அரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்டவாளங்கள்.
>> Friday, April 26, 2013
விஷத்தை விதைக்கும் ஓரவஞ்ச ஊடகங்களும் போலீஸும்.
பத்திரிக்கைகளும் போலீஸாரும் பிண்ணும் கேடுகெட்ட விஷ சதிவலைகள்.
அப்பாவிகளை பயங்கரவாதிகளாக உருவாக்கும் போலீஸும் ஊடகங்களும்.
பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்:வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!
பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு:கண்ணூரில் நடந்தது என்ன?
கோழிக்கோடு: கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்!ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைதுச் செய்தது கேரள மாநில போலீஸ்.
பின்னர் இக்கைது படலத்தின் பின்னணியில் நேற்று மாநிலத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் அரசின் பாரபட்சமான போக்கும், போலீஸின் வஞ்சகமும் அரங்கேறியது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் கோழிக்கோட்டில் யூனிட்டி ஹவுஸில் இயங்கி வருகிறது.
இங்கு நேற்று காலை 11.00 மணியளவில் ஆயுதங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது என்று கூறி மாநகர போலீஸ் கமிஷனரின் தலைமையில் போலீஸார் சோதனையிட வந்தனர்.
ஒன்றரை மணிநேரம் தீவிரமாக சோதனையிட்ட பிறகும் எந்த சட்டவிரோத பொருட்களும் சிக்கவில்லை.
இறுதியாக சட்டவிரோதமாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு போலீஸ் திரும்பிச் சென்றது.
போலீஸ் ரெய்டு செய்தியை கேள்விப்பட்டு கைரளி போன்ற தொலைக்காட்சிசேனல்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் யூனிட்டி ஆஃபீஸ் நோக்கி படையெடுத்து வந்தபோதிலும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மாநிலத்தில் உள்ள இதர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களிலும் இதே காட்சிதான் அரங்கேறின. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் சம்பவத்தை போலீஸை மேற்கோள்காட்டி முக்கிய செய்தியாக மாற்றிய ஊடகங்கள் கூட அங்கு 2 வாள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக கூறின.
ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ஏதோ ஆயுதக்குவியலை கைப்பற்றியதைப் போன்ற பிரம்மையை போலீஸ் உருவாக்கியது.
உண்மை நிலமை நிலவரம் இப்படியிருக்க……
பத்திரிக்கைகளும் போலீஸாரும் இதை கேடுகெட்ட விஷமத்தனமாக இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக சதி வலை பிண்ணி எவ்வாறு ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி அப்பாவிகளை இல்லாத பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தி நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்க கங்கணம் கட்டி கொண்டு திரிகின்றன என்பது வெட்ட வெளிச்சம்.
பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு பற்றி பத்திரிக்கைகளில் வந்தது என்ன?
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
எல்லா ஊடகங்களும் இப்படித்தான் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும் ஊடகங்களில் சில பிரிவுகள் இருக்கின்றது, அவை சங்கப்பரிவார சித்தாந்தத்தை நோக்கி சரிந்திருக்கும் ஊடகங்களாக இருக்கின்றன.
இத்தகைய மீடியாக்கள் முஸ்லிம்கள் மீதும், இந்திய முஸ்லிம்களின் வலிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடும் இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் அப்பாவி இளைஞர்கள் எவ்வாரெல்லாம் திவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டதையும், பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.
அதேவேளையில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும், பாசிச சங்பரிவார்களின் மையங்களிலும் உயிர்சேதங்களையும், பெரும் சேதங்களையும் விளைவித்த சம்பவங்களை எல்லாம் ஏதோ சாதாரண பட்டாசு வெடித்த செய்தியாக சித்தரிப்பதே கேரள போலீஸின் வழக்கமாகும்.
2011-ஆம் ஆண்டு பெப்ருவரி 26-ஆம் தேதி நாதாபுரத்தில் உள்ள நரிக்கோட்டரியில் வெடிக்குண்டு தயாரிக்கும்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐந்து முஸ்லிம் லீக்கைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக எவர் மீது கறுப்புச் சட்டங்கள் பாய்ந்ததாகவோ, தேசிய புலனாய்வு ஏஜன்சி ஓடி வந்ததாகவோ எந்த செய்தியும் இல்லை.
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மட்டன்னூரில் வெடிப்பொருட்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் காரன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான். ஆனால் இதனை ஒரு சாதாரண வழக்கு போலவே போலீசும், ஊடகங்களும் கையாண்டன.
2013 ஜனவரி 4-ஆம் தேதி தலச்சேரி மேலூரில் சி.பி.எம்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கீழ் இயங்கும் க்ளப் ஒன்றில் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு ஐஸ்க்ரீம் குண்டுவெடிகளை கைப்பற்றியபோதும் ஊடகங்கள் கற்பனை கதைகளை உலாவவிடவில்லை.
2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி மாஹியில் வெடிக்குண்டை தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவரின் கைவிரல் துண்டானது.
2011-ஆம் ஆண்டு தர்மடம் சிரக்குனியில் வெடிக்குண்டை தயாரிக்கும்போது குண்டுவெடித்து சி.பி.எம் உறுப்பினர் ஒருவரின் கை துண்டானது.
2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பெருந்தாறு என்ற இடத்தில் வெடிக்குண்டை தயாரிக்கும் போது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ்காரனின் இருகைகளும் காயமடைந்ததன் விளைவாக துண்டிக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நாதாபுரம் கருவான்கண்டியில் சி.பி.எம் உறுப்பினர் ஒருவருக்கு வெடிக்குண்டை தயாரிக்கும்போது கடுமையான காயம் ஏற்பட்டது.
2008-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பானூர் வடக்கு பொய்லூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுத தயாரிப்பு மையத்தில் இருந்து மிகவும் சக்தி வாய்ந்த 125 ஆர்சனிக் சல்ஃபேட் வெடிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கேரளாவில் மிகப்பெரிய ஆயுதவேட்டையாக இது அமைந்தது. ஆனால், போலீஸ் சாதாரண வழக்கையே இச்சம்பவத்தில் பதிவுச் செய்தது.
மேலும் படிக்க... Read more...