்பனை போன்ற மக்களின் சிந்தனையை எவ்வகையிலும் உயர்த்தாத நிகழ்ச்சிகளே தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.

உரத்த சிந்தனை

1. உலக மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமேயுள்ள யூதர்கள் உலகில் 95% க்கும் அதிகமான ஊடகங்களைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.

2. அந்த ஊடகங்களில் சொல்லும் செய்திகளும் அதன் ஊடகவியலாளர்களின் பெரும்பாலோரின் நிலையும் இவர்கள் மனப்பதிவையும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டவை.

3. ஆதிக்க, ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட இவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களிலிருந்து வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.

4. இந்தியாவிலுள்ள ஊடகங்களில் பெரும்பான்மையும் யூதர்களின் வழிமுறைகளை அடியொற்றும் பார்ப்பன உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

5. அதிகாரவர்க்கத்திற்குத் துணை நிற்கும் இது போன்ற மீடியாக்கள் பாதிக்கபட்ட மக்களின் உணர்வுகளைத் தொட்டுக்கொள்வதற்காகக்கூட வெளிச்சமிட்டுக் காட்டுவதில்லை.

6. உலகில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் மக்கள் அதை குறித்து சிந்தித்து கேள்விகேட்டுவிட முடியாதபடி உலகம் முழுக்க, மக்களின் சிந்தனைகளை நன்மையான விசயங்களிலிருந்து மாற்றி அடிமைப்படுத்தும் ஒரேமாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

7. இஸ்ரேல், அரபு நாடுகளின் மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. சிரியா, பாலஸ்தீன், எகிப்து போன்ற நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிகளை எல்லாம் திட்டமிட்டு மறைக்கின்றன.

8. இந்தியாவில் அடக்கு முறைக்கு உட்பட்ட மக்களின் அழுகுரல்களை இந்திய மீடியாகளின் இசை நிகழ்ச்சிகள் கேட்க விடுவதாக இல்லை

9. அரசின் தவறான திட்டங்களால் குடிமகன் உணவின்றி செத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஊடகங்கள், நடிகைகளின் உள்ளாடைகள் பின்னால் தமது செய்தியாளர்களை அனுப்பி தமது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன.

நமக்கான மாற்றம்

1. துணிச்சலான தத்துவ அறிஞர்கள் மக்களின் உணர்வுகளைச் செய்திகளாக எடுத்துரைத்ததால் பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி எல்லாம் தோன்றி மக்களை அடிமை தனத்திலிருந்து விடுவித்தது. ஒடுக்கப்படும் சமூகம் அதிகார வர்க்கத்திடமிருந்து விடுதலை பெற இன்றைய காலத்தில் நீதிக்கு துணை புரியும் ஒருவன் ஊடகவியலாளனாக மாறுவதைத் தவிர வேற வழி இல்லை...

2. ஆனால், உண்மையிலேயே மக்களுக்காக... நீதிக்காக நிலைகொள்ளும் அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள்..... அல்ல அல்ல... உண்மையான போராளிகள்... ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் மக்களுக்கு எதிராக நடந்த அக்கிரமக்காரர்களின் யுத்தங்களிடையே ஊடுருவிச் சென்று நீதிக்காக, உண்மையான செய்திகளை உலகின் முன்கொண்டுவருவதற்காக வேண்டி தம் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்..

3. எவ்வகையான ஊடகம் இந்தியாவுக்குத் தேவை என்பது இனி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.

4. நீதிக்கான போரில் நீதியை நிலை நிறுத்த பாடுபடும் ஊடகவியலாளனே உண்மையான போர்வீரன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

5. ஊடகம் ஒரு மாபெரும் இயக்கம். அது, நீதிக்கான சத்தியக் கொள்கை இயக்கமாக பரிணமிக்கும் பொழுதே மாபெரும் வெற்றிபெறுகின்றது.

6. பணமும் அதிகாரமும் முதலீடாக வைத்து உருவாக்கிய மீடியாக்களுக்கு மத்தியில் உயர்ந்த சிந்தனையையும் அறிவையும் முதலீடாக வைத்து ஊடகங்கள் உருவாகும் பொழுதே அநீதிக்கான கதவுகள் உடைத்து எறியப்படும் .... அதுதான் உண்மையான ஊடக தர்மமும் கூட!

அபூஷேக் முஹம்மத்

Ref: http://www.inneram.com
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP